21

21

ஒரு மாதத்திற்குள் இருநூற்றுக்கும் அதிகமான உயிர்கள் பலி – பிள்ளைகளின் உயிர் பற்றி அக்கறையில்லாமல் யாழ்ப்பாண பெற்றோர் !

ஒரு மாதத்திற்குள் இருநூற்றுக்கும் அதிகமான உயிர்கள் பலி – பிள்ளைகளின் உயிர் பற்றி அக்கறையில்லாமல் யாழ்ப்பாண பெற்றோர் !

 

பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி செல்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவிடம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகம் பணித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த ஆளுநர், பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லும் பெற்றோர் உள்ளிட்ட எவரும் மாணவர்களுக்கு தலைக்கவசம் அணிவிக்காது ஏற்றிச் செல்வதாக முறையிடுகின்றனர். குறிப்பாக மருத்துவர்களால் இந்த விடயம் அதிகளவில் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. தலைக்கவசம் அணியாது பயணிப்பதால் விபத்துக்களில் மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர் எனவும் தெரிவித்தார்.

எனவே, சட்டம் ஒழுங்கைப்பேணும் வகையில் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவும். மாணவர்களை அவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிச் செல்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் கோரினார்.

அதற்கு யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், இது தொடர்பில் போக்குவரத்துப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும், அதனை இறுக்கமாகப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை இவ்வருடத்தின் ஜனவரி 1 முதல் பெப்ரவரி 7 வரை இடம்பெற்ற வீதி விபத்துகளில் கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

நான் என்ன பேசவேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன் – என்.பி.பி பெண் எம்பி நிலாந்தி

நான் என்ன பேசவேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன் : அதனை டில்வின் சில்வாவோ ஜனாதிபதியோ தீர்மானிக்க முடியாது என்கிறார் என்.பி.பி பெண் எம்பி நிலாந்தி !

ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவோ அல்லது கட்சித் தலைவர் அநுர குமார திசாநாயக்கவோ ஊடகங்களுடன் பேசுவதை நிறுத்துமாறு தன்னை வற்புறுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார். அத்துடன், ஊடகங்களுடன் பேசுவதா இல்லையா என்பது தனது முடிவு என்று தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சி ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

என்.பி.பி பா.உ நிலந்தி கோட்டஹச்சியை ஊடகங்களிடம் வாய் திறக்க வேண்டாம் என என்.பி.பி தலைமை கட்டுப்படுத்துவதாக அண்மையில் பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கட்சி தனக்கு அறிவுறுத்தவில்லை என்று நேற்றைய தினம் பாராளுமன்றத்திலும் பா.உ நிலந்தி கோட்டஹச்சி தெரிவித்துள்ளார்.

நிலந்தி கோட்டஹாச்சி பாராளுமன்றத்தில் இது தொடர்பில் பேசிய போது, தனது கட்சியால் ஊடகங்களுடன் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறியதாக’ கூறும் ஒரு கட்டுரையை அந்த ஊடகம் அதன் ஆங்கில மற்றும் சிங்கள ஊடக தளங்களில் வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்களில் இந்தச் செய்தி பரவலாகப் பரப்பப்பட்டு வருகிறது, அது தவறானது. இதுபோன்ற அடிப்படையற்ற, உறுதிப்படுத்தப்படாத மற்றும் பொய்யான செய்திகளை வெளியிடுவதன் மூலம் எனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளது.

எனவே, இந்த விஷயத்தை விரிவான விசாரணைக்காகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும், இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகள் குழுவிடம் பரிந்துரைக்குமாறு சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

இலங்கை- இந்திய கூட்டு முயற்சியில் திருகோணமலையில் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி – அமைச்சரவை அங்கீகாரம் !

இலங்கை- இந்திய கூட்டு முயற்சியில் திருகோணமலையில் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி – அமைச்சரவை அங்கீகாரம் !

