03

03

200 வருட மெக்சிகோ வரலாற்றில் முதலாவது பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம்!

மெக்சிகோவில், முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம் (Claudia Sheinbaum) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனை அதிகாரபூர்வ விரைவான எண்ணிக்கை (Quick Count) உறுதி செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோவில் நேற்றைய தினம் ஜனாதிபதி, 128 செனட் உறுப்பினர்கள் மற்றும் 500 கீழவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி (Morena party) சார்பில், 61 வயதான கிளாடியா ஷீன்பாம் போட்டியிட்டார்.

இவர், குறித்த தேர்தலில் 58.3 முதல் 60.7 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக, அந் நாட்டின் தேசிய தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் கிளாடியா ஷீன்பாம், டிசம்பர் மாதம் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் நகர மேயாராக பணியாற்றிய கிளாடியா ஷீன்பாம், காலநிலை விஞ்ஞானியாகவும், மெக்சிகோ தேச அரசியலில் அனுபவம் கொண்டவராகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மெக்சிகோவில், 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஊழல் ரவுடி அரசியல்வாதிகள் இலங்கையில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளனர் – அனுர குமார திசாநாயக்க

அரகலயவின் பின்னர் பின்வாங்கிய ஊழல் ரவுடி அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (02) குருநாகலில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரகலயவின் உண்மையான அபிலாசைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்றால் மக்கள் எழுச்சியின் உண்மையான நோக்கங்களை நிறைவேற்றும் அரசாங்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2022 மக்கள் எழுச்சியின் உண்மையான அபிலாசைகளை உறுதிசெய்யக்கூடிய அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல்வாதிகள் இன்னமும் அரகலயவிலிருந்து பாடங்களை கற்கவில்லை மாறாக அதனை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் செயற்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எந்தவொரு அரசியல்கட்சியுடனும் தங்களை அடையாளப்படுத்தாமல் பொதுவான அபிலாசைகளிற்காக வீதியில் இறங்கினார்கள். அவர்கள் ஊழல் மோசடி அற்ற ஒழுக்கமும் சட்டமும் காணப்படும் நாட்டை எதிர்பார்க்கின்றனர்.

பொதுவான சமூக நோக்கத்திற்காக அவர்கள் வீதியில் இறங்கினார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிங்கள இராணுவம் இசைப்பிரியாவுக்கு செய்ததை சுஜிகூல் என்ற பெண்ணுக்கு செய்த லாசெப்பேல் புலிக்குட்டிகள்!

அண்மையில் சுஜி கூல் என்ற சமூக வலைதள பிரபலம் ஒருவர் பிரான்ஸ் நாட்டின் லாசெப்பேல் பகுதியில் வைத்து CM நிக்சன் மற்றும் அவருடைய சகபாடிகளால் பாலியல் ரீதியான வசைபாடலுக்கு உள்ளாக்கப்பட்டு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலையும் எதிர்கொண்டார். பாதிக்கப்பட்ட சுஜி கூல் என்ற பெண்னுக்கு சார்பாக நின்றிருக்க வேண்டிய தமிழ் சமூகம் மாறாக தாங்கியவர்களின் பக்கம் நியாயம் இருப்பதாக கூறி வந்த நிலையில் இதன் பின் உள்ள வக்கிரமான மனோநிலையில் உள்ள தமிழ்தேசிய வாதிகள் யார் என்பதையும் – புலம்பெயர் புலித்தேசியவாதிகளின் பெண்கள் தொடர்பான நிலை பற்றியும் பாதிக்கப்பட்ட சுஜி கூல் என்ற பெண்னுடன் தேசம் திரை முன்னெடுத்த கலந்துரையாடலின் இரண்டாவது பாகம் இது.

 

காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

இலங்கையில் வறுமை விகிதம் சடுதியாக அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 15% ஆக இருந்த வறுமை விகிதம் தற்போது 26% ஆக அதிகரித்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் வருமானம் இல்லாத மற்றும் கல்வி வசதிகள் இல்லாத ஒரு பகுதி இருப்பதாகவும் அதனை 2032 ஆம் ஆண்டளவில் 10% ஆகக் குறைக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் ரணில் குறிப்பிடுகின்றார்.

எனவே, இந்த திட்டத்தை தொடர வேண்டும். இந்தப் பரவலான ஏழ்மைக்கு தீர்வு காணும் வகையில்தான் வாரி சுரிமையில்லா நில உரிமை வழங்குதல் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

மேலும், கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை அந்த குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு அந்த சொத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே நாம் புதிதாக சிந்திக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், 21,353 குடும்பங்களை சேர்ந்த 84,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.