25

25

சிறீதரன் எதைச் சாதிக்க போகிறார்..? – தேசம் திரை காணொளி!

இலங்கை தமிழர் அரசியல் பரப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்று புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட எஸ்.சிறீதரன் எதைச் சாதிக்க போகிறார்..? என்பது குறித்தும் தமிழர் அரசியலில் எப்படியான மாற்றங்களை இது ஏற்படுத்தப்போகிறது என்பது தொடர்பிலும் தேசம் திரை YouTubeஇல் வெளியான இந்த காணொளி பேசுகிறது.

இலங்கை தமிழரசு கட்சி தலைவர் தெரிவு– தேசம் திரை பார்வை.

 

 

தரமற்ற மின்சார வேலிகள் பாவனையில் – கடந்த வருடம் மட்டுமே இலங்கையில் 470 யானைகள் பலி !

நாடளாவிய ரீதியில் தரக்குறைவான மின் வேலிகளை ஆய்வு செய்யும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

தரமற்ற மின்சார வேலிகளால் காட்டு யானைகள் உயிரிழப்பது கடந்த காலத்தில் பதிவாகியிருந்த நிலையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தரமற்ற மின்வேலிகளை அகற்றி தரமானதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த சில தினங்களில் 12 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

கடந்த ஆண்டு சுமார் 470 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 50 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கிழக்கில் இதற்கு முன்னர் 44,980 ஏக்கர் இராணுவத்தினர் வசமிருந்தது. இதில் 90 வீதத்திற்கும் அதிகமான காணிகள் மக்களிடம் மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டுள்ளது. தற்போது இராணுவத்தினரிடம் 7,379 ஏக்கர் காணிகளே உள்ளன. இவற்றில் 37.8 ஏக்கர் மட்டுமே தனியார் காணிகளாக உள்ளன. 7342 ஏக்கர் அரச காணிகளாகும். தனியார் காணியில் 8 ஏக்கர் காணியை இந்த வருடத்தில் மீள கையளிப்போம். இதில் இனவாதத்தை இணைக்க வேண்டாம் என்று கோருகின்றேன் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சார சபை ஊழியர்கள் 10,000 பேருக்கு விளக்கமளிக்க கோரி கடிதம்!

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 10,000 பேருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

சுகயீன விடுமுறையை பதிவு செய்து, அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியமைக்கு விளக்கமளிக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

ஊழியர்களின் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை பேச்சாளர் பிரதி பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய குற்றச்சாட்டில் இலங்கை மின்சார சபையில் ஊழியர்கள் 66 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில், ஊழியர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் பொருளாதார விளைவுகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் – ஹர்ஷ டி சில்வா

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவையிருப்பினும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் பொருளாதார விளைவுகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

“இ-வணிகம் ஏற்படுத்தும் விளைவுகளை ஒருவர் கவனிக்க வேண்டும். நமது இளைஞர்களை இ-வணிகம் மூலம் பொருளாதாரத்தில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும். இது போன்ற சட்டங்கள் இந்த வாய்ப்புகளை தடுக்கும்,” என்றார்.

“மற்றொருவர் சமூக ஊடகங்களில் தேவையற்ற இடுகையைப் பதிவேற்றுவதால், பேஸ்புக் மற்றும் யூ டியூப் போன்ற சேவை வழங்குநர்களை குற்றவாளிகளாக நீங்கள் கருத முடியாது,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாகன விபத்தில் அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழப்பு !

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை ) அதிகாலை இடம்பெற்ற விபத்திலே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

இதேவேளை விபத்தில் படுகாயமடைந்த மூவர் ராகம வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இராஜாங்க அமைச்சரும் மற்றுமொருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.