10

10

சட்டமா அதிபரின் தீர்மானங்களில் அரச தலையீடு இருக்கக்கூடாது – சுமந்திரன் !

சட்டமா அதிபரின் தீர்மானங்களில் அரச தலையீடு இருக்கக்கூடாது – சுமந்திரன் !

“சட்டமா அதிபரின் தீர்மானங்களில் அரசாங்கம் தலையீடு செய்யக்கூடாது.” என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் எம்.ஏ சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதன்படி,

“ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டிருப்போரை அவ்வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க சிபாரிசு செய்திருப்பது குறித்து கண்டனங்கள் வலுத்திருக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் குறித்தவொரு குற்றவியல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள், அவ்விசாரணை அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

மேலும் அவற்றின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதா, இல்லையா எனும் தீர்மானத்தை சட்டமா அதிபரால் மேற்கொள்ளமுடியும். அதேபோன்று சட்டமா அதிபர் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானங்களை மேற்கொள்ளும்போது, அதில் அரசாங்கம் தலையீடு செய்யக்கூடாது எனவும், மாறாக சட்டமா அதிபர் சுயாதீனமாக இயங்குவதை உறுதிசெய்யவேண்டியது அவசியம். இருப்பினும் சட்டமா அதிபரின் அண்மைய தீர்மானத்தைப் பொறுத்தமட்டில், லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டார் என்பதை அனைவரும் அறிந்திருக்கும் நிலையில், அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுவிக்குமாறு கூறுவது பொருத்தமானதல்ல என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு 16 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், இன்னமும் இவ்வழக்கில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை என விசனம் வெளியிட்ட அவர், இதுகுறித்த விசாரணைகளை விரைவுபடுத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டியது அவசியம் என்றார்.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த – நாமல் ராஜபக்ஷ புதிய கதை !

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த – நாமல் ராஜபக்ஷ புதிய கதை !

பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான மகிந்த ராஜபக்ச மிகவும் மன வருத்தம் அடைந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரபாகரனின் மகனது மரணச் செய்தி அதிகாலையில் கிடைக்கப்பெற்றது. இந்தச் செய்தியைக் கேட்டு எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார். எனது தந்தை மிகவும் கவலை அடைந்து நான் பார்த்த சந்தர்ப்பம் இதுதான். அதிகாலையில் வந்த அந்த தொலைபேசிச் செய்தி தொடர்பில் இன்றும் எனக்கு நினைவிருக்கின்றது. பிரபாகரனின் இளைய மகன் போரில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதால் எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார்.

இந்த மரணம் வேண்டுமென்று செய்யப்பட்ட ஒன்று அல்ல. தவறுதலாக நடந்தது. பிரபாகரனின் மகன் வேண்டுமென்றே கொல்லப்பட்டார் என சிலர் கதைகளை உருவாக்கினர். உண்மை அதுவல்ல. இது தவறுதலாக நடந்த விடயம் என்பதுகூட பின்னர் தான் தெரியவந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

தாய்கும் நாய்க்கும் முன்னால் காதலி கொலை மிரட்டல் – இலங்கைப் பெண்ணுக்கு நியூசிலாந்து புகழிடம் !

தாய்கும் நாய்க்கும் முன்னால் காதலி கொலை மிரட்டல் – இலங்கைப் பெண்ணுக்கு நியூசிலாந்து புகழிடம்

இருபாலின ஈர்ப்புக்கொண்ட இலங்கைப் பெண்ணொருவருக்கு நியூசிலாந்து புகழிடம் அளித்துள்ளது. இலங்கை இராணுவ சிப்பாயான அவரது முன்னாள் காதலி அவரது தாயையும் நாயையையும் துப்பாக்கிமுனையில் மிரட்டியதால், உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் தஞ்சம் கோரியதாக தெரியவருகின்றது.