 

திருகோணமலை, சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் 50 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி நிலையமும், இரண்டாம் கட்டத்தில் 70 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் நிறுவுவதற்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த முயற்சியானது இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் இந்தியாவின் தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் (NTPC) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாட்டு அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தில் நடைபெற்ற தாக்குதலால் தேசிய பாதுகாப்புக்கு எந்த சவாலும் இல்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

நீதிமன்றத்தில் நடைபெற்ற தாக்குதலால் தேசிய பாதுகாப்புக்கு எந்த சவாலும் இல்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

 

நேற்று நீதிமன்ற வளாகத்தினுள் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இதனால் தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, இது பொதுவாக குறிப்பிட்ட குழுக்களுக்கு இடையில் இடம்பெறும் சண்டைகள் மோதல்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற அமர்வில் தொடர்ந்தும் இது தொடர்பில் அமைச்சர் விஜேயபால தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“.கடந்த காலங்களில் இவ்வாறான ஒருங்கமைக்கப்பட்ட குழுக்களால் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்றைய தின சம்பவத்தினை அரசு கடும் அவதானத்தினை செலுத்தியுள்ளது. இது குறித்த தேவையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட சில மணி நேரங்களில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இவர் மகரகம பகுதியினை வசிப்பிடமாகக் கொண்ட சமிந்து டில்ஷான் மதுஷங்க கந்தனல் ஆராச்சி என்பவர் பாலவி பிரதேசத்தில் வைத்து மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு சந்தேக நபராக பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, இது பொதுவாக குறிப்பிட்ட குழுக்களுக்கு இடையில் இடம்பெறும் சண்டைகள் மோதல்களே..” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மன்னார் நீதிமன்றத்தின் வெளியில் படுகொலை, கொழும்பு நீதிமன்றத்துக்குள் படுகொலை. சட்டத்தரணியை போன்று வேடமிட்டு கொலையாளிகள் நீதிமன்றத்துக்குள் செல்கிறார்கள். இந்த செய்தி சர்வதேசத்துக்கு சென்றால் யார் நம்பிக்கையுடன் இலங்கைக்கு வந்து முதலீடு செய்வார்கள். கடந்த காலங்களை பற்றி பேசிக்கொண்டிருக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

39 பேரை சுட்டுத்தள்ளிய ரவுடி : போதைப்பொருள் கடத்தல்காரர் கனேமுல்ல சஞ்சீவவின் உடல் அநாதையாக கிடக்கிறது – மனைவி கூட பார்க்க வரவில்லை !

39 பேரை சுட்டுத்தள்ளிய ரவுடி : போதைப்பொருள் கடத்தல்காரர் கனேமுல்ல சஞ்சீவவின் உடல் அநாதையாக கிடக்கிறது – மனைவி கூட பார்க்க வரவில்லை !

 

புதுக்கடை இலக்கம் 5 நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவியல் கும்பல் தலைவர் கனேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை உரிமை கோர இதுவரை யாரும் முன்வரவில்லை என்று வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கனேமுல்ல சஞ்சீவ, சுட்டுக்கொல்லப்பட்டு 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. மினுவங்கொடையைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் சகோதரி முன்வந்த போதிலும், அவரது குடும்பப்பெயரில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சடலம் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கனேமுல்ல சஞ்சீவவின் மனைவி உடனிருந்தாலும், அவர் இன்னும் முன்வரவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

கனேமுல்ல சஞ்சீவவின் உடல் தற்போது பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தீர்வுகள் ஏதுமின்றி எட்டு ஆண்டுகளை பூர்த்தி செய்த காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் !

தீர்வுகள் ஏதுமின்றி எட்டு ஆண்டுகளை பூர்த்தி செய்த காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் !

 

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் நேற்றைய தினம் 20.02.2025 கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலயம் மூன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு ஏ 9 வீதியூடாக டிப்போசந்தி வரை நடைபெற்றுள்ளது.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் ஆரம்பமாகி நேற்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்தியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை அதிகளவு புலனாய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் அறிய முடிகிறது.

வட்டுக்கோட்டை முதல் மீதெனியா வரை நாட்டில் சட்டம் ஒழுங்கு பலவீனமானதாக உள்ளது ! பொலிஸாரின் அசமந்தப் போக்கு !

வட்டுக்கோட்டை முதல் மீதெனியா வரை நாட்டில் சட்டம் ஒழுங்கு பலவீனமானதாக உள்ளது ! பொலிஸாரின் அசமந்தப் போக்கு !

