03

03

பிரான்ஸில் பயணிகள் மீது தாக்குதல் – இலங்கை தமிழருக்கு 3 ஆண்டு சிறை !

பிரான்ஸில் பயணிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 16ஆம் திகதி Corbeil-Essonnes ரயில் நிலையில் பயணி ஒருவர் மீது கத்தியால் குத்தியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் Évry-Courcouronnes குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

என்ன நோக்கத்திற்காக இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டார் என்பது தொடர்பான தகவல் வெளியிடப்படவில்லை.

குறித்த இலங்கையர் ஏற்கனவே வேறு குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக புலம்பெயர் நாடுகளில் இலங்கையர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

 

பலாலிக்கு வடக்கு ஆளுநர் வேதநாயகன் கள விஜயம்!

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ். மாவட்ட இராணுவ தலைமையகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

 

இக் கலந்துரையாடலில் பலாலி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாகவும், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்ற வீதி, காணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

 

அத்துடன் பொதுமக்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் சேவைகள் தொடர்பான விடைகள் விரிவாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் இறுதியில் ஆளுநர், மரக்கன்று நடுகை மேற்கொள்ளபட்டது. பின்னர் விடுவிக்கப்பட்ட பலாலி – அச்சுவேலி பிரதான வீதியை வடமாகாண ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இரண்டரை லட்சங்களை தாண்டியது இந்த ஆண்டில் இலங்கையை விட்டு வெளியேறியோர் தொகை !

இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 266,000 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வெளிநாடுகளில் தொழில் புரிவோர் மூலம் இவ்வருடம் மாத்திரம் 4,843 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி நாட்டுக்கு கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், இந்த வருட இறுதிக்குள் குறித்த தொகை 6 பில்லியன் ரூபாவினை எட்டுமென எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

பாடசாலையில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் – பெப்ரல் அமைப்பு குற்றச்சாட்டு !

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடும் பாடசாலை ஆசிரியர்கள் தங்களது பாடசாலையில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபர்கள் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்முறைகள் அற்ற தேர்தல் கலாச்சாரம் ஒன்று உருவாகியுள்ளது – சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு !

ஜனநாயகத்தை மதிக்கின்ற வன்முறைகள் அற்ற தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் கலாசாரம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.

கபே அமைப்பின் “அமைதியான தேர்தலுக்காக ஒன்றுபடுவோம்” எனும் தொனிப்பொருளிலும் 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கான தெளிவூட்டும் நிகழ்வும் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றது.

அதன் பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இருந்த தேர்தல் நிலவரத்தையும் தற்போது இருக்கின்ற நிலவரத்தினையும் பார்க்கும்போது ஜனநாயகத்தை மதிக்கின்ற வன்முறைகள் அற்ற ஒரு சமாதானமான தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் ஒரு கலாசாரம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்கின்றோம்.

அதற்கு உதாரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலை குறிப்பிடலாம். அதேபோல இந்த பொதுத்தேர்தலிலும் இதுவரை பாரியளவிலான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் பதியப்படவில்லை.

சட்டவிரோத தேர்தல் பிரசாரம் தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் கிடைப்பதை அவதானிக்க முடிகிறது. இதேவேளை பிரசார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்கள் பெரும் பங்கினை வழங்குகிறது. இவற்றை நாம் கண்காணிக்கும்போது அபேட்சகர்களுக்கு எதிரான சேறுபூசக்கூடிய இழிவுபடுத்தக்கூடிய போலிப்பிரசாரங்கள், நாளுக்கு நாள் அதிகரிப்பதனை அவதானிக்க முடிகிறது.

எனவே, அனைத்து அரசியல்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியவர்களை வரவழைத்து அமைதியான தேர்தலுக்காக ஒத்துழைப்போம் என்ற வகையில் சத்தியபிரமானம் ஒன்றை பெறுகின்றோம்.

எனவே சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் நிச்சயமாக அது வன்முறையற்ற தேர்தலாக இருக்கவேண்டும். வன்முறையற்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளின் அபேட்சகர்களும் ஆதரவாளர்களும் ஒன்றிணையவேண்டும் என கபே அமைப்பு கேட்டுக்கொள்கிறது என்றார்.

தமிழ் தேசியம் அதன் இறுதி தருணங்களில்..; இலங்கையர்களாக உணரும் தமிழர்கள் – பொறுப்பான பதவிகளில் திறமையான தமிழர்கள்..!

தமிழ் தேசியம் அதன் இறுதி தருணங்களில்..; இலங்கையர்களாக உணரும் தமிழர்கள் – பொறுப்பான பதவிகளில் திறமையான தமிழர்கள்..!

மயில்வாகனம் சூரியசேகரம் அவர்களுடனான கலந்துரையாடல்..!