புகழிடக்கோரிக்கையில் குறித்த பெண் தெரிவித்ததன்படி,

அவர் பதின்மவயதில் முன்னாள் காதலியுடன் ரகசிய உறவில் இருந்துள்ளார். 2017ஆம் ஆண்டு இந்த விடயத்தை கண்டுபிடித்த அவரது தாய் அவருக்கு வேறு ஆணுடன் கட்டாயத்திருமணத்தை ஏற்பாடுசெய்துள்ளார். எனினும், அவரது முன்னாள் காதலி அதை ஏற்க மறுத்துவிட்டார்.

பின்னர், 2021ஆம் ஆண்டு, முன்னாள் காதலி இராணுவத்தில் சேர்ந்தபின், மூன்று இராணுவ அதிகாரிகளுடன் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கிமுனையில் அவரது தாயையும் அவர்கள் வளர்க்கும் நாயையும் மிரட்டியுள்ளார். அந்த தருணத்தில் குறித்த பெண் வீட்டில் இருக்கவில்லை. பின்னர் அவர் முன்னாள் காதலியின் தாக்குதலிலிருந்து தப்பிக்கவும் கல்விக்காகவும் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்திருந்தார். பின்னர், தனது பாலின அடையாளத்தால் இலங்கையில் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளது என நியூசிலாந்தில் தஞ்சம் கோரியுள்ளார். அவரது தஞ்சக்கோரிக்கையை பரிசீலித்த நியூசிலாந்து அதைக் ஏற்றுக்கொண்டு புகழிடம் அளித்துள்ளது

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து லட்சம் கொடுத்து விட்டு ஹெகலியவுக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்துள்ளார்கள் – கிளிநொச்சியில் அமைச்சர் பிமல் !

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து லட்சம் கொடுத்து விட்டு ஹெகலியவுக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்துள்ளார்கள் – கிளிநொச்சியில் அமைச்சர் பிமல் !

கெஹலியவுக்கு ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈடாக பெற்றுக்கொண்ட பணத்தில், கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியில் தெரிவித்தார். அமைச்சர் பிமல் ரத்னாயக்க கிளிநொச்சி ரயில் நிலையத்தை நேற்று பார்வையிட்டார். ‘க்ளீன் ஶ்ரீலங்கா’ திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் அமைந்த இந்த விஜயத்தில் பயணிகளுடனும் கலந்துரையாடினார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகபட்சமாக 5 இலட்சம், 7 இலட்சம், இறுதியாக 10 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டது. ஆனால், கடந்த கால அமைச்சர்கள் பல இலட்சங்களை அவர்களது வீடுகளுக்காக நட்டஈடாக பெற்றுக்கொண்டுள்ளனர். உதாரணமாக கெஹெலிய ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈட்டுத் தொகையை வைத்து இங்கு கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் என்றார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி இயங்காத விடயம் தொடர்பில் எமது மாவட்ட அமைப்பாளர் பார்வையிட்டு, சுகாதார அமைச்சுக்கு தகவல் வழங்கியதும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்

ராஜபக்சக்களின் வழியில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து புதிதாக ஒரு கோமாளி – பா.உ அர்ச்சுனாவை விளாசும் இளங்குமரன் !

ராஜபக்சக்களின் வழியில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து புதிதாக ஒரு கோமாளி – பா.உ அர்ச்சுனாவை விளாசும் இளங்குமரன் !

