தமிழீழ மக்கள் விடுதலை கழகம் – கடந்து வந்த தடங்கள் – பகுதி (2)

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளில் முக்கிய அமைப்பாக இருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தொடர்பான நீண்ட விவாதம் ஒன்று தேசம்நெற் இணையத்தில் அண்மைக்காலமாக நடந்து கொண்டு உள்ளது. இவ்விவாதத்தில் வெவ்வேறு இணையத் தளங்களில் பங்கு பற்றியவர்களும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கிய உறுப்பினர்களும் பங்குபற்றுகின்றனர். கருத்தாளர்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தியும் கருத்துக்களை முன்வைப்பதால் விவாதம் மேலும் ஆரோக்கியமாகி வருகின்றது. தேடலையும் தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தையும் தேசம்நெற் வரவேற்று இவ்விவாதத்தைத் தொடர்கிறது.

முன்னைய பதிவில் பின்னூட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இந்த விவாதத்தளம் கனதியாகி உள்ள நிலையில் அதற்குச் செல்வதற்கு காலதாமதம் ஏற்படுகின்றது. அதனால் இவ்விவாதத்தை பகுதி (2) ஆகத் தொடர்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் தற்போதும் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு அவர்களுடைய கடந்தகால வரலாறு சங்கடங்களை ஏற்படுத்தவே செய்யும். ஆனால் அந்த வரலாற்றை கடந்து செல்வதற்கு இவ்வாறான ஆய்வுகள் அவசியம். உண்மைகளை அறியாமல் அவற்றை அப்படியே கைவிட்டு நாம் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாது. அதற்காகவே தென்னாபிரிக்காவில் உண்மையும் மீளுறவுக்கும் ஆன ஆணைக்குழு – Truth & Reconciliation Commission அமைக்கப்பட்டது.

ஆகவே இந்த வரலாறு தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பற்றிய உண்மைத் தகவல்களை வெளிக்கொண்டுவர தற்போதைய தமிழீழ விடுதலைக் கழக உறுப்பினர்களும் தலைமையும் முன்வரவேண்டும். அதற்கூடாக மட்டுமே தமிழீழ விடுதலைக் கழகம் தனது அரசியல் பயணத்தை தொடரமுடியும். அதைச் செய்யாதவிடத்து கடந்தகாலம் அவர்களைத் துரத்துவதை தவிர்க்க முடியாது.

மேலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தொடர்பான வரலாற்றுக் குறிப்புகளை தாங்கள் எழுதி வருவதாக சிலர் தேசம்நெற் க்கு தெரியப்படுத்தி உள்ளனர். தேசம்நெற் இல் வரும் பின்னூட்டங்கள் தாங்கள் எழுதுகின்ற வரலாற்றுக் குறிப்பை செழுமைப்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால் தேசம்நெற் கருத்தாளர்கள் ஒரு வரலாற்று ஆசிரியனுக்கு உரிய கண்ணியத்துடன் தங்கள் உணர்வுகளுக்கு இடம்கொடாமல் தொடர்ந்தும் தாங்கள் அறிந்த உண்மைகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இங்கு உண்மையைத் தேடுகின்ற பலர் உலாவுகின்றனர். அவர்களுடைய தேடலுக்கும் ஆய்வுக்கும் உங்கள் பதிவுகள் மிகப்பயனுள்ளதாக அமையும்.

தேசம்நெற்.

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் – கடந்து வந்த தடங்கள் – பகுதி (1)
http://thesamnet.co.uk/?p=23085

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

84 Comments

  • palli
    palli

    //T3ஸ் சமூக விஞ்ஞானக் கல்லூரி //
    சமூக சிந்தனை இல்லாத கூட்டம் சமூக விஞ்ஞானக்கல்லுரி நடத்திச்சாம், இததான் சொல்லுறது பிச்சகாரனுக்கு கோடீஸ்வரன் என பெயர் என்று;

    //புகைப்படங்களின் இன்னொரு தொகுதி//
    கற்றுகொண்ட பயிற்ச்சியும்;நிகரவெட்டிய பணமும் போட்டோ எடுத்தே முடிச்சுபோடாங்களப்பா?? பார்க்க நல்லாதான் இருக்கு ஆனா??

    :://பலபுத்திசாலிகள் ஒருமுட்டாளைச் சுற்றியிருந்து செயற்படுத்துவது புலி இயக்கம். பலமுட்டாள்கள் ஒருபுத்திசாலியைச் சுற்றியிருந்து அழித்தது புளொட் இயக்கம்”// இரண்டுமே சுத்தி இருந்து கூடி கும்மாளம் போட்டதால் இரு தல்களாலும் வெளி உலகத்தை பார்க்க முடியாமல் சுந்தி
    இருந்தவர்களே உலகமென வாழ்ந்து வீழ்ந்து போனார்களே;

    //ஏமாந்த பிரதிபலிப்புத்தானே இந்த முதலாம் பாகம்//
    மறந்து விட்டேன், நினைவு படுத்திய நிலாவுக்கு நன்றி; சீலன் போடுங்கள் உங்கள் இரண்டாவது பாகத்தை; அல்லது அதை கொப்பி செய்து தேசத்தில் போடும் அனுமதியை தேசநிர்வாகத்துக்கு கொடுங்கள்; ஆனால் தாங்கள் நாலுவார்த்தை எழுதி அதன்பின் அந்த ஆக்கம் வருவதே
    உங்கள் எழுத்துக்கு அழகு; அதனால் தாங்களே போடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்; சுகந்தன் என்ன ஆச்சு கழகத்தை விட்டு ஓட்டம்:
    தீப்பொறியை விட்டு ஓட்டம்; இப்போ வாதத்தை விட்டுமா ஓட வேண்டும்;

    Reply
  • santhanam
    santhanam

    புலி இயக்கம். பலமுட்டாள்கள் ஒருபுத்திசாலியைச் சுற்றியிருந்து அழித்தது புளொட் இயக்கம்”// இரண்டுமே சுத்தி இருந்து கூடி கும்மாளம்/ அதனால் தான் புளொட்டின் 95 வீதமான தோழர்கள் உயிருடன் உள்ளனர் அன்னியசக்தியின் சதிவலையில் விழவில்லை சின்ன மென்டிஷ் உமாவிடம் ஆயுதம் கேக்கும் போது உமா சொன்னவிளக்கம் சிங்களமும் இந்தியாவும் எதைவிரும்புகிறதோ அதை நாம் செய்தால் அவர்களிற்கு வெற்றி நாங்களும் புலியும் அடிபட்டால் அது தான் நடக்கும் ஆகவே தளசெயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்துவோம் இது புத்திசாலித்தனமாக இல்லையா பல்லி .

    Reply
  • சீலன்
    சீலன்

    எனது இரண்டாவது பகுதியை இங்கு தருகின்றேன் இதில் நான் எவ்வாறு கழகத்திற்கு போனேன் என்பதையே எழுதியுள்ளேன் இது பலருக்கு அனாவசியமானதும் கூட இருப்பினும் ஒரு சிலர் இவ்வாறுதான் கழகத்திற்கு வத்திருப்பார்கள் என்ற பார்வை எனக்குள்ளது. சீலன் தன்னை மையப்படுத்தி எழுதுகின்றார் எனக் குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது அதை மறுக்கவில்லை அதாவது எனக்கு கழகத்தில் நடந்தவற்றையே பதிவில் ஏற்றினேன் சுமார் ஐந்தாயிரம் பேருக்கு மேல் இருந்த கழகத்தை முழுக்க ஆய்வு செய்து எழுதுவது என்பது ஒரு பம்மாத்தான விடையம் அதானால் யைhயிரத்தில் ஒன்றான எனக்கு நடந்ததை இங்கு எழுதுகின்றேன். பல்லி சுகந்தன் தீப்பேறியில் இருக்கவில்லை.

    1983 இல் இயக்கத்தில் இருப்பதென்பது கீரோத்தனமாகும் – (புளாட்டில் நான் பகுதி 2)

    எனது பெயர் சீலன். நான் இன்று ஐரோப்பாவில், எனக்கான முகவரிகள் தொலைந்தவனாய் வாழ்ந்துவரும் ஒரு ஈழத்தமிழன். வடக்கே எனது பிறப்பிடமாகும். அந்தச் சிறிய வயதில் பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. அதனால் அவற்றை ஒருபுறம் வைத்துவிடுவோம்;. இனி எனது போராளி வாழ்க்கையில், நான் நோயாளியாகிப் போராடித் தொலைத்த போராளியின் வாழ்க்கைக்குள் போவோம்.

    ஏதோ ஏகாந்தமான, அதிமிதவாத அரசியலால் பொருமி வீங்கத் தொடங்கிய காலமான 1983இல், எனது இளமைக் காலம் இயக்க கீரோத்தனத்தை நாடியது. ஈழ மண்ணின் விடுதலைக்கான ஆயுதப் போராட்ட வடிவங்களுக்குள் நாம் கவரப்பட்டோம். சிறிய பாடசாலை முதல் பல்கலைக்கழக மாணவர் வரை வகைதொகையின்றி, இயக்கத்தில் இணைய ஆரம்பித்த காலம் அது. அக்காலத்திலேயே நான் “தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்’ என்ற அமைப்பில், என்னையும் இணைத்துக் கொண்டேன். உண்மையைச் சொல்லப்போனால், எனக்குள் விடுதலை உணர்வுகள் அன்று இருந்ததென்று சொல்லமாட்டேன். மாறாக எதோ போராடவேண்டும் என்ற உணர்ச்சி வேட்கையே என்னுள் இருந்தது. அதாவது சிங்களவர் என்றாலே அவர்கள் மீது ஒருவித காழ்ப்புணர்ச்சி என்னிடம் இருந்தது. அது என்னை என்னவோ செய்தது. அதற்கான காரணங்களும், எனது ஆழ்மனதில் பதிவாகிக் கிடந்தது.

    அன்றைய காலத்தில் எனது தந்தை இலங்கைக் காவல்துறையில் கடமையாற்றினார். அவருக்கு தொலைதூர இடங்களுக்கான மாற்றங்கள் வரும்போது, அவரோடு வீட்டாரும் சேர்ந்து செல்லவேண்டிய நிலை. அப்படித்தான் ஒருமுறை அப்பாவிற்கு புதிய இடமாற்றம் வந்தது. அது 1977ஆம் ஆண்டு. திருகோணமலைக்கு இடம் மாறினோம். எனக்கு அப்போது 11வயது கொண்ட சிறுவன்.

    அந்தக் காலத்தில் “தமிழர் விடுதலைக் கூட்டணி”யைச் சார்ந்தோர், திருகோணமலை முத்தவெளியில் பெரிய அளவிலான கூட்டத்தைக் கூட்டினர். அதற்காகப் பல கூட்டணிப் பிரமுகர்கள், பேச்சாளர்கள் வருகை தந்தனர். அவர்களை திருமலை இளைஞர்கள், மாலை சூட்டி வரவேற்றனர். அதன் முன்னணியில் நின்ற சிலர் ஏதோ முறுக்கெடுப்பவராகவும், உணர்ச்சி வசப்பட்டவர்களாகவும் எனக்குத் தெரிந்தது. நானும் வைத்த கண் வாங்காமல் அவர்களையே பார்த்தேன். சிறு கணப்பொழுதில் அவர்கள் தமது கைகளை தாமே சவரத் தகடுகளால் வெட்டிக் காயப்படுத்தினர். சிலரது கைகளில் மிக ஆழமாக வெட்டுப்பட்டதால் நரம்புகள் அறுபட்டு, அவர்களின் இரத்தம் அந்த மண்ணில் நீராய் ஓடியது. அந்தப் பிரமுகர்கள் ஒரு வகையான திகைப்புடன் கலந்த புன்சிரிப்புடன் ஏறிட்டு நின்றனர். இவர்களோ ஒருவகை ஆவேசத்துடன் அங்கே வருகை தந்த பிரமுகர்களின் நெற்றிகளில் அந்த இரத்தங்களைத் தொட்டுத் தொட்டு பொட்டுப் பொட்டாய் திலகமிட்டனர். ஏதே ஏதோ கோசங்கள் வேறு. இதுவோ என்மனதிலில் ஆழப் பதிந்துபோனது.

    அன்று அவர்களின் மிடக்கும், அவர்களின் வசீகரமான வீரியப் பேச்சுகளும் இணைந்து, இது என்னைக் கவர்ந்தது. எங்கள் தமிழினத்தை தினமும் அழிக்கின்ற சிங்கள அரசை உடைக்கவேண்டும் அழிக்க வேண்டம் என்று அறைகூவினர். இது எதிரிச் சிங்களரை எதிர்த்துத் தாக்கவேண்டும், அழிக்கவேண்டும் என்ற உந்துதலை, என்னுள் ஏற்படுத்தி என்னை எரியவைத்தது.

    1983 முற்பகுதியில் இயங்கங்களின் செயற்பாடுகள் ஒரளவு துரிதமடைந்த காலகட்டம். அக்காலத்தில் தான் பல இயக்கப் புத்தகங்கள், பத்திரிகைகள் எனது கையில் கிடைக்கப்பெற்றன. அவற்றை வாசிக்கும் போது உணர்சிகள் தானகவே வரும். அதுமட்டுமின்றி யாழ் பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டமும், இதற்கு பாடசாலைகளிலும், ஊர் மக்கள் மத்தியிலிருந்தும் அதிக வரவேற்பு கிடைத்தது. இதை வழிபட்ட எமக்கு, போராட்டப் புத்தகங்களையோ அல்லது பத்திரிகைகளையே தருபவர்களை, ஏதோ ஒரு கிரோக்களாகவே பார்த்தோம். இப்படி எல்லோரும் பார்த்தனர். அப்படி பார்க்க வைத்தனர். அன்றைய காலகட்டத்தில், இயக்கத்தில் இருப்பதென்பது ஒருவகை கீரோத்தனமாகும். அது அன்றைய சூழலாகவும் இருந்தது. அவ்வாறுதான் அன்றைய இயக்கங்களில் இருந்தவர்களும், தம்மை தாம் காட்டிக் கொண்டனர். மக்களோடு மக்களாக நின்று மக்களை அணிதிரட்ட வேண்டியவர்கள், தம்மை ஒரு மேதாவிகள் போல் காட்டி நடந்தனர். மக்கள் மத்தியில் தாம் உயர் நிலையில் உள்ளவர்கள் போலவுமே, காட்டிக் கொண்டனர். இதன் விளைவலேயே, மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை விளக்கமறுத்தனர். பலர் இன்றும் இயக்கங்கள் மக்கள் மத்தியில் வேலை செய்தன என்று கூறவரலாம். அவர்களின் வேலை முறை, மக்களை போராட்டத்திற்கு ஏற்ப வளர்த்து எடுக்காது, மாறாக உணர்ச்சிகளின் அடிப்படையில் மக்களை திரட்ட முற்பட்டதையே இங்கு குறிப்பிடுகின்றேன்.

    அக்காலகட்த்தில் தான் எனக்கு எனது உறவினரில் ஒருவரான சுகந்தன் என்பர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் வேலைசெய்தார். அவர் மூலம் என்னை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் பெயர்ப் பதிவற்ற அடிநிலை உறுப்பினராக இணைத்துக் கொண்டேன். ஒரு கொஞ்சக் காலம் எனது ஊரிலேயே துண்டுப் பிரசுரங்களை எடுத்துச் சென்று மக்களிடம் பரப்புகின்ற ஆரம்ப வேலைகளை செய்துவந்தேன். அத்துடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களை, மக்கள் மத்தியில் பரப்புவதுடன், அக்கூட்டங்களிலும் தவறாது கலந்து கொண்டேன். அத்துடன் ஆரம்பப் போராளிகளுக்காக நடைபெறும் பாசறைகளிலும்இ தவறாது கலந்துகொண்டேன்.

    இங்கு முக்கியமாக பாசறை பற்றி எனது அனுபவத்தை கூறமுனைகின்றேன். பாசறை என்பது ஆரம்ப தோழர்களுக்கு நடத்தப்படும் அரசியல் வகுப்பாகவே இருந்தது இதில் ஆரம்பமட்ட உறுப்பினர்களை அணிதிரட்டி, அரசியல் முதிர்ச்சி பெற்ற ஓருவரால் அரசியல் வகுப்பு நடத்தப்படும். அங்கு மார்க்சியம், லெனினியம், கருத்துமுதல் வாதம், தேசிய இனப்பிரச்னை, மற்றைய இயக்கங்களை குறைகூறுவது என்ற பதங்களின் கீழ் தான் அதிகமாக அரசியல் வகுப்புகள் இடம்பெறும். இதில் தேசிய இனப்பிரச்சனை குறித்து இன்றைய எனது பார்வையின் அடிப்படையில், அன்று வகுப்பு நடத்தியவர்களுக்கு ஒரு சரியானதும் அத்துடன் இயங்கியலின் அடிப்படையிலான புரிந்துணர்வோ அல்லது விளக்கமோ இருக்கவில்லை. மாறாக சிங்கள அரசுக்கு எதிராக போராடவேண்டும் என்பதுடன் மற்றைய இயக்கங்களின் பார்வையில் இருந்து நாம் எவ்வாறு விலகிநிற்கின்றோம் என்பதே அவர்கள் மத்தியில் இருந்து நாம் கற்றுக்கொண்டது. தேசியவாதமானது ஒரு முதலாளித்துவத்தின் அடிப்படையிலேயே உள்ளது என்பதை மறுத்தே, அதை சோசலிச கொள்கைகளுடன் போட்டுக் குழப்பினார்கள். மார்க்சியம் என்றால் என்ன என்பதற்கு பதிலாக, தாம் தம் இயக்கத்துக்கு எற்ப எதை மார்க்சியமாக (சோவியத் நூல்களில்) கற்றனரோ, அதை அப்படியே அடிமட்டத் தோழர்களான எங்களுக்கு முன்வைத்தனர். எனக்கு இவர்களின் இச் சொற்பதங்கள் எதுவுமே விளங்கவில்லை. உதாரணத்திற்கு குட்டி பூர்சுவா, லும்பன், போன்ற பாதங்கள். இவற்றை என்னவென்று விளக்கம் கேட்க முடியாது. இப்பாசறை என்பது இரண்டு மூன்று நாட்கள் நடக்கும். சில ஒரு வாரத்திற்கு மேலாக நடக்கும். இந்த ஒரு வாரத்திலேயே பலர் தமக்கு அரசியல் அறிவு வந்து விட்டது என்று, அவர்களும் பிரச்சாரத்திற்கு புறப்பட்டுவிடுவார்கள். என்ன பிரச்சாரம் என்றால் தமது கொள்கைகளை விளக்குவதை விடவும், மற்றைய இயக்கங்களை குறைகூறுவதே பிரச்சாரமாக இருந்தது. பிற்காலத்தில் பாசறை என்ற பெயரால் பல தில்லுமுல்லுக்கள் நடத்ததாக, கொக்குவிலைச் சேர்ந்த ஐயுப் என்ற நண்பர் பின்தளத்திற்கு வந்த போது பலரிடம் குறிப்பிட்டார்.

    இங்கு இதில் வேடிக்கை என்னவென்றால் அன்று அரசியல் முதிர்ச்சிபெற்றவர்கள் என்று கூறப்பட்டவர்கள், இன்று தாம் எதை அன்றிருந்த அடிமட்ட தோழர்களுக்கு கூறினார்களோ அதற்கு எதிரான ஆக்கங்களை எழுதுவதுடன் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். உண்மையில் இவர்களின் இந்த சமவுடமை தத்துவத்திற்கான அடிப்படை என்னவென்றால், ஒரு வித கீரோயிசமாகவே இருந்தது.

    தொடரும்

    Reply
  • சுகந்தன்
    சுகந்தன்

    பூனையையும் எலியையும் அதனதன் வரலாற்றைச் தொகுக்கச் சொன்னால் எலி தான் பட்ட சித்திரவதையைச் சொல்லும். பூனையோ எப்படி தான் எலியோடு விளையாடினேன் என்று தான் சொல்லும்.வரலாறும் கூட அடக்கப்பட்டவர் ஒடுக்ககப்பட்டவர் சொல்வதாயும் அடக்குவோர் ஒடுக்குவோர் சொல்வதாயும் இரு வகைப்பட்டது தான். சீலன் சொல்கின்ற வரலாறு சித்திரவதையின் உச்சத்தை எட்டிய வரலாறு. ஆனால் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் உமா மகேஸ்வரனையும் அவர் சார்ந்த குழுவையும் ஈ.என்.டி.எல்.எவ் வையும் தூக்கி நிறுத்துவதற்கு சிலர் பாடுபடுகிறார்கள். பழிகளையும் குற்றச்சாட்டுகளையும் பிறர் மீது மட்டும் தூக்கிக்கடாசி விட்டு( இன்று அவர்கள் இறந்துபோனவர்களாகவும் மிகவும் அம்பலப்பட்டடவர்களாகவும் இருப்பதால் ) தாங்கள் அவர்களோடு சார்ந்திருந்து நின்று உலாவந்த காலங்களில் விபுல் போன்றவர்கள் மேல் ஏவப்பட்ட தாக்குதல்களையும் அதையொட்டிய சம்பவங்களையும் யாரும் பேச வரவில்லை. இங்கு ஜான் மாஸ்ரரின் பாதுகாப்புக்கு ஒரு சிறு உதவி என்னால் செய்யப்பட்டிருந்தாலும் அக்காலகட்டத்தில் தீப்பொறியை சார்ந்து நான் இருக்கவில்லை. ஆனால் புளட்டிலிருந்து அன்றைய இராணுவக் குழுவும் உளவுப்பிரிவும் தீப்பொறியைச் சேர்ந்தவர்களை வேட்டையாட தயாராகவிருந்தனர். அந்தக் காலகட்டத்தில் தீப்பொறி அம்பலப்படுத்தி போராடிய அராஜகங்கள் கொலைகள் அனைத்தும் அம்பலமானதால் தீப்பொறி மீது தான் பலருக்கு கோபம் கொப்பளித்து கொலை செய்யவும் அவர்களை அடித்துத் துன்புறுத்தவும் அலைந்தார்கள்.

    ஆனால் மறுதலையாக இவர்களுக்கு இந்தக் கொலைகளையும் சித்திரவதைகளையும் செய்தவர்கள் தோழர்களானார்கள். அவர்களோடு கூடிக்குலாவினார்கள்.

    தீப்பொறி இன்றெங்கே போனது என்பதல்ல கேள்வி. இவ்வளவு விபரங்களையும் தீப்பொறி அன்றே அம்பலப்படுத்தியிருந்தது. அக் காலகட்டத்தில் அவர்களது இந்த அம்பலப்படுத்தல் என்பது ஒரு வரலாற்றுப் புள்ளி என்பதை மறுக்க முடியாது. அதன் பின்னான தீப்பொறியின் பாதைவிலகல் என்பது கேசவனின் கொலைக்குப் பின்னால் தான் ஆரம்பமாகின்றது.

    அன்றைக்கு தீப்பொறியுடன் இணைந்து வெளியேறாதுவிடினும் அதன் பின்னான காலங்களில் அந்த அம்பலத்துக்கு வந்த அரசியலுடனும் அதே நபர்களுடனும் சமமாக பயணித்து விட்டு இன்றும் கடந்து வந்த பாதையில் இவர்களால் இருள் சேர்க்கப்படுகிறது.

    Reply
  • nila
    nila

    சீலன்!உங்கள் இப்பகுதியில் உங்கள் மனம் திறந்த சுயவிமர்சனத்திற்கும் ஒரேபார்வையில் உங்களை நாம் திரும்பிப் பார்ப்பதற்கு வைத்தமைக்கும் நன்றி! உங்கள் பதினேழு வயதொத்த இளைஞர்களின் உணர்ச்சிவயமான இயக்கத்திற்கு செல்லல் என்ற சித்தரிப்பை அழகாகச் சொல்லியுள்ளீர்கள் நன்றி! நன்றி..

    உங்களைப்போல் நானும் ஒருகழகத்தோழரென முதலேயே குறிப்பட்டுள்ளேன். நான் ஒரு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த போராளியென்பதையும் வெளிப்படுத்துகின்றேன். ஆனால் உங்களை விட சில வயதில் மூத்தவர். நீங்கள் மேடையில் கண்ட இரத்தத்திலகம் நிகழ்வுகளில் நான் உணர்ச்சிகரமான பங்காளராயிருந்துள்ளேன். ஏன் அதே 77தேர்தலில் என்க்கே சொந்த வாக்குப்போட வயதுவராத நிலையில் ஒரேநாளில் 9 கள்ளவாக்குபோட்ட அனுபவமும் உண்டு.

    இதுதான் எமது தமிழ் குறுந்தேசியவாதம் எமக்கு கற்றுத்தந்தபாடம். காட்டிய வழி. யாரோ சொன்ன மாதிரி ஏமாற்றியவனை விட ஏமாந்தவனுக்குத் தான் தண்டனை அதிகம் என்று. அதைத்தான் நாம் இன்று அனுபவிக்கின்றோம். இங்கு தான் இன்று நீங்கள் அனுபவத்தால் சொல்லும் இயங்கியலையும் வரலாற்றுப் படிமுறை வளர்ச்சியையும் அன்றைய நிலையில் வைத்துப்பார்க்க வேண்டும்.எனது அன்றைய வயதிற்கு சில அரசியல் புத்தகங்களை வரிசைப்படுத்திப் படிக்கச்சொல்ல சில நண்பர்கள் இருந்தார்கள் (தாய்-வீரம் விளைந்தது பகுதி1- பகுதி2- புத்துயிர்ப்பு -வோல்காவிலிருந்து கங்கைவரை- குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்-இயங்கியல் என …) அதனை ஆய்வு செய்ய சில நண்பர்கள் வட்டம் இருந்தது. இதற்குப் பின்னால் நாம் படித்த மாக்சியம் நீங்கள் எதிர்பார்த்ததுபோல் அந்தந்த தத்துவங்களை தீர்மானிப்பது சமூக பொருளாதார அரசியல் சூழல்தான் என்பதை வரையறுத்தது. இங்கு தான் நாம் நின்று நிதானிக்க வேண்டியுள்ளது. நாம் ஏதோஒரு மட்டத்தில் மக்கள் மத்தியில் வேலை செய்திருந்தால் எமக்குள் பகுப்பாய்ந்தறியும் தன்மைகள் வளர்ந்திருக்கும். எமது தேசிய இனப்போராட்டம் ஒரு தேசியத்திற்குரிய தன்மையில் மக்கள் மத்தியில் வளர-வளர்த்தெடுக்கப்பட சில குறிப்பிடப்பட்டபோராளிகள் கழகத்திற்கு சந்ததியார் -ராஜன் ஈரோஸ் அமைப்பிற்கு திருமலை அன்னலிங்கம் ஐயா-டெலோவிற்கு சிறிசபாரத்தினம் (இவரின் சில அரசியல் ஆரம்பம் என்னிடம் கிடைத்துள்ளன.பின் பதிவுகளில் இதுபற்றி தருகின்றேன்.) ஒவ்வொரு இயக்கத்தின் (புலியைத்தவிர)ஆரம்பங்களும் திட்டமிடப்பட்டு சிறப்பாகத்தான் பல வேலைத்திட்டங்களுடன் வளர்ந்தது. ஆனால் நீங்கள் சொல்லிய 83 ஆண்டின் நாட்டின் இனக்கலவரம்- வெலிகடைப்படுகொலை- மட்டக்களப்பு சிறையுடைப்பு என்ற நகர்வுகளால் கழகம் மட்டுமல்ல எமது போராட்டமே வீங்கி முட்டிப்போய் திடீர் அசாதாரண வளர்ச்சியை அடைந்தது. இதில் பரவலாக எல்லா மட்டத்திலும் வளர்ந்த கழகம் எல்லா மட்டத்திலும் ஒருகுறிப்பிட்ட கட்டத்திற்கப்பால் உடைந்து கொட்டியதும் இயங்கியல்தான்.

    இந்த நிலையில் உங்கள் 17வயதை இன்றைய 44வயதில் நின்று விஞ்ஞானபூர்வாகமாக அலசி ஆராய்ந்து எழுதியதே உங்கள் பெரும் நகர்வு.எனவே எதிர்வரும் காலங்களின் எமது ஆரம்ப போராட்டத்தின் வரலாறுகளை உங்களைப்போல் தேடல் உள்ளவர்க்கும்-கடந்ததை கடந்து சென்ற பாதையை திரும்பிப் பார்ப்பவர்களுக்குமான களமாக ஆரோக்கியமாக வளர்த்தெடுப்போம் …

    Reply
  • palli
    palli

    சுகந்தன் பல்லியை விட நீங்கள் கழகத்தை விமர்சிக்கவில்லை; விமர்சிக்கவும் முடியாது, காரனம் பல்லி தனிமரம் நீங்கள் தோப்பு, பல்லி அக்கம் பக்கம் பார்ப்பதில்லை, நீங்களோ அதில் கவனம் செலுத்துகிறீர்கள், உங்களுக்கு சுருக்கமாயே பதில் தர விரும்புகிறேன்; உங்கள் தகவலின்படி நீங்கள் தளத்தில் இருந்து சுயமாகவோ அல்லது கழக சார்பாகவோ பின் தளத்தில் என்னதான் நடக்குது என பார்ப்பதற்க்காக உங்களது நண்பர்களுடன் போனதாய் உங்கள் வாக்குமூலம் இதே தேசத்தில் பதிவாகி இருக்கு, ஆனால் அங்கு போய் எதை பார்த்தீர்கள் எதை பேசினீர்கள் என்பது பதிவாகவில்லை, ஆனால் நீங்களும் உங்கள் நண்பரும் பின்தளத்தில் இருந்து வரும்போது கருத்து முரன்பாட்டால் கட்டி புரண்டாதாயும் பதிவு உள்ளது, ஆனால் அன்று உங்கள் இருவருடமும் ஆயுதம் இருக்கவில்லை, இருந்தால் யாரோ ஒருவர் இன்று உள் கொலையின் எண்ணிக்கையை கூட்டி இருப்பியள், ஆக பிரச்சனை பார்க்க போன உங்கள் இருவருக்குமே பிரச்சனை வரும்போது பல ஆயிரம் தோழர்களை கொண்ட கழகத்தில் கருத்து முரன்பாடு வர வாய்ப்புகள் அதிகமே; அது நியாயம் இல்லை கண்டனத்துக்கும் உரியது என்பதில் மாற்று கருத்து இல்லை,

    ஆனால் ஏதோ சின்ன விடயத்துக்கு கட்டிபுரண்ட நீங்களா விபுல் பற்றி ஆதங்கபடுவது, இங்கே கழகத்தாரைதான் நாம் விமர்சிக்கிறோம் சீலன் உட்பட அதைதான் செய்கிறார், இடையில் கோமாளிதனமாய் தீப்பொறியை நீங்கள்தான் கொண்டு வந்து ஏதோ பைபிள் அல்லது குறான் அல்லது பகவைகீதை போல் புதியதோர் உலகத்தை படிக்க சொன்னீர்கள்? படித்ததின் விளைவே உங்களை நாம் விமர்சிக்கிறோம், கழகமோ அல்லது கழகத்தின் வாரிசான ஈ;என் ;டி எல்;எவ் எமக்கு தேவையில்லை, எமது நிலைபாடு சீலன் போன்ற சாதாரன போராளிகளின் நிலைபாடே, யானின் பாதுகாப்பில் அக்கறை கொண்ட நீங்கள் யான் ஓட்டத்தால் உள்ளே இருந்து தம்உயிரை விட போகும் யாண் சார்ந்த தோழர்களை எண்ணியதுண்டா? யாண் போனால் உயிர்; மற்றவர்கள் போனால் என்ன …;; எலி பூனை விளையாட்டு தெரியாமலா இதுவரை தேசத்தில் பல்லி கிறுக்குகிறேன், எனது கேள்வி எதுக்கும் பதில் இல்லை ஆனால் ஏதோ உங்களுக்குதான் அரசியல் அனுபவம் நமக்கு அரசியல் தெரியாது என்பது போன்ற பிரமை எதுக்கு, முடிந்தால் தீப்பொறி தலமைகளிடம் தீப்பொறி அசிங்கமான காரியங்கள் எதுவும் செய்யவில்லை என சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்; எப்படி தீப்பொறி இன்று காணாமல் போனது; அனைத்துக்கும் ஆன விடையே சீலனின் முதலாம் பாகம் தாம் தப்ப நினைத்த தீப்பொறி; சந்ததி அல்லது டேவிட் ஜயா தங்கராசர் கழகத்தை விட்டதுக்கான காரணம் தெரியும்; ஆனால் யாண் கேசவன் அத்துடன் சிலர் கழகத்தை விட்டதுக்கான காரணமா புதியதோர் உலகத்தில் சொல்லபட்டது, கழகத்தின் தவறுகளை தாம் ஓடியதுக்கான காரணமாய் இலவச இனைப்பாய் கொடுத்ததே புதியதோர் உலகம்; ஒரு கிராமத்தை கூட சரி செய்ய முடியாத இவர்களா புதியதோர் உலகம் செய்ய போகினம், ஆனாலும் சந்தானத்தின் கருத்தில் எனக்கும் உடன்பாடுதான், பல ஆயிர உயிர் இழப்புகளை கழக அழிவு தடுத்து விட்டது; உன்மையிலேயே உன்மையான தீப்பொறி சீலனே; அவரது ஆரம்பமே இன்று பலரது முகத்தை இனம் காட்டுகிறது சபாஸ் சீலன், சீலன் உங்களது கருத்துத்கு சரியானபோது பாராட்டவும் அது தவறும் போது விமர்சிக்கவும் பல்லி தயங்கமாட்டேன் என்பதை நட்புடன் தெரிவிக்கிறேன்; எமது எழுது பின்னால் வரபோகும் வரலாறுகளுக்கு ஒரு முதலுதவியாக இருக்கட்டுமே;

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    //T3ஸS சமூக விஞ்ஞானக் கல்லூரி //
    சமூக சிந்தனை இல்லாத கூட்டம் சமூக விஞ்ஞானக்கல்லுரி நடத்திச்சாம்; இததான் சொல்லுறது பிச்சகாரனுக்கு கோடீஸ்வரன் என பெயர் என்று;//-

    பல்லி மட்டுமல்ல பலரும் புளொட் அழிந்தது. ஆயுமில்லாமல் ; உட் கொலைகளால் ; தள மாநாடுகள் நடந்ததால் ; இருந்தவர்கள் ஓடிப் போனதால் ; இப்படி எத்தனையோ காரணங்களைச் சொல்வார்கள். ஆனால் புளொட் சிதைந்ததற்கு காரணம் ; இந்த சமூக விஞ்ஞானக் கல்லூரிதான்.

    கொமினிசத்தை கற்றுக் கொடுத்தாலும் ; ஆயுத முனையில் ஆட்களை அச்சுறுத்தியே வைத்திருந்தார்கள். அதனால் பின் தள முகாம்களில் எவரும் எவரையும் நம்பவில்லை. ஒரு பலமான ஒருவரோடு போராளிகள் சிலர் சேர்ந்திருப்பார்கள். அது சந்ததி குழு ; உமா குழு ; சங்கிலி குழு ; தாசன் குழு ; வாமர் குழு ; ராஜன் குழு ; செந்தில் குழு என ஏகப்பட்ட குழுக்கள்.

    ஆளையாள் போட்டுக் கொடுக்கிறது. காட்டிக் கொடுக்கிறது. வால்களாக திரியிறது என ஏகப்பட்ட குழுக்கள்.வால்கள்.

    சண்டைக்கு போக ஆயுதம் இல்லை. 6 மாத டிரெய்னிங் என்று வந்தவங்களை பேக் காட்டி ; பேக் காட்டி ஹய் கொமாண்டோ வரை 3 ;6;9 என்று மாசங்களை கொண்டு போனார்கள். ஆயுதம் இந்தா வருது ; அந்தா வருது என காலம் கழியும் போது விரக்திகள் கட்டுப்பாட்டை மீறின.

    நான் ஒரு முறை முகாமுக்கு போட்டோ எடுக்க போன போது சிலர் கேட்டார்கள் அஞ்சலிக்காகவா அண்ண போட்டோ எடுக்கிறீங்க என்று…… நான் தடுமாறினேன். அந்த அளவு சிலர் விரக்தியில் நின்றார்கள். ஏன் அப்படிக் கதைக்கிறீங்க? என்று கேட்ட போது ; என்ன அண்ணன் 6 மாச டிரேயினிங் என்று வண்டி ஏத்தினாங்க. வந்து இரண்டாவது வருசமும் வரப் போகுது. இன்னமும் சவுக்கந் தடியோடு கிராளிங் செய்யிறம். ஆயுதங்களையே தொடவில்லை. நாங்களா ஆயுதங்களை மரத்தால் செய்து பயன்படுத்துறம் என்றார்கள்.

    இதைவிட மோசமான கேள்வி பெரியவர் எல்லாம் பொண்டாட்டியோட ப……க. நாங்க விலங்குகளை துரத்திக் கொண்டு திரியிறம் என்றாங்கள். என்னால் வாயே திறக்க முடியவில்லை. நான் சென்னை திரும்பியதும் பெரியவரை சந்தித்து சொன்ன முதல் விடயம் ” அண்ண ; நீங்கள் கலியாணம் கட்டின விடயத்தை பொடிகளுக்கு சொல்லுங்கோ. அவங்கள் மோசமா கதைக்கிறாங்க.” என்றேன்.

    “அது வேற பிரச்சனைகளை கொண்டு வந்து விடும். கொஞ்சம் பொறும். நேரம் வரும் போது சொல்லுவம்” என்றார். இப்படி ஏகப்பட்ட விரக்தியின் உச்சத்துக்கு போய்க் கொண்டிருக்கும் போதுதான் ; இந்த சமூக விஞ்ஞானக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. முதல் தொகுதிக்கு அனைத்து முகாம்களில் இருந்தும் தேர்வான தோழர்கள் வந்தார்கள். நானும் அவர்களோடு இருந்தேன். ஆரம்பத்தில் இருந்த மெளனம் சற்று சற்றாக கலைந்து ; சிலர் விவாதிக்கத் தொடங்கினார்கள். இந்த மாற்றம் ராஜா நித்தியன் என்ற மனிதனின் அணுகுமுறைதான். ஆயுத கலாச்சாரத்தோடு ஒன்றாத மனிதனாதலால் சற்று திறந்த புத்தகமாக பாடம் நடத்தவும் ; தோழர்களை உறவுகளாகவும் “டேய் தம்பி” என்றே பாடம் நடத்தினார்.

    அப்போதுதான் முகாம்களில் நடந்த நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தது. முகமே தெரியாமல் வெவ்வேறு முகாம்களில் இருந்தவர்கள் ; அவரவர் முகாம்களில் நடந்த நிகழ்வுகளை கதைக்கத் தொடங்கினார். இவர்களுக்குள் பகிரங்கமாகவே பெரியவரை விமர்சிக்கும் ஓரிருவர் இருந்தார்கள். இவர்களே மிக ஆபத்தானவர்கள். இவர்கள்தான் புளொட் புலனாய்வு புண்ணியவான்கள்.

