திரைப்பட இயக்குனர் சந்திரன் ரட்ணம் கைது – 31 ஆம் திகதி வரை விளக்கமறியல்

திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குனருமான சந்திரன் ரட்ணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

மிரிஹான பொலிஸார் கங்கொடவில மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இவரை ஆஜர் செய்ததாகவும் இவரை 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முதலாவது ஒழுங்கை, வாகொடை வீதி, நுகேகொடையிலுள்ள சந்திரன் ரட்ணத்தின் வீட்டிலிருந்து கடந்த 26 ஆம் திகதி வெடிபொருட்கள் மீட்டெடுக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சந்திரன் ரட்ணம் ‘ஆணையிறவுக்கான பாதை’ என்ற சிங்களத் திரைப்படத்தை தயாரித்தவர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • rohan
    rohan

    வாழ்க சனநாயகம்.

    மகிந்தவின் சனநாயகத்துக்குக் குடை பிடிக்கும் மாற்றுக்கருத்தாளர்கள் நீடு வாழ்க!!!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வெடிகுண்டையோ வெடிகுண்டை தயாரிப்பதற்கான மூலகங்களையோ யாரும் வீட்டில் வைத்திருப்பதை உலகத்தின் எந்த நாட்டிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அப்படி வைத்திருந்தால் காரணகாரியத்தை சட்டத்திற்கு புலப்படுத்தியே ஆகவேண்டும். சந்திரன் ரட்ணம் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். இவர் பல சிங்கள திரைப்படங்களை தயாரித்ததாக சொல்லப்படுகிறது. திரைபடகாட்சி தயாரிப்பு சம்பந்தமாக அனுமதி பெற்றே வெடிபொருள்களை வீட்டில் வைத்திருந்ததாக கூறுகிறார்.
    இப்பொழுது இருக்கும் குற்றச்சாட்டு.விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்த போது இவருக்குரிய அனுமதிப்பத்திரத்தை உடனடியாக சமர்பிக்கமுடியவில்லை என்பதே!. இதற்கேன் ரோகன்னுக்கு “ஜனநாயகம்” “மகிந்தராஜபச்சா” என்ற கேள்விகள்?.

    Reply
  • rohan
    rohan

    சந்திரன் ரட்னத்தை அச்சுறுத்தி மிரட்டுவதகற்காகவும் கொஞ்சம் துட்டு கறப்பதற்காகவும் நடந்த (தொடர்ந்த) நாடகம். Happy ending (at least for now)!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்த போது இவருக்குரிய அனுமதிப்பத்திரத்தை உடனடியாக சமர்பிக்கமுடியவில்லை என்பதே!…//

    இந்த ‘ஜனநாயக’ நாட்டில் அனுமதிப்பத்திரம் கொடுக்கும் போது பிரதி வைத்திருக்க மாட்டார்களா? அவர்தான் தொலைத்து விட்டார் அல்லது நீங்கள் சொன்னது போல் ‘உடனடியாக’ சமர்ப்பிக்க முடியவில்லை எனில் ‘உள்ளுக்கா’ போடுவார்கள்? நீங்கள் இருக்கும் நாட்டில் அவ்வாறா? நான் இருக்கும் நாட்டில் பொலிசார் தமக்கு உறுதிப்படுத்தபட முடியாத பட்சத்தில் அனுமதிப்பத்திரத்தை காட்டி மீளப்பெறுமாறு சொல்லி அவற்றை எடுத்துச் செல்வார்கள். ஒருநாளும் ‘ஆளை’ உள்ளுக்கு போட மாட்டார்கள்! இத்தனைக்கும் இந்த சந்திரன் ரட்ணம் ஆனையிறவுக்கான பாதை தயாரிப்பின் போது வெடிமருந்துகள், துப்பாக்கிகள், ராணுவம் போன்றனவற்றுடன் நெருங்கிப் பழகியதாக வேறு சொல்கிறார்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    கொழும்பில் தைரைப்பட வினியோகத்துறையில் இருக்கும் ஒருவருடன் பேசியபோது கிடைத்த தகவல்…..

