13

13

ஒருவரின் தகுதி தராதரம் எதுவாக இருந்தாலும், தவறு செய்யும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

“ஒருவரின் தகுதி தராதரம் எதுவாக இருந்தாலும், தவறு செய்யும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அரசாங்க ஊடகப் பிரதானிகளுடன் இன்று (13) முற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

“ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்நாட்டு மக்கள் வெவ்வேறு அரசாங்கங்களை உருவாக்கியுள்ளனர். வெவ்வேறு அரசாங்கங்களை கவித்துள்ளனர்.”

“வரலாற்றில் முதன்முறையாக, இந்நாட்டு மக்கள் எமக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இரண்டு சந்தர்ப்பங்களில் வழங்கிய வரலாற்று மக்கள் ஆணையின் பொருள் மற்றும் சாரம்சம் பற்றிய விரிவான வாசிப்பை இம்முறை நாங்கள் பெற்றுள்ளோம்.”

தரமான மற்றும் நிலையான நாடு உருவாகும் என்ற நம்பிக்கையுடன் இந் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை உருவாக்கினர்.

“அந்த தனித்துவமான நம்பிக்கைக்கு தீங்கு விளைவிக்க எங்கள் அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.””சுருக்கமாக கூற வேண்டும் என்றால்,”

“நாட்டில் தவறு செய்யும் எவரையும் எக்காரணம் கொண்டும் பாதுகாக்க எமது அரசாங்கம் தயாரில்லை. நாட்டில் மட்டுமல்ல, எமது அரசாங்கத்திலும் எவரேனும் எந்த மட்டத்திலும் தவறு செய்தால் அந்தத் தவறுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். ”

“சரியான நேரத்தில் இது தொடர்பாக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்.”

7 தசாப்தங்களாக ஏமாற்றப்பட்ட மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தி இந்த நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு தமது அரசாங்கம் நிபந்தனையற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார மற்றும் அரச ஊடகப் பிரதானிகளின் பங்குபற்றுதலுடன் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

மறுபரிசீலனை செய்யப்படுகிறது பயங்கரவாத தடைச் சட்டம் – நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண

பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பவற்றை விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டோம் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, பாராளுமன்றத்தில் சட்டமூலங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 வரையான சட்டங்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மாநாடொன்றின் போதே கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஊழல்: ஏட்டிக்குப் போட்டியாக குற்றவாளிகள் விடுதலை!

அமெரிக்க ஊழல்: ஏட்டிக்குப் போட்டியாக குற்றவாளிகள் விடுதலை!

அமெரிக்க ஜனாதிபதியாக ஓய்வுபெறப் போகும் ஜோ பைடனும் அமெரிக்க ஜனாதிபதியக பதவியேற்க உள்ள டொனால் ட்ரம்மும் ஏட்டிக்குப் போட்டியாக குற்றவாளிகளை விடுதலை செய்ய முற்பட்டுள்ளனர். இன்னும் சில வாங்களில் ஓய்வுபெறப்போகும் ஜோ பைடன் தனக்குள்ள விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி குற்றவாளியாக நிரூபிக்கப்ட்டு தண்டணை பெற்ற அவருடைய மகன் ஹன்டர் பைடனுக்கு பொதுமன்னிப்பு அளித்துள்ளார். சட்டத்தை நீதியிடமே விட்டுவிடுவேன் என்று கூறிய ஜோ தற்போது தன்னுடைய உயிருடன் உள்ள ஒரே மகனைக் காப்பாற்ற களத்தில் இறங்கி விட்டார். ஹன்டர் பைடன் சட்டத்தை வளைத்து பல குற்றச்செயல்களில் தொடர்புடையவர். அது மட்டுமல்லாமல் டொனால் ட்ரம் பதவிகு;கு வந்து ஹன்டர் பைடனுக்கு எதிராக புதிய வழங்குகளைக் கொண்டுவந்தாலும் என அதிலிருந்தும் தனது மகனைக் காப்பாற்றுவதற்கான வகையில் மகன் ஹன்டர் பைடனைக் காப்பாற்றியுள்ளார் ஜோ. தன்னுடைய மகனை மட்டும் காப்பாற்றியது தற்போது பதவியில் உள்ள டெமொக்கிரட்டிக் கட்சிக்கு பிரச்சினையாகும் என்பதால் இன்னும் சிலருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களையும் விடுதலை செய்ய ஜோ பைடன் நடவடிக்கை எடுத்து

