12

12

நந்திக்கடல் களப்பு பகுதியை சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் !

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற யை சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் கடற்பகுதிகளில் உள்ள கவர்ச்சியான இடங்களை கண்டறிந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடிய வகையில் அவற்றை சுற்றுலா பிரதேசங்களாக மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி 24 கடற் பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் நந்திக்கடல் கடற்பகுதியும் உள்ளடங்கியுள்ளது.

இப்பகுதிகளை சுற்றுலா பிரதேசமாக மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சிப் பெட்டி சிறுமி மீது விழுந்ததில் சிறுமி உணர்வற்ற நிலையில் !

தொலைக்காட்சிப் பெட்டி சிறுமி மீது விழுந்ததில் சிறுமி உணர்வற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் நேற்றிரவு (11) இடம்பெற்றுள்ளது.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி தொலைக்காட்சி பெட்டி வைக்கப்பட்டிருந்த மேசையில் ஏறிய போது மேசையில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி  சிறுமி மீது விழுந்துள்ளது.

இச் சம்பவத்தில் திடீரென்று மயக்கமடைந்த சிறுமி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வயிறுவலிக்கு சிகிச்சை பெற சென்ற 21 வயதுடைய யுவதி மரணம் – பேராதனை போதனா வைத்தியசாலையில் சம்பவம் !

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வயிறுவலிக்கு சிகிச்சை பெற வந்த 21 வயதுடைய யுவதியொருவர் வைத்தியசாலையில் ஊசி போடப்பட்ட யுவதி உயிரிழந்துள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 10ஆம் திகதி கெட்டப்பிட்டி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பேராதனை போதனா வைத்தியசாலையும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுபோன்றதான வைத்தியசாலை மரணங்கள் இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் கிளிநொச்சி போதனாவைத்தியசாலையில் முறையான பராமரிப்பு இன்றி நான்கு சிசுக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது. மேலும் நுவரெலியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண்சிகிச்சையால் பலர் பாதிக்கப்பட்டிருந்தததுடன் 10ற்கும் அதிகமானோரின் நிலை மோசமடைந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய நிறுவனமொன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் காணப்பட்ட பற்றீரியா காரணமாகவே சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் அசௌகரியத்தை எதிர்்கொண்டதாகவும் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கான நட்டஈடு விரைவில் வழங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

பேருந்தில் வைத்து துருக்கிய சுற்றுலா பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் – இராணுவ கோப்ரல் கைது !

கண்டியிலிருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றில் வைத்து துருக்கிய சுற்றுலா பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இராணுவ கோப்ரல் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (11) தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் பணிபுரியும் கோப்ரல் எனவும் இவர் மாத்தளை பிரதேசத்தைச்  சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில்  குறித்த துருக்கிய பெண் பஸ்ஸில்  பயணித்த பயணிகளுக்கு அறிவித்ததையடுத்து, அவர் பிடிக்கப்பட்டு தம்புள்ளை தலைமையக பொலிஸாரிடம் பயணிகளால் ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின்போது அவர் இராணுவ கோப்ரல் என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தம்புள்ளை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை அண்மைய நாட்களில் இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் கடந்த ஆறுமாதங்களில் இலங்கை வந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் மூலமாக சுமார் 1 பில்லியன் அமெரிக்கன் டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குடும்பஸ்தருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி மா.இளஞ்செழியன் !

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 திகதி வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஸ தலைமையில் பொலிசார், அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்துக்ளை சோதனையிட்டனர்.

இதன் போது பேரூந்து ஒன்றில் பயணித்த குடும்பஸ்தர் தன் வசம் உடமையில் வைத்திருந்த பை ஒன்றில் இருந்து ஹெரோயின் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஹெரோயின் போதைப் பொருள் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்த்தரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று விளக்கமறியில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுருந்தார்.

குறித்த வழக்கு விசாரணைகளில் குறித்த நபர் ஓரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக எடுத்து சென்றமை என்பன எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டமையால் குறித்த நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.

யாழ் நாவற்குழியை சேர்ந்தவரும், தற்போது வவுனியாவில் வசித்து வருபவருமான கந்தையா தியாகராஜா என்ற 55 வயது குடும்பஸ்தருக்கே 6 வருடங்களின் பின் இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்..?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைவாகத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களின் தகுதி, தராதரங்களின் அடிப்படையில் திறமைப் புள்ளியிடலுக்காகப் பல்கலைக்கழகப் பேரவை இன்று புதன்கிழமை காலை கூடியது.

