27

27

இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் துஷ்பிரயோகங்கள் – 2023இல் 1,502 பேர் மீது பாலியல் துஷ்பிரயோகம் !

இலங்கையில் பாலியல்  துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதாக  சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் 18 வயதுக்கு உட்பட்ட 1,502 பேர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாலியல்  கல்வி தொடர்பில் சிறுவர்களுக்குத் தெரியப்படுத்துவது மிகவும் அவசியமானது என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார் .

இஸ்ரேல் மீது தென்னாபிரிக்கா பதிவு செய்த இனப்படுகொலை வழக்கு – சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !

இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்காவினால் பதிவு செய்யப்பட்ட இனப்படுகொலை வழக்கிற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கானது, இன்று(26) சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. காசா மீதான தாக்குதலில் இனப்படுகொலை செய்ததாக தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது வழக்குத் தாக்கல் செய்தது.

இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரில் இனப் பேரழிவு தொடர்பான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் இன்று (26) இஸ்ரேலுக்கு தீர்ப்பளித்துள்ளது.

அத்தோடு, பலஸ்தீனர்களுக்கு இனப் பேரழிவு நடவடிக்கைகளின் போது தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாகவும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இனப் பேரழிவுக்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பிரிவினர் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் போரில் இஸ்ரேல் காசாவின் பெரும்பகுதியை தரைமட்டமாக்கி விட்டதுடன், 1.9 மில்லியன் மக்களை தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றிய நிலையில், குறைந்தது 25,900 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

 

மின்சார வேலியில் சிக்குண்டு காட்டுயானையொன்று பலி !

நிகவரெட்டிய வனஜீவராசிகள் திணைக்களத்திற்குட்பட்ட பகுதியில் காட்டுயானையொன்று மின்சார வேலியில் சிக்குண்டு  பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குறித்த யானையின் சடலமானது நேற்று அதிகாலை நிகவரெட்டிய – திவுல்லேவ திகன்னேவ பகுதியில் வைத்து வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்த காட்டு யானை சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த அதிவலுக் கொண்ட மின்சாரக் கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த காட்டு யானை சுமார் 8 அடி உயரம் எனவும் 30 வயது மதிக்கத்தக்கது என்றும் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நிகாவெரெட்டிய நீதிமன்றத்தில் நேற்று(26) முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் உயிரிழந்த காட்டு யானை நிகவரெட்டிய மிருக சிகிச்சைப் பிரிவின் வைத்தியரினால் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.