26

26

“1981 இல் தேர்தலில் வெற்றி காண்பதற்காக, ரணில் விக்கிரமசிங்கவே யாழ். நூலகத்தை எரித்தார்.” – வவுனியாவில் அனுரகுமார திஸ்ஸநாயக்க!

இந்த நாட்டிலுள்ள வடக்கு – தெற்கு ஆட்சியாளர்களே மக்கள் மத்தியில் பாரிய இனவாதத்தை தூண்டி, மாபெரும் யுத்தத்தை உருவாக்கியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும், 1981 இல் தேர்தலில் வெற்றி காண்பதற்காக, ரணில் விக்கிரமசிங்கவே யாழ். நூலகத்தை எரித்தார் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வவுனியாவிலுள்ள இரட்டைபெரியகுளம் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்ற, தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்த நாடு நெருப்பாலும் வெள்ளத்தாலும் அழிந்த நாடு அல்ல. அனைத்து செல்வ செழிப்பும் நிறைந்த பொக்கிஷமே எமது நாடு. ஆனால், இந்த மாபெரும் பொக்கிஷத்தில், உண்பதற்கும் குடிப்பதற்கும் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். மருந்தின்றி இறந்து போகின்றார்கள், வீடின்றி வாழ்கின்றார்கள்.

ஆகையால், ஆட்சி செய்தவர்கள் இந்த நாட்டை வளர்க்கவில்லை.

எனவே, தேசிய மக்கள் சக்தியுடன், மக்களும் ஒன்றாக இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியம் என தேசிய மக்கள் சக்தி உறுதியளிக்கிறது.நாம் எமது நாட்டு மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவோம்.

இந்த ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் பாரிய இனவாதத்தை தூண்டி, மாபெரும் யுத்தத்தை உருவாக்கினார்கள். அது தானாக உருவான யுத்தம் அல்ல. வடக்கு – தெற்கிலுள்ள அரசியல் வாதிகள், அவர்களின் பதவிக்காக அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட யுக்தியினால் உருவான யுத்தம்.

பிரபாகரனால் தற்கொலை குண்டுதாரிகள் உருவாவதற்கு பிரதான இரண்டு காரணங்கள் உள்ளன.

முதலாவது, 1981 இல் அபிவிருத்தி சபை தேர்தல். ரணில் விக்கிமசிங்கவின் குழுவினர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று யாழ். நூலகத்தை எரித்தார்கள்.

தேர்தலுக்காக, வாக்குகளை பெறுவதற்காக நூலகத்தை எரித்த சம்பவத்தை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டதுண்டா?

வடக்கிலுள்ள தமிழ் மக்கள் வாசிப்பு பழக்கத்துடன் மிகவும் நெருக்கமானவர்கள்.

அம்மக்கள் யாழ். நூலகத்துக்குச் செல்கையில், தெய்வ ஸ்தலங்களுக்கு செல்வதைப்போன்று தமது காலணிகளை வெளியில் விட்டுவிட்டுச் செல்வதை நான் கண்டுள்ளேன்.

வடக்கு மக்களுக்கும் யாழ். நூலகத்துக்கும் இடையில் அவ்வாறானதொரு ஒற்றுமையிருந்து. ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் குழுவினர், 1981 இல் தேர்தலில் வெற்றிக்காண அந்த நூலகத்தை தீக்கிரையாக்கினார்கள்.

தெற்கிலுள்ள அரசாங்கம் தமது நூலகத்தை தீயிட்டு எரிப்பதனை நினைத்து அம் மக்கள் வேதனைப்பட்டார்கள்.

இதனை தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு முக்கியமான சம்பவமொன்று நிகழ்ந்தது.

மக்கள் விடுதலை முன்னியுடன், மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதைக்கண்டு ஜேஆர் ஜெயவர்தன பயந்து, எமது கட்சியின் பயணத்தை ஒழிக்க முடிவு செய்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் வளர்ச்சி ஜேஆர் ஜெயவர்தனவின் அரசியலுக்கு தடையாக இருந்தது. அதனால், அவர் எம் கட்சியை தடைசெய்ய முயற்சித்தார்.

