குடும்ப வன்முறையும் சமூகத் தனிமைப்படுத்தலும் தாயையே குழந்தைகளைக் கொல்வதை நோக்கித் தள்ளியது நீதிபதி பிரைன் பாக்கர் :

Sanjayan NavaneethanSarani Navaneethanகுடும்ப வன்முறை சமூகத் தனிமைப்படுத்தல்’ போன்ற காரணங்களே சசிகலா நவநீதன் தனது குழந்தைகளைக் கொலை செய்வதை நோக்கித் தள்ளியதாக வழக்கின் நீதிபதி பிரைன் பார்க்கர் தெரிவித்துள்ளார். ‘இது மிகவும் மனவருத்தமான கொடுமையான நிகழ்வு’ என்று தெரிவித்த நீதிபதி, ‘நீர் அந்த நேரத்தில் நீரும் உமது குழந்தைகளும் இறப்பதே மேல் என்று நம்பி உள்ளீர்கள். நீர் குடும்ப வருமானம், ஒழுக்கமற்ற உறுவு, குடும்ப வன்முறை சமூகத் தனிமைப்படுத்தல் ஆகியவற்றை கவனத்தில் எடுத்தள்ளீர். உம்முடைய மனக் குழப்பமும், நீர் எடுத்த நடவடிக்கையும் வெளியில் உள்ள ஒருவருக்கு விளங்கிக் கொள்ள முடியாது’ எனத் தெரிவித்தார். தாய்மைக்கால மன உளைச்சலால் தனது குழந்தைகளைக் கொலை செய்த சசிகலா நவநீதனின் வழக்கில் தீர்ப்பளிக்கையில் நீதிபதி அவ்வாறு தெரிவித்தார். காலவரையறையற்று சசிகலா நவநீதன் மனநோயாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு உடன்பட்டு உள்ளார்.

‘என்னைச் சுட்டுக் கொல்லுங்கள்’ தாய்மைக்கால மனஉளைச்சல் காரணமாக தன்னிரு குழந்தைகளினதும் தொண்டையில் வெட்டியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த தாய் சசிகலா நவநீதன் கதறினார். தான் தன் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறிய அவர் தன்னைச் சுட்டுக் கொல்லுமாறு பொலிசாரை மன்றாடினார். சசிகலா நவநீதன் தனது குழந்தைகளான சன்ஞயன் (5), சாராணி (4), ரிசானா (6 மாதம்) ஆகிய தன் மூன்று குழந்தைகளையும் கொலை செய்ய முற்பட்டு இருந்தார். அதில் சன்ஞயன், சாரணி இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் லண்டன் புறநகர்ப் பகுதியான கார்ஸ்கால்ரன் என்ற இடத்தில் இருந்த அவர்களின் வீட்டில் சென்றவருடம் மே 30ல் இடம்பெற்றது.

மருத்துவர்களின் போராட்டத்தின் பின் ரிசானா உயிர் தப்பினார். ரிசானாவும் ஜனவரியில் நவநீதன் சசிகலாவின் நான்காவது குழந்தையும் அவர்களுடைய தந்தை நவராஜா நவநீதனுடன் வாழ அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

20 யூலையில் ஓல்ட் பெயிலி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த சசிகலா நவநீதன், சொந்தமாகக் கடை வைத்திருந்து அதில் பணியாற்றிய கணவர் நவராஜா நவநீதன் திருமணத்திற்குப் புறம்பான உறவை வைத்திருந்தார் என்றும் தன்னை அடிப்பதாகவும் தனது தலையில் ஒலித்த யாருடையதோ குரல்கள் அதனை தான் நம்பும்படி உணத்தியதாகவும் தெரிவித்தார்.

சன்ஞயன் சாரணி ஆகியோரின் கொலைகளை புரிந்ததாகவும் ஆனால் தன்னுணர்விற்கு அப்பாற்பட்டு (diminished responsibility) நடந்ததாகவும் ரிசானா மீதான கொலை முயற்சியையும் ஏற்றுக்கொண்டார்.