    இவர்கள் திட்டும் போது நாமும் அவர்கள் சொல்வதை ஏற்று கதைக்க வைக்கும். அதோடு அவர்கள் பெரியவருக்கு எதிரானவர்களை அடையாளமும் கண்டு தகவல் வழங்குவார்கள். இருந்தாலும் இங்கே வந்திருந்த ஏகப்பட்டவர்கள் நல்ல விசய ஞானமுள்ளவர்கள். அவர்கள் கதைக்கும் போதே கதையை திசை திருப்பி விடுவார்கள். எனக்கு என்னடா இவங்கள் அவன் என்னவோ சொல்ல ; இவன் என்னவோ சொல்லுறானே என்று யோசித்தேன்.

    பின்னர் அண்ண ; உங்களுக்கு தெரியாது. எலிக்கு ; பொறி வைக்கிறாங்கள். தேவையில்லாமல் தர்க்கம் பண்ணாதேங்கோ என்று சிலர் காதோடு காதாக அறிவுரை சொன்னார்கள். இங்குதான் பலர் உண்மையாகவே மனம் திறந்து நெருங்கியவர்களோடு பேசினார்கள்.

    பீ காம்ப் பற்றித் தெரியுமா? என்று கதை கதையா இரவிரவா கதை சொல்வார்கள். வந்த காலம் தொட்டு வீடுகளில் உள்ளவர்களுக்கு இவர்கள் இருக்கிறார்களா என்று தெரியாது. இவர்களுக்கு வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன நிலை என்றும் தெரியாது. எந்த தொடர்பும் இல்லை. யராவது தளத்தில் இருந்து இவர்களுக்கு தெரிந்தவர்கள் வந்தால் ஏதாவது செய்திகள் பரிமாறப்படும். ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு போகும் கடிதம் கூட சென்சார் ஆகியே போகும். அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிவொம் என்று சொல்லிக் கொண்டு அடக்கியே ஆண்டவர்கள் இந்த தமிழீழ இயக்கங்கள். இவை அனைவருக்கும் பொதுவான விதி. இவையெல்லாம் சற்று தொய்வான இடம் இந்த கல்லூரிதான்.

    இதுவரை நடுக் காடுகளில் முகாம்களுக்குள் முடமாகிக் கிடந்தவர்கள் சென்னையைக் கண்டார்கள். வேறு மனிதர்களோடும் பழகும் வாய்ப்பைப் பெற்றார்கள். இவர்களது உதவிகளோடு கடித தொடர்புகளை சென்சார் இல்லாமல் பெற்றார்கள். நண்பர்களது கருத்தாடல்கள்; இவர்கள் திரும்பி போனதும் ; இங்கே படித்ததை ; பகிர்ந்து கொண்டதை அங்கு பரிமாறத் தொடங்கினார்கள். அனைவருக்கும் கழகத்தின் உண்மைகள் இப்படித்தான் தோழர்களுக்கு சென்று சேர்ந்தது. இதுதான் கழகத்தை விட்டு ஓடிடலாம் எனும் துணிவை பலருக்கு கொடுத்தது.

    வெளி வேலைகளில் ஈடுபட்டவர்கள் ஒரு சிலர் ; ஓடியிருக்கலாம். ஆனால் இப்படி ஒரேயடியாக ஓட வலுவைக் கொடுத்தது இந்த சமூக விஞ்ஞானக் கல்லூரிதான். இங்கேதான் கனகாராஜா இயக்க வரலாற்றை அப்படியே முன் வைத்தார். ஐயரின் பதிவு போல் அவரது கற்பித்தல் இருக்கவில்லை. புஷ்பராஜனின் புத்தகம் போலும் இருக்கவில்லை. அங்கே ஆரம்ப காலத்திலிருந்து அன்று வரை போராட்ட களத்தில் இருந்த பலர் அங்கு இருந்தார்கள். அவர்கள் சில தவறுகளை உடனடியாக திருத்தினார்கள். அங்கே படித்தவர்களுக்கும் ஏகப்பட்ட விடயங்கள் தெரியும் என்பதால் விவாதங்களோடு உண்மைகள் நேருக்கு நேர் பரிமாறப்பட்டன.

    பல இந்திய கொமியுனிச வாதிகளின் பாடங்கள் ; சர்வதேச அரசியல் ; இந்திய – இலங்கை அரசியல் ; அமெரிக்க – சீன – ரஷிய அரசியல் என அனைத்து விடயங்களையும் ராஜா நித்தியன் போதிழக்க வழி செய்தார்.

    இருப்பவர்களை இப்படியாவது கொஞ்சம் காலத்துக்கு பேக் காட்டலாம் என்று கழகம் நினைத்தாலும் ; இதன் பின்னரே தளத்திலும் ; பின் தளத்திலும் மாநாடு நடத்தப்பட வேண்டும் எனும் முனைப்புகள் முணு முணுப்பாய் ஆரம்பித்தன.

    பேக் காட்ட நினைத்தவர்களை ; பேயடித்தவர்களாக்கியதற்கு இந்த கல்லூரியின் பங்கு மிக முக்கியம்.

    இன்று இத்தனை பேர் புளொட்டில் உயிரோடு இருப்பதற்கு இந்த T3Sக்கு நன்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால் சவுக்ந் தோப்பு முள்ளிவாய்க்கால் ஒன்று எப்பவோ பதிவாகிருக்கும்.

    Reply
  • nanee
    nanee

    ஒன்றை மட்டும் மறந்துவிட்டு நாம் எழுதுகின்றோம். விடுதலைகென்றே எல்லோரும் புறப்பட்டார்கள். விடுதலைக்கு வந்தவர்களை வழிநடாத்தவும் ஒரு கட்டமைப்புக்குள் ஒரு சரியான நிர்வாக அமைப்புடனும் நடாத்தவேண்டியது தலைமைத்துவத்தின் பொறுப்பே. பிழைகள் நடக்கலாம் எதிர்பாராத அக புற முரண்பாடுகள் உருவாகலாம். ஆனால் எதுவந்தாலும் தனது இனத்தின் விடுதலைக்கென்று உங்களை நம்பி வந்தவர்கள் தலமை எது சொன்னாலும் கேட்க தயாராகவும் இருந்தார்கள் அவர்களை சரியான பாதையில் நடாத்த வேண்டியதும் போராட்டத்தை சரியான பாதையில் கொண்டுபோயிருக்க வேண்டியதும் தலமைத்துவமே ஒழிய கீழ் மட்ட தோழர்களல்ல. இங்கே தலைமை மிகப்பெரிய பிழைய விட்டிருந்தது அதை ஒவ்வொருவரும் வேறுபட்ட கால கட்டத்தில் தான் உணரதொடங்கினார்கள். உடனேயே இது சரிவராது என ஓடியவனும் இருக்கின்றான் ஆக கடைசி மட்டும் நின்று திருத்த முயற்சிசெய்து கடைசியில் ஓடியவனும் இருக்கின்றான். இதில் நான் ஓடிய நேரம் தான் சரியென எவரும் வாதிடமுடியாது. நான் இயக்கத்தில் இருக்கும் போது ஓடியவர்களில் எனக்கு பெரும் கோவம். இருந்து திருத்த வேண்டிய ஒரு அமைப்பை உடைத்துவிட்டு ஓடுகின்றார்களே என்று. பின்னர் நான் ஓடும் போது உடைத்து இல்லாமல் பண்ணவேண்டிய ஒரு அராஜக அமைப்பை இன்னும் கட்டிப்பிடித்து கொண்டிருந்து காப்பாற்ற நினைகின்றார்களே என்று ஓடாமல் இருந்தவர்களில் கோவம். சரி பிழை அந்த அந்த நேரம் அவரவர் தீர்மானித்ததுதான்

    Reply
  • nanee
    nanee

    டி3 எஸ் பற்றி அஜீவன் எழுதியது அத்தனையும் உண்மை. முழு முகாம்களில் உள்ளவர்களுக்கும் ஒரு தொடர்பிணைப்பை ஏற்படுத்தியது இந்த கல்லூரிதான். இங்கு படிப்பு முடிய வெவ்வேறு முகாம்களில் பொறுப்புகளுக்கு போன இவர்கள் ஓரளவு திறந்த மனதுடன் வெளியில் என்ன நடக்கின்றதென தெரியாது இருந்த தோழர்களுக்கு கழகத்தின் உண்மைநிலையயும் பிரச்சனைகளியும் ஓரளவிற்கு விளங்கப்படுத்தினார்கள். முக்கியமாக இவர்கள்தான் அரசியல் பாடம் எடுத்தார்கள். இதனால் நித்திரையில் குளறிய தோழர்களும், ஓடத்தான் வேண்டும் என முடிவெடுத்த தோழர்களும் பலர். ஏன் நாட்டுக்கு போய் முதலில் இவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என சொன்னவர்களும் இருக்கின்றார்கள். ஒரு கால கட்டத்தில் முகாம்களில் இருந்த உமாவின் படங்கள் அடித்து நொருக்கப் பட்டு கந்தர், மாணிக்கம் போன்றேரே முகாமுக்கு போக முடியாத நிலை கூட வந்தது. இந்தக் கல்லூரியில் 3வது பட்சில் நான் படித்தேன். அதன் பின் 3 பட்சிலும் இருந்து ஒரு 25 பேரை மட்டும் தெரிவு செய்து ஆங்கிலத்தில் படிப்பித்தல் தொடர்ந்தது. அதற்காக ஒரு ஆங்கில ஆசிரியையை ஒழுங்கு செய்திருந்தார்கள். அதைவிட சென்னை சட்டக் கல்லூரி, யூனிவெசிரிகளிலும் இருந்து அரசியல் விஞஞான லெக்சரர்களியும் ஒழுங்கு பண்ணியிருந்தார்கள். இதில் சூரியநாராயணாவும்(ரோ அட்வைசர்)அடக்கம்.
    ஒரு நாள் அவர் மறைமுகமாக சொன்னார் ‘துப்பாக்கி பிடிப்பவன் கை கட்டாயம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று”.25 பேரும் 2 வீடுகளில் தங்கியிருந்தோம். நான் தான் அந்த 25 பேருக்கும் பொறுப்பு.காலையில் ஆங்கிலம் .பின்னர் உலக அரசியல் நான். (சும்மா ஏதும் புத்தகத்தை பார்த்து படிப்பிப்பது). பின்னர் லன்ச்.3மைக்கு லெக்சேர்ஸ். எமது அதிபர் ராஜா நித்தியன்.

    இரவு முடிந்தால் கள்ளமாக சினிமா. யாரும் அந்த நேரம் படித்தவர்கள் இருந்தால் வந்து எழுதவும் என்ன சந்தோசமாக ஒழுக்கமாக இருந்தோம். வாராமொரு முறை சண்டே காலை கூட்டம். உமா, வாசு, கண்ணன் என பலரும் வருவார்கள். எதிர்காலத்தை திட்டமிடுவோம். அரசியல் தீர்வா, ஆயுத போராட்டமா, தமிழீழம் தான் தீர்வா அல்லது ஒரு இடைகால தீர்வா. கனடா , சுவிஸ், இந்திய மாகாண, மாவட்ட அதிகார பரவல் பற்றி விவாதிப்போம். தமிழீழம் வந்தால் வெஸ்ட் , ஈஸ்ட் புளக்கா அல்லது அணிசேரா கொள்கையா? அது ஒரு கனாக் காலம். இதற்குள் கிரிக்கெட் வேறு. நான் சில மாதம் கே.கே.நகர் அணிக்கு கூட விளையாடினேன்.
    அது ஒரு கனவுக் காலம். சத்தியப்பிரமாணம் எடுத்தது திருக்குறளிலும், கொம்னிஸ்ட் மனிபஸ்டோவிலும் எக் காலமும் கழகத்திற்கு விசுவாசமாக இருப்போமென உமா முன்னிலையில்.

    Reply
  • palli
    palli

    //வாராமொரு முறை சண்டே காலை கூட்டம். உமா, வாசு, கண்ணன் என பலரும் வருவார்கள். எதிர்காலத்தை திட்டமிடுவோம். அரசியல் தீர்வா, ஆயுத போராட்டமா, தமிழீழம் தான் தீர்வா அல்லது ஒரு இடைகால தீர்வா. கனடா , சுவிஸ், இந்திய மாகாண, மாவட்ட அதிகார பரவல் பற்றி விவாதிப்போம். தமிழீழம் வந்தால் வெஸ்ட் , ஈஸ்ட் புளக்கா அல்லது அணிசேரா கொள்கையா? அது ஒரு கனாக் காலம். இதற்குள் கிரிக்கெட் வேறு. நான் சில மாதம் கே.கே.நகர் அணிக்கு கூட விளையாடினேன்.
    அது ஒரு கனவுக் காலம்.//
    ஆக உங்களை நம்ம்பி வந்து முகாமில் அடைப்பட்டு இருக்கும் தோழர்களை பற்றியோ அல்லது தமிழ்மக்கள் பற்றியோ சிந்திக்கவில்லை; மாறாக தமிழ்செல்வன் பேச்சுவார்த்தை போல் எதேதோ புரியாமல் புரிந்தமாதிரி நடித்து நாட்டையும் நம் மக்களையும் நாசமாக்கியதுதான் மிச்சம்; ஏதார்த்தம் கதைத்த சந்ததி; எங்கேயும் பேச கூடிய யாண்; அரசியலில் ஆளுமை உள்ள சுமதி; எதுக்கும் எப்போதும் சரியான ஆளான ராஜன், இவர்களுடன் சர்வதேச நாயகனான டேவிட் ஜயா கோவிந்தன், கண்னாடி சந்திரன் இப்படி பலரை இனம் காட்டலாம்; அவர்களை கொன்றும் தொலைத்தும் விட்டும் புதிதாய் லண்டனில் இருந்து இறக்குமதியான சமூக ஆராட்சி செய்தாரா உமா?? அஜீவன் சொன்னதுபோல் இது ஒரு காலம் கடந்த ஒரு ஏற்பாடே தவிர வேறு எதுவும் இல்லை; ஆனால் அதை படித்த சிலராவது இன்று அதை சமூகத்துக்கு பிரயோசன படுத்தினால் போதாதா??

    //. நான் சில மாதம் கே.கே.நகர் அணிக்கு கூட விளையாடினேன்.//
    முகுந்தன் விடுதலையுடன் விளையாட:? கண்ணன் எந்த விளையாட்டும் தெரியாமல் இருக்க; தாங்கள் ஏதோ விளையாடினீர்களே அதுவே பெரிய விடயம்தான் ,

    //ஒரு நாள் அவர் மறைமுகமாக சொன்னார் ‘துப்பாக்கி பிடிப்பவன் கை கட்டாயம் சுத்தமாக இருக்க வேண்டும்//
    அதுதான் எல்லாமே சுத்தமாய் அழித்தாச்சே: சொன்னவர் வாய்க்கு ஒரு ஓ போடலாம்; இருப்பினும் நானேயும் உன்மைகளை சொல்லுவதால் அவரது
    வாக்குமூலங்கள் கூட இங்கு கண்டிப்பாக கழக சாட்சியாக அமைய வேண்டும்;

    //ஒரேயடியாக ஓட வலுவைக் கொடுத்தது இந்த சமூக விஞ்ஞானக் கல்லூரிதான்.//
    உன்மையிலேயே ராஜா நித்கியானந்தன் ஒரு மிக கெட்டிகாரன்தான்; ஆனால் அவ்வளவு திறமை உள்ள அவர்கூட ஏதோ கதலுக்கு மரியாதை படம் பார்த்ததாய் அதே கல்லூரி பளய மாணவர்கள் கல்லூரியை விட்டு வந்தபின் புலம்பினார்களே, அதைபற்றியும் சிறிது சொன்னால் ஆவணபடுத்தலில் ஆசிரியர் பங்கு என போடலாமே; (இதுவும் தகவலே)

    // ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு போகும் கடிதம் கூட சென்சார் ஆகியே போகும்.//
    ஆனால் முகுந்தனின் கொடுமையான தகவல்களை காவிசெல்லும் கடிதங்களை இன்றய மாமனிதர் சிவாசின்னபொடிதான் தூக்கி செல்வாராமே, மாயா இந்த குப்பையையும் ஒருக்கா கிளறுங்கோ; அஜீவன் உங்களையும் தான் ;

    சீலனின் இரண்டாவது பாகத்தில் எனக்கு வேலையில்லை; (விமர்சனம் இல்லை) காரணம் அவர் தனது இளமையை தொலைத்த உன்மையை சொல்லும் போது அவரது மனவலி எனக்கு புரிகிறது; ஆனால் சீலன் நீங்க மட்டுமல்ல கழகத்தில் 95வீதமானோர் இப்படிதான் முன்னவர்களைது
    தீ பிடிக்க தீ பிடிக்க பேச்சை கேட்டு ஏமாந்து வரும்காலம் எமதே என்னும் மூடநம்பிக்கையுடன் தொலைத்தார்கள், இது கழகத்தில் மட்டுமல்ல அனைத்து ஆயுத அமைப்புகளிலும் நடைபெற்ற உன்மை;

    Reply
  • மாயா
    மாயா

    //தீ பிடிக்க தீ பிடிக்க பேச்சை கேட்டு ஏமாந்து வரும்காலம் எமதே என்னும் மூடநம்பிக்கையுடன் தொலைத்தார்கள், இது கழகத்தில் மட்டுமல்ல அனைத்து ஆயுத அமைப்புகளிலும் நடைபெற்ற உன்மை; -பல்லி //

    அங்கே ஹீரோயிசம் என்ற ஒரு வசனம்தான் கதையை கந்தலாக்கியது. மேடையில இரத்த பொட்டு வச்சவர்களை பார்த்து ; பின்னால தீபிடிச்ச மாதிரி உண்ர்ச்சி வசப்பட்டு வந்து > சவுக்கந் தடியோட வனாந்தரத்தில ஓட விட்ட போது வாயெல்லாம் காஞ்சு போச்சு. இது எல்லாருக்கும்தான்.

    நானும் நாட்டில வகுப்பெடுத்தன். கலியாணம் கட்டியிருந்தவங்களும் வகுப்புக்கு வந்தவை. பயிற்சிக்கு நாங்களும் போக வேணும் என்று சொன்னப்போ > போகாதேங்கோ > உங்களுக்கு பொண்டாட்டி புள்ளையிருக்கு. இங்க உள்ள வேலையை செய்யுங்கோ என்று சிலருக்கு சொன்னன். இந்தியாவுக்கு வர முன்ன நாட்டில சில மாதங்கள் சுத்தி திரிஞ்ச போது கிடைத்த இவர்களுக்கு அதெல்லாம் காதில ஏறயில்லை. ஒருநாள் வண்டி போகுதென்று கடலோரம் போனால் சொல் வழி கேட்காதவர்கள் வண்டியில நின்று சாரத்தால முகத்தை மறைச்சாங்கள். சரி இனி என்ன செய்ய……..

    பிறகு முகாமுக்கு போன ஒன்றிரண்டு அங்கவீனமா நாட்டுக்கு எப்படியாவது அனுப்பி விடுவேங்களா என்று கத்திக் குளறினார்கள். நான் திருப்பிக் கத்தேலாது. சொல்லிப் பாக்கிறன் எற்று வந்துட்டன். இப்பிடி ஹீரோயிசம் என்று வந்தவங்க பாடு கொடுமைதான். போராட்ம் என்பது ஹீரோயிசம் இல்லை. அதைத் தாங்க சக்தி வேணும். பிடிக்காது போனா விலகிட வேணும். அதுதான் சிக்கலான இடிப்ப சிக்கல்??

    Reply
  • nanee
    nanee

    5000 பேரையும் கொண்டுவந்து சென்னையில் வகுப்பு வைக்க முடியாது. தளத்தில் நிற்பவன் காட்டிற்குள் சாப்பிடகூட வழியில்லாமல் ஒழிந்திருந்த காலமும் உண்டு. நாளைக்கு நாங்கள் தளத்திற்கு போனால் எமக்கும் அதே நிலைதான் அதற்காக சென்னையில் இருக்கும் போது ஒரு காட்டிற்குள் நாம் போய் ஒழித்து சாப்பிடாமல் நாம் இருக்க முடியாது,
    இந்த கல்லூரி பலருக்கும் ஒரு மீட்டிங் பிளெசாகவும் இருந்தது. உமாவின் வீடும் நடை தூரமே. கந்தர், மாணிக்கம், மொட்டை மூர்த்தி, செந்தில் (3ஆம் மாடிக்க படுத்திருப்பது) யாராவது வந்து போய்க் கொண்டே இருப்பார்கள்.

    வழக்கம் போல் ஞாயிறு கூட்டம் நிகழ்ச்சிநிரல் தரப்பட்டது. பல சமகால பிரச்சனைகளும் ஆராயப்பட்டுக் கொண்டிருந்தன. கிழக்கில் தமிழர் முஸ்லிம் பிரச்சனை வேறு நடந்துகொண்டிருந்தது. அது பற்றி வாசு விளக்கம் தந்துகொண்டிருந்தார். நான் கேட்டேன் “ஒவ்வொரு கிழமையும் இங்கு கூடுகின்றோம் பல பிரச்சனைகள் பற்றியும் விவாதிக்கின்றோம் பின்னர் தீர்வுகளும் எடுக்கின்றோம். எடுத்த தீர்வுகளொன்றும் இதுவரை நடைமுறைக்கு வந்ததாக தெரியவில்லை பின்னர் இப்படியான கூட்டங்களில் என்ன பிரயோசனம் என்று” வந்துதே வாசுவிற்கு ஒரு கோவம். நடைமுறைபடுத்துவதென்பது ஒன்றும் இலகுவான காரியமல்ல நாங்கள் நித்திரயும் கொள்ளாமல் இதே சிந்தனையில் மண்டையை போட்டு குழப்பிக் கொண்டிருகின்றோம், சும்மா குதர்கமான கேள்விகளை கேட் க வேண்டாமென்றார். (பம்மாத்து) இதேபோல் தளத்தில் இருந்து வந்த அமைப்பாளர்களுடன் ஒரு கூட்டம். அவர்கள் ஆயுதம் இல்லாமல் தங்களாலெதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றது. தோழர்கள் தற்பாதுகாப்பிற்காவது கொஞ்ச ஆயுதம் கட்டாயம் வேண்டுமென்றார்கள். புலிகளால் தமக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றதென்றார்கள். அதற்கு உமா “கொத்தத்தான் வேண்டாமென்று சொன்னேன் சீறவேண்டாமென்று சொல்லவில்லை என ஒரு நல்லபாம்பு கதை சொல்லி அனுப்பிவிட்டார்.

    Reply
  • மாயா
    மாயா

    // ஆக உங்களை நம்பி வந்து முகாமில் அடைப்பட்டு இருக்கும் தோழர்களை பற்றியோ அல்லது தமிழ்மக்கள் பற்றியோ சிந்திக்கவில்லை – பல்லி //

    நானேயை விட்டு விட்டுத்தான் தள மாநாடே நடக்க இருந்தது. வந்த லொறியில் ஏறி உரத்தநாடு போன நானே சற்றும் எதிர்பாராத விதமாக மாநாட்டுக்கு போக முடிந்தது. லண்டனை விட்டு வந்து லொல்லு கதைக்கப் போய் > லாடம் கட்ட தேடினாங்கள் புண்ணியவான்கள். ஆண்டவனே இல்லையென்ற சமூக சிந்தனாவாத கொமியுனிச தோழர்களுக்கு உயிரைக் காத்தது அடைக்கலம் கொடுத்தது தஞ்சை கோயில்தான். அரோகரா……..

    பெரியவரை எதிர்த்து கருத்து சொல்லிட்டு தப்ப முடியுமா? மனோகரா வசனம் பேசினாராம் நானே. உரத்தநாட்டு சவுகந் தோப்பு சந்தடிகள் புரியாத நானேயை அடே மொக்கா ; மொக்கு வேலை பாத்திட்டு நிக்கிறீயே > இன்றைக்கு உரத்த நாட்டில தூங்கப் போறியே> இதுதான் நீ கடைசியா தூங்கிற இடம் என்று சொல்லி ஒரு நண்பன் இடத்தை விட்டு ஓட வழி செய்தான். கருத்தை கருத்தால் மோதுறதை விட கழுத்தை திருகிக் கொல்றாதால தமது கருத்தை திணிக்கலாம் என்ற கொம்பனுகளுக்கு முன்னால மனோகரா வசனம் எல்லாம் பலிக்காது. சிங் சொங்தான் சரி. இதுக்கெல்லாம் சின்னப் பொடிதான் வைக்க வேணும். சிரிச்சு நசுங்கவோ > நசுங்கி சிரிக்கவோ தெரியாதவங்களால எந்த இயக்கத்திலும் இருக்க இயலாது. இப்படித்தான் எல்லா இயக்கமும்.

    நல்ல காலம் தளத்திலும் தளும்பல் > பின் தளத்திலும் குலுங்கல். பொங்கலுக்கு தமிழீழம் தாறதா சொல்லிக் கொண்டிருந்த> புளொட் இரண்டா பிரிஞ்சு ஆயுதத்தோட நடராசர்களா நடமாடினதால யாரையும் போட பயப்பட்டாங்கள். எவன் எவனோட நிக்கிறான் என்று எவனுக்குமே தெரியாது. அவன் இவனில்லை. நான் அவனில்லை ரேஞ்சில ஆள் மாறாட்டம். தம்பிரான் புண்ணியம் தலைகள் உருளயில்லை. பரந்தன் ராஜன் பலமா நின்றதால > பயத்தில பெரிசின் வால்களின் மோட்டு காரோட்ங்கள் அடங்கியிருந்தன.

    ராஜீவ் கொலை மாதிரி ஏதாவது அப்ப நடந்திருந்தா ; புலத்தில நிக்கிற அத்தனையும் எந்த சிறையிலயோ தெரியாது? நல்ல காலம் அதுக்கு முன்னமே சிதறியது நல்லா போச்சு. எனக்கு மட்டுமென்ன 4-5 முறை எருமை மீது வரும் தேவ தூதர்கள் வந்தாங்கள். வந்தவங்கள்ல தாசனோடு; கனடா இடிஅமீனும் ஒருத்தர். சாக்கில ஆயுதத்தை கட்டிக் கொண்டில்லடாப்பா சென்னை முழுக்க திரிஞ்சவங்கள். நானேயை தேடியும் அண்ணா நகரெல்லாம் நகர் வலம் வந்தவங்களாம்.

    பல்லி ; எத்தனை பேர் இருக்கிறாங்கள். என்ன நடக்குதெண்டு எதுவும் தெரியாது. பம்மாத்து வாசு மாதிரி ஆக்கள் நல்லா கோலம் போடுவாங்கள். அங்கயும் பாடி ; இங்கயும் பாடுவாங்கள்.

    பம்மாத்து வாசு எப்படி என்கிறதுக்கு இது ஒரு உதாரணம். ஒரு நாள் பம்மாத்து வாசு கழக தோழர்கள் இருந்த இடத்துக்கு வரும் போது 2-3 பேர் வெளியில் வாசலில் நின்றாங்கள். எதையோ கதைச்சட்டு வாசு வாறதை நான் கண்டேன். உள்ள வந்து உள்ள இருந்தவர்களிடம் சொன்னார். உள்ள நீங்கள் எழுதிக் கொணடிருக்கிறீங்கள். அங்க பாருங்க சிலதை > ரோட்டில போறதுகளை பாத்துக் கொண்டு நிக்குதுகள் என்று சொல்லிப் போட்டு > வெளியேறும் போதும் வெளியே நின்றவர்களோடு ஏதோ சொல்லிட்டு போவதைக் கண்டேன். நான் வேறு வேலையாக இருந்ததால் இதைக் கவனித்தேன்.

    வெளியில் நின்றவர்கள் உள்ள வந்ததும் வாசு என்ன சொல்லிட்டு போனவர் எனக் கேட்டேன். ஒன்றுமில்லை இப்பிடித்தான் என்றவர்கள் உங்கள மாதிரி ஆக்கள் சென்டிக்கு நிக்கிறதால உள்ள இருக்கிறவங்க கவலையே இல்லாம தூங்குதுகள் என்று சொல்லிட்டு போனார் என்றார்கள்.

    அன்றுதான் அவருக்கு பொடிகள் பம்மாத்து என சரியாத்தான் பேர் வச்சிருக்கிறாங்க என்று நினைத்து சிரித்தேன். அதற்கு முன் வாசு மீது இருந்த நம்பிக்கை என்னில் அற்றுப் போன நாள் அதுதான்.

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    //உன்மையிலேயே ராஜா நித்கியானந்தன் ஒரு மிக கெட்டிகாரன்தான்; ஆனால் அவ்வளவு திறமை உள்ள அவர்கூட ஏதோ கதலுக்கு மரியாதை படம் பார்த்ததாய் அதே கல்லூரி பளய மாணவர்கள் கல்லூரியை விட்டு வந்தபின் புலம்பினார்களே//
    ஒரு குழுவில் சில பறவைகள் இருந்தன. அதில் ஒன்றின் இறகு அழகாய் இருக்கிறதென்று ” பாட்டுப் பாட வா. பார்த்து பேச வா” என்று இசைக்க எத்தனிக்க ; இடையில் நின்ற புலன்கள் மேலிடத்துக்கு ஊதி விட்டன. பாவம் அதிபர் அகதி போல தாடியோட திரிந்தார். போராளிக்கு தாடி அழகுதானே? அதற்கு பிறகு வந்த குழுக்களுக்கு பறவைகள் பல்லிகள் தொல்லை இருக்கவில்லை. மரியாதை மட்டுமே தொடர்ந்தது.

    // முகுந்தனின் கொடுமையான தகவல்களை காவிசெல்லும் கடிதங்களை இன்றய மாமனிதர் சிவாசின்னபொடிதான் தூக்கி செல்வாராமே //

    என்னோடு அதிகம் பேசுவதில்லை. ஆனால் நான் வந்ததும் என்னை ஊரிலேயே தெரியும் என்று சொல்லி எல்லார் மனதிலும் ஒரு பயத்தை ஏற்படுத்தியிருந்தார். அது பின்னரே எனக்குத் தெரியும். உமா ; என்னை அழைத்து வரும் போதே வோட்டை மாற்ற உம்மைப் போல ஒருத்தர் தேவையென்றே அழைத்து வந்தார். பதவிக்காக பலர் முண்டுவதை கண்டேன். ஒரு அரச தொலைக்காட்சியில் இருந்து வந்த எனக்கு; மண் வீடு கட்டி விளையாடுற பிள்ளைகளோடு எதுக்கு வீண் வம்பு என மனதால் விலகி நின்று சில வேலைகளை செய்தேன். அத்தோடு சந்தோசப்பட்டேன். அதனால் என் பாட்டுக்கு திரிந்தேன்.

    சித்தார்த்தரும் ; லண்டன் கிருஸ்ணனும் கொண்டு வந்த வீடியோ கெமரா மற்றும் டெக்கை என்னிடம் தந்து இது தொலைக்காட்சிப் பகுதிக்கு என்றார் உமா. அதுவும் புளொட்டுக்கு கீழதான் இருக்க வேணும் என்றார் திவாகரன். உமா; ரேடியோ வேற ; டீவீ வேற. அதுக்கு பிரசாத்தான் பொறுப்பு என்றார். தேவைப்பட்டால் ; எங்கேயாவது வைத்தால் பாவிக்கலாம் என்று சொல்லிப் போட்டு என் பாட்டுக்கு இருந்தேன்.

    நல்ல காலம் யாருக்கும் வீடியோ கெமரா உபயோக்கத் தெரியாது. இல்லையென்றால் அதுக்கும் அடிபட்டிருப்பாங்கள். ஆனால் உபகரணங்களை என்னிடம் உமா தந்து விட்டு போனார். கொஞ்ச நாளில் படம் பார்க்க டெக் வேணும் என்று வாசு வந்தார். பெரியவரிடம் கடிதம் வாங்கி வாரும் என்றேன். அவரோ தனது பதவியை சொன்னார். நீங்க யாராவும் இருங்க. இதை தந்தது பெரியவர். அவர் கேட்டால் கொடுப்பேன். இல்லை அவர் கடிதம் தந்தால் தருவேன். இல்லையென்றால் இல்லையென்றேன்.

    அடுத்த நாள் உமா வாசுவோடு வந்தார். நான் விபரத்தை சொன்னேன். உமா வாசுவைப் பார்த்தார். வாசு கதைக்கவேயில்லை.

    திவாகரன் உமா சொல்லி விட்டு போவதை எழுதுவார். கடிதம் கொண்டு போனதாக தெரியாது.

    கழகத்தில் உண்மையான மனம் கொண்டு போராட வந்தவர்களில் நானேயும் ஒருவர். மனதில் பட்டதை மறைக்காதவர். அதனால் தூர இருந்தாலும் நெருக்கமாக இருக்கிறோம். பழகியவர்களை போட்டுக் கொடுத்தில்லை. எனவே அதிக தோழர்கள் இன்னும் நண்பர்களாக இருக்கிறார்கள்.

    நானும் படத்துக்கு போவேன். அடுத்தவர்களுக்கும் படம் பார்க்க காசு கொடுப்பேன். இதைத் தவிர கெடுதல்கள் செய்ததில்லை. சிலருக்கு இரவில் சுகமில்லாமல் வரும். கிளீனிக் போவதாக படத்துக்கு பலர் இப்படித்தான் போனார்கள். கள்மாய் முதல் சோவுக்கு போய் வரும் போது உள்ள போறவன் மாட்டுவதுமுண்டு. இரு தரப்பு கள்ளத்தனமாக போவதால் கப்சிப்தான். ஆனால் வாரத்தில் ஒரு படம் பார்க்க அனுமதியிருந்தது.

    இந்த கொடிய அனுபவம்தான் எந்த இயக்கத்தோடும் இணைக்காமல் காப்பாற்றியது.

    Reply
  • palli
    palli

    நானே பல்லியின் பின்னோட்டங்களை கவனியுங்கள்
    நீங்கள் தந்த வாக்கு மூலமும் பல்லியின் பாணியில் வரலாம்; அஜீவன் ஆக பல்லியின் புள்ளிக்கு கோலம் போடுறியள் மகிழ்ச்சி, மாயா ரெஸ்க் எல்லாம் ரஸ் சாப்பிடிற மாதிரி என்னும் ஜோக்தான் உங்கள் எழுத்தை பார்க்கும் போது பல்லிக்கு வருது, வாசு பற்றி எழுதுவேன் ஆனால் தனிக்கை குழு தணிக்கை செய்து விடுமே, என்ன செய்ய; இருப்பினும் சீலனின் ஏதாவது ஒரு பாகத்தில் அவரது லீலைகழும் அம்பலம் அம்பலம்; சீலன் உங்கள் மூன்றாவது பாகத்தை தாருங்கள்.

    Reply
  • logan
    logan

    நண்பர்களே தோழர்களே உங்கள் பாரிய முயற்சிக்கு எனது ஆதரவுகள்
    உங்களால் முன்வைக்கப்படும் கழகம் சார் கருத்துக்கள் விமர்சனங்களின் போது கழகம் சார்ந்து கரத்து எழுதுவதோடு உங்கள் கவனத்தை மட்டும் வைத்திருக்காமல் அக்காலத்தில் தமிழ் மக்களின் சூழலில் நடைபெற்ற நிகழ்வுகள் திகதிகள் இவற்றுடன் சம்பந்தப்பட்டிருந்தால் அவற்றை குறிப்பிட்டும் இதெகாலத்தில் மற்றய இயக்கங்களின் நடவடிக்கைகள் அவற்றின் பாதிப்புக்கள் கழகத்தினருக்கு ஏற்ப்பட்டதும் கழகத்தலிருந்து வெளியேறியவர்களில் சிலருக்காவது வேறு ஒரு இயக்கத்தின் பாதிப்பு அல்லது ஆதரவுகள் தொல்லைகள் எனறு பலதரப்பட்ட விடயங்களும் இணைந்தே இருந்திருக்கும் என் என்னால் எதிர்பார்க்கப்படுகிறது இவற்றையும் உங்கள் விமர்சனங்களடன் இணைத்துக்கொள்ள முயற்சியுங்கள்.

    உதாரணமாக கழகத்தலிருந்து வெளியேறி பெண் தோழர்கள் தங்கியிருந்த இடத்துக்கு ஈரோஸ் உறுப்பினர்கள் அங்கு இருக்கும் ஒருவரை சுட்டுக்கொல்ல வந்த சம்பவத்தை ஒரு தோழர் நினைவு படுத்தினார் இவை போன்ற பல விடயங்கள் நடைபெற்றிருக்கும் என்பதையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

    Reply
  • oruvan
    oruvan

    கழகத்தால் பொதுமக்கள் எப்படி பாதிக்கபட்டார்கள் மற்றய இயக்கங்கள் எப்படி பாதிக்கபட்டனர் என்றும் எழுதுங்கள். உதாரணமாக, அஜீவன் முன் ஒரு பதிவில் குறிப்பிட்டார் ஈரோஸ் ஆல் நடாத்தப்பட்ட மாநாடு ஒன்றில் கழகத்தின் நிகழ்வுகழை மாத்திரம் ஒலி, ஒளி பதிவு செய்வதக கூறி மற்றய நிகழ்ச்சிகழையும் ஒலி, ஒளி பதிவு செய்ததை. இது முறையான செயலா? இதை விட பல பல சம்பவங்களை குறிப்பிடலாம். ஆரம்பம் முதலே கழகம் மற்ற இயக்கங்களுடன் ஓர் குறைந்த பட்ச புரிந்து உணர்வுடன் கூட நடக்கவில்லை. மேலும் இப்படி பட்ட பலரை புலியின் வாயில் இருந்து காப்பற்ற வேண்டிய நிர்பந்தம் ஈரோஸ் இற்க்கு ஏற்பட்டது அதையும் எழுதுங்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    லோகன் > நீங்கள் கேட்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் கேள்விப் பட்டதாக எழுதுங்கள். மற்றவர்கள் சாக > உங்களைப் போன்றவர்கள் சாமரம் வீச நல்லாயிருக்கு. சிலர் அடுத்தவன் வெளிச்சத்தில் நடக்க நினைப்பவர்கள். இவைதான் அனைத்து இயக்கங்களும் செய்தது.

    ஒருவன் > ஈரோஸ் ஒன்றும் பாப்பாக்கள் இல்லை. அவர்களும் சேர்ந்து தாக்கித்தான் முள்ளிக்குளம் புளொட் முகாம் தோழர்கள் அழிந்தார்கள். புலிகளும் > சிறீலங்கா இராணுவமும் > ஈரோசும் சங்கிலி இருந்த முகாமை தாக்கி அழித்தார்கள். இந்திய இராணுவம் செய்வதறியாது பார்த்துக் கொண்டு நின்றதாம்?

    புலியின் வாயிலிருந்து உங்கள் தலைவர் பாலகுமாரையே காப்பாற்ற முடியாத ஈரோஸால் மக்களை எப்படிக் காப்பாற்ற முடியும்?

