மனிதநேயன் வை சி கிருபானந்தனுக்கு தேசம்நெற் இன் கண்ணீர் அஞ்சலி!

Kirubananthan_Vai_Siதேசம்நெற் இணையத்தின் நீண்ட நாளைய கருத்துப்பதிவாளர் வை சி கிருபானந்தன் காலமானார். பார்த்தீபன் என்ற புனைப்பெயரில் தனது கருத்துக்களை பதிவிட்டுவரும் வை சி கிருபானந்தன் ஒரு மனிதநேயன். நேற்று ஒக்ரோபர் 18 2010ல் மரடைப்பால் கிருபானந்தன் உயிரிழந்தார். அவருக்கு தேசம்நெற் இன் கண்ணீர் அஞ்சலிகள்.

யாழ் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் சுவிஸ்நாட்டில் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றார். காலம்சென்ற சிவஞானம் சரஸ்வதி தம்பதிகளின் புதல்வரான வை சி கிருபானந்தன் சத்தியபாமா(Eriswil) அவர்களின் அன்புக் கணவரும் பிரதீபன், கௌரிசங்கர்(கௌசி), பிரியங்கா ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். வை சி கிருபானந்தனின் பிரிவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கு தேசம்நெற் இணையத்தின் சார்பிலும் அதன் வாசகர்கள் கருத்தாளர்கள் சார்பிலும் எமது ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

‘கட்சி அரசியல் எதனிலும் ஈடுபாடற்ற இவர் மிகுந்த அரசியல் ஆர்வலர். சுவிஸில் நடைபெறுகின்ற அரசியல் கூட்டங்களில் பங்குபற்றி தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்து வருபவர்’ என்கிறார் அவருடைய நண்பர் அஜீவன். ‘அவருடைய இழப்பு நல்ல நண்பனின் நல்ல மனிதனின் இழப்பு’ எனத் தன் துயரைப் பகிர்ந்து கொண்டார். அஜீவன் மேலும் குறிப்பிடுகையில், ‘மிகவும் சமூக அக்கறை கொண்ட இவர் புறூக்டோர்ப் தமிழ் பள்ளியை நடத்துவதிலும் உதவி வருவதாகத் தெரிவித்தார்.

Kirubananthan_Vai_Siடயஸ்பொரா டயலொக் ஜேர்மனியில் ஏற்பாடு செய்த சந்திப்பில் நான் (த ஜெயபாலன்) வை சி கிருபானந்தனை முதற்தடவையாகச் சந்தித்தேன். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு புனைபெயரில் தான் கருத்துப் பதிவிடுவதையும் குறிப்பிட்டு தேசம்நெற் இன் பணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். அதன் பின்னர் சுவிஸ் மாநாட்டுக்குச் சென்றிருந்த போதும் சந்தித்துக்கொண்டோம். முகமறியாது இணையத்தில் உரையாடிய போதும் முகமறிந்து நேரில் உரையாடிய போதும் அவருடைய மனிதநேயத்தில் மாற்றம் இருக்கவில்லை.

இந்த துயரச் செய்தியை வை சி கிருபானந்தன் (பார்த்தீபன்) யூலை 01 2009ல் பதிவிட்ட கருத்துடன் நிறைவு செய்கிறேன்.

”இலங்கை சுதந்திரம் அடைந்த பின் சிங்களத் தலைமைகளும், தமிழ்த் தலைமைகளும் அரசியலை இன ரீதியாக வளர்த்து பிளவுகளை ஏற்படுத்தி வந்ததே, நாட்டின் இன்றைய இவ்வளவு சீரளிவுகளுக்கும் காரணம். அதே தவறுகளை தொடர்ந்தும் செய்வதைத் தவிர்த்து, இனங்களுக்கிடையேயான ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி எல்லா இன மக்களும் சமத்துவமாகவும், சகோதர மனப்பான்மையுடனும் சேர்ந்து வாழும் நிலையை அரசும் அனைத்து மக்களும் சேர்ந்து ஏற்படுத்த முன்வர வேண்டும். அப்போது தான் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப்பாகுபாடுகள் ஒழிந்து, எல்லோரும் இலங்கை மக்கள் என்ற பொதுவான எண்ணம் தாமாக உருவாகும்.”
பார்த்தீபன், யூலை 01 2009 தேசம்நெற்.

Show More
Leave a Reply to S.M.M.Bazeer Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

64 Comments

  • மாயா
    மாயா

    தேசம் நெடடீல் பார்த்தீபன் எனும் பெயரில் தமது கருத்தகளை எழுதி வந்த கிருபா (வைசீ) மாரடைப்பால் காலமானார் எனும் செய்தி கேட்டு கலங்கி நிற்கிறோம்…
    வைசீயின் இழப்பால் துயருரும் அவர் குழும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.

    மேலதிக விபரங்கள்:

    திரு சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வை.சி)
    மறைவு : 18 ஒக்ரோபர் 2010

    அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் கிருபானந்தன் அவர்கள் 18.10.2010 திங்கட்கிழமை அன்று காலாமானார்.

    அன்னார், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் பத்மாவதி தம்பதிகளின் கனிஷ்டபுதல்வனும், காலஞ்சென்ற இளையகுட்டி சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும்,

    சத்தியபாமா(Eriswil) அவர்களின் அன்புக் கணவரும்,

    பிரதீபன், கௌரிசங்கர்(கௌசி), பிரியங்கா ஆகியோரின் அன்புத்தந்தையும்,

    நளாயினி(கனடா), தயாளன்(சுவிஸ்), நித்தியானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தம்பியும்,

    பாலகுமார்(கனடா), சுமித்திரா(இலங்கை), சகுந்தலாதேவி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

    கதிர், கார்த்திகா(கனடா) ஆகியோரின் மாமனாரும்,

    வைஷ்னவி(இலங்கை), நிருபன், நிதர்சனா ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

    அன்னாரின் பூதவுடல் Friedhof Huttwil, Friedhofweg 37A, 4950 Huttwil என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

    தகவல்
    குடும்பத்தினர்
    தொடர்புகளுக்கு
    மனைவி, மக்கள் — சுவிட்சர்லாந்து
    தொலைபேசி: +41215080486
    செல்லிடப்பேசி: +41629662273
    தயாளன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
    செல்லிடப்பேசி: +41764616802
    S.தில்லைநாதன் — சுவிட்சர்லாந்து
    தொலைபேசி: +41564430167
    குகசீலன் — சுவிட்சர்லாந்து
    தொலைபேசி: +41326854417
    சத்தி — சுவிட்சர்லாந்து
    தொலைபேசி: +41765122971
    நளாயினி — கனடா
    தொலைபேசி: +19052019298
    நித்தியானந்தம் — கனடா
    தொலைபேசி: +19054600480

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    வைசீ (பார்த்தீபன்) என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் கிருபாவின் இழப்பு கேட்டு சற்று நேரம் பேச முடியாமல் ஆனேன். பல காலமாக கிருபாவோடு பழகி வந்துள்ளேன். எமக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டாலும்; அதை பெரிதுபடுத்தாது தொடர்ந்து பேசும் ஒரு மனம் கொண்டவர் என்பதையிட்டு இப்போதும் வியப்பாகவே இருக்கிறது. அந்தளவு பாரபட்சம் பார்க்காதவர். சுவிசில் எந்த ஒரு தகவலையும் கிருபாவோடு பேசினால் ; அதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அந்த அளவு பல விடயங்களை தனக்குள் சேமித்து வைத்திருப்பார். தவறான தகவல்களை வழங்கவே மாட்டார். அந்த அளவு நேர்மையானவர்.

    அரசியல் பார்வையில் மிக வித்தியாசமானவராகவே என்னால் காணப்பட்டவர். ஒரு முறை ஒரு தரப்பினரை சாடும் அவர்; மறுமுறை அதே தரப்பினர் செய்யும் அல்லது செய்த நல்லவற்றை சொல்லவும் தயங்காதவர். ஏதாவது உதவி தேவையெனில் தனக்கு தெரியாவிட்டால் ; தன் குழந்தைகள் மூலமோ அல்லது தனது நண்பர்கள் மூலமோ கேட்டு என்ன செய்தால் நல்லது என்பதற்காக விளக்கம் அளிப்பார். வைசீ ; பல நேரங்களில் ஒரு திறந்த புத்தகம். அரசியல் காழ்புணர்வுகள் இல்லாதவர். அரசியலும் செய்ய விரும்பாதவர். இது எனக்கு அவரிடம் மன நீதியான நட்பை அதிகரிக்கச் செய்தது. இவை பொய்யல்ல என்பது அவரோடு நன்கு பழகியவர்களுக்கு புரியும்.

    இன – மத – மொழி என்ற எந்த வேறுபாடும் இல்லாது மிக மென்மையான போக்குடன் அனைவரையும் விரும்பும் போக்கு கொண்டவர். அதே நேரம் யார் தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்டத் தயங்காதவர். பல வேளைகளில் என்னோடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருந்தாலும் அந்த நட்பு பிரியாது இருக்க அவரது உண்மையான உணர்வுகளே காரணம் என அறிவேன்.

