05

05

கிளிநொச்சியில் அதிரடியாக யுக்திய சுற்றிவளைப்பு – ஐஸ் போதைப் பொருட்களுடன் பலர் கைது !

கிளிநொச்சி – தருமபுரம் காவல்துறை பிரிவில் முன்னெடுக்கப்பட்ட யுத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரம் – கல்லாறு பகுதியில் இன்று (05) அதிகாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து செயற்பட்டனர்.

இதன்போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டதுடன் ஐஸ் போதைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறை விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் புலம்பெயர் இலங்கை தமிழ்ப் பெண் உமாகுமரன் !

பிரித்தானிய பொதுத் தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ்ப் பெண்ணான உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார்.

இவர், லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையையும் தனதாக்கிகொண்டுள்ளார்.

உமா குமரன் ஈழத்து தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , இந்த பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நிலையில், உமா குமரன் தன்னுடன் போட்டியிட்ட வேட்பாளர்களை விட பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதுடன், அவருக்கு 19,145 வாக்குகள் கிட்டியுள்ளன.

இதன் மூலம், ஈழத்தமிழ் பூர்வீகத்தை கொண்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினராக கனடாவுக்கு அடுத்தபடியாக பிரித்தானியாவிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உருவாகியுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் – 14 ஆண்டுகளுக்கு பின்பு ஆட்சியை பிடித்தது தொழிலாளர் கட்சி!

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.

தொழிலாளர் கட்சி கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

லண்டனில் இருந்து தனது ஆதரவாளர்களுக்கு உரையாற்றிய ஸ்டார்மர் “மாற்றம் இப்போது தொடங்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மொத்தம் உள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119- தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119- தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

தேசியத் தேர்தலில் பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சியின் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

“நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்தவர்கள் ஜனாதிபதி தேர்தல் என்றவுடன் நானும் ஜனாதிபதிதான் என்று கூவிக்கொண்டு வருகின்றார்கள்.” – இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

“நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்தவர்கள் ஜனாதிபதி தேர்தல் என்றவுடன் நானும் ஜனாதிபதிதான் என்று கூவிக்கொண்டு வருகின்றார்கள்.” என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் உறுமைய காணி உறுதி வழங்கும் வேலை திட்டத்திற்கு அமைவாக கிழக்கு மாகாணத்திற்கான நடமாடும் சேவை வியாழக்கிழமை (04) மட்டக்களப்பில் முன்னெடுக்க எடுக்கப்பட்டிருந்தது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுக்கு சொந்தமான காணியில் குடியிருந்து இதுவரையில் காணி உறுதிகள் இல்லாதவர்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாவது நடமாடும் சேவை இதன்போது மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் இணைந்து இந்த நடமாடும் சேவை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 

இதன் ஆரம்ப நிகழ்வு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான பணிப்பாளர் என்.விமல்ராஜ் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

 

மேலும், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி லியனகே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் உட்பட பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 

இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

 

கிழக்கு மாகாணத்தில் அதிகப்படியான வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எம்மிடம் உள்ளது.இந்த நாடு மிகப்பெரிய ஆபத்தான நிலையில் இருந்த வேலையில் நாம் அவர்களை கைவிட்டு ஓடிவிட முடியாது ஒரு குறுகிய காலத்துக்குள்ளே எமது நாடு பொருளாதார ரீதியில் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகின்றது. மக்கள் தலைவர்கள் என்பவர் வெளிச்சத்தை ஏற்பவராக இருக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தல் வர இருக்கின்றது. தினம் தினம் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றார்கள் நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்தவர்கள் ஜனாதிபதி தேர்தல் என்றவுடன் நானும் ஜனாதிபதிதான் என்று கூவிக்கொண்டு இதில் பலர் இந்த நாடு பற்றி எரிந்தபோது,நாட்டு மக்கள் தவிர்த்தபோது வீட்டு மூலைக்குள் ஒழிந்திருந்தவர்களும் இந்த நாடு இன்னும் நூறு வருடத்திற்கு மேல் எழமுடியாது என்று அறிக்கை விட்டவர்களுமே இவர்கள்தான்.

 

நாம் இந்த நாட்டை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும் அப்போது நாட்டை பொறுப்பெடுத்த தலைவர் நாட்டை விட்டு ஓடவில்லை களத்தில் நின்று தான் மக்களுக்காக இறுதிவரை போராடினார். என அவர் இதன்போது தெரிவித்தார்.

தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் – காசாவில் இருந்து சுமார் 1.9 மில்லியன் பேர் இடம்பெயர்வு !

இஸ்ரேல் மற்றும் காஸா இடையே போர் ஆரம்பமானதில் இருந்து காஸாவை சேர்ந்த பத்தில் ஒன்பது பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

பலஸ்தீன எல்லை பகுதியில் உள்ள ஐநா-வின் OCHA அமைப்பு தலைவர் andrea di domenico காசாவில் சுமார் 1.9 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

1.7 மில்லியன் பேர் இடம்பெயர வாய்ப்புள்ளதாக கணித்திருந்த போதிலும், கடந்த ஆண்டு ஒக்டோபரில் இருந்து இதுவரை காசா எல்லையில் பத்தில் ஒன்பது பேர் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் இடம்பெயர்ந்து இருக்கலாம் என்று கணித்துள்ளதாக தெரிவித்தார்.

இஸ்ரேல் போர் காரணமாக காசா இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக வடக்கில் சுமார் 3 முதல் 3.5 லட்சம் பேர் வரை சிக்கிக் கொண்டு தெற்கிற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பொது தேர்தல் 2024 – ஆரம்பத்திலேயே ரிஷிசுனக் தரப்புக்கு பின்னடைவு !

பிரித்தானிய பொதுத்தேர்தல் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தற்போது முன்னிலை வகித்து வருகிறது.

தற்போது வரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தலைமையிலான தொழிலாளர் கட்சி 43 ஆசனங்களையும் ரிஷி சுனக் (Rishi Sunak ) தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

மொத்தமாக 650 நாடாளுமன்ற ஆசனங்களை கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்த முறை தொழிலாளர் கட்சி பெரும்பாண்மையான ஆசனங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான நிலையிலேயே பிரித்தானியாவின் (UK) எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, தற்போதைய கன்சர்வேடிவ் கட்சியை வீழ்த்தி, மிகப்பெரிய நாடாளுமன்ற பெரும்பான்மையை வெல்லும் என அண்மைய தரவுகளை அடிப்படையாக கொண்டு சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.