19

19

சமூக வலைத்தளங்களில் ஆண்கள் ஏன் பெண்களை துஸ்பிரயோகம் செய்கின்றனர் ?

அண்மைய காலங்களில் சமூக வலைத்தளங்களில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்து கொண்டே செல்வதை அவதானிக்க முடிகின்றது. அதிலும் தமிழர்களின் சமூக வலைத்தள கணக்குகளில் சமூக பொறுப்பு கலாச்சார காவல் போன்ற சொல்லாடல்களை மையப்படுத்தி பெண்கள் மீதான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதையும் காண முடிகிறது. இந்த நிலையில் பெண்களின் சமூக நிலை குறித்தும் – சமூக வலைத்தளங்களில் அவர்கள் மீது எவ்வாறான துஷ்பிரயோகங்கள் நடைபெறுகின்றன என்பது பற்றியும் – இது தொடர்பான சிக்கல்களை கையாள்வது பற்றியும் சமூக செயற்பாட்டாளரான நளினி ரத்னராஜா அவர்களுடன் தேசம் நெட் தம்பிராஜா ஜெயபாலன் மேற்கொண்ட கலந்துரையாடல்.

கீழுள்ள இணைப்பை அழுத்தி, ரரின் கொன்ஸ்ரன்ரைன் என்பவரும் லண்டன் வெம்பிளியில் உள்ள ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளரும் இறுதியுத்தத்திற்குப் பின் அரசியல் தஞ்சம் பெற்ற ஒரு பெண்ணை தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தவர் எனக் குற்றம்சாட்டி இலங்கைப் புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கொடுக்கின்றார்களாம். இவர்கள் இதனைத் தமிழீழத் தேசியத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனின் மகனை லண்டனில் பராமரிப்பவரின் வட்ஸ்அப் குறூபில் தான் செய்துள்ளனர்.

Constantine_T_LTTE_Harasment_01

பத்து இலட்சம் காணியற்ற மக்களுக்கு ஐந்து மாதங்களுக்குள் காணி !

சுமார் பத்து இலட்சம் காணியற்ற மக்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் இலவசப் பத்திரங்கள் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

 

அதிபர் ஊடக மையத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இதனை கூறியுள்ளார்.

அத்தோடு, மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் அலட்சியம் காட்டும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஒடுக்கும் முயற்சி அரசாங்கத்திடம் இல்லை என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் விடுதலை!

வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

 

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்தது.

 

இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடிசெய்தார்.

 

குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம், அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.