 

உலகெங்கும் அரசியல் நேர்மை, ஜனாநாயகம் பற்றியெல்லாம் விளக்கமளிக்கும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் அண்மைக்காலமாக அரசியல் ரீதியில் அம்மணமாக்கப்பட்டுள்ளனர். காஸா – லெபனானில் இஸ்ரேலோடு கூட்டாக இணைந்து இனப்படுகொலை செய்யும் அமெரி;க்க அரசு அடிப்படை விழுமியங்களை இழந்து நிற்கின்றது. தற்போது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால் ட்ரம் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட குற்றவாளி. அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாகு மோசடி மற்றும் கிரிமினல் குற்றங்களுக்காக தண்டனை பெற்ற குற்றவாளி.

 

கடந்த தேர்தலில் தோல்வியுற்ற ட்ரம் தேர்தல்களில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றம்சாட்டி அமெரிக்க ஆட்சியின் மையப்புள்ளியான கப்பிற்றல் ஹில்லை முற்றுகையிடச் சொல்லி தன்னுடைய ஆதரவாளர்களைத் தூண்டினார். அவர்களும் அனைச் செய்து செனட் சபைக்குள் நுழைந்து கோட்டபாயாவின் ஜனாதிபதி மாளிகையைப் போன்று செனட்சபைக்குள் புகந்து அட்டகாசம் பண்ணினர். இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ஜோ பைடனின் ஆட்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது ஆட்சிக்கு வரவுள்ள டொனால் ட்ரம் தான் பதவியேற்றதும் ஹபிடல் ஹில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வேன் என் டொனால் ட்ரம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல்யமான ரைம் சஞ்சிகை இந்த ஆண்டின் ‘பேர்சன் ஒப் தி இயர்’ என டொனால் ட்ரம்யை தெரிவு செய்துள்ளது. 2016 இலும் இதற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆனால் இம்முறை இவ்விருதை தான் விரும்புவதாக நளினமாகத் தெரிவித்தார். தவறாகவோ சரியாகவோ உலகில் பெரும் மாற்றத்தை ட்ரம் ஏற்படுத்துவார் என அச்சஞ்சிகை தெரிவிக்கின்றது.

அனுர அரசு இந்தியாவால் இலங்கை மீது திணிக்கப்பட்ட 13ஆம் திருத்தம்-மாகாணசபை முறையை நடைமுறையில் வைத்திருப்பார்களா?

அனுர அரசு இந்தியாவால் இலங்கை மீது திணிக்கப்பட்ட 13ஆம் திருத்தம்-மாகாணசபை முறையை நடைமுறையில் வைத்திருப்பார்களா? – அரசியல் செயற்பாட்டாளர் இக்னீஷியஸ் செல்லையா மனோரஞ்சனுடனான நேர்காணல்.

இன்று தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அடையாளம் காணப்பட்டாலும் கூட அதன் ஆரம்ப புள்ளியான ஜே.வி.பி இந்திய ஏகாதிபத்தியத்தை முழுமையாக எதிர்க்கும் நோக்குடன் ஆரம்பகாலங்களில் செயற்பட்ட ஓர் அமைப்பாகும். இந்த நிலையில் ஆட்சியமைத்த தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் இந்திய எதிர்ப்பை நடைமுறைப்படுத்துமா..? புலிகளால் எதிர்க்கப்பட்ட 13ஆம் திருத்தத்தை – மாகாண சபை முறையை புலிகள் எதிர்த்ததன் பின்னணி..?, யாழ்பாண வெள்ளாளியம் 13ஆம் திருத்தத்தை எதிர்த்தது ஏன்..? தேசிய மக்கள் சக்தியின் வெற்றியில் அதன் அடித்தளம் பெறுகின்ற முக்கியத்துவம் என பல விடயங்களை அரசியல் செயற்பாட்டாளர் இக்னீஷியஸ் செல்லையா மனோரஞ்சனுடன் கலந்துரையாடுகிறார் தேசம் ஜெயபாலன்.