    படிக்காத கருணா (முரளீதரன்) பேச்சு வார்த்தைக்கு போய் வந்து > இனி அடிபட நினைக்கிறது மொக்குத் தனம். சமாதானத்தின் ஊடாக ஏதாவது பெற வேண்டும் என்றதுக்கு > படிச்ச மனிசன் பாலகுமாரிடம் கருத்து கேட்க தலைவர் வழியான தமிழீழம்தான் என சிங்சொங் அடித்த பாலகுமார்> கடைசியில் கொடிக்கு துணியும் இல்லாமல் வந்து ஆளே இல்லாமல் போனதுதான் ஈரோஸின் புத்திசாலித்தனம். ஈரோஸ் > எத்தனை பேரை பின் தளத்தில் போட்டது என்று எழுதுங்களேன்? அது முறையா என்று கேட்கிறம்?

    Reply
  • oruvan
    oruvan

    “ஈரோஸ் ஒன்றும் பாப்பாக்கள் இல்லை. அவர்களும் சேர்ந்து தாக்கித்தான்…”

    இதுதான் கழகத்தின் கலகம். உண்மைக்கு புறம்பானவற்றை ஊதி பெருக்க வைப்பது. இன்னும் போனால் அமெரிக்க இராணுவத்தின் ஏழவது படைப்பிரிவும் முள்ளிகுள முகாமை தாக்கியது அதனால்தான் இந்திய இராணுவம் ஒன்றும் செய்வது அறியாது நின்றது என்றும் சொல்ல தொடங்கி விடுவீர்கள். இவ்வளவு அவலங்களுக்கு பின்பும் உங்கள் கழக புத்தி போகவில்லை. இது போலதான் மற்றய விடையங்களும்.

    “ஈரோஸ் எத்தனை பேரை பின் தளத்தில் போட்டது என்று எழுதுங்களேன் …”
    உங்களை போல் மற்றவர்களை எண்ண வேண்டாம். மேலும் தமிழ்நாட்டில் கழகத்தால் அவதிப்பட்ட ஈரோஸ் உறுப்பினர்கள் எத்தனை பேர் என்று தெரியுமா? ஒரு பொது மேடையில் கூட கழகத்தால் புரிந்துணர்வுடன் நடக்க முடியவில்லை…, ஆனால் அதே மேடையில் இருந்த புலி….

    “படிச்ச மனிசன் பாலகுமாரிடம் கருத்து கேட்க தலைவர் வழியான தமிழீழம்தான்..”
    தயாமாஸ்டரின் சாட்சியத்தை கவனமாக ஆராயுங்கள்….

    “பாலகுமார் கடைசியில் கொடிக்கு துணியும் ..”
    இது எதனை காட்டுகின்றது என்றால் உங்களது மனித நேயத்தை. மேலும் அப்போது பாலகுமார் இற்க்கும் ஈரோஸ் இற்க்கும் என்ன சம்ப்ந்தம்? அப்போ உங்கள் கருத்துப்படி ஈரோஸ் தான் கடைசி யுத்தை நடாத்தியது என்று கூறுகின்றீர்கள். இதற்க்கு மேல் நான் என்ன சொல்ல.

    Reply
  • oruvan
    oruvan

    இன்னும் ஒரு விடையத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன், கழகம் உடைந்த பின் கழகத்தில் இருந்து சிலர் ஈரோஸ் உடன் இணைந்து இருந்தனர் அவர்கள் எவரையாவது தெரிந்தால் அவர்களுடன் பேசிவிட்டு பின்னர் எழுதுங்கள், அதுவரை கலகம் செய்யாதீர்கள்.

    Reply
  • vetrichelvan
    vetrichelvan

    ஈரோஸ் பாலகுமாரை பற்றி கூறினால், அவர் புலிகளுடன் வேறு இயக்கங்கள் பேசுவது கூட பிடிக்காது. டெல்லி இல் பலமுறை நடந்த பேச்சுவார்த்தைகளில் எல்லா இயக்கங்களும் ஒரே ஹோடேல்தான் தங்கினார்கள். நான் பலமுறை பிரபாகரனுடனும், திலகருடனும் சும்மா கதைக்கும் போது பாலகுமார் எங்கிருந்தாலும் ஓடிவந்து நடுவில் இருந்து விடுவார். நாங்கள் பேசுவது MGR படங்களை பற்றி மட்டும்தான்

    Reply
  • palli
    palli

    ஒருவன், இது உங்க அமைப்புக்கு ரெம்பஅதிகம்; ஈரோஸ் அதுக்கும் கதை உண்டு அவசரபடாதையுங்கோ: இப்போதைக்கு தலைவர் பாலகுமார் இல்லையா இருக்கிறாரா என ஜேர்மணியி ஒரு புழு இருக்காமே நல்லாய் சாத்திரம் சொல்லுதாம்; அதுதான் கால்பந்தாட்ட இறுதி முடிவை சொல்லியதாய் இங்கு பேசுகினம்; நீங்களும் ஒருநடை போய் கேழுங்க; அதோட உங்க தலைவருடைய தலவர் இருக்கார அல்லது இல்லையா எனவும் கேழுங்கோ; அப்புறமாய் ஈரோஸ் என்ன கிளித்தது என அளககிரியின் வாக்குமூலத்துடன் தரலாம்:

    Reply
  • kovai
    kovai

    பல்லி!
    ‘Paul the Octopus’ என்ற கடல் வாழ் உயிரினத்தை பிடித்து வைத்து, கால்பந்தாட்ட இறுதி முடிவை முதலே கூறியதாக செய்தி வந்தது. அந்த Octopus இறந்து போய்விட்டது. எல்லோரும் தன்னிடம் சாத்திரம் கேட்க வருவார்கள் (அதுவும் இலங்கையில் இறந்து போனவர்கள் பற்றி) என்ற ஏக்கத்தில் இறந்து போனதோ தெரியவில்லை. அதுவும் 14 முறையில் 12 தடவை மட்டுமே சரியான முடிவைச் சொல்லியதாம்.

    வெற்றிச்செல்வன்!
    Hotel போட்ட, இயக்கப் பேச்சுவார்த்தைகளில், MGR படங்கள் எவ்வாறு உதவியது என்ற சற்றுச் சுவாரசியமான விடையங்களை தந்தால், Clint Eastwood கதைகளையும் சேர்த்து திறனாயலாம்.

    Reply
  • மாயா
    மாயா

    //ஈரோஸ் பாலகுமாரை பற்றி கூறினால்இ அவர் புலிகளுடன் வேறு இயக்கங்கள் பேசுவது கூட பிடிக்காது. டெல்லி இல் பலமுறை நடந்த பேச்சுவார்த்தைகளில் எல்லா இயக்கங்களும் ஒரே ஹோடேல்தான் தங்கினார்கள். நான் பலமுறை பிரபாகரனுடனும்; திலகருடனும் சும்மா கதைக்கும் போது பாலகுமார் எங்கிருந்தாலும் ஓடிவந்து நடுவில் இருந்து விடுவார். நாங்கள் பேசுவது MGR படங்களை பற்றி மட்டும்தான்- வெற்றிச் செல்வன்//

    வெற்றி சொன்னதில் விட்டதுகளை > எழுதலாம் என்று நினைக்கிறன். பிரபாகரன் MGR படங்களைப் பற்றி பிரபாகரன் விலாசித் தள்ளுவாராம். அதைக் கேட்கவே அனைவரும் பிரபாகரனைச் சுத்தி நிப்பாங்களாம் > மக்கள் திலகத்தின் பரம ரசிகர் பிரபாகரன். இவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்று கேட்க பாலகுமார் வந்தாலும் படங்கள் பத்தித்தான் கதைப்பாங்களாம். இந்தியாவோடு பேசவென்று வாற இவங்களெல்லாம் கடைசியில கதைக்கிறது விடுதியில ரூம் சரியில்லை. சாப்பாடு சரியில்லை. காசு இல்லையென்றுதானாம். இவங்களோட இருந்த யோக சங்கரியும் > வெற்றிச் செல்வனும் நல்ல சைசாம். காசு கேட்க இவங்கயோடு போகப்படாது. இவங்கள கண்டா காசு தராங்கள். இந்த ஊதா ஊதிப் போயிருக்கிறாங்கள் என்று விட்டுட்டு போயிடுவாங்களாம். இலங்கை பிரச்சனை கதைக்க எண்டு வார இவங்கள் எவருமே இலங்கை பிரச்சனையை விட > சாப்பாட்டு பிரச்சனைத்தான் கதைப்பாங்களாம்.

    பாலகுமாரன் > எரிசல் பிடிச்ச ஒரு ஆள். தனித் தனியா யாரும் கதைச்சால் பாலகுமார் பாத்துக் கொண்டு நிப்பாராம். எல்லோரும் சேர்ந்து கதைச்சா ஓடி வந்து நின்று கொள்வாராம். புலிகயோட யாராவது கதைக்க முற்பட்டால் அதைத் தடுக்கிறது பாலகுமார்தானாம். அப்படி ஒரு பொறாமைக் குணம் என்று சொல்ல ஏலாது அதுதான் குணமே. இல்லாட்டி ஈரோசின் மாணவர் அமைப்பான ஈபீஆர்எல்எப் பிரிந்து போயிருக்குமா என்ன? ரத்தின சபாபதி அப்படியல்ல. அந்த மனிசன் எல்லாரையும் ஒன்று சேர்க்க பலமுறை முயன்றார். உமா புலிகளோட சேர்றதை ஒரு நாளும் விரும்பயில்லை. காய் வெட்டிடுவார்.

    லங்காராணி எழுதிய அருளர் என்றால் பலருக்க தெரியாது > நம்ம பாடகி மாயாவோட அப்பா என்றால் எல்லோருக்கும் தெரியும். மாயாவோட அப்பா அருளர் பேச்சு வார்த்தையொன்றை நடத்திய போது ஈரோஸ் > புளொட்டை உள்ளுக்கு எடுப்பதை தடுத்தவர்கள். அதுக்கு பாலகுமார்தான் காரணம். பாலகுமாரை தெரிந்தவர்களுக்குத் தெரியும் > பாலகுமார் போட்டி பொறாமை புடிச்ச ஒருவர் என்று. சோசலிசம் கதைச்சாலும் பிரபாகரனுக்கே அந்த நாட்களில் பாலகுமாரை பிடிக்காது. பிரபாகரன் பாலகுமாரை நக்கலடித்தே கதைப்பார்.

    என்னதான் நக்கலடித்தாலும் இவன்கள் முட்டாள்கள் > இவன்கள் அடிபட்டு செத்து போவாங்கள் > கதைசியில ஆளப் போவது நாங்கள்தான் என்று கனவுகளோட இருந்தவர்கள்தான் ஈரோஸு ம் > பாலக்குமாரும். அதனால்தான் அனைத்து இயக்கங்களையும் புலிகள் அழியும் போது ஈரோஸ் மட்டும் புலிகளுக்குள் இணைந்து கொண்டது.

    முள்ளிக்குளம் தாக்குதலில் புலிகளோடு இணைந்த ஈரோஸ் தாக்குதல் நடத்தியது என்பதை oruvan அறிந்திருக்க மாட்டார். ஏகாதிபத்திய அமெரிக்க படைகளில்லை> சோசலிச தத்துவ புத்தகங்களை காவிய ஈரோஸ் படைதான் முன்னால் சங்கிலியின் முகாமை தாக்கியது. அங்கே தாக்குதலில் இருந்து தப்பிய நண்பன் சொன்ன தகவல். அதை அவரோடு வேறொரு நாட்டில் சந்தித்த ஈரோஸ் தோழரும் ஏற்றுக் கொண்டார்.

    லண்டனில் உருவான ஈரோஸ் ; பிடிக்காமல் மாணவர் அமைப்பான ஈபீ தனியாகியதை ஒருவன் மறந்திருக்க வாய்ப்பில்லை? அதுவும் இல்லையென்றால் ஈரோவை அவருக்கு சரியாகத் தெரியாது? ஈரோஸ் நடைமுறைகள் சரியில்லாமையால்தானே பத்மநாபா ஈபீஆர்எல்எப்பை உருவாக்கினார். சரியா இருந்தால் ஏன் உடைத்துக் கொண்டு போக வேண்டும்.

    பாலகுமாரன் > செல்வநாயகத்தின் மகன் சந்திரகாசன் மாதிரியான ஒரு நிலையைக் கொண்டவர். பாலகுமாருக்குள்ள இருந்த எண்ணம் > பிரபாகரன் ஒரு முட்டாள். என்றோ ஒருநாள் பிரபாகரன் அழிவான். பிரபாகரனோடு இருந்தால் பிரபாகரன் அழியும் போது அந்த இடத்தை தான் எடுத்துக் கொள்ளலாம் என்பதே. நாங்க படிச்சவங்கள். எங்களுக்கு அந்த தகுதியிருக்கு என்று நினைச்சு செயல்பட்டவர் பாலகுமார்.

    ஈரோஸ் ராஜிவ் சங்கரும் > ரத்தின சபாபதியும் இந்தியா மற்றும் றோவுடன் நெருக்கமான இறுக்கத்தைக் கொண்டிருந்தவர்கள். இதனால்தான் கொழும்பு பஸ் குண்டு வெடிப்பொன்றை இவர்கள் இந்தியாவின் சொல் கேட்டு நடத்தினார்கள்.உட் கொலைகள் தளத்திலும் > பின் தளத்திலும் நடந்தது. கொங்சம் பேர். அதனால் கொஞ்சம் கொலை. இருந்தாலும் கொலை கொலைதானேப்பா? கொலை முயற்சியே தப்பு > கொலை தப்புதானே? பிலாத்து மாதிரி கைகழுவி தப்ப முயலாதீங்க?

    ஐ.ஏ.பாலா என்று ஒரு தோழர். அந்த நல்ல மனுசனை பாலகுமார் வளர விடவேயில்லை. முடிவுகளை லண்டன் பிரமுகர்கள்தானே எடுத்தாங்கள்.

    தயா மாஸ்டரின் சாட்சியத்தை கவனியுங்கள் என்கிற ஒருவனுக்கு ஒரு விசயம் தெரிய வேணும் > தயாவையே எவரும் நம்பயில்லை. அவரது சாட்சியத்தை கடைசி காட்டிக் கொடுப்பாய் நாங்கள் டீவிகளிலேயே பார்த்தோமே?

    மகிந்தவை ஆட்சிக்கு வழி கோலியவர்களில் பாலகுமாரின் பங்கு மிக முக்கியமானது. அதாவது மகிந்த > முட்டாள். அவன் இந்தியாவுக்கிட்டயும் போக மாட்டான். அமெரிகாவுக்கிட்டயும் போக மாட்டான். அதனால மகிந்த தாற காசை வாங்கிக் கொண்டு ரணில் வராம பண்ணுவம். ரணில் வந்தால் மேற்கு நாடுகள் ரணிலுக்கு சார்பாகிடும் என்ற பாலகுமர தத்துவ ஞானமும்தான் பிரபாகரனை முள்ளிவாய்க்கால் வரை துரத்த வழி செய்தது. இதற்கு பாலகுமாரின் உறவு சிவதம்பியும் உடந்தை. இப்ப சிவதம்பி வரமாட்டேன் > ஆனால் வருவேன்> வந்துட்டேன் சினிமா டைட்டில் மாதிரியாகி கசங்கிய கந்தலாகிப் போனார். இவர்களால புலியும் இல்லாமல் > வலியும் இல்லாமல் ஆனதுதான் மிச்சம்? 6 கோடி டீலிங்குக்கு பாலகுமார் / சிவதம்பிதான் காரணம்.

    கடைசியில் புலிகளின் அழிவுக்கு தத்துவ கோட்பாடு அமைத்துக் கொடுத்தது படித்த ஈரோஸ்தான்.

    கருணா துரோகியானாலும் > கிழக்கு மக்களை இந்த பெரும் அழிவிலிருந்து காப்பாறியதற்காக கருணாவுக்கு கிழக்கு மக்கள் நன்றி சொல்ல வேணும். இல்லையென்றால் வன்னியின் ஓலம் கிழக்கிலும் கேட்டிருக்கும். கிழக்கின் மீட்பன் கருணா என்றால் தவறில்லை.

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    //Hotel போட்ட, இயக்கப் பேச்சுவார்த்தைகளில், MGR படங்கள் எவ்வாறு உதவியது என்ற சற்றுச் சுவாரசியமான விடையங்களை தந்தால், Clint Eastwood கதைகளையும் சேர்த்து திறனாயலாம். – kovai //

    என்ன கோவை ? விளையாடுறீங்களா? ஆரம்ப தமிழ் கட்சிகளுக்கெல்லாம் ரோல் மொடல் திமுகதானே? திமுகவுக்கு பலம் நம்ம எம்ஜிஆர்தானே?

    திமுக தனி நாடு கேட்டது. நம் தலைவர்கள் தமிழீழம் கேட்டார்கள்.

    இலங்கையிலும் தேர்தல் காலத்தில் நாளை நமதே பாடல்கள்தானே ஒலித்தது.

    இயக்கங்களில் :
    நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
    இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
    நீதிக்கு இது ஒரு போராட்டம்
    இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

    வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
    இல்லாமல் மாறும் பொருள் தேடி
    அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ
    இந்நாட்டில் மலரும் சமநீதி.
    நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
    இருந்திடும் என்னும் கதை மாறும்

    ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க
    இயற்கை தந்த பரிசாகும்
    இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க
    நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்.
    நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்
    அல்லதை நினைப்பது அழிவாற்றல்

    நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
    இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
    நீதிக்கு இது ஒரு போராட்டம்
    இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

    என்று போய் புளொட் வானோலியில்

    தோல்வி நிலையென நினைத்தால்..
    மனிதன் வாழ்வை நினைக்கலாமா…
    வாழ்வை சுமையென நினைத்து..
    தாயின் கனவை மிதிக்கலாமா…

    உரிமை இழந்தோம் ..
    உடமையும் இழந்தோம்.
    உணர்வை இழக்கலாமா…
    உணர்வை கொடுத்து
    உயிராய் வளர்த்த ..
    கனவை மறக்கலாமா…

    என்று ஒலித்து ; இப்ப புலிகளும் இதை பாவிக்கிறார்கள்.
    இதை புளொட் பாடல் என்று ஊமைவிழிகள் வர முன் சொன்னவர்கள் உண்டு. சின்னா எனும் ஆபா என் நண்பன்
    எனவே இந்தப் பாடலுக்கும் இயக்கங்களுக்கும் சம்பந்தமில்லை. இது அந்த படத்தின் காட்சிக்கு எழுதப்பட்ட பாடல்.
    அது ஆபாவாணன் குழு பட்ட வேதனைகளால் உருவான வரிகள்.

    எம்ஜிஆர்தானே நம் ஹீரோக்களுக்கு ரோல் மொடல். கிளின்ஸ்வுட் படங்களெல்லாம் அப்ப அடன்ஸ் ஒன்லி. அதையெல்லாம் நல்ல பிள்ளைகள் பார்க்காது. இங்கிலீஸ் படம் என்றாலே பாலான படம் என்ற கருத்து. மேற்குக்கு வந்தும் இன்னமும் கலாச்சார பிரச்சனை இருக்கத்தானே செய்கிறது? அன்றைக்கு தவறே செய்யாத மனிதன் எம்ஜிஆர்தான். அவரைப் பற்றிப் பேசுவது தவறேயில்லை. ஒருவரும் எதிர்த்தும் பேச மாட்டார்கள். உதவி வேறு செய்தார். அவர் காதலிக்க மாட்டார். அவரைத்தான் பல பெண்கள் காதலிப்பார்கள். இவரை பற்றி பிரபாகரன் பேசுவதில் என்ன தப்பு காண முடியும்? இங்கிலீஸ் படம் பார்த்தார் என்றால் நேர்மைற்றவராகிவிடுவாரே? அதை வச்சே கவுத்திடுவாங்களே?

    வெளிநாடு வந்த உங்களால் கிளின்ஸ்வுட் வரைதான் போக முடிந்திருக்கிறது. அதை தாண்டி புரூஸ்லீ ; ரம்போ எனவும் மாறி ரோபோ வரை வந்துவிட்டது. தயவு செய்து எந்திரன் வரை போய் விடாதீர்கள்…………

    Reply
  • nila
    nila

    கழகத்தின் கடந்து வந்த தடங்கள் என்ற பதிவுகள் இங்கு நடைபெறும் போது கொலைகள் என்று வந்தால் நாம் சில எல்லைகளைத் தாண்டியும் எமக்குத்தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட காலஓட்டத்தில் மறக்கப்படும் சில நிகழ்வுகளை வெளியே கொண்டுவர வேண்டியுள்ளது.

    எனக்கு தெரிந்த என்னாலும் சில உயிரோடுள்ள சாட்சிகளாலும் சாட்சிபகிர வேண்டிய ஈரோஸின் 2 கொலைகளின் விபரம்:

    1)1977ல் இலங்கையில் இனக்கலவரம் நடந்து மலையக மக்களுட்பட பல தமிழ்மக்கள் அகதிகளாக வவுனியா எல்லைக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தபோது இந்த சூழல் கருதி வவுனியாவில் “தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம்” என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இதில் கே.சி.நித்தியானந்தன் தலைவராகவும் ஸ்கந்தா செயலாளராகவும் மற்றும் ரவீந்திரன்-மேஜ் கந்தசாமி (தற்போது இவர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில்)செயற்பட்டார்.
    இதில் ஸ்கந்தா என்பவர் சிட்டிஷன் கொமிட்டி-மற்றும் இன்டனெஷனல் அமினஷ்டி என்பவற்றின் மிக மிக ஆற்றல் வாய்ந்த செயற்பாட்டாளர். இவர்தான் சர்வதேச பொது நிறுவனங்களிலிருந்து (அரசுசாரா அமைப்பாக இருந்து) நிதிகளைப் பெற்று செயற்படக்கூடிய செயற்பாட்டால் தான் முதல்முதலில் மக்கள் இடம்பெயர்ந்து வந்ததும் பொதுஸ்தாபன்ங்களில் நிதி எடுத்து உடனடி நிவாரணங்கள் -குடியேற்றங்கள் கென்பாம்- டொலர்பாம் என்ற ஆரம்ப பண்ணை வேலைகள் என உருவாக்க முடிந்தது. (இந்த காலகட்டத்தில் தான் காந்தீயமும் செயற்பட்டது- இதன் முழு வரலாறும் விரைவில் வெளிவரும்) இப்படியான எமது மக்களுக்கான வேலைகளை செய்த இந்த முக்கியஸ்தர்கள் பின்னால் வந்த அரசு நெருக்கடிகளால் நாட்டை விட்டு வெளியேற வேண்டி நேரிட்டது. பின் மாகாணசபை (1987 கடைசியில்) வந்த காலத்தில் ஸ்கந்தா நாட்டிற்கு திரும்பி சில பணிகளில் ஈடுபடலானர். இது பொறுக்காத ஈரோஸினர் பல மிரட்டல் சூழ்சசிகளின் பின் இவரை கொலை செய்தனர். இப்படியான எமது மக்களின் விடிவிற்காய் முழுநேரமும் அர்ப்பணித்த மகாபுருஷர்களை போட்டதற்கு இவர்கள் சொல்லும் நியாயம் என்ன?

    2)சர்வோதயம் கதிரமலை:
    இலங்கையில் 1977லிற்கு பின் என நினைக்கின்றேன் ஆரியரத்தினா என்பவரின் தலைமையில் (இன்றும் இவர் தான் தலைவர். இன்றும் இவ் அமைப்பு இலங்கையில் உள்ளது) காந்தீயம் என்ற அமைப்புக்கு ஈடாக சர்வோதயம் தோன்றியது. ஆனால் காந்திய வளர்ச்சியின் அதன் வேகமான வேலைத்திட்டத்திற்கு இது ஈடுகொடுக்க முடியவில்லை. எனவே வடகிழக்கல்லாத பகுதியில் பணியாற்றியது. எனினும் 83 ற்கு பின் காந்தீயம் அழிக்கப்பட்டு நாடு சீரற்று இருந்த வேளையில் இவ் அமைப்பு வன்னிப்பிரதேசத்தில் தனது புனர்நிர்மான வேலைகளை செய்யத் தொடங்கியது. எனவே மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான இப் பொதுப்பணிகளுக்கு திரு.கதிரமலை என்பவர் முழுப்பொறுப்பாளராக செயற்பட்டார். இவரின் அலுவலகம் வவுனியாவிலேயே இருந்தது. வவுனியாவை மையப்படுத்தியே இவரின் வேலைத்திட்டம் இருந்தது. இவர் அரச நிர்வாகங்கள் குழம்பியிருந்த வன்னிப்பிரதேசங்களில் முக்கியமாக தமிழருக்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டார். இந்த செயற்பாடுகளில் கொதிப்படைந்த எல்லைப்புறச் சிங்களவர் இவரைக் கொலை செய்ய முயற்சித்து அன்று சாத்தியப்படாத நிலையில் இவரது மனைவியை இவர்கள் வீட்டு வேலிக்குள் வைத்து வெட்டிக்கொலை செய்தனர். இதற்குப் பிறகும் மனம் தளராத கதிரமலை எம் தமிழ் மக்களுக்காக வேலை செய்தார். இந்நிலையில் தான் 1986பகுதியில் யாழ் மாவட்டத்தில் எம்.பி யோகேஸ்வரனின் வீட்டை வாடைக்கு எடுத்து சர்வோதய வேலைத்திட்டமாக பாலர் பாடசாலை -கிராம அபிவிருத்தி என்பவற்றை மேற்கொண்டார்.

    இநத காலகட்டத்தில் கழகத்தில் உள்முரண்பாடுகள் முற்றி பின்தளமநாடு நடைபெற்று கழகம் சிதறியது. கழகம் சிதறியதில் பாதிக்கப்பட்டது கழக பெண்தோழர்களும் தான் என்பதை யாரும் நினைக்கவில்லை.யாழ்மாவட்டத்தை சேர்ந்த பெண் பிள்ளைகள் அன்று திரும்பி வீட்டிற்கு போகக் கூடிய புற சூழல் ஒரளவு இருந்தது.ஆனால் எல்லைக்கிராம பெண்பிள்ளைகளும்- கிழக்கு மாகாணத்தில் தேடப்பட்ட -அல்லது திரும்ப முடியாத பெண் பிள்ளைகள் இருந்தார்கள் இயக்க உடைவில் இவர்களின் நிலை என்ன என அன்று கூடி வேலை செய்த எந்த தோழர்களும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஏனெனில் கழகம் கலகமாக -கலக்கமாக கவிண்டு கொட்டியிருந்த காலம்) எனவே வீதிக்கு வந்த இந்த 25 பெண் பிள்ளைகளின் அடுத்த நேர பாதுகாப்பென்ன? வாழ்க்கையென்ன? பொருளாதாரம் என்ன? இந்நிலையில் இதற்கு பொறுப்பாக நின்ற பெண்தோழியின் முயற்சியில் இந்த சர்வோதய கதிரமலையின் உதவி கிடைத்தது. இப் பெண்கள் தாம் வெளிமாவட்ட பல்கலைக்கழக மாணவர்கள் என்றும் (தாம் இயக்கம் என்று எதுவும் சொல்லாமல்) தமது இடங்களுக்கு போகமுடியாதென்று சொல்லியும் இருப்பிட உதவியும் சிறு கைத்தொழிலகள் செய்ய சிறிது பண உதவியும் கேட்டு கையேந்தி நின்றனர். அங்கு சென்ற போது வேறு முகங்களும் தெரிந்தன. யாழ் பல்கலைக்கழகத்தில் புலிகளின் மாணவர் அமைப்பில் திலீபனுடன் வேலை செய்த நண்பர்கள் நின்றார்கள் (இதில் குறிப்பிடத்தக்கவர் தள ராணுவப்பொறுப்பாளர் மெண்டிசுடன் இணப்பொறுப்பாளராக இருந்த காண்டிபனின் தம்பி…) இவர்கள் புலியில் ஏற்பட்ட உள் முரண்பாட்டால் விரக்தியடைந்து (அந்த வேளைதான் திலீபனுக்கும் புலிக்குள் முரண்பாடு ஏற்பட்டு தண்டனையாக திலீபன் அவர்களின் அலுவலகத்தின் செயற்பாட்டிற்குள் மட்டும் முடக்கப்பட்டார். இதனை திலீபன் ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் இந்த நண்பர்கள் நாளை தமக்கும் இதுதான் என்றெண்ணி விலகிய நேரம்) எனவே ஆளை ஆள் காட்டிக் கொள்ளாமல் பெண்கள் அங்கு கிடைத்த 5000 ருபா உதவித்தொகையுடன் சிறுகைத்தொழிலை ஆரம்பித்தனர். பற்பொடி- கற்பூரம் -மெழுகுதிரி -சவர்க்காரம்- சந்தனக்குச்சி என்பன செய்து விற்றல். இக் கடைகளில் கொண்டு செல்வதற்காக ஒரு சி90 வாகனமும் கொடுக்கப்பட்டது. எனவே இப்பெண்கள் தாம் செய்த பொருட்களை கடையில் விற்று வரும் பணத்தில் சுழற்சியில் இந்த கைத்தொழிலைச் செய்தனர். 15 பெண்கள் இந்த வேலையில் ஈடுபட மிகுதி 10பேரும் வேலை தேடியதில் கோண்டாவிலில் ஒரு தனிப்பட்ட குடும்பத்தினரின் யந்திரத்தில் கொப்றா எண்ணை எடுக்கும் வேலை கிடைத்தது. இந்த மெஷின் 24 மணிநேரமும் இயங்குவதால் இரு குறுப்பாக இப் பெண்கள் வேலை செய்தனர். எனவே யந்திரத் தளத்திற்கருகே அப்பெண்களுக்கு சிறிய அமைப்பிடமும் அவ் வீட்டினரால் அமைக்கப்பட்டு அநதப் பெண்களும் தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர். வீடுதலைக்காய் போராட புறப்பட்ட பெண்கள் வயிற்றுக்கும் தாம் தங்குவதற்குமே போராடிய காலத்தை என்னவென்று சொல்வது.

    இந்நிலையில் சர்வோதயத்தில் இருந்த பெண்கள் தம்மிடம் இருந்த புத்தகங்களை அங்கு பொதுவில் வைத்து மற்றவர்களுக்கும் வாசிக்க வைத்தனர்.பொதுவில் இப் பெண்கள் ஏதோ சுயமரியாதையுடன் நாட்களைக் கழித்தனர். இந்நேரத்தில் கதிரமலை இல்லாத ஒரு நேரத்தில் ஈ.பி.ஆர்.எல.எப் லிருந்த தங்கமகேந்திரன் (இவர் திருகோணமலையைச் சேர்ந்தவர். விடுதலைப் போராட்டத்தின் 73 74 காலத்தை சேர்ந்தவர். புலோலி வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்.) சென்று இப் பெண்களுக்குப் பொறுப்பாளரிடம் தாம் கதிரமலைக்கு தண்டனை கொடுக்கப்பொவதாகவும் பெண்களை விலகிச் செல்லச் சொல்லியும் அறிவுறுத்தப்பட்டார். ஏற்கனவே இப் பொறுப்பாளருக்கு வந்தவரை நன்கு தெரியுமாதலால் தற்போதைய சர்வோதய செயற்பாடுகளையும் இங்கு தாம் தங்கியிருக்கும் நிலையையும் காரசாரமான விவாதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். பின் சுமுகமாக பிரச்சனை தீர்க்கப்பட்டது. பின் சில மாதங்களில் பொறுப்பாளர் கைத்தொழிலொன்றுக்கான யந்திரம் ஒன்று வாங்க தொலைத்தூரம் போன நேரத்தில் ஈரோஸ் அமைப்பினரால் கதிரமலை மீண்டும் எச்சரிக்கப்ட்டு பின் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதே காலகட்டத்தில் அங்கு பகிரங்கமாக வந்த புலியினரும் இப் பெண்பிள்ளைகளின் கைத்தொழில் பொருட்களையும் இவர்களின் புத்தகங்களையும் வீசியெறிந்து இவர்களையும் மீண்டும் வீதிக்குக் கொண்டுவந்திருந்த வரலாறுகள் மறக்கப்படுமா?

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச மகாநாடு பற்றி “தேசம் நெற்” செய்தி வெளிவிட்டமையாலும், அந்தச் செய்திதொடர்பான விமர்சனங்களுக்கு இங்கு திறந்து விடப்பட்டமையாலும், இந்தச் சர்வதேச மகாநாட்டைப் பற்றிய பல்வேறான பதிவுகளும், அதற்கும் அப்பாற்ச்சென்று, இந்த பதிவுகளின் அடிப்படையில் இலங்கைதமிழிர்களின் “விடுதலைப்பபோரட்டம்” பற்றிய மீழ்பார்வைகளும், இங்கு வரலாற்றின் சாட்சியங்களாக பதிவிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தவேளையில், இந்த சர்வதேச “புளட்”டுக்களின் மகாநாட்டின் அவசியம் ஏன் என்பதை “தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்” சர்வதேசக் கிளைகள் அனைத்து இலங்கைத்தமிழ் மக்களுக்கும் விளங்கப்படுத்தப்பட வேண்டியுள்ளதை கட்டாய கடமையாக ஏற்றுக்கொண்டு அதற்கான விளக்கங்களை முன்வைப்பீர்களாக!

    மேலும் இலங்கையை ஆழும் சர்வ அதிகாரங்களைக் கொண்ட சனாதிபதியினை தமிழரங்கம் சந்தித்துவிட்டு, அதன்சார்பாக புளட்டின் தலைவர் பி.பி.சி யிற்கு தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், இலங்கைச் சிறுபான்மை மக்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. இந்தக்கருத்தின் அடிப்படையில் இலங்கையில் வாழும் சிறுபான்மையினங்கள் தமது பாரம்பரிய வாழ்வின் இருப்பை எவ்வாறு உறுதிசெய்யப்போகின்றன? – அதற்கு வெளிநாடுகளிலுள்ள புளட்டுக்களும்சரி, சகோதர விடுதலை இயக்கங்களும்சரி என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றன? – தயவுசெய்து விளக்குவீர்களாக!

    Reply
  • palli
    palli

    நான் நினைக்கிறேன் இந்த தளத்தில் இனி பல்லியின் பலன் தேவையில்லை என, காரணம் பல விடயம் தெரிந்த நண்பர்கள் வாதிடுவதால் பல்லி விடுப்பு பார்ப்பதே சரிஆகும்;

    Reply
  • vanavil
    vanavil

    பிரபாகரன் , இந்தியாவின் ஒப்பந்தத்தை எதிர்த்தார் என்று எல்லோரும் சொல்கின்றார்கள். ஆனால் பிரபாகரன் , இலங்கையில் இருந்து இந்திய இராணுவ ஹெலிகொப்டரில் வரும் போதே இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுதான் வந்தார். ஒரே ஒரு முரண்பாடாக வந்தது பிரபாகரன் தன்னோடு மட்டும்தான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என இந்தியா வந்த போது பிடிவாதம் செய்தேயாகும்.

    சிலர் நினைக்கிறார்கள் பிரபாகரனை வீட்டுக் காவலில் வைத்துவிட்டர்கள் என்று , ஆனால் இந்த ஒப்பந்தத்தில் நம்பிக்கை கொண்டதனால் தன் மனைவி மதிவதனியையும் பிரபாகரன் அழைத்து வந்து சென்னையில் விட்டு விட்டே டில்லி போனார். திரும்பிச் செல்லும் போது மனைவியோடு போய் , தமிழ் மாநிலத்தின் முதலமைச்சரும் , முதலமைச்சரின் பாரியாரும் என தாய் மண்ணில் கால் வைக்க வேண்டும் என பிரபாகரன் ஆசைப்பட்டார்.

    டில்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரனை கொண்டு வந்து தங்க வைத்த போது , ஏனைய இயக்கத்தின் முக்கியமானவர்களை பக்கத்தில் இருந்த சாம்ராட் ஹோட்டலில் இந்தியா கொண்டு வந்து தங்க வைத்தது. அமிர்தலிங்கம் போன்றோரையும் கொண்டு வந்து தங்க வைத்திருந்தார்கள். இதை பிரபாகரன் கேள்விப்பட்டு குழம்பிப் போனார். ஏன் அவர்களையெல்லாம் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்க , அவர்களும் போராடியவர்கள் என்று இந்தியா தரப்பில் பிரபாகரனுக்கு சொன்னார்கள்.

    அமிர்தலிங்கம் எல்லாம் எங்கே போராடினார்கள் என்று பிரச்சனைப்படத் தொடங்கியதும், கலவரமான ஒரு சூழல் ஆரம்பித்தது. இதுவே இந்தியாவோடு பிரபாகரன் முரண்படக் காரணம். வேறு எந்த அழுத்தத்தையும் இந்தியா கொடுக்கவில்லை. இதைத்தான் தமக்கு அழுத்தம் கொடுத்தார்கள் என சொல்ல தலைப்பட்டார்கள்.

    பிரேமதாசாவோடும் , சந்திரிகாவோடும் , ரணிலோடும் , மகிந்தவோடும் புலிகள் பேசும் போது எப்போதுமே தன்னை மட்டுமே முதன்மைப்படுத்தி நடந்து கொண்டார்களே தவிர, வேறு எந்த தமிழ் அமைப்பையோ அல்லது தமிழ் கட்சியையோ கலந்து கொள்ள விடவில்லை. தம்மோடு மட்டுமே பேச வேண்டும் எனவும் , தாம்தான் தமிழர்களின் ஏக பிரதிநிதியென்றே பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டார்கள். இதையேதான் இந்தியாவோடும் பேசி முரண்பட்டு , வரவிருந்த வாய்ப்பை அழித்துக் கொண்டார்கள்.

    சந்திரிகாவோடு பேசும் போது , சந்திரிகாவோடு நெருக்கமாக இருந்த டக்ளஸை ஒதுக்கி விட்டு தங்களோடு மட்டுமே பேச வேண்டும் என அவர்களிடம் சொன்னார்கள்.

    1987ல் இலங்கை இராணுவம் புலிகளை அழிக்கும் நிலையில் நின்ற போது பாலசிங்கம் டெல்லி சென்று கெஞ்சி புலிகளை காப்பாற்றுமாறு இரந்து நின்றார். இந்த சமயத்தில் எம் ஜீ ஆர் , ராஜீவிடம் யாழ்பாணம் விழுந்தால் தமிழருடைய செல்வாக்கே இல்லாமல் போய்விடும் என்றார். கலாநிதி சந்திரசேகரன் , இலங்கை படைகள் வென்றால் ஜே. ஆர் , இந்தியாவையே மதிக்க மாட்டார் என சொன்னார். இங்கே ஏதாவது செய்யாவிட்டால் , இலங்கையை பணிய வைப்பதற்கு இந்தியாவிடம் எந்த பிடியும் இல்லாமல் போய்விடும் எனும் கருத்துகள் சொல்லப்பட்டது .

    இலங்கை இராணுவ தாக்குதல்களை நிறுத்த , படகுகளில் உதவிகளை அனுப்பபப் போவதாக இந்தியா தெரிவித்தது. இந்தியாவிலிருந்து படகுகள் வந்தால் இலங்கை கடற்படையினர் தாக்குவார்கள் என ஜே. ஆர் அறிவித்தார். அதை தகர்ப்பதற்கு ஒபரோசன் பூமாலை எனும் பெயரில் இந்தியா உணவுப் பொதிகளை விமானத்தில் போட்டது. அதற்கும் மசியாது போனால் விமான தாக்குதல் என்பதாக சமிக்கையானது அது.