சம்பவம் இடம்பெற்றதற்கு ஒரு மாதத்திற்கு முன்னிருந்து குழந்தைகளைக் கொலை செய்யும்படியாக அந்தக் குரல்கள் தனது தலையில் ஒலித்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்த சசிகலா சம்பவதினமும் அந்தக் குரல்கள் மீண்டும் ஒலித்தாகவும் அன்று தான் அந்தக் குரல்கள் கூறியபடி நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

Funeral_of_the_Childrenசசிகலா சார்பில் ஆஜரான கியூசி டேவிட் எதரிங்ரன், ‘சசிகலா தனது காலாச்சார காரணங்களுக்காக தனக்கு ஏற்பட்ட உடற்காயங்களை மருத்துவருக்கு காட்டினார். ஆனால் தனது மனநிலையை வெளிப்படுத்தவில்லை’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘தனது வாழ்க்கையில் இனிமேல் எவ்வித அர்த்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்த சசிகலா தனது குழந்தைகளை தனது கணவனுடன் விட்டுச் செல்லவும் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார். ‘தற்போது அவர் தான் மிகப் பயங்கரமான விடயத்தைச் செய்திருப்பதை அறிய வந்துள்ளது. அவர் அப்போதும் மிக நோயாளியாக இருந்தார். இப்போதும் அவர் மிகவும் நோயாளியாகவே உள்ளார்’ என கியூசி டேவிட் எடிங்ரன் நீதிமன்றில் தெரிவித்தார்.

சம்பவம் பற்றி நவநீதன் பொலிஸாருக்கு அவசர அழைப்பை விடுத்தார். தனது மனைவி குழந்தைகளைக் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்தார். பொலிஸார் வந்ததும் நவநீதன் மனைவி கொலைக்குப் பயன்படுத்திய கத்திகளை கட்டில் மெத்தைக்குக் கீழ் வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். வீட்டைச் சோதணையிட்ட பொலிஸார் கட்டில் மெத்தைக்குக் கீழிருந்த 3 கத்திகளையும் ஒரு கடிதத்தையும் நவநீதன் சசிகலாவிற்கு தங்கள் திருமணத்தின் ஞாபகார்த்தமாக வழங்கிய நெக்லஸையும் கண்டெடுத்தனர்.

அக்கடிதத்தில் நவநீதனுக்கு ‘திருமணத்திற்குப் புறம்பாக இரு உறவுகள்’ இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்ததுடன் ‘நான் கண்ணீர் வர அழுது புலம்புகின்றேன்’, ‘உதவிக்கு யாரும் இல்லை’, ‘நாங்கள் எல்லோரும் இறப்பதே நல்லது’ போன்ற வரிகள் இருந்தது.

பொலிஸார் கைது செய்வதற்கு முன்னர் தனக்கு வாழ விருப்பமில்லை தன்னை கொலை செய்யுமாறு சசிகலா பொலிஸாரைக் கேட்டுக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்கொலை செய்யும் முயற்சியில் எலிகளைக் கொல்வதற்கு வைக்கின்ற மாத்திரைகளை தான் உட்கொண்டாதகவும் சசிகலா பொலிஸாருக்கு தெரிவித்து இருந்தார்.

1999ல் இங்கிலாந்து வந்த சசிகலாவை இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தமும் பாதித்து இருந்தது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு யுத்தம் தொடர்பான கெட்ட கனவுகள் வந்து போயிருந்ததாகவும் பழைய சம்பவங்கள் மீண்டும் வந்து சென்றதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டு இருந்தது.

சசிகலாவை பரிசோதணை செய்த மூன்று மருத்துவர்களும் அவர் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததை உறுதிப்படுத்தி இருந்தனர்.

Rita Ariyaratnam with her childrenஇச்சம்பவத்திற்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சம்பவத்திலும் தனது குழந்தைளுடன் தற்கொலை செய்ய முற்பட்ட தாய் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டார். குழந்தைகள் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்திற்கு முன்னர் கனடாவைச் சேர்ந்த இளம்தாயொருவர் தனது கணவனது இறப்பைத் தாங்க முடியாமல் தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்ய முயன்றார். இச்சம்பவத்தில் பிள்ளைகள் உயிரிழந்தனர். தாய் காப்பாற்றப்பட்டார்.