 

 

 

இலங்கை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் – 18 லட்சத்தை தாண்டியது தொகை !

இலங்கை உங்களை வரவேற்கின்றது! சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது!

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு டிசம்பர் 8 வரை 3.5 லட்சத்தல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருந்தனர். இவ்வாண்டு 18 லட்சத்து 50,000 பேர் டிசம்பர் 8 வரை இலங்கைக்கு வந்துள்ளனர். இவ்வாண்டு 23 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்க அரசு அறுகம்பே பிரச்சினையை வைத்து இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலமாக கிடைக்கும் வருமானத்மை கட்டுப்படுத்த முனைந்திருந்தது. இலங்கை அரசு சுற்றுலாப் பயணத்துறையில் எதிர்பார்த்த இலக்கை அடையாமல் போனதற்கு அதவும் ஒரு காரணம்.

ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு முன்னதாக 2018இல் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுவந்தது. இது இலங்கையின் மொத்தத் தேசிய வருமானத்தில் 5 வீதமாகும். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இவ்வாண்டு இதுவரை 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுற்றுலாத்துறை ஈட்டித் தந்துள்ளது. அடுத்த ஆண்டு இது 3 பில்லியன் அமெரிக்க டொலர்களிலும் பார்க்க அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு வருமானத்தை எங்கு எங்கெல்லாம் இருந்து வரவைக்கமுடியும் என்று அதற்கான நடவடிக்கையைத் தூண்டி விடுகிறது. அதே சமயம் பணத்தை எங்கு எங்கெல்லாம் மிச்சப்படுத்தமுடியுமோ அங்கெல்லாம் மிச்சப்படுத்தகின்றது.

தெற்கு முதல் வடக்கு வரை பெண் தலைமைத்துவத் தொழிற்சாலைகள்!

தெற்கு முதல் வடக்கு வரை பெண் தலைமைத்துவத் தொழிற்சாலைகள்!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் உள்ள பெண் தலைமைத்துவத்தில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு பிரித்தானியாவிலுள்ள கொள்வனவாளர்கள் விஜயம் செய்து உற்பத்தி நடவடிக்கைகளைப் பார்வையிட்டுள்ளனர். இதுபற்றி கருத்து வெளியிட்ட எகஸ்போர்ட் டெவெலப்மன்ற் போட் தலைவர் மங்கள விஜயசிங்கே, இந்த தொழிற்சாலைகளுக்கான விஜயம் நாங்கள் பெண்களைப் பலப்படுத்துகின்றோம் என்பதனைப் பிரதிபலிக்கின்றது. இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் முக்கிய இடத்தில் நாங்கள் பெண்களை நிலைநிறுத்தியிருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

தெற்கில் இருந்து வடக்கு வரை பெண்கள் தலைமைத்துவத்தில் இயங்கும் 59 தொழிற்சாலைகளுக்கு பிரித்தானிய – இலங்கை குழு விஜயம் செய்து பார்வையிட்டது. இலங்கையின் எக்ஸ்போர்ட் டெவலப்மன்ட் போட்டும் இன்ரநசனல் ரேட் சென்ரரும் இணைந்து பிரத்தானிய – இலங்கை வர்த்தகக் குழுமமாக பெண் தலைமைத்துவ தொழிற்சாலைகளுக்கு பயணித்துள்ளனர். சி ரேட்ஸ் கொமன்வெல்த் பிளஸ் புரொகிராம் என்பதன் அடிப்படையில் கொள்வனவாளர்களை பிரித்தானியாவின் வடக்கு மற்றும் மேற்கு யோக்செயர் சம்பர் ஒப் கொம்மேர் மற்றும் கிரேட்டர் மன்செஸ்ரர் சம்பர் ஒப் கொம்மேர்ஸ் இல் இருந்து அழைத்து வந்திருந்தனர்.