 

இதனால், ஜேஆர் ஜெயவர்தனவும், ரணில் விக்கிமசிங்கவும் இணைந்து 1 ஆம், 2 ஆம் குறுக்குத் தெருவுக்கு தீவைத்தார்கள். ஒரு கறுப்பு ஜுலையை உருவாக்கினார்கள். அநுராதப்புரம் சிற்றம்பலம் மண்பத்தையிட்டு கொழுத்தினார்கள். முழு நாடும் தீப்பற்றி எரிந்தது. இதனை ஜேஆர் ஜெயவர்தனவின் ரௌடிகளே செய்தார்கள்.

ஆனால், 83 இன் கலவரத்திற்கு மக்கள் விடுதலை முன்னியினரே காரணம் என எம் கட்சியை தடை செய்தார்கள்.

இதனால், தெற்கில் தமிழ் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படுவதையும், உயிர் காவுக்கொல்லப்படுவதையும், தெற்கிலிருந்து தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்படுவதையும் நினைத்து, பிரபாகரனுக்கு வடக்கில் புதிய அரசாங்கமொன்று உருவாக்க வேண்டிய தேவையேற்பட்டது.

ஆகவே, தெற்கில் தமது மக்கள் அழிக்கப்படுவதையும், வடக்கில் நூலகத்தை எரித்தமையும் கூறி வடக்கு இளைஞர்களை யுத்தத்துக்காக அழைத்தார்.

ஆயுதமேந்திய மாபெரும் இயக்கத்தை பிரபாகரன் உருவாக்கினார்.

இதில் சாதாரண தாய் தந்தைகளின் பிள்ளைகளின் உயிர்களே பறிபோயின.

இந்த நாட்டிலுள்ள சிங்கள கிராமங்கள் அச்சத்துடன் காணப்பட்டன. அவர்களின் பிள்ளைகள் இராணுவத்தில் இணைந்தனர்.

மேலும், வுவனியாவை சற்று தள்ளி வாழும் தமிழ் மக்களும் பயத்துடனே வாழ்ந்தார்கள். அவர்களின் பிள்ளைகளும் LTTE யுடன் இணைந்தார்கள்.

மேலுள்ள ஆட்சியார்கள் யுத்தம் செய்தார்கள். எமது கிராமங்கள் பாதுகாப்பற்று காணப்பட்டது.

மேல் உள்ள ஆட்சியாளர்கள் யுத்தத்தை உருவாக்கினார்கள். எமது பிள்ளைகள் யுத்தத்துக்கு சென்றார்கள்.

ஆகவே, எமது நாடு முன்னேற வேண்டுமாயின் பிரதான சில காரணங்கள் இருக்கின்றன.

அதாவது, தற்போது நமக்கு சண்டையற்ற ஒரு நாடு தேவை. பிரிவினைவாதயில்லாத, மீண்டும் யுத்தம் ஏற்படாத நாடே தேவை.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுயுடன் வாழக்கூடிய ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும்.

எமது பரம்பரை யுத்தம் செய்துக்கொண்ட பரம்பரை. ஆனால் எமது பிள்ளைகளுக்கு யுத்தம் செய்துக்கொள்ள இடமளிக்கக்கூடாது.” என தெரிவித்தார்.

4500 மில்லியன் ரூபா செலவில் வட மாகாணத்தின் பாரிய வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் திறப்பு !

