14

14

இராணுவத்தினரின் வதிவிடத்துக்காக அரச காணிகள் வழங்கும் கருத்திட்டம் – திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இராணுவத்தினரின் வதிவிடத்துக்காக அரச காணிகள் வழங்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக இதன் போது பின்பற்றப்படும் பொறிமுறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடமைகளின் போது உயிர் நீத்தவர்கள், காணாமல் போனோர்  மற்றும் இயலாமைக்குட்பட்டோர், ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியில் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முப்படையினர் இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் இராணுவத்தினருக்கு வதிவிடத்துக்காக அரச காணிகள் வழங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பொறிமுறை தொடர்பாக காணி ஆணையாளர் நாயக்கத்தினால் அமைச்சரவை அங்கீகாரத்தின் பிரகாரம் அவ்வப்போது சுற்றறிக்கை ஆலோசனைகள்  வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு முறையின் கீழ் இராணுவத்தினருக்கு  உரித்தாகின்ற சலுகைகள் போதியளவாக இன்மையால், அனுபவித்துக் கொண்டிருக்கும் காணிகளுக்காக  நிபந்தனைகளுடன் கூடிய சட்டபூர்வ ஆவணங்களில் காணப்படுகின்ற  மட்டுப்பாடுகளால் குறித்த காணிகளில் உண்மையான பொருளாதார பெறுமதிகளை எடுத்தியம்பப்படுவதில்லை என்பது  கண்காணிக்கப்பட்டுள்ளது.

அதனால் இராணுவத்தினருக்கு காணிகளை வழங்கும்போது தற்போது கடைப்பிடிக்கப்படுகின்ற பொறிமுறையால் மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் உள்ளடங்கிய  தற்போதுள்ள  பொறிமுறையை திருத்தம் செய்வதற்காக தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் பலஸ்தீன அப்பாவி மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். – சஜித் பிரேமதாச

இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் பலஸ்தீன அப்பாவி மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெததன்யாஹு பொறுப்புக்கூறவேண்டும்.

 

அதேநேரம் பலஸ்தீன், இஸ்ரேல் இரண்டு நாட்டு தீர்வுக்கு வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீனின் தற்பாேதைய நிலை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

கொலைகார அரசாக இஸ்ரேல் அரசு பலஸ்தீன மக்களின் வாழ்வை முற்றாக அழித்து, அவர்களின் தாயகத்தை அழித்து, அரச பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி பலஸ்தீன மக்கள் மீது நடத்தி வரும் மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு எதிராக இலங்கையர்களாகிய நாம் உலக மக்களோடு முன் நிற்போம்

 

உடனடியாக போர் நிறுத்த்திற்குச் சென்று பட்டினியால் வாடும் பலஸ்தீன மக்களின் வாழும் உரிமை எல்லாவற்றுக்கும் முதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று முழு உலகுமே கோரிக்கை விடுக்கிறது. இஸ்ரேல் அரசாங்கம் மருத்துவமனைகளுக்கு குண்டுத்தாக்குதல் நடத்துகிறது. பாடசாலைக்கு குண்டுத் தாக்குதல் நடத்துகிறது. சிவில் குடிமக்களை அப்பட்டமாக கொலை செய்து வருகிறது. இந்த கொலைகார இந்த அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றோம்.

 

இஸ்ரேலும் பலஸ்தீனும் சமாதானமாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என இதற்கு முன்னர் நாம் பேசும் போதெல்லாம் கூறினோம்.இஸ்ரேல் அரசாங்கம் தொடர்ச்சியாக பலமுறை பேச்சுவார்த்தைகளை நிராகரித்து, பலஸ்தீன தாயகத்தை அழிக்கும் அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றேன், இந்த கொலைகார பயங்கரவாதத்தை கைவிடுமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

 

மேலும் ஹிட்லர் என்ற கொலைகாரன் அன்று யூதர்களை படுகொலை செய்ததுபோன்று இன்று இஸ்ரேலை ஆட்சி செய்யும் படுகொலை அரசாங்கம் பலஸ்தீன அப்பாவி மக்களை படுகொலை செய்துவருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

 

இந்த அரச பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் நாங்கள் நிபந்தனையின்றி வழங்கவேண்டு்ம்.

 

நெதன்யாகு அரசாங்கம் தொடர்ச்சியாக இடைவிடாது மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான, கீழ் தர செயலை, பயங்கரவாத நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை மாத்திரமல்ல, அவர்களது நாட்டுக்குள் வாழும் உரிமை அவர்களுக்குள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு, பலஸ்தீன், இஸ்ரேல் இரண்டு நாடு தீர்வாகும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

மீண்டும் அகற்றப்பட்டது ஓமந்தை சோதனைச் சாவடி!

