29

29

பிரபாகரன் என் இதயம் கவர்ந்த ஆண் மகன்! ஆனால் பிரபாகரனின் பெயரில் ரிக்ரொகில் புலிக் காமுகர்கள்!! ஆபத்தில் ஈழத்துப் பெண்கள்!!!

யார் இந்த சுஜி கூல் என்ற அடையாளத்துடன் தொடங்கி லாசெப்பேல் பகுதியில் ஒரு பெண் மீது நடாத்தப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதல் – அதன் பின்னணியில் இருந்த சருகுப் புலிகள் யார்..? உதவி என்ற போர்வையில் புலம்பெயர் புலிக்குட்டிகள் நடாத்தும் பாலியல் சேட்டைகள் – சுரண்டல்கள் பற்றி சமூக வலைதளம் பிரபலம் சுஜிகூலுடன் ஓர் பரபரப்பான கலந்துரையாடல்.

பாகம் :01

பொதுவேட்பாளர் தொடர்பில் நாங்கள் எடுத்த அந்த முடிவிலே எங்களிடம் திடமான கருத்து இருக்கின்றது.- விக்கினேஸ்வரன்

தமிழ் பொதுவேட்பாளர் குறித்து சுமந்திரன் ஏற்பாடு செய்துள்ள கருத்துப் பரிமாற்ற நிகழ்வு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் கருத்து தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொது வேட்பாளர் தொடர்பான கருத்து பரிமாற்ற இந்தக் கூட்டத்திற்கு எனக்கொரு அழைப்பும் வரவில்லை. ஆனால் இவ்வாறான கருத்துப் பிரிமாற்ற கூட்டங்கள் என்பது எங்களைத் திசை திருப்புவதாகவே அமையும்.

ஏனென்றால் தேசியத்தோடு இணைந்திருக்கும் எங்கள் சிவில் சமூகத்தினர் தமிழ் மக்கள் சார்பிலே ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்ற முடிவிற்கு வந்து விட்டார்கள். இதனை முன்வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுடன் பல அரசியல் தரப்பினர்களுடனும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறாக பொதுவான நிலைப்பாடு எடுக்கப்பட்டு அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கும் போது இந்த விவகாரத்தை பொது வெளியில் கொண்டு சென்று கருத்து பரிமாற்றம் என்று சொல்லி முரண்பாட்டிற்குரியதாக கொண்டு வந்து நிறுத்துவது எங்களை திசை திருப்புவதாகவே அமையும்.

ஆகவே எங்களுடைய இந்த நிலைப்பாட்டிற்கு எதிராக யாராவது ஏதாவது சொல்ல வேண்டுமாக இருந்தால் எப்பவும் எதனையும் சொல்லட்டும். அதற்குரிய பதில்களை நாங்கள் கூறுவோம்.

அதாவது பொது வேட்பாளரை கொண்டு வந்து நிறுத்தினால் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவார்கள் அல்லது அப்படி இப்படி என்று ஏதாவது காரணங்களை சொன்னால் அதற்குரிய பதில்களை வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாங்கள் எடுத்துக் கொண்ட தீர்மானத்தில் இருந்து நழுவக் கூடாது. அந்தத் தீர்மானத்தில் இருந்து எங்களை அங்கு இங்கு என கொண்டு செல்ல அல்லது வழிநடத்த பார்க்கின்றார்கள். ஆகவே எங்களுடைய சிவில் சமூகத்தினர் இது சம்மந்தமான நடவடிக்கைகளில் மிகக் கவனமாக இறங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எமது தீர்மானம் குறித்து எந்தவிதமான கருத்து பரிமாற்றமும் தேவையில்லை. ஏனெனில் நாங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டோம். அது சம்பந்தமாக ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தங்களுடைய கருத்துக்களை எங்களுக்கு தருகிற போது அதற்குப் பதிலை கொடுப்பது எங்களுடைய கடமை.

அதனை விடுத்து இந்த விடயத்தை பொது வெளியில் அல்லது பொது மன்றத்தில் பேசவும் அதை பெரிதாக்கவும் வேறுவிதமாக இதை திசை மாற்றிக் கொண்டு செல்ல நினைப்பதும் பிழையான ஒரு வழிமுறை என்பது என்னுடைய கருத்தாகும்.

