பிரபாகரனே தமிழர்களை துப்பாக்கி முனையிலேயே ஒற்றுமைப்படுத்தினார் ! தமிழ் தேசியத் தலைவர்கள் ஒற்றுமைப்படுவார்களா ?
அரசியல் சமூக செயற்பாட்டாளர் முல்லைமதியுடன் நேர்காணல்
பிரபாகரனே தமிழர்களை துப்பாக்கி முனையிலேயே ஒற்றுமைப்படுத்தினார் ! தமிழ் தேசியத் தலைவர்கள் ஒற்றுமைப்படுவார்களா ?
அரசியல் சமூக செயற்பாட்டாளர் முல்லைமதியுடன் நேர்காணல்
இலங்கையில் கொழும்பு மாவட்டத்தில் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 3 ஆயிரத்து 549 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு வெறுமனே 50 நபர்கள் வசிக்கின்றமை குடித் தொகை மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆக பதிவாகியுள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024″ அறிக்கை நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாகிய 15 ஆவது தேசிய சனத்தொகை கணக்கெடுப்பு 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் நிறைவு செய்யப்பட்டது. இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் சனத்தொகை 14 இலட்சம் அதிகரித்துக் காணப்படுகின்றது. சனத்தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் சனத்தொகை வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகின்றது.
28.1 சதவீதத்துடன் மேல் மாகாணம் அதிக சனத் தொகை கொண்ட மாகாணமாக 5.3 சதவீதம் பேருடன் வடக்கு மாகாணம் குறைந்தளவான 11 இலட்சத்து 50 ஆயிரம் சனத்தொகையைக் கொண்ட மாகாணமாக பதிவாகியுள்ளது. 24 இலட்சத்து 34 ஆயிரம் பேருடன் கம்பஹா மாவட்டம் சனத்தொகையில் முதலிடம் பிடித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு (ஒரு இலட்சத்து 23 ஆயிரம் ), மன்னார் (ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ), கிளிநொச்சி (ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ) மற்றும் வவுனியா (ஒரு இலட்சத்து 72 ஆயிரம் ) ஆகிய மாவட்டங்கள் மிகக் குறைந்தளவான சனத்தொகை கொண்ட மாவட்டங்களாகத் தொடர்ந்து காணப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டம் 2.23 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது, அதேவேளை வவுனியா 0.01 சதவீதத்துடன் மிகக் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளது.
கிழக்கு மாகாணம் 17 இலட்சத்து 82 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டமாக உள்ளது. மட்டக்களப்பு 6 இலட்சம் மக்களையும் அம்பாறை 7 இலட்சத்து 44 ஆயிரம் மக்களையும் திருகோணமலை 4 இலட்சத்து 44 ஆயிரம் மக்கள் தொகையையும் கொண்ட மாவட்டங்களாக உள்ளது.
கனடாவில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் சனத்தொகையைக் காட்டிலும் இரட்டிப்பானது. கனடாவில் தமிழர்களின் எண்ணிக்கை 240,000 முதல் 300,000 ஆக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. 1983க்களில் வெறும் 150 பெயரளவில் மட்டும் இருந்த கனடாவில் 2021இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 140,000 கனடாவில் பிறந்துள்ளனர். கனடாவை அடுத்து பிரித்தானியாவில் அதிகளவான இலங்கைத் தமிர்கள் வாழ்கின்றனர். 2,00,000 தமிழர்கள் பிரித்தானியாவில் வாழ்வதாக மதிப்பிடப்படுகின்றது. இதைவிடவும் அவுஸ்திரேலியா, ஐரோப்பா, ஸ்கன்டிநேவியன் நாடுகளிலும் மொத்தமாக 2,00,000 இலங்கையர்கள் பரந்து வாழ்கின்றனர். அயல்நாடான இந்தியாவில் 1,50,000 தமிழர்கள் உள்ளனர்.
உலகின் மொத்த இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியினரே தமிழர்களின் தாயகப் பிரதேசமாகக் கொள்ளப்படும் வடக்கு கிழக்கில் வாழ்கின்றனர். இன்னுமொரு மூன்றில் ஒரு பகுதியினர் இலங்கைக்கு உள்ளேயே வடக்கு கிழக்கிற்கு வெளியே தென்பகுதியெங்கும் சிதறி வாழ்கின்றனர். இன்னுமொரு மூன்றில் ஒரு பகுதியினர் இலங்கைக்கு வெளியே பெரும்பாலும் மேற்குநாடுகளில் வாழ்கின்றனர்.