Show More
Leave a Reply to BC Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • Naane
    Naane

    எனக்கு இதை பார்க்கவே தலையை சுற்றுகின்றது என்ன நடக்கின்றது எமது சமூகத்தில் இதற்கு ஒரு விடிவே இல்லையா/

    Reply
  • mathy
    mathy

    நீதிபதியின் முடிவு வரவேற்கத்தக்கது. தமிழ் மக்கள் இதனை புரிந்து கொள்ளவேண்டும். சமூக விரோத செயல்களுக்கு ஊக்கியாக இருப்போம்.அது எங்களுக்கு எதிராக திரும்பும் பொழுது எதை ஆதரித்தோமோ அதை எதிர்ப்போம். ஆணிய சமூகத்தில் பெண்கள் மீது கட்டற்ற வன்முறைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. அதனை எதிர்க்க துணிவற்று பெண்கள் தற்கொலைகள் மேற்கொள்ளும் போது அதனை கண்டிப்போம். தற்கொலை கலாச்சாரத்தை ஆரம்பித்தவர்களே இந்த ஆண்கள் தான். ஆண்கள் சமூக சக்திகளாக இருக்கும் வரை இது தொடரத்தான் செய்யும். நானறிந்தவரை கனடாவில் நடைபெற்ற சம்பவங்களிலும் இது போன்ற தீர்ப்புக்களை தான் நீதிபதி வழங்கியுள்ளார்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    ஐயோ…ஐயோ என்ன கொடுமையை ஐயா இது. இது கூளுக்கும் ஆசை மீசைக்கு ஆசை என்ற கணக்காய் இருக்கிறது. கிளிமாதிரி ஒரு மனைவி இருந்தாலும் கரிக்குருவிமாதிரி ஒரு சின்னவீடு கட்டாயம் வேண்டும் என்ற கலாச்சார காதலரா நவநீதன். கடை வைத்திருப்பவர்களுக்கு ஒய்வு என்பதே கிடையாதே. சின்னவீடுகளுக்கு எப்படிப் போய்வருவது. அது சரி அதுக்கு நேரங்காலம் ஏது. மூளை என்பது மிக முக்கியமானது அது தவறினால் எல்லாம் தலைகீழுதான்

    Reply
  • BC
    BC

    எனக்கும் இதை படித்து தலை சுத்துது. திருமணத்திற்குப் புறம்பான உறவு என்றால் அது புலத்திலும் புலம் பெயர்ந்த இடத்திலும் ஏற்கெனவே உள்ளவை தானே!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நேற்றைய தமிழ்ஓசை செய்தி. மணைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன் விடுதலை. காரணம் தூக்கத்தில் அவர் என்னசெய்வது என்பது தெரியாது இவருக்கு என்று வைத்தியர்கள் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். நீதிபதிகளும் அதை ஆமோதிதிருக்கிறார்கள். சந்தேகங்கள் கூடா ஒரு மனவியாதி தானே! மனிதநேயம் மறந்து பொருள்தேடுகிற மூலதன சமுதாயத்தில் தானே நாம் வாழுகிறோம். இதை முன்னமே இனம் கண்டு சிகிச்சை செய்யாதது கணவனின் தவறே!
    “துட்டை வைச்சிட்டு போகிற இடத்தை போ” என்று என்மணைவியைப் போல் எத்தனை மணைவிமாரால் வாழமுடியும்?. இங்கு மனத்தையிரியமே முக்கியமானது. இரண்டு கார். இரண்டு வீடு. இரண்டு மணைவி. இரண்டு கணவன் இதெல்லாம் பாஷனாக மாறிவருகிறது என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

    Reply
  • palli
    palli

    //துட்டை வைச்சிட்டு போகிற இடத்தை போ” என்று என்மணைவியைப் போல் எத்தனை மணைவிமாரால் வாழமுடியும்?. இங்கு மனத்தையிரியமே முக்கியமானது. இரண்டு கார். இரண்டு வீடு. இரண்டு மணைவி. இரண்டு கணவன் //
    சந்திரா இது புரியவில்லை; இதை நியாயபடுத்துகிறீர்களா? அல்லது அநீதி என சொல்லுகிறீர்களா??

    Reply
  • Sabes Sugunasabesan
    Sabes Sugunasabesan

    This is a serious issue and Jayabalan has reported sensitively. My thoughts are with with Sashikala, her children and all those who are affected.