    இவரது இழப்பு நிச்சயம் எம்மைப் போன்ற நண்பர்களுக்கே தாங்க முடியாத போது ; அவரது குடும்பம் எப்படித் தாங்கும் என்பதை என்னால் நினைத்தே பார்க்க முடியாமல் உள்ளது. அவரது இழப்பை நண்பன் சுதாகரன் எனக்கு அறிவித்ததும் ; நான் இருக்காது என எண்ணினேன். சற்று நேரத்தில் சுதாவிடம் “இது உண்மையா?” என்று கேட்டு விட்டே கிருபாவின் வீட்டுக்கு தொடர்பு கொண்டேன். மனைவி பேச முடியாமல் இருந்தார். இரண்டாவது மகன் பேசினார்.” ஓம்… இன்று (நேற்று) அதிகாலை அப்பாவுக்கு மூச்செடுக்க முடியாமல் போனது. அம்புலென்சுக்கு போண் பண்ணி வந்தும் பிரயோசனமில்லை. அண்ணா அப்பாவை வச்சிருக்கிற இடத்தில நிக்கிறார்” என்றார். என்னால் பேச முடியவில்லை. நான் பிறகு கதைக்கிறன் என்று வைத்துவிட்டேன். அப்போது எனக்கு வந்த சில அழைப்புகளை எடுக்கவும் மனம் வரவில்லை. அந்த அளவு அதிர்ச்சியாக இருந்தேன்.

    கிருபாவை தெரிந்த எனது நண்பர்களுக்கு மின் அஞ்சல்களை நேற்றே அனுப்பிவிட்டு தேசத்துக்கும் தெரிவித்தேன். இன்று காலை நண்பர் ஜெயபாலன் என்னோடு தொடர்பு கொண்ட போது மேலதிக தகவல்களை பகிர்ந்துர் கொண்டேன். ஜெயபாலனுக்கு கிருபாவை தெரியும் என்பதால் அவர் குறித்த தகவல்களை சொல்ல வேண்டும். அத்தோடு தேசத்தில் “பார்த்தீபன்” எனும் பெயரில் எழுதி வந்தார் என்றால்தான் வாசகர்களுக்கு புரியும் என நினைத்தேன். பார்த்தீபன் எனும் பெயரில் எழுதுவது கிருபாதான் என்பது எம்மைப் போன்ற நண்பர்களுக்கு தெரியும். அதை அவர் ஜெயபாலனிடம் ஜேர்மனியில் வைத்து சொன்னதாக என்னிடம் சொல்லியிருந்தார். அவரது கருத்துகள் இணையத்தில் அல்லது வானோலியில் அல்லது பகிரங்க அரங்குகளில் கடுமை போல் தோன்றினாலும் ; அவரது ஆணித்தரமான வாதங்களுக்கு பின்னால் மனிதநேயம் ; உண்மை என்பது இருப்பதை அனைவராலும் உணர முடியும். அதுவே வைசீ எனும் கிருபாவின் பலம்.

    அவரது இழப்பின் துயரால் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும்; நண்பர்களுக்கும் எமது ஆழந்த அனுதாபங்கள்.

    வைசீயின் ஆத்ம சாந்திக்காக அனைவரும் பிராத்திப்போம்.

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    சுவிசின் வானோலியில் வைசீ கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவரது குரலை கேட்கலாம்.

    இங்கே அழுத்துங்கள்:
    http://www.zshare.net/audio/721954391d8bf148/

    Reply
  • T Constantine
    T Constantine

    I am extremely shocked and sadden by Kirupas departure. Without knowing anyone in Little Aid he telephoned me several time and gave several contacts to me who may assist Little Aid. Couple of months ago he telephoned me regarding forming a Little Aid branch in Swiss. I still have several paperwork in my tray with the reference KIRUPA SWISS.

    I am glad the I have been in touch at least over the phone. He will be greatly missed. I am sure he has lived his life to full although he departed early.

    Reply
  • ameen
    ameen

    தேசம் நெட்டில் ஆக்கபூர்வமான கருத்துகளை எழுதி வந்த பார்த்தீபன் மாரடைப்பால் காலமானார் எனும் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அன்னாரின் இழப்பு தேசம் நெட்டுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

    அன்னாரின் பிரிவால் துயருற்றுள்ள அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரது ஆத்மா சாந்தியடைய மனதாரப் பிரார்த்திக்கின்றேன்

    புன்னியாமீன்

    Reply
  • THAMILMARAN
    THAMILMARAN

    உடைந்து போனேன்.என்ன சொல்வது எதைச் சொல்வது வாழும்போது நெருக்கமாய் வாழும் கலையைக் நாங்கள் கற்கவில்லையே.பார்த்திபா…மனதுக்கு நெருக்கமாய் வசித்தவனே..ஒவ்வொன்றயும் பகிர்ந்து கொணட சினேக மனதுக்காரனே…..சின்ன வயதுக் குழந்தைபோல நகைச்சுவை செய்தவனே…உடைப்புக்களை உடைத்துக் கொண்டு ஓடிய நதியே உன்னை நிறுத்தியதா மாரடைப்பு. தமிழை நினைத்து மறுபடி எழுங்கள். இந்தச் சிரிப்பை மறுபடி பார்க்க.

    Reply
  • thurai
    thurai

    எனது ஆழ்ந்த அனுதாபங்களை பார்த்தீபனின் குடும்பத்தினரிற்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

    துரை

    Reply
  • chandran .raja
    chandran .raja

    இந்த கணம்தான் இந்த துயரச்செய்தியை அறிந்தேன். தமிழருக்கு மட்டுமல்ல இலங்கைவாழ் உழைப்பாளிமக்களின் அமைதியை குலைத்தவர்கள் புலிகள். அந்த வகையில்…. உறுதியுடன் தனது விமர்சனத்தை முன்வைத்த பார்த்தீபன் திடீர்…..
    அவரின் உறவினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    Reply
  • BC
    BC

    இந்த செய்தி எனக்கு மிகவும் கவலை தருகிறது. பார்த்திபன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறேன்.

    Reply
  • pandithar
    pandithar

    நல்ல நண்பன்.. நேரிய சிந்தளையாளன்…துணிச்சலான செயற்பாட்டாளன்… சிறந்த அரசியல் நோக்கன்….. திறந்த மனத்தன்… நல்ல மனிதன்…. தமிழ் பாசிசம் உருக்கொண்டு எழுந்து மாற்று சிந்தனையாளர்களை கருவறுத்து தெருவில் எறிந்து கொண்டிருந்த ஆபத்தான சூழலிலும் தன் கருத்தியலை இவன் கெட்டியாக பிடித்து வைத்திருந்தவன்…

    வை சி கிருபா என்ற அந்த மனிதனுக்கு நான் மரியாதை செலுத்துகின்றேன்….

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    வைசீ.கிருபானந்தன் (பார்த்திபன்) அவர்களது உடல் வைக்கப்பட்டுள்ள படங்கள்……

    http://www.facebook.com/photo.php?fbid=10150101253878902&set=a.10150101252733902.318617.823993901

    எதிர்வரும் திங்கட்கிழமை இறுதிக் கிரிகைகள் நடைபெற உள்ளன. ….

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    முகம்தெரியாமல் கருத்துக்களினால் நண்பனாகிய வை சி கிருபானந்தன்(பார்த்திபன்) மறைவு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது இழப்பால் துயருறும் அவரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஜெயராஜ் பிரான்ஸ்

    Reply
  • Kalamohan
    Kalamohan

    இவன் கருத்துக்கள் பல கேட்பதற்காய் நான் காத்திருந்ததுண்டு – இன்று தெளிவானேன்
    காலம் வருமுன்பே இவன் காலமாகிவிட்டானென்று!

    உண்மைகளை உலகிற்கு உரத்துச்சொன்னான் – அதனால் இவன்
    எம் உள்ளங்களில் உத்தமனாகிப்போனான்!

    இவரது திடீர் இழப்பினால் துயருறும் அவரது குடும்பத்திற்கும் மற்றும் சமூகநலன் அமைப்புக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

    “அமர் அகத்து வன்கண்ணர் போலத் தமர் அகத்தும்
    ஆற்றுவார் மேற்றே பொறை” – குறள் 1027

    Reply
  • BC
    BC

    இப்போ தேசம்நெற் பார்க்கும் போது நினைத்தேன் இனிமேல் நம் பார்த்திபனின் பின்னோட்டங்களை பார்க்கவே முடியாது என்று. வலிக்கிறது.