மேலும் இந்த சந்திப்பு தொடர்பில் எனக்கும் எதுவும் அறிவிக்கப்பட இல்லை. அதற்கு நான் அழைக்கப்படவும் இல்லை. பத்திரிகைகள் ஊடாகவே இதனை நான் பார்த்தேன். அதேபோன்று வேறு யாரும் எனக்கு இது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவும் இல்லை.

இருப்பினும் இந்த நடவடிக்கை மிகவும் பிழையானது. அவ்வாறான ஒரு கருத்துப் பரிமாற்றம் இருக்கக் கூடாது. மீண்டும் மீண்டும் சொல்கிறோம் நாங்கள் ஒரு முடிவை எடுத்து இருக்கின்றோம். அந்த முடிவிற்கு எதிராக யாராவது ஒரு தமிழ் மகன் எதிர் கருத்துக்களை தெரிவித்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டியது எங்களுடைய கடமை. அதனடிப்படையில் பதில் வழங்குவோம்.

 

ஏனெனில் நாங்கள் எடுத்த அந்த முடிவிலே எங்களிடம் திடமான கருத்து இருக்கின்றது. அதற்கான அடிப்படை அத்திவாரம் நன்றாக இருக்கிறது. ஆகவே நாங்கள் எவருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு எங்களால் பதில் சொல்ல முடியும். இதை விட்டுவிட்டு இப்படி அப்படி அங்கு இங்கு என நழுவி போவது எங்கள் தமிழ் தேசியத்திற்கும் கூடாது. சிவில் சமூகத்தினர்களுக்கும் அது கூடாத ஒரு விடயம்.

அவர் தமிழ் தேசியத்தோடு நின்றவர் அல்ல. இதுவரையில் நமக்குத் தெரிந்த வரையில் தமிழ் தேசியத்தோடு ஒன்றியவரும் அல்ல. எனக்கு பயமில்லை நான் அதை சொல்லுவேன் இதை சொல்லுவேன் என்று அவர் சொல்லுவதிலிருந்தே அது தெரியும்.

பொது வேட்பாளர் என்ற விடயத்தில் அவரிற்கு ஈடுபாடு இல்லை. அவரை பொறுத்தவரையில் ஏதோ தெற்கில் இருக்கும் ஒரு வேட்பாளருக்கு அது யாரோ ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் அல்லது ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அதிலிருந்து தமக்கு சில நன்மைகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கக் கூடும்.

ஆனால் அதற்காக தமிழரசு கட்சியை தன்னுடைய கைப் பொம்மையாக மாற்றக்கூடாது. ஏனென்றால் நாங்கள் இன்னமும் அது சம்பந்தமான ஒரு தீர்மானத்திற்கு வரவில்லை என்று அவர் சொல்லுகிறார்.

அவ்வாறு அவர் கூறுவது தன்னுடைய கருத்துக்களை தான். இந்த கருத்துக்களை சிறிதரன் தெரிவிக்கவில்லை. சிலவேளை சிறிதரன் பொது வேட்பாளருக்குத் தான் ஆதரவு என்றும் அவருக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்று கூட கூறலாம்.

இந்த மூன்று பிரதான வேட்பாளர் தொடர்பில் எங்களுக்கு எந்த விதமான கவலையும் இல்லை என்று கூட சிறிதரனால் சொல்லக்கூடும். ஆக மொத்தத்தில் சுமந்திரன் கூறியது அவருடைய கருத்து தவிர கட்சியை நிலைப்பாடு அல்ல. அவருடைய அந்த கருத்தை மேலே தூக்கிப் பிடிப்பது தமிழ் தேசியத்திற்கு இழுக்காக இருக்கின்றது.

