01

01

இப்போதுள்ள தேர்தல் முறை பொருத்தமானதா? மாற்றம் வேண்டுமா? –

இப்போதுள்ள தேர்தல் முறை பொருத்தமானதா? மாற்றம் வேண்டுமா? – ஆய்வாளர்கள் வி சிவலிங்கம் மற்றும் ஏ ஆர் சிறிதரன்

 

இலங்கையில் நடைமுறையில் உள்ள ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வேட்பாளர்களும் பல சுயேட்சை குழுக்களும் களமிறங்கியுள்ள நிலையில் மக்களின் தெரிவு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆய்வாளர்கள் வி.சிவலிங்கம் மற்றும் ஏ.ஆர்.சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்ட தேசம் திரை நேர்காணல்..!

நாம் முன்வைத்த சமஷ்டி தீர்வையே அனைத்து தமிழ் கட்சிகளும் இன்றைக்கு ஏற்றுக்கொண்டுள்ளன – சுமந்திரன்

நாம் முன்வைத்த சமஷ்டி தீர்வையே அனைத்து தமிழ் கட்சிகளும் இன்றைக்கு ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

“மாற்றத்துக்கான தேர்தல் எனச் சொல்லப்படுகின்றது. மாற்றத்தின் ஆரம்பம் என ஜனாதிபதித் தேர்தலைச் சொல்கின்றனர். ஒருவகையில் அது சரிதான். காலம் காலமாக இரண்டு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி செய்த காலத்தில் இருந்து, தற்போது பாரிய மாற்றமாக மூன்றாவது தரப்பு ஆட்சியைப் பிடித்துள்ளது.

 

அவர்கள் ஆட்சியைப் பிடிக்க ஒரு தடவை அல்ல இரண்டு தடவைகள் ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள். ஊழல் கேடான அரசியலில் இருந்து மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். அதனால்தான் 69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக இருந்த வரை நாட்டை விட்டுத் துரத்தினர்

 

அப்படிச் செய்தும் மக்கள் எதிபார்த்த மாற்றம் வராததால் இரண்டரை வருடங்கள் காத்திருந்து, தேர்தல் ஊடாக மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

 

மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். அவர்கள் முன் தேசிய மக்கள் சக்தியினர் மட்டுமே இருந்தனர். அதனால் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர்.

 

ஆனால், தமிழ் மக்கள் வாழ்க்கையில் அரசியலில் 75 வருடங்களுக்கு மேலாக நாங்கள் மாற்றத்தைத் தேடுகின்றோம். அதற்காகப் பல வழிகளில் போராடி, பல உயிர்களை இழந்துள்ளோம்.

 

எங்களுடைய மக்கள் 75 வருட காலமாக நியாயமான அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தமிழ் மக்கள் விரும்பிய இந்த அரசியல் மாற்றத்துக்குத் தெற்கு மக்கள் பங்குதாரர்களாக வரவில்லை.

 

ஜனாதிபதித் தேர்தல் முடிவின் வரைபடத்தில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் கிடைத்த வாக்குகளில் பெரிய வித்தியாசம் இல்லை என்பது தெளிவாகத் தெரியும். அதாவது சிங்கவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளைத்த தவிர ஏனைய பகுதியில் அநுரவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை.

வடக்கு, கிழக்கு மக்கள் 75 வருட காலமாக ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளனர். அதிகாரங்கள் சரியாகப் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வடக்கு, கிழக்கு மக்கள் உள்ளனர்.

 

சமஷ்டி கட்டமைப்பாக அது மாற வேண்டும். அந்த நிலைப்பாட்டை நாங்கள் முன்கொண்டு செல்ல நாடாளுமன்றத்துக்கு மிகப் பெரும் பலத்துடன் செல்ல வேண்டும்.

 

சமஷ்டி என்ற எண்ணத்தையே இழிவாகப் பேசி அதனைப் பழித்து உரைத்துக்கொண்டிருந்த அகில

 

இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கூட சமஷ்டிதான் தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர்

 

எனவே, நாம் முன்வைத்த சமஷ்டி தீர்வையே அனைத்து தமிழ் கட்சிகளும் இன்றைக்கு ஏற்றுக்கொண்டுள்ளனர்.

 

எனவே, அசல் நாங்கள் இருக்கும்போது நிழலுக்கு வாக்களிக்க வேண்டிய தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

மூன்றில் ஒன்றாக குறைக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் – அனுர தரப்பு மீது பலரும் காட்டம் !

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ளமுடியாத செயற்பாடு என சட்டத்தரணி மனோஜ் கமகே கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(31.10.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு  ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு இந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என கமகே தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 2 ஜீப் வண்டிகள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன வழங்கப்பட்டுள்ளன.

சிலரது விருப்பத்தினால் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக மனோஜ் கமகே கூறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சரவை முடிவுகளை மாற்றுவது சட்டவிரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி முறையான பாதுகாப்பு மதிப்பீட்டின் ஊடாக 2020 மார்ச் 19 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் எனவும் கமகே தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது – ஈரானை எச்சரிக்கும் அமெரிக்கா!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை நடத்தக்கூடாது என்று ஈரானை அமெரிக்கா எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒக்ரோபர் 2 ஆம் திகதி ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக, ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

 

அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் இராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் கடந்த வாரம் தாக்குதல் மேற்கொண்டது.

இதன்போது, ஈரானின் தெஹ்ரான் பகுதியில் உள்ள இராணுவ முகாம்கள் மீது வான்வழியாக அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

இந்தநிலையில் இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இவ்வாறான பதற்றங்களுக்கு மத்தியில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கக் கூடாது, மீறி தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா உதவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.