நாடு கடந்த தமிழீழ அரச உருவாக்கம் குறித்த அனைத்துலக மாநாடு

இலங்கை எதிர்நோக்கும் சிக்கல்களுக்கும், வாய்ப்புகளுக்கும், மக்களாட்சிக்கும், அமைதிக்குமான தேடலையொட்டிய அனைத்துலக மாநாடு 2010, ஜனவரி, 21ம் தேதி வியாழக்கிழமை காலை 9.00 மணி தொடங்கி மாலை 4.30 மணி வரை Hotel Radisson  மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் கனடியத் தமிழர் அமைப்பகத்தால் (Canadian Tamils Forum) ஏற்பாடு செய்யப்பட்டது.
 
தமிழரின் வாழ்வியல் பாதுகாப்பு பற்றி வரலாற்று அடிப்படையில் ரொறொன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியர், அருட்தந்தை யோசப் சந்திரகாந்தன் உரை நிகழ்த்தினார். அவரது உரையில் 1920களிலிருந்து தமிழர்கள் சிங்களவர்களால் ஏமாற்றப்படுவதை எதிர்த்து சேர். பொன். இராமநாதனும் அவரது தம்பி சேர். பொன். அருணாசலமும் ஓங்கிக் குரலெழுப்பினார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். இவர் கூற்றுக்கு வலுவூட்டுகின்ற வகையில் அருணாசலம் தமிழ் பேரவையை உருவாக்கியதையும் அவரின் அண்ணா இராமநாதன் டொனமூர் எனின் இனிமேல் தமிழர் இல்லையென்று எச்சரித்ததைப் புள்ளிவிபரங்களுடன் ஈழவேந்தன் கேள்வி நேரத்தின் போது சுட்டிக்காட்டினார்.
பெண்களும் குழந்தைகளும் சிங்கள இராணுவத்தினால் துன்புறுத்தப்பட்ட நிகழ்ச்சிகளை சுவீடன் நாட்டுப் பேராசிரியர் பீற்றர் சால்க் விளக்கினார். படிப்படியாக இலங்கையில் சட்ட ஒழுங்கு முறைமை சீரழிந்ததை  கனடா நாட்டின் பழமைவாதக் கடசியைச் சேர்ந்த சங் கொங்கல் நுணுக்கமாக விளக்கினார்.
 
கனடியச் சட்டத்தரணி ஜோன் லீகே கனடாவில் சட்ட ஒழுங்குகள் எவ்வாறு கனடாவின் பூர்வீகக்குடிகளை முன்பு கையாண்டிருந்தது என்றும் பின்பு அவ்வாறான அணுகுமுறைகள் எவ்வாறு மாற்றம் பெற்றன என்பதை விளக்கினார். அத்துடன் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கனடா எவ்விதம் தீர்மானகரமான  பங்கை வழங்க முடியும் என்பதைப் பற்றியும் பேசினார். அரச அதரவோடு நடைபெறும் அடக்குமுறையை மக்களாட்சிக் கிளர்ச்சியூடாக எவ்விதம் எதிர்கொள்ளலாம் என்பதைப் பற்றி ஆராய்ந்தார் அமெரிக்கப் பேராசிரியர் றோபேட் ஓபேஸ்ற்.
நாடு கடந்த தமிழீழ அரசின் நடைமுறைச் சாத்தியம் மற்றும் பொறுப்புகள் பற்றி பேராசிரியரும், கவிஞருமான சேரன் பல கோணங்களிலிருந்து ஆராய்ந்து அவையோரை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து   ஜேர்மன் நாட்டுப் பேராசிரியர் ஜோன். நீல்சன் நிகழ்த்திய உரை நடைமுறையில் இவ்வாறான அரச உருவாக்கம், அதற்கான சொல்லாடல்கள் எச்சரிக்கையாகக் கையாளப்பட வேண்டியதன் அவசியங்களை முன் நிபந்தனைகளாகத் தர்க்கித்தது சுவையான விவாதத்தைக் கிளப்பியது.
 