    இதில் பயந்த ஜே. ஆர் தாக்குதல்களை நிறுத்தினார். அதைப் பயன்படுத்தி இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை அனைத்து இயக்க மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளோடு செய்ய இந்தியா தருணமாக்கிக் கொண்டது. அதை அழித்து நாசமாக்கியவர் பிரபாகரனே.

    இந்த நடவடிக்கை மட்டும் நடவாமல் இருந்திருந்தால், வல்வெட்டித்துறையை கடைசியாக சுற்றியிருந்த இலங்கை படையினர் புலிகளை அன்றே முற்றாக அழித்திருக்கும். அன்று இந்தியா புலிகளை தப்ப வைத்ததற்கு நன்றிக் கடனாக இந்தியாவின் நாயகனையே அழித்து , புலிகள் தன் விதியை மாற்றிக் கொண்டது.

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    மற்ற இயக்கக்காரர்களுடன் ஒப்பிடும்போது கழகக்காரர்கள் பரவாயில்லைத்தான். முடிந்தளவு தங்களது உண்மைகளை எழுதுகிறார்கள். வரவேற்கப்பட வேண்டிய விடயம்.
    மாயாவின் எழுத்துப்பாணி ஈழமாறனையும் மிஞ்சும்போலுள்ளது. அதற்காக நாங்கள் எழுதவில்லை என்று கேட்டால் புஷ்பராஜா ஜயர் அன்ரன் பாலசிங்கம் எழுதியதோடு நாங்கள் சின்னப்பசங்கள் அதுதான் தொடரவில்லை. இப்பத்தான் தொடங்கியிருக்கிறார்கள் ஈரோசில் இருந்து ஈபிஆர்எல்எவ் பிரிந்தது யாராவது தொடர்பானவர்கள் வந்த எழுதினால் தொடரலாம்.

    அஜீவனின் பாட்டு கொஞ்சம்கூடிப் போச்சு.

    கழகத்தில் இல்லாத பல்லிக்கு இவ்வளவு தெரியும் என்றால் கழகம் உண்மையான ஜனநாயக அமைப்புத்தான்

    Reply
  • palli
    palli

    //புளட்டின் தலைவர் பி.பி.சி யிற்கு தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், இலங்கைச் சிறுபான்மை மக்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.//
    அது மட்டுமா கழகத்தின் எதிர்காலமும் அப்படியே,

    Reply
  • மாயா
    மாயா

    அதிபர் மகிந்தர்> வாத்தி போல முன்னுக்கு இருக்க ; மொனிட்டர் போல டக்ளஸ் பக்கத்தில் அமர ; கடைசியில் சித்தர் இருக்கும் படத்தை பார்த்ததும் நினச்சன் பாடம் விளங்கயில்லையென்று. எந்த ஆசனமும் இல்லாமல் இருக்கிறதால தங்களை சிறுபான்மை என்கிறர்ரோ தெரியாது?

    மகிந்தர்; சிறுபான்மை பெரும்பான்மை என நாட்டில் இனி இல்லை. நாட்டை நேசிக்கிற மக்கள் ; நாட்டை வெறுக்கிற மக்கள் என்று அப்ப சொன்னவரல்லோ> அயத்து போச்சோ> இல்ல மனச விட்டு அழிஞ்சு போச்சோ. அரங்கம் அந்தரங்கத்தில தொங்குது. எம்.கே.சிவாஜிலிங்கம் கறுத்த உடுப்போட டபுள் கேம் விளையாடுறார். புலிக்கு கருநாளாவும் > மகிந்தவுக்கு பெருநாளா பல்லையுமில்ல காட்டுறார். மக்கள் வேதனையில் மனம் குளிரும் மாமனிதர்கள். எத்தனை காலம்தான் ஏமாத்துவார் இந்த உலகத்திலே…….

    நிலா கருணைக் கொலை செய்தவர்கள் வரலாறை எழுதியதற்கு நன்றி.

    பல்லி இல்லாத கூரை அழகில்ல. அதுவே எங்களுக்கு புள்ளி. சில நேரம் தொடக்க புள்ளி. விட்டு ஓடாதேங்கோ நாங்க விட்டு ஓடினது போல.

    முகம் தெரியாம நிக்கிற சுகம். முன்னுக்கு நிக்கிறதில இல்ல. தளபதி > இப்பதான் சரியான தவில எடுத்திருக்கிறார். வெளிநாட்டு கழகத்தின் முதுகில அடிச்ச மாதிரி தெரியிது. அடிச்சது முகத்திலயே? முதுகிலயே?

    சுப்பரோ சுப்பர். ஜெயராஜ் சும்மா புகழாதேங்கோ. நமச்சல்ல எழுதுறன். கண்பட்டால் நின்டு போகும். தேங்சு.

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    //மகிந்தர் ; சிறுபான்மை பெரும்பான்மை என நாட்டில் இனி இல்லை. நாட்டை நேசிக்கிற மக்கள் ; நாட்டை வெறுக்கிற மக்கள் என்று அப்ப சொன்னவரல்லோ> அயத்து போச்சோ>//

    உங்கட அவர் வன்னியில இருக்கிற என்ர தோட்டத்தில பயிர் வைக்கிறத்திற்கும், குப்பிளானில இருக்கிற என்ற காணியில வீடு கட்டவும், ஏன் விடுகிறாரில்லையெண்டு ஒருக்கா கேட்டுச்சொன்னா, நான் முடிந்த முடிவா ஐரோப்பாவில “ஃபார்ம்” போட்டிருவனில்லே. எப்படியோ என்ற உழைப்பை நம்ம மண்ணுக்கு கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டுமெண்டுதான் – எல்லாம் சரிவரட்டுமெண்டு அவரை பார்த்துக்கொண்டிருக்கிறன். எனக்கு இங்க பூட்டப்பிள்ளை கிடைச்சாலும், நான் பிறந்த மண்ணில என்ற கட்ட வேகுமோ எண்ட ஆதங்கம் இருக்கு, இது எனக்கு மட்டுமல்ல இஞ்ச கனபேருக்கு இருக்குது பாருங்கோ!

    Reply
  • மாயா
    மாயா

    தளபதி> இங்க இருந்து கொண்டு அங்க பயிர் வைக்கேலாது. அங்க போய் வேலையைத் தொடங்குங்கோ. ஐரோப்பாவில பார்ம் வைக்கிறதா? இல்லை உங்கட சிறீலங்கா தோட்டத்தில பாம் வைக்கிறதா? ஒரு முடிவுக்கு வாங்கோ. அதுக்கு பிறகு உங்கட மெயில் ஐடியை தேசத்தில தாங்கோ. உங்களுக்கு வழி சொல்லுறன். புலிகளே> இலங்கையில நேரடியா இறங்கி எல்லாம் செய்யும் போது > நீங்கள் இங்கியிருந்து கொண்டு தொடை நடுங்கிக் கொண்டிருந்தா நாங்கள் என்ன செய்யிறது?

    சிறீலங்காவுக்கு எப்ப போய் வந்தனீங்கள் கடைசியா? உங்களிட்ட இருக்கிறது சிறீலங்கா பாசு போட்டோ? நீங்க வாழுற நாட்டு பாசுபோட்டோ? கட்ட வேகிறதுக்கெடால் அப்பவே பொயிருக்கலாம். அதுக்கு காலம் நேரம் தேவையில்லை. நீங்க மண்டையை போட்டா> பொடியை இங்கயிருந்து அனுப்பினாலும் அங்க வேகும். நெருப்புக்கு சாதி > சமயம் > லோக்கல் > இன்டர்நசனல் எல்லாம் புரியாது?

    Reply
  • oruvan
    oruvan

    “ஐ.ஏ.பாலா என்று ஒரு தோழர் அந்த நல்ல மனுசனை பாலகுமார் வளர விடவேயில்லை”
    அது ஐ.ஏ.பாலா அல்ல ஐயர் பாலா அல்லது சின்ன பாலா.

    “முடிவுகளை லண்டன் பிரமுகர்கள்தானே எடுத்தாங்கள்”
    தயவு செய்து ஊகங்களின் அடிப்படையில் எழுத முயலாதீர்கள் அல்லது உங்கள் தரப்பு தவறுகளை மூடி மறைக்கதீர்கள். மேற்கொண்டு நீங்கள் எழுப்பிய EROS தொடர்பான issues இற்க்கு விடை பகர வேண்டிய தேவை இல்லை என்று எண்ணுகின்றேன்

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    மாயா, நான் உண்மையான பிரச்சனையை எழுதினால் நீங்க மெயின் சப்யக்றை விட்டுட்டு, தொடைநடுங்கி, பாஸ்போர்ட் என்று ஏதேதோ எழுதிறியல். நீங்கள் ஆருக்கோ விசுவாசமயிருக்கிறியலென்பது வடிவா விளங்குது. அங்க ஒருபிரச்சனையுமில்லை என்று சொல்லுறியல் – அப்படியானால் நானும் நீங்களும் இங்கை புள்ட்டைப்பற்றி ஏன் எழுதுவான்?. தளபதி இலங்கை பாஸ்போர்டில தான் இன்றுவரையும் இருக்கிறன். மனிதகுண்டுகள் கொழும்பில அறம்புறமா வெடிக்கைகயும் VIP யாய்போய் கதைச்சிற்றும் வந்திருக்கிறன். ஆனபடியால் எழுதிறதை கொஞ்சம் பண்பாக எழுதுங்கோ.

    Reply
  • மாயா
    மாயா

    //மனிதகுண்டுகள் கொழும்பில அறம்புறமா வெடிக்கைகயும் VIP யாய்போய் கதைச்சிற்றும் வந்திருக்கிறன். ஆனபடியால் எழுதிறதை கொஞ்சம் பண்பாக எழுதுங்கோ.// இப்பிடிச் சொல்ற நீங்கள் ஏன் முன்ன இப்பிடிச் கேட்டனீங்கள்?

    //உங்கட அவர் வன்னியில இருக்கிற என்ர தோட்டத்தில பயிர் வைக்கிறத்திற்கும், குப்பிளானில இருக்கிற என்ற காணியில வீடு கட்டவும், ஏன் விடுகிறாரில்லையெண்டு ஒருக்கா கேட்டுச்சொன்னா, நான் முடிந்த முடிவா ஐரோப்பாவில “ஃபார்ம்” போட்டிருவனில்லே. //

    வீஐபீயா நான் அங்க போறதில்லை. சாதாரண ஆளாத்தான் போவன். ஆனால் அதிகமானவங்களை தெரிந்ததால அதிகமானவங்களை சந்திச்சிட்டு வருவன். வீஐபீயா இருக்கிறதை விட நண்பனா இருக்கிறது எவ்வளவு நல்லா போச்செண்டு உங்கட எழுத்தை பாத்துதான் உணர்கிறன்.

    நானும் குண்டு வெடிக்கேக்கயும் போனன். சுனாமி அடிக்கேக்கையும் போனன். ஒரு டீசேட் > ஒரு சோட் இதுதான் நமக்கு. அந்த வெய்யில்ல அதுதான் சுகம். டை கோட் வீஐபீ என்கிறத விட நம்மட மாயா என்று தோளில கை போட்டு கதைக்கேக்க இருக்கிற சந்தோசம் > டை கோட்டோட தூர இருந்து காட்டுற கெளரவத்தில இல்லை என்கிறது நம்மட கருத்து. நீங்க வம்பா எழுதிட்டு என்ன பண்பா இருக்கச் சொல்லாதேங்கோ. நான் முகம் பார்க்கிற கண்ணாடி மாதிரி. அதாவது நீங்க எப்பிடிப் பாக்கிறீங்களோ அப்படித்தான் ………..

    அந்த 9 பேர் போன குரூப்பில வீஐபீ என்று நினைக்கிறன்? நான் சரியா? புலி குறூப் இல்லை> அதுக்கு முந்திய குரூப். அதில போனவங்களை பின்னால மகிந்தவே கணக்கெடுக்கல்லயே? அவங்கள் தங்களுக்குள்ள நான் பெரிசு > நீ பெரிசு எண்டு அடிபட்ட கதையெல்லாத்தையும் நீங்களே மகிந்தவுக்கு தெரியப்படுத்தினா > உங்களை எங்க மதிப்பார்? ஈமெயில் போரொன்று வன்னிப் போருக்குப் பின்னும் தொடர்ந்ததே? அதில் ஒரு தளபதி > நீங்களா? மகிந்த> ரணில் கிடையாது? லண்டன்; அமெரிக்காவில படிச்சவர் கிடையாது. ஒரு கிராமத்தில பிறந்து படிச்சு > அடி அடியா வந்தவர். அவருக்கிட்ட இதெல்லாம் பலிக்காது. பிரபாகரனின் விதியையே தண்ணிர் கரை வரை தள்ளிக் கொண்டு போன ஆள்?

    //அது ஐ.ஏ.பாலா அல்ல ஐயர் பாலா அல்லது சின்ன பாலா.//
    ஒருவன்> இந்தத் திருத்தத்துக்கே இவ்வளவு பில்டப்பா? ஏதோ பாலா என்று நினைவு அது ஐஏ பாலா என்று நினைச்சன். சரியான விடையை தந்ததுக்கு. நன்றி. படிச்ச மனிசர் செய்த கருணைக் கொலை பத்திய இசுவெல்லாம் உண்மையா? பொய்யா? இல்ல இதுவும் அது போல ஒரு துன்பியலா?

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    மாயா, இப்பதெரியுது உங்கட உண்மையான முகம். நீங்க ஏதோ எழுதவேண்டுமென்பதற்காக இங்கு உங்கட கற்பனையை கலந்துவிடுகிறியள்.

    Reply
  • vanavil
    vanavil

    தளபதி அவர்களே, நீங்கள் உங்களை அடையாளப்படுத்தி விட்டீர்கள். பலம் இருந்து கொண்டே பாவி போல் நடித்திருக்கிறீர்கள்.

    நீங்கள் சொல்லும் காலங்களில் இலங்கைக்கு வந்தவர்கள், அரசுக்கு ஆதரவானவர்கள். புலிகளை வெளிநாட்டில் ஓரம் கட்ட ஒத்துழைப்பதாக அதிபர் மகிந்தாவுக்கு கரம் கொடுத்தவர்கள். உண்மையிலேயே நீங்கள் மக்களுக்காக வந்தீர்களா? உங்களுக்காக வந்தீர்களா?

    Reply
  • tharani
    tharani

    வணக்கம்,
    த.ம.வி.கழத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பதிவாகி வருகின்றன. மிக நல்லது. பதிவுகளில் பெரும்பாலானவை வடக்கிலும் மற்றும் பின்தளத்திலும் நடைபெற்ற விடயங்கள் தொடர்பாக அமைந்துள்ளன. கிழக்கிலங்கையான மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையிலிருந்து அமைப்புக்குச் சென்ற தோழர்களுக்கு (ஆண் மற்றும் பெண்கள்) என்ன நடந்தது, யாரவது கூறமாட்டார்களா,
    பல்லியும் சொல்லவில்லையே?

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    செக்கும் ஆட்டுக்கல்லும் ஒரேமாதிரித்தான், எங்களிட்டை இருக்கிற சந்தேகப்புத்திதான் எம்மை இந்த நிலமைக்கு கொண்டுவந்தது. நான் என்ன “யேசுநாதரோ” எல்லாற்ர இயலாமையையும் என் தலையில் சுமப்பதற்கு!

    Reply
  • proff
    proff

    ஈரோசில் அந்த அமைப்பின் இராணுவ குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்ட ஜபிரி.வரதன் பிரான்சில் தான் உள்ளார்.அவரிடம் கேட்டால் ஈரோசின் எல்லா செயற்பாடுகளையும் சொல்லுவார்.

    Reply
  • நந்தா
    நந்தா

    ஐ பீ ரீ வரதன் அந்த நாட்களில் புளட் இயக்கத்தின் நடவடிக்கைகளை “கண்டு” பிடிக்கும் ஒரு ஆளாக அலைந்தது தெரியும்.

    அது மாத்திரமல்ல தான் யசார் அரபாத்தை சந்த்தித்ததாகவும் ஒரு போடு போட்டு அசர வைத்தவர். பின்னர் பலர் அவரை நக்கலாக “அரபாத்” என்று அழைக்க அவர் தலை தெரிக்க ஓடியதும் தமாஷ்! பின்னர் யாழ்ப்பாணத்தில் “ஈரோஸ்” நீதி மன்றத்தில் நீதிபதியாகவும் இருந்து மிரட்டியவர்.

    சின்ன பாலாவின் தந்தையார் “ஈழமுரசு” பத்திரிகையில் ப்ரூவ் ரீடராக இருந்தவர். புலிகள் பத்திரிகையை புடுங்கியவுடன் அவரை அனாதை விடுதியொன்றுக்கு பொறுப்பாக அனுப்பி விட்டனர்.

    அதுசரி. காலாவதியான இந்த “ஈழம்” என்ற அடையாளத்தை சுமக்க பலரும் முயற்சிப்பதன் நோக்கம் என்ன?

    Reply
  • palli
    palli

    //திருகோணமலையிலிருந்து அமைப்புக்குச் சென்ற தோழர்களுக்கு (ஆண் மற்றும் பெண்கள்) என்ன நடந்தது, யாரவது கூறமாட்டார்களா,
    பல்லியும் சொல்லவில்லையே?//
    ஜயோ நண்பரே அதை சொல்வதானால் என்னும் 300 பின்னோட்டம் வேண்டும்; ஆனாலும் உங்கள் மனகவலை தீரும் சீலனின் 19 ஆக்கமும் வரும்போது அல்லது சீலனின் சந்தேகங்கள் நிவர்த்தியாகும் போது, அதுசரி உங்களிடமும் ஏதோ இருக்குமா போல் உள்ளது; அதை மூலகதையாய் சொல்லுங்கோ, திரைகதையை பல்லி பார்த்துக்கிறேன்;

    Reply
  • vanavil
    vanavil

    1987ம் ஆண்டு அனைத்து இயக்கங்களும் இலங்கைக்கு போகும் போது, உமா புளொட்டின் இந்திய காரியாலய பொறுப்பை ஆனந்தியிடம் கொடுத்து விட்டுச் சென்றார். 1988 வரை இருந்த ஆனந்தி, அதை விட்டு வெளியேறும் போது அனைத்து பொறுப்பையும் வெற்றிச் செல்வன் கையில் ஒப்படைத்து விட்டுச் சென்று விட்டார்.

    இவர்கள் காரியாலயத்தை பராமரித்தாலும், உமா அண்டகிரவுண்டில் வேலை செய்யவென்று ஒரு குழுவை இந்தியாவில் விட்டு விட்டே சென்றார். இதற்கு தலமை தாங்கியவர் மன்னார் முள்ளிக் குளத்தில் , புலிகளின் தாக்குதலில் இறந்த வசந்தன். வசந்தனோடு ; கணேஷ் (கனடா); விஜயன் ; டெய்லர் அன்புமணி ; மட்டக்களப்பு ராஜா ஆகியோர் உதவியாக இருந்தனர். இவர்களுடைய வேலை கொள்ளையடிப்பது.

    இலங்கையில் கொள்ளையடித்ததையெல்லாம் இந்தியாவில் கொண்டு வந்து போட்டுட்டோம் . அதனால் இனி இந்தியாவில் கொள்ளை அடித்து இலங்கைக்கு அனுப்புங்கள் என்று உமா சொல்லி விட்டு போனார்.

    ஈஎன்டீஎல்எப் ராஜனையும் எப்படியாவது தேடி போட்டுத் தள்ளுங்கள் என்றும் அவர்களுக்கு சொன்னார். இவர்கள் இரகசியமாகவே இந்தியாவில் தங்கியிருந்தனர்.

    உமாவின் மெய்பாதுகாவலனாக இருந்த கரிகாலனிடம் சில ஆயுதங்களையும் ; சில கெமரா போன்ற பொருட்களையும் கொடுத்து விட்டு, உமா போனார். ஆனால் செலவுக்கு பெரிதாக பணம் கொடுத்து விட்டுப் போகவில்லை. கரிகாலன் தனது செலவுக்கு இருந்த பொருட்களை விற்று விட்டான். அதை அறிந்த உமா ; அவனிடமிருக்கும் பொருட்களை திருப்பி எடுக்கும் படி வசந்தனுக்கு தெரிவித்தார்.

    கரிகாலனிடம் பொருட்களை வாங்க, போன வசந்தனோடு ; கணேசும் போனான். அங்கு போன வசந்தன் கரிகாலனை போடவேணும் எனும் முடிவுக்கு வந்தான். இருவரும் கரிகாலனுக்கு சந்தேகம் வராதவாறு நட்பாகி தங்கினர்.

    கரிகாலன் ; தன் கே.கே.நகர் வீட்டில் , தேங்காய் ஒன்றைக் குனிந்து பல்லால் கடித்து உரிக்கும் போது , தருணம் பார்த்து கணேஷ் கரிகாலனை சுடப் போக , இதுவரை தானொரு கொலையும் செய்ததில்லை “நான் சுடுகிறேன்” என சொன்ன வசந்தன், கரிகாலனைச் சுட்டு விட்டான். கண்ணுக்குள்ளால் போன குண்டு கன்னத்தால் வெளியே வர ” ஐயோ மச்சான் இப்படிப் பண்ணிப் போட்டீங்களே?” என கத்திக் கொண்டே விழுந்தான்.

    “ஆள் சாகயில்லை. இன்னொருக்கா வெடி வை” என கணேஷ் சொல்ல ; “வேண்டாம். தலையில பட்டா ஆள் தப்ப மாட்டான். வா போகலாம்.” என்று வசந்தன் கணேசையும் இழுத்துக் கொண்டு வெளியேறி திருப்பூருக்கு ஓடிட்டான். சத்தம் கேட்டு வந்த பக்கத்து ஆட்கள், கரிகாலனை வைத்தியசாலைக்கு கொண்டு போய் தப்ப வைத்து விட்டார்கள்.

    வைத்தியசாலையில் இருந்து வந்த கரிகாலன், ஈஎன்டீஎல்எப்பில் சேர்ந்து ” புளொட்டில் ஒருத்தரையும் விடுறதில்லை. இவங்களையா தோழர் என்கிறது? என் பிழைகளை சொல்லியிருந்தால் , நான் அதற்கு பிராயச் சித்தமாக ஏதாவது செய்திருப்பேன்.” என்று சொல்லித் திரிந்தான்.

    வடபழனி டெலிபோன் ஒப்பீசுக்கு ராஜன் போண் பண்ண வாறதுண்டு. அப்படி வரும் போது ராஜனை போடப் போவது அறிந்த சித்தரும் ; வெற்றியும் அவர்களை கூப்பிட்டு , இப்படியான முட்டாள் வேலைகளால இலங்கை பிரச்சினை என்று இனி ஒருத்தராலும் வர முடியாது என்று சொல்ல ; அந்த எண்ணத்தை கைவிட்டார்கள்.

    இவர்கள் தடுத்துப் போட்டார்கள் என்று, உமாவுக்கு சரியான கோபம்.

    அதுக்கு பின்னர் திருச்சிப் பக்கம் போய், ஏகப்பட்ட இடங்களில் கொள்ளை அடிக்கத் தொடங்கினர். அப்படியான இடங்களில் எத்தனையோ கொலைகளும் நடந்துள்ளன. அதில் ஒரு முறை ஒரு பெற்றோல் பங்க் வைத்திருந்த ஒருவர், காசு கட்டப் போகும் போது அவரை சுட்டுப் போட்டு பணத்தை அபகரித்துச் சென்றனர். அதில் தப்பிய வசந்தன் இலங்கைக்கு போக ; ஏனையோர் பிடிபட்டு 2 வருடங்கள் இந்திய ஜெயிலில் இருந்தனர்.

    Reply
  • மாயா
    மாயா

    நாங்கள் இதுவரைக்கும் பிள்ளை கிடைக்க வரம் வேண்டி ஆலமரத்தை சுத்தின மாதிரி ஒரு இயக்கத்தையே சுத்தி ; சுத்தி தட்டிக் கொண்டிருக்கிறம். ஆனால் எல்லா இயக்கத்தோட அழிவுக்கும் என்ன காரணம் என்று லகானை இழுத்தாதான் சுவாரசியமாக இருக்கும் என்று எனக்கு தட்டுப்பட்டுச்சு. இது இன்டவலுக்கு பிறகு நடக்கிற காட்சி….

    எவன் சண்டை பிடிக்காம நின்றானோ அவன்களெல்லாம் முதல்ல அழிஞ்சாங்கள். புலி தொடர்ந்து நின்றதுக்கு அடிச்சிக் கொண்டே நின்றதுதான் காரணம். அப்ப ஏன் அழிஞ்சாங்க? தலைய சொறிகிற விடயமில்லை. தலை சுத்துற விடயம்.

    ஒரு பூனைக்கு வழி விட்டு அடிச்சால் அது ஓடும். ஓடவே இடமில்லாமல் அடிக்க நெருங்கினால் அது அடிக்கிறவன் முகத்திலயாவது பாயும். எல்லா மிருகமும் அப்பிடித்தான். மனிதனும் மிருகம்தானே? அதனால்தானே புலியென்றதை கூட அழகா ஏற்றுக் கொண்டாங்க. ஒருத்தரை மாடு என்று சொல்லிப் பாருங்க ; கோவம் வரும். எருமை என்று சொல்லிப் பாருங்க ; அதுக்கும் கோவம் வரும். அட வாத்து என்று சொல்லிப் பாருங்க கோவம் வரும். ஆனால் புலி என்று சொல்லிப் பாருங்க. மரத்தில இருந்து தேங்காய் விழுந்ததையே குண்டு விழுந்ததா ஓடி வந்தவனே தானும் புலி என்றதும் சிரிப்பான். புலித்தில இந்த புலிகள் அதிகம். மியாவ் எல்லாம் உறுமியது புலத்தில்தான்.

    ஆனால் புலிகளுக்கே சிங்களவன் எப்படி ஆப்புக் கொடுத்தான் என்பது பலருக்கு தெரியாது? இது பலருக்கு தெரியாத பக்கமாக இருக்கும். தெரிந்தவங்க மட்டுமில்ல ; இந்த ஆப்புகளோடு திரிஞ்சவங்க புலிகள். அது பற்றிய சுவாரசியமான தகவல்கள் இது.

    எதிரி வாசலில நிக்கிற நேரம் சும்மா படுக்க ஏலாது. அடிபடுறதை பத்தித்தான் யோசிக்கலாம். இந்த சமாதான உடன்படிக்கை வந்த பிறகு என்ன ஆச்சு?

    இந்த சமாதான காலத்திலதான் இரண்டாவது தரத்திலிருந்த புலிகளுக்குள்ள உரசல்கள் அறம் புறமா தொடங்கிச்சு. எல்லாம் பதவிப் போராட்டம்தான். இளந்திரயன் ; தமிழ்ச்செல்வன் > பொட்டம்மான் – தமிழ்ச்செல்வன் > பொட்டம்மான் – கருணா அம்மான்; பொட்டு – சூசை என்று பிரச்சினை தொடங்கிட்டுது.

    கருணா வெளிநாட்டுக்குப் பொய் வெள்ளைகளோட கைகளை குலுக்கிட்டு வந்ததோட ; பட்டம்மான் எரிச்சலாகிட்டார். யாழ்பாணத்தில உள்ள எத்தனையோ பேர் இருக்க இவனையா அனுப்ப வேணும். நாங்க போயிருக்கலாமே? என்று புகை விடத் தொடங்கியது. ஈகோவும் ; நான் பெரியவனா ; நீ பெரியவனா என்றெல்லாம் கழுத்தறுக்கும் சண்டைகள் தொடங்கிட்டுது. குழி தோணடுறதை விட கழுத்தறுப்பே லேசானது.

    இந்தப் பிரச்சனையை தீர்க்க தலைவர் சச்சரவு செய்றவங்களுக்கு அதிகமான வசதி ; வாய்ப்புகளை வாரி வழங்கி சமாளிக்க முயன்றார். கருணா மாதிரி ; அடுத்தவங்களும் போக நச்சரிப்பதை தடுக்க கார்களும் ; பெரிய வசதிகளும் கொடுத்து திசை திருப்பும் முயற்சிகளில ஈடுபடத் தொடங்கி…………

    இதுக்குள்ள சமாதான குழுவோட வரும் ஆர்மிகாரங்களோட இவர்களுக்கு நட்புகளும் ஆரம்பிச்சிட்டு. போறவங்க ; வாறவங்களை அழைச்சு போக ; கொண்டு வந்து விட …… வாற ஆமி பெரியவங்களோட நெருகமான உறவுகள் எப்பிடியென்றால் ; ஒன்றா சாப்பிடுறது தொடங்கி ஒன்றா சந்திக்கிறது வரை போனது. இவங்களுக்கு தேவையான சாமான்களையும் கொண்டு வந்தும் கொடுத்தாங்கள். ஆர்மி திட்டம் போட்டு ஒவ்வொரு இரண்டாவது தலைமைகளோட ஒவ்வொருத்தரை நண்பராக்கிட வழிசெய்தாங்கள்.

    இது எவ்வளவு தூரம் நெருக்கமானதென்றால் இராணுவ அதிகாரிகளோட ; நம்ம புலித் தலைமைகள் மாறி மாறி குடும்ப சமேதராக வந்து போய் சாப்பிடத் தொடங்கியிருக்கிறாங்கள். இனி சமாதானம் வரப் போகுது. இனி எதுக்கு சண்டை. கிடைச்ச நட்பை மெயின்டேன் பண்ண நினைச்சிட்டாங்கள். அது எந்த அளவுக்கு போச்செண்டால் ; இராணுவ அதிகாரிகளின்ற மனைவிமாரை காரில் அனுப்பி; புலிகளின்ட பெரியவங்களோட மனைவிமாரை கொழும்புக்கு கூட்டி போறதை வரை….. கொழும்பு – வுவுனியா போன்ற இடங்களில பல பேர் பார்த்ததும் உண்டு. இரண்டாவது புலித் தலைமைகளின்ட மனைவிமாரை ; இராணுவ அதிகாரிகளின்ட மனைவிமார் கொழும்புக்கு கூட்டிக் கொண்டு போய் பியுட்டி பாலர்ல மினுக்கி அனுப்புற அளவுக்கு உறவுகள் நெருக்கமாகியிருக்கு.

    இந்த பிரெண்ட்சிப்தான் வீடுகளுக்கு போய் குடும்பமாக சாப்பிட போறது வரைக்கும் பொன போது ; 2ம் தரப்பு புலித் தலைமை சிலரிடம் மட்டும் அவரை எனக்குத் தெரியும். இவரை எனக்குத் தெரியும் என்று காதோடு காதா சொல்லிக் கொள்ளத் தொடங்கினாங்கள். அடுத்தவருக்கும் இன்னொருத்தர் அதே மாதிரி இருக்கும். அவரும் அவரோட ஆட்களுக்கிட்ட சொல்லிக் கொள்வார். 2வது மட்டம் தன் மட்டத்தில மறைக்கும். எல்லாம் ஆளுக்காள் களவாத்தான் இந்த உறவுகள்.

    இந்த நட்புகள்; தன்ற ஆட்களை நம்புறதை விட ஆமிக்காரரை நம்பிற அளவுக்கு போயிருக்கு. இந்த நட்பினூடாக சிலருக்கு வேண்டிய சாமான்களை சில பொடிகளின்ட கையில அனுப்பி புலிகளின்ட 2வது தலைமைகளுக்கு அனுப்பியிருக்கு. இப்பிடி வந்து போனவங்களை இவங்கள் வேலையில்லாம இருக்கிறாங்க. இவங்களுக்கு ஏதாவது வேலையிருந்தா போட்டுக் குடுங்க. உங்களுக்கு தேவையான எதையும் கொண்டு வந்து தருவாங்க எண்டு வேற சொல்ல ஆர்மிகாரனே உதவி கேக்கிறான் என்டு பெருமைப்பட்டுக் கொண்டாங்கள். இவங்களை தங்களோடு வச்சுக் கொள்ளுறதும் நல்லது என யோசிச்சு வைச்சுக் கொண்டாங்க. காரணம் இவங்களுக்கு அமைப்பில தொடர்பில்ல ; அதனால ஏதாவது தகவல்களாக இருந்தாலும் அமைப்புக்கு போகாது என்கிற ஒரு சந்தோசம். நம்பிக்கை. ஆனா இவங்களெல்லாம் ஆமியால ஊடுருவிய ஆட்கள். இவங்களால ஏகப்பட்ட தகவல்கள் இராணுவத்துக்கு அனுப்பப்பட்டன.

    இதுகளை புலிகளோட நெருக்கமா இருந்த இராணுவ அதிகாரிகள் என்று சிங்கள பத்திரகைகள் கண்டு பிடிச்சு எழுதின. ஆனால் இப்ப அவங்கதான் அதிகாரியா இருந்து சரத் வழக்கை விசாரிக்கிறாங்க. பிடிபட்ட புலியோட நட்பா இருந்தவருக்கு உயர் பதவியா என எழுதின சிங்கள பத்திரிகைகள் அதிகம். பத்திரைகயோட புலனாய்வு கொழும்பில ; அதையே சாதகமாக்கி புலிகளோட புலனாய்வை எடுத்தவங்க அவங்க. மோட்டுச் சிங்களவன் தலையை தடவி காவி அடிச்சது இப்பிடித்தான்…………..

    இதே போல புலிகளின்ற காவலில் இருந்த சில சிங்களவர்களும் புலிகளுக்கு உதவியே இருக்கிறாங்க. சரத் பொண்சேகாவுக்கு குண்டு தாக்குதலுக்கு உதவியவங்களும் இந்த சிங்களவரில் சிலர்தான். இப்படியாக அங்கும் – இங்கும் ஊடுருவிய நட்பகளால் பல குளறுபடிகள் நடந்துள்ளன.

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    எழுத மறுக்கும் புல(ன்)ம் பெயர்ந்த புளட்டுக்களுக்கு!

    புலி இருக்கும் வரை குமுறித்திரிந்த புளட்டுக்கள், இன்று புலி எங்கும் எதுவும் செய்து நீண்ட காலத்திற்கு அவர்களால்(புலிகளின் வால்களால்) வாழமுடியாது என்பதை உணர்ந்தபின், தாங்கள் புளட்டிற்கு போன பணி முடிந்துவிட்டது என்று இளைப்பாறுகிறீர்களோ என எண்ணத்தோன்றுகின்றது. சில வேளைகளில் புலம்தழுவிய மாவீரர் நிகழ்ச்சிகளைக்கண்டு, இனித் “தமிழீழம்” புலத்தில்தான் கிடைத்துவிடுமென்று நம்மி, தேசத்தில் எழுதுவது வேலை மினக்கேடு என்று ஒதுங்கிவிட்டார்களோ என்னவோ? இங்கு பின்னூட்டம் விட்டு, கடந்தகால வரலாறுசொன்ன புளட்டுக்களைப் பொறுத்தவரையில் – புலியின் முடுவோடு இவர்களின் அரசியலும், உலகப்பந்தில் இவர்கள் முன்னெடுத்த தமிழ்ச் சமுதாய வளர்ச்சியும் அதற்கூடான விடுதலையும் நிறைவேற்றுப்பட்டு விட்டதா என்ன? 23 வருடங்களாக உங்கள் சிந்தனைகளை எமது மக்களுக்கு சொல்லமுடியாது போனதினால் – இனிச்சொல்லி என்ன பயன் என வாழாதிருக்கின்றீர்களோ?

    Reply
  • sumanan
    sumanan

    நேற்றுத்தான் ஒரு பழைய நண்பர்மூலம் இந்த இணைய தளத்தை பார்க்க அறிமுகம் கிடைத்தது. அன்றைய புளொட்டைப் பற்றி எழுதும் நீங்களெல்லாம் அன்று கொலைகளைச் செய்துவிட்டு அதிகமானோர் தாங்களும் அதே வழியில் அழிந்து விட்டார்கள். ஆயினும் அதே நபர்களுடன் கொலைக்கு உடந்தையாக இருந்து விட்டு இன்று வெளிநாடுகளில் உல்லாசமாக இருப்பவர்களின் முழு விபரத்தை ஏன் யாரும் வெளியிடவில்லை. இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வாழ்கின்றனர். அவர்களும் வெளியேவந்து என்னைப்போல் எழுத வேண்டுமெனத்தான் இதனை எழுதுகின்றேன்.
    1)மொக்கு மூர்த்தி
    2)வள்ளுவன்
    3)செங்கோடன்
    4)வெங்கட்
    5)ஊத்தை பிரதீபன்
    ஆகியோர் போல் இன்னும் சில பேர் வேசத்துடன் வாழ்கின்றனர்.
    இதில் லண்டனில் இருக்கும் ஊத்தை பிரதீபன் இன்னும் புளொட்டிலிருப்பதை யாரும் கண்டுகொள்ளவில்லையா?
    அன்றைய காலத்திலிருந்து இன்றுவரை ஊத்தை பிரதீபன் செய்த கேவலங்கள் கொலைகளை ஏன் யாரும் வெளிப்படுத்தவில்லை. இந்த ஊத்தை பிரதீபன் அன்று நாம் பயிற்சி எடுக்கும் நேரங்களிலும் தன்ககு பயிற்சிசெய்ய உடம்புக்கு முடியாது என்று சொல்லிக்கொண்டு சிக்(நோயாளர்)கேம்ப் ல் இருப்பார். அங்கு சந்ததியார் தங்கராசா என்போர் இங்கு வந்து அரசியல் வகுப்பெடுக்கச் செல்லும் போது அங்கிருந்து செய்திகளை திரட்டி காதும் மூக்கும் வைத்து பி காம்ப் உளவுப்படைக்கு விபரம் கொடுப்பார். இப்படி அங்கேயே ஒட்டுப்படை வேலை செய்து எத்தனை அப்பாவியான எம் தோழர்களுக்கு அடி வாங்கிக் கொடுத்திருப்பார் சித்திரவதை செய்ய வழிவகுத்துள்ளார்.

    இந்தியாவில் நாம் பயிற்சி எடுத்தபொது தாசன்குழு>கந்தசாமிகுழு என பல குழுக்கள் இருந்தாலும் இவர் ஒருவருடனும் சேராமல் தான் புளொட்டின் விசுவாசி என்று கூறிக்கொண்டு எல்லோருக்கும் அடியாளாகச் செயல்பட்டவர்தான் இந்த பிரதீபன். இவர் திருகோணமலையைச் சேர்ந்தவரென நினைக்கின்றேன். தனது குடும்பத்தினரை சிங்களவன் வெட்டிக்கொண்டான்கள் என்று சொல்லி சொல்லி அனுதாப அலையுடன் புளொட்டுடன் ஒட்டிக்கொண்டவர். (பல திருமலைப் பெடியன்கள் இயக்கத்தை விட்டு ஓடும் நேரம் தான்தான் நிற்பதாக வேறு வீராப்பு பேசுவார்)
    பின்பு உமாமகேஸ்வரன் தாசன் (இலங்கையரசின் ஆதரவில்)கொழும்பில் நிற்கும்போது அங்கு நின்று கொண்டும் மிக அட்டகாசம் செய்தார். புளொட் உடைந்து வழிதெரியாத எம்மைப்போன்ற பையன்கள் வெளிநாட்டிற்கு போக கொழும்பில் அலைந்து திரிந்த வேளையில் வீதியில் அம்பிட்டால் எம் பெடியளுக்கு அடிப்பதும் வெருட்டுவதும் புளொட்டை விட்டு ஓடியவன் நீதானே எனக்கேட்டும் வீதியில் வைத்து அட்டகாசம் செய்வார். இவருடன் புதிதாக (இலங்கைஅரசின் காசில் புளொட் இருந்ததால்) இயக்கத்தில் சேர்ந்த புதுப்பெடியன்களுடன் சேர்ந்து திரிவார். இந்த அடியாட்களைக்கொண்டு எம்மைப் போல் அப்பாவிகளை மிரட்டி அடிப்பார்.