இலங்கையனும் இல்லை இந்தியனும் இல்லை – மண்டியிட்டு கதறிய யாழ் இளைஞர்

இலங்கையனும் இல்லை இந்தியனும் இல்லை – மண்டியிட்டு கதறிய யாழ் இளைஞர்

தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன் முழங்காலில் இருந்து கதறிய யாழ்ப்பாண இளைஞன். இலங்கையில் யுத்தம் நடந்த போது ஜோய் கே என்றழைக்கப்படும் இவ் இளைஞன் 8 வயதில் பெற்றோரால் படகு மூலம் தமிழ்நாடு அனுப்பிக்க வைக்கப்பட்டுள்ளார். மண்டபம் வந்தடைந்த ஜோய் அங்கே இலங்கை அகதிகளுக்கான மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அவருக்கு இதுவரை இந்திய அரசாங்கத்தினுடைய எந்தவித அடையாள அட்டையும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

தற்போது 22 வருடங்கள் கடந்த நிலையில் சாதாரண வாழ்க்கை நடத்துவதற்கு கூட உரிய அடையாள ஆவணங்கள் வழங்கப்படாததால் தனது பெற்றோர் வசிக்கும் இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

மேலும் அந்த இளைஞர் இதுவரை தான் 10க்கும் மேற்பட்ட மனுக்களை மாவட்டச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் ராமநாதபுரம் மாவட்டச் செயலக அதிகாரி தன்னை இலங்கைக்கு அனுப்ப மறுப்பதாகவும், தன்னை இந்தியக் குடிமகனாக அங்கீகரித்து எந்த ஆவணமும் வழங்கவில்லை என்று தன்னை சமாதனப்படுத்த முற்பட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் முறையிட்டார். இவ்வாறு இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து அகதியாக சென்ற இலங்கைத் தமிழ்மக்கள் 3 தலைமுறை கடந்தும் இரண்டாம் தர பிரஜைகளாகவே தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறார்கள். அடிப்படை வசதிகள் குறைந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு வாங்கிக் கொடுத்தே தீருவேன் என பிழைப்பு அரசியல் நடத்தும் சீமானும் தமிழ்நாட்டில் வாழும் இலங்கை அகதிகளை கண்டுகொள்ளவில்லை.

இந்திய மத்திய அரசாங்கம் திபேத் அகதிகளுக்கு வழங்கி வரும் ஆதரவை அங்கீfhuத்தை இலங்கை அகதிகளுக்கு வழங்கவில்லை. இந்தியா இலங்கைத் தமிழருக்கு தீர்வு பெற்றுத்தரும் என நப்பாசையில் இருக்கும் தீவிர தமிழத் தேசியம் பேசும் கட்சிகளும் இவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை.

அப்படியிருக்க ‘எக்ஸ்’ தளத்தில் வெளியாகிய குறித்த காணொலியை பகிர்ந்து கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலங்கை அரசு இந்திய அரசுடன் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த இளைஞனை இலங்கைக்கு அழைத்து வந்து அவருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். போரின் விளைவுகளால் இனி எந்த ஒரு இளைஞர் வாழ்க்கையும் எதிர்காலKம் மறுக்கப்படக்கூடாது. தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாமல் கூட வேதம் ஓதும் போது இலங்கைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக காட்டிக்கொள்ளும் நடப்பு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நித்திரையில் இருக்கிறார்கள்.