அமெரிக்கச் சட்டத்தரணி ஜெயலிங்கம் ஜெயப்பிரகாஸ் நாடு கடந்த தமிழீழ அரச கட்டுமானத்தை உருவாக்குது பற்றிய ஆளுகைத் திட்டம் கொண்டுள்ள விதி முறைகள் குறித்துப் பேசினார். வேறு கூட்டங்களுக்குச் செல்ல வேண்டியிருந்ததனால் மாநாட்டின் இடைநடுவின் போது பேசிய NDP கட்சியின் தலைவர் ஜாக் லேற்றன் தனது உரையின் போது இம்மாநாடு எடுக்கும் முடிவுகள் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியினை வென்றெடுக்க உறுதுணை புரியும் என்று கூறினார். கனடிய பழமைவாதக்கட்சியின் மத்திய அரசாங்கத்துக்கான அமைச்சர் யேசன் கனி மாநாட்டில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் அவருடைய செயலாளர் ஒருவரை மாநாட்டுக்கு அனுப்பித் தனது வாழ்த்தினைத் தெரிவித்திருந்தார். மாநாட்டுக்கு வருகை தந்திருந்த மக்களில் பலர் மாநாட்டில் இடம்பெற்ற உரைகள், கலந்துரையாடல்கள் குறித்துப் பெரிதும் திருப்தி கொண்டிருந்ததை  அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

18 Comments

  • விக்கிரமாதித்தன்
    விக்கிரமாதித்தன்

    கனடா நல்ல இடம். ஒபாமாவுடன் கதைத்து அலஸ்காவில் ஒரு நூறு பரப்பு காணி வாங்கி நாடுகடந்த அரசினை உருவாக்கலாம்.

    தலைவர் உயிரோடை இருந்தால் ஒவ்வொரு வருடமும் மாவீரர் உரையும் பேசலாம். மற்றும்படி குளிருக்கு ஒண்டும் செய்யமுடியாது. நீங்களும் உங்கள் நாடுகடந்த அரசும் அலாஸ்கவின் பனிக்கரடிகளுடன் நல்ல பொழுது போகும்.

    ஐரோப்பாவில் இருக்கிற வட்டுக்கோட்டை விசரரையும் கூப்பிடுங்கோ அப்பு.
    விக்கிரமாதித்தன்

    Reply
  • palli
    palli

    இது பல்லியின் பார்வை மட்டுமே;
    தவறாய் இருந்தால் மன்னியுங்கள்,

    சாவீட்டு சடங்கில்
    ரகுமானின் இசை முழக்கம்,
    ஈழ மக்கள் பசி இருக்க;
    புலம் கிடைத்தோர் பழி தீர்க்க,

    வட்டு கோட்டை ஏன் போனோம்;
    வரகூடும் தீர்மானம்,
    வோட்டை கேட்டு சொல்லுகினம்;
    வரும் காலம் தமக்கென்று;

    முடிவுரையில் மக்கள் அங்கே;
    முன்னுரையில் இவர்கள் இங்கே;
    சரியில்லா சதிராட்டம்;
    தமிழருக்கோ திண்டாட்டம்;

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    இந்த பேராசிரியர்களும், சட்டத்தரணிகளும், செய்தியாளரும் சேர்ந்ததுதான் தமிழரின் அவலத்தை உருவேற்றினார்கள். இதைப்பற்றி பேசுவதிலும், எழுதுவதிலும் இவர்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ளது. வாழும் நாடுகளில் தங்கிவாழ்ந்து, தம்மினத்தை கழுவேற்றி மகிழ்ந்து போக, எசமானர்களின் மேன்மைக் கங்காணிகளாக மாறும் நிலைக்குத்தான் நாடு கடந்த அரசு, மக்கள் பேரவைகளுருவாக்கப்படுகின்றன. அடிமை நிலையில் உள்ள வந்தேறிகள், இந்த உருவாக்கங்களை கண்டு அங்கலாய்க்கவும், அடிபட்டு போகவும் தயார்ப் படுத்தப்படுகிறார்கள். இந்த லேகியங்களைக் கண்டு எழுதிகளிப்பதிலும், பார்த்து மகிழ்தலிலும் உள்ளார்ந்து செயலற்றுப் போவதை முன்னால் போராளிகள் உணர்வது நன்று