    புளொட்டில்85 86களில் தொழிற்சங்க அமைப்பில் வேலை செய்த முல்லைத்தீவு சத்தியன் என்பவரும் எம்மைப்போல் கொழும்பில் வாழ்க்கைக்கு வழிதெரியாது அலையும்போது (1989 என்றென்று நினைக்கின்றேன்)வெள்ளவத்தை சைவக்கோவிலுக்கு முன்னால் சத்தியனைக்கடத்தி கொலைசெய்ததில் இந்த ஊத்தைப் பிரதீபன் தான் முக்கியமானவர்.
    இதே போல் செட்டித்தெருவிலுள்ள ஒரு ஹொட்டலின் முன் புளொட் மாமாவையும் பாபுஜியையும் இவரின் அடியாட்களுடன் ஆட்டோவில் துவக்குடன் சென்று கடத்த முற்பட்டபோது புளொட் மாமாவும் பாபுஜியும் திருப்பித்தாக்கி அடித்த போது துவக்கையும் விட்டு ஓடிவிட்டார். இப்படியான இவரின் அடவாடித்தனங்களை கட்டுப்படுத்தமுடியாமல் சித்தாத்தர் லண்டன் அனுப்பியுள்ளார். அங்கிருந்தும் இதே ஒட்டுப்படை வேலை செய்கின்றார் என இங்து பலர் சொல்லக் கேள்வி.
    லண்டனிலிருந்து அடிக்கடி கொழும்பிற்கு சென்று புளொட் அலுவலகத்தில் இளைப்பாறும் இதே ஊத்தை பிரதீபன் அதே ரவுடித்தனம் செய்வதைக் குறைக்கவில்லை. கொழும்பில் நிற்கும்போது புளொட் உறுப்பினர் பீற்றர் என்பவருடன் சென்று சிவராம் என்பவரை (சிவராம் முன் புளொட்டில் இருந்து பின் புலியில் சேர்ந்தவர்) கடத்திச்சென்று கொலை செய்துள்ளார். அங்கிருந்த பீற்றர் மட்டும் பிடிபட்டு ஒருவருடம் சிறையிலிருந்து பின் பிணையில் விடுபட்டதாக அறிகின்றேன்) பிரதீபன் வழக்கம் போல் லண்டன் பாஸ்போட் வைத்திருந்ததால் கொலை செய்த கையோடு லண்டனிற்கு ஓடியே வந்துவிட்டார். தமிழினப் படுகொலை செய்த இலங்கையரசை உலகக்குற்றவியல் சட்டத்தில் நிற்பாட்டவும் லண்டணுக்கு சென்றிருக்கும் மகிந்தாவை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கவும் லண்டன் பாடுபடும் இந்த நேரத்தில் லண்டனிலிருந்து கொண்டு புளொட்டின் தாய்வீட்டிற்கு போய் வந்து கொலை செய்து கொண்டிருக்கும் இந்த பிரதீபனை கவனிக்க ஆள் இல்லையா? புதிதாக புனர்நிர்மாணம் செய்ய மகாநாடு நடத்தும் வெளிநாட்டுப் புளொட்டாவது வெளிநாட்டு புளொட் உறுப்பினரான பிரதீபனை கண்டித்து வைக்கக் கூடாதா? இல்லை இவர் உறுப்பினர் இல்லையென்று புளொட் சொன்னால் இவர் புளொட்டில் இல்லையென்று பகிரங்கமாக அறிக்கை விடுங்கள்.
    இபபடித்தான் புளொட்டுக்கு ஆள் வேண்டும் என்று சொலிக்கொண்டு எந்த வித தகுதியுமில்லாத ரவுடி ரஞ்சனை வெளிநாட்டுப் பொறுப்பாளராக வைத்திருந்தீர்கள். அவரும் இப்போது தனது வழக்கமான ரவுடித்தனத்தால் சுவிசில் மீண்டும் கம்பி எண்ணுகின்றார். இந்த நேரத்தை பாவித்தாவது வெளிநாட்டுப் புளொட் இனியாவது தன்னைத்தானே விமர்சனம் செய்து பிழையானவர்களை அம்பலப்படுத்தி புதிய வடிவத்தை கட்டமையுஙகள் நீங்கள் சரியான பாதையில் முன்னெடுத்தால் எங்களைப்போன்றொர் உங்களுக்குப் பின்னாலேயெ நிற்போம் புளொட்டில் என்னதான் விமர்சனம் இருந்தாலும் நாமும் அந்த வீட்டில் ஒன்றரை வருடம் சோறு உண்டவர்கள்; நீங்களும் திருத்தி- திருந்தி வாருங்கள் நாங்களும் வருவோம். இதனை புளொட்டினர் ஆதங்கத்தோடு பார்க்காமல் ஆரோக்கியமாக பார்த்தால் எம்மைப்போன்றோர் ஏன் இதை எழுதினோம் என்று புரியும். சிந்தியுங்கள்.உங்கள் தளங்களில் எமதுணர்வுகளை வந்து எழுத எமக்கு இன்னும் துணிவு வரவில்லை ஏனெனில் இன்னும் நீங்கள் கொலைகாரர்களையும் இப்படியான மன நோயாளர்களையும் சேர்த்து வைத்திருக்கின்றீர்கள். இனியாவது சிந்தியுங்கள்…..

    Reply
  • Vanavil
    Vanavil

    கானிவலில் தொடங்கிய சண்டை ……….

    1977 யாழ்பாணத்தில் நடைபெற்ற கானிவல் கொண்டாட்டத்துக்கு வந்த இராணுவத்தினரில் சிலரைத் தாக்கியதிலிருந்தே சண்டை ஆரம்பித்தது. புளொட்டின் தளபதிகளில் ஒருவராக பலராலும் மதிக்கப்பட்ட மாணிக்கதாசன்தான் இதற்கு ஆரம்ப கர்த்தாவாகும். மாணிக்கதாசன், யாழ் மாட்டின் றோட்டில் பெயர் போன ரவுடி. மாணிக்கதாசனின் தந்தையார் தமிழ், தாயார் சிங்களம். இவர் சிங்களவர்களோடுதான் அதிக நெருக்கம். கானிவல் எனும் விழாவைப் பார்க்க, சிவில் உடையில் வந்திருந்த இராணுவத்தினர் கேலி பேசி சிரித்துக் கொண்டு போனார்கள். அவர்களோடு ஏற்பட்ட சண்டைதான் அன்றைய கலவரத்துக்கு அத்திவாரமானது. இது இலங்கையெல்லாம் பரவியது.

    அடுத்த கலவரம் 1981ல் நாச்சிமார் கோவிலடியில் ஆரம்பித்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாவட்ட அபிவிருத்தி சபையின் கடைசிக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கூட்டத்துக்கு எக்கச்சக்கமான சனம் வந்திருந்தது. பின்னால் உமாவும், தாசனும், இன்னும் சிலரும் பின்னால் நின்று கொண்டிருந்தனர். இவர்களை அக் காலத்தில் கைது செய்ய போலீசார் தேடிக் கொண்டிருந்தனர். ஜேஆரோடு பேச்சு வார்த்தையொன்றை நடத்திய பிறகு அமிர்தலிங்கம் தரப்பு மாவட்ட அபிவிருத்தி சபையை குறியாக வைத்து தேர்தல் களத்தில் தமிழர் தரப்பு தேர்தலில் இறங்கியிருந்தது. நாச்சிமார் கோவிலடியில் கூட்டம் கடைசி கூட்டமாக இருந்தது.

    நிறைந்து வழியும் மக்களைப் பார்த்ததும் உமாவுக்கு பொறாடையாக இருந்தது. இவ்வளவு சனம் ஆதரவு கொடுப்பதை தடுக்க வேண்டும். இதை எப்படியாவது கலைக்க வழி செய்ய வேண்டும் என்று யோசித்தார். பக்கத்தில இருந்த மாணிக்கதாசனிடம் இந்த கூட்டத்தைக் கலைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று உமா சொன்னார். மாணிக்தாசனின் கையில் துப்பாக்கியிருந்தது. அண்ணன் கலைக்க வழியிருக்கு என்று சொல்லிப் போட்டுப் போன மாணிக்கதாசன் பின்னால் நின்று கொண்டிருந்த இரண்டு போலீசாரை சுட்டுக் கொன்று போட்டு ஓடிவிட்டான்.

    இதை பின்னொரு காலத்தில் உமாவும் மாணிக்கதாசனும் ஒன்றாக இருக்கும் போது பேசி சிரித்தார்கள். இந்த மொக்கனுக்கு கூட்டத்தை குழப்பத்தான் சொன்னன். சுடவா சொன்னன் என்று கேட்க, நீங்கதானே கூட்டத்தை குழப்பச் சொன்னீங்க என்றான் மாணிக்கதாசன். அதன் பிரதிபலிப்பாகவே கொழும்பிலிருந்து வந்த காடையர்கள் யாழ் நுhலகத்தை எரித்தார்கள். மேலே சொன்ன இரண்டு கலவத்துக்கும் மாணிக்தாசனே காரணமானான். இக் காலத்தில் மாணிக்கதாசன் கழகத்தில் இல்லை. யாழ் ரவுடியாக மாணிக்கதாசன் இருந்த காலம்.

    மாணிக்கதாசனுக்கு மாமன் முறை உறவுக்காரரான டென்சில் கொப்பேகடுவ இராணுவத்தில் இருந்தார். சுட்டு விட்டு ஓடிய மாணிக்கதாசன் யோகேசுவரன் எம்.பீ. வீட்டுக்குள் போய் நுழைந்தான். இராணுவம் யோகேசுவரன் வீட்டை அடித்து நொறுக்கியது. இதை அன்று அரசு திட்டமிட்டு நடத்தியதோ என சந்தேகமும் வருகிறது?

    1987ல் இந்திய இராணுவத்தோடு இலங்கைக்கு வந்த மாணிக்கதாசன் பின்னர் டென்சில் கொப்பேக்கெடுவையின் செல்வாக்கோடு வவுனியாவில் வாழ்ந்தான். ஐபீகேஎப்புக்கு இது கடும் சினத்தைக் கொடுத்திருந்தது. இராணுவத்துக்கு எதிராக இலங்கை இராணுவத்தோடு சேர்ந்து புளொட் இயங்குவதான தோற்றத்தை மாணிக்கதாசனே ஏற்படுத்தியதால் ஐபீகேஎப் புளொட்டை வெறுத்தது. டென்சில் கொப்பேக்கடுவ காலத்தில் மாணிக்கதாசன் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்தான். காரைநகரில் நடந்த குண்டு வெடிப்பில் டென்சில் கொப்பேக்கடுவ இறந்த பின் அந்த செல்வாக்கு குறைந்தது.

    Reply
  • மாயா
    மாயா

    இந்திராவை சந்தித்த உமா……

    கொமியுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் , இந்திராவுடன் நேரடியாக சென்று பேசும் அளவுக்கு நெருக்கமானவர். உமா மகேஸ்வரனை, 1983 நவம்பர் மாதம் நேரடியாக சென்று சந்திக்க ஒரு ஏற்பாட்டை கல்யாண சுந்தரம் செய்து கொடுத்தார்.

    லண்டனிலிருந்து வந்த , முன்னாள் கஸ்ட்டம் கலெக்டர் விக்னேஸ்வர ராஜாவோடு சென்ற உமா , இந்திரா காந்தியை சந்தித்தார். பனாகொடை மகேஸ்வரன் நடத்திய விமான வெடிகுண்டு வழக்கில் கைதானவர். கொழும்பில் கஸ்ட்டம் கலெக்டராக இருந்தார். 1983 கலவரத்தோடு வெளியேறியவர். இவர்களது சந்திப்பு 30 நிமிடங்கள் நடைபெற்றது.

    இலங்கை தமிழ் தலைவர்களில் அமிர்தலிங்கம் மட்டுமே இந்திராவை சந்தித்திருந்தார். அதையடுத்து இந்திராவை சந்தித்த ஒரே தமிழ் அரசியல் அல்லது இயக்க தலைவர் உமா மகேஸ்வரன் மட்டுமேயாகும்.

    இந்திராவிடம் , இலங்கை தமிழர் பிரச்சனைகள் குறித்து விளக்கம் அளித்தார்கள். தனக்கு , இலங்கை தமிழரது பிரச்சனைகள் விளங்குகிறது. நல்லதொரு முடிவு எடுப்போம் என்று இந்திரா சொன்னார்.

    இவர்கள் சந்திப்பதற்கு முன்னதாக இருந்தே தமிழ் இயக்கங்களுக்கு இந்திய அரசின் உதவிகளால் பணமும் / பயிற்சிகளும் / முகாம் அமைக்க தளங்களும் வழங்கப்பட்டு வந்தன.

    Reply
  • kovai
    kovai

    வானவில்!
    சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் களியாட்ட விழாவில் சிங்களப் பொப் பாடகர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள்.

    கூட்டத்தில் இசையின் தாளலயத்திற்கு நானும் ஆடிக்கொண்டிருந்தேன்.

    அந்த நேரத்தில் ஒரு குழப்பம் நிகழ்ந்தது.சிங்களவர் தமிழ்ப் பெண்களுடன் சேட்டை விட்டதால் அடிபாடு நடந்தது உண்மை. அடிவாங்கியவர்கள் சிங்கள் இராணுவம் என்பது பின்புதான் தெரியவந்தது.
    அதில் மாணிக்கதாசன் பங்கு இருந்திருந்தால் அது மிகவும் சிறியதே. அன்று மாணிக்கதாசன் நீங்கள் சொல்கிற மாதிரி பெரிய ரவுடியல்ல. மரக்காலை வைத்திருந்த குடும்பம் ஆகையால், ‘கழுத்து நெரித்துக் கொல்லும்’அளவு, அவன் கைகள் பலமானவை. இவன் யோகேஷ்வரனின் வீட்டின் முன்னுள்ள சுவரில் ‘எதிர்ப்பு சுலோகங்கள்’ எழுதியதாக கைது செய்யப்பட்டான் (குமார் பொன்னம்பலம் காசு கொடுத்து எழுதியதாக சொல்லப்பட்டது. அதிக பிழைகளுடன் எழுதிய தமிழ், மாணிக்கதாசன் கைதை உறுதிப்படுத்தியதாகக் கேள்வி.)

    தமிழினப்படுகொலை, சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அரசியல்கோட்பாடு; அதியுன்னதமாகத் திட்டமிடப்பட்டவை;அது ‘மாவலி’ கங்கையின் நீண்ட, தொடர்ச்சியான பாய்ச்சல். இதை மாணிக்கதாசனின் செய்கையாலேற்பட்ட ‘கலவரம்’ என்பது சீரணிக்கக் கூடியதாகவில்லை.

    Reply
  • sumanan
    sumanan

    “இதே போல் செட்டித்தெருவிலுள்ள ஒரு ஹொட்டலின் முன் புளொட் மாமாவையும் பாபுஜியையும் இவரின் அடியாட்களுடன் …
    இந்த பிரதீபன் பற்றிய பதிவில் ஒருசிறு திருத்தத்தை எனது பழைய தோழர் நினைவு படுத்தியதில் அதை திருத்தி குறிப்பிடுகின்றேன்.
    இந்த ஹொட்டலின் பெயர் “ஐலண்ட்”இதனருகே வந்த பிரதீபனும் நண்பர்களும் புளொட் மாமா என்று சொல்லப்படும் மட்டக்களப்பு மாமாவையும் >பாபுஜியையும் நோக்கி பிஸ்டலால் சுட்டதில் பாபுஜிக்கு இரண்டு சூடு விழுந்தது. உடனே பாபுஜி சூடுபட்ட நிலையிலும் மாமாவும் சேர்ந்து பிரதீபன் ஆட்களை திரத்திச் சென்றனர் இதில் பிரதீபன் பிஸ்டலையும் போட்டு விட்டு ஓட அவருடன் வந்த பையன் இந்த பிஸ்டலையும் பொறுக்கி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர். இதன் பின் உடனடியாக கொட்டாஞ்சேனையிலிருக்கும் சுலோமன் என்ற தனியார் மருத்துவ மனைக்கு பாபுஜி புளொட் மாமா சேர்த்தார். ஒரு குண்டு உடம்பிலும் ஒரு குண்டு உடம்பைத்துளைத்து வெளியேயும் பாய்ந்திருந்தது. அங்கு உடன் சிகிச்சை அளித்துவிட்டு பின் பொரளை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இருவாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றார். இந்த தகவல் சம்பந்தப்பட்ட ஒருவரால் சுட்டிக்காட்டப்பட்டு இதில் சரியாக திருத்தியுள்ளேன். நன்றி

    Reply
  • Kanna
    Kanna

    காந்தியம் இன கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களை எல்லை கிராமங்களில் குடி அமர்த்திய காலங்களில், கழகத்தின் உறுப்பினர்கள் செயல்பட்ட்ட காலங்கள். 1983 கலவரம், batticalo சிறை உடைப்பு , வெலிக்கடை படுகொலை போன்றவரடலும் கழகத்தின் வவுனியா விமானபடை மீதான தாக்குதலும் காந்தியத்தின் செயல்பாடுகள் குழப்பத்தில் சென்று சேர்த்தது.

    கழகத்தின் உறுப்பினர்கள் இந்திய ட்ரைனிங் பெருவதிட்கக சென்றவர்களில் U P இற்கு 1 குழுவில் 26 , 2 குழுவில் 40 , 3 குழுவில் 50 இடம்பெற்றனர் . இக் குழுவில் – புலவர் (சுழிபுரம்), புலவர் / செந்தில்(வவுனியா), பெரிய மென்டிஸ், சின்ன மென்டிஸ்(உடுவில்) , நடேசன்(வவுனியா-மன்னர் பொறுப்பாளர்), நவாஸ்( வவுனியா பொறுப்பாளர்), நவாஸ், சங்கர், மைகேல்/குமார், கஜன், அமுதன், வரதன், வசந்தி, மகேந்திரன் k ,k ,s , வரதன், R R , மதன், தேவதாஸ், ஐயர், சுரேஷ், இளங்கிளி, பாபு,(மாதகல் – ரேடியோ ற்றன்ச்மிட்டேர் & கழகத்தின் உறுப்பினர்கள் காபர்டபடுவதிகாக வயல்வெளியல் தனியாக ஒரு S L R உடன், படைகளுடன் மோதி மரணித்த கண்மணி ), காண்டீபன், பாபுஜி, ஆனந்தி, ரமணன், geeva (அம்பாறை), சுகுணன்(VVT ), சின்னமலை, ரகு, வாமதேவன், சந்திரலிங்கம், எழில், சோதிலிங்கம், மாறன் etc . நண்பர்கள் தொடரலாம்……. 1 குழுவில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கூடுதலாக இருந்தனர்.

    நந்தனம் , S d சோமசுந்தரம் வீடு நிரம்பிய நிலைஎல், தேனீ முகாம் தொடங்கபட்டது இதில் வெங்கட், தவம், ஜெகத், சாந்தி, சுரேஷ், ராஜ், டென், குமார், அளியாதகோலம் சிவா, பிரதீப் (மாதகல்), பிரதீப்(திருமலை), சேவல்கொடி, ராஜ், ஆனந்த்தப்பா, ரங்கப்பா, g t r , இடி ரவி , வளவன், ஜெயா, ரகு, கராடி மாஸ்டர், சிலம்படி மாஸ்டர், பீட்டர், செந்தில், கோம்ஸ், ஷங்கர்(நெல்லியடி), ஆச்சி ராஜன், சிறி(வவுனியா), பாம்பு மணி, rajev , etc என 293 இருந்தனர். நண்பர்கள் தொடரலாம்…….

    3 தடவைகள் கழகத்தின் உறுப்பினர்கள் PLO சென்றனர். இவர்களில்,… நகுலன்/ பாருக், கபி, சாந்தி(உடுவில்), சீசர், ponuthrai , சுனில், அதியன், சுந்தரலிங்கம், மார்டின், மதன், சுபாஷ்(batti ), மாமா (batti ), மணிகதாசன், ராஜன், ராஜா (கிளிநொச்சி), சங்கிலி, கண்ணன், காந்தன், பவன் (நெல்லியடி), பாபு (trinco ), ரகு (mulaithivu ), ஜெயா (mulaithivu ), சங்கர் (யாழ) ,சங்கர் (batti ), வீரவாஞ்சி, rajeve , காலித் (trinco ), செல்வராஜா, பிரசாத் (batti ), ராஜேஷ், etc …நண்பர்கள் தொடரலாம்…….

    UP முடித்து வந்தவர்கள் மாறன் இன் பொறுப்பில் ஓரதனடில் ஒரு முகாமும், நந்தனத்தில் ஒரு முகாமும் இருந்தது. பின்னர் இவர்கள் பல எடங்களிட்கு அனுப்பட்டனர்.

    தேனீ முகாம் நடைபுரும்போது, ஊரதனடில் இரண்டு முகாமும் (ராஜனின் பொறுப்பில்) – கிடத்தட 400 கழகத்தின் உறுப்பினர்கள் , pudukodai ஈல் ஒரு முகாமும் திறகபடடது- 200 கழகத்தின் உறுப்பினர்கள் . தேனீ முகாம் ட்ரக்டர் ஸ்ரீ அரசியல் ஸ்ரீ உம , வீரவாஞ்சி pudukodai இயலும் இணைப்பாளர் இருந்தனர். எழில் காக்கா தலைமை நிலையங்களுடன் தொடர்புகளை செய்தனர். மாசிலாமணி தஞ்சாவூர் ஈல் இருந்தார். இவர் இங்கு இருக்கும் போது தனியாக VDO கடையும் நடத்தினார்.

    Reply
  • Kanna
    Kanna

    //T3ஸ் சமூக விஞ்ஞானக் கல்லூரி //
    சமூக சிந்தனை இல்லாத கூட்டம் சமூக விஞ்ஞானக்கல்லுரி நடத்திச்சாம், இததான் சொல்லுறது பிச்சகாரனுக்கு கோடீஸ்வரன் என பெயர் என்று
    T3S செய்த செயல்பாடுகள் அந்த தருணத்தில் மிக தேவையான சேவைகள்தான். அதை அனுபவத்தின் உடகத்தான் புரியமுடிய்ம்.

    //எமது நிலைபாடு சீலன் போன்ற சாதாரன போராளிகளின் நிலைபாடே, யானின் பாதுகாப்பில் அக்கறை கொண்ட நீங்கள் யான் ஓட்டத்தால் உள்ளே இருந்து தம்உயிரை விட போகும் யாண் சார்ந்த தோழர்களை எண்ணியதுண்டா? யாண் போனால் உயிர்; மற்றவர்கள் போனால் என்ன …;;//
    நன்றிகள் பல கோடி உரிதாகடும்

    //அவர்கள் கதைக்கும் போதே கதையை திசை திருப்பி விடுவார்கள். எனக்கு என்னடா இவங்கள் அவன் என்னவோ சொல்ல ; இவன் என்னவோ சொல்லுறானே என்று யோசித்தேன்.//
    இப்படிபட்ட புனியவான்களால் தான் பலர் தப்பினார்கள். இவர்களை புரியாமல் புலனாய்வு குழுவின் கதைக்கு அள்ளுப்பட்டு அழிந்தவர்கள் இன்று எம் இடைய இல்லை.

    //இன்று இத்தனை பேர் புளொட்டில் உயிரோடு இருப்பதற்கு இந்த T3Sக்கு நன்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால் சவுக்ந் தோப்பு முள்ளிவாய்க்கால் ஒன்று எப்பவோ பதிவாகிருக்கும்//
    உமாவை கட்டிபோட, கையை வெசுக்கிகொண்டு வந்த தள குழுவிற்கு இந்த நிலைமைகள் என்றும் புரியாததுதான் வேடிக்கை. நன்றிகள் அஜீவன்..

    nanee மிக சரியாக பின் தள உறுபினர்களின் நிலைமைகளை வெளிகொண்டுவந்ததிக்கு நன்றிகள்.

    //சிரிச்சு நசுங்கவோ > நசுங்கி சிரிக்கவோ தெரியாதவங்களால எந்த இயக்கத்திலும் இருக்க இயலாது//
    முகாம்களின் நிலமைகள் இது தான். இந்த நிலைமைகளில் பாலியல் துன்புறுத்தல் மிக அதிகம் . நண்பர்கள் மேல சொன்னதுபோல் இல்லாமல், இவை ஆண்களுக்ம் நடந்தவைதான். ஒருவரிடம் இருந்து தப்ப, மற்றவரிடம் பலியானவந்தான் , இறுதியாக பரந்தன் ராஜன் காப்பாற்றிய படியால் இன்றும் குடும்பமாக வாழமுடிகின்றது. இளபதிக்கு எதுவும இல்லாத பாட்டாளிகள் நாங்கள். – படாத உங்களுக்கு புரியவா போகின்றது.

    //நல்ல காலம் தளத்திலும் தளும்பல் > பின் தளத்திலும் குலுங்கல். பொங்கலுக்கு தமிழீழம் தாறதா சொல்லிக் கொண்டிருந்த> புளொட் இரண்டா பிரிஞ்சு ஆயுதத்தோட நடராசர்களா நடமாடினதால யாரையும் போட பயப்பட்டாங்கள். எவன் எவனோட நிக்கிறான் என்று எவனுக்குமே தெரியாது. அவன் இவனில்லை. நான் அவனில்லை ரேஞ்சில ஆள் மாறாட்டம். தம்பிரான் புண்ணியம் தலைகள் உருளயில்லை. பரந்தன் ராஜன் பலமா நின்றதால //
    பலர் தபியதிக்கு மிக பெரிய காரணமே பரந்தன் ராஜன் தான். உமாவின் ஆட்களின் நடமாடங்கள் கடுபடுதியதும் இவை தான். முகம்களிக்கு CC உறுப்பினர்கள் போக முடியாமல் போனதும் ரஜனின் உறுபினர்கள் கபர்டுவர்கள் என்ற நம்பிக்கைதான்.

    //இதுதான் கழகத்தின் கலகம். உண்மைக்கு புறம்பானவற்றை ஊதி பெருக்க வைப்பது. இன்னும் போனால் அமெரிக்க இராணுவத்தின் ஏழவது படைப்பிரிவும் முள்ளிகுள முகாமை தாக்கியது அதனால்தான் இந்திய இராணுவம் ஒன்றும் செய்வது அறியாது நின்றது என்றும் சொல்ல தொடங்கி விடுவீர்கள். இவ்வளவு அவலங்களுக்கு பின்பும் உங்கள் கழக புத்தி போகவில்லை. //
    ஒருவன் – தாக்குதலில் பங்குபற்றிய ஈரோஸ் & LTTE உறுப்பினர்கள் வட அமரிக்காவில் தான் உள்ளார்கள். IPT வரதன் பிரான்ஸ் இருகின்றார். தேவையானால் மேலதிக தகவல் தரலாம். BATTI எல் இருந்து வருவதிக்கு பாதுகாப்பு கொடுத்த STF உறுப்பினர் SWISS எல் உளர் அப்பனே – வேண்டாம் வேடயாடு வெளயாடு .

    தொடரும் ….

    Reply
  • vanavil
    vanavil

    கோவை ; உங்கள் கருத்துக்கு நன்றி. அது குறித்த விளக்கத்தை சற்று தருவீர்களா? நீங்கள் அந்த சமயத்தில் அங்கு இருந்திருக்கிறீர்கள். எனவே அது குறித்த தகவல்களை முடிந்தால் பதியுங்கள். நானும் அங்கே சம்பந்தப் பட்ட ஒருவரோடு தொடர்பு கொள்ள முயன்றேன் . முடியவில்லை. அவரைத் தொடர்பு கொண்டு எழுத முயல்கிறேன்.

    இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான போது யாழ் மக்கள் உண்மையிலேயே மகிழ்வோடுதான் இருந்தார்கள். யாழ் வந்த இந்திய இராணுவத்தினரை மலர் மாலை போட்டே வரவேற்றார்கள். பிரபாகரன் இந்தியா சென்று திரும்பி வந்து நடந்து கொண்ட விதத்திலிருந்து மக்கள் சற்று குழம்பினாலும் ; இருக்கும் நிம்மதி போதும் என்ற மனநிலையில் மக்கள் இருந்தார்கள். புலிகள் இல்லாமல் போகலாம் என்ற ஒரு நிலையும் தெரிந்தது.

    புலிகள் உடன்படிக்கையை எதிர்த்ததால் இந்தியா; வரதராஜப் பெருமாளை முன்னிலைப்படுத்தி இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முயன்ற போது வரதராஜப் பெருமாள் தலைமையிலான திரீஸ்டார் என இயங்கிய (ஈபீஆர்எல்எப் / ஈஎன்டீஎல்எப் / டெலோ ) அமைப்புகள் நடந்து கொண்ட முறை மற்றும் அடாவடித்தனங்களால் மக்கள் மீண்டும் புலிகளை பலமாக ஆதரிக்கத் தலைப்பட்டார்கள்.

    திரீஸ்டார் செய்த அடாவடித்தனம் எந்த அளவு அத்து மீறியதென்றால் ; இந்திய இராணுவத்தை கூட்டிக் கொண்டு போய் வீடுகளில் கொள்ளை அடிப்பது / பெண்களை கற்பழிப்பது / ஆட்களை பலவந்தமாக பிடிப்பது எனத் தொடர்ந்தது. இந்திய இராணுவத்தில் இருந்த தமிழ் இராணுவத்தினரே காறித் துப்பும் அளவுக்கு இந்த அமைப்புகள் நடந்து கொண்டன.

    இதுவெல்லாம் நடக்கும் போது முதலமைச்சராக அமர்த்தப்பட்ட வரதராஜப் பெருமாள் மது போதையில் திருகோணமலை ஐபீகேஎப் முகாமில் தங்கியிருந்தார். மக்களைப் பற்றியோ / அங்கே நடந்து கொண்டிருக்கும் அவலங்கள் குறித்தோ கவலையே கொள்ளாமல் வரதராஜப் பெருமாள் தண்ணியில் இருந்தார். இந்திய இராணுவத்துக்கு கெட்ட பெயர் வந்ததே இந்த திரீஸ்டார் குழுவை ஆதரித்ததால்தான்.

    திரீஸ்டார் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருந்தால் புலிகள் மக்களால் ஒதுக்கப்பட்டிருப்பார்கள். அது புலிகளை மக்கள் வெறுத்து ஒதுக்கி இருந்த தருணம். புலிகளை நல்லனாக்கி வளர வைத்தது திரீஸ்டார்தான்.

    ஈஎன்டீஎல்எப்பில் இருந்த பாபுஜி(கனடா)யின் வேலை புலிகளை பிடிக்க என்று இந்திய இராணுவத்தோடு போய் வீடுகளில் உள்ள நகைகளைக் கொள்ளை அடிப்பது. ஒரு வீட்டினுள் நுழைந்த பாபுஜி மூத்த மகளின் கழுத்தில் இருந்த நகைகளை பிடிங்கிக் கொண்டு ; தங்கையின் கழுத்தில் நகைகள் இல்லாததால் ” எதுக்கு ஓர வஞசனை பண்ணுராய். இவளுக்கும் நகைகளை போட வேண்டியதுதானே” என்று தகப்பனுக்கு அடித்தானாம்.

    இந்திய இராணுவம் திரும்பி இந்தியா வரும் போது அவர்களோடு வந்த இராணுவத்தினர் பாபுஜியை காறித் துப்பாத குறையாக திட்டினார்களாம். பாபுஜியின் மனைவியின் உடல் முழுவதையும் நகைகளால் அலங்கரித்து இருந்தானாம். அதைப் பார்த்த தமிழ் இராணுவத்தினர்; ஒரு பெட்டிக்குள்ள வைத்துக் கொண்டு வந்தாலும் பரவாயில்லை. இப்படி அலங்கார ஊர்தி போலக் கூட்டிக் கொண்டு வாறியே என்று திட்டியுள்ளனர். காயம்பட்டு வேதனையோடு கப்பலில் படுத்திருந்த தமிழ் இராணுவத்தினர் பாபுஜியைப் பார்த்து நகைக் கடையையே கொள்ளை அடிச்சிருக்கீங்க என்றும் நக்கலடித்தாங்களாம்.

    பாருங்க தமிழ் பசங்க என்னமா சண்டை புடிக்கிறானுக. பார்க்க சந்தோசமாயிருக்கு என்றும் புலிகளை பாராட்டினார்களாம். தாங்கள் காயப்பட்டாலும் ; இந்திக்காரங்களிடம் தமிழனின் வீரம் குறித்து மகிழ்வோடு கதைப்பார்களாம்.

    கிடைத்த சந்தர்ப்பத்தை புலிகளும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. வரதராசர் தலைமையிலான திரீஸ்டார் என இயங்கிய (ஈபீஆர்எல்எப் / ஈஎன்டீஎல்எப் / டெலோ ) அமைப்புகளும் பயன் படுத்திக் கொள்ளவில்லை.

    முன்னால் புளொட் போராளியான காலித் தலைமையில் ஒரு குழுவை இந்திய இராணுவம் மட்டக்களப்பில் உருவாக்கியது. அது புலிகளை அழிக்க பயன்படுத்தப்பட்டது. அடுத்து கந்தசாமி (சங்கிலி) மற்றும் சேவல்கொடி தலைமையில் ஒரு குழு மன்னார் பகுதிகளில் புலிகளைத் தேடித் தேடி வெட்டிக் கொன்றனர்.

    பிரபாகரன் ; ஐபீகேஎப் மற்றும் றோவிடம் புளொட்டை நிறுத்தச் சொல்லி முறையிட்டார். இது குறித்து சித்தார்த்தர் மற்றும் வெற்றிச் செல்வன் மூலமாக உமாவுக்கு அறிவிக்கப்பட்ட போது ; உமா இனி அப்படி நடக்காது . இனி செய்யயில்லையாம் என்பார். ஆனால் அது தொடரவே செய்தது. இதனால் பிரபாகரன் புளொட் மீது கடும் சினத்தோடு இருந்தார். றோ ; தம்மை அழிக்க பின்னால் ஆயுதங்களை வழங்குவதாக பிரபாகரன் நினைத்தார்.

    உமா ; இலங்கைக்கு போனதும் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலியோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். உமா ; இந்தியாவையும் ; புலிகளையும் எதிர்க்கத் தொடங்கினார். ஆனால் பிரேமாதாச உமா மேல் வெறுப்போடு இருந்தார்.

    அதற்கு காரணம் அத்துலத் முதலிக்கும் ; பிரேமதாசவுக்கும் இடையேயான பதவி இழுபறியினால் அதத்துலத் முதலியோடு நெருக்கமாக இருந்த உமாவை ; பிரேமதாசவுக்கு பிடிக்கவில்லை.

    1989ல் புளொட் நுவரெலியாவில் தேர்தலில் நின்றது. 1989ல் அதிக வாக்குகளைப் பெறுபவர் பிரதமராகலாம் என அதிபராக இருந்த பிரேமதாச சொன்னார். தங்களில் யார் அதிக வாக்குகளைப் பெற்று பிரதமராவது என அத்துலத் முதலிக்கும் ; காமினி திசாநாயகவுக்கும் இடையே பலத்த போட்டி உருவானது. மலைய மக்களது வாக்குகள் தொண்டமானின் ஆதரவோடு காமினி திசாநாயக்காவுக்கு கிடைக்கும். அதை உடைக்க தொண்டமானோடு பிரச்சனைப்பட்டு ஒதுங்கியிருந்த சந்திரசேகரனை புளொட் லலித்துக்காக பாவித்தது. இங்கே ஜேவீபீயையும் இவர்கள் இணைத்துக் கொண்டார்கள்.

    இங்கே வேலை செய்ய திவாகரன் எனும் சிவா சின்னப் பொடியை உமா நுவரெலியாவுக்கு அனுப்பினார். வவுனியாவிலோ அல்லது வன்னியிலோ புளொட் தேர்தலில் நின்றிருக்கலாம்.அது அவர்களது தளம்.அதை புளொட் அன்று செய்யவில்லை. தளமே இல்லாத இடத்தில் தேர்தலில் நின்று ; லலித் அத்துலத் முதலியை கொண்டு வருவதற்காக காமினிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை உடைக்க உமாவின் கருவியாக செயல்பட்டார்.

    Reply
  • vetrichelvan
    vetrichelvan

    லெபனான் பயிச்சிக்கு டெல்லி இல் இருந்து ஆறுமுறை நான் பயண ஏபாடுகள் செய்துள்ளேன் வானவில் கூறுவதுபோல் காணிவேல் நிகழ்ச்சியில் மெயின் பங்கு மாணிக்கம் தாசன் தான் மேலும் மாயா இந்திராகாந்தி உமா அண்ணா சந்திப்பில் நானும் கூட சென்று டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் காத்திருக்க அவர்கள் சென்று சந்தித்து விட்டுவர நான்தான் எமது இடத்துக்கு அழைத்து வந்தேன்

    Reply
  • மாயா
    மாயா

    //கூட்டத்தில் இசையின் தாளலயத்திற்கு நானும் ஆடிக்கொண்டிருந்தேன்.

    அந்த நேரத்தில் ஒரு குழப்பம் நிகழ்ந்தது.சிங்களவர் தமிழ்ப் பெண்களுடன் சேட்டை விட்டதால் அடிபாடு நடந்தது உண்மை. அடிவாங்கியவர்கள் சிங்கள இராணுவம் என்பது பின்புதான் தெரியவந்தது. -கோவை //

    நான் நினைக்கிறேன். குழப்பம் நடந்த போது நீங்கள் ஆடிக் கொண்டிருக்கிறீர்கள். அடிபாடு நடக்கிறது. அது யாரோடு யாருக்கென்றே தங்களுக்குத் தெரியவில்லை. அடி வாங்கியது சிங்கள இராணுவம் என்பது பின்னரே தெரிய வந்ததாக சொல்கிறீர்கள்? எனவே உண்மையான நிகழ்வை நீங்கள் பார்க்கவில்லை?. நிகழ்வில் சம்பந்தப்பட்டவர் சொல்கிறார். குழப்பத்தை உண்டு பண்ணியது மாணிக்தாசன்தான் என்று.

    //மாணிக்கதாசனின் செய்கையாலேற்பட்ட ‘கலவரம்’ என்பது சீரணிக்கக் கூடியதாகவில்லை.// என்கிறீர்கள் . நடந்ததை விபரமாக எழுதுங்கள் கோவை.