2017ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது வடமாகாண சுகாதார சேவையை மேம்படுத்தவதற்காக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இன்று மக்களிடம் கையளிக்க முடிந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நவீன வைத்தியசாலைகளுடன் கூடிய சுகாதார வசதிகளை வடக்கு மாகாணம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மேல் மாகாணத்தைப் போன்று மேம்பட்ட சுகாதார சேவைகளைக் கொண்ட மாகாணமாக வடக்கின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை இன்று (26) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவுடன் 4500 மில்லியன் ரூபா செலவில் இந்த மருத்துவ சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இது வட மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் என்பதோடு மனநல மறுவாழ்வுப் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, ஆய்வுகூடம், கதிரியக்கப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

நெதர்லாந்துத் தூதுவர் பொனி ஹோபேக் அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

இந்த மருத்துவப் பிரிவை இன்று திறந்து வைக்கும் போது இதன் பின்னணியைக் குறிப்பிட வேண்டும். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் தடைப்பட்ட சேவைகளை மீளமைப்பதற்கான அடிப்படைப் பணிகளை அப்போதைய அரசாங்கம் ஆரம்பித்தது.

முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்தப் பிரிவுகள் அனைத்தின் முன்னேற்றத்துக்கு, இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கிணங்க, வடமாகாணத்தில் சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக புதிய மருத்துவப் பிரிவுகளை நிறுவுவதற்கு பிரதமர் என்ற ரீதியில் நெதர்லாந்து அரசாங்கத்துடன் கலந்துரையாடினேன். அப்போது வடமாகாண சபையில் இருந்த சுகாதார அமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

யுத்தத்திற்கு முன்னர், கொழும்புக்கு அடுத்தபடியாக சிறந்த சுகாதார சேவையைக் கொண்ட பிரதேசமாக யாழ்ப்பாணம் திகழ்ந்தது. மேல்மாகாணம் அபிவிருத்தியடைந்த நிலையில் தென் மாகாணமும் மத்திய மாகாணமும் அபிவிருத்தியடைந்தன.

வடக்கு மாகாணத்தை மீண்டும் அந்த நிலைக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும். அதனால்தான் இந்த மருத்துவமனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.

அத்துடன், 2017ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கும், அதற்கு தேவையான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் நான் பிரதமராக இருந்து பணத்தை ஒதுக்கினேன். இன்று இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் இந்தப் பணிகள் உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என்று பணித்தேன். இப்போது வடக்கு மாகாணத்தில் நவீன மருத்துவமனைகள் உள்ளன.

யாழ்ப்பாண வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்ற தீர்மானித்தோம். மேலும் மன்னார் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யப்படும் அதே வேளை வவுனியா வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதுடன் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்று வழங்கப்படும். ராகம வைத்தியசாலைக்குப் பிறகு இந்த நவீன இயந்திரங்களைக் கொண்ட ஒரே வைத்தியசாலை மாங்குளம் வைத்தியசாலை என்பது குறிப்பிடத் தக்கது.

யுத்தம் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராகம வைத்தியசாலை ஸ்தாபிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு ராகம வைத்தியசாலை போன்ற நவீன வைத்தியசாலையை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

வடமாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 04 வைத்தியசாலை பிரிவுகளில் உள்ள உபகரணங்கள் இலங்கையில் உள்ள பல வைத்தியசாலைகளில் இல்லை.

இந்த சாதனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவமனை முகாமைத்துவமும் முயற்சி எடுக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தின் சிறப்பான நிலை காரணமாக கியூபா சுகாதார சேவைகளில் முன்னணியில் உள்ளது. எனவே, மருத்துவமனை நிர்வாகத்தையும் முகாமைத்துவத்தையும் உயர் நிலைக்கு கொண்டு வர பாடுபட வேண்டும்.

அதற்கு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி நிதியத்தில் இருந்தும் நிதி ஒதுக்கீடு பெறலாம். இந்தச் செயற்பாடுகள் அனைத்தினூடாகவும் நாட்டில் நம்பிக்கையான சுகாதார சேவையை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்பதையும் கூற

 

 

இராஜகிரியவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் !