    Reply
  • aathav
    aathav

    பார்த்திபன் மறைவு> நாமெல்லோரும் எதிர்பாராத ஒன்று. கடந்த காலங்களில் நாம் தேசம்நெற்றில் பல விடயங்களில் அவரோடு உடன்பட்டும் முரண்பட்டும் விவாதித்துள்ளோம்! அதையும்>அவரையும் நினைக்கும்போது….மேலும் அவர் மறைவால் துயருறும் அவர் குடும்பத்தினருக்கும்> ஏனையோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    தேசம்நெட்டில் ஆக்கபூர்வமான கருத்துகளை எழுதி வந்த பார்த்திபன் மாரடைப்பால் காலமானார் எனும் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அன்னாரின் இழப்பு தேசம் நெட்டுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

    அன்னாரின் பிரிவால் துயருற்றுள்ள பார்த்திபனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    கருத்து களங்களின் முன்னணியாளர் ஒருவரை எமது சமூகம் இழந்துள்ளது தேசம்நெற்றில் 3500க்கும் மேற்ப்பட்ட பின்னூட்டங்களை எழுதிய பார்த்திபனின் இழப்பு தேசம்நெற்றின் வாசகர்களுக்கும் கருத்தாளர்களுக்கும் பேரிழப்பாகும். தேசத்தின் பின்னூட்டகளத்தின் இயங்கு சக்தியாக இருந்த பார்த்திபனின் இழப்பு பேரிழப்பாகும்.

    தவறான கருத்துக்கள் வரும்போது அவற்றை திருத்தி கருத்தாளர்களை திருத்திக்கொள்வதிலும் கட்டுரைகளில் தவறுகளையும் சுட்டிக்காட்டி திருத்தியமைப்பதில் பார்த்திபன் பண்பாக செயற்ப்பட்டவர். தனது கருத்துக்களை மற்றவர்களிடம் பகிர்வதிலும் மிகவும் பக்குவமாய் நடந்து கொண்ட தோழனை நினைவு கூர்கிறேன்.

    முகம்தெரியாமல் கருத்துக்களினால் தோழமை பாராட்டிய வை சி கிருபானந்தன் (பார்த்திபன்) ஆத்மசாந்திக்காக பிராத்திக்கிறேன்.

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.!!

    Reply
  • Kulan
    Kulan

    தமிழர்கள் வாக்கு யாருக்கு என்று கட்டுரையில் கடைசியாக நாம் பரிமாறிய கருத்துக்களையும் என்முன் வைக்கப்பட்ட கேள்விகளையும் எண்ணிப்பார்க்கிறேன். கருத்துக்களைக் கருத்துக்களால் சந்திக்கும் வல்லமையும் தன் கருத்தை நடுநிலைதவறாது சிந்தித்து தரம்கண்டு பிழையினை ஒத்துக் கொள்ளும் வீரமும் பலருக்கு இருப்பதில்லை. இறுதியாக நீங்கள் கொடுத்த உங்கள் விரல்களால் மீட்டிய வரிகளை இங்கே மீண்டும் பதிவு செய்கிறேன். சாகாத வரிகளின் சங்கமம் இது.
    //”பார்த்திபன் on December 28, 2009 12:19 am
    நன்றி குலன் மற்றும் பல்லி உங்கள் புரிந்துணர்வான கருத்துகளுக்கு.
    உண்மையில் இப்படியான பின்னூட்டங்களினூடான விவாதங்கள் நாம் தெரிந்து கொள்ளாத அல்லது மற்றவர்கள் தெரிந்து கொள்ளாத பக்கங்களையும் எமக்குக் காட்ட உதவும். அதனூடு பல தகவல்களை நாமும் பெறுகின்றோம் எமக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கும் வழங்குகின்றோம். இதற்கு தளம் அமைத்துக் கொடுத்த தேசம் நெற் மூலம் உங்களைப் போன்ற பல தரமான கருத்தாளர்களோடு கருத்தாட முடிகின்றது”//

    இனிப் பார்த்திபனிடம் இருந்து எமக்குக் கீதை கிடைக்காது. கண்ணீர் வரிகளால் கனக்கும் இதயத்தில் அஞ்சலி எழுதுகிறேன் உங்கள் ஆத்மசாந்திக்காக. என்றும் எம் இதயங்களில் என்றும் இருப்பீர்கள். சாந்தி சாந்தி சாந்தி

    Reply
  • palli
    palli

    கண்ணீர் துளி கூட வர மறுக்கிறது,
    நீ என் நண்பனா தோழனா
    இதுவரை தேடினேன்
    தெரியாமல் தவித்தேன்

    எதுவுமே இல்லை நான்
    தெய்வமடா பல்லி நான்
    என மனதை உடைத்து விட்டாய்;

    தேசத்தின் நிலமைகளை
    தேசத்தில் எழுதி விட்டு
    தேசத்தை விட்டு நீ
    எங்குதான் போய் விட்டாய்;

    முகம் தெரியா
    நண்பர் நாம்
    ஆனாலும் தோழர்தான்
    அடிக்கடி உன் கருத்தை
    திருடிய பல்லியிவன்;

    உன் முகம் பார்க்க வேண்டும்
    கதறி அழ வேண்டும்
    முடியாமல் தவிக்கிறேன்
    நண்பனே பார்த்திபா,

    தேசத்தின் தூண் ஒன்று
    தென்றலாய் பறக்கிறது
    இவனது பதிவிடத்தை
    ஈடு செய்ய யாரும் இல்லை;

    முடிக்க முடியவில்லை
    முடிக்கிறேன் கண்ணீர் துளியை;

    நண்பன் பார்த்திபன் செய்தி கேட்டு
    துடித்து துவண்டு விட்டேன், உனது
    ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்,

    பல்லி குடும்பம் உன்னை என்றும்
    நினைவு கொள்ளும்,

    எம் நண்பன் பார்த்திபனுக்கு பல்லி
    குடும்ப கண்ணீர் துளிகள்.

    பல்லி குடும்பம்;

    Reply
  • kadavul
    kadavul

    பார்த்தீபனின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும் தேசம் இணையவாசகர்களுக்கும் ஓர் பேரிழப்பே. அவரது பல கருத்துக்களை தேசம் பின்னூட்டத்தில் வாசித்துள்ளேன். முதன் முறையாக அவரது முகத்தை மரணத்தின் வாயிலாக பார்க்க நேரிடுவது துர்ப்பாக்கியமே. அவரது கருத்துக்கள் எம்முடன் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும்.

    Reply
  • கந்தையா
    கந்தையா

    பார்த்திபன் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

    Reply
  • மாயா
    மாயா

    திரு சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வை.சி) ; பார்த்தீபனின் பூதவுடல்

    20.10.2010, 21.10.2010, 22.10.2010 புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் மாலை 15:00 மணியிலிருந்து 20:00 மணிவரைக்கும்,

    23.10.2010, 24.10.2010 சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் காலை 10:00 மணிமுதல் இரவு 20:00 மணிவரைக்கும் Friedhof Huttwil, Friedhofweg 37A, 4950 Huttwil என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு,

    ஈமக்கிரியைகள் 25-10.2010 திங்கட்கிழமை அன்று மதியம் 13:00 மணிமுதல் 15:00 மணிவரை Krematorium, Geissbergweg 29, 4900 Langenthal BE என்னும் முகவரியில் நடைபெறும்.

    இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

    தகவல்
    குடும்பத்தினர்

    Reply
  • நந்தா
    நந்தா

    நல்ல கருத்துக்களை முன்வைத்த அன்பர் திடீரென்று வானத்து நட்சத்திரமாகிவிட்டார். அவர்தம் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்!

    Reply
  • accu
    accu

    தற்போதுதான் தேசம்நெற்ரை திறந்தேன். அங்கு பார்த்திபனின் மரணச் செய்தி கண்டு திடுக்குற்றேன்.முகம் அறியா இந் நண்பனின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. மிகவும் நேர்மையான கருத்தாளனாய் என் மனதில் நிறைந்திருந்த பார்த்திபன் எனும் வை.சி கிருபானந்தனின் மறைவுக்காய் அவரின் குடும்பத்தார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவருடனும் எனது துயரைப் பகிர்ந்துகொள்கிறேன். அக்கு.

    Reply
  • kuru
    kuru

    பார்த்தீபனுக்கு எனது அஞ்சலிகள்.
    இந்த பார்தீபன் யார் என்று இப்பவாது தெரியுது. ஆனால் எமது தாயக விடுதலைக்காக உயிர் கொடுத்த பலர் யார் என்று இன்னும் தெரியவில்லை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    செய்தி கேட்டு மிகக்கவலை. நான் அனேகமான தருணங்களில் அவருடன் மிகுந்த கருத்து மோதல்களில் ஈடுபட்டிருக்கிறேன்.
    அண்மக்காலமாக அவரின் கருத்துகளை இங்கே காணவில்லை. அவருக்கு ஏதாவது நடந்திருக்குமோ என ஐயமுற்ற வேளையில் இச்செய்தி வந்திருக்கிறது. குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    Reply
  • KUHA NATHAN SS
    KUHA NATHAN SS

    பார்த்திபன் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

    Reply
  • Cllr.D.Paul Sathianesan
    Cllr.D.Paul Sathianesan

    I am deeply saden and in shock to hear about Mr.KIrupa’s depature. i met him in Germany at the Diaspora conference 2009. he was a simple humble but pakka gentleman. as a proud European Tamil he has made his real contributions to our community.

    i dont know him until we met for lunch during the conference in Germany, he apriciated my views and encouraged me. he acepted my vales and principles. when i wrote comments about the diaspora conference he valed my comments with open heart, contacted me text me his home number and mobile i still have that in my mobile. gave me the real inside of the Tamil politics and how he wish to see the future. we had several conversations which enlighten me in many ways to understand many people thanks to Him.

    a man who had his own style, political views in an open manner with honesty & Integrity. as many of our friends mention here in their tributes he is a real humanitarian champion, always wanted to be an advocate for Peace and Reconciliation in our mother land very helpful loving heart.