    Reply
  • vanavil
    vanavil

    திவாகரனும் (சிவா சின்னப்பொடி) கழகமும்……..

    திவாகரன் இயக்கத்துக்கு வந்தவரல்ல. 1983 வரை ரேடியோ சிலோனில் வேலை செய்தவர் கலவரத்தோடு மனைவி குழந்தைகளை விட்டு விட்டு சென்னைக்கு ஓடிவந்தவர். மாதவன்; வெற்றிச் செல்வன் ஆகியோர் சென்னை; மவுண்ட றோட்டில் இருந்த எம்.எல்.ஏ.ஹவுசில் உள்ள 62ம் இலக்க அறையில் இருந்தார்கள். அதுதான் அன்று சென்னையில் இருந்த புளொட் காரியாலயம்.

    இலங்கையிலிருந்து ஒரு பையன் வந்து அழுது கொண்டிருக்கிறார். பாவம் என்று சொல்லி திவாகரனை சிலர் அழைத்து வந்தனர். திவாகரனை முதலில் அழைத்துப் பேசியவர்கள் மாதவனும்; வெற்றிச் செல்வனும்தான். 1983 சண்டையில் மனைவி பிள்ளைகளை விட்டு சென்னை வந்து விட்டதாகவும்; தனது கையில் பணம் இல்லையென்றும் கண்ணீர் விட்டார். கொழும்பில் பிரச்சனை நடக்கும் போது யாழ்பாணத்தில் இருந்த மனைவி பிள்ளைகள் இருந்த இடத்துக்கு போயிருக்கலாம். ஆனால் பாதுகாப்பில்லை என்று சென்னைக்கு வந்திருந்தார்.

    அந்த நேரம் இலங்கையில் நடந்த பிரச்சனைகள் குறித்த படங்களை காட்சிப்படுத்தும் போது அதை விளக்க புளொட்டுக்கு ஒரு ஆள் தேவைப்பட்டது. எனவே திவாகரனை அதற்கு பயன்படுத்தலாம் என வெற்றியும்; மாதவனும் நினைத்து தங்க வைத்துக் கொண்டனர். திவாகரனிடம் எக்சிபிசனுக்கான பொருட்களை கொடுத்து அனுப்புவார்கள். இவருக்கு சாப்பாடு மட்டுமே கொடுக்கப்பட்டது.

    உமாவிடம் இது குறித்து சொல்ல பரவாயில்லை என்றார். சந்தியார் வந்து மாதவனுக்கும்; வெற்றிக்கும் சனல் பேச்சு. யார்; எவர் என்று தெரியாமல் எப்படி எடுப்பீர்கள்? என்றும், சந்ததியார் இவனை எடுக்கவே வேண்டாம் என்றும் கத்தத் தொடங்கினார். அப்போது சென்னையிலிருந்த சாமி; மாறன் போன்றோர் சந்ததி இப்படித்தான் சொல்வார். ஆளை வைத்துக் கொள்வோம் என்று சொன்னார்கள்.

    அப்போதைய திவாகரனின் வேலை மீட்டிங்கள் நடக்கும் இடங்களுக்கும்; காலேஜ்களுக்கும் போய் படங்களை வைப்பது மற்றும் அதை வைத்து விளக்கமளிப்பதும்தான். இவரை இயக்கத்துக்கு சேர்க்கும் ஐடியா எவருக்குமே இருக்கவில்லை. திவாகரன் வேறொரு இடத்தில் தங்கியிருந்தார். வேலையிருக்கும் போது சாப்பாட்டுக்கு 10 ரூபா கொடுத்து; போக்குவரத்து காசும் கொடுத்து விடுவார்கள். இதே வேலைக்கு இன்னும் சில பொடிகளை பின்னர் சேர்த்தார்கள்.

    அதன் பிறகு திவாகரன்; அந்த பொடிகளைப் பற்றி வந்து குறை சொல்லுவார். அவங்க எதுவும் செய்ய மாட்டாங்கள். நான் மட்டும்தான் எல்லாம் செய்கிறன் என்பார். இது வெற்றிக்கும்; மாதவனுக்கும் பிடிச்சுப் போனது. அதைவிட அவன் வேலை செய்கிறான் இல்லை என்று குறை சொல்லித் திரிந்து போட்டுக் கொடுப்பது மேலும் பிடிக்க வழியானது. இவர் உண்மை சொல்லுறார் என்று நம்பினார்கள். கடுமையாக வேலை செய்வதாகவும் காட்டிக் கொண்டார்.

    இயக்கம் வளர; வளர பொடிகளும் அதிகரிக்க, பிரசார பிரிவை பொறுப்பாய் நடத்த திவாகரனை பார்க்க விட்டார்கள். இவர் அடுத்த பொடிகளுக்கு கதை விட்டிருக்கிறார். நான் பழைய எல்டீடீ. எனக்கு அந்தக் காலத்திலேயே உமாவோடு தொடர்பெல்லாம் இருந்தது என்று. புதிதாக வாற பொடிகளும் பயம். எதிர்த்து கதைக்க மாட்டார்கள். அதைக் கேட்டு பயந்து அடங்கியே நடப்பார்கள்.

    உண்மை என்னவெனில்; உமா எம்எல்ஏ ஹாஸ்ட்டல் ரூமுக்கு வரும் போது வெற்றியும்; மாதவனும்; சிவா சின்னப் பொடியை துரத்தி விடுவார்கள். உமாவை பார்க்க வேண்டும் என்று சொல்லுவார். பாதுகாப்பில்லை வெளியே எங்காவது போய் பிறகு வாருங்கள் என்று துரத்துவார்கள்.

    பார்த்தீபன் (நோர்வே) டெக்கனிகல் வேலைகள் செய்யும். ரேடியோவை செய்யத் தொடங்கும் போது எழுத்து வேலைகள் செய்வதால் அங்கே திவாகரன் சேர்ந்து கொண்டார். இவர் மற்றவர்களை நல்லாவே போட்டுக் கொடுப்பார். இதைத்தான் கழகம் விசுவாசம் என நினைத்தது. இந்த நாசமறுப்புதான் நல்லவர்களை துரத்தி; மோசமானவர்களை நம்பிக்கையாளராக்கியது. அனைத்து இயக்கங்களுக்கும் பொதுவான விதி இது.

    மாதவனும்; வெற்றியும் இவரை உள்ளே எடுத்ததாக திவாகரன் எவரிடமும் கடைசி வரை சொன்னதில்லை. உம்மை பாவம் என்று கழகத்துக்குள் எடுத்தது நாங்கள் செய்தது பிழைதானே என்று கொழும்பில் வைத்து வெற்றி சொன்னார். சந்ததி சொன்னப்போவே துரத்தியிருக் வேண்டிய ஆள் நீர் என்றும் சொன்னார்.

    பின்தள மாநாட்டில் வைத்து தன்னை சாதியை வைத்து குறை சொல்கிறார்கள் என்று அழுதார். அதைக் கேட்ட உமா; இந்த மாதிரி அனுதாபம் தேடுற முயற்சியை வச்சுக் கொள்ளாதேயும் என்று அடிக்காத குறையாகத் திட்டினார். இவர் எல்லாரையும் போட்டுக் கொடுப்பார். எல்லா இடத்திலயும் போய் நிற்பார். யாருக்கும் இவரைப் பிடிக்காது. நல்லா நசிவார்.

    திவாகரனின் மச்சான்; மனைவியின் அண்ணன் திரு (திருநாமம்) ; சென்னையில் ஏஜன்சி வைத்திருந்தார். அவர்தான் சென்னையில் காசு வைத்திருந்த தமிழர்களை மாணிக்கதாசனுக்கு காசு பறிக்க ஆள் காட்டியாக இருந்தது. திரு கொடுக்கும் தகவல்களை வைத்து மாணிக்கதாசன் கோஸ்டி கொள்ளை அடித்தது.

    திரு இலங்கையில் ஏஜன்சி செய்து பலரை ஏமாற்றிப் போட்டு இந்தியாவுக்கு வந்திருந்தார். திருவை; மாணிக்கதாசன் கடத்தப் போக சென்னையில் காசு வைத்திருக்கும் இலங்கை தமிழர்களைக் காட்டிக் கொடுக்கிறன். தன்னை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று ஒப்பந்தம் செய்து காட்டிக் கொடுக்க தொடங்கினார். இவரது தகவலின்படி மாணிக்கதாசன் பல கொள்ளைகளை செய்தார்.

    திருவை சென்னைப் போலீசார் கைது செய்த போது; தான் புளொட் என சொல்லியிருந்தார். சென்னையில் இருந்த வெற்றிச்செல்வன்; இவருக்கும் புளொட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுப்பறிக்கை கொடுத்தார்.

    Reply
  • மாயா
    மாயா

    புலிகளின் புதிய தலைவரை குறிவைக்கும் அதிகாரிகள் – டி.பி.எஸ். ஜெயராஜ்

    விநாயகம் என்னும் இயக்கப்பெயரில் ஐரோப்பாவில் தொழிற்படும், தன்னைத் தானே தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய தலைவரென கூறிக்கொள்ளும் நபர்மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை சென்ற வாரம் இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்து மேற்கொண்டனர்.

    சேகரபிள்ளை விநாயகமூர்த்தி அல்லது விநாயகம் என்பவரை கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திலிருந்து பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் நவம்பர் 24 ஆம் திகதி கேட்டுப் பெற்றுக்கொண்டனர்.

    இந்த நபர் தேசத்தின் நியாயாதிக்க எல்லைக்கு அப்பால் தொழிற்படுவதால், விநாயகமூர்த்தி அல்லது விநாயகம் செய்ததாக கூறப்படும் பயங்கரவாத குற்றங்கள் தொடர்பில் ‘ INTERPOL சிவப்பு அறிவித்தல்’ வழங்க, INTERPOL என அழைக்கப்படும் சர்வதேச குற்றச்செயல் பொலிஸ் அமைப்பின் சேவைகளை, இலங்கை அதிகாரிகள் கேட்டுப் பெற்றுள்ளனர்.

    ‘ INTERPOL சிவப்பு அறிவித்தல்’ என்பது சர்வதேச பிடியாணை அல்ல. இது சம்பந்தப்பட்ட நபர் தேசிய நியாயாதிக்கத்தினால் அல்லது சர்சவதேச குற்றச்செயல் நியாயசபைகளால் தேடப்படும்போது வழங்கப்படுபவதாகும்.

    குற்றமிழைத்ததாக கருதப்படுபவர்களை கைது செய்து அவரின் நாட்டுக்கு ஒப்படைக்கும் நோக்கில் குறித்த நாட்டுப் பொலிஸாருக்கு அவர்களை தேடிப்பிடிக்க உதவுவதே ‘இன்ரபோலின்’ வேலையாகும்.

    சொந்த நாட்டுக்கு ஒப்படைப்பதற்காக, தேடப்படும் நபரை கைது செய்ய வேண்டும் என்னும் வேண்டுகோளுடன் பிடியாணையை உலகம் முழுதும் விநியோகிக்க சிவப்பு அறிவித்தல்கள் அனுமதிக்கும்.

    இலங்கை அதிகாரிகளால் முன்வைக்கப்டப்ட ஆவணங்களின்படி, விநாயகம் 46 வயதானவர், நவம்பர் 10, 1964 இல் பிறந்தவர் ஆவார.; 1.53 மீற்றர் உயரமானவர், ஆங்கிலம் தமிழ் ஆகிய மொழிகளை பேசுவார். இவர் கண், தலைமயிர் ஆகியன கறுப்பு.

    விநாயகம் என அழைக்கப்படும் இந்த நபரின் முக்கியத்துவத்தின் காரணமாக, இலங்கை இன்ரபோலினதும் மேற்கத்தைய நாடுகளின் சட்ட அமுலாக்கல் நிறுவனங்களினதும் ஒத்துழைப்பை புதிய எல்.ரீ.ரீ.ஈ தலைவரை கைதுசெய்வதற்கு கோரும் என்பதில் சந்தேகம் இல்லை.

    விநாயகம் பற்றிய விபரமான ஆவணத்தொகுப்பு ஒன்று தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும் விரைவில் அது உலகளாவிய ரீதியில் பொருத்தமான சட்ட அமுலாக்கல் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் கொழும்பிலுள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    குழப்பம்

    விநாயகம் என அறியப்படும் நபரின் உண்மையான ஆளடையாளம் பற்றி காணப்படும் எந்தவொரு குழப்பத்தையும் அகற்ற விசேட கவனம் எடுக்கப்படும். ஐரோப்பாவில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ. இன் ஒரு பகுதியினர் விநாயகத்தை சிரேஷ்ட கடற்புலி தளபதியாக காட்ட முற்படுவதே இதற்கான காரணம் ஆகும். மருதங்கேணியை சேர்ந்த தங்கவேலு விநாயகம் அல்லது ‘மைக்போஃர்’ முன்னர் பிரதி கடற்புலி தளபதியாக இருந்தவர். படிநிலை அமைப்பில் சூசை, செழியன் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருந்தவர்.

    இடது பக்க கண்ணில் குறைபாடு உள்ள விநாயகம் பெபர்வரி 4 ,2009 இல் சண்டையின்போது உயிழந்தார். பிரிகேடியர் பிரசன்ன சில்வாவினால் தலைமை தாங்கப்பட்ட 55 படையணி சாளை கடற்புலி தளத்தை தாக்கியபோது தளத்தை பாதுகாக்கும் போரில் விநாயகம் கொல்லப்பட்டார்.

    விநாயகத்தின் உடலம் கிடைக்காவிடினும் கெமுனு வோச் துருப்பினர் அவரது அடையாள அட்டையை கண்டெடுத்தனர். 2009 இன் இறுதிப் பகுதியில் ஐரோப்பாவில் வெளிப்பட்ட சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி அல்லது விநாயகம், தான் புலிகளின் புலனாய்வு பிரிவிலிருந்ததாக எல்.ரீ.ரீ.ஈ. இற்கும் எல்.ரீ.ரீ.ஈ. சார்பு வட்டாரங்களுக்கும் கூறிக்கொண்டார்.

    ஆயினும் தந்திரோபாய ரீதியில் விநாயகம், இறந்துபோனதாக அறிவிக்கப்பட்ட கடற்புலி விநாயகம் தானேதான் என 2010 இல் நடிக்கத் தொடங்கினார். இவர், எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு தலைவர் பொட்டு அம்மானினால் தான் ஒரு முக்கிய வேலையின் பொருட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் தனது மரணம் பற்றிய அறிக்கைகள் தவறானவை எனவும் கூறினார்.

    ஐரோப்பாவிலிருந்த சில எல்.ரீ.ரீ.ஈ. செயற்பாட்டாளர்களும், இந்த விநாயகம், உண்மையில் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட கடற்புலி சிரேஷ்ட தளபதிதான் என்ற தவறான கருத்தை பரப்பத் தொடங்கினார். கடற்புலி தளபதிக்கு கண்ணில் குறைபாடு இருந்தமையால் இந்த பாசாங்குக்காரரும், சில சமயங்களில் ,தனது கண்களை மறைக்க கறுப்புக்ககண்ணாடி அணிந்துக்கொண்டார்.

    ஐரோப்பாவில் உள்ள தகவல் தரவல்ல தமிழ் வட்டாரங்கள், எல்.ரீ.ரீ.ஈ. இன் சில பிரிவினருக்கும், எல்.ரீ.ரீ.ஈ. சார்பான சிலருக்கும் ஐரோப்பாவில் வெளிப்பட்டு;ள்ள விநாயகம், சிரேஷ்ட, கடற்புலி தளபதி அல்ல என்றும் அவர் எல்.ரீ.ரீ.ஈ. இன் உளவுத்துறையை சேர்ந்த ஒரு முக்கிய தலைவர் என்றும் தெரியுமென கூறுகின்றன.

    மாறுவேடம்

    இருப்பினும் இவர்கள் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக இந்த மாறுவேட நாடகத்தை அனுமதித்துள்ளனர். இதற்கான முக்கிய காரணம் ‘புலனாய்வு’ விநாயகத்தின் உண்மையான ஆளடையாளம் பற்றி மக்களிடையே குழப்பத்தை உண்டாக்குவதாகும். இவரை ‘உயிர்த்தெழுந்த’ விநாயகமாக காட்டுவது இந்த நோக்கத்தை அடைய உதவியுள்ளது.

    இறந்தாக அறிவிக்கப்பட்ட ஒருவர் உயிரோடு இருப்பதாக அறிவிக்கப்படுவது உற்சாகம் இழந்துபோன புலி செயற்பாட்டாளர்களின் உற்சாகத்தை தூண்ட உதவியது இன்னொரு பிரதான காரணமாகும். இது இலங்கை அதிகாரிகளை பொய்யர்களாக காட்டி அவர்களை முகத்தில் கரிபூசும்.

    இதைவிட முக்கியமாக, எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் உயிருடன் உள்ளனர் என்னும் கட்டுக்கதையை பரப்பவும் உதவும். 2009 இல் இறந்தாக அறிவிக்கப்பட்ட விநாயகம், ஐரோப்பாவில் உயிருடன் தோன்ற முடியுமாயின் மே 2009 இல் இறந்தாக அறிவிக்கப்பட்ட பிரபாகரனும் , பொட்டுவும் உயிரோடு இருந்து சரியான தருணத்தில் வெளிப்பட முடியும் என்பதே இந்த தர்க்கமாகும்.

    இந்த காரணங்களுக்கு மேலாக, புதிய எல்.ரீ.ரீ.ஈ. தலைவரை, சிரேஷ்ட கடற்புலி தளபதியாக காட்டுவது இன்னுமொரு நடைமுறை நோக்கத்தை நிறைவு செய்கின்றது. வெளிநாட்டு புலிகள் இலங்கை மீதான கடல்வழி தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளும் ஆயத்தங்கள் நடப்பதாக கதை பரப்பிவருகின்றனர். இது ஏமாளிகளிடமிருந்து நிதிசேகரிப்பதற்கான ஒரு சோடிப்பு ஆகும்.

    ஒப்பீட்டளவில் அதிகம் அறியப்படாத புலனாய்வு தொழிற்படுநருக்கு பதிலாக ஓர் அனுபவம் மிக்க கடற்புலி தளபதி, தன் இராணுவ சாதனைகளால் பிரபலமானவர் இந்த கடல்வழி படையெடுப்புக்கு தலைமை தாங்குகிறார் என்று கூறுவதால் இவ்வாறான கடல்வழி படையெடுப்பு சாத்தியமென நம்பவைப்பது இலகுவாக இருந்தது.

    இந்த பின்னணியில்தான் விநாயகம் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டார். இருப்பினும் இது முற்றுமுழுதான மாறுவேடம் அல்ல. ஏனெனில் ஐரோப்பாவில் உள்ள பல முக்கியமான எல்.ரீ.ரீ.ஈ.யினர் விநாயகத்தின் உண்மையான ஆளடையாளத்தை அறிந்திருந்தனர். எனவே இவரால் சில பிரிவினரை மட்டுமே கடற்;புலி தளபதி விநாயகம் என பிழையாக நம்பவைக்க முடிந்தது.

    விநாயகம் நடிக்கின்றார் என்ற விடயம் வெளிக்கொணரப்பட்டபோது சில புலி சார்ந்த இணையத்தளங்கள் அடைந்த குழப்பம் நகைப்புக்கு உரியதாயிற்று. முன்னரே தமக்கு விநாயகத்தின் உண்மையான ஆளடையாளம் தெரியும் எனக்காட்டும் அவதியில் இந்த இணையத்தளங்கள் ஆள்மாறாட்டத்தை உறுதியாக அம்பலப்படுத்தும் விவரங்களை வழங்கின.

    கடற்புலி விநாயகத்தைவிட, புலனாய்வு பிரிவு விநாயகம் குறைவாக அறியப்பட்டவராக இருந்தாலும், பின்னையவரின் முக்கியத்துவத்தையும் ஆற்றலையும் குறைத்து மதிக்க முடியாது. எல்.ரீ.ரீ.ஈ இன் புதிய தலைவர், முன்னர் எல்.ரீ.ரீ.ஈ.யின் நாசகர நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். இவருக்கு வருங்காலங்களில் அழிவை ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதனால்தான் இலங்கை அதிகாரிகள் இவரை கைது செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர் போலும்.

    தென்மராட்சி

    சேகரபிள்ளை விநாயகமூர்த்தி அல்லது விநாயகம் நவம்பர் 10, 1964 இல் பிறந்தவர். இவரது குடும்பம் தென்மராட்சி பிரதேசத்தின் வரணியில் இடைக்குறிச்சி என்னும் இடத்தை சேர்ந்தது. இருந்தாலும் இவர், குடும்பம் சாவகச்சேரியில் சில காலம் வாழ்ந்தது.

    விநாயகமூர்த்தி 1985 இல் தன் இருபதாவது வயதில் எல்.ரீ.ரீ.ஈ. இல் முறையாக இணைந்தார். இதற்கு முன் மாணவனாக இருந்த காலத்தில் இவர் எல்.ரீ.ரீ.ஈ. உதவியாளாக இருந்தார். யாழ்ப்பாண குடாநாட்டில் தெற்கு மற்றும் தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள, மாசார் மற்றும் புலோப்பளை, கிளாலி பகுதியில் தன் உள்ளுர் பயிற்சியை பெற்றதாக கூறப்படுகின்றது.

    விநாயகம் முதலில், புலி வட்டாரத்தில் ‘லொஸ் ஏன்ஜெல்ஸ்’ என குறிப்பிடப்படும் புலிகளின் தென்மராட்சி பிரிவில் நிலைகொண்டார். அப்போது திலீபன் அல்லது கேடில்ஸ் தென்மராட்சி பிரதேசத்துக்கு பொறுப்பாக இருந்தார்.

    சூசையின் கீழிருந்த வடமராட்சி பிரிவு கலிபோர்ணியா எனவும் ஜொனியின் கீழிலிருந்த வலிகாமம் பிரிவு சிக்காக்கோ எனவும் அழைக்கப்பட்டன. சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் அல்லது கிட்டு, யாழ்ப்பாண மாவட்ட புலிகிள் மீதான ஒட்டுமொத்த பொறுப்பையும் கொண்டிருந்தார்.

    விநாயகத்தின் பிரதேச பொறுப்பாளராக இருந்த கேடில்ஸ், கைதடி பவுஸர் குண்டு வெடிப்பில் பெப்ரவரி 14 இல் கொல்லப்பட்டார்.

    அதன்பின் சிறிது காலத்துக்கு குஞ்சன், பாக்கியராஜ் ஆகியோரின் கூட்டு பொறுப்பில் தென்மராட்சி விடப்பட்டது. பின்னர் புதிய பொறுப்பாளராக நரேன் நியமிக்கப்பட்டார்.

    யூலை 29, 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்த யுத்த நிறுத்த காலத்தில் நரேன் மாற்றப்பட்டு அப்துல்லா நியமிக்கப்பட்டார்.

    குமரப்பா, புலேந்திரன் ஆகிய சிரேஷ்ட புலித் தலைவர்கள் உட்பட 12 எல்.ரீ.ரீ.ஈ. போராளிகள் கைது செய்யப்பட்டு தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து குறுகிய ஓய்வைத் தந்த சமாதானம் சிதறிப்போயிற்று.

    பலாலியில் சயனைட் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டவர்களுள் தென்மராட்சியின் புதிய தளபதி அப்துல்லாவும் இருந்தார்.

    இந்த நிகழ்வின் பின் இந்திய இராணுவத்திற்கும், எல்.ரீ.ரீ.ஈ. இற்கும் இடையில் யுத்தம் மூண்டது. அப்போது தினேஷ் என அறியப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. அரசியல் பிரிவு தலைவர் சுப்பையா பரமு தமிழ்செல்வன் தென்மராட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

    அவர், அதே பிரதேசத்தில் மட்டுவில் என்னும்; இடத்தை சேர்ந்தவர். அதே பிரதேசத்து மந்துவிலை சேர்ந்த பாப்பா அவருக்கு அடுத்த நிலையில் நியமிக்கப்பட்டார்.

    கேடில்ஸிலிருந்து தமிழ்செல்வன் வரையிலான இந்த மாற்றங்களின்போது விநாயகமூர்த்தி எல்.ரீ.ரீ.ஈ. இன் தென்மராட்சி பிரிவிலேயே வேலை செய்தார். இவர் பாப்பாவின் கீழ் நேரடியாக வேலைசெய்ததாகவும், அம்பன் – குடத்தனை வரணி பகுதிகளில் நிலைக்கொண்டிருந்ததாகவும் அறியப்படுகிறது.

    1990 இல் இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறிய பின், எல்.ரீ.ரீ.ஈ. யாழ்ப்பாண குடாநாடு உட்பட வட மாகணத்தின் பெரும்பகுதியின் கட்டுப்பாட்டை எல்.ரீ.ரீ.ஈ. பெற்றுக்கொண்டது. எல்.ரீ.ரீ.ஈ நிறுவனம் முற்றுமுழுதாக புனரமைக்கப்பட்டது.

    ஐயன்னா

    இந்த புதிய மாற்றங்களின்போது விநாயகமூர்த்தி, பொட்டு அம்மான் தலைமையிலான புலி நிறுவன பாதுகாப்பு புலனாய்வு சேவை (TOSIS) என்று அழைக்கப்பட்ட புலிகளின் புலனாய்வு பிரிவில் உள்ளீர்க்கபட்டார்.

    இவர் இரண்டாம் லெப்டினென்ட் ஆக பதவி உயர்த்தப்பட்டு ஐயன்னா என்னும் இயக்கப்பெயர் சூட்டப்பட்டார். (எல்.ரீ.ரீ.ஈ. இன் சர்வதேச ஆயுத கொள்வனவாளரான பொன்னையா ஆனந்தராஜாவின் இயக்கப் பெயரான அய்யன்னா வேறு.)

    விநாயகமூர்த்தி அல்லது ஐயன்னா 1990-1993 காலப்பகுதியில் நேரடியாக பொட்டு அம்மானின் கீழ் வேலை செய்தார். இவர், தனது அடிமைத்தனமான பக்தி மூலம் பொட்டு அம்மானின் நேயத்துக்குரியவர் ஆனார்.

    ‘ஐயன்னா பொட்டுவின் அலுவலகத்தில் ‘பீயோன்’ ஆகவும் பொட்டுவின் வீட்டில் அவரது மனைவிக்கு வேலையாளராகவும் இருந்தார்.” – இது ஐயன்னாவின் முகஸ்துதி பற்றி மேற்கத்தைய நாட்டில் வாழும் முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் பரிகாசமாக கூறியது.

    1994 இல் விநாயகமூர்த்தி லெப்ரினென்ட் ஆக உயர்த்தப்பட்டு, வவுனியா மாவட்டத்துக்கான புலனாய்வு தலைவராக வவுனியாவுக்கு அனுப்பப்பட்டார். 1996 இல் இவரிடம் வட, வடமத்திய மாகாண காடுகளில் உளவு பார்த்தல் அல்லது ‘றெக்கி’ எடுக்கும் பொறுப்பும், அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் ஊடுருவி காட்டுப்பாதைகளை உருவாக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது.

    பின்னர், 1997 இல் இவர் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. இராணுவ புலனாய்வு தலைவர் சாள்ஸுடன் இணைந்து தொழிற்படுமாறு அனுப்பப்பட்டார். சாள்ஸ், கொழும்பு மற்றும் வடக்கு, கிழக்கு, அல்லாத பிற மாவட்டவங்களில் நாசவேலைகள், அரசியல்வாதிகளின் கொலைகள் என்பவற்றுக்கு பொறுப்பாக இருந்தவர். வவுனியாவும் மட்டக்களப்பும் இப்படியான நடவடிக்கைகள் திட்டமிடப்படுவதற்கும் கட்டளை வழங்குவதற்கும் உரிய முக்கிய இடமாக காணப்பட்டன.

    மட்டக்களப்பு – அம்பாறைக்கான புலனாய்வு தலைவர் ரமணன், வவுனியா மாவட்ட புலனாய்வு தலைவர் விநாயகமூர்த்தி அல்லது ஐயன்னா ஆகியோர் தமது அந்தங்களிலிருந்து தேவையான பொருட்களை அனுப்பிவைக்கும் வேலைகளை கவனித்தனர். இந்த காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ. ஆல் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கொலைகள் பலவற்றின் தயாரிப்பு வேலைகளுக்கு இந்த இருவரும் பொறுப்பாக இருந்தனர்.

    இவர், 1990 இல் கப்டனாக பதவி உயர்த்தப்பட்டு புதிய கடமைகள் வழங்கப்பட்டு பெரும்பாக கொழும்பு பகுதிக்கு அனுப்பப்பட்டார். இவர் சாள்ஸுடன் இணைந்து வேலை செய்தார்.

    இவர் நீர்கொழும்பில் நிலைகொண்டதாக கூறப்படுகிறது. அக்காலத்தில் இவர் தனது பெயரை விநாயகம் என சுருக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இவர் விநாயகம் என்றே அழைக்கப்பட்டார். 1985 இல் இவர் எல்.ரீ.ரீ.ஈ. இல் சேர்ந்தபோது இவர் விநாயகம் என்றே அறியப்பட்டிருந்தார்.

    இவர் நீர்கொழும்பு- கொழும்பில் பணிப்பொறுப்பிலிருந்த காலத்தில் இவரது பிரதான ‘சாதனை’யாக ஜுலை 12, 2001 இல் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குதலுக்கு அடித்தளம் இட்டமையாக அமைகின்றது. இந்த பொறுப்பு வெற்றிகரமாக சாதிக்கப்பட்டதன் பின், இவர் வன்னிக்கு அழைக்கப்பட்டு மேஜர் பதவி வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டார்.

    புலனாய்வு

    ஒஸ்லோ ஆதரவு சமாதான செயற்பாடு பெப்ரவரி 23, 2002 இல் போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்தது. இக்காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ., உலகளவில் தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே அதிகளிவில் வேலை செய்வதில் கவனத்தை செலுத்தியது. யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தி புலம் பெயர்ந்தோரிடையே புலிகளின் பிடியை வலுவாக்குவதே திட்டமாக இருந்தது.

    இராணுவ நடவடிக்கைகளில் அனுபவம் பெற்ற புலி உறுப்பினர்களை, புலிகளின் கிளைகளையும், முகப்பு நிறுவனங்களையும் நிர்வகிக்க பல நாடுகளுக்கும் அனுப்புவதே இந்த உத்தியின் பிரதான கூறாக காணப்பட்டது. போர்க்கள அனுபவம் பெற்ற முழுதாக இயக்கத்தில் ஈடுப்பட்ட புலிகள், புலம் பெயர்ந்தோர் மீது கூடிய கட்டுப்பாட்டை கொண்டிருப்பர் என்றும் ஈவிரக்கமற்ற முறையில் விடயங்களை அச்சொட்டாக முன்னெடுப்பர் எனவும் எல்.ரீ.ரீ.ஈ. உயர்பீடம் கருதியது.

    இந்த உத்திக்கு இணைந்ததாக எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு பிரிவி;ன் பாத்திரம் அமைந்தது. பல புலி புலனாய்வு தொழிற்படுநர்கள் இந்தியாவுக்கும் பல மேற்கத்தைய நாடுகளுக்கும் அனுப்பப்பட்டனர். சிலர் எதையும் காணாதவர் போலிருந்து நடப்பவற்றை நன்கு அவதானித்து அறிக்கை அனுப்பும் பணிக்காக நியமிக்கப்பட்டவர்கள்.

    மற்றவர்கள் எல்.ரீ.ரீ.ஈ. கிளைகள், முகப்பு நிறுவனங்களின் பிரதான தொழிற்படுநர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் புலிகளின் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

    இதே போன்று எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு தொழிற்படுனர்களை இந்தக் காலத்தில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் அனுப்பிவைத்தனர். இவர்களில் சிலர் தமது தலைமையகத்துடன் தொடர்பிலிருந்தாலும், ஏனையோர், தேவை ஏற்படும்போது மட்டும் தொழிற்பட பணிக்கப்படும் நோக்கில் அடக்கத்தில் இருந்தவர்கள் ஆவர்.

    வன்னிக்கு அப்பால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் தொழிற்படுவோர் தொடர்பான விடயங்களை மேற்பார்வை செய்யும் நோக்கில் எல்.ரீ.ரீ.ஈ. இன் உளபிரிவு விசேட அலகு ஒன்றை உருவாக்கியது. இந்த விசேட புலனாய்வு அலகு ‘வெளிநாட்டு – உள்நாட்டு புலனாய்வு விவகாரங்கள்’ என அழைக்கப்பட்டது.

    விநாயகமூர்த்தி 2002 இல் இந்த விசேட அலகின் தலைவராக்கப்பட்டார். இந்த புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டபோது இவரது இயக்கப்பெயர் மீண்டும் மாற்றப்பட்டது. இப்போது அவர் அறிவழகன் என அழைக்கப்பட்டார்.

    ஒரு கட்டத்தில் மேஜர் அறிவழகன், போலி கடவுச்சீட்டில் இந்தியாவுக்கு பயணமாகி சில காலம் அங்கு தங்கி ஆதரவு வலையமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். இவர், போலி கடவுச்சீட்டுடன், சமாதான பேச்சுவார்த்தைக்காக ஐரோப்பியாவுக்கு சென்ற எல்.ரீ.ரீ.ஈ. தூதுக்குழுவோடு பயணமாகி பல ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அமைதியான முறையில் புலம்பெயர்ந்தோருடன் கலந்துரையாடினார்.

    இந்தக் காலத்தில் விநாயகத்தின் செல்வாக்கு வளர்ச்சி கண்டது. இவரது சகோதரரான சக்தி, வன்னியில் எல்.ரீ.ரீ.ஈ.இனால் உருவாக்கப்பட்ட மரசபை தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த மர சபைக்கு, கட்டுமான வேலை மற்றும்; விறகு தேவைக்காக மரம் வெட்டுதல் தொடர்பான சகல விடயங்களையும் கட்டுப்படுத்தியது. இச்சபை மரம் வெட்டுவோர், மரவியாபாரிகள் ஆகியோரிடமிருந்து வரி அறவிட்டது. சக்தியின் இந்த நியமனத்துக்கு காரணமாக இருந்தது அவரது சகோதரனின் செல்வாக்கே.

    தொடர்பாடல்

    நவம்பர் 2005 இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்த பின் நிலைமை தலைகீழாக மாறியது. பலவீனமான சமாதான செயற்பாடு பூரணமாக செயலிழந்தது. விரைவில் முழுவளவிலான யுத்தம் வெடித்தது. வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புகளுக்கும் வன்னியிலிருந்த புலி உயர்பீடத்துக்கும் இடையில் தொடர்பாடல் கடினமாயிற்று. இராணுவம் முன்னேறி வர புலிகள் பின்வாங்கி சென்றமையால் வெளிநாட்டு கிளைகளுடனும், முகப்பு நிறுவனங்களுடனுமான தொடர்பு அறுந்து போயிற்று.

    வன்னியில் பெரும் சண்டை நடந்தபோது விநாயகத்தின் பாத்திரம் என்னவாக இருந்து என்பது தெளிவாக தெரியவில்லை. இவர் பொட்டு அம்மானுக்கு நெருக்கமாக இருந்தார் எனவும் தேசிய புலனாய்வு நிறுவன தலைவருக்கு நெருங்கிய உள்வட்டத்தில் பத்துப்பேரில் ஒருவராக இருந்தார் எனவும் தெரிகிறது.

    ஜனவரி 2, 2009 இல் கிளிநொச்சி வீழ்ச்சியடைந்தமை எல்.ரீ.ரீ.ஈ வட்டாரத்தில் பெரும் பதகளிப்புக்கு காரணமாகிற்று. எல்.ரீ.ரீ.ஈ. அச்சுறுத்திக் கொண்டிருந்த தோல்வியை தாமதிக்கும் வகையில் விளைவைப்பற்றி சிந்தியாது, அந்தரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    அதில் ஒன்றாக , கரும்புலி தற்கொலை அணியொன்றை, தெற்கில் வன்முறை தாக்குதல்களையும் அழிவுச்செயல்களையும் மேற்கொள்வதற்காக அனுப்பியமை இருந்தது.

    இந்த குழுவுக்கு தலைமை தாங்கியவர் விநாயகம்தான். அவர் இப்போது லெப்.கேணலாக தரமுயர்த்தப்பட்டிருந்தார். ஆனால் விநாயகமூர்த்தி நேரடியாக தற்கொலை தாக்குதலில் ஈடுபடவேண்டும் என எதிர்பார்க்கப்படவில்லை.

    அவர் இந்த தற்கொலைத் தாக்குதல்களை திட்டமிட்டு, இணைப்பு செய்து, மேற்பார்வையும் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது.

    ஜனவரி 2009 இல் எல்.ரீ.ரீ.ஈ. இனால், விநாயகம் தலைமையில் அனுப்பப்பட்ட 15-20 வரையிலான கரும்புலிகள், வவுனியா – அனுராதபுரம் பிரதேசத்திலிருந்த காட்டுப்பாதைகள் ஊடாக வடமத்திய மாகாணத்தினுள் நுழைய முயன்றபோது பேரிடரில் சிக்கினார். ரோந்து சென்ற படையினருடனான சண்டையில் இந்த அணியின் அரைபங்கினராவது கொல்லப்பட்டனர் என கூறப்படுகிறது.

    தப்பிப்பிழைத்த ஒரு சிலரில் விநாயகமும் ஒருவர். இந்த அணியின் வேறு சில அங்கத்தவர்களும் பின்னர் வந்து சேர்ந்தனர். விநாயகம் எஞ்சியோருடன் தெற்குக்கு சென்றார். எல்.ரீ.ரீ.ஈ. இன் தலைமைபீடம் பெரும் அழிவுச் செய்தியை எதிர்பார்த்திருந்தாலும் அப்படி ஏதும் நடக்கவில்லை. எதிர்பார்த்த மாதிரி விநாயகத்தால் சாதிக்க முடியவில்லை. இந்த நடவடிக்கை புஷ்வாணமாயிற்று.

    இந்த நடவடிக்கையின் தோல்வி விநாயகத்திற்கு இன்னொரு வகையில் நன்மை ஆயிற்று. எல்.ரீ.ரீ.ஈ. நிலைகளை இராணுவம் கைப்பற்றி வந்த நிலயில் விநாயகம் வன்னிக்கு வெளியே தொடர்ந்து இருக்க முடிந்தது. தெற்கில் பாரிய தாக்குதலை மேற்கொள்ள தான் முயன்றாலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக இருந்தமையால் எதுவும் செய்யமுடியாது இருந்தது என்ற சாட்டு அவருக்கு இருந்தது.

