January

January

இலங்கையில் VAT அதிகரிப்பு – உயர்வடையும் பொருட்களின் விலை !

இந்த  (01) புத்தாண்டானது அனைத்து இலங்கையர்களுக்கும் அதிக வரிச்சுமையுடன் கூடிய புதிய ஆண்டாக அமையவுள்ளது.

வெட் வரியை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, இதுவரை 15% ஆக இருந்த வெட் வரி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் முதல், அதாவது நாளை (01) முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வெட் வரி அமுலாகியுள்ளது.

எல்பி கேஸ், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை புதிய VATக்கு உட்பட்டதுடன் அனைத்து கையடக்க தொலைபேசிகள், மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்கள், மருந்து உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் எம்புலன்ஸ்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கும் வெட் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இயந்திரங்களும் வெட் வரிக்கு உட்பட்டவை.

சோலார் பேனல்கள், வீட்டு சூரிய சக்தி அமைப்புகளுக்கும் வெட் வரி விதிக்கப்படுகிறது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, நகைகள், மென்பொருள், கொப்பரா, ரப்பர், முட்டை, தேயிலை, தேங்காய் எண்ணெய் மற்றும் திரவ பால் ஆகியவையும் வெட் வரியை அதிகரிக்கும் பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், காலணி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முடிக்கப்பட்ட தோல் மீது வெட் வரி விதிக்கப்படுகிறது.

கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கலை விற்பனையின் போதும் வெட் வரி அறவிடப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதில் வழங்கப்படும் சேவைகளுக்கு, பயண முகவர் நிறுவனங்களால் வழங்கப்படும் தொடர்புடைய சேவைகளுக்கு வெட் வரி வசூலிக்கப்படுகிறது.

திரைப்பட விநியோகம், கண்காட்சி மற்றும் தயாரிப்பின் போது ஆய்வக வசதிகள் மீதும் வெட் வரி புதிதாக விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் தானியங்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி அதிபோசனை உணவுகள் மற்றும் தேசிய தேங்காய் எண்ணெய்க்கும் வெட் வரி விதிக்கப்படவுள்ளது.

வெட் வரிக்கு உட்படாத பல பொருட்கள் மற்றும் சேவைகளையும் அரசாங்கம் அறிவித்தது.

சிறப்பு வணிக வரிக்கு உட்பட்ட பொருட்களுகள் வெட் வரி இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், VAT அதிகரிப்பால் சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பல தொலைபேசி வலையமைப்பு சேவைகள் தமது கட்டணங்களை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளன.

இலங்கையின் டிஸ்டில்லரீஸ் கம்பனி பிஎல்சியும் (Distilleries Company of Sri Lanka PLC)  தனது மதுபானங்களின் விலைகளை நாளை முதல் திருத்தியமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, 750 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

375 மில்லி பாட்டில் 50 ரூபாவினாலும் 180 மில்லி மதுபான போத்தல் 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

அரியணையை துறக்கிறார் டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத் !

டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத் அரியணையை துறப்பதாக அறிவித்துள்ளார்.

1972 ஆம் ஆண்டு அரியணை ஏறிய 83 வயதான ராணி 52 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இதன்மூலம்  ராணி ஐரோப்பாவில் நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நேரடி தொலைக்காட்சியில் ஆற்றிய பாரம்பரிய புத்தாண்டு உரையில்,

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வெற்றிகரமாக முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், “அறுவைசிகிச்சை இயல்பாகவே எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கத் தூண்டியது எனவும், அடுத்த தலைமுறைக்கு பொறுப்பை விட்டுச்செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

“இதுதான் சரியான நேரம் என்று நான் முடிவு செய்துள்ளேன். பதவியேற்ற 52 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனவரி 14 ஆம் திகதி டென்மார்க் ராணி பதவியில் இருந்து விலகுவேன்.

“தனது அரியணையை என் மகன் பட்டத்து இளவரசர் பிரடெரிக்கிடம் விட்டுச்செல்கின்றேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

பசுவதை தடைச்சட்டத்தினை இயற்றுங்கள் – ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவுக்கு மறவன்புலவுசச்சிதானந்தம் மகஜர் !

இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில், வடமாகாணத்தில் சைவ அமைப்புக்கள் எதிர்நோக்கும் சமயரீதியான பிரச்சனைகள் தொடர்பான ஆலோசனை கலந்துரையாடல் ஒன்று இன்று நல்லை ஆதீன திருஞானசம்பந்தர் மண்டவத்தில், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவுசச்சிதானந்தம் தலைமையில் இடம்பெற்றது.

இவ் ஆலோசனை கலந்துரையாடலில், வடமாகாணத்தில் சைவ அமைப்புக்கள் எதிர்நோக்கும் 05 விடயங்கள் தொடர்பான கருத்துக்கள் கேட்கப்பட்டதுடன், அதனை நாடாளுமன்றத்தில் கொண்டுசேர்த்து அதனை அரசியலமைப்பினை உள்வாங்கவேண்டும், அதனைஎதிர்வரும் 06.01.2024 அன்று யாழ்ப்பாணம் வரவிருக்கும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அவர்களிடம் மகஜரும் கையளிக்கயுள்ளதாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவுசச்சிதானந்தம் தெரிவித்தார்.