    ” A Golden Heart stop beating, hard working hands at rest, God prove to us he only take the best therefor he has taken the best. today as friends, relatives and family we dont say Good bye but we say good night, because we belive that we will meet again”

    my love and thoughts to his wife and children and family. pray to God that his wonderful soul rest in peace.

    Love

    Cllr.D.Paul Sathianesan
    London

    Reply
  • பானுபாரதி, தமயந்தி
    பானுபாரதி, தமயந்தி

    மனிதநேய செயற்பாட்டாளர் வை சி கிருபானந்தன் அவர்களுக்கு எமது அஞ்சலிகளையும், அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தாருக்கு அனுதாபங்களயும் பகிர்ந்து கொள்கின்றோம்.

    பானுபாரதி, தமயந்தி

    Reply
  • uma
    uma

    தேசத்தில் பின்னூட்டகளத்தினூடாக மட்டுமே பார்த்திபன் எனக்கு அறிமுகமானவராக இருந்தபோதிலும் இவரின் மறைவுச் செய்தியை பார்த்ததும் ஓர் உடன்பிறந்த சகோதரனை இழந்த உணர்வே ஏற்பட்டது. மிகவும் அதிர்ச்சியான செய்தி. பார்த்திபன் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்க்கும் நண்பர்கள் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பார்த்திபனின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கின்றேன்.
    ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

    Reply
  • Gee
    Gee

    ஆக்கபூர்வமான விமர்சகர் பார்த்திபனின் மறைவு வாசகர்களுக்கும் பெருமிழப்பு. அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடைய நண்பர்களுடன் நானும் பிரார்த்திக்கிறேன்.- Gee, Herts, UK

    Reply
  • Kusumpu
    Kusumpu

    சரியான தகவலை சரியான நேரத்தில் தேசத்துக்குக் கொடுத்துதவிய அஜீவன் மாயா போன்றவர்களை போற்றியே ஆகவேண்டும். மறைவுகளுடன் மறைவதில்லை மானிடம்

    Reply
  • Indiani
    Indiani

    ஆரோக்கியத்துடன் இருந்த பார்த்திபனுக்கு…. திடீரென மனம் தாங்கிக்கொள்ள முடிவில்லை பார்த்திபன் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    சிவபதம்பெற்ற பார்த்திபன் வாழும்காலத்தில் எப்படி வாழ்ந்தார் என்பதை தேசத்தில் அவர் எழுதியவற்றிலிருந்து அவரை நேசிக்கிறேன்.

    ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

    Reply
  • மாயா
    மாயா

    இங்கு பார்த்தீபனுக்கு அஞ்சலியாக பதிவிட்ட தேசம் நண்பர்களுக்கும் ; தேசம் நிர்வாகத்துக்கும் நன்றி.

    முகம் தெரியாமல் உறவுகளாகி ; முகமறியாமல் வருந்தும் அனைவரும் கருத்து மோதல்களில் ஈடுபட்டாலும் > மனத்தளவில் மனிதத்தோடு வாழ்கிறோம். நன்றி.

    Reply
  • London boy
    London boy

    மனிதநேய செயற்பாட்டாளர் வை சி கிருபானந்தன் அவர்களுக்கு எனது அஞ்சலிகளையும் அவரது இழப்பில் துயருறும் அவரது குடும்பத்தாருடன் அனுதாபங்களயும் பகிர்ந்து கொள்கிறேன் துணிந்து கருத்துக்களை முன்வைக்கும் அந்த மனிதம் என்றும் எம்முடன் வாழும்.

    Reply
  • மாயா
    மாயா

    This is good info Heart attack.
    ————————
    We did not know that you should not lie down while waiting for the EMT

    Heart attack info NEW ASPIRIN/ Serious stuff, no joke!!

    Just a reminder to all: purchase a box, keep one in your car, pocketbook, wallet, bedside, etc.

    IMPORTANT READ……

    Something that we can do to help ourselves.

    Nice to know.
    Bayer is making crystal aspirin to dissolve under the tongue. They work much faster than the tablets.

    Why keep aspirin by your bedside?
    About Heart Attacks

    There are other symptoms of an heart attack besides the pain on the left arm.
    One must also be aware of anintense pain on the chin, as well asnausea and lots of sweating,

    however these symptoms may also occur less frequently.
    . Note: There may be NO pain in the chest during a heart attack

    The majority of people (about 60%) who had a heart attack during their sleep, did not wake up.

    However, if it occurs, the chest pain may wake you up from your deep sleep.

    If that happens, immediately dissolve two aspirins in your mouthand swallow them with a bit of water.
    Afterwards:

    CALL Ambulance

    – say “heart attack!”
    – say that you have taken 2 aspirins..
    – phone a neighbour or a family member who lives very close by
    – take a seat on a chair or sofa near the front door, and wait for their arrival and…
    DO NOT lie down

    A Cardiologist has stated that, if each person, after receiving this e-mail, sends it to 10 people, probably one life can be saved!

    I have already shared the information- – What about you?

    Do forward this message; it may save lives!

    -http://mail.google.com/a/ajeevan.com/#inbox/12bcae24b88c2db7

    Reply
  • S.M.M.Bazeer
    S.M.M.Bazeer

    I am sorry to hear about Vai CEE’s sudden death. I had the privilege of meeting him in Stuttgart a couple of years ago.

    I was fascinated by his openness and courage in his beliefs.It is indeed a great loss not only to his family but also to those who admired him as a man of great ideals. He was a vocal and notable critic of unrelenting Tamil Party politics.

    I wish to convey my heartfelt condolence to his bereaved family and friends.

    S.M.M.Bazeer
    London

    Reply
  • palli
    palli

    18-10-2010 திடீர் என்று எங்களையெல்லாம்விட்டு பிரிந்து சென்ற அமரர் வை சி கிருபானந்தனுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக ரிபிசி வானொலியில் அஞ்சலி நிகழ்ச்சி வியாழன் இரவு 8 மணியில் இருந்து 10 மணவரையும் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள் 00 44 208 9305313/6211775
    skype ID tbcuklive

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    …பார்த்திபன் தேசத்தில் பின்னூட்டமிடும்போதெல்லாம் என் து}ண்டில் நண்பன் பார்த்திபனே ஞாபகத்துக்கு வருவான்.இப்போது பூரணமாக அது தூண்டில் பார்த்திபன் இல்லையெனவுணரப்பட்டாலும் இந்தப் பார்த்திபனது பின்னூட்டத்திலிருந்து “எம்மோடு உரையாடிய-உறவாடிய சக மனிதராகவுணரும்போது” அவரது இழப்பு மெலிதாகவேனும் நெஞ்சில் கீறும் ஏதோவொரு உணர்வில்-“மெளனித்திருந்த உலகத்தில்” தனது கருத்துக்களைச் சொல்லிச் சென்றவரென்ற முறையில்-மேலும் இழப்பின்வலி அதிகமாகிறது.

    அவரது இழப்பினால் துயருறும் அவர்தம் குடும்பத்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் அனுதாபமும் உண்டு. இழப்பின் வலியோடு துயருறும் அனைவரோடும் நானும் பங்குகொள்கிறேன்.

    Reply
  • Nackeera
    Nackeera

    உன்மறைவிலும் மனிதம் உயிர்க்கும்

    கருத்தால் களமாடிய நண்பனே!
    எக்கருக்களமாடச் சென்றனையோ?

    கருகிப்போகும் உடலில்
    கருகாத கருத்துக்களை
    களமாடிச் சென்றவனே
    நிலமாடிப் போதே நண்பா!

    அஞ்சி அஞ்சி வாழ்ந்து
    அஞ்சலிகளே வாழ்வானபின்
    மிஞ்சி இருந்து என்ன வென்று
    அஞ்சாது சென்றனையோ?

    மனிதநேயம் என்பது
    மனதினிலே உள்ளதென்று
    மனமிடித்து வெடித்ததே
    மாரடைத்து மென்றதோ?

    வாழும் போது வாழ்த்தாச் சமூகம்
    மாண்டபின்பே மலர்வளையம்.
    வாழும்போதே மனிதம்வாழ
    வாழ்தியவன் நீ
    நீ வாழ யார் வாழ்த்தினார்?