    Depression before and after birth of children in some women is a common occurance and understaning and support during this period is important. Ante Natal/ postnatal depression some times can last for a longer period.

    If people don’t know what to do they should seek advice at their nearest Sure Start Children’s Centre. Children’s Centres would be able to give support to the family , introduce the mother to other mothers as company and introduce to Phsychology Services.

    During Pregnancy the maternity service would organise antenatal classes to which both mother and the father can attend. As this is a life changing period of a couples life the antenatal classes cover many areas that would prepare the couple for the change.

    Sure Start Children’s Centres can advice about where and when the antenatal classes take place. Doctors and Midwives will able to refer to the necessay services and after birth Health Visitors also can advice.

    Everybody have some level of mental health issues and there is no need to be shy and secretive about this. Like in many communities mental health issues are seen as a taboo- not talked about issue in the Tamil community too. No one is alone when it comes to mental health problems. Talk to someone!

    It is really imporatant to take some time off from our busy lives to pay attention to our mental health.

    Reply
  • Uma
    Uma

    இந்தக் குடும்பத்தில் பாதிக்கப்பட்ட தாய்க்காக மனம் வருந்துகிறேன். சுகுணசபேசன் கருத்து மிகச் சரியானது. 5 வயது 4 வயது 6மாதக் குழந்தையுடன் தாயின் வயிற்றில் அடுத்த குழந்தை. மன அழுத்தத்தின் உச்சத்தில் தாய் இருந்திருப்பாள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை. கணவர் உதவி கிடைக்காதது மட்டுமல்ல இவர்களுடன் இருந்த தாயின் தம்பி > குழந்தைகளின் மாமனார் >கணவரால் சம்பவத்திற்கு சில மாதங்கள் முன் வெளியேற்றப்பட்டார் எனவும் குழந்தைகளின் இறுதிச் சடங்கில் மாமனே கதறி அழுததாகவும்> தகப்பன் பேசாமல் நின்றதாகவும் கேள்விப்பட்டேன். மேலும் தகப்பன் குழந்தைகளின் முன்பே தாயுடன் தப்பாக நடந்ததாகவும் கேள்விப்பட்டேன். இவருக்கு வேறுஉறவும் இருப்பதாக லண்டன்குரலில் பார்ததேன். இன்று சட்டத்தின் முன்பாக தகப்பனிடம் குழந்தைகள் கையளிக்கப்பட்டுள்ளது. மனைவியையே கவனிக்க முடியாதவர் கையில் இரு கைக்குழந்தைகள். வாசித்ததும் மனதில் சட்டென வலித்ததால் இதை எழுதினேன். இதில் வாதங்கள் வேண்டாம்.

    குழந்தை பிறப்பதற்கு முன்பும் பின்புமான மன அழுத்தங்களால் பாதிக்கப்படும் பெண்கள் > எம்மவரில் மிக மிக அதிகம். காரணம் உதவிகள் குறைவு. உறவினர் குறைவு. நாம் சமுதாயமாக இல்லை. இது கணவர்மாருக்கே புரிவதில்லை. கதைப்பதற்கு ஆளில்லை .எம்மவர் பலரில் நான் கண்டது. > தாய்மை சம்பந்தமான வகுப்புகள் மகப்பேற்று வகுப்புகளுக்கு தகப்பனின் பங்கை காணமுடியாது. அவர்கள் தனியே அல்லது சிநேகிதங்களுடன் சிலர் உறவுகளுடன் வரவே நான் கண்டதுன்டு. கணவர்மாருடன் சேர்ந்து வருபவர்கள் மிகமிகச் சொற்பம். பல தகப்பன்மார் குழந்தைகளின் கக்காகூட துப்பரவு பண்ண மாட்டார்கள். இந்தா மணக்குது மாத்து என்று கத்துவார்கள். முதலில் குடும்ப வாழ்வினுள் நுழைபவர்கள் கணவன் மனைவி இருவரும் குழந்தைப் பராமரிப்பு பற்றி குழந்தை பெறமுதலே பயிற்சி பெறவேண்டும். இது ஒன்றும் பிழையானதோ சங்கடப்படும் விடயமோ அல்ல. இதற்கென நேரம் ஒதுக்கி சிந்தித்து செயற்படுங்கள். பலவகையான அழுத்தங்கள் பிச்சினைகள் வருவதைக் குறைக்கும்.