    Reply
  • kanthan
    kanthan

    நாடு கடந்த தமிழீழ அரசின் நடைமுறைச் சாத்தியம் மற்றும் பொறுப்புகள் பற்றி பேராசிரியரும், கவிஞருமான சேரன் பல கோணங்களிலிருந்து ஆராய்ந்து அவையோரை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது/

    சேரன் நாடு கடந்த தமிழீழத்தின் அருட் தந்தையா?

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    அப்பாடா!, என்னுடைய குடும்பத்தில் எல்லோரும் பேராசிரியராக இருந்தும், நான் பேராசிரியர் இல்லை. நடிகர் சத்தியராஜ் வீட்டில் அவர் மட்டும் தறுதலை நடிகர்போல்.பேராசிரியர்? க.அன்பழகன் போல், ஈழவேந்தனின்? மருமகனும், சென்னை கிருத்துவக் கல்லூரியில் பேராசிரியர் ஆயிற்றே, அவரும் கலந்துக் கொண்டாரா?. அடப்பாவிகளா!, தமிழ், தியாகம், தற்கொடை, என்றெல்லாம் புகைமூட்டம் கிளப்பினீர்களே!, இன்றைய நிலையிலும், ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா க்களில், ஏற்கனவே கூப்பிட்டு பலவருடங்களாக வைத்திருக்கும் சொந்தகாரர்களுக்கு இன்று வந்ததுபோல் “அகதி அங்கீகாரத்தை” பெற்று விட்டீர்களே!, உங்களின் புகை மூட்டம் இவைகளை மறைக்கத்தானா?. முள்ளியவாய்க்காலில் இறந்த மக்களும், தற்போது முள்கம்பிவேலியின் பின்னால் இருப்பவர்களும், உங்களுடைய நலனுக்கு உகந்தவர்கள் அல்ல என்பதால்தானே கடைசிவரை கைவிட்டீர்கள்!. அதைப் போல்தான் பலருடைய ஆராய்ச்சியும், பேராசிரியர் பீட்டர் சார்ல்ஸ் போன்றவர்களின் “அப்சாலா(சூவீடன்) பல்கலைக்கழகத்தில்”, பேராசிரியர் பட்டம் பெறுவதில்லை. “50% அப்சலூயுட் வோட்காவை”, அவருடைய நிலவறையில் ஊற்றிக்கொடுத்து, கிரிமினலாக பேசி அனுப்பிவிடுவார்!. நல்லகாலம் தமிழக மக்களும் கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின் போன்றோர்களுக்கு “டாக்டர்? பட்டம்” வழங்கினார்களேதவிர, பேராசிரியர்!? பட்டம் வழங்கவில்லை!. வழங்கியிருந்தால் நினைக்கவே பயமாக இருக்கிறது….

    Reply
  • thurai
    thurai

    புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் தமிழர் பேரவையும், தமிழர் இளையோர் அமைப்பும் உள்ளன. இவைகளனைத்தும் புலிப்பால் குடித்து வளர்ந்தவைகள்தான்.

    பிறந்த மண்ணையும், மக்களையும் மதிக்கவும், காக்கவும் தெரியாதவர்கள்தான் இவர்கள். புலத்தில் பக்கத்து வீட்டில் மரண ஒலி கேட்டால் எட்டிப் பார்க்க மனமில்லாமல் தானும் தன் குடும்பமும் என்று வாழுவோரே இப்படியான் உலகை ஏமாற்றும் அமைப்புகளையும் செயல்களையும்
    செய்வதில் முன்நிற்கின்றார்கள்.