இதற்கிடையே கடற்தொழில் அமைச்சரை சந்தித்ததாக இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயம் தனது எக்ஸ் பதிவில் செய்தி வெளியிட்டுள்ளது. இச்சந்திப்பில் மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் எனப் பேசப்பட்டதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர டிசம்பர் 15இல் டெல்லி செல்ல உள்ளார். அப்போதும் இப்பிரச்சினை பேசப்பட்டு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என கடற்தொழிலாளர் சங்கம் கோரிக்கைவிட்டுள்ளது.

தன்னுடைய நாட்டுப் பணிப் பெண்ணை அடிமையாக்கிய இலங்கைப் பெண் ராஜதந்திரிக்கு சர்வதேச தொழில் அமைப்பில் நியமனம்!

தன்னுடைய நாட்டுப் பணிப் பெண்ணை அடிமையாக்கிய இலங்கைப் பெண் ராஜதந்திரிக்கு சர்வதேச தொழில் அமைப்பில் நியமனம்!

அவுஸ்திரேலியாவில் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகராக இருந்த ஹிமாலி அருணதிலக்க, தன்னுடைய பதவியைப் பயன்படுத்தி தன்னுடைய வீட்டு வேலைக்கு அழைத்து வந்த பெண்ணை அடிமையாக வைத்து, வேலை வாங்கியமைக்காக, அவருக்கு 6,50,000 அவுஸ்திரேலிய டொலர்கள் செலுத்த, அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரு குழந்தைகளின் தாயான பிரியங்காவை வேலைக்குக் கூட்டிவந்து அவரை ஒரு நாளைக்கு பதின்நான்கு மணிநேரம், வாரத்தில் ஏழு நாட்களும் வேலை வாங்கிவிட்டு, ஒரு மணி நேரத்துக்கு ஒரு டொலர் வரையே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. பிரியங்கா, ஹிமாலியிடம் 2015 முதல் 2018 வரை பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது அவருடைய கடவுச்சீட்டையும் இந்த ராஜதந்திரி கைப்பற்றி வைத்திருந்தார். சிங்களம் தவிர வேறுமொழி தெரியாத பிரியங்கா வீட்டிற்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டுள்ளார். யாருடனும் பழக அனுமதிக்கப்படவில்லை.

இவ்வளவு கொடுமைகளைப் புரிந்ததற்காக பிரியங்காவுக்கு வழங்க வேண்டிய சம்பளம் அதற்கான வட்டி எல்லாவற்றையும் மதிப்பீடு செய்து, ஹிமாலி அருணதிலக்க 5,50,000 அவுஸ்திரேலிய டொலர்கள் செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது அவரை அடிமையாக தடுத்து வைத்திருந்த குற்றத்திற்கு மேலும் 1,00,000 அவுஸ்திரேலிய டொலர்கள் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதே போன்றதொரு சம்பவம் பிரித்தானியாவில் அண்மையில் இடம்பெற்றது. ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு எதிராக வைக்கப்பட்டிருந்தது. பிரித்தானியாவிலும் இவர்கள் ஒருவரைத் தடுத்துவைத்திருந்து கொடுமைப்படுத்தியது தொடர்பில் பிரித்தானிய பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்து இருந்தனர். இலங்கையில் ஆட்சி மாற்றமும் நிகழ்ந்தது. இந்த ராஜதந்திரிகள் இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டனர்.

அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஹிமாலி அருணதிலக்கவுக்கு எதிராகத் தீர்ப்பளித்த போதும் முன்னைய இலங்கை அரசு அவரை ஜெனிவாவில் ஐக்கியநாடுகள் சபையின் நிரந்தர பிரிதிநிதியாக நியமித்துள்ளது. மேலும் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கும் இவரது பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஊழலுக்கு எதிரான அரசாங்கம், நாட்டை சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் நேர்மை, ஒழுக்கம் தொடர்பில் கூடிய கவனமெடுப்பதுடன் இவ்வாறானவர்களை அவர்களுடைய பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றது.