இதன்போது, துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசியர் செ. கண்ணதாசன், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபயும், சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் பி. வினோபாபா ஆகியோர் பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் தமது அறிக்கைகளை முன்வைத்தனர்.

சுற்றறிக்கையில் வரையறுக்கப்பட்ட புள்ளித் திட்டத்துக்கமைய ஒவ்வொரு பேரவை உறுப்பினர்களும் தனித் தனியாகப் புள்ளிகளை வழங்கினர். புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் முறையே பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில், பேரவையின் பரிந்துரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சின் ஊடாக ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

1978 ஆம் ஆண்டின்  16 ஆம் இலக்க பல்கலைக் கழகச் சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் படி பல்கலைக்கழகப் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மூன்று பேரில் ஒருவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி அறிவிப்பார்.

தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட்  மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதால், மிக விரைவில் அடுத்த துணைவேந்தர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை பாடசாலை மாணவர்களின் பாடமாக செயற்கை நுண்ணறிவு !

பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கு செயற்கை நுண்ணறிவை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

06, 09, 10, 13 ஆகிய தரங்களுக்கு இது அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது மைக்ரோசாப்ட் போன்ற புகழ்பெற்ற சர்வதேச நிறுவனங்களிடமிருந்து அனுசரணையாளர்களைப் பெற்று வருவதாகவும் எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் 5000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் 4 சிசுக்கள் உயிரிழந்த சம்பவம் – விசாரணை செய்ய குழு ஒன்றை நியமித்தது சுகாதார அமைச்சு !

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் 4 சிசுக்கள் உயிரிழந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் அதிகாரிகள் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த குழு தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த 4 சிசுக்களும் பிறந்த பின்னர் உயிரிழந்துள்ளன. குறை மாதத்தில் பிறந்த சிசுக்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

இருந்த போதுமத் பாதிக்கப்பட்ட தரப்பினர் வைத்தியசாலையின் முறையற்ற பராமரிப்பே குழந்தைகள் உயிரிழக்க காரணம் என குற்றஞ்சாட்டு வெளியிட்டுள்ளமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைய நடைபெற வேண்டும் – மக்கள் போராட்டம் !

அண்மையில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில்  சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச நியமங்களுக்கு அமைய  இந்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று கவலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 2500 நாட்களைக் கடந்து தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலைமையில் புதன்கிழமை (12)  முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது

குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடி வருகின்ற நிலைமையில் இறுதி யுத்தத்தில் சரணடைந்ததாக சந்தேகிக்கப்படுபவர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற கொக்குத்தொடுவாயில் அடையாளம் காணப்பட்ட மனித புதைக்குழி அகழ்வு பணிகள் சர்வதேச நியமங்களுக்கு முரணாக இடம்பெற்று வருவதாகவும் எனவே சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச தலையீட்டுடன் குறித்த அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த உடலங்கள் யாருடையது என்பது தொடர்பாக கண்டறியப்பட வேண்டும் எனவும் குறித்த செயற்பாடு சர்வதேச கண்காணிப்புக்கு மத்தியில் இடம் பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி குறித்த  போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

சிறுமியின் மார்பகத்தை தொட்டு விஞ்ஞான பாடம் கற்பித்த பாடசாலை அதிபருக்கு ஒருவருடக் கடூழியச் சிறை !

விஞ்ஞான பாடத்தை கற்பிக்கும் போது 12 வயது பாடசாலை மாணவியின் மார்பகத்தை தொட்டு பாலியல் வன்கொடுமை செய்தார் என்ற குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதால் அதிபர் ஒருவருக்கு  5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அநுராதபுரம் நீதிமன்ற நீதிவானும்  மேலதி நீதிவானுமான  நாலக சஞ்சீவ ஜயசூரிய  இந்த உத்தரவைா் பிறப்பித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட மாணவிக்கு  ஐம்பதாயிரம் ரூபா நட்டஈடு வழங்குமாறு குற்றஞ்சாட்டப்பட்ட அதிபருக்கு  உத்ரவிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி அல்லது அன்றைய தினத்தில் 12 வயது  மாணவியின் மார்பகத்தை  தொட்டு இந்த குற்றச் செயலை அவர் புரிந்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் 345 ஆம் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அதிபருக்கு எதிராக அனுராதபுரம் தலைமையகப் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் வழக்குத் தாக்கல்  செய்திருந்தது.