    துரை

    Reply
  • NANTHA
    NANTHA

    இந்த கட்டுரையில் குறிப்பிடப்படும் பாதிரி சந்திரகாந்தன் கனடா கந்தசுவாமி ஆலயத்தினுள் புகுந்து இந்து சிறுவர்களுக்கு ஏடு தொடக்கம் செய்ய புறப்பட்ட ஒரு கத்தோலிக்கர். அது மாத்திரமல்ல. ரொறொன்ரோ பல்கலைக் கழக பேராசிரியர் என்று ஒரு பம்மாத்து வேறு . இவரின் பெயரில் ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில் “பேராசிரியர்கள்” எவரும் கிடையாது. அப்படி இருந்தால் இவரின் தொலைபேசி, எந்த துறை, என்பன பற்றிய விபரங்களைத் தந்தால் நல்லது! விசாரிக்க உதவியாக இருக்கும்.

    Reply
  • மாயா
    மாயா

    மனைவியை விவாகரத்து செய்த பின் மனைவிக்கும் கணவருக்குமான உறவு இல்லாது போய்விடும். இதை துறந்து பல சாசனங்கள் எழுதியாச்சு. ரணிலும் , பிரபாவும் கூட கையெழுத்து வைத்தது வேறு சாசனம்?

    ஆனால் , வட்டுக்கோட்டை வியாபாரத்தை , இந்த புண்ணாக்கு பேராசிரியர்கள் தூக்கிக் கொண்டு திரியிறதை என்னென்டு சொல்றது? அதுவும் இவர்களது பட்டத்தால் அசந்து போன சூரியதேவனது சாவுக்கு பிறகுதான். தேசிய தலைவர் இருந்திருந்தால் இவர்களுக்கு எப்பவோ மரண சாசனம் எழுதியிருப்பார்? ஓமோ? இல்லையோ? உங்கட கூத்துகளுக்கு கூத்தாட ஏகப்பட்ட வலசுகள் ரெடியாவே இருக்குதுகள். பாவப்பட்ட எங்களால்தான் தாங்க முடியவில்லை?

    Reply
  • Santhy
    Santhy

    நாடு கடந்தவர்களில் பலர் நாடுகடத்தப்பட்டவர்கள் தான். சனத்தைச் சும்மா இதுக்க விடக்கூடாது. அதுகாகவாவது எதையாவது செய்து காசு சேர்க்க வேண்டுமே. அதுக்காகவாவது இப்படி ஏதாவது செய்யவேண்டுமல்லவா. ஏன் தலைவர் இருக்கும் போது இந்தத்தேர்தலை வைத்துக் காட்டியிருக்கலாம் தானே. கதவுகளைத் தட்டப்போகிறார்கள் கவனமாய் இருங்கோ. நாட்டிலை தமிழீழம் கேட்டு நாறிப்போச்சினம் இப்போ நாடுகடந்து கேட்கினமாக்கும். ஐரோப்பாவில் எந்தப்பக்கத்தைப் பிடிக்கும் நோக்கம்மாம்? சேர்ந்த காசுகள் ஐரோப்பாவுக்குள் தானே கிடக்கிறது. அங்கைதான் இருக்கேலாது என்று ஓடிவந்தனாங்கள். இஞ்சையும் தமிழீழம் கேட்டு நாடறடிக்க நிற்கிறார்கள். போய் போட்டுகளைப் போடுங்கோ

    Reply
  • rasaththi
    rasaththi

    உந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இன்னுமொருசரத்தையும் சேர்த்து வாக்களிக்கச் சொல்லுங்கோ.- அப்பதான் கட்டாயம் இந்த அரசுகள் கவனத்தில்எடுக்கும். அதாகப்பட்டடது தமீழீழம் என்னும் தேசம் உருவாகும் பட்சத்தில் நான் இந்த நாடுகளின் அகதி அந்தஸ்து மற்றம் பிரரஜா உரிமைகளையும் தூக்கிஎறிந்துவிட்டு தமிழீழம் செல்ல தயாராக உள்ளேன்.
    அப்பதெரியும் மகனே! எத்தினபேர் நாட்டுப்பற்றாளர் என்று