    During Pregnancy the maternity service would organise antenatal classes to which both mother and the father can attend. As this is a life changing period of a couples life the antenatal classes cover many areas that would prepare the couple for the change.

    It is really imporatant to take some time off from our busy lives to pay attention to our mental health. //Sabes Sugunasabesan

    Reply
  • nm
    nm

    தனது தலையில் ஒலித்த யாருடையதோ குரல்கள் அதனை தான் நம்பும்படி உணத்தியதாகவும் தெரிவித்தார்.

    சம்பவம் இடம்பெற்றதற்கு ஒரு மாதத்திற்கு முன்னிருந்து குழந்தைகளைக் கொலை செய்யும்படியாக அந்தக் குரல்கள் தனது தலையில் ஒலித்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்த சசிகலா சம்பவதினமும் அந்தக் குரல்கள் மீண்டும் ஒலித்தாகவும் அன்று தான் அந்தக் குரல்கள் கூறியபடி நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

    Please think about it ,it is verry importent

    Reply
  • Mohan
    Mohan

    பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் மனைவிமாரின் கள்ளக் காதலினர்களால் பாதிக்கப் பட்டவர்கள் எத்தனையோ பேர். எனது நண்பன் தனது மனைவியின் கள்ளக் காதல் தொடர்பை அறிந்தும் மனைவியை ஒன்றும் செய்யாமல் தானே தனது மண்டையையும் கையையும் சுவரில் அடித்து தன்னை காயப்படுத்தினர். காரணம் பிள்ளைகளை நினைத்தும் வெளியில் தெரிந்தால் அவமானம் என்றும். இன்றும் பலவருடங்கள் ஆகியும் மனைவியின் காதல் தொடர்கிறது. வெளியில் பார்பவர்களுக்கு இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் போல் தெரியும். பெற்றோரின் தவறுகளினால் பாதிக்க படுவது பிள்ளைகளே. சிலர் பிள்ளைகளுடன் தற்கொலை செய்கிறார்கள் சிலர் பிள்ளைகளுக்காக தங்கள் வாழ்க்கையை அளித்து மௌனம் ஆகிவிடுகிறார்கள். இதை விட மேலானது ஐரோப்பியர்கள் போல் தங்கள் பிரச்சினைகளை வெளிபடையாக பேசி பிரிந்து வாழ்வதே.

    Reply
  • chola
    chola

    மனநல மருத்துவரிடம் போகவேண்டியவர்கள் பின்னூட்டக்காரரான நாங்களே! ஒரு பிரச்சினையின் ஆழம் புரியாமல் மேலோட்டமாக பகிடி நக்கல் எழுதுமளவிற்கு எங்கள் மனங்கள் விகாரமாகி வருகின்றன.
    தயவுசெய்து இவ்வாறான பிரச்சினைகளை அலசவிரும்புபவர்கள் சம்பந்தப்பட்டவர்களை தவிர்த்து விடயங்களையும் சூழலையும் மட்டும் பாருங்கள்! ஊகங்களை வைத்து வம்பளப்பதை அரசியலோடு மட்டும் நிறுத்திக்கொள்வோம்.

    Reply
  • mathy
    mathy

    இதனை ஒரு நகைச்சுவைக்குரிய பிரச்சினையாக கருதமுடியாது. போட்டிக்கு போட்டியாக ஆண்களும் பாதிக்கப்படுகின்றார்கள் என “நீயா நானா” பாணியில் கூறுவதை தவிர்க்க வேண்டும். கலாச்சாரம்-பண்பாடு எல்லை போடும் திருமண பந்தம் மீதான பல கேள்விகள் எழுகின்றன. ஆண்கள் தங்களது ஆணாதிக்க சிந்தனையில் இருந்து வெளியே வந்து பிரச்சினையை அணுக வேண்டும்.