 

வட்டுக்கோட்டையில் கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சாதிய அடிபாடுகள், கொள்ளைகள், போதைப் பொருள், கொலைகள், சாதிய வெறியாட்டங்கள் தொடர்பில் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை. பொலிஸார் கைது செய்வதும் விடுவிப்பதும் குற்றவாளிகள் பொலிஸ் நிலையம் சென்று வருவது அவர்கள் மாமியார் வீட்டுக்கு சென்று வருவதாகவே உள்ளது. இதனால் வட்டுக்கோட்டை மக்கள் இந்தக் குருவிக் கும்பல் தொடர்பில் அச்சமடைந்துள்ளனர்.

இவர்கள் தங்களை அப்பிரதேசங்களில் உள்ள ஆலயங்களும் இவர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இவர்களுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மதுவும் கும்மாளமுமாக ஆலயச்சுற்றாடலில் மேற்கொள்ளப்படுகின்றது. பொலிஸாருக்கும் இக்குற்றவாளிகள் யார் என்பது மிகத் தெளிவாகத் தெரியும். ஆனாலும் பொலிஸார் குற்றவாளிகளோடு சேர்;ந்து இயங்குகின்றார்கள் என்ற காரணத்தினால் வட்டுக்கோட்டை மக்கள் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயங்குகின்றனர்.

அதேபோல் மீதெனிய பொலிஸ் பிரிவில் பெப்ரவரி 19இல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் வட்டுக்கோட்டை, மீதெனியாவைத் தாண்டி நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகின்றது. அடிபாடுகள், குழு மோதல்கள், கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போதைவஸ்து கடத்தல் என கிரிமினல் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் கிரிமினல் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அதற்கான தண்டனை வழங்கப்படாமல் அவர்கள் தப்பிக்க வைக்கப்படுகின்றனர்.

நாடறிந்த மிக மோசமான பாடசாலை மாணவி வித்தியா மீதான மிகக் கொடுமையான மிருகத்தனமான பாலியல் வன்புணர்வுச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாலியல் வெறிகொண்ட தமிழ் ஆண்கள். சுவிஸ் குமார் உட்பட்ட இந்த மோசமான குற்றவாளிகள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது தமிழ் பொலிஸ் அதிகாரியான சிறிகஜன் மற்றுமொரு சிங்கள பொலிஸ் அதிகாரி இருவருமாக சுவிஸ் குமாரைத் தப்ப வைத்துள்ளனர்.

இவர்களுக்கு எதிராக வவுனியா நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டணை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. தமிழ் பொலிஸ் அதிகாரியான சிறிகஜன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அததைவிட பொலிஸார் மதுபோதையில் கிடப்பதும், கிரிமினல் சக்திகளோடு கூட்டு வைத்திருப்பதும், போதைவஸ்து கடத்தல்களில் அவர்களே ஈடுபடுவதும் பரவலாக நாடு பூராவும் நடைபெறுகின்றது. இதனால் தான் நாட்டில் சட்ட ஒழுங்கு மீறல்கள் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றது.

நீண்ட காலத்தில் இப்பிரச்சினையைத் தீர்பதாக இருந்தால் வேலியே பயிரை மேய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்ட ஆயுதங்கள் வடக்கு கிழக்கில் இருந்து கொழும்பு பாதாளக் குழுக்களைச் சென்றடைகின்றது. இராணுவ ஆயுதக் கிடங்கில் காணாமல் போகும் ஆயதங்களும் பாதாளக் குழுக்களைச் சென்றடைகின்றது. கொழும்பில், மன்னாரில் அண்மையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் இராணுவத்தில் இருந்தவர்கள். நாட்டின் அனைத்து பகுதியில் உள்ள அனைத்து இன, மத குழுக்களைச் சேர்ந்த கிரிமினல்களும் ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தினால் ஆச்சரியப்படுலதற்கில்லை. வட்டுக்கோட்டை குருவிக் கும்பல் கொழும்பில் ஒரு கொலையைச் செய்துவிட்டு சங்கரத்தை பத்திராளி கோயிலில் ஒழிந்துகொள்ளும் ஒரு காலம் இலங்கையில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து வட கடலுக்கு இந்திய மீனவர்கள் போதைப் பொருளைக் கடத்துகின்றனர். வடக்கு போதைப்பொருள் வர்த்தகத்தின் மையமாக மாறி வருகின்றது.

