18

18

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின்  சம்பளப் பணத்தின் மிகுதியை வழங்க மறுக்கும் யாழ். மாவட்ட வைத்திய பணிப்பாளர் !

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின்  சம்பளப் பணத்தின் மிகுதியை யாழ். மாவட்ட வைத்திய பணிப்பாளர் தரமறுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சமூக வலைத்தளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட காணொளி ஒன்றில் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தன்னுடைய மேலதிக கொடுப்பனவானது இன்றுவரை வழங்கப்படவில்லை என்றும் அதற்கான தரவுகளை யாழ் மாவட்ட வைத்திய பணிப்பாளர் கேதீஸ்வரன் பெற்றுக்கொள்ள மறுப்பதாகவும் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தமிழ் அரசியல்வாதிகள் இருக்கும் பிரதேசங்களில் ஒரு போதும் சேவையை தொடரமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசினால் வழங்கப்பட்டுள்ள விடுதியை மூன்று மாதகாலம் தனது பாவனைக்காக வைத்திருப்பதாகவும் அதனை உடைக்கவோ வேறு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அர்ச்சுனா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் – அதிபர்கள் தனியார் கட்டண வகுப்புகளில் பணியாற்ற தடை விதித்து சுற்றறிக்கை வெளியீடு!

வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டண வகுப்புகளில் பணியாற்றுவதை முற்றாக தடை செய்து வடமத்திய தலைமை அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

வடமத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன, மாகாணக் கல்விப் பணிப்பாளர், அனைத்து பிராந்தியப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

 

சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் சில அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது வகுப்புகள் மற்றும் பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலித்து தனியார் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை பாடசாலை நேரத்திலோ, பாடசாலை நேரம் முடிந்ததும் அல்லது வார இறுதி நாட்களிலோ நடத்துவதாக தொடர்ந்து முறைப்பாடுகள் உள்ளன.

 

சில ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலையில் கற்பித்தல் பணியை சரிவர செய்யாததுடன், தங்களின் தனிப்பட்ட உதவி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்குச் செல்லாத பிள்ளைகளை உதாசீனப்படுத்துவதுடன், பாடசாலையில் பல்வேறு உடல் மற்றும் மன உபாதைகளுக்கும், துன்பங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களிடம் பணம் வசூலிப்பதும், பாடசாலை நேரத்திலோ, பாடசாலை நேரத்திற்குப் பின்னரோ அல்லது வார இறுதி நாட்களிலோ தனியார் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வடமத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் பெற்ற போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது !

திருகோணமலை வான் எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பணத்தை இலஞ்சமாக வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரஜ எல, கந்தளாய் எனும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட வயது (45) என்பவரே இலஞ்சம் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (17) மாலை கைது செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 15 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை கடமை நேரத்தில் பரிசோதித்த போது உரிய ஆவணங்கள் இன்மையால் இலஞ்சமாக 10,000 ரூபாவை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கேட்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் சென்றவர் உடனடியாக 5,000 ரூபாவை கொடுத்து விட்டு மீதி பணம் 5,000 ரூபாவை நேற்று மாலை 7.20 க்கு கொடுக்கும் போது அதனை பெற்றுக் கொண்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரி இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை !

நான்கு வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது

இதேவேளை அண்மையில் இலங்கையில் சிங்கள பௌத்த தேசியத்திற்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் குரல் எழுப்பியதாகவும் அவரை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என பிரதான மதகுருக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.