26

26

காஸா மீதான இஸ்ரேலின் தொடரும் தாக்குதல் – 20 பேர் பலி!

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

உணவு பெற வரிசையில் காத்திருந்தவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

 

இது ஒரு போர்க்குற்றம் என்றும், இஸ்ரேல் வேண்டுமென்றே இத்தகைய தாக்குதல்களை நடத்துகிறது என்றும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்களை அடையாளம் காண விசாரணை !

முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்களை அடையாளம் காண விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்களே இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனிநபர்கள் இதுபோன்ற அவதூறான கருத்துக்களை தொடர்ந்து மற்றும் போலி கணக்குகளின் கீழ் பதிவிடுவது கண்டறியப்பட்டது.

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் போன்ற ஏனைய நிகழ்வுகளுடன் இந்தச் சம்பவமும் சமூக ஊடகங்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் காட்டுவதாக அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.

தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் காத்தான்குடியில் கைது !

தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் உட்பட இருவர் யுக்திய போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 5 கிராம் 440 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அத்தோடு, அதே பிரதேசத்தில் மற்றுமொருவர் 860 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதாகியுள்ளார்.

 

தற்போது நாடு முழுவதும் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரையின் கீழ், ‘யுக்திய’ போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

அதன் அடிப்படையிலேயே இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவர்களில் 2 கிராம் 960 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடி அமானுல்லா வீதியில் வைத்து 32 வயதுடைய இளைஞர் ஒருவரும், 2 கிராம் 480 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் புதிய காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து மற்றொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அதேவேளை, கர்பலா பிரதேசத்தில் வைத்து 860 மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் 48 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்க குறிப்பிட்டார்.

 

கைதான மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கைதான மூவரில் புதிய காத்தான்குடியை சேர்ந்த சந்தேக நபர் மட்டக்களப்பு நீதிமன்ற உத்தரவுக்கமைய, ஏழு நாட்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

 

ஏனைய இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

இச்சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்குறுதி அரசியலே நாட்டின் பொருளாதாரத்தை அழித்தது -ஜனாதிபதி ரணில்

வாக்குறுதி அரசியலே நாட்டின் பொருளாதாரத்தை அழிவுக்கு இட்டுச் சென்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

எனவே, தேர்தல் ஒன்றுக்கு தயாராகும் அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டத்தைத் கொண்டிருக்க வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இன்று (26) நடைபெற்ற சுங்கத் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தினார்.

தமிழர்கள் உட்பட நிரபராதிகளை சிறைக்கு அனுப்பிய பிரித்தானிய தபாலகங்கள்! 20 ஆண்டுகளாக போராடும் நிரபராதிகள்!! இன்றும் குற்றவாளிகளாகவே இறந்து போகும் தபாலக மேலாளர்கள்!!!

40க்கும் மேற்பட்ட நிரபராதிகள் குற்றவாளிகளாக மரணித்த நிலையில் 20 வருடங்களாக தொடரும் பிரச்சினையில் அப்பாவிகளுக்கு நீதி கிட்டவில்லை. இன்னமும் பலர் சிறைத்தண்டனை அனுபவிக்கின்றனர். இவர்கள் செய்த குற்றம் பிரித்தானிய மக்களுக்கான அடிப்படைச் சேவைகளில் ஒன்றான தபாலகச் சேவையை வழங்கியது மட்டுமே. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம் என்றும் இழப்பீடு பெறுவதற்கு உரித்துடையவர்கள் மட்டும் 4,000 பேர் என்றும் தெரியவருகின்றது. இவர்களில் ஆயிரம் பேர் வரை நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு குற்றவாளிகளாக்கப்பட்டு சிறைத் தண்டணையும் வழங்கப்பட்டது.

 

இவற்றையெல்லாம் தாங்க முடியாது என்று 15 ஆண்டுகள் போஸ்ற்ஒபிஸ் (Postoffice) நடத்திய சப் போஸ்ற் மாஸ்ரர் (Sub Post Master) அப்துல் அப்டீன் தற்போது 88 வயது தன்னுடைய மனைவி வனசாவுடன் 2005 இல் இலங்கைக்குச் சென்று வாழ்கின்றார்.

 

தேசம் திரையின் இது தொடர்பான காணொளி காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

 

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனு மீதான விசாரணை ஆரம்பம்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று (26) உச்ச நீதிமன்றில் ஆரம்பமானது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் 29 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழில் போராட்டம் !

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழில், இன்றையதினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.பொது நூலகத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு யாழ். மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்து அங்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.