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) அவரது உத்தியோகபூர்வ வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராஜகிரிய பகுதியிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் தனது 53 வயதில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சடலம் மீதான நீதவான் விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இராஜகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களின் பிரச்சனைகளை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் என முல்லைத்தீவு மக்கள் நம்புகிறார்கள் – செல்வம் அடைக்கலநாதன்

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சனைகளை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உறுமய காணி உரித்து வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஜனாதிபதி வருகை தந்தையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இம்மாவட்டத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.

இந்த மாவட்ட அபிவிருத்திக் குழுவை உங்கள் தலைமையில் நடத்தி முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணி உள்ளிட்ட பிரச்சனைக்குத் தீர்வு வழங்க வேண்டும். காணி உறுதியில்லாத மேலும் பலர் உள்ளனர். சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. எமது மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்கின்றேன் எனத் தெரிவித்தார்.

எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாடொன்றை ஏற்படுத்திக்கொடுப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும். – நுவரெலியாவில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ!

பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதுதொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. என்றாலும் அதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

நுவரெலியாவில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு சுமார் 200 வருட காலமாக பெருந்தோட்ட மக்கள் வழங்கிய ஒத்துழைப்பை நாங்கள் மதிக்க வேண்டும்.

நாட்டில் எவ்வாறன பிரச்சினை இடம்பெற்றாலும் தோட்ட மக்கள் பாரிய பங்களிப்பை வழங்கினார்கள். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் மதிக்கிறோம்.

மேலும் உலகில் இருக்கும் பிரச்சினைகளில் நூற்றுக்கு 80 வீதம், தகுதி இல்லாதவர்களுக்கு பதவி வழங்குவதே காரணமாகும்.

நாங்கள் 30 வருட யுத்தத்தில் அனுபவத்தை கண்டோம். 88, 89 மக்கள் விடுதலை முன்னணியின் பயங்கரவாத்தை கண்டோம்.

மீண்டும் அவ்வாறான யுகத்துக்கு நாங்கள் சொல்லத் தேவையில்லை. நாங்கள் மக்களுக்காகவே அரசியல் செய்ய வேண்டும்.

மலையக மக்களுக்கு காணிப்பிரச்சினை இருக்கிறது. சம்பள பிரச்சினை இருக்கிறது. பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் பிரேரித்திருக்கிறது.

அதுதொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.அதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம். கடந்த ஜனவரி மாதத்தில் நுவரெலியா மாவட்டத்தில் நாங்கள் நடமாடும் சேவை ஒன்றை செயற்படுத்தினோம்.

இதன்போது தேசிய அடையாள அட்டை இல்லாமல் இருந்த சுமார் 2 ஆயிரம் பேருக்கும் அடையாள அட்டை பெற்றுக்கொடுதோம். பிறப்புச்சான்றிதழ் இல்லாமல் இருந்த 10 ஆயிரம் பேருக்கு பிறப்புச்சான்றிதழ் பெற்றுக்கொடுத்தோம்.

வட மாகாணத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையின்போது 12 ஆயிரம் பேர் வரையானவர்கள் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொண்டார்கள். நாடொன்றின் சட்டம் ஆட்சியாளருக்கும் மக்களுக்கும் ஒரே மாதிரி அமைய வேண்டும்

அரசியல்வாதிகள் இலஞ்சம் பெறுகிறார்கள். மோசடி மிக்கவர்கள் என பாரியளவில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.

ஒரு சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் காரணமாக கடந்த காலங்களில் மக்களுக்கு அரசியல் விரக்தி ஏற்பட்டது. எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாடொன்றை ஏற்படுத்திக்கொடுப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்.

திருட்டு, ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்வதற்கா புதிய சட்டங்களை ஏற்படுத்தி இருக்கிறோம். சிறந்த சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு தேவையான சட்ட ரீதியிலான சூழலை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம்.