    இந்தத் தோல்வி, எல்.ரீ.ரீ.ஈ.இன் உயர்பீடத்தின் நலனுக்கு பாதகமாக இருந்தாலும் விநாயகத்திற்கு நன்மையாயிற்று. எல்.ரீ.ரீ.ஈ. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று உதவி அரசாங்க பிரிவில் முற்றுகைக்கு உள்ளான நிலையில் இறுதிப்போரில் ஈடுபட்டிருந்த போது அவர் ஒப்பீட்டு ரீதியில் வன்னிக்கு வெளியே பாதுகாப்பாக இருந்தார். இதனால் முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின்போது ஏனைய எல்.ரீ.ரீ.ஈ. சிரேஷ்;ட தலைவர்கள் போன்று விநாயகம் இறந்துபோகவில்லை. எல்.ரீ.ரீ.ஈ. இன் தோல்விக்கு முன்னரே இவர் இந்தியாவுக்கு போய்விட்டார்.

    அறிவழகன்

    இந்தியாவுக்கு சென்றவுடன் விநாயகம் மீண்டும் அறிவழகன் என்னும் பெயரை சூடிக்கொண்டார். கதிர்காமத்தம்பி என்பதையும் இதனோடு சேர்த்து ஒரு மரியாதையான தோற்றப்பாட்டை தன்பெயருக்கு ஏற்படுத்திக்கொண்டார். தன் வசமிருந்த நிதிவளத்தையும், தொடர்புகளையும் பயன்படுத்தி வன்னிக்கு வெளியே பல்வேறு இடங்களில் விடப்பட்டிருந்த பல்வேறு எல்.ரீ.ரீ.ஈ. உளவுப்படையினரின் மீட்புக்கு ஒழுங்கு செய்தார். இவர்களில் பலர் விமானம் மூலம் இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். கிழக்குக் கரையிலிருந்து ஒரு சில படகுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

    பிரபாகரன் இறந்துவிட்டதாக செல்வராசா பத்மநாதன் அல்லது கே.பி. அறிவித்தபோது கதிர்காமத்தம்பி அறிவழகன் என்ற பெயரில் இயங்கிய விநாயகம் செய்திகளில் இடம்பிடித்தார். அறிவழகன் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை மறுத்தார். பின்னர் பிரபாகரன் உண்மையில் இறந்துவிட்டார்தான் என இன்னொரு அறிக்கையை வெளிவிட்டார். முதல் அறிக்கையை விட்டார் முதல் அறிக்கைக்காக பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட்டது.

    விநாயகம் அல்லது அறிவழகனின் அறிவுறுத்தலின் பேரில் உலகின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு தொழிற்படுநர்கள் நெருங்கிய உறவை கொண்ட ஒரு அலகில் இணைக்கபட்டனர். அறிவழகன், எல்.ரீ.ரீ.ஈ.இன் வெளிநாட்டு புலனாய்வுக்கு பொறுப்பாக இருந்தமையாலும் அநேகமான தொழிற்படுநர்களை தனிப்பட்ட முறையிலும் அறிந்திருந்தமையாலும், தன் அதிகாரத்தை நிலைநிறுத்துவது கடினமாக இருக்கவில்லை.

    அறிவழகனின் கீழிருந்த புலி புலனாய்வு பிரிவின் பிரதான நடவடிக்கைகளில் ஒன்றாக தலைமைத்துவம் பற்றிய நெருக்கடியை தீர்ப்பது இருந்தது.

    உயிருடன், சுதந்திரமாக காணப்பட்ட செல்வராஜா பத்மநாதன் அல்லது கேபி, எல்.ரீ.ரீ.ஈ. இன் அதி சிரேஷ்ட தலைவராக பொறுப்பேற்றிருந்தர். எல்.ரீ.ரீ.ஈ. யின் வெளிநாட்டு கிளைகளின் நிர்வாகத்துக்கு பொறுப்பாக இருந்த பேரின்பநாயகம் அல்லது நெடியவன் இதை எதிர்த்தார். வெளிநாடுகளிலிருந்த எல்.ரீ.ரீ.ஈ. பிரிவு அங்கத்தவர்கள், எல்.ரீ.ரீ.ஈ. க்கு தலைமை தாங்க கூடுதலான தகைமையுடையவர் யார் என்பது பற்றி ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பை புலம்பெயர்ந்தோரிடையே காணப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ . விசுவாசிகளிடையே நடத்தினர். பேட்டி காணப்பட்டவர்களில் பலர் கேபியை விரும்பினர்.

    இதனடிப்படையில் கதிர்காமத்தம்பி அறிவழகனால் தலைமைத்தாங்கப்படும் எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு பிரிவு கே.பி.யுடன் சேர்த்துகொள்ள தீர்மானித்தது. இது நெடியவனுடனான பேச்சுவார்த்தையில் கே.பியின் கையை ஓங்கச் செய்தது. இதனால் மீளமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. இன் தலைமைச் செயலராக கே.பி. தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ள வழிவகுத்தது. இந்திய அதிகாரிகள் ஒரு சிரேஷ்ட எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு தொழிற்படுநர் இந்திய மண்ணிலிருந்து செயற்படுவதாக சந்தேகிக்க தொடங்கினார். சுருக்கு இருகத் தொடங்கியது. ஆனால் சுருக்கு இறுகியபோது விநாயகம், இந்தியாவைவிட்டு ஒரு தென்கிழக்கு ஆசிய நாட்டுக்கு போயிருந்தார். அவர் அங்கிருந்து ,தனது உறவினர் ஒருவரின் உதவியுடன் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி லண்டனுக்கு சென்றார். இது நடந்தது ஒக்டோபர் அல்லது நவம்பர் 2009 இல் ஆகும்.

    ஐரோப்பா

    பிரித்தானியாவில் சிறிதுகாலம் ஓய்விலிருந்த பின் விநாயகம் கண்டப் பெருநிலப்பரப்புக்கு சென்றார். இவர் ஒரு தாராளவாத ஐரோப்பிய நாடு ஒன்றில், போலி ஆளடையாளத்துடன் அரசியல் அடைக்கலம் கோரியதாகவும் பின்னர் சிறிது காலத்தின் பின் வேறு நாட்டுக்கு சென்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. விநாயகம், புலம்பெயர்ந்த முக்கியஸ்தர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு போய்க் கொண்டிருந்தார்.

    கே.பி. மலேஷியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் பல மாற்றங்கள் விரைந்து ஏற்பட்டன. இந்த நிகழ்வுடன் புலம்பெயர்ந்தோரிடையே காணப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. யினரிடையே நெடியவனின் ஆதிக்கம் அதிகரித்தது.

    முன்னர் கே.பி.யை ஆதரித்த விநாயகமும் மாறத் தொடங்கினார். ஆவர் நெடியவனுடன் சமாதானமாக தொடங்கி ‘உயரமான’ மனிதனுடன் ஒரு தந்திரோபாய கூட்டில் சேர்ந்து கொண்டார்.

    நெடியவனுக்கும் விநாயகத்துக்கும் இடையில் அதிகாரப்பிரிப்பு வரம்புகள் தெளிவான வரையறைகளை கொண்டதாக தெரிகிறது.

    விநாயகம் பல்வேறு புலனாயவ்வு தொழிற்படுநர்களையும் நெருக்கமான அலகொன்றில் இணைத்து அதன் முற்றுமுழுதான பொறுப்பையும் ஏற்றுள்ளார். புலிகளின் புலனாய்வு பிரிவில் நெடியவனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. புலனாய்வு பிரிவு ,தனி அமைப்பாக வெளிப்படையாக இயங்குவதில்லை. ஆனால் அதன் அங்கத்தவர்கள், கண்ணில்படாமல் பல்வேறு புலி அமைப்புகளில் வேலை செய்கின்றனர்.

    அதேபோல நெடிவன் எல்.ரீ.ரீ.ஈ. கிளைகள், முகப்பு நிறுவனங்கள் என்பவற்றிற்கு பொறுப்பாக உள்ளார். விநாயகம் இந்த அமைப்புகளின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. ஏதாவது ஒரு கிளை அல்லது முகப்பு நிறுவனம் ஒரு காரியத்தை செய்யவேண்டுமென விரும்பினால் அவர் நெடியவனின் தயவையே நாடவேண்டும்.

    மூன்று பேர்

    மூன்று பேர் விநாயகத்துக்கும் நெடிவயனுக்குமிடையில் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் அரவிந்தன் அல்லது இரும்பொறை. மற்ற இருவரும் நந்தகோபன், அன்புச்செல்வன் ஆவர். இரும்பொறை, எல்.ரீ.ரீ.ஈ. இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்த ஒரு முக்கிய தொழிற்படுநர் என கூறப்படுகிறது. இவர் 2008 இல் பின்பகுதியில் கொள்வனவுக்காக லாவோஸுக்கு அனுப்பப்ட்டார். 2009 இல் சண்டை முடிந்தபோது இரும்பொறை ஐரோப்பாவில் நிலைகொண்டார்.

    அன்புச்செல்வன், யுத்தத்த நிருந்த காலத்தில் நோர்வேக்கு அனுப்பப்பட்டார். தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே காணப்பட்ட இளைய தலைமுறையினால் மேற்கொள்ளப்பட்ட அநேகமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் தமிழ் வாலிபர் நிறுவனத்தின் (ரி.வை.ஓ.) பொறுப்பாளராக இவர் இருந்தார்.

    நந்தகோபன் மணிவண்ணன் அல்லது கஸ்ட்ரோவின் நெருங்கிய சகாவாக உள்ளார். இவர் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமகன் போல இராணுவத்திடம் சரணடைந்தார்.

    இவர் அரசாங்கத்துடன் வேலைசெய்யும் ஓர் அரசியல் கட்சிக்கு இலஞ்சம் கொடுத்து அகதி முகாமிலிருந்து வெளியேறினர். இந்த கட்சி நந்தகோபனை கொழும்புக்கு கொண்டுவந்தது. பின் பொய்யான பெயரில் கடவுச்சீட்டு பெற்றுக்கொடுத்து இவரை தாயலாந்துக்கு அனுப்பியது. கொடுக்கப்பட்ட இலஞ்சம் மில்லியன்கள் கணக்கில் இருந்திருக்கும் எனப்படுகிறது.

    இரும்பொறை, அன்புச்செல்வன், நந்தகோபன், ஆகிய மூவரும், நெடியவனுக்கும் விநாயகத்துக்கும் இடையில் இணைப்பு செய்கின்றனர். இவர்கள் இருவரையும் நெருக்கமாகச் செய்து ஒரு தந்திரோபாய கூட்டை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தனர்.

    நெடியவன்

    நெடியவனைப் பொறுத்தவரையில் எல்.ரீ.ரீ.ஈ. இன் வெளிநாட்டு அமைப்புகள் மீது தனது கட்டுப்பாட்டை தொடர்வதிலும் எல்.ரீ.ரீ.ஈ.க்கு உரித்தான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களை சேதமின்றி பேணுவதிலுமே அவரது அக்கறை உள்ளது. அவரது தொழிற்படுநருக்கு ‘சம்பளம்’ என்ற பெயரில் பெரும் பணம் கொடுக்கப்படுவதால், அவருக்கு தொடர்ச்சியான நிதிசேகரிப்பை உறுதி செய்யவேண்டியுள்ளது.

    நெடியவன் பணம் மீதான கட்டுப்பாட்டை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கம் கொண்ட வீண்பெருமை பேசும் நபர் என்பதை அவரது கடந்தகால செயல்கள் எடுத்துக்காட்டுகின்றன. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற கட்டுக்கதையை இவர் பரப்பிக்கொண்டிருந்தாலும் தலைவரையும் குடும்பத்தினரையும் ஹெலிக்கொப்டரை பயன்படுத்தி மீட்கும் முயற்சிக்கு தேவையான 3.5 மில்லியன் அமெரிக்க டொலரை கேபிக்கு கொடுக்க மறுத்தவரும் இவரே.

    தனது இலட்சியம் எனக் கூறிக்கொள்ளும் எதற்காகவும் ஆபத்துக்கு முகங்கொடுக்கத் தயாராக உள்ளவராக நெடியவன் காணப்படவில்லை. இவர் ஒரு வகையில் புலம்பெயர்ந்தோரிடையே உள்ள எல்.ரீ.ரீ.ஈ. சார்பு ஆட்களிடையே காணப்படும் ஆஷாடபூதிகளின் குறியீடாக உள்ளார்.

    எல்.ரீ.ரீ.ஈ. இன் இலட்சியத்தின் மீதான பற்று உறுதியானதாகவும் நேர்மையானதாகவும் உள்ளதென்ற வகையில், விநாயகம், நெடியவனிலிருந்து வேறுபடுகிறார். அவர் தன்செயற்பாட்டில் பற்றும் உறுதியும் உடையவராக தென்படுகிறார். இலங்கையிலிருந்து தப்பி வந்தப்பின் அவரது நடத்தையில ஒழுங்குமுறை, அர்ப்பணிப்பு என்பவற்றுக்கான சான்றுகள் தெரிகின்றன.

    விநாயகம்…………………….

    Reply
  • மாயா
    மாயா

    தொடர்ச்சி………………

    விநாயகம்

    விநாயகம், புலம்பெயர்ந்தோரிடையே உள்ள எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டுள்ளார். சிலரை நேரிலும் சந்திக்கின்றார். ‘எல்லாம் முடிந்து போகவில்லை, கெதியாய் ஏதோ நடக்கப்போகுது’ என்று சொல்லி அவர்களிடம் மீண்டும் உற்சாகத்தை உருவாக்க முனைகிறார்.

    சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால் இவர் தன்னை ‘கேணல்’ என அறிமுகம் செய்வதே. ஆனால் இவர் இயக்கத்தினால் ‘கேணல்’ அந்தஸ்து வழங்கப்பட்டவரா என்பதும் சந்தேகமாக உள்ளது.

    விநாயகம், ஐரோப்பிய பெருநிலப்பரப்பில் பல நாடுகளிடையே சுதந்திரமாக பயணம் செய்துவந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது ஊடகங்களின் கவனம் திரும்பியபோது விநாயகம் தனது பயணங்களை மட்டுப்படுத்திக்கொண்டார்.

    ஐரோப்பாவில் உள்ள புலிகள், விநாயகம் கனடாவுக்கு சென்றுவிட்டார் என கதை பரப்பி வருகின்றனர். ஆனால் இது உண்மையல்ல. சிலர், விநாயகம் தற்போது ஸ்கண்டிநேவிய நாடொன்றில் இருப்பதாக கூறிவரினும் அவர் ஐரோப்பாவில்தான் தொடர்ந்தும் இருக்கின்றார்.

    நீண்ட காலத்தில் நோக்கும்போது பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்ற கட்டுக்கதையால் இடம்பெயர்ந்தோரிடையே புலிகளை பலமாக நிலைநிறுத்த முடியாது. 12000 போராளிகள் இரகசியமான ஓர் இடத்தில் பயிற்றப்படுகின்றனர், விரைவில் கடல்வழி படையெடுப்பு நடக்கும் என்ற பொய்களிலும் தங்கியிருக்க முடியாது.

    வன்முறை

    புலிகளின் எச்சசொச்சங்களுக்கு புலம்பெயர்ந்தோரிடையே தம்மை நிலைநிறுத்திகொள்ள தேவையாக இருப்பது இலங்கையில் பாரிய வன்முறை சம்பவம் ஒன்றை அரங்கேற்றுவதே. இது நடந்தால், வெளிநாட்டில் உள்ள தமது ஆட்களுடன் வரிந்துக்கட்டிக் கொண்டு பெரும் நிதிசேகரிப்பு இயக்கத்தை தொடக்க முடியும். கரடியானாறு வெடிப்பு நடந்தபோது புலிகள் வட்டாரத்தின் சந்தோஷப்பரபரப்பைக் காண வேடிக்கையாக இருந்தது.

    இப்படியிருக்கும்போது விநாயகம் இலங்கையில் ஒரு ‘நிகழ்வை’ நடத்தமுடியும். பாதுகாப்பு அமைப்பின் தயார்நிலை என்பவற்றை பார்க்கும்போது எந்தவொரு பெரிய தாக்குதலும் எவ்வகையிலும் சாத்தியமற்றது.

    ஒரு அரசியல்வாதியின் கொலை அல்லது குண்டுவெடிப்பு போன்ற ஒப்பீட்டளவில் சிறிதான ஒரு நிகழ்ச்சி சாத்தியமாகலாம்.

    கருதுகோள் ரீதியாக, வெளிநாட்டு புலிகளால் அவர்கள் வசமுள்ள பணத்தின் வலுவால், இலங்கையில் உள்ள ஒருவருக்கு பணம் கொடுத்து ஒரு கைக்குண்டொன்றை வீசவைக்கவோ அல்லது குண்டொன்றை வெடிக்கவைக்க முடியும். நன்கறியப்பட்ட ஒருவர் சுட்டுக் கொல்லப்படலாம்.

    இவர்களின் பணபலத்துடன், வெளிநாட்டு புலிகள் வறுமைப்பட்ட முன்னாள் புலிபோராளியை அல்லது எல்லைப்படையை சேர்ந்த ஒருவரை இவ்வாறான வன்முறைக்கு பயன்படுத்தலாம். கருதுகோள் ரிதீயாக முன்னாள் படைவீரரை அல்லது ஊர்காவற் படையை சேர்ந்த ஒருவரை கூட பயன்படுத்துவது சாத்தியமே பாதாள உலக கோஷ்டியில் ஒருவரையும் பயன்படுத்தலாம்.

    எல்.ரீ.ரீ.ஈ.க்கு தேவையானது ஒரு கைக்குண்டு, ஒரு குண்டு அல்லது ஒரு துப்பாக்கி மட்டுமே.

    ஆற்றல்

    இப்படியான நிலைவரத்தில், விநாயகமே தனது சாதனை, அநுபவம் என்பவற்றின் காரணமாக கொழும்பிலே அல்லது இலங்கையின் வேறு பாகத்திலோ தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளக் கூடியவராவார்.

    விநாயகம் சாள்ஸுடன் சேர்ந்து தென்பகுதியில் பல வன்முறை செயல்களை திட்டமிட்டு செயற்படுத்திக் கொண்டிருந்தார் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். விநாயகம் தற்போதும், வன்செயலில் ஈடுப்படுத்துவதற்கு ஒருவரை அல்லது ஒரு சிலரை பெற்றுக்கொள்வதற்கான தொடர்புகளை கொண்டிருக்கலாம் என கருதுவது தர்க்க ரீதியானதே.

    நெடியவனுக்கும் விநாயகத்துக்கும் இடையிலான தந்திரோபாய கூட்டு ஒருவருக்கொருவர் தேவையானவர் என்ற அடிப்படையிலே உருவானது. வெளிநாட்டு புலி அமைப்புகளை, உற்சாகப்படுத்தவும், நிதிசேகரிப்பை அதிகரிக்கவும் நெடியவனுக்கும் விநாயகம் தேவை. அதைவிடவும் முக்கியமாக விநாயகத்தால் மட்டும்தான் வன்செயல்களை இலங்கையில் ஏற்பாடு செய்யமுடியும் என்பதை நெடியவன் அறிவார்.

    விநாயகத்தை பொறுத்தளவில், தனது புலனாய்வு பிரிவை இயக்குவதற்கு நெடியவனின் வசமுள்ள நிதிவளம் அவருக்கு தேவையாகும். அவருக்கு தான் எண்ணியுள்ள ‘செயற்றிட்டத்தை’ நடைமுறைக்கு கொண்டுவர நிதி தேவை.

    இதைவிட முக்கியமாக, தான் நெடியவனை புறம்பு காட்டினால் தன்னால் வினைத்திறனுடன் இயங்க முடியாது என்பதை விநாயகம் அறிவார். கேபியின் நன்னோக்க முயற்சிகளை நெடியவன் எவ்வாறு குழப்பினார் என்பது விநாயகத்துக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கிறது.

    இவைதான் கூடிய சிரேஷ்டரான விநாயகம், தனது கனிஸ்டரான நெடியவனின் வழியில் செல்லவும், தந்திரோபாய கூட்டில் சேரவும் வைத்த காரணங்களாகும்.

    நெடியவன் இப்போதைக்கு எல்.ரீ.ரீ.ஈ. இன் தலைமைப் பொறுப்பை விநாயகத்துக்கு கொடுப்பதில் திருப்தியோடு உள்ளார். விநாயகம் தற்போது எல்.ரீ.ரீ.ஈ. பின்னணியோடு உள்ளவர்களை அணுகுவதிலும், அவர்களை, தன்னால் உருவாக்கப்படும் எல்.ரீ.ரீ.ஈ. மத்திய குழுவில் சேர்க்கவும் அழைத்துவருகிறார். விநாயகத்திக் முயற்சிகள் எதிர்காலத்தில் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    சிவப்பு அறிவித்தல்

    கொழும்பு, விநாயகத்தின் ஆற்றலை குறைத்து மதிப்பிடுவதாக இல்லை. ஆகக் குறைந்த அளவில் பிரச்சினைக்குரியவராகவும் ஆகக் கூடியளவில் தொல்லை தருபவராகவும் இருப்பதற்கான வளங்களை எல்.ரீ.ரீ.ஈ. இன் புதிய தலைவர் விநாயகம் கொண்டுள்ளதாக பாதுகாப்பு உயர்பீடங்களில் உள்ளோர் கருதுகின்றனர்.

    இதனால்தான் ‘இன்ரபோல்’ சிவப்பு அறிவித்தலை விடுப்பதற்கான விரைவான ஏற்பாடுகள் நடந்தன. இதன்பின், விநாயகம் இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்து கைதுசெய்து இயலுமாயின் இலங்கைக்கு கொண்டுவரவும் மேற்கத்தைய நாடுகளின் சட்ட அமுலாக்கல் நிறுவனங்களில் ஆதரவை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும்.

    எல்.ரீ.ரீ.ஈ. இன் நிறுவுனர் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன், மே, 2009 இல் நந்திக்கடல் கடனீரேரியின் கரையில் கொல்லப்பட்டார். அவரின் பின் தலைமையை ஏற்ற செல்வராசா பத்மநாதன் அல்லது கேபி கைதுசெய்யப்பட்டு ஓகஸ்ட் 2009 இல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டார். இவரது புதிய எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் ஐரோப்பாவில் தோற்றம் பெற்றுள்ளார்.

    சேகரப்பிள்ளை விநாயகமூர்த்தி அல்லது ‘கேணல்’ விநாயகமூர்த்தியின் விதி என்னவாகும்?

    DBS Jeyaraj can be reached at இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

    (தமிழில். ந.கிருஷ்ணராசா)
    (சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.)- Thanks: Thenee

    Reply
  • kovai
    kovai

    மாணிக்கதாசன் ‘காணிவல்’ காலத்தில் எந்த இயக்கத்தொடர்பும் அற்றவர். களியாட்டத்தில் வாலிபர்கள், தங்களுக்கு இசைவான விடையங்களில், தமது குழுவினருடன் சூழ்ந்து நிற்பார்கள். மாணிக்கதாசன் மாட்டீன் ரோட்’ குழுவினருடன் நின்றதாக ஞாபகம். ஆனால் தலையாரியாக இருக்கவில்லை.
    சம்பவத்தின் கண்கண்ட சாட்சியாக நான் எதுவும் எழுதவில்லை.
    இது ஆரம்பித்தது, தண்ணியில்’ இருந்த சிலரால் மட்டுமே. இதில் அடி வாங்கியவர்கள் சிங்களம் பேசியதும், ஒடிச் சென்று இராணுவ வாகனம் ஒன்றில் ஏறியதும், நான் அங்கே கேள்விப் பட்ட விடையமே. இவ்வாறான ‘அடிபாடுகள்’, இதற்கு முதல்நாளும் வாலிபர்களிடையே நடைபெற்றது.
    மாணிக்கதாசன் தனது வரலாற்றை, கதாநாயகத்தனத்தை உயர்த்த மேற்கொண்ட ‘பரப்புரை’யாகவே இது எனக்குப் படுகிறது. மற்றும் அன்று மாணிக்கதாசன் ஒரு அரசியல் பிரக்ஞை அற்ற, ‘எடுபிடியாக’வே இருந்தார். சிறைக்குள்ளிருந்த காலந்தான் இவரை அரசியல் ஞானம் பெறவைத்தது. வெளிவந்ததும் புலிகளுடன் சேரமுயன்று, தனது ‘தெருக் கூட்டாளியின் (பஷ்தியாம்பிள்ளை புகழ் கறுப்பி) ‘உதவியால், புலியிடமிருந்து பிரிந்து போன குழுவில் இணைந்து கொண்டார். அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த ‘சாகசங்களில்’ பங்கேற்று, பின் உமா’வின் கடாட்சத்தைப் பெற்றுக் கொண்டார்.

    இந்தச் சிறு சம்பவம் பெரிதுபடுத்தப்பட்டது, சிங்கள பவுத்த பேரினவாத்தின் திட்டமிட்ட இனப்படுகொலையின் ஒரு அங்கமே. இதே காலகட்டத்தில் ‘சிறில்மத்தியு’வினால் “கொட்டியா’ என்ற நூல், சிங்களப்படைகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

    Reply
  • vanavil
    vanavil

    அந்தக் கலவரம் மாணிக்கதாசனால் உருவானது. நான் எங்கே சொன்னேன் அவர் அந்நேரம் அமைப்பில் இருந்தார் என்று? சம்பந்தப்பட்டவர்கள் சொன்னதை எழுதியுள்ளேன். மாணிக்தாசன் ; உயிரோடிருக்கும் போது அவர் முன்னால் வேறு இருவர் குத்தலாக சொன்னது. இங்கே மாணிக்கதாசனை ஹீரோ என சொல்ல வரவில்லை. செய்த முட்டாள்தனத்தை சொல்லியிருக்கிறேன் கோவை. ஒருவர் செய்த தவறை இன்னொருவர் மீது திணிக்க இங்கே கருத்து எழுதவில்லை.

    Reply
  • மாயா
    மாயா

    //இதே காலகட்டத்தில் ‘சிறில்மத்தியு’வினால் “கொட்டியா’ என்ற நூல், சிங்களப்படைகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. – kovai //

    ஐக்கிய தேசியக் கட்சியின் சிறில் மெத்தியு எழுதிய புத்தகம் சிங்களத்தில் எழுதப்பட்டு பொதுவாக விற்பனையானது. அது சிங்களப் படைகளுக்கு அறிமுகப்படுத்தவில்லை. இலங்கையின் அனைத்து புத்தக கடைகளிலும் விற்கப்பட்டது. இனவாதக் கருத்துகளை கக்கும் ஒரு புத்தகமாக அது இருந்தது. அதை நானும் வாங்கிப் படித்தேன். புத்தகத்தின் பெயர் “கவுத கொட்டியா?” (யார் புலி).

    “Mathew was the author of the book Sinhalese! Rise to Protect Buddhism, which urged Sinhalese to stand up for their rights and protect their values. He also issued a pamphlet * Who is the Tiger.* ”

    http://en.wikipedia.org/wiki/Cyril_Mathew

    யாழ் புத்தகசாலை அழிப்பில் காமினி திசானாயக்க குழுவினருடன் சென்று தீயிட்டவர்கள் ; கொழும்பு பேலியகொடை பகுதியைச் சேர்ந்த ஐதேகவின் (சிரில் மெத்யுவின்) சிங்கள காடையர்ளேயாகும்.

    Reply
  • kovai
    kovai

    வானவில்! நீங்கள் எழுதிய வரலாறின் (Vanavil on December 2, 2010 11:05 pm) முரண்பாடுகளை, சுட்டிக் காட்டவே, அன்றைய அரசியல் மனிதனாக, என் தெரிவை வெளிப்படுத்தினேன். ‘நிகழ்வில் சம்பந்தப்பட்டவர் சொல்கிறார்’ என மாயாவும், “மெயின் பங்கு” என வெற்றிச் செல்வனும் சொல்ல, தொடர்ந்து “அந்தக் கலவரம் மாணிக்கதாசனால் உருவானது” எனக் கண்கண்ட சாட்சியாய், நீங்கள் வரும் வல்லடி வழக்குக்கு என்னால் எதுவும் செய்ய்முடியாது. மாணிக்கம் தாசனை கீரோவாகவோ அல்லது வில்லனாகவோ ஆக்கி, “கலவரம்”என்ற சொற்சிலம்பத்தில் சிக்க வைக்க முனைவது, அரசியல் வெறுமையைத்தான் காட்டி நிற்கிறது.

    Reply
  • vanavil
    vanavil

    //மாணிக்கம் தாசனை கீரோவாகவோ அல்லது வில்லனாகவோ ஆக்கி; “கலவரம்”என்ற சொற்சிலம்பத்தில் சிக்க வைக்க முனைவது; அரசியல் வெறுமையைத்தான் காட்டி நிற்கிறது.//

    உண்மையை எழுதினால் ; நீங்கள் என்னவோ அரசியல் வெறுமை என்கிறீர்கள். அதாவது நீங்கள் கேள்விப்பட்டதை ஏற்றுக் கொள்ள வைக்க முனைகிறீர்கள். சம்பந்தப்பட்டவர்கள் ஒன்றாக இருந்து பேசியதை ; ஏற்றுக் கொண்டதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதுமல்லாமல் ; அதை அரசியல் வெறுமை எனச் சொல்கிறீர்கள்?

    // 1. சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் களியாட்ட விழாவில் சிங்களப் பொப் பாடகர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள்.
    கூட்டத்தில் இசையின் தாளலயத்திற்கு நானும் ஆடிக்கொண்டிருந்தேன்.

    2. அந்த நேரத்தில் ஒரு குழப்பம் நிகழ்ந்தது.சிங்களவர் தமிழ்ப் பெண்களுடன் சேட்டை விட்டதால் அடிபாடு நடந்தது உண்மை. அடிவாங்கியவர்கள் சிங்கள் இராணுவம் என்பது பின்புதான் தெரியவந்தது.

    3.இது ஆரம்பித்தது; தண்ணியில்’ இருந்த சிலரால் மட்டுமே. இதில் அடி வாங்கியவர்கள் சிங்களம் பேசியதும்; ஒடிச் சென்று இராணுவ வாகனம் ஒன்றில் ஏறியதும்; நான் அங்கே கேள்விப் பட்ட விடையமே. இவ்வாறான ‘அடிபாடுகள்’; இதற்கு முதல்நாளும் வாலிபர்களிடையே நடைபெற்றது. – கோவை //

    உங்களிடம் இருக்கும் பிரச்சனை ; சம்பவத்தின் உண்மையை விட மாணிக்கதாசனது பெயர் வந்து விடலாகாது எனும் அரசியல் தன்மையாக தெரிகிறது?

    நீங்கள் அங்கே இருந்திருக்கிறீர்கள் என்பதை ஏற்க முடிகிறது. ஆனால் அதைச் செய்தவர் யார் என தங்களால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை.

    சில கலங்களை பார்த்திருக்கிறேன். சிலர் தப்பி ஓடுவார்கள். என்ன நடக்கிறது என அறிய சிலர் அங்கேயே நிற்பார்கள்.
    இருந்தாலும் என்ன நடந்தது என்று கேட்டால் சம்பந்தப் பட்டவன் எனக்குத் தெரியாது என்பான். எங்கிருந்தோ சத்தம் கேட்டு ஓடி வந்தவன் சண்டை பிடிக்கும் சத்தம் கேட்டது. வரும் போது தாக்கி விட்டு சிலர் ஓடினார்கள் என்பார்கள். அடித்தவன் பக்கத்திலேயே நின்று வேடிக்கை பார்ப்பான்.

    புலத்தில் ; அகதி அந்தஸ்து கோர ஆரம்பத்தில் வந்த பலர் ; தான்தான் துரையப்பாவைச் சுட்டது என ஏகப்பட்டவர்கள் சொன்னார்களாம். கடைசியில் குழம்பிய ;போலீஸ் அப்படிச் சொன்னவர்களிடம் கேட்டார்களாம் “எத்தனை துரையப்பாக்கள் யாழ்பாணத்தில் இருந்தார்கள்? என்று.

    எனக்குத் தெரிய ; சம்பவங்களோடு சம்பந்தமே இல்லாத பலர் தம்மை சம்பந்தப்படுத்தி பேசுவதை பார்த்துள்ளேன். சம்பந்தப்பட்டவர்கள் முன் அதை வெளிப்படுத்தும் போது அவை பொய்யாவதும் உண்டு. அன்று யாழில் ஆர்மிக்காரருக்கு நாங்கள்தான் அடித்தோம் என்று சொல்லியிருப்பார்கள். அதுவே வேறொருவர் செய்ததாக வரும் போது வருத்தமாக இருக்கத்தான் செய்யும்? அதற்காக உண்மை பொய்யாகாது.

    Reply
  • vetrichelvan
    vetrichelvan

    இங்கு சில நபர்களைபற்றி கூறும்போது அவர்கள் சம்பந்தப்பட்ட பல விடயங்களையும் பதியவேண்டும். அதன்படி மாணிக்கம்தாசன் சம்பந்தப்பட்ட விடயங்கள் உண்மையனயைதான். 81 கலவரத்துக்கு மாணிக்கம்தாசன் போலீசாரை சுட்டதுதான் ஆரம்பம். அந்த காலகட்டத்துள் மாணிக்கம் பிளாட் இல் தான் இருந்தார்

    Reply
  • kovai
    kovai

    தனிமனிதச் சண்டைகள், உடனடியாக இனத்தையே நிர்மூலமாக்கும் அளவிற்கு போகும் என்பதும், அது உங்கள் மொழியில் ‘கலவரம்’ ஆகும் என்பதுமே அரசியல் வெறுமை என்றேன். ‘காகம் இருக்கப் பனம்பழம் வீழ்கிற’ கதைதான்.

    அவசர காலச் சட்டமும், ஊரடங்குச் சட்டமும் அமூல்படுத்தப் பட்ட நிலையில், இராணுவ பிரிகேடியரின் ஆட்சியில், யாழ்.போலிஷ் நிலையத்தின் அருகாமையில் இருந்த நூலகமும், பா.உ.வின் வீடும், ஈழநாடு பத்திரிகையும் தீக்கிரையாக்கப்பட, மாணிக்கதாசனின் இரண்டாவது தாக்குதலுக்குப் பதிலடியாக “பேலியகொடை காடையர்கள்” என்ற சிங்களப் படைப்பிரிவு, கிட்டத்தட்ட 200மைல் தூரத்திலிருந்து திடீரென வரவழைக்கப்பட்ட வரலாறு, நம்பகத் தன்மை உடையதாகவில்லை.

    சிங்களப் படையாளியிடமிருந்து பெற்றுக் கொண்ட, “கவுத கொட்டியா?” நூலைப் படிக்க, சிங்களம் கற்கப் போய் தோல்வியடைந்து, சிங்களம் தெரிந்த பேராசிரியரின் உதவி நாடியதும், நடந்து போன சம்பவங்கள்தான். கேள்விப்பட்ட சம்பவங்களை சொல்லுதல், அதனைச் சரித்திரமாக்கல் என்பதில் கவனம் செலுத்தச் செய்யவே எனது வரிகள். எதையும் குத்தி முறிக்கவல்ல என்பதை என் முந்தைய வரிகளிலும் ,நீங்கள் பார்க்கலாம்.

    Reply
  • vanavil
    vanavil

    ஆயுதங்கள் வருமென காத்திருந்த போராளிகள்………கிருஷ்ண லீலை

    1987ம் ஆண்டு ஆயுதங்கள் இல்லாமல் புளொட் போராளிகள் ஒரு குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டு விரக்தியாக இருந்தார்கள். இவர்களது விரக்தியை போக்க ஆயுதங்களை வாங்க புளொட் முயற்சி செய்தது.

    ஏடனிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ய முடியும் என லண்டன் கிருஷ்ணன் புளொட் தலைமைக்கு தெரிவித்தார். உமா தன்னிடமிருந்ததோடு வேறு இடங்களிலும் காசு தேடி கிருஷ்ணனுக்கு கொடுத்தார். பணத்தை வாங்கிய பின் , ஆயுதங்களை பார்த்து எடுக்க ஒருவரை அனுப்பச் சொல்லி ஒரு தகவலையும் கிருஷ்ணன் சொன்னார். இந்த கதை கசியத் தொடங்கியது, அதை பின்னர் புளொட்டில் உள்ளவர்கள் லாப நோக்கமாக இந்த கதை பரவவும் விட்டனர். இது விரக்தியோடு நின்ற போராளிழகளுக்கு புதுத் தெம்பையும், நம்பிக்கையையும் கொடுத்தது.

    ஏடனுக்கு போய் ஆயுதங்களை தேர்வு செய்து எடுப்பதற்காக தற்போது கனடாவில் வாழும் பீஎல்ஓ பவனை புளொட்டிலிருந்து தேர்வு செய்தார்கள். கிருஷ்ணன் தகவல் கொடுத்ததும் ஏடனுக்கு அனுப்ப தயாராக தமிழ்நாட்டிலிருந்து பவனை உமா டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.

    ஏடன் போவதற்கு தயாராகி டெல்லி வந்த பவன், ஒரு மாதமாக டெல்லியில் காத்திருந்தும், கிருஷ்ணனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பும் இல்லை. கிருஷ்ணனை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. கடைசியில் கிருஷ்ணனை தேடிப்பிடித்த போது, ஏடனில் ஆயுதம் வாங்க கிருஷ்ணன் கதைத்ததும், பணம் கொடுத்ததும் உண்மை. இந்த காரியத்தை ராஜீவ் சங்கர் கெடுத்து விட்டதார். அதனால் அந்த முகவர் சில கோடி ரூபாய்களை எடுத்துக் கொண்டு கிருஷ்ணனை ஏமாற்றி விட்டதாக கிருஷ்ணன் தெரிவித்தார்.

    ராஜீவ் சங்கருக்கு பீஎல்ஓவீல் நல்ல நெருக்கமான தொடர்பு இருந்தது. எனவே ராஜீவ் சங்கர் பெயர் வந்ததும், என்ன நடந்துள்ளது என தேடப் போக ஆயுத விற்பனை முகவர் லண்டனில் உள்ளவர் என தெரிய வந்தது. அந்த முகவர் வழி பீஎல்ஓவுக்கு ஆயுதங்கள் போவதுண்டு. இது குறித்த சில விபரங்கள் டில்லியில் இருந்த புளொட் காரியாலயத்துக்கு கிடைத்தன.

    டில்லியில் அப்போது இருந்த சித்தார்த்தரும், வெற்றியும் டெல்லியில் இருந்த பீஎல்ஓ தூதுவராலயத்தில் இருந்த காலித் அவர்களை சந்தித்து, இது விடயமாக தெரிவிக்க, அவர் அதை விசாரித்து சொல்வதாக சொன்னார்.

    அடுத்து சில நாட்களின் பின்னர் காலித் அவர்களை சந்திக்க போன போது, ஏடனில் ஆயுதம் வாங்க முற்பணமாக 1000 டொலர் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மிகுதி பணம் வரவில்லை. அந்த பணத்தை கொடுத்தால் ஆயுதம் அனுப்ப அவர்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார். பணம் கட்டினால் யாரும் தலை போட்டு அவற்றை நிறுத்த மாட்டார்கள் என்ற விபரத்தையும் காலித் அவர்கள் தெரிவித்தார். இப்படி அன்று, கிருஷ்ணன், ராஜீவ் சங்கர் மேல் பழியை போட்டு சுருட்டிய பணம் 1.5 முதல் 2 கோடி இந்திய ரூபாய்கள். இதற்கான பணத்தை மிக சிரமத்தோடு உமா தேடி கொடுத்தது நெருக்கமானவர்களுக்கு தெரியும். இருந்தும் பணத்தை கிருஷ்ணன் சுருட்டிக் கொண்டு, தான் அனைத்து பணத்தையும் கொடுத்த பின்னர் ராஜீவ் சங்கர் சொல் கேட்டு முகவர் ஏமாற்றி விட்டதாக கதை விட்டார்.