    Reply
  • Saturn
    Saturn

    அரசியலில் வம்பளப்பதும் தனி மனிதர்களின் தலை விதியில் வம்பளப்பதும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இந்த சம்பவத்தில் இருந்து தனிப்பட்ட ரீதியில் ஒன்று மட்டும் தான் எடுத்துக் கொள்ள முடியும்.
    இந்த நீதிபதியின் தீர்ப்புக்கான வாதத்தில் இருந்து இந்த துன்பமான சம்பவத்தினை விளங்கிக்கொள்ள முடியாது அத்துடன் உணர்சி வசப்படுதல் மூலமும் ஒன்றிலும் தெளிவாக முடியாது. இதே மாதிரியான நிலையில் இருப்பவர்கள் உடனடியாக உதவிகளை பெற்றுகொள்ள வேண்டும். நண்பர்கள் மத்தியில் எதாவது கவனிக்க முடிந்தால் தலை இட்டு உதவி செய்ய வேண்டும். இது குத்து வெட்டுக்களை உருவாக்கினாலும் அதற்கு பொறுப்பு எடுக்க வேண்டும்.
    சமூக ரீதியில் புலம் பெயர்ந்தோர் வாழும் நாடுகளில் பெண்களின் நிலைமைகள் ஒப்பிடளவில் சுதந்திரமாக இருந்தாலும் தொடர்சியாக சமூகத்தின் பலம் குறைந்த தட்டாகவே பெண்கள் இருக்கின்றனர். ஆசியப் பெண்களை பொறுத்தளவில் நிலப்பிரபுத்துவ கலாசாரத்தின் மிச்சங்களால் மேலதிக கட்டுப்பாடுக்குள் வாழவேண்டிய நிலைக்குள் தள்ளப்படிருகிரர்கள். தனி சொத்துடமை இருக்கும் மட்டும் பெண் அடிமைத்தனம் உட்பட்ட அனைத்து ஒடுக்கு முறைகளும் இருக்கும். இதை வரட்டு சித்தாந்தம் என்று நிராகரிக்க விரும்பாதவர்கள், ஏங்கல்ஸ் எழுதிய “அரசு, குடும்பம், தனிசொத்து” என்ற புத்தகத்திலிருந்து தொடங்கலாம்.

    The Origin of the Family, Private Property and the State. Friedrich Engels
    Link for the English text: http://www.marxists.org/archive/marx/works/1884/origin-family/index.htm

    August Bebel “பெண்ணும் சோசலிசமும்” [Woman and Socialism] என்ற புத்தகத்தில் பெண் ஒடுக்குமுறையின் வேர்கள் எங்கிருந்து தொடங்குகின்றன என்பதை தெளிவாக விளங்கப்படுத்தி இருக்கின்றார்

    [Among the ruling classes the wife is frequently degraded, just as she was in ancient Greece, to the mere functions of bearing legitimate children, acting as house-keeper, or serving as nurse to a husband ruined by a life of debauchery. For his amusement, or to gratify his desire for love, the man maintains courtesans or mistresses who live in elegance and luxury.]

    இந்த புத்தகம் தமிழில் இருக்கின்றதா என்பது எனக்கு தெரியவில்லை. நீங்கள் ஆங்கிலத்தில் வாசிகக விரும்பினால்:
    http://www.marxists.org/archive/bebel/1879/woman-socialism/index.htm

    Reply
  • Ajith
    Ajith

    Editor, I read your article and it seems you are acting as a lawyer to the accused. There is no question that it is a sad and tragic incident but you should tell the news as it is and not write your interpretation as judmement and witness statement as judgement. You are trying to create a havoc among tamil speaking people who live peacefully in this country. Please find below the article which gives English version of judgement: guardian.co.uk, Monday 20 July 2009 14.50 BST
    Dr Paul Chesterman said she had reacted to her domestic situation, sense of isolation and because of her mental illness.
    Note that Dr. Chesterman is a doctor, but you said in your article as Judge Brian Barker told this. Again you translated domestic situation as domestic violence.
    Below is the judge statement
    Judge Brian Barker, told Navaneethan: “This is a profoundly sad and tragic case. It seems to me your turmoil and your actions are virtually impossible for an outsider to understand. This is the case of a sick person who continues to be sick now. You need treatment rather than punishment.”

    There are also number of factual deformation of the case in your article. You must behave like a journalist but not like a judge. If you don’t know the facts, keep silence but don’t do your propaganda to creat troubles among peace loving families.

    Reply