    Road to Elephantpass திரைப்படம் சிறப்புக்காட்சியாக ஒருவருடத்துக்கு முன்னர் திரையிடப்பட்டபோது ‘ஆஹா ஓஹோ இதுவல்லவா இனஐக்கியம், சகோதரத்துவம், மனிதநேயம்….என புகழ்ந்த கோஷ்டியினர் ராணுவவெற்றியின் பின்னர் இதெல்லாம் ஒன்றும் தேவையில்லை என மாறிவிட்டனர். இதில் ஒருபகுதி ராணுவம், பெளத்த மடாதிபதி கூட்டமும் அடக்கம். இவர்கள் இத்திரைப்படம் வெளிவருவதை தடுக்க முயல்கின்றனர். ஆனால் சந்திரன் ரட்ணம் வேறு வழிகளில் முயன்று வருகிறார் அதுமட்டுமல்லாது இத்திரைப்படத்தை சர்வதேச ரீதியாக வெளியிட முயல்கிறார். மேலும் இப்படத்தின் மூலக்கதையான ஒரு ராணுவ ஆளுக்கும் புலி இயக்க பெண்ணுக்குமிடையிலான உறவு முன்னைநாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ‘கையால்’ விருது பெற்ற ஒரு நாவல் என்பதும் கவனத்தில் எடுக்க வேண்டும். ஆனால் இவர்களின் ‘வெடிமருந்து பதுக்கல்’ தடை முயற்சி இவர்களின் முகத்திலேயே ‘வெடிக்கும்’ என்கிறார்கள். காரணம் ஐஃபா ! இனிமேல் ஸ்ரீலங்கா பக்கமே தலை வைத்துப் படுக்கமாட்டேன் என ‘சூழுரைத்த’ சாருக்கானும் ஐஃபா வுக்கு போகமுடியாத நிலை வரலாம் என டுவிட்டரில் போட்டுவிட்டார்!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    சந்திரன் ரட்ணம் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளார் என நீதிபதி தெரிவித்துள்ளார் !

    Reply
  • NANTHA
    NANTHA

    சந்திரன் தமிழ், ஆங்கிலம், சிங்களம், மலையாளம் ஆகிய மொழிகளில் படம் தயாரிப்பவர். அவரது இந்த “கைது”நாடகம் ஒரு அர்த்தமில்லாதநாடகம். சென்ற வருடம் வீட்டை விட்டு சென்ற அவர் மீது இந்த வருடம் கண்டெடுத்த “ரவைகள்” பற்றி கைது செய்திருப்பது வினோதமானது. பொலிசார் “தற்போது” வீட்டில் வசிக்கும்நபரை கைது செயவில்லை என்பது அதவிட வினோதம்.

    ஆயினும் அவரை “விடுதலை” செய்துள்ளனர்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சாந்தன்!
    தாங்கள் தேசம்நெற்க்கு புதியவர் அல்ல. மே 19 2009 முன்பும் இங்கு பதிவாகியிருக்கிறது. நீங்கள் சிங்கள இனமக்களை இனவெறியுடனே ஒவ்வொரு கருத்தையும் அணுகியிருகிறீர்கள். இன்று “நான் புலியில்லை” என மொட்டாக்கு போட்டுக் கொண்டு வருகிறீர்கள். நீங்கள் இருக்கும் நாட்டில் இப்படியா? சட்டம் என கேள்வியும் எழுப்புகிறீர்கள். தயவு செய்த தேசம்வாசகர்களுக்கு நீங்கள் வழங்கிய கருத்தை ஒருமுறை திரும்பவும் தாங்களே படித்துப் பார்க்கவும். பலன் இல்லாவிட்டாலும் வரப்போகும் கருத்துகளுக்கு-பின்னோட்டங்களுக்கு தங்களுக்கு உதவியாகயிருக்கும் என்றே கருதுகிறேன். இனவெறி கருத்தையும் மதவெறிக் கருத்தையும் இனிவரப்போகும் தலைமுறைகள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அதன் எச்சரிக்கையின் விளைவே! இந்தக்கருத்தும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….நீங்கள் சிங்கள இனமக்களை இனவெறியுடனே ஒவ்வொரு கருத்தையும் அணுகியிருகிறீர்கள்……//
    இங்கே விவாதம் அதுவல்ல. மாறாக சிங்களத்தாய் தமிழ்த் தந்தைக்குப் பிறந்த சந்திரன் ரட்ணம் என்பவருடைய ‘கைது’ பற்றியது. அதற்கு நான் எழுதிய கேள்விகளுக்கு/கருத்துகளுக்கு பதில் சொல்லலாமே? அதை விடுத்து எனக்கு ஏன் ‘பட்டம்’ கொடுத்து திசை திருப்புகிறீர்கள்?