    தூற்றித் தூற்றியே
    மனித ஊற்றற்ற உலகம் – நீ
    காற்றாய் போனபின்
    வாழ்த்திக் கண்வழிகிறது.
    கண்ணீர் ஊற்றி உளல்கிறது

    போற்றி வாழவேண்டிய மனிதா
    தூற்றி வாழ்வதை நிறுத்து
    மனிதத்தை பாரில் பார்த்திபன் போல்
    கூட்டிக் கைகொடுத்து நிமிர்த்து

    உன்மறைவிலும் மனிதம் உயிர்க்கும்
    மனிதமனங்களில் உன்நினைவு நிலைக்கும்.

    உன்நினைவுகளில் நனையும்
    நோர்வே நக்கீரா

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    நோர்வே நக்கீரா ; உங்கள் கவிதை வரிகளை கொண்டு ; பார்த்திபன் விடைபெறும் நாளன்று ஒரு அஞ்சலி நோட்டீசை வைக்கலாம் என நினைக்கிறேன். மேலே உள்ள கவிதை வரிகள் பொதுவானதாக இருக்கிறது. இதில் மாற்றம் ஏதாவது செய்ய விரும்பினால் செய்து தேசத்திலோ அல்லது நேரடியாகவோ அனுப்பி வையுங்கள். அஞ்சலியை பொதுவாக வைசீயின் நண்பர்கள் என எழுதலாம் என நினைக்கிறேன்.நன்றி : நோர்வே நக்கீரா மற்றும் தேசம் என போடலாம்.யாராவது நோட்டீசை செய்யும் திறமையிருந்தால் செய்து அனுப்புங்கள். அல்லது இந்தியாவில் உள்ள எனது நண்பர்கள் மூலமாக செய்து இங்கே அச்சடிக்கலாம். நீங்கள் யாராவது செய்து பீடீஎப்பில் எனக்கு அனுப்பினால் இங்கே அச்சடிக்கலாம். அந்த பொறுப்பு என்னுடையது.

    ஏதாவது வேறு கருத்துகள் இருந்தால் எழுதுங்கள்.

    info@ajeevan.com
    http://www.ajeevan.com

    phone: +41 62 212 96 23 or +41 79 209 12 49

    Reply
  • Guru
    Guru

    டான் தமிழ் ஒளி தொலைக்காட்சியில் இன்று ஐரோப்பிய நேரம் மாலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கும் பார்வைகள் நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் அமரர் வைசி கிருபானந்தனுக்கு அஞ்சலி நடைபெறவுள்ளது

    Reply
  • Nackeera
    Nackeera

    தேசத்துக்கு நன்றி!
    எனதும் பல்லியினதும் கவிதைகளையும் பார்த்திபனுக்கு தேசமூடாக அஞ்சலி செலுத்தியோர் பெயர்களையும் திரு சோதிலிங்கம் அவர்கள் ரிபிசியில் வாசித்திருந்தார். அவருக்கு எமது நன்றிகள்.

    அஜீவனின் வேண்டுகோளுக்கினங்க கவிதையை புனரமைத்துக் கொடுத்துள்ளேன்.

    Reply
  • ashroffali
    ashroffali

    பார்த்திபனின் கருத்துக்களை நான் நிறைய வாசித்துள்ளேன். மனதளவில் பாராட்டியுள்ளேன்.

    கடந்த காலத்தில் என் மனதுக்குள்ளான போராட்டம் மற்றும் எனதும் என் குடும்பத்தினரதும் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டம் என்ற விடயங்களால் நான் தேசம் நெற்றுக்கு வராது போனாலும் அதன் கருத்தாளர்களை ஒரு குடும்பமாகவே நான் கருதி வருகின்றேன். அந்த வகையில் பார்த்திபன் எங்கள் குடும்பத்தில் ஒருவன். அதனால் தான் நண்பன் என்று அழைக்காமல் விட்டுள்ளேன்.

    எங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து மறைந்துள்ள பார்த்திபனுக்கு இதய பூர்வமான அஞ்சலிகள். அவரது உற்றத்தாருக்கு என் ஆழ்ந்த சோகங்கள்.

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    நக்கீராவின் தொலைபேசி அழைப்புக்குப் பின்னர் அவர் தயாரித்து அனுப்பிய இரு அஞ்சலிக் கவிதை மாதிரிகளை அனுப்பியிருந்தார். அதையே சோதிலிங்கமும் அனுப்பியிருந்தார். மிக்க நன்றி. நான் அவற்றை இன்று அச்சகத்தில் கொடுத்து பிரின்ட் எடுத்து விட்டேன். தேசம் நண்பர்கள் சார்பாகவே அந்த அஞ்சலி துண்டு பிரசுரம் வெளியிடப்படும். அதே கவிதை எதிர்வரும் ஞாயிறு சுவிசின் வானோலியில் பார்த்தீபனின் (வைசீ) அஞ்சலாக ஒலிபரப்பப்படும் என்பதை தாழ்மையோடு அறியத் தருகிறேன்.

    Reply
  • Nackeera
    Nackeera

    அஜீவன்! உங்கள் தொடர்பு கிடைத்தது மகிழ்ச்சிக்குரியது. ஒரு நண்பனுக்காக உழைப்பது பெருமைக்குரியது. ஒரு நண்பனின் இறுதியாத்திரைக்கு உழைப்பது ஆத்மதிருப்திக்குரியது. தேசம்நெட் குடும்பவலைப்பின்னலில் பிடிபட்டவர்களின் நானும் ஒருவன் என்பதால் எனது சிறியபங்களிப்பை தேசம்நெற்றூடாகப் பார்த்திபனுக்கு வளங்கியுள்ளேன். அஜீவன் மாயா போன்றவர்கள் அங்கிருப்பதால் திறப்படச்செயலாற்றுவார்கள் என்பது திண்ணம்.

    Reply
  • ckumar
    ckumar

    எனது கல்லூரிக்கால நண்பன் வை.சி.கிருபானந்தன் கடந்த 18.102010 எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற தகவல் என்னையும் எனது குடும்பத்தையும் மிகவும் வேதனையில் ஆழ்த்திவிட்டது.17.10.2010 அன்று பிற்பகல் லங்கெந்தால் தமிழ்சங்கம் நடத்திய சரஸ்வதிபூசையை முன்னின்று சிறப்பாக செய்து முடித்துவிட்டு மாலை 19.00 மணிபோல் எல்லோருக்கும் வீடு செல்வதாக சொல்லிவிட்டு சென்றவர் எங்கள் எல்லோரையும் தவிக்கவிட்டுவிட்டு தான் மட்டும் தனியாக வேறிடம் சென்றுவிட்டார். சரஸ்வதிபூசையில் எங்கள் எல்லோருடனும் மிகவும் சந்தோசமாகவும் கலகலப்பாகவும் பேசினார். இன்று அவர் எங்களை விட்டு சென்றுவிட்டார் என்பதை என்னால் நம்பமுடியாமல் இருக்கின்றது.ஏறத்தாழ 40 வருடங்களாக ஒரு நல்ல நண்பனாக எனது சுக துக்கம் எல்லாவற்றிலும் எனக்கு உற்ற துணையாக இருந்த கிருபாவின் இழப்பை என்னால் தாங்கமுடியாமல் இருக்கும் போது அவரது குடும்பம் எப்படி தாங்கப்போகின்றதோ தெரியவில்லை.
    நண்பன் வை.சி.கிருபானந்தன் அச்சுவேலியில் நல்ல வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்தபோதும் அவர் எந்த சந்தர்ப்பத்திலும் தமது வசதியை வெளிக் காட்டியதில்லை. எப்போதும் எவருடனும் கோபம் கொள்ளாத எல்லோரையும் நேசிக்கின்ற மனிதாபம் மிக்கவராக வாழ்ந்தவர். அடுத்தவருக்கு உதவுவதில் மனமகிழ்ச்சியைக் காண்பவர். சிறந்த சமூகசேவகர். சிறந்த அரசியல் ஆய்வாளர். சிறந்த அரசியல் விமர்சகர்.கருத்தாடலில் வல்லவர்.கருத்துமோதல் பலமணி நேரம் நீடிக்கும். முடிவில் இரண்டு கருத்துக்கள் மோதினதே தவிர நீயும் நானும் மோதவில்லை என்பதில் எப்போதும் தெளிவாக இருக்கவேண்டும் என்பார்.. கருத்துமோதல் முடிந்ததும் குறிப்பிட்டநேரம் இருந்து தனிப்பட்ட விஷயங்களையும் பொழுதுபோக்கு விசயங்களையும் சமூகவிஷயங்களையும் கதைப்பார். அவருடன் பேசும்போது நேரம்போவதே தெரியாது. அவ்வளவுக்கு மிகவும் கலகலப்பாக எப்போதும் பேசுவார். தனது கருத்தை எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மிகவும் தெளிவாக தயக்கமில்லாமல் முன்வைப்பதில் மிகவும் திறமைசாலி.அவருடன் அரசியல் பேசுவது எனக்கு மிகவும் பிடித்த விசயம்.கருத்துக்களை கருத்துக்களுடன் மோதவிடுவதில் கெட்டிக்காரர். ஆனால் எந்த அரசியல் கட்சிகளையோ இயக்கங்களையோ சாராதவர்.இறுதிவரை நடுநிலையாளராகவே இருந்து அனைத்து அமைப்புகளின் தவறுகளையும் விமர்சித்தவர்.மிகநல்ல வாசகர். எல்லா இணையதளங்களையும் பத்திரிகைகளையும் வாசிப்பார். தேசம் இணையதளத்தையும் அவர் தான் பலவருடங்களுக்கு முன்னர் எனக்கு அறிமுகம் செய்தார்.அவரது இழப்பானது தேசம் வாசகர்களுக்கு மட்டுமல்லாது பலநாடுகளில் வாழும் தமிழ்மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும்.
    அன்னரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தவர்கள், மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

    Reply
  • மேளம்
    மேளம்

    பார்த்தீபன் குடும்பத்தாருக்கு மேளம் குடும்பத்தின் கண்ணீர் அஞ்சலி.