இவையெல்லாம் தற்போது நாட்டில் பெரும் பாதுகாப்புப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதையே எடுத்துக்காட்டுகின்றது. அரச நாட்டின் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நாடு முழமையுமான நடவடிக்கையில் இறங்க வேண்டும். யாழ் இளைஞர்கள் கண்டி வரை சென்று களவுகளில் ஈடுபடுகின்றனர். கொழும்பிலிருந்து வந்து கோப்பாயில் களவெடுக்கின்றனர். இது போதைப்பொருள் கடத்தல், கொலைகளுக்கும் இட்டுச் செல்கின்றது. கொலையில் ஈடுபட்ட இளைஞர்கள் வட்டக்கட்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் பிரிவுகள் மத்தியில் தகவல் பரிமாற்றம் மிக இன்றியமையாதது. மத்தியத்துவப்படுத்தப்பட்ட டிஜிற்றல் இன்ரலிஜென்ஸ் பரவர்த்தனை மையம் அவசியம்.

அதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாணங்களுக்கான இவ்வாறான மையங்கள் அமைக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டும்.

அத்தோடு வன்முறையாளர்கள் வன்முறைத் தாக்குதலை கண்மூடித்தனமாக நடத்திவிட்டு பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி சமாதானமாகப் போகக் கோருகின்றனர் என சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்துவரும் அருண் சித்தார்த். வட்டுக்கோட்டையில் சாதிய வெறித் தாக்குதலை நடத்தியவர்கள், குழு வன்முறையில் ஈடுபட்டவர்கள் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திவிட்டு பின் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரில் முறைப்பாடு செய்யவிடாமல் தடுக்கின்றனர். சமாதானமாக வரும்படி வற்புறுத்துகின்றனர். இவ்வாறான அழுத்தங்கள் வட்டுக்கோட்டையில் இடம்பெற்றுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இது காணப்படுகின்றது.

கிரிமினல் குற்றமென்பது தனிநர்களுக்கு எhதிரானதானாலும் அது அரசுக்கும் எதிரானது. அந்நாட்டின் பிரஜைக்கு எதிரானது. தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தால் அத்தாக்குதலின் அடிப்படையில் பொலிஸார் பாதிக்கப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமலேயே மூன்றாம் தரப்பின் தகவல் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின் தன்னை நிரபராதியாக்க வேண்டிய பொறுப்பு குற்றசம்சாட்டப்பட்டவருடையதாக வேண்டும். அவ்வாறான வகையில் நீதித்துறை மறுசீரமைக்கப்பட வேண்டும். குறிப்பாக பெண்கள் விடயத்தில் தன்னை நிரபராதியாக்க வேண்டிய பொறுப்பு குற்றம்சாட்டப்பட்டவருக்குரியதாக இருக்க வேண்டும்.

அவ்வாறு கொண்டு வரும்பட்சத்திலேயே யோகேஸ்வரி முத்தையா மற்றும் தர்மிகா கேதீஸ்வரன் ஆகிய சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு நியாயம் கிடைக்கும்.

மேலும் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குவது மட்டுமல்ல அதற்கு ஏற்பட்ட செலவையும் அவர்களே செலுத்துகின்ற வகையில் தண்டனைகள் வடிவமைக்கப்பட வேண்டும். சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சமூக சேவைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். அவர்களது நன்னடத்தைச் சான்றிதழ் வரும்வரை அவர்கள் கட்டான வேலைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இவ்வாறான பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கும் வகையிலான சட்ட சீர்திருத்தங்களை சட்டவாக்காளர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் வைக்கவேண்டும்.

மேலும் பொது மக்கள் அனாமதேயமாக தகவல்களை வழங்குவதற்கான வாய்ப்பினை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மக்களுக்கு பொலிஸார் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முழுமுயற்சி எடுக்க வேண்டும்.

ஈழத்து பெரியாரிஸ்ட் அருண் சித்தார்த் பெரியாருக்கு அம்பேக்காருக்கு சிலை எழுப்புகின்றார். ஏன்?

ஈழத்து பெரியாரிஸ்ட் அருண் சித்தார்த் பெரியாருக்கு அம்பேக்காருக்கு சிலை எழுப்புகின்றார். ஏன்?

ஈழத்து பெரியாரிஸ்ட், கலகக்காரன், ‘எனக்கு ஒரு கனவு இருக்கின்றது’ எனச்சொல்லும் அருண் சித்தார்த்துடன் ஒரு நேர்காணல்