    /….இன்று “நான் புலியில்லை” என மொட்டாக்கு போட்டுக் கொண்டு வருகிறீர்கள்….//
    சிங்கள அரசு இனவாத அரசு என நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. பலர் சொல்லி விட்டார்கள். ஏன் அதன் அரசியலமைப்புச் சட்டமே சொல்கிறதே! அதிகம் ஏன் ஆசியாவின் சிறந்த அரசியல் நிர்வாகி எனக்கருதப்படும் சிங்கப்பூரின் முன்னை நாள் பிரதமர் லீகுவான் யூ ஸ்ரீலங்கா பற்றியும் அதில் தமிழர்ளின் நிலை பற்றியும் கடந்த 20 ஆண்டுகளில் அவரால் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என படித்திருப்பீர்கள் தானே. இல்லை என்னைக் கேளுங்கள் மீண்டும் சொல்கிறேன். மேலும் கடந்த ஒரு வாரத்துக்குள் அவர் மஹிந்தா ராஜபக்ச பற்றி அவரின் இனவாதம் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் எனப்பாருங்கள். மிகவும் மகிழ்வீர்கள். சிலவேளைகளில் லீகுவான் யூவையும் என்னைச் சொன்னது போல ‘பட்டம்’ கொடுப்பீர்கள்.

    //..நீங்கள் இருக்கும் நாட்டில் இப்படியா? சட்டம் என கேள்வியும் எழுப்புகிறீர்கள். தயவு செய்த தேசம்வாசகர்களுக்கு நீங்கள் வழங்கிய கருத்தை ஒருமுறை திரும்பவும் தாங்களே படித்துப் பார்க்கவும்….//
    கேட்ட கேள்விக்குப்பதில் இருப்பது போலத் தெரியவில்லையே?
    ஒருவரிடம் அனுமதிப்பத்திரம் (அதுவும் இரண்டு வருடம் கழித்து) ‘உடனடியாக’ கொடுக்க முடியவில்லை என்பதற்காக அரஸ்ட்டா? இரண்டு நாட்களின் பின்னர் ‘எந்த வித குற்ரச்சாட்டும் இல்லை’ என விடுதலையா? நல்ல ஜோக். கேட்டால் நான் இனவாதி, எனக்கு அட்வைஸ் வேறு கொடுக்கிறீர்கள்.
    முன்னர் (4 வருடங்களின் முன்னர்) மத்திய கிழக்கில் இருக்கும் ஒரு தமிழரின் வீட்டை ‘வெடிமருந்து பதுக்கல்’ காரனம் கூறி இடித்துத்தள்லிய சம்பவம் நினைவில் இருக்குமே சந்திரன் ராஜா! பினர் தெரிய வந்தது அவருக்கும் பக்கத்துவீட்டு ‘பெரும்பான்மை’ ஆளுக்கும் காணிப்பிரச்சினையில் வந்த வினை என!

    //… இனவெறி கருத்தையும் மதவெறிக் கருத்தையும் இனிவரப்போகும் தலைமுறைகள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அதன் எச்சரிக்கையின் விளைவே! இந்தக்கருத்தும்….//
    அது நீங்கள் சொல்லி நடக்காது. வரும் சந்ததியைப் பொறுத்தது. அவர்கள் தேர்வு செய்யும் ‘அரசை’ பொறுத்து அமையும். மேலும் உங்களின் கருத்து அர்த்தமற்ரவைகளே! நடைமுறையில் நான் பார்க்கவில்லை. இப்போது ‘சிறுபான்மை இனம் என்ற ஒன்றே இல்லை’ எனப் புது கோசம்!