    மேளம் குடும்பம்

    Reply
  • Nackeera
    Nackeera

    பிசி- பின்னோட்டங்களை வாசித்துக்கொண்டு வந்தேன். வேதனையுடன் கூடிய பெருமை இருந்தது. ஒரு பின்னோட்டக்காரனுடன் பின்னிப்பிணைந்த இதயங்களை எண்ணி. நீங்கள் பின்னோட்டத்தைப் பெரிதாக எழுதவில்லை
    //இப்போ தேசம்நெற் பார்க்கும் போது நினைத்தேன் இனிமேல் நம் பார்த்திபனின் பின்னோட்டங்களை பார்க்கவே முடியாது என்று. வலிக்கிறது.// இருப்பினும் இறுதியில் நீங்கள் எழுதிய “வலிக்கிறது” என்ற சொல் இதயத்தில் ஆணி ஏறியதுபோல் இருந்தது. சொற்தெரிவு என்பது எவ்வளவு முக்கியம் என்று பாருங்கள். வலிக்கிறது என்றுமட்டும் எழுதி பின்னால் எதுவுமே இல்லாமல் வெற்றிடமாக இருப்பதன் ஆழத்தைக் கவனியுங்கள். அந்த வெற்றிடத்தினுள்ளும் வெறுமையுள்ளும் இப்படி உணர்வுகள் புதைந்துள்ளதே என்று சிலித்துப்போனேன். வலிக்கிறது என்ற சொல்லுக்குப் பின்னால் எதாவது எழுதியிருந்தால் எழுத்தில் வலியிருந்திருக்காது. ஒருசொல் தனியாக மட்டும் நிற்கும்போது ஏற்படும் வலியையும் வலிமையையும் உணர்ந்தேன் பிசி.

    Reply
  • BC
    BC

    மிகவும் நன்றி நக்கீரா. எனக்கு அதிகம் எழுதவும் தெரியாது, அழவும் தெரியாது. முகம் தெரியாத அந்த மனிதநேயன் பார்த்திபனின் மறைவு வலிக்கிறது. அந்த உயர்ந்த மனிதனை அறிமுகம் செய்த தேசம்நெற்றுக்கு நன்றி.

    Reply
  • palli
    palli

    ஆம் இவனே
    எங்கள் பார்தீபன்

    இவன் எழுத்துக்காக
    இவன் பேச்சுக்காக
    இவன் குரலுக்காக
    இவன் தமிழுக்காக
    இவன் குணத்துக்காக
    இவன் அன்புக்காக

    எத்தனை பரிமாற்றம்
    அத்தனையும் பூரணமாய்

    உயிருக்கு பயமின்றி
    உணர்வுகளை பேசியவன்
    உறவுகள் வாழ்வுக்காய்
    உறுதியாய் எழுதியவன்

    அரசியல் களத்திலே
    அமைதியாய் பேசுவான்
    ஆனாலும் இவன் எங்கும்
    அரசியல் செய்யவில்லை

    மாற்றோடும் மாறுபட்டான்
    மாற்றங்கள் வேண்டும் என்று
    அடக்கு முறை எங்கிருக்கோ
    அங்கு இவன் எதிர்ப்பிருக்கும்

    சிலரை உணர வைத்து
    பலரை உருக வைத்து
    பல்லியை புலம்ப விட்டு
    பார்தீபன் எங்கு சென்றாய்

    சில நேரம் முரன்பாடு
    மறுகணமே உடன்பாடு
    கருத்தாடல் களத்துக்கு
    இவன் கருத்து தீர்வாகும்
    ஆம்
    இவனே பார்தீபன்
    இவனே தான் வை.சி
    இவர்தான் எம் நண்பன்
    அமரர் திருவாளர் கிருபானந்தன்
    கண்ணீருடன்
    தேசம் பல்லி

    Reply
  • ARUMUGAM
    ARUMUGAM

    இதயம் கனத்து வெடித்து உன் நினைவுகள் கசிகிறது நண்பா!…
    சிவஞானசுந்தரம் கிருபானந்தன்
    வை.சி. கிருபா….
    அச்சுவேலி… சுவிஸ்…

    எதையும் சொல்ல முடியவில்லை!… எழுதவும் முடியவில்லை!…
    உன் இழப்பின் துயரத்தை எந்த சொற்களாலும், எழுத்துக்களாலும்
    எவராலும் ஈடு செய்ய முடியாது…

    புலம் பெயர் தேசமே அழுகின்றது…
    புயலையும் எதிர்க்க நீ எவரையும் நோகாத பூங்குரலாய் ஒலித்ததால…
    உன் சொற்கள் ஒவ்வொன்றும்…
    கருத்துக்கள் ஒவ்வொன்றும்…
    எதிர் முரண்பாடு கொண்டவர்களையே ஏற்க செய்யும்…

    அதுவே… உன் கருத்துக்களின் வலிமை!…

    அச்சம்,… அடங்குதல்… ஒடுங்குதல்…
    உண்மை எதுவென்று சொல்ல தயங்குதல்…
    இவைகள் எவையுமே உன்னிடம் இருந்ததில்லை…

    மாற்றுச்சிந்தனைகள் தோற்றுப்போய்விடுமோ என்ற
    ஏக்கங்கள் நிலவிய சூழல் ஒன்றில்..

    உண்மையை சொல்வதற்கான உயிரச்சம்
    உனக்கெதிராகவும் எழுந்த பொழுதிலும்…

    நீ… மிடுக்குடன் எழுந்து நின்று நம்பிக்கை தரும்
    வார்த்தைகள் சொன்னாய்…

    இதுவே நடக்கும் என்றாய்.. இதை விட எதுவும்
    நடக்காது என்று தூரப்பார்வையோடு விமர்சனம் சொன்னாய்…

    நீ சொன்னதே நடந்தது!…
    இனி இங்கு நடக்கப்போவதும்
    நீயும் நாமும் சொன்னவைகளே…

    துப்பாக்கிகளை விடவும், வெடி குண்டுகளை விடவும்
    உயிர்த்துடிப்பான கருத்துக்களே வலிமையானவை என்பதை
    ஒப்பித்து மெய்ப்பித்தவர்களின் பட்டியலில் நீயும் ஒருவன்…

    கட்சி அரசியல் சார்ந்தவனாய் நீ இருந்ததில்லை.
    சரியெது?.. தவறெது?.. என்றெண்ணி துடிப்புடன் எழுந்து
    பொதுவான தளத்தில் நின்று பேசினாய்…

    ஊடகங்களில் உண்மை உரைத்தாய்…
    மனித நேயம்… மானுட நீதி.. மனித குலத்தின்
    தர்ம நியாயங்கள்.. .இவைகள் எல்லாம் வாழும் என்றாய்…

    ஆனாலும்… உன் இனிய வாழ்வு மட்டும்
    கொடியதொரு திடீர் மரணத்தால் கொய்யப்பட்டு விட்டது…

    உண்மை இன்னமும் இங்கு வாழ்கிறது
    அது வாழும் வரை…
    உன் ஞாபகங்களும் எம்மிடை வாசம் வீசும்…

    எம் தேச வரலாற்றில் நீயும் ஒரு
    அழியாத பதிவு…

    இழப்பின் துயரத்தில் துடி துடிக்கும் குடும்பத்தினர்
    உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும்
    எமது ஆறுதல் கரங்களை நீட்டி துயர் துடைக்கின்றோம்…

    ஈழ மக்கள் ஐனநாயக கட்சி – ஈ.பி.டி.பி –
    சர்வதேச பிராந்தியங்களின் ஒன்றியம்

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    இன்று வான் அலைகளில் அஞ்சலி
    ———————-

    சுவிஸ் நேரம் இரவு 8.00 மணிக்கு (ஐரோப்பிய நேரம் இரவு மணி 7.00) ஒலிபரப்பாகும் தமிழ் ஒலிபரப்பில் வான் அலைகளோடு வைசீ (பார்த்திபன்) குரலும் ; தேசத்தின் கவிதை அஞ்சலியும் இடம் பெறவுள்ளது.