யுத்தம் 2009 இல் முடிவுக்கு வராமல் தொடர்திருந்தால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சனத்தொகையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கும். 2020 வரை யுத்தம் தொடர்ந்திருந்தால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இல்லாத பிரதேசங்களாக மாறியிருக்கும். யுத்தம் காரணமாக மக்கள் முற்றாக வெளியேறுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாக இருந்திருக்கும். இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை சமாதானத்தை வலியுறுத்தி 2004இல் தேசம் சஞ்சிகையில் வெளியானது.
பா உ அர்ச்சனா கையில்: ஆசிரியை கல்யாணியின் மோசடிக் குற்றச்சாட்டை மறுக்கின்றார் வடமாகாண பிரதம செயலாளர் இளங்கோவன் !
ஆசிரியை கல்யாணி திருநாவுக்கரசு பா உ அர்ச்சுனாவோடு தன்னுடைய ஓய்வூதியத்தை மோசடி செய்துவிட்டார் என்று முன்வைத்த குற்றச்சாட்டை வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன் மறுத்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே திரு இளங்கோவன் இந்த மறுப்பினை வெளியிட்டார். வடமாகாணசபை மீதும் தன்மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் வடமாகாண ஆளநரின் அனுமதியோடு இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து தன்மீது தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு மறுப்புத் தெரிவிப்பதாக அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“என்னுடைய பென்சன் 27 இலட்சத்தை பிரதம செயலாளர் இளங்கோவன் கள்ளக்கையெழுத்திட்டு சூறையாடிவிட்டார் “ ஆசிரியை கல்யாணி நேரடியாகத் தன்னுடைய குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
பா உ இராமநாதன் அர்ச்சுனாவின் முன்நிலையில் இக்குற்றச்சாட்டு யூரியூப்பர்ஸினால் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தேசம்நெற் உம் அக்காணொலியை வெளிட்டதுடன் பிரதம செயலாளர் இது தொடர்பபில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தது. இது தொடர்பிலேயே பிரதம செயலாளர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் விளக்கமளித்த பிரதம செயலாளர் இளங்கோவன் திருநாவுக்கரசு கல்யாணி அவர்களை தாங்கள் நன்கு அறிவோம் என்றும் அவருடைய கோரிக்கைகள் நீண்ட வரலாற்றைக் கொண்டது என்றும் குறிப்பிட்டு தங்களுடைய ஆவணங்களின் படி அவருடைய நிதி நிலுவைகள் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் விளக்கமளித்த பிரதம செயலாளர் இளங்கோவன் திருநாவுக்கரசு கல்யாணி அவர்களை தாங்கள் நன்கு அறிவோம் எனக்குறிப்பிட்டார். அவருடைய கோரிக்கைகள் நீண்ட வரலாற்றைக் கொண்டது என்றும் குறிப்பிட்டு தங்களுடைய ஆவணங்களின் படி அவருடைய நிதி நிலுவைகள் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டதாகவும் இளங்கோவன் சுட்டிக்காட்டினார். இதற்கு தான் தன்னுடைய வெளிப்படையான பதிலை ஓய்வு பெற்ற பின்னரேயே தெரிவிக்க முடியும் என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆசிரியை கல்யாணி திருநாவுக்கரசுவின் குற்றச்சாட்டை ஆராய 18 ஆண்டுகள் கடந்த நிலையில் மேலுமொரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பா உ இராமநாதன் அர்ச்சுனா இது தொடர்பில் தான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன் என்றும் உறுதி அளித்து இருந்தார். அரச சேவைகளில் முடிவெடுப்பதில் உள்ள தாமதங்களைக் கருத்தில் கொண்டு இவ்வாறான சிக்கலான விடயங்களை சில மாதங்களுக்கு உள்ளாகத் தீர்தது வைக்க அரசு முயற்சிக்க வேண்டும் 18 ஆண்டுகள் என்பது மிக அநியாயமான நீண்ட காலம்
ஆசிரியை கல்யாணி திருநாவுக்கரசுடைய இப்பிரச்சினை நேரடியான விடயமல்ல. அதில் நிறையச் சிக்கல்கல் உள்ளது. அதனால் நிர்வாகத் தடைகளும் அதிகம் உள்ளது. ஆனாலும் இதனை ஆராய்ந்து ஆசிரியை கல்யாணி குறிப்பிடுகின்ற விடயங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை விரைவில் பெற்று அவருடைய கோரிக்கையை மனிதாபிமானத்தோடு நோக்க வேண்டும். அதேசமயம் பிழையான முன்ணுதாரணங்களை ஏற்படுத்தாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இக் காணொலியில் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சிகள் ஸ்ரிற் ஒப் ஈழம் என்ற காணெலித் தளத்தில் இருந்து பெறப்பட்டது. அவர்களுக்கு நன்றி.