    மேலும் இந்த சந்திரன் ரட்ணம் 1983 இனக்கலவரத்தின் போது ஸ்ரீலங்காவின் ‘நற்பெயரை காக்க’ என்ன எல்லாம் செய்தவர் என அவரைக் கேளுங்கள். இல்லை எனைல் ஒரு குளூ தருகிறேன்… “Indiana Johns And The Temple Of Doom”

    Reply
  • Ajith
    Ajith

    “விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்த போது இவருக்குரிய அனுமதிப்பத்திரத்தை உடனடியாக சமர்பிக்கமுடியவில்லை என்பதே!. இதற்கேன் ரோகன்னுக்கு “ஜனநாயகம்” “மகிந்தராஜபச்சா” என்ற கேள்விகள்?.”

    Whats wrong with these questions. You have the right to question a democratically elected president or government biased in dealing with crime. For example, Karuna was sent to UK via Katunayake airport using a fraud passport issued by Rajapkse and spent nine months in Jail in UK. Later he came back to Sri Lanka illegally. It is the duty of the law and order system to charge him and Rajapakse for fraud and crimes. When the system failed to do this, what right the Law and order system to charge this poor tamil director. Is it acceptable?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //… சென்ற வருடம் வீட்டை விட்டு சென்ற அவர் மீது இந்த வருடம் கண்டெடுத்த “ரவைகள்” பற்றி கைது செய்திருப்பது வினோதமானது. பொலிசார் “தற்போது” வீட்டில் வசிக்கும்நபரை கைது செயவில்லை என்பது அதவிட வினோதம்….//
    இக்கைதுகள் பற்றி ஆசிய மனித உரிமை ஆணையம், சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைக்கண்காணிப்பகம், மற்றும் பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஏலவே சொல்லி விட்டன!

    இதில் வினோதம் ஒன்றுமில்லை. நாட்டின் பெயர் ஸ்ரீலங்கா என்று சொன்னாலே விளங்கும்! இதை நான் சொன்னால் எனக்கு இனவாதி பட்டம்!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    // இங்கே விவாதம் அதுவல்ல// சாந்தன்.
    விவாதம் இது பற்றியதே!. இனவெறியரா? இல்லை என்பதா பற்றியதே. பட்டத்தில்திலேயே மோசமாக பட்டம் “துரோகிப்பட்டமும் போட்டுத் தள்ளுவதும்”. அதையெல்லாம் கண்டும் கானாமலும் ஆதரித்து வந்தவர்கள் தானே நீங்கள். இனியென்ன பட்டத்தைப்பற்றி வியாக்கியானம் தேடக்கிடக்கு?.
    லீக்குவான் யூ வைப்பற்றி உங்களையும் ஒப்பிடுகிறீர்கள். லீக்குவான் யூ கருத்துச் சுகந்திரத்திற்கும் துரோகி பட்டம் கொடுப்பதற்கும் யாழ்பாண மத்தியதர புத்திக்கும் தன்னை ஈடுபடுத்தியவர் அல்ல. பல இனங்கள் சேர்ந்துவாழ முடியும் என காட்டியவர். அவர் வெற்றிபெற்றது முதாலித்துவத்தின் செழிமைக்காலம்…இனி ஒரு லீக்கவான் யூ வையும் ஒரு நவநீதம்பிள்ளையும் தானே கண்னெதிரே தரிசித்துக் கொண்டிருக்கிறோம்.
    சாந்தன்! உங்கள் மனதைத் திறந்து சொல்லிவிடுங்கள். நீங்கள் யாருக்காக கதைக்கிறீர்கள்?.மனிதகுலத்திற்காகா? ஆதாயநோக்கே குறிக்கோளாக் கொண்ட முதாலிளித்துவ அமைப்புக்கா?? நேர்மையுள்ள புலம்பெயர் தமிழன் மேற்சொன்ன இரண்டாவதையே தெரிவு செய்வான். அதை நீங்களும் தெரிவு செய்தால் உங்களில் எனக்கு எந்தவித கோபதாபங்களும் இல்லை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //……விவாதம் இது பற்றியதே!. இனவெறியரா? இல்லை என்பதா பற்றியதே…..///