அந்த 05 அம்சகோரிக்கையில்,

01.பல்லாயிரம் ஆண்டுகாலமாக வரலாறு கொண்ட இலங்கையின் இந்து சமயத்துக்கு அரசியலமைப்பில் முன்னுரிமை அளிக்கவேண்டும்

02.மதங்களின் மதமாற்ற முயற்சியைத்தடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் மதமற்ற தடைச்சட்டத்தினை இயற்றுக.

03.இந்துமதங்களும், பெளத்தமதங்களுக்கும் தெய்வமாக போற்றப்படும் பசுக்களை எவறும் கொல்லக்கூடாது?பசுவதை தடைச்சட்டத்தினை இயற்றுக.

04.ஒவ்வொரு ஆலயங்களில் நித்தியபூஜை வழிபாட்டில் பசுவினை பூஜைகள் ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும்.

05.ஆரம்பமுன்பள்ளி பருவத்தில் உள்ள சிறார்களின் பசுவினை பாதிப்பது பற்றிய நூல்கள் அறிமுகம் செயற்படுத்தவேண்டும். என்றவாறு காணப்படுகின்றது

இராமலிங்கேஸ்வர் அமைப்பின் செயற்பாட்டாளர் தி.சுந்தரேஸ்சன், சிவநேனை அமைப்பின் உறுப்பினர் த.புவனேந்தீரன், உருத்திரசேனை உறுப்பினர் சுஜீபன், இந்து தன்னார்ந்த தொண்டு சங்கம் தலைவர் வ.சாரகனான்,திரிலங்கா புரி ஆதீனம் தி.விபுலாந்த அடியார்,கோவிற்கடை ஜயப்பன் ஆலயத்தலைவர் த.கலாசாதக்குருக்கள், பசுவதை தடுக்கும் சமூக மன்ற தலைவர் ம.சிவலோகதேசிகசர்மா ஞானசீலன், உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

 

“நாட்டை கடந்த 75 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களாலேயே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.” – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா

நாட்டை கடந்த 75 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களாலேயே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு தேர்தலுக்கான ஆண்டாகும். எனவே அவ்வாறான மோசடிக்காரர்களான அரசியல்வாதிகளிடமிருந்து ஆட்சியை பறிப்பதற்கு மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படாவிட்டால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 75 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆட்சியாளர்களாலேயே நாடு இன்று இவ்வாறான நிலையில் உள்ளது. அந்த வழியில் வந்தவர்களே இன்றும் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

எனவே அவர்களது ஆட்சியின் கீழ் குறுகிய காலத்துக்குள் இந்த நெருக்கடிகளிலிருந்து மீள முடியும் என்று மக்கள் எதிர்பார்க்கக் கூடாது.

எனவே மோசடிக்காரர்களான அரசியல்வாதிகள் தொடர்பில் அறிந்து, அவர்களிடமிருந்து ஆட்சியை பறிப்பதற்கு மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படாவிட்டால் யார் வந்த எந்த வாக்குறுதிகளை வழங்கினாலும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. எனவே ஊழல், மோசடியற்ற நாட்டை நேசிக்கும் தலைவரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

நிவாரணங்களுக்காகவும், சமூர்த்தி கொடுப்பனவுகளுக்காகவும் வாக்களித்தால் கடந்த ஆண்டைப் போன்று மீண்டும் அனைத்தையும் இழக்க நேரிடும்.

இவ்வருடம் அரசியலமைப்புக்கேற்ப அனைத்து தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும். ஆனால் மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறில்லை எனினும் மீண்டும் மக்கள் ஏமாற்றப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்றார்.

தேசம்நெட்இன் வாசகர்களுக்கு மலர்ந்துள்ள 2024ஆம் ஆண்டு  புதுவருட வாழ்த்துக்கள்.  !

இந்தப் பூவுலகில் சமாதானம் மலர்ந்து  பிறந்த, பிறக்கின்ற, பிறக்கப் போகின்ற குழந்தைகள் குண்டுத் தாக்குதல்களுக்கும் வெறுப்புணர்வுக்கும் உட்படாமல் சந்தோசமாக குழந்தைகளாக ஆரோக்கியத்துடனும் ஆளுமையுடனும் ஆர்ப்பரிப்போடும் வளர இன, மத, சாதி, பேதங்கள் கடந்து மனிதத்துவத்தோடு வாழ்த்துவோம்.

May be an image of text that says "1997 முதல் தேசம முரண்பட்ட கருத்துக்களுக்கான களம் ! 2024 23 20 24 HAPPY NEW YEAR காலடி எடுத்து வைக்கும் 2024ஆம் ஆண்டு அனைவருக்கும் நல்ல மாற்றங்களையும் -ஆரோக்கியத்தையும்- சகிப்புத்தன்மையையும்- அன்பு செய்யும் மனதையும் வழங்கும் ஆண்டாக விளங்க தேசம் நெட்இன் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். THESAMNET.CO.UK"

இன, மத அழிப்புகள் அற்ற அமைதிப் பூங்காவாக எம்மால் ஆனவரை முயலுவோம் என தேசம்நெட்இன் வாசகர்களுக்கு மலர்ந்துள்ள 2024ஆம் ஆண்டு  புதுவருட வாழ்த்துக்கள்.