தமிழர்களுக்கென தனி மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை சீர்குலைப்பதற்கு அவ்வப்போது துரோகிகளும், கோமாளிகளும் வந்துசெல்வதும் வழமை. அப்படித்தான் இம்முறையும் கோமாளியொன்று நாடாளுமன்றம் வந்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதேசவாதம்பேசி தமிழர்களை பிரித்தாள்வதற்காக கைக்கூலியாக வந்துள்ள இந்த நபர், கத்தரிதோட்ட வெருளிகள் பற்றி கதைப்பது வெட்கக்கேடு. என்.பி.பிக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை புரிந்துகொள்ள பக்குவமில்லாத அரசியல் கோமாளி, தற்போது விமர்சன அரசியலை முன்னெடுத்து வருகின்றது. சமூகவலைத்தளங்களில் பிரபல்யமடைவதற்காக வீரவசனங்களை பேசி, தன்னையும், தன்னை சூழவுள்ள ஒரு சிலரை பற்றி மட்டுமே பேசும் கோமாளிகளெல்லாம் தலைவர்களாக முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எமது மலையக உறவுகள் தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கைக்கு எதிராக நின்றதில்லை. உரிமைப் போராட்டங்களைக்கூட ஆதரித்துள்ளனர். தென்னிலங்கையில் மஹிந்தவும், அவரின் சகாக்களும் பின்பற்றிய அதே அரசியல் பாணியை, வடக்கில் செய்வதற்கு இந்த கோமாளி முற்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

லசந்தவின் படுகொலைக்கு நீதி பெற்றுக்கொடுக்க முற்படும் அனுர தரப்பு ஊடகவியலாளர் இசைப்பிரியா கொலைக்கும் நீதி வழங்க வேண்டும் !

லசந்தவின் படுகொலைக்கு நீதி பெற்றுக்கொடுக்க முற்படும் அனுர தரப்பு ஊடகவியலாளர் இசைப்பிரியா கொலைக்கும் நீதி வழங்க வேண்டும் !

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்ததை போல நிமலராஜன் தொடக்கம் இசைப்பிரியா வரையான அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதியையும் பெற்றுக் கொடுக்க உறுதியளிக்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள சபா குகதாஸ்,

ஊடகத்துறையில் பணியாற்றியதுடன் கலைத்துறையிலும் சிறப்பான படைப்புக்களை வழங்கிய இசைப்பிரியா இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே17ஆம் திகதி வட்டுவாகலில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார் என்பதற்கு சனல் 4 ஊடகத்தின் ஊடாக ஆதாரங்கள் வெளிவந்தன. அதன் அடிப்படையில் சரணடைந்த ஊடகவியலாளன் படுகொலை செய்யப்பட்ட முறை மனித குலமே வெட்கித் தலை குனியும் அளவுக்கு அசிங்கமானது.

எனவே பிரதமர் அவர்களே நீங்களும் பெண் என்ற வகையில் இசைப்பிரியாவுக்கான நீதியை பெற்றுக் கொடுங்கள். இறுதிப் போரில் இசைப்பிரியாவின் கணவன் சிறிராம் கொல்லப்பட்டதுடன் அவரது மகள் அகல்யா பிறந்து இரண்டு மாதங்களில் மருத்துவ வசதியும் பால்மாவும் இல்லாமையால் புதுமாத்தளனில் இறந்தார். அத்தனை துயரங்களையும் சுமந்து கொண்டு சரணடைந்த இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே இவருக்கான நீதி கிடைக்குமா? என குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்

பல்கலைக்கழக வெளிவாரிப் பேரவை உறுப்பினர்களை பதவி விலக பணிப்பு

பல்கலைக்கழக வெளிவாரிப் பேரவை உறுப்பினர்களை பதவி விலக பணிப்பு

நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் வெளிவாரிப் பேரவை உறுப்பினர்கள், எதிர்வரும் 13ம் திகதிக்கு முன்பாக தமது பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழகங்கள் மாணியங்கள் ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் முதலாவது கூட்டம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 7ம் திகதி இடம்பெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடாதிபதியால் அண்மையில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து பேரவையின் அனைத்து வெளிவாரி உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரியிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக்தில் தற்போது பல்கலைக்கழகங்கள் மாணியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட 15வெளிவாரி உறுப்பினர்கள் உள்ளனர்.