கொரோனா காலப்பகுதியில் வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச்சாவடி அகற்றப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் தற்காலிக இராணுவ சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அவற்றில் பல சாவடிகள் அகற்றப்பட்ட நிலையில் ஓமந்தை சோதனை சாவடி மாத்திரம் நான்கு வருடங்களாக அகற்றப்படாமல் இருந்த நிலையில் அது தற்போது அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் தற்போதாவது கண்டிக்க வேண்டும் – பாராளுமன்றத்தில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் !

பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகளை தடுப்பதற்கு இன்னும் முடியாமல்போயிருப்பது மனித இனத்துக்கே இழுக்காகும்.

அதேநேரம் இஸ்ரேலின் இனப்படுகொலையை அரசாங்கம் தற்போதாவது கண்டிக்க வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பலஸ்தீனின் தற்பாேதைய நிலை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்மொழிந்துந்த உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இன்று பலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் நிலையை போன்று, நமது முன்னோர்கள், பல நூற்றாண்டுகளாக, ஏகாதிபத்திய காலனித்துவக் கொள்கைகளால் ஒடுக்குமுறைக்கும் வன்முறைக்கும் முகங்கொடுத்து பல துயரங்களை சந்தித்தமையை எமது வரலாற்றின் ஊடாக நாம் காண்கிறோம்.

மேலும், 50 களில் இருந்து ஜவஹர்லால் நேரு, மார்ஷல் டிட்டோ, ஜெனரல் நாசர் உட்பட நம் நாட்டு தலைவர்களும் அணிசேரா முகாமின் தலைவர்களும் காலனித்துவம் மற்றும் நிறவெறிக்கு எதிராக வலுவாக முன்னின்று செயற்பட்ட யுகமாகும்.

ஆனால் சமீப காலமாக, உலகின் நிதி வல்லரசுகள், தங்கள் செல்வம் மற்றும் அதிகாரத்தின் காரணமாக, சர்வதேச அளவில் அந்த ஒற்றுமையை பலவீனப்படுத்தும் வகையில் செயல்படுவதை சர்வதேச தளத்தில் எம்மால் காண முடிந்தது.

இறுதி தருணம் வரையில் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியை காப்பாற்றிய சக்திகள், அதேபாணியில் இன்றும் பலஸ்தீன மண்ணில் நடக்கும் அநீதி, அடக்குமுறைகளை மூடி மறைத்து, உலக மக்கள் ஆணைக்கு எதிராக சென்று, பிரிவினைவாத, மனிதாபிமானமற்ற ஆட்சிக்கு அடைக்கலம் கொடுக்க முயல்கின்றன.

மேலும், ஆறு மாதங்களுக்கும் மேலாக பலஸ்தீன மண்ணில் நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலைகள் மற்றும் பேரழிவை உலகின் பலம் வாய்ந்த ஊடகங்களும், நமது நாட்டின் சில பலம் வாய்ந்த ஊடகங்களும் மூடி மறைத்து வந்தாலும், சமூக ஊடகங்கள் வாயிலாக பலஸ்தீனத்தின் யதார்த்தம் ஏறக்குறைய சமூகத்திற்கு அம்பலமானது.

உலகெங்கிலும் உள்ள புதிய தலைமுறை, உலகின் எதிர்காலத்திற்கு உரித்துரிமை கொண்ட தலைமுறை, அந்த எதிர்காலத்தை வழிநடத்தப்போகும் தலைமுறை, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற பெறுமதிகளுக்கு அர்த்தம் கொடுக்கும் பின்னணியில், இந்த முன்மொழிவு தொடர்பில் இன்று இந்த சபையில் விவாதிக்கிறோம்.

உலகின் பிரதான பல்கலைக்கழக மாணவ தலைமுறையினர் தனது உயிரையும் எதிர்காலத்தையும் அர்ப்பணித்து சுதந்திரம், ஜனநாயகம், நியாயம் மற்றும் நீதிக்காக முன்னின்று போராடும் தருவாயில் இந்த முன்மொழிவு தொடர்பில் கலந்துரையாடுகிறோம்.

அதுமாத்திரமின்றி இஸ்ரேல் அடிப்படைவாத ஆட்சிக்கும் வன்முறை, ஒடுக்குமுறை, பிரிவினைவாதத்திற்கு எதிராக யூத இன குழுமத்தின் புத்திஜீவிகள், பல்கலைக்கழக பிரஜைகள், இளைஞர்கள் கூட ஒன்றிணைந்துள்ள சூழலில் இந்த விவாதம் நடைபெறுகிறது. இது போன்று 60 களில் வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட ஐரோப்பாவில் பரவிய மாணவ போராட்டமே எனது நினைவுக்கு வருகிறது.

கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் சபையானது பலஸ்தீன அரசுக்கு புதிய உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்கும் தீர்மானத்தை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றியது. இது ஐக்கிய நாடுகள் சபையில் முழு அங்கத்துவத்திற்கு வழி வகுத்தது. இந்த முன்மொழிவு தொடர்பான விவாதத்தின் போது, இஸ்ரேலிய பிரதிநிதி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார் மற்றும் இந்த முன்மொழிவு நிறைவேற்றப்பட்டால், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளுக்கான அமெரிக்க உதவியை குறைக்க எதிர்பார்க்கிறேன் என்று அச்சுறுத்தினார். இந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது 143 நாடுகள் இந்த திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உட்பட ஒன்பது நாடுகள் மட்டுமே இதை எதிர்த்தன.

சுதந்திரம், மனித உரிமைகள், நிறவெறி அல்லது இனவெறி போன்றவற்றுக்கு எதிராக எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் ஒரு நாட்டின் வீட்டோ அதிகாரத்தால் செல்லுபடியற்றதாக்கியதை நாம் காண்கிறோம். சர்வதேச நீதிமன்றம், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவற்றுக்கு தொடர்ந்து சவால் விடுப்பதை நாம் இன்னும் பார்க்கிறோம். மோதல்களை நிறுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி படைகளை நிறுத்துவதற்கான முன்மொழிவுகள் கூட அப்பட்டமாக நிராகரிக்கப்பட்டுள்ளன.

சுயாதீன விசாரணைக்காக அந்த பூமிக்கு செல்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உரிமைக்கும் தொடர்ந்து சவால் விடுக்கப்பட்டு வருகிறது. எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா உட்பட அனைத்து மத்தியஸ்தர்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர், ஆனால் நெதன்யாகு ஆட்சி சமாதானத்திற்கான வாய்ப்பை நிராகரித்துவிட்டது.

சர்வதேச அரசியலுக்காக உருவாக்கப்பட்ட மனிதாபிமான அவலத்தைத்தான் இன்று பலஸ்தீன மண்ணில் நாம் காண்கிறோம். காஸாவிற்கு உணவு, தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை கொண்டு வரும் அனைத்து வாயில்களையும் இஸ்ரேல் தற்போது மூடியுள்ளது. காஸாவில் பாதுகாப்பான பிரதேசம் என்று தற்போது எதுவுமே இல்லை.

ஆறு மாதங்களுக்கும் மேலாக, தினமும் இப்படி மக்கள் கொல்லப்பட்டு, பஞ்சத்தை உருவாக்கி, அதன் மூலம் மக்கள், குழந்தைகள், பெண்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள்,ஊடகவியலாளர்கள் என வேறுபாடின்றி அனைவரும் இறக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களால் நடத்தப்படும் இந்த இனப்படுகொலை இன்றைய காலகட்டத்தில் இன்னும் தடுக்கப்படவில்லை என்பது மனித குலத்திற்கே அவமானமாகும் என்றார்.

பாரம்பரிய பெருந்தோட்டக் கைத்தொழிலுக்குப் பதிலாக புதிய விவசாய வர்த்தகத் துறையொன்றை  நாட்டில் உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பாரம்பரிய பெருந்தோட்டக் கைத்தொழிலுக்குப் பதிலாக புதிய விவசாய வர்த்தகத் துறையொன்றை  நாட்டில் உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தாம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புதிய சட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் உள்ள தடைகள் நீக்கப்படும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, பெருந்தோட்டத்துறையில் புதிய தொழில்நுட்ப முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதுருகிரிய தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் புதிய கல்வி மற்றும் நிர்வாக கட்டிடத்தை செவ்வாய்க்கிழமை (14) காலை திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

பெருந்தோட்டத்துறைக்குத் தேவையான புதிய திறன்களைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்கவும் இளைஞர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி கூடங்கள், விரிவுரை மண்டபங்கள், கணினி ஆய்வகங்கள் மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கான தொழில் ஆலோசனை மையங்கள் இங்கு நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதுடன் AI மற்றும் GIS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான மையமும் இங்கு நிறுவப்பட உள்ளது.

இந்த புதிய கல்வி மற்றும் நிர்வாக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக 750 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி அங்கு வைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு ஒன்றையும் பதிவிட்டார்.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விவசாயத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமே இந்நாட்டின் கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.

 

இலங்கையை அண்டியுள்ள நாடுகளின் சனத்தொகை பல பில்லியன்களால் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது என்றும் அந்த நாடுகளில் உள்ள நடுத்தர மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் விவசாயத்தை உருவாக்குவதன் மூலம், இலங்கையின் ஏற்றுமதி விவசாயத் தொழிலை உயர்த்த முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றுவதற்கான சட்ட வரைபுக்கு திங்கட்கிழமை (13) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஒரு ‘பீ ‘ குளம்! நான் ஒரு பீக்குளத்து மீன்!! வெளியே வந்தால் செத்துவிடுவேன்!!! – பேராசிரியர் ஹூல் –

யாழ்ப்பாணத்தின் சமகால அரசியல் – சமூக கட்டமைப்புக்களின் நிலை தொடர்பில் பேராசிரியர் கூல் அவர்களுடன் உரையாடல்..!

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!