    Reply
  • Vijayan
    Vijayan

    அவரது உரையில் 1920களிலிருந்து தமிழர்கள் சிங்களவர்களால் ஏமாற்றப்படுவதை எதிர்த்து சேர். பொன். இராமநாதனும் அவரது தம்பி சேர். பொன். அருணாசலமும் ஓங்கிக் குரலெழுப்பினார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். இவர் கூற்றுக்கு வலுவூட்டுகின்ற வகையில் அருணாசலம் தமிழ் பேரவையை உருவாக்கியதையும் அவரின் அண்ணா இராமநாதன் டொனமூர் எனின் இனிமேல் தமிழர் இல்லையென்று …./

    சேர். பொன். இராமநாதனும் அவரது தம்பி சேர். பொன். அருணாசலமும் பெரிய ஏமாற்றுக்காரர்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கக்கூடாதென்று மிகக்கடுமையாக வாதாடிய துரோகிகள்.

    Reply
  • ஜெயராஜா
    ஜெயராஜா

    நல்லூர்க் கந்தன்முன் சகல அரசியற் கட்சிகளும் தலைமைகளும் வந்து நின்றார்கள் ஆனால் எங்களுக்கு இருந்த ஒரே துரும்புச்சீட்டு ‘சிறுபான்மை மக்கள்தான் ஜனாதிபதியைத் தெரிவுசெய்ய முடியும் என்ற துரும்புச் சீட்டு. அதுவும் இப்போ பொய்யாகிப் போயுள்ளது. காரணம் யாழ் மேலாதிக்க வர்க்கம் வாக்குப் போடாததுதான். இவர்களுக்கு கோட்டும் ரையும் போட்டுத்தான் சொன்னால் கேட்பார்களோ தெரியாது.

    இப்போ டக்ளஸ் சாகாவிட்டாலும் பரவாயில்லை ராஜினாமா ஆவது செய்ய வேண்டும் இதுதான் அடுத்த வேண்டுகோள். 22 பேர் பாராளுமன்றத்தில் இருந்து செய்ததைவிட தனிமனிதனாக அந்த மக்களுக்குச் செய்ததை யாராவது மறுப்பாராயின் மூன்றெழுத்து நன்றி தெரியாதவர்கள்.

    கடைசிக் காலங்களில் பத்மநாபா தான் டக்ளஸ்சோடையே இருந்திருக்கலாம் எனக் கதைத்ததும் உண்டு. டக்ளஸ்சே இல்லாமல் போனால் இலங்கையில் தேசியக் கட்சிகள் மட்டுமே இருக்க வேண்டிய நிலை வரலாம். மகிந்தாவும் ரணிலும் சரத்தும்கூட ஒன்று சேர்வார்கள். ஆனால் ஆனானப்பட்ட எங்கள் ‘தமிழ்’, ‘ஈழ ‘கோஷ்டிகள் ஒன்றுசேர மாட்டார்கள் இதுதான் தமிழர்களின் தலைவிதி.

    Reply
  • NANTHA
    NANTHA

    ஜெயராஜா:
    உங்கள் சாடல் எனக்கு புரிகிறது. எனக்கும் டக்ளசின் சாணக்கியம் புரிகிறது. “தமிழ்” என்று வட்டம் கட்டி என்னசாதனைகள் நடக்கப்போகின்றன? ஒன்றுமே இல்லை . இன்ட தமிழ் ” சூரர்கள்” இராஜபக்ஷவிடம் போய் தங்கன் உறவினர்களுக்கு சில சலுகைகள் கேட்கப் போகிறார்கள் என்பது மாத்திரம் உண்மை.

    Reply
  • மாயா
    மாயா

    //சேர். பொன். இராமநாதனும் அவரது தம்பி சேர். பொன். அருணாசலமும் பெரிய ஏமாற்றுக்காரர்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கக்கூடாதென்று மிகக்கடுமையாக வாதாடிய துரோகிகள்.- vijayan//

    இவர்களால்தான் , இன்று தமிழினம் இக் கதிக்கு ஆளானது. இவர்கள் சிலைகளையாவது தகர்க்காவிட்டால் என் மனம் ஆறாது. இலங்கையின் பொருளாதாரத்தை வளப்படுத்திய மலையக உறவுகள், இன்றும் லயன்களில் உரிமைகளற்று வாழ வழி செய்தவர்கள் இவர்கள். 1983க்குப் பின்னர் ஓடி வந்தவனுக்கெல்லாம் , வந்த நாட்டு குடியுரிமைகள் கிடைத்துள்ளன. காலா காலமாக இரத்தம் சிந்தி உழைத்த மலையகத் தமிழன், இன்றும் நாதியற்றவன். இதற்கு இந்த மேட்டுக்குடி வர்க்கமே காரணம்.