    இன்றைய நிகழ்ச்சி மூலிகை வைத்தியம் குறித்த கலந்துரையாடலாக இடம் பெற இருந்தது. பார்த்திபனின் மறைவால் சிறு மாற்றம் செய்யப்பட்டு ஒலிபரப்பாகிறது.

    சுவிசில் நேரடியாகவும் ; உலகமெங்கும் இணைய வழியும் கேட்கலாம்.

    கீழ்வரும் இணையத்தின் Livestream அழுத்தி கேட்கலாம்.

    http://www.kanalk.ch/

    (இது Swiss German மொழி அரச வானோலி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் – சிங்கள ஒலிபரப்பு ஞாயிறு தினங்களில் 20.00 மணி முதல் 21.00 மணி வரை இடம் பெறுகிறது.)

    – அஜீவன்

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    வானொலி நிகழ்ச்சியில் பார்த்திபனுக்கான அஞ்சலி

    கீழ்வரும் தொடர்பை அழுத்தி கேளுங்கள்
    http://www.zshare.net/audio/819391721928a135/

    நன்றி

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    எம்மை விட்டு உடலால் பிரிந்து
    உயிரில் கலந்த உறவான
    பார்த்தீபன் (வைசீ) எனும் கிருபாகரனின்
    இறுதிச் சடங்கு புகைப்படங்கள்:-

    http://www.facebook.com/album.php?aid=320420&id=823993901

    Reply
  • palli
    palli

    நன்றி அஜீவன் நாம் அனைவரும் நண்பனின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டது போன்ற ஓர் உணர்வை உங்கள் படங்கள் உணர்த்துகின்றன பார்த்திபன் நினைவுகள் என்றும் எம் எழுத்திலும் வாழ்விலும் கலந்து இருக்கும்,
    பல்லி,

    Reply
  • Information
    Information

    புலம்பெயர்ந்த இலங்கையர் சம்மேளனம் – சுவிஸ்

    கண்ணீர் அஞ்சலி

    அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
    ஆற்றுவார் மேற்றே பொறை – (குறள் 1027)

    1990களில் எம்மவர்களாலேயே எம்மவர்கள்மீது விடுதலை தமிழ்தேசியம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக மறுப்பு, மனிதஉரிமை மீறல்கள், கருத்துச் சுதந்திர மறுப்பு, ஊடகங்கள் மீதான தடை, மாற்று அமைப்புக்கள் மீதான தடைகள், வன்முறைக் கலாச்சாரம் என்பன நிலத்தில் இருந்து புலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த காலம்.

    இந்தக் காலத்தில் வை.சி.கிருபானந்தன் என்ற பெயர் புகலிடத்தில் ஒலிக்கத் தொடங்கியது. அரசியல் அநாகரிகங்களுக்கு எதிராக ஊடகங்களிலும், அரங்குகளிலும், ஆக்கங்களிலும் தன் பங்களிப்பைச் செய்து ஈழத்தமிழர்கள் நாகரீக அரசியலை நடாத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தவர் வை.சி.

    போருக்குப் பின்னரான சூழலில் நிரந்தர சமாதானத்தையும் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வையும் முக்கிய விடயங்களாக அடையாளம் கண்டவர்களுள் கிருபானந்தனும் ஒருவர். வெறும் இனவாத, பிரதேசவாத, மதவாத குறுகிய அரசியல்தான் எமது மண்ணைச் சிதைத்தது என்பதால் சகல இனங்களுக்கும் இடையிலான உறவு என்பது அவருக்கு முக்கியமானதாக இருந்தது. இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒன்றுதான் அரசியல் வியாபாரிகளை அகற்றி நிரந்தர சமாதானத்தைத் தரும் என்று நம்பியவர் தோழர் கிருபா.

    அல்லலுறும் மக்களுக்கு புனர்வாழ்வளிக்க அமைப்பு ரீதியான செயற்பாடுகளின் தேவையை அவர் உணர்ந்திருந்தார். இதனால் புகலிட மக்கள் மத்தியில் இது விடயமாக இடம்பெற்ற கலந்துரையாடல்கள், சந்திப்புக்களில் பங்குகொண்டு தமது கருத்துக்களை முன்வைக்க அவர் தயங்கவில்லை. அன்னாரின் இந்த உத்வேகம்தான் அவரை சுவிஸ் புலம்பெயர்ந்த இலங்கையர் சம்மேளனத்துடன் இணைந்து செயற்படத் துண்டியது. எம்மையும் அவரோடு இணைத்தது.

    வை.சி. என்று அன்பாக தனது அரசியல் கலை, இலக்கிய நண்பர்களால் அழைக்கப்பட்ட அந்த மனிதம் நிறைந்த மனிதனை நாம் இன்று இழந்து விட்டோம். ஆனாலும் அவரது போராட்ட உணர்வும், அன்னார் எமக்கு ஊட்டிய துணிவும், அவரது பணிகளும் எம் மனக்கண்முன் காட்சி தருகின்றன.

    ஜனநாயகம், நிரந்தர சமாதானம், போரினால் சூறையாடப்பட்ட மக்களின் புனர்வாழ்வு இவையே வை.சியின் கனவாக இருந்தன. இவற்றை நனவாக்குவதே நாம் அன்னாருக்குச் செய்யும் அஞ்சலியாகவும், எமது எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச்செல்லும் அவர் கண்ட அறம் தவறா அரசியலாகவும் அமையும்.

    வை.சி. கிருபானந்தன் அவர்களின் பிரிவுத்துயரால் வாடும் அவரது மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர் மற்றும் அவரது அரசியல், கலை, இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

    Reply
  • TBC London
    TBC London

    மக்களை நேசித்த மாமனிதன் வை சி கிருபானந்தன்.

    பயனுறு நல்வார்த்தைகளை பணிவாக பாவிக்கிறவன் எவனோ அவன் மற்றவர்களைப் உற்சாகமூட்டி நெறிப்படுத்தும் ஆற்றல் உள்ளவன்! கிருபாவின் இந்த ஆற்றலோடு கணீர் என்ற இயல்பான குரல்வளம் கைகொடுத்து மேலும் கவர்ச்சி ஊட்டியிருந்தது.!

    இக்கொடையையும் தாண்டி சரியான சமூகப்பார்வை தெளிவான அரசியற் கருத்து கொடுமை கண்டு கொதிப்பதும் வறுமை கண்டு உதவுவதும் சரியெனப்பட்டதை எங்கும் துணிச்சலோட முன்வைப்பதுமான முழுமை பெற்ற முத்தாலான ஒரு மானிடத்தின் மகுடம் வை சி கிருபானந்தன்!

    “நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
    பண்பின் தலைபிரியாச் சொல்”
    (குறள்- 9 : அதிகாரம் 10)

    இத்தகைய மேலான ஒருவனின் தொடர்பாடல் நட்பு ரிபிசிக்கும் அதன் நேயர்களுக்கும் பணியாளர்களுக்கும் கிடைத்தது நாம் செய்த பாக்கியமே! அது மட்டுமல்ல எமது ரிபிசி கலையகத்தை திறந்து வைத்து அவ்வப்போது உதவிகளும் ஆலோசனைகளும் தந்து இறுதிவரை எம்மோடிருந்தபோதெல்லாம் நாம் பெருமைப்பட்டோம். ஆனால் நம்ப மறுத்தது இந்த திடீர் இழப்பு சிலகணம் எங்கள் நாடி நரம்பெல்லாம் கட்டிப்போட்டுவிட்டது!

    இத்தகைய ஒரு காத்திரமான மாமனிதனுக்கு ஒரு விசேட அஞ்சலியை செய்ததால் ரிபிசி தன் தரத்தை உயர்த்திக்கொண்டது என்பதே எம் கருத்து 21.10.2010 வியாழனன்றய நிகழ்ச்சி பலரை வியப்பில் ஆழ்த்தியது மொத்தம் 120 நிமிடத்துளிகள் வானில் காற்றலை அழுதது! முகில்கள் கண்ணீர் சொரிந்தன! 60 பேர்வரை அலையில் வந்து அஞ்சலி செலுத்தியதும் அழைப்பை ஏற்படுத்த முடியாமல் பல நூறுபேர் அங்கலாய்த்ததும் லட்சக்கணக்கானோர் செவிமடுத்ததும் அவதானிக்க முடிந்தது. முகம் தெரியாமலே கிருபாவை உள்ளத்தால் உள்வாங்கித் தம் உரித்தாக்கிக் கண்ணீர்மல்க நின்ற கோடிக்கணக்கான உறவுகளை வென்றது வை சியின் பேச்சும் கருத்தும் நேர்மையும் உள உறுதியுமே!

