07

07

33 வருடங்களின் பின்பு விடுவிக்கப்பட்ட காணிகள் – அறிக்கைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை , மாங்கொல்லை பகுதியில் இராணுவத்தினர் வெளியேறிய பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை அறிக்கை படுத்தும் நடவடிக்கைகளில் காணி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 33 வருடங்களுக்கும் அதிகமாக மாங்கொல்லை பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் நிலையில் கடந்த ஜூன் மாத கால பகுதியில் அப்பகுதியில் இருந்த நிலைகொண்டு இருந்த இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினார்.

 

இராணுவத்தினர் வெளியேறிய போதிலும் அப்பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படாததால் , மக்கள் மீள் குடியேற முடியாத நிலைமை காணப்பட்டது.

 

அதனை அடுத்து , தம்மை மீள் குடியேற தற்போது அனுமதிக்கா விடினும் , எங்கள் காணிகளை எல்லைப்படுத்தி காணிகளை அறிக்கைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என கடிதம் மூலம் தெல்லிப்பளை செயலரிடம் கோரப்பட்டதை அடுத்து வேலி அடைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.

 

அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து காணி உரிமையாளர்கள் தமது காணிகளை எல்லைப்படுத்தி வேலிகளை அடைத்து வருகின்றனர்.

 

அதேவேளை கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதியினுள் காணப்பட்ட மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய புனரமைப்பு பணிகளையும் அப்பகுதி மக்கள் முன்னெடுத்துள்ளனர்

 

இராணுவத்தினர் எமது காணியில் இருந்து வெளியேறி 3 மாத காலத்திற்கு மேலாகியும் எமது சொந்த காணிகளில் மீள் குடியேற இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை. எனவே எம்மை மீள் குடியேற்ற சம்பந்தப்பட்ட தரப்புக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இலங்கையில் 7 இடங்களில் தாக்குதல் நடாத்த ஐ.எஸ் திட்டம் – நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச!

கொழும்பில் உள்ள 7 இடங்கள் மீது ஐ எஸ் குண்டுத் தாக்குதல் நடத்த திட்டம் இருப்பதாக அரசாங்கப் பத்திரிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பாராளுமன்றம், நாடு மற்றும் மக்களுக்கு இது குறித்த உண்மை தன்மையை சரியாக அறிவிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

 

பாராளுமன்றத்தில் நேற்று (6) உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

சிறைச்சாலையில் இருக்கும் ஐ எஸ் பயங்கரவாதிகளால் இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது பாரதூரமானதோர் விடயம் என்பதனால், இதன் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறும், ண்டும் பயங்கரவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது என்பதால் கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்று இந்த அபாயம் குறித்து ஆராயுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

 

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நாட்டின் சட்டத்தினுள் இயன்ற உச்சபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.