உச்ச நீதிமன்ற வழக்குத் தொடங்க முன்பே கலைப்பீடாதிபதிக்கு உச்சா போய்விட்டது ! யாழ் பல்கலை மாணவனுக்கு வகுப்புத் தடை நீக்கப்பட்டது ! பதவி விலகுவாரா கலைப்பீடாதிபதி ரகுராம் !
யாழ். பல்கலையின் 4ஆம் வருட சட்டத்துறை மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை மீள பெறப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவனுக்கு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு வகுப்புத் தடை நீக்கப்பட்டதற்காக பதவியை ராஜினாமா செய்வதாக நாடகம் போட்ட கலைப்பீடாதிபதி ரகுராம், இப்போது பதவியை ராஜினாமா செய்வாரா என அன்று போராட்டத்தில் குதித்த மாணவர்களுக்காக குரல்கொடுத்தவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நடைபெற்ற மூன்று வெவ்வேறு விடயங்களில் 09 மாணவர்களுக்கு வகுப்புத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. வகுப்புத்தடையை, மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக அண்மைக்காலம் வரை செயலாற்றிய சட்ட பீட மாணவனான சி சிவகஜன் தலைமையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கேள்விக்குட்படுத்தினர்.
இதையடுத்து பேரவை மாணவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி வகுப்புத் தடையிலிருந்து விடுவித்ததால் பேராசிரியர் எஸ்.ரகுராம் கலைப்பீடாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் தன்மீது பாரதூரமான அவதூறை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு சிவகஜன் செவ்வி வழங்கினார் என பேராசிரியர் ரகுராம் துணைவேந்தரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பல்கலைக்கழகத் துணைவேந்தரால் சட்டத்துறை மாணவன் சிவகஜனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.
இந்த வகுப்புத் தடையைச் சவாலுக்குட்படுத்தி யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலை பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு சட்டத்துறை மாணவன் சிவகஜனால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலையே மாணவன் மீதான வகுப்புத்தடை நீக்கப்பட்டுள்ளதாக மாணவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புத்தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், சட்ட விதிமுறைகளை மீறி மாணவனுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராகவும் , இழப்பீடு கோரியும் வழக்கினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களுக்கான பாடங்களை தெரிவு செய்வதற்கான அடிப்படை உரிமையை கலைப்பீடாதிபதி ரகுராம் அனுமதிக்காததைத் தொடர்ந்தே பாலியல் லஞ்சம் கோரும் பேராசிரியர் ரகுராமுக்கும் மாணவர்களுக்குமான முரண்பாடு வலுத்தது. பேராசிரியர் ரகுராமின் இந்த அடாவடித் தனத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தனக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மாணவர்களை பழிவாங்கும் நோக்கில் ரகுராம் அந்த மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதுடன் இவர்களின் நடத்தைiயை போதைவஸ்துவுக்கு அடிமையானவர்கள் என்று காண்பிக்க தனக்குச் சார்பான சில கலைப்பீட மாணவர்களைத் தூண்டிவிட்ட ரகுராம் அதனைக் கனகச்சிதமாக அரங்கேற்றினார்.
சில மாணவர்கள் குடித்துவிட்ட வந்ததை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் போதைப்பொருள் பாவனையாளர்கள் என்றும் அவர்களுக்கு எதிராக தான் விதித்தத வகுப்புத்தiடையை பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கிவிட்டதால் தான் பதவியை ராஜினாமாச் செய்வதாக ஒரு பெரும் நாடகத்தை அரங்கேற்றி ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களையும் போதைக்கு அடிமையானவர்கள் என முத்திரைகுத்தினார் ரகுராம்.
தமிமீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மாவீரர் தின உரையின் பாணியில் போதைபொள் பாவனைக்கு எதிராக தான் போராடுவதாக ஒரு விம்பத்தை கட்ட முயற்சித்தார் ரகுராம். பேராசிரியர் ரகுராமுக்கு பின்னாலிருந்த சில கலைப்பீட காமுகப் பேராசிரியர்கள் தங்களைப் பாதுகாக்க ரகுராம் தொடர்ந்தும் அதிகாரத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக ரகுராமின் ராஜினாமா நாடகத்தை அரங்கேற்றத் துணை போயினர்.
650 விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தில் 250 பேராசிரியர்கள் விரிவுரையாளர்களே உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 17 பேர் மட்டுமே ரகுராமின் ராஜனாமா நாடகத்தில் பங்கேற்றனர். இவர்கள் அவசரக் குடுக்கையாக மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டம் முன்னறிவித்தலின்றி மேற்கொள்ளப்பட்ட போராட்டம் சட்டவிரோதமானது. அதனை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ சுட்டிக்காட்டி பணிக்குத் திரும்பும்படி உத்தரிவிட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் பேராசிரியர் ரகுராமினால் போதைவஸ்த்துக்கு அடிமையானவர்களின் தலைவனாக சித்தரிக்கப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட மாணவன் சிவகஜன் வாழ்நாளில் மதுவையோ போதையையோ தொடாதவர் என கலைப்பீடத்தின் ரகுராமுக்கு நெருக்கமான மாணவர்களே தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர். அப்படியிருந்தும் அம்மாணவனின் பல்கலைக்கழகத்தின் மாணவர்களை தன்னுடைய சுயநலனுக்காக ரகுராம் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனச் சித்திரப்பது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதுடன் தற்போது சிவகஜன் மீதான வகுப்புத்தடை நீக்கப்பட்டது நிர்வாகத்தையும் ரகுராமையும் அம்பலப்படுத்தியுள்ளது.
மாணவன் சிவகஜன் அடிப்படை உரிமை மீறல் வழக்ககை தொடுத்ததும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஆரம்பிக்கு முன்னரே, கலைப்பீடாதிபதிக்கு உச்சா போய்விட்டது. அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என இவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பழிவாங்கப்பட்ட மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்