மேலும் ஊடகப் பேச்சாளர் என்ற முறையில் அவர் பேசியது என்றால் இப்பொழுது தமிழரசு கட்சிக்கு தலைவர் ஒருவர் இருக்கின்றாரா? இப்ப அந்த கட்சிக்குள் பதவிநிலைகளுக்கு குழப்பங்களுக்கு மத்தியில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அப்படி பார்த்தால் இவர் பழைய ஊடகப் பேச்சாளர் தான். இருந்தும் இப்பவும் அவர் தொடர்ந்து ஊடக பேச்சாளராக இருக்கிறாரா என்று தெரியவில்லை என தெரிவித்தார்.

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடுகோரி அனுர குமார தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை !

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடுகோரி தாக்கல் செய்துள்ள வழக்குவிசாரணையில் தேசியமக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

குறித்த வழக்கு கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது நிதிமன்றில் முன்னிலையாகி அநுரகுமார திசாநாயக்க சாட்சியம் வழங்கியிருந்தார்.

தேசியமக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க 2017ஆம் ஆண்டு தங்காலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்த கருத்துக்களினால் தமக்கு அவமதிப்பு ஏற்பட்டதாகவும் இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை வழக்கு விசாரணையில் முன்னிலைலயானதன் பின்னர் அநுரகுமார திசாநாயக்க நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் போது ”ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக இடம்பெறும். தேர்தல் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க மற்றும் பெசில் ராஜபக்ஷ ஆகியோர தனிப்பட்ட தீர்மானங்களை மேற்கொள்ளமுடியாது. இருவரும் மக்கள் மத்தியில் குழப்பம் விளைவிப்பதற்கே முயற்சிக்கின்றனர். நாடாளுமன்ற கலைக்கப்படவுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

10 வருடங்களுக்கு இந்த நாட்டை ரணில்விக்ரமசிங்கவிடம் வழங்க வேண்டும் என வஜிர அபேவர்தன கூறுகின்றார். அதேபோல் தேர்தலை 2 வருடங்களுக்கு தேர்தலை பிற்போடுமாறு பாலித ரங்கே பண்டார கூறுகின்றார். தேர்தல் தொடர்பாக அரசாங்கத்திடம் தெளிவான நிலைப்பாடு இல்லை. என்பது இதனூடாக தெளிவாகின்றது” எனவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்பில் உள்ள இலங்கையர்கள் – இலங்கை வரும் குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர்!

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக, பஞ்சாபிலுள்ள பாகிஸ்தான் எல்லையில் ஆளில்லா விமானம் ஊடாக ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வர் தங்கியிருந்த வீடுகளில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் நால்வரின் கையடக்கத் தொலைபேசிகளும் சோதனையிடப்பட்டுள்ளன. இதன்போது தொலைபேசி தரவுகளில் பாகிஸ்தானில் அபூ எனும் பயங்கரவாதியுடன் தொடர்பு பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐ.எஸ் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் ஒஸ்மண்ட் ஜெராட் என்ற நபர் தலைமறைவாகியுள்ள நிலையிலேயே குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

மே 20 திகதி குஜராத்தின் அஹமதாபாத் விமான நிலையத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த நால்வரை கைதுசெய்ததன் மூலம் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பாரிய தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக குஜராத் பயங்கரவாத தடுப்புபிரிவின் மூன்று குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழில்.மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதான அருட்சகோதரிக்கு பிணை!

யாழில்.மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை விடுதியில் தங்கி கல்வி கற்று வந்த தம்மை விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி அடித்து துன்புறுத்தியதாக கூறி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விடுதியில் இருந்த மாணவிகள் 11 பேர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

இதனை அடுத்து மாணவிகளை யாழ்,போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் முன் முற்படுத்திய வேளை மாணவிகளின் உடலில் தழும்புகள் இருந்தமை கண்டறியப்பட்டது.

அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் அருட் சகோதரியை கைது செய்து, ஊர்காவற்துறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை, அவரை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற போது , விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் , அருட்சகோதரியை 50 ஆயிரம் ரூபாய் காசு பிணை, ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , மாணவ விடுதிக்கு அருட்சகோதரி செல்ல கூடாது எனவும் , பாதிக்கப்பட்ட மாண்வர்களுடனோ , அவர்களின் பெற்றோர்களுடனோ தொடர்பு கொள்ள கூடாது எனவும் நிபந்தனையும் விதித்துள்ளது.