    Reply
  • palli
    palli

    //உந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இன்னுமொருசரத்தையும் சேர்த்து வாக்களிக்கச் சொல்லுங்கோ.- அப்பதான் கட்டாயம் இந்த அரசுகள் கவனத்திலெடுக்கும். அதாகப்பட்டடது தமீழீழம் என்னும் தேசம் உருவாகும் பட்சத்தில் நான் இந்த நாடுகளின் அகதி அந்தஸ்து மற்றம் பிரரஜா உரிமைகளையும் தூக்கிஎறிந்துவிட்டு தமிழீழம் செல்ல தயாராக உள்ளேன். அப்பதெரியும் மகனே! எத்தினபேர் நாட்டுப்பற்றாளர் என்று//

    ஜயோ ஜயோ ராசாத்தி வட்டுகோட்டை தீர்மானத்தில் கல்லைதூக்கி போட்டுட்டியள்; இதை கவனிப்பவர் இப்படியும் வருமோ என சிந்திக்க ஆரம்பித்தாலே வட்டுகோட்டையில் என்ன நடந்தது என கேப்போர் கூட்டம் கூடி விடும்;

    Reply
  • shaminie
    shaminie

    நடராசா முரளிதரன்! நீரும் கலாநிதி எணடொரு பட்டத்தை உமக்கும் குடுக்கிறதுதானே. பேராசிரியர் இல்லாத சேரனையும் சந்திரகாந்தனுக்கும் கூசாமல் பேராசிரியர் எண்டு பட்டம் குடுத்திருக்கிறீர். தலைவர் தனக்குத்தானே தேசியத்தலைவர் எண்டு பட்டங்குடுத்து கடைசியில முள்ளிவாய்க்காலில் கோவணத்தோட எழுந்தருளியது அதுக்கிடையில உமக்கு மறந்து போய்விட்டதா? உம்மை இளங்கோவை உப்படி பழைய கூடாத பழைய பதிவுகளுள்ள சிலபேரை சேரன் பாவைப்பொம்மைகள் மாதிரி கொஞ்ச காலத்துக்கு சிப்பிலி ஆட்டப்போறார்.
    -சாமினி

    Reply
  • மாயா
    மாயா

    நடராசா முரளிதரனுக்கு திருடன் – பொறுக்கி – குடிகாரன் என சுவிஸ் மற்றும் புலிகளால் எப்போதோ கல்லாவில் கைவைத்த நிதி பட்டம், அதாவது புலிகளின் நிதியை திருடியதாக பட்டம் எப்பவோ குடுத்துட்டாங்கள்.

    Reply
  • msri
    msri

    புலிகளின் அழிவின் பின்னான> அரசியல் வெற்றிடம் பலரை பலதும் பத்தமாக சொல்ல வைக்கின்றது! அதில் ஒன்றுதான் நாடு கடந்த ஈழமும்> அதன்மாநாடும்! உண்டி கூழுக்க அழுகின்ற நிலையில் புலத்தின் மக்களும்> கொண்டை கூழுக்கு அழுகின்ற நிலையில் “புலன் பெயர் அரசியலும்” உள்ளது. இரண்டிற்கும் இடையில் முரண்பட்ட நிலையே! பேராசிரியற்ற பேராசிரியரான சேரன் போன்றவர்கள் தலைமை தாங்கினால் சொல்லவும் வேண்டுமோ? ஈழம் கிடைத்தமாதிரித்ததான்! சிலவேளை சேரன் தலைமையில் “பின்நவீனத்துவ” ஈழமும் கிடைக்கலாம்!

    Reply