    இங்கு விவாதம் சந்திரன் ரட்னம் என்கின்ற ஒரு வரின் கைது ‘நாடகம்’ மற்றும் அக்கைதுக்கு பின்னணியில் என்ன இருந்தது என்பதற்கும் பற்றியது (அவர் எதுவித குற்றமும் அற்ரவர் என நீதிபதி விடுவித்தது கவனத்தில் எடுத்தல் நலம்).
    இதில் நான் முதலில் எழுதிய கருத்து (on May 31, 2010 5:13 pm ) ஒரு ஜனநாயக நாடு என நிமிடத்துக்கு 60 தடவை சொல்லிக்கொள்ளும் ஒரு நாட்டில் சட்டம் எவ்வாறு பிரயோகிக்கப்படுகிறது என இருந்தது.
    பின்னர் ( on May 31, 2010 6:06 pm )இட்ட பின்னூட்டத்தில் கைதின் பின்னணியில் என்ன இருந்தது என நான் கொழும்பில் கேள்விப்பட்ட விடயம் எழுதி இருந்தேன் . இதில் ‘ஒரு பகுதி’ ராணுவம், பெளத்த பீடம் எனவே குறிப்பிட்டிருந்தேன். ஒட்டு மொத்த சிங்களவரைரோ பெளத்தரையோ குறிப்பிடவில்லை. மேலும் இதில் சந்திரிகா சார்ந்த ‘அரசியல்’ பின்னணியும் உண்டெனெவும் கேள்விப்பட்டதை தெளிவாக குறிப்பிட்டுள்லேன். ஆனால் நீங்கள் (chandran.raja on June 1, 2010 11:37 am ) எனெக்கு இனவாதிப்பட்டம் வழங்கியது மட்டுமல்லாது இவ்விவாதத்தை ஒரு இனவாத விவாதம் என மாற்றி நிற்கிறீர்கள்.

    //….அதையெல்லாம் கண்டும் கானாமலும் ஆதரித்து வந்தவர்கள் தானே நீங்கள். இனியென்ன பட்டத்தைப்பற்றி வியாக்கியானம் தேடக்கிடக்கு?.//
    அப்போ ”கண்டும் காணாமல்” இருந்தால் பேச அருகதையே இல்லை என்கிறீர்களா? அது உங்களுக்கும் பொருந்தும் என்பதையும் கவனத்தில் எடுக்கவும்!

    //… யாழ்பாண மத்தியதர புத்திக்கும் தன்னை ஈடுபடுத்தியவர் அல்ல…..//
    ஓ…அப்படியா? நீங்கள் அவரின் சுயசரிதைகளான “A man and his ideas” மற்றும் “From thirld world to first world” படிக்கவில்ல போலும். அவற்றில் ‘யாழ்ப்பாண தமிழர்” என வலிந்து சுட்டிக்காட்டி அவர்களுக்கு என்ன நடந்ததனால் ஸ்ரீலங்கா மோசமாகியது என சொல்லி இருக்கிறார். படித்துப்பாருங்கள் இன்ரஸ்ரிங் ஆக இருக்கும்.

    //… பல இனங்கள் சேர்ந்துவாழ முடியும் என காட்டியவர்….//
    நான் கேளாமலே எனது பொயின்ருக்கு வருகிறீர்கள். லீகுவான் யூ தான் இந்த பாடத்தை ஸ்ரீலங்காவி்ன் மோசமான இனவாதக் கொள்கைகளில் இருந்து பாடமாக எடுத்தே தனது நாட்டை கட்டியெழுப்பியதாகவும் கூறி இருக்கிறார். மீண்டும் இதில் முக்கியமாக குறிப்பிடுவது ‘யாழ்ப்பாணத் தமிழர்” பற்றி! கட்டாயம் படியுங்கள் சந்திரன் ராஜா! அண்மையில் வந்த “”Conversations with Lee Kuan Yew” வில் மஹிந்தாவை ஒரு சிங்கள இனவாதி என சொல்லி இருப்பதையும் கவனிக்கவும்!

    Reply
  • Ajith
    Ajith

    Here the debate is about the unlawful arrests by a state that is racist and responsible for human rights violations, genocide of tamils and war crimes.

    Reply