உதவிக் கல்விப் பணிப்பாளர் பஞ்சநாதன் சுதர்சன், சட்டத்தரணி பத்திநாதர் அன்ரன் புனிதநாயகம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் யாழ். மாவட்டப் பணிப்பாளர் தில்லையம்பலவாணர் விமலன், சப்ரகமுவா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் மகிந்த எஸ் ரூபசிங்க, வாழ்நாள் பேராசிரியர் குமுது விஜேவர்த்தன, ஓய்வுபெற்ற வணக்கத்துக்குரிய பேராசிரியர் ஜி.பிலேந்திரன், சட்டத்தரணி டி.ரெங்கன், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதவான் திருமதி ஶ்ரீநிதி நந்தசேகரன், ஏந்திரி ரி. சாந்தாதேவி, வடக்கு உணவு நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான கபிலன் கருணானந்தன், யாழ். ஆயர் இல்லத்தைச் சேர்ந்த வண. கலாநிதி பி.ஜே. ஜெபரட்ணம், லங்கா சஸ்ரெயினபிள் வென்ஜஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் குலேந்திரன் சிவராம், ஓய்வுபெற்ற பணிப்பாளர் நாயகம் வி.கனகசபாபதி, தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் மற்றும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் மற்றும் மனோகரி ராமநாதன் ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோரது நியமனங்கள் அரசியல் மற்றும் ஆன்மீக சிபாரிசுகளின் அடிப்படையில் அமைந்தவை. நீண்டகாலமாகவே இவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வினைதிறனற்றோர் இவ்வாறான பொறுப்புகளில் இருப்பதால் பல்கலைக்கழகத்தின் முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. எனவே எதிர்வரும் காலங்களிலாவது அரசியல் தலையீடுகள் அற்ற, பல்கலைக்கழகத்தை உலகத் தரத்திற்கு கொண்டுவருவதற்கு துணைநிற்கக்கூடிய உறுப்பினர்களை அரசு பேரவைக்கு நியமிக்க வேண்டும்.

தையிட்டி விகாரையை அனுமதித்த நல்லாட்சி அரசின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தையிட்டி இடிப்பில் கைகோர்த்தார் !

தையிட்டி விகாரையை அனுமதித்த நல்லாட்சி அரசின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தையிட்டி இடிப்பில் கைகோர்த்தார் !

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்கள் நடத்தவுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தையிட்டிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை என்பது சட்ட ரீதியான அனுமதிகள் எவையும் பெற்றுக் கொள்ளப்படாமல், எமது மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பூர்வீக நிலங்களை இழந்துள்ள மக்கள் தங்களுடைய காணிகளை மீட்பதற்கு தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பை நிறைவற்றுவதற்கான முயற்சிகள் எம்மால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மக்களுடைய காணிகள் மக்களுக்கே சொந்தம் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதி மாத்திரமன்றி கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது திடமான நிலைப்பாடாக இருக்கின்றது. அந்த அடிப்படையில், காணி உரிமையாளர்களின் அமைதி வழிப் போராட்டத்திற்கு பூரண ஆதரவளிக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஆகியோர் அங்கத்துவம் வகித்து ஆட்சிக்கு கொண்டு வந்த நல்லாட்சி அரசு காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. நல்லாட்சி அரசில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க தலைமையில் அறிவிக்கப்பட்ட ஆயிரம் விகாரை திட்டத்தை முன்னோக்கி நகர்த்தியவர் அப்போதைய புத்தசாசன அமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆவார். இந்த ஆயிரம் விகாரை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசுக்கான ஆதரவை வழங்கியதுடன் குறித்த நல்லாட்சியில் தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் என குறிப்பிட்ட பா.உ சிறிதரனும் கைகோர்த்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் நல்லாட்சி அரசில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய விவகார அமைச்சராக செயலாற்றிய டக்ளஸ் தேவானந்தா அடுத்து பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச அரசிலும் அமைச்சராக பணியாற்றினார். எனினும் அண்மையில் ஏற்பட்ட என்.பி.பி அலையில் காணாமலாக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா மீண்டும் தனது கட்சியின் அரசியலை நிலைநாட்ட திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்தவர் போல தையிட்டி விகாரையை இடிக்கும் பேரணியில் கைகோர்ப்பதாக அறிவித்துள்ளதாக அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.