05

05

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய்கள் மூலமாக எண்ணெய் வழங்கும் திட்டம் !

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய்கள் மூலமாக எண்ணெய் வழங்கும் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஒன்றிணைந்து இன்று திருகோணமலை இந்தியன் எண்ணை நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்து வைத்தனர்.

திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியில் சாம்பல் தீவு பாலத்திற்கு அருகாமையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையமானது திறந்துவைக்கப்பட்டது.

பேரம்பேசலைச் செய்து செய்தால்தான் ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகுமே தவிர பொது வேட்பாளர் என்பது வெறும் பம்மாத்து – அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா

நான் நீண்டகாலமாக மாகாணசபை பற்றி வலியுறுத்தி வருகின்றேன். “செவிடன் காதில் ஊதிய சங்கு” போல் அதனை யாரும் கேட்கவில்லை. என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழூர் பகுதிக்கு சனிக்கிழமை(04) நேரில் விஜயம் செய்து அப்பகுதி மீகவர்களின் குறை நிறைகளைக் கேட்டறித்து கொண்டார்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுருக்குவலைப் பயன்படுத்துதல் கிழக்கில் மாத்திரமல்ல நாடு பூராகவும் பரந்துபட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது. நான் செல்லும் இடம் எனலாம் அதனைத் தடை செய்யுமாறு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. முடிந்தவரையில் சுருக்குவலைப் பயன்பாட்டைத் தடை செய்வதற்குரிய நடவடிக்கையை நான் எடுத்துக் கொண்டு வருகின்றேன்.

அதுபோல் மட்டக்களப்பு வாவியிலும் தொழில் செய்பவர்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள். அதற்குத் தீர்வு காணும் முகமாக ஒரு மாத்திற்குள் ஒரு குழுவை அமைத்து அதுதொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்கள். அதனை வைத்துக் கொண்டு நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் என்பது இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சனையாகும். இது தொடர்பில் நாம் போச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதுபோல் சட்டநடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றோம். இன்னும் பேச்சுவார்த்தைகளில் முழு நட்பிக்கை வத்து முயற்சிகளை எடுத்துள்ளோம்.

தற்போது மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இரண்டு மாதங்களாக இந்திய மீனவர்கள் தொழிலுக்கு வரவில்லை. தேர்தல் முடிந்தவுடன் கூடிக் கதைக்கலாம் என அண்மையில் தமிழ்நாட்டு முதலமைச்சரிடமிருந்தும், புதுச்சேரி முதலமைச்சரிடமிருந்தும் எனக்கு அமைப்பு வந்திருந்தன. அதற்காக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

தமிழ் மக்களின் பிரச்சனைகள் சரியான முறையில் கையாளாத காரணத்தினால்தான் தமிழ் மக்கள் தற்போதைய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனாலும் வருகின்ற காலத்திலாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளைச் சரியாக கையாளும் பட்சத்தில் விரைவில் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணலாம்.

30 வருடங்களாக் நான் சொல்லி வந்தவிடையம் அனைவரும் அறிந்ததே. அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச்சட்டம், மாகாணசபை முறைமையை ஆரம்பித்ததனூடாகத்தான் தமிழர்களுடைய  அரசியல் உரிமைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என நான் மிக நீண்ட காலமாக சொல்லி வந்தேன். அதனை “செவிடன் காதில் ஊதிய சங்கு” போல் அதனை யாரும் கேட்கவில்லை.

ஆனால் தற்போது அதுபற்றி பலரும் முணு முணுக்கின்றார்கள். அவ்வகையிலாவது அது நல்லவிடையமாகும். யாரும் இவற்றை எதிர்க்கும்போதும், அதனை ஆதரிக்கும்போதும் உண்மைத் தன்மையாக யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மைத்தன்மையாக முன்வருவார்களேயானால் இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.

வரஇருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமராச மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகிய மூன்று வேட்பாளர்கள் பிரதானமானவர்களாக காணப்படுகின்றார்கள்.

இந்த மூவரில் ஒருவருடன் கலந்துரையாடி எமது வாக்குகளை உங்களுக்குத் தலராம் எமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்ற பேரம்பேசலைச் செய்து கலந்துரையாடினால்தான் ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகுமே தவிர வெறுமனே பொது வேட்பாளர் என்பது வெறும் பம்மாத்து ஆகும்.

புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா என பார்த்தால் கடந்த கால தமிழ் அரசியல் மருந்துக்குத்தான் வலி என்ற அரசியலை முன்னெடுத்திருந்தனர். அது என்ன நிலமையில் மக்களைக் கொண்டு விட்டுள்ளது என்பதை புரிகின்றது. எனவே புண்ணுக்குத்தான் வலி இதனை தமிழ் மக்களும் சரிவர உணர்ந்து யார் தமது பிரச்சனைகளை ஆக்கபூர்வமாக முன்னெடுக்கின்றார்களோ அவர்களோடு அணிதிரழ்வததான் சரியானது என தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு போலி விம்பத்தினை உருவாக்க எத்தனிக்கிறார் –

அண்மைக் காலமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு போலி விம்பத்தினை உருவாக்க எத்தனிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளருமாகிய அருன் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கட்சி தாவல்களின் காரணமாக நீதிமன்ற தீர்ப்பினால் விரட்டியடிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற பதவியை இழந்த ஒருவரை ஆளுநராக ஜனாதிபதி நியமித்துள்ளார். இதனை ஒரு போதும் ஏற்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நசீர் அஹ்மட் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தபோது திருகோணமலை மாவட்டத்தில் ஷாபி நகர் எனும் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக பாரிய சுற்றுச் சூழல் தாக்கம் மற்றும் பாரிய பாலமொன்றும் உடைந்துள்ளது.

இதற்கு முற்று முழுவதுமாக பொறுப்பு கூற வேண்டியவர் வட மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஹாபீஸ் நசீர் ஆவார்.

குறித்த செயற்திட்டத்தினை முன்னெடுத்ததாக பதவி விலக்கப்பட்ட புவிச்சரிதவியல் நிறுவனத்தின் தலைவர் கூட இப்போது குறித்த ஆளுநருடன் இணைந்துள்ளார்.இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.