எமது நாட்டில் கிராம மட்டத்தில் வாழும் மக்கள் இனவாதம் மதவாதம் இல்லை. அவர்களுக்கு இன.மத ஐக்கியமே தேவையாகும்.

ஒரு சில அரசியல்வாதிகள் எமது மக்களை குழுக்களாக பிரித்தார்கள். அவ்வாறான நிலைமையை இல்லாதொழிக்க மக்கள் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என்றார்.

ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை குறைபாடுடையது பக்கச்சார்பானது சுயமாக உருவாக்கியது – ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் ஹிமாலி அருணதிலக

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்கான ஆணையாளர் அலுவலகம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை குறைபாடுடையது பக்கச்சார்பானது சுயமாக உருவாக்கியது என ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் ஹிமாலி அருணதிலக சாடியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோக்கெர் டேர்க்கிற்கு அறிக்கை குறித்து கடிதமொன்றை எழுதியுள்ள அவர் அந்த கடிதத்தில் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணை எதுவும் இல்லாத நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளதை தேவையற்ற ஒரு தலைப்பட்சமான முயற்சி என  இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைப்பாட்டினை கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது என தெரிவித்துள்ள இலங்கை தூதுவர் இந்த அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டமைக்கான நோக்கம் என்னவென கேள்வி எழுப்பியுள்ளார் என வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலக அறிக்கை தவறானது என தனது கடிதத்தில் தெரிவித்துள்ள ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் ஹிமாலி அருணதிலக பக்கச்சார்பின்மை புறநிலை மற்றும் தேர்ந்துஎடுக்காமை ஆகிய கொள்கைகளின் அடிப்படைகளிற்கு இந்த அறிக்கை முரணாணது என் தெரிவித்துள்ளார் என விடயமறிந்த வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை அரசாங்கம்நல்லிணக்கத்திற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தருணத்தில் இந்த அறிக்கை பக்கச்சார்பானது அரசியல் மயப்படுத்தப்பட்டது சுயமாக உருவாக்கப்பட்டது என ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் சாடியுள்ளார்.

இலங்கையின் ஆயுதமோதல் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாகிய தருணத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது எனது தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் தகுதியோ ஒற்றுமையோ தமிழர்களிடத்தில் இல்லை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் தகுதி அல்லது ஒற்றுமை தமிழ் மக்களிடமோ அல்லது  தமிழ் கட்சிகளிடமோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தாக பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சனிக்கிழமை (25) யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன்  இல்லத்தில் அவரை நேரில் சென்று சந்தித்தபோதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தாக தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி என்னை சந்திக்க வரப்போகிறார் என அறிந்த அரசியல் நீதியான தீர்மானம் எடுக்கப்படும் என  சிந்தித்தார்கள். அவர் என்னை சுகம் விசாரிப்பதற்காகவே வந்தார் அரசியல் நீதியான தீர்மானங்களுககான சந்திப்பாக அமையவில்லை.

சந்திப்பில் பொது வேட்பாளர், ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடிய நிலையில் அவரது அநேகமான கருத்துக்கள் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக  நாடு பூராக நடைமுறைப்படுத்தும் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி   திட்டங்கள் தொடர்பிலேயே  பேசினார்.

இதன் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போகிறீர்கள் அது சாத்தியப்படாது என கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளருக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவை என்பதை ஜனாதிபதி ரணில் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய மாட்டார்கள்   என்றார்.

நான் சிரித்தவாறே பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை கூறினேன். அத்தோடு இரண்டாம் மூன்றாம் வாக்குகளை வழங்குவது தொடர்பிலும் அவரிடம் கூறினேன்.

இரண்டாம் மூன்றாம் வாக்கு வழங்கும் நடைமுறையை அவர் ஏற்றுக் கொண்டார். பொது வேட்பாளர் தெரிவு அதற்கான கட்டமைப்பினர் மேற்கொள்வார்கள் அதன் தெரிவை பார்ப்போம் என்றேன் என்றார்.