    வை சி கிருபானந்தன் இறக்க முடியாத இவர் பலகோடி உள்ளங்களில் பிறந்திருக்கிறார். மக்களுக்காக வாழ்ந்தவன் ஒருபோதும் மரணிப்பதில்லை!
    எம்மால் ஒழுங்கு செய்ப்பட்ட அன்றைய அஞ்சலி நிகழ்வின் ஒலிப்பதிவினையும் அத்துடன் கலந்து கொண்டவர்களின் பெயர் பட்டியலையும் அன்னாரின் நினைவாக பாதுகாக்க என்று அவரது துணைவியார் திருமதி சத்தியபாமா அவர்களிடம் எமது கலையகம் சார்பாக திருமதி சிவாஜினி இராமராஜ் மற்றும் திருமதி கங்கா லூசியன் ஆகியோர் நேரடியாக கையளிக்கின்றனர்.

    மனைவி சத்தியபாமா பிள்ளைகள் பிரதீபன் கெளசி பிரியங்கா இவர்களுக்கான தேறுதல் வார்தததைகளை தேட முடியவில்லை! எம்மால் முடியாத ஒன்றை உங்களிடம் எப்படி?….. இருந்தும் இயலுமானவரை இயல்பை ஏற்க முயலுவோம்!

    இவ்வாறு நெஞ்சுறையக் கண்ணீர் மல்கி நிற்கும்!

    தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் – லண்டன்
    பணிப்பாளர்

    வீ.இராமராஜ்
    25.10.2010.

    21.10.2010 அன்று ரிபிசி வானொலியில் மறைந்த வைசி கிருபானந்தன் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட அஞ்சலி செலுத்தியவர்களின் பெயர் விபரங்கள்

    1. திரு வீ இராமராஜ் பணிப்பாளர் ரிபிசி
    2. திரு வி சிவலிங்கம் அரசியல் ஆய்வாளர் ரிபிசி
    3 திருமதி சிவாஜினி இராமராஜ் நிகழ்ச்சி பணிப்பாளர் ரிபிசி
    4 திருமதி கங்கா லூசியன் ரிபிசி அறிவிப்பாளர் பிரித்தானியா
    5 திரு இராஜரட்ணம் டென்மார்க்
    6 திரு லோகநாதன் ஆசிரியர் அறுவை தயாரிப்பாளர் ரிபிசி
    7 திரு அருள் பிரான்ஸ்
    8 திரு அப்துல் ரசாக் சவுதி அரேபியா
    9 திரு சோதிலிங்கம் தேசம் இணையத்தள ஆசிரியர் லண்டன்;
    10 திருமதி ஜெயா பத்மநாதன் பிரான்ஸ்
    11 திரு பீற்றர் குலம் ஜேர்மனி
    12 திருமதி ஹேமா சுவீஸ்
    13 திரு திவாகரன் ஜேர்மனி
    14 திருமதி பத்மா பிரபா சுவீஸ்
    15 திருமதி திவ்வியா ஜேர்மனி
    16 திரு செல்வம் சுவீஸ்
    17 திரு கணேசலிங்கம் ரிபிசி இணையத்தளம் நெதர்லாந்து
    18 புஸ்பதாஸ் டென்மார்க்
    19 திரு ஜோகரட்ணம் பிரான்ஸ்
    20 திரு மோகன் பிரான்ஸ்
    21 திரு சோதிலிங்கம் தேசம் இணையத்தள ஆசிரியர் லண்டன்;
    22 திரு சிறி சுவீஸ்
    23 திருமதி சுந்தா சிவம் ஜேர்மனி
    24 திரு கொலின்ஸ் ஜேர்மனி
    25 திரு ரஞ்சன் லண்டன்
    26 திருமதி லோகநாதன் ஜேர்மனி
    27 திரு சிவபாலன் பிரித்தானியா
    28 திரு கண்ணன் பிரித்தானியா
    29 திரு சுந்தர்ஜி சுவீஸ்
    30 திரு மகேந்தி ஜேர்மனி
    31 திரு ராஜா பிரான்ஸ்
    32 திரு பிரான்சிஸ் பிரான்ஸ்
    33 திரு புதுமைலோலன் ரிபிசி சிந்தனை சிறகுகள் தொகுப்பாளர் சுவீஸ்
    34 திரு அருள் பிரித்தானியா
    35 திரு ரஜேந்திரன் சுவீஸ்
    36 திருமதி குயினி ஜேர்மனி
    37 திரு ஜிம்மி ஜெர்மனி
    38 திரு ஜெகநாதன் ரிபிசி அரசியல் ஆய்வாரள் ஜேர்மனி
    39 திரு சதா பிரித்தானியா
    40 திரு அருண் ரிபிசி அறிவிப்பாளர் பிரித்தானியா
    41 திருமதி சூட்டி சுவீஸ்
    42 திரு தேவதாஸ் ஜேர்மனி
    43 திரு சுந்தரலிங்கம் சுவீஸ்
    44 திரு ஜெயக்குமார் ரிபிசி முன்னாள் பணிப்பாளர் லண்டன்
    45 திரு ராஜரட்ணம் ஜேர்மனி
    46 திரு டேவிட் பிரான்ஸ்
    47 திரு சிறீதர் ஜேர்மனி
    48 திரு அசோக் சுவீஸ்
    49 திருமதி செல்வி சுவீஸ்
    50 திருமதி வாணி ஜேர்மனி
    51 திரு சிறீதர் பிரித்தானியா
    52 திரு காந்தன் பிரித்தானியா
    53 திரு சித்தி சந்திரன் இத்தாலி
    54 திருமதி புஸ்பவதி சிவநாதன் பிரித்தானியா
    55 திருமதி விஜயா ஜேர்மனி
    56 திரு அஜீவன் சுவீஸ்
    57 திரு குமார் ஜேர்மனி
    58 திரு வெற்றிமயில்நாதன் சுவீஸ்
    59 திரு கதிர்மலைநாதன் கனடா
    60 திரு ஜெயக்குமார் ரிபிசி முன்னாள் பணிப்பாளர் லண்டன்
    61 திருமதி பாக்கியம் அம்மா பிரித்தானியா

    -தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் – லண்டன்

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    பல்லி ; உங்களது அஞ்சலி வரும் போது இறுதி நேரமாக இருந்தது. இருந்தாலும் பார்த்தீபனை இறுதியாக காண வந்த அன்பர்களுக்கு அதைக் கிடைக்க பண்ணினேன். முதலில் என் கையில் கிடைத்த அஞ்சலி தேசம் நெற்றின் நோர்வே நக்கீரா எழுதிய அஞ்சலி. அதை மட்டும் வைக்கலாம் என இருந்த போது ; டீஆர்ரி தமிழ் அலை – டான் தமிழ் ஒளி அஞ்சலியும், தொடர்ந்து ஈபீடீபி சர்வதேச பிராந்தியங்களின் ஒன்றியத்தால் கிடைக்கப் பெற்ற அஞ்சலியும் கிடைத்தது . அவற்றையும் அங்கே வைத்தேன். இவை பலருக்கு பார்த்தீபன் குறித்து சொல்லும் ……. அனைவருக்கும் நன்றிகள்.

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    பார்த்திபன் எனும் வைசீ.கிருபானந்தன் எனும் இனியவனை இறுதியாக வழியனுப்பிய ஒளிக் காட்சித் தொகுப்பு.

    http://www.youtube.com/watch?v=rJAe-NeCD7M

    நன்றி.

    Reply
  • வதனி
    வதனி

    வை.சி. கிருபானந்தன் அவர்களின் பிரிவுத்துயரால் வாடும் குடும்பத்தினருக்கு எம்குடும்பம் சார்பிலும். எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மற்றும் அவரது இறுதிச் சடங்கு புகைப்படங்கள், ஒளிக் காட்சித் தொகுப்புகளை. உடனுக்குடன் தந்துதவிய அஜீவனின் பணிக்கும் நன்றி.

    வதனி குடும்பம்

    Reply
  • மாயா
    மாயா

    பார்த்தீபனின் மறைவு மனதை உலுக்கி விட்டது. முகம் தெரியாமல் உறவாக பல காலம் வாழ்ந்த அவனது முகத்தை கடைசியில் பார்க்க முடிந்தது. வேதனைகளையும் > அஞ்சலிகளையும் > தகவல்களையும் முகம் தெரியாத பலர் பகிர்ந்துள்ளமை மனதைத் தொடுகிறது.

    Reply
  • suban
    suban

    கிருபானந்தன் அவர்களின் பிரிவுத்துயரால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    கருத்துக்களுக்கு இருக்கும் சக்தியை பார்த்திபனின் (கிருபானந்தன்)அஞ்சலி நிரூபித்துள்ளது பார்த்திபனுக்கு எனது அஞ்சலியை தெரிவிக்கிறேன்.

    தேசம்நெற்றின் பணி தொடரட்டும் –suban jaffna

    Reply
  • palli
    palli

    உன்மையிலேயே அஜீவன் மாயா போன்றோருக்கு தேசம் நண்பர்கள் சார்பாய் நன்றியை பல்லி தெரிவித்து கொள்கிறேன், மாயா முடிந்தால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    ஒளிப்பதிவையும் ; புகைப்படங்களையும் கட்டுரையோடு இணைத்து விட்டால் பலரும் பார்க்க வசதியாக இருக்கும்.

    Reply