    பொடிகளோ, ஆயுதம் வரப் போகிறது என மகிழ்வாக இருந்தார்கள். இந்த நிலையில் உமா, வெற்றியிடம் பவானை திருப்பி அனுப்பவோ அல்லது யாருடனும் தொடர்பு கொள்ளவோ விட வேண்டாம் என தெரிவித்தார். காரணம் இது பொடிகளுக்கு தெரிய வந்தால் பெரும் குழப்பம் ஏற்படும். அதை சரிக்கட்ட முடியாமல் போகும் என சொல்லப்பட்டது. பவான் வெறுத்து டில்லியிலிருந்து திரும்பிச் செல்லப் போகும் போது, தன்னை பொடிகள் அடித்தாலும் அடிப்பார்கள் எனப் பயந்தார். பவான், ஏதோ தவறு செய்து விட்டார் என்று பழி தன் மேல் விழுந்து விடலாம் என்றும் பயந்தார்.

    2 மாதங்களுக்கு மேலாக இருந்த பவான், டில்லியில் இருக்கப் பிடிக்காமல், கடைசியில் வெறுத்து சென்னை திரும்பினார்.

    இதன் பின்னர் உமாவுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் விரிசல் தொடங்கியது. இருந்தாலும் தொடர்பில் இருக்க வேண்டிய நிலையால் தொடர்புகள் இருந்தது. இயக்கங்கள் , இந்தியாவை விட்டு இலங்கைக்கு போன பின் கிருஷ்ணன், மாணிக்தாசனுடன் நெருக்கமாகத் தொடங்கினார். அந்த நட்பை பலப்படுத்த மாணிக்கதாசனை 5 நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்துச் சென்று உபசரித்து வந்தார் கிருஷ்ணன்.

    இக் காலங்களில் உமாக்கும், தாசனுக்கும் இடையே ஒரு நிழல் யுத்தம் நடைபெற்று வந்தது. தாசனின் செயல்கள் உமாவுக்கோ, உமாவின் செயல்கள் தாசனுக்கோ பிடிக்காத நிலை தொடரத் தொடங்கியது. இக்காலத்தில் தாசனுக்கும் விடுதலை வேட்கை விட்டுப் போயிருந்துபோல இருந்தது.

    1989ல் கொழும்பில் வைத்து உமாவுக்கும், கிருஷ்ணனுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் உமா, கிருஷ்ணனை போடும்படி ஆச்சி ராஜனிடம் சொன்னார். அதை அறிந்த கிருஷ்ணன் அங்கும் இங்குமாக மாறி லண்டனுக்கு ஓடிவிட்டார்.

    உமா இறந்தபோது கிருஷ்ணன் சென்னை சவேரா ஹோட்டலில் தங்கியிருந்தார். உமாவின் இறப்பை அறிந்து, விஸ்கி உடைத்து பார்டி வைத்தார் கிருஷ்ணன். தற்போது இலங்கை அரசு சார்பாக புலனாய்வு பணிகளை செய்யும் முக்கியமானவராக செயல்பட்டு வருகிறார். முன்னர் மலேசிய பெண்ணொருவரை மணமுடித்திருந்த கிருஷ்ணன், அவரை தவிர்த்து விட்டு கேரள பெண்ணொருவரோடு வாழ்கிறார்.

    கிருஷ்ணன், ஈஎன்டீஎல்எப்புடன் தொடர்பிலும் இருந்தார். இந்திய ஒத்துழைப்போடு ஈஎன்டீஎல்எப் – கருணா இடையே பேச்சு வார்த்தை நடத்தும் போது கிருஷ்ணனும் கலந்து கொண்டுள்ளார். இங்கே கருணாவிடம் பணம் இருப்பதை உணர்ந்த கிருஷ்ணன், கருணா – ஈஎன்டீஎல்எப் உறவை பிரிக்க சதி வலையை பின்னினார். அதே போல பிள்ளையான் – கருணா பிரிவுக்கு வித்திட்டவரும் கிருஷ்ணன்தான். இதன் பின்னணியில் இலங்கை புலனாய்வு துறையினரோடு கிருஷ்ணன் செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவரே அனைத்து தமிழ் அமைப்புகளை அழைத்து சுவிசில் சந்திப்பொன்றை நடத்தியவர்.

    Reply
  • மகுடி
    மகுடி

    //இதன் பின்னணியில் இலங்கை புலனாய்வு துறையினரோடு கிருஷ்ணன் செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவரே அனைத்து தமிழ் அமைப்புகளை அழைத்து சுவிசில் சந்திப்பொன்றை நடத்தியவர்.//

    மகிந்தா லண்டன் வந்த போது கிருஷ்ணன் பங்கு என்ன? இந்த குழப்பத்துக்கு பின்னாலும் கிருஷ்ணன் இருந்திருப்பாரோ?

    Reply
  • vetrichelvan
    vetrichelvan

    வானவில் எழுதியது எல்லாம் உண்மையான நடந்த சம்பவங்கள்தான். வானவில், பல்லி தொடர்ந்து உண்மையான சம்பவங்களை எழுத வேண்டும்

    Reply
  • nanee
    nanee

    கிருஸ்ணன் பழகும்போது மிக எளிமையானவர். முதன் முதல் எனக்கு இயக்க தொடர்பு ஏற்பட்டதே கிருஸ்ணனால் தான். கார் பாக்கில் வேலை செய்துகொண்டிருந்தார். மிகவும் அமைதியான சுபாவம் படைத்தவர் உமா, பிரபாவுடன் நெருங்கிய தொடர்புடையவர். பலகாலமாக லண்டனில் இருந்தும் எங்கள் அனைவருடனும் மிக தோழமையுடன் பழகினார். டியூப்பில் தான் பல இடங்களுக்கும் செல்வோம். அந்த நேரத்தில் எனது ஒரு உறவினர் என்னை எச்சரித்தார் எதற்கும் முழுமையாக இவரை நம்ப வேண்டாம் பெண்கள் விடயத்திலும் இவர் அப்படி இப்படி என்று. எங்களுக்கு யார் கிருஸ்ணன்?இடையில் ஒரு நபர் மட்டுமே என எண்ணினோம்.

    பின்னர் இந்தியா வரும் போது என்னை எப்பவும் வந்து சந்தித்துவிட்டு போவார். எனக்கு கடைசிவரை இவர்களை பற்றி விளங்கவே இல்லை. கடைசியாக கனடாவில் சந்தித்தேன் அப்போதும் உமா கொல்லப்படவேண்டியவர் என்று சொன்னார் எனக்கும் அவர் சொல்வது சரி போல்தான் இருந்தது.
    சங்கர் ராஜி லண்டனில் கேரளப்பெண்ணை மணம் முடித்தவர். பின் இயக்கம் என்று ரோ வின் நெருங்கிய நம்பர் ஒன் ஆள் இவர்தான். பின் தமிழ் நாட்டிலும் ஒரு பெண்ணை வைத்திருந்தார். திரும்ப லண்டன் வந்து எனக்கு தெரிந்த ஒரு மணம் முடித்த பெண்ணுடன் தொடர்பாகி அவரையும் இந்தியா கூட்டிச்சென்று வைத்திருந்தார். ராஜியின் மரணவீட்டில் 3 மனைவிமார் அழுதுகொண்டிருக்க நாலாவதாக ஒரு பெண் ஒருவருக்கும் யாரென்று தெரியாது தமிழ்நாட்டில் இருந்து வந்து அழுதுவிட்டு உடன் விமானம் ஏறிவிட்டார். எப்படி இருக்கு எம்மவரின் போராட்டங்கள். பாவம் அப்பாவி சனங்களும் போராளிகளும்.

    Reply
  • vanavil
    vanavil

    சமாதான காலத்தில் புலிகளுக்குள் ஊடுருவியவர்களும், புலிகளால் பிடிபட்ட படையினரும் புலிகள் சரணடையும் போது முன்னால் வந்து வெள்ளைக் கொடிகளோடு சரணடைவது போல வந்துள்ளார்கள். இவர்களை நம்பி பல புலிகள் இவர்களுக்கு பின்னாலும், இவர்களுடன் படைகளை நோக்கியும் வந்துள்ளார்கள். கடைசியாக வந்த கடும் புலிகளை இனம் காட்டியவர்கள் இவர்களாக இருந்துள்ளார்கள்.

    கடைசி நேரத்துக்கு முன் மக்களோடு மக்களாக தப்பிய புலிகள், ஆரம்பத்தில் படைகள் இருந்த பகுதிக்குள் வந்து, மாற்று இயக்கங்களின் துணையோடு, பணம் கொடுத்து தப்பி விட்டார்கள். அதற்கு சில இராணுவத்தினரும் உதவியுள்ளனர். இங்கே தெரிந்தவர்கள், உறவினர்கள், பணம் ஆகியன காரணமாகியுள்ளன.

    முன்னரும் புலிகளால் பிடிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட அரச படைகளைச் சேர்ந்தோர் பின்னர் புலிகளது தொடர்போடு இருந்தார்கள். இவர்கள் கடைசி காலம் வரை புலிகளுக்கு, சிங்களப் பகுதிகளில் இருந்து கொண்டு உதவினார்கள். இவர்களுக்கு புலிகள், அதிக பணம் கொடுத்து பல வேலைகளை செய்தது. இதில் குண்டுகள் மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைப்பது, இடங்கள் பார்ப்பது, தாக்குதல்களுக்கு உதவுவது, இராணுவ அதிகாரிகளுக்கு அழகிகளை ஏற்பாடு செய்து வைப்பாட்டிகள் போல வாழ விட்டு, அவர்கள் மூலம் படைத் தகவல்களைப் பெறுவது ஆகியனவற்றை புலிகள் செய்து வந்துள்ளனர்.

    சரத் பொண்சேகாவின் தற்கொலைத் தாக்குதலுக்கு ஒரு பெண்ணை பயன்படுத்த உதவியவர்களும் இப்படியானவர்களேயாகும். இவை குறித்த தகவல்கள் சிலரால் வெளிவரத் தொடங்கியதும், திடீர் பணக்காரர்களாகும் இராணுவத்தினர் மேல், அரச புலனாய்வுத் துறையினர் தேடத் தொடங்கினர். அதன்போது புலிகளுக்கு உள்ள உறவின் நிமித்தம், இவர்கள் திடீர் பணக்காரர்களாகி இருப்பது தெரிய வந்தது. இவர்களது உதவிகளின் மூலமே இலங்கையின் சிங்களப் பகுதிகளில் அதிகமான வாகன குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன. இப்படி திடீர் பணக்காரர்களாகிய சிங்களவர்களை கைது செய்தபோது தொடர் தகவல்கள் அரசுக்கு கிடைத்தன.

    அது பின்னர் கொழும்பு தாக்குதல்களை மட்டுப்படுத்த உதவியது. இப்படி புலிகளுக்கு உதவிய சிங்களவர்களுக்கு சிங்களவனே செத்தாலும் பரவாயில்லை தனக்கு பணம் வந்தால் போதும் என்பது குறியானது.

    மக்களின் விடுதலையை விட தாங்கள் பணக்காரர்களாக வேண்டும் எனும் அவா அனைவர் மனதிலும் உருவானது. புலத்து புலிகள் மட்டுமல்ல, இலங்கையில் இருந்த புலி ஆதரவாளர்களும், உதவியர்களும், இதை நன்கு பயன்படுத்தி தம்மை வளர்த்துக் கொண்டார்கள்.

    புளொட்டும், தாங்கள் பணக் கஸ்டத்தில் இருப்பதாக சொல்லிக் கொண்டாலும், தனிப்பட்ட நபர்கள், தம் பலங்களைக் கொண்டு இலங்கையில் பண பறிப்பு வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இன்னும் அவை தொடர்கின்றன. போர் காலத்தில் புளொட் புத்தளம், கல்பிட்டி போன்ற பகுதிகளில் வீடுகளை வாங்கி வைத்துக் கொண்டு, கொழும்பிலிருந்து அனுராதபுரம், குருநாகல், வவுனியா போன்ற இடங்களுக்கு பொருட்களோடு செல்லும் லொறிகளை மறித்து, கடத்துவது முக்கியமான ஒரு தொழிலாக இருந்தது. இவர்கள் சாமான்களையும் விற்று, லொறியையும் மாற்றம் செய்து விற்று பணம் பெற்றார்கள். சாரதிகளையும் கொன்றார்கள் . இதில் ஆர்.ஆர். மற்றும் ஆச்சிராஜன் குழு முக்கியமாக ஈடுபட்டது. அதைத் தவிர ஆள் கடத்தல், கப்பம் பெறுவது ஆகியனவும் குறைவில்லாமல் நடந்தது. இன்னும் நடக்கின்றது. இதற்கு பாதை போட்டவர் மாணிக்கதாசன்.

    இராணுவத்தினரது நட்பை பயன்படுத்தி இப்படியான நிகழ்வுகளை, புளொட்டும், ஏனைய இயக்கங்களும் செய்து வந்துள்ளன. சிலர் இன்னும் செய்து வருகின்றனர். இப்படியான விடுதலை முதலாளிகள் அதிக சொத்துகளோடு வாழ்கிறார்கள். வியாபாரங்களில் உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் முதலீடு செய்து உள்ளார்கள்.

    இவர்களை நம்பி விடுதலை என்ற பெயரில், வாழ்வு இழந்த மக்கள், அப்பாவிகள் என்பதை விட, பாவிகள் என்றே சொல்லலாம். இவர்களுக்கு எதிராக போலீசிலோ அல்லது இராணுவத்தினரிடமோ புகார் செய்யவும் மக்கள் அச்சப்படுகிறார்கள். காரணம், இவர்கள் அவர்களோடு மிக நெருங்கிய உறவுகளை வைத்துள்ளார்கள். புகார் செய்வோரை விட இப்படியான மோசடியாளர்களை அவர்களும் நம்புகின்றனர்.

    போர் ஓய்ந்தாலும், மாபியா கும்பல்களின் கொட்டமும் அடக்கப்பட வேண்டும். இது குறித்த வவுனியா போலீஸ் அதிகாரியின் அறிவுறுத்தல் ஒரு நடவடிக்கைக்கு புள்ளியாகி உள்ளதாக நினைக்க முடிகிறது. இவர்கள் குறித்த தகவல்களை, அந்த மக்கள் மெளனம் காக்காது, தமக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

    Reply
  • vanavil
    vanavil

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், டீபீஎல்எப் எனும் பெயரில் தேர்தலில் நின்று தோற்றுப் போன நேரம். மாலைதீவு பிரச்சனையும் இக் காலங்களில்தான் நடந்திருந்தது.

    1989ல் கொழும்பில் வைத்து உமா – கிருஸ்ணன் ஆகியோர் பிரச்சனைப்பட்டனர். இந்த சண்டை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் வைத்தே நடந்தது. இங்கே ஆளாளுக்கு வசைபாடிக் கொண்ட போது, டெல்லி வந்தபோது கிருஸ்ணன் இயக்க பணத்தில் ஆடம்பரமாக தங்கிய விடயங்கள் தொடக்கம் காசுகளை கையாண்டது என அனைத்தும் வெளிவந்தது. இந்த சண்டைக்கு பின்னர் கோபத்தில் இருந்த உமா, கிருஸ்ணனை போடுமாறு ஆச்சி ராஜனிடம் சொன்னார்.

    மாணிக்கதாசனோடு இருந்த உறவை வைத்து கிருஸ்ணன், மாணிக்கதாசனிடம் உமாவை போடுமாறு சொல்லி விட்டு, லண்டன் வந்து விட்டார். இதனிடையே இந்திய றோவைச் சேர்ந்த சந்திரசேகரோடு தொடர்பு ஒன்றை கிருஸ்ணன் ஏற்படுத்திக் கொண்டார். அதை வைத்துக் கொண்டு கிருஸ்ணன், இந்தியா வரத் தொடங்கியிருந்தார். இக் காலத்தில்தான் உமா கொல்லப்பட்டார்.

    உமாவை கொன்றவர்கள், தமிழ்நாட்டுக்கு தப்பி வந்தபோது, கிருஸ்ணன் சென்னையில் தங்கியிருந்தார். இப்படி சென்னை வந்தவர்கள் ராயப்பேட்டை, பொன்னுசாமி ஹோட்டலுக்கு சாப்பிட போனபோது, உள்ளே இருந்து கிருஸ்ணன் சாப்பாடு கட்டிக் கொண்டு வெளியே வருவதை கண்டார்கள். இவன்தாண்டா புளொட் காசை அடித்தவன் என்று சொல்ல, கிருஸ்ணனை சுற்றி வளைத்து தாக்க புளொட் முற்பட, ஆட்டோ ஒன்றில் ஏறி கிருஸ்ணன் தப்பினார்.

    இதன் பின்னர் சென்னை போலீசில் தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக இந்த சம்பவம் குறித்து கிருஸ்ணன் தெரிவித்தார். ஆனால் கியு பிராஞ்ச் மூலம் இவர் தொடர்பு கொள்ளாததால் அது பெரிதாக எடுபடாமல் போனது.

    கிருஸ்ணனுக்கு சென்னை வர வேண்டிய தேவை இருந்தது. தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த புளொட்டால் ஏதாவது பாதிப்பு ஏற்படும் என உணர்ந்த கிருஸ்ணன், ஏற்கனவே தெரிந்த ஈஎன்டீஎல்லெப் ராஜனை சந்தித்து, ராஜனுடன் உறவொன்றை உருவாக்கிக் கொண்டார். அப்போது ராஜனிடம் இயக்கத்துக்கு தான் செய்த உதவிகளை பற்றி கிருஸ்ணன் சொன்னார். கிருஸ்ணன் மூலமாக அவரது பெயரில்தான் வெளிநாடுகளில் புளொட்டின் பணம் வைப்பீடு செய்யப்பட்டிருந்தது. கிருஸ்ணனின் பேச்சுக்கள் கழகத்தால் தானும், பாதிக்கப்பட்டதாகவே காட்ட முயற்சி செய்ய, ராஜனும் நம்பியிருக்கிறார்.

    ராஜனை வைத்து கிருஸ்ணனுக்கு எதிரான புளொட்டுக்கு ஏதாவது செய்யலாம் எனும் ஒரு சந்தேகமும் சென்னைக்கு வந்த புளொட்டுக்கு இருந்தது.

    இக் காலத்தில் புலிகளில் இருந்து தப்பி வெளியேறிய கருணாவும் குடும்பத்தினரும் சென்னைக்கு வந்து ஈஎன்டீஎலெப் ராஜனிடம்தான் அடைக்கலம் புகுந்திருந்தனர். கருணாவை ரகசிய இடமொன்றில் வைத்து ராஜன் பராமரித்து வந்தார்.

    இந்த நேரத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. ராஜனை, ஜெயலலிதா தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து ஒரு வருடம் சிறையில் அடைத்தார். இப்படி அடைக்கப்பட்டுள்ளவர் வெளியே வர முடியாது. ஆனால் இலங்கைக்கு போக விரும்பினால் அனுப்புவார்கள். மீண்டும் தமிழ்நாட்டுக்குள் வர முடியாது. இந்த நேரத்தில் கிருஸ்ணன் ராஜனை வெளியில் வக்கீல்களை வைத்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டும், ராஜனின் பொடிகளுக்கு பணம் கொடுத்தும் உதவத் தொடங்கினார். ராஜனின் பொடிகளுக்கும் கிருஸ்ணன் தமது தலைவரை வெளியில் எடுக்க முயல்கிறார் என்ற நிலையில் கிருஸ்ணன் மேல் பிரியம் ஏற்பட்டது.

    இந்த நேரத்தில்தான் கிருஸ்ணனுக்கு, ராஜன், கருணாவை மறைத்து வைத்து பாதுகாப்பது தெரிந்தது. கிருஸ்ணன், ராஜனின் பொடிகளுடன் கதைத்து கருணாவை சந்தித்தார். அதேநேரம் ராஜன் விடுவிக்கப்பட்டு இனி தமிழ்நாட்டுக்குள் வரக்கூடாது எனும் ஒப்புதலோடு நாடு கடத்தப்பட்டார். இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட ராஜன் பெங்களுருக்கு உடனே திரும்பினார்.

    பெங்களுருக்கு திரும்பி வந்த ராஜன், கருணாவோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு இரு தரப்பும் இணைந்து வேலை செய்ய முடிவெடுத்தனர். இந்நேரம் கருணாவின் தளபதியாக இருந்த பிள்ளையான் தலைமையில் கருணாவின் பொடிகள் கிழக்கில் இருந்தார்கள். இந்த உறவு இலங்கை அரசுக்கு எதிரான கூட்டாகும் என அவதானித்த கிருஸ்ணன், இலங்கை அரசுக்கு இதைத் தெரியப்படுத்திய போது, கருணாவை ராஜனிடமிருந்து பிரிக்க இலங்கை அரசு சொல்லியிருக்கலாம்? அல்லது கிருஸ்ணன் இந்தக் கருத்தை இலங்கை அரசிடம் சொல்லியிருக்கலாம்? எப்படியோ கிருஸ்ணன் கைக்கு பெரும் தொகையான பணம் இலங்கை அரசிடமிருந்து கொடுக்கப்பட்டது. இதனடிப்படையில், கருணா – ராஜன் உறவு முறிந்தது. கருணாவுக்கும், இலங்கை அரசு பணம் கொடுத்தது.

    கருணா இலங்கை அரசுடன் இணைந்து வேலை செய்யத் தொடங்கியதும், கருணாவை விட பலமாகவும், புத்திசாலியாகவும் பிள்ளையான் இருப்பதை இலங்கை அரசு உணர்ந்தது. இவர்களை பிரிக்கும் சதியை கிருஸ்ணன் பின்னத் தொடங்கினார். அதனால் கருணா – பிள்ளையான் குழு என அவர்களுக்குள் பிரிவு உருவாகி சமர்களும் நடந்தது. இதுவே இவர்களது விரிசலுக்கு ஆரம்பம். இலங்கை அரசு கருணா – பிள்ளையான் இருவரையும் பகைக்க வழி செய்தாலும், இருவரையும் தன்னோடு வைத்துக் கொண்டது. இந்த நகர்வுகளுக்கு அடிப்படை நகர்வுகளே கிருஸ்ணனின் பிரேய்ன்தான். கருணாவை லண்டன் அழைத்து வந்ததும் கிருஸ்ணன்தான்.

    Reply
  • kovai
    kovai

    வானவில், நிலா!
    //..இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட ராஜன் பெங்களுருக்கு உடனே திரும்பினார். ..//
    “தமிழ்நாட்டுக்குள் வரக்கூடாது எனும் ஒப்புதலோடு” மாநிலம் கடத்தப்படல் நடக்காமல் நாடு கடத்தப்படுதல் ஏன் நடந்தது?
    ஒரு இயக்கத்தலைவர் எவ்வாறு உடனே இலங்கையை விட்டு திரும்பலாம்?

    நிலா ரவுடி ராஜனுக்கு வரலாற்றை எழுத, வானவில் போட்டுடைப்பது, உண்மைகள் எவ்வாறேனும் வெளிவரும் என்பதையே காட்டுகிறது.
    ஆனந்தசங்கரியின் அடியாளாக தமிழீழ வரலாற்றில் அடியெடுத்து வைத்து, இலங்கை, இந்திய அரச உதவியுடன் வரலாற்றின் கதாநாயக நிலைக்கு உயர்த்தப்படும் ராஜனின் ‘நடைபயணம்’ தொடங்கி விட்டது.மீண்டும் தனிநபர்களை சுற்றி வரலாறு வனைவதை, இனியாவது அறிந்து திருந்தக் கூடாதா?

    ‘கிருஷ்ண லீலை’ தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்பத்துடன் தொடங்கியது. இனியும் தொடரும்….

    Reply
  • vanavil
    vanavil

    //“தமிழ்நாட்டுக்குள் வரக்கூடாது எனும் ஒப்புதலோடு” மாநிலம் கடத்தப்படல் நடக்காமல் நாடு கடத்தப்படுதல் ஏன் நடந்தது?
    ஒரு இயக்கத்தலைவர் எவ்வாறு உடனே இலங்கையை விட்டு திரும்பலாம்? – கொவை //

    கைதாகி தமிழ்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜன் நாட்டை விட்டு வெளியேற விரும்பினால் , நாட்டை விட்டு வெளியேறலாம். அதாவது நாடு கடத்தல் என்ற பெயரில்….. அதன் பின்னர் அவரால் தமிழ் நாட்டுக்கு வர முடியாது. இதற்கு பின்னணியில் சில செட்டப்புகளை கிருஸ்ணன் செய்திருக்கலாம். காரணம் கிருஸ்ணன் இந்திய – இலங்கை உளவுத் துறைகளோடு நெருக்கமான நட்பை முன்னரும் , தற்போதும் பேணி வருபவர்.

    இப்படி நாட்டை விட்டு, அதாவது தமிழ் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர், தமிழ் நாட்டுக்குள் மட்டுமே வர முடியாது. ஏனைய மாநிலங்களுக்குள் வரலாம். எனவே பெங்களுருக்கு உடனே திரும்பி வந்த ராஜன், அங்கேயே தனது இருப்பை பலப்படுத்திக் கொண்டார். இதற்கு இந்திய இராணுவத்தோடு திரீ ஸ்டார் எனும் அமைப்பாக இறுக்கமாக இருந்ததும், இந்தியாவோடு இருந்த உறவும் உதவியிருக்கலாம். இவை அனைத்தும் அப்போதைய செய்திகளில் முக்கியமாக இடம் பிடித்தவகையாகும்.

    விடுதலையின் அழிவு, தனி மனித வழிபாடுகளினாலேதான் தொடங்கியது. அதை சிலர் தொடர்வது பட்டும் திருந்தவில்லை என்பதையே காட்டி நிற்கிறது. ஒருவரோடு இருக்கும் போது அவரை தூக்கிப் பிடிப்பதும், அவரை விட்டு வெளியேறி இன்னொருவரைத் தூக்கிப் பிடிப்பதும், கோவையின் ஆதங்கம் போல் மாறுமா என்பது தெரியவில்லை?

    கிருஸ்ணனின் தேவை இலங்கை – இந்திய உளவுத் துறைக்கு மிக அத்தியாவசிய தேவையாக உள்ளது. அதற்கும் ஒரு முக்கிய காரணம் உண்டு. ஆரம்ப காலம் தொட்டு இயக்கங்களுடானான உறவும், இலங்கை போராட்டம் சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க அல்லது செய்திகளை பெற முடிந்த ஒருவராக கிருஸ்ணன் இருப்பது உதவியாக இருக்கிறது. எனவே இலங்கை புலனாய்வுத் துறையோடு இவர் மிக நெருங்கிய உறவைக் கொண்டு , வெளிநாட்டு விடயங்களில் செயல்படுபவராக இருக்கிறார்.

    வெளிநாடுகளில் நாடு கடந்த தமிழீழம் போன்ற அரசியல் மாற்றங்களை திசை மாற்ற, சுவிசில் அனைத்து தமிழ் கட்சிகளை ஒருங்கிணைத்து நடத்திய மாநாட்டின் முக்கிய பிரமுகராக இவரே இருந்தார். இந்த மாநாடு குறித்து சிறீலங்கா அரசு எந்தவொரு எதிர்ப்பையோ அல்லது கருத்தையோ சொல்லாமல் மெளனம் காத்தது. இதற்கான மறைமுக உதவிகளையே சிறீலங்கா அரசு செய்தது.

    Reply
  • vanavil
    vanavil

    தமிழினப் போராட்டத்தையே காட்டிக் கொடுத்த கருணா இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தங்கியது தமிழ்நாட்டிலா ?………

    டக்ளஸைப் பற்றியும் விளாவாரியாக விவரிக்கும் ரோபேட் ஓ ப்ளேக், கருணாவைப் பற்றிய முக்கிய தகவலைச் சொன்னதுதான் இந்த தகவலில் ஹைலைட் ! ?தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 2004-ல் பிரிந்த கருணா, 4,000 பேருடன் வெளியில் வந்தார். இதனால், புலிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், கருணாவைப் பாதுகாப்பாக இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு அனுப்பிவைத்தார் அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா. பிறகு, தமிழ்நாட்டில் இருந்து 2006 ஜூலையில்தான் கருணா இலங்கைக்குத் திரும்பினார். இலங்கையில் இல்லாத காலகட்டத்திலும், கருணா வெளிநாட்டில் இருந்தபடியே தன் ஆயுதக் குழுவை இயக்கிக்கொண்டு இருந்தார்!? என்று அமெரிக்கத் தூதரே சொல்லி இருக்கிறார்.

    இதுபற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் பிரச்னையைக் கிளப்பினார்கள். ஆனால், அந்த விவகாரம் பெரிதாக எழுந்துவிடாமல் அமுக்கப்பட்டது. இப்போது அமெரிக்க தூதர் ஒருவரே அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

    கருணா, தமிழகத்துக்கு வந்ததாகக் குறிப்பிடப்படும் 2004-ம் ஆண்டில் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடந்துகொண்டு இருந்தது. அப்போது, இங்கு பரந்தன் ராஜன் என்பவரின் தலைமையிலான ?ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி? எனப்படும் ஈ.என்.டி.எல்.எஃப்-ம், கருணாவின் ?தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்? எனப்படும் டி.எம்.வி.பி-யும் இணைந்து ?தமீழீழ ஐக்கிய விடுதலை முன்னணி? எனும் கூட்டு முன்னணியை உருவாக்கினார்கள். இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு, அமைதித் தீர்வுக்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருந்தபோது, தமிழகத்தில் இந்த சேர்க்கை மிகத் தீவிரமாகச் செயல்பட்டது. தமிழகத்தில் நிலவிய புலி ஆதரவை உடைக்கும்படியாக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல காரியங்கள் நடத்தப்பட்டன.

    இங்கு நடக்கும் ஈழத் தமிழர் தொடர்பான நிகழ்ச்சிகளில், இந்தக் குழுவினர் கலந்துகொண்டு ?கருணா வெளியேறியது நியாயமே? என்று விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும், வெளியீடு களையும் விநியோகம் செய்வதில் தீவிரம் காட்டினர். சென்னை அண்ணா சாலை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கருணாவைப் பற்றிய பிரசுரத்தை இக்குழுவினர் விநியோகிக்க முயன்றபோது, பெரியார் தி.க. அமைப்பினர் அதை எதிர்த்ததால், பிரச்னை ஏற்பட்டது. கடைசியில் கருணா ஆதரவாளர்கள் அங்கு இருந்து விரட்டப்பட்டனர். ம.தி.மு.க. ஊர்வலம் ஒன்றிலும் இதேபோலப் பிரசாரம் நடத்த முயன்றபோது கருணா ஆதரவாளர்களுக்கும், ம.தி.மு.க-வினருக்கும் மோதல் ஏற்பட்டது.

    மாவீரர் நாளில் புலிப் போராளிகளின் தலைவர் பிரபாகரன் நிகழ்த்தும் உரையைப்போலவே, கருணாவும் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் உரையாற்றுவதைப் போன்ற ஒரு வீடியோ தயாரிக்கப்பட்டது. ?தமிழகத்தில் 150 வீடியோ கேசட்டுகள் தயாரிக்கப்பட்டு, 30 ஆயிரம் படிகள் எடுக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள அகதி முகாம்களில் இவற்றை விநியோகிக்கவும் செய்தனர். பிரபாகரனை ஹிட்லராகச் சித்தரித்து போஸ்டர்கள் அடிக்கப்பட்டு, அகதி முகாம் உள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டன. கருணா ஆதரவாளர்களின் இந்தச் செயல்பாடுகளை அறிந்த தமிழீழ ஆதரவாளர்கள் கோபமும் ஆவேசமும் அடைந்தனர். கருணா ஆதரவாளர்களுக்கும் அவர்களுக்கும் பல இடங்களில் மோதலும் ஏற்பட்டது. இதனால் சட்டம் ? ஒழுங்கு பிரச்னை ஏற்படும் ஆபத்து உண்டானது!? என இலங்கை ஆய்வாளர் ஒருவரே அப்போது எழுதினார்.

    கருணா குழுவின் இந்த எதிர்ச் செயல்பாடுகளால் புலிகளின் தலைமை கடும் கோபமடைந்தது. ?எதிரி?களின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளில்இறங்கியது.

    இதற்கிடையில், தமிழகத்தில் சேர்ந்து இயங்கிய கருணா, பரந்தன் ராஜன் குழுவினர் இங்கு இருந்தபடியே இலங்கையிலும் நடவடிக்கையை விரிவுபடுத்தினார்கள். இதற்காக, தமிழகத்தில் 18 ஆண்டுகள் தங்கி இருந்த பரந்தன் ராஜன் குழுவின் முக்கிய ஆளான ரங்கப்பா என்பவர் இலங்கைக்குச் சென்றார். அங்கு போய் சிறிது காலத்திலேயே கொழும்பு புறநகர்ப் பகுதியில் அவர் கொல்லப்பட்டார். ராஜன் குழுவின் முக்கிய மூளையாக செயல்பட்ட மனோ மாஸ்டர் என்பவரும் தமிழ்நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். திடீரென அவரும் கடத்தப்பட்டார். கருணாதான் அவரைக் கடத்தியதாக மனோவின் தாயார் யாழ்ப்பாணம் மனித உரிமை கவுன்சிலில் முறையிட்டார். அவர் விஷயத்தில் இன்று வரை சரியான தகவலே இல்லை.

    இலங்கையில் இப்படி கருணா ஆதரவாளர்களுக்கு எதிரான ?நடவடிக்கைகள்? தொடர்ந்த நிலையில், தமிழகத்தில் 2004 டிசம்பர் 5-ம் தேதி பரந்தன் ராஜன் உள்பட அவரது குழுவினர் ஒன்பது பேர் திடீரெனக் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டனர். ?அங்கு அவர்களுக்கு சகல வசதிகளும் செய்து தரப்பட்டன. குடும்பத்தினருடன் பல மணி நேரம் உரையாட அனுமதிக்கப்பட்டது. வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவை அவர்கள் சாப்பிட்டனர். டெல்லி தரப்பில் இருந்து அவர்களுக்கு நல்ல கவனிப்பு கிடைத்தது. பதிலுக்கு அவர்கள், ?விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போராட 3,500 போராளிகள் தயார், என ஆதரவு கேட்டனர் என்று இலங்கை பத்திரிகைகளில் வெளிப்படையாகவே எழுதினார்கள்.

    சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள், மீண்டும் இந்தியாவுக்குள் வர மாட்டோம் என்ற உத்தரவாதத்தின் பேரில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போன மச்சான் திரும்பிவந்த கதையாக, சில மாதங்களில் கருணாவின் ஆதரவாளர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வந்தனர். ஈழத்தில் படுகொலை கள் அதிகரிக்க அதிகரிக்க, தமிழகத்தில் புலிகளுக்கான ஆதரவு அதிகரித்துக்கொண்டேபோனது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து இயங்க முடியாமல் கருணா ஆதரவாளர்கள் தவித்தனர். அந்த நேரத்தில், பரந்தன் ராஜன் பெங்களூருவில் ?இந்திரா சர்வதேச அகடமி? என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அநாதைக் குழந்தைகள் காப்பகத்தை உள்ளடக்கிய இந்த நிறுவனத்துக்கு, டெல்லியில் இருந்து ஆசியும், ஆதரவும், உதவிகளும் பெருமளவில் வழங்கப்பட்டன என்பதை அந்தக் குழுவினரே பகிரங்கமாகச் சொல்கிறார்கள்.

    இப்படியான சூழலில், தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி முடிந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இதன் பிறகு, ?2006 ஜூலைவாக்கில் கருணா மீண்டும் இலங்கைக்குச் சென்றார்? என்கிறது விக்கிலீக்ஸ் தகவல்.

    ?விடுதலைப் புலிகளுக்கு எதிராக இங்கு கருணா ஆதரவாளர்கள் வெளிப் படையாகவே இயங்கினார்கள்? என்று சொல்லும் இலங்கை ஆய்வாளர் ஒருவர், சமாதான ஒப்பந்தத்தை புலிகள் மீறியதாக நார்வே அமைதிக் குழுவுக்கு கோடம்பாக்கம் முகவரியில் இருந்து மனோ மாஸ்டர் புகார் அனுப்பியதாகக் குறிப்பிடுகிறார்.

    ?சென்னையைப் பொறுத்தவரை கே.கே.நகர், கோடம் பாக்கம் பகுதிகளிலும், அகதி முகாம்களில் சேலத்தை மையமாகவைத்தும் கருணா ஆதரவாளர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். இதைத் தவிர, கருணா குழுவுக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு நீலகிரி மாவட்டத்தில் 90 கோடி மதிப்புள்ள ஒரு எஸ்டேட் இருக்கிறது. தேடப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ள அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் சிறிது காலம் தலைமறைவாக இருக்க வேண்டுமானால், நீலகிரி எஸ்டேட்தான் அவர்களின் முக்கிய மறைவிடம். ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில், ?எதிரி?களின் கண்ணிலும் படாமல் அந்த எஸ்டேட்டில் பல ஆண்டுகள் பாதுகாப்பாகத் தங்குவதற்கான ?ஏற்பாடுகள்? பலமாக வழங்கப்பட்டு இருந்தன. இதில்தான் கருணா தங்கி இருந்திருக்க வேண்டும்? என்கிறார்கள் உளவுப் பிரிவு அதிகாரிகள்.

    தமிழினப் போராட்டத்தையே காட்டிக் கொடுத்த கருணா இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தங்கியது தமிழ்நாட்டிலா ? என்ற அதிர்ச்சியில் இருந்து மீளாத தமிழ் உணர்வாளர்களுக்கு, இன்னும் என்னென்ன அதிர்ச்சிகளைத் தரக் காத்திருக்கிறதோ விக்கிலீக்ஸ் !

    -admin

    Reply
  • பல்லி
    பல்லி

    //?சென்னையைப் பொறுத்தவரை கே.கே.நகர், கோடம் பாக்கம் பகுதிகளிலும், அகதி முகாம்களில் சேலத்தை மையமாகவைத்தும் கருணா ஆதரவாளர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள்.// இது செய்தியா அல்லது சந்தேகமா??

    // இதைத் தவிர, கருணா குழுவுக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு நீலகிரி மாவட்டத்தில் 90 கோடி மதிப்புள்ள ஒரு எஸ்டேட் இருக்கிறது.//
    இவர் தமிழகத்தை சேந்தவரா அல்லது வடக்கை சேந்தவரா இல்லவிட்டால் கிழக்குத்தானா??

    // தேடப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ள அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் சிறிது காலம் தலைமறைவாக இருக்க வேண்டுமானால், நீலகிரி எஸ்டேட்தான் அவர்களின் முக்கிய மறைவிடம். ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில், ?எதிரி?களின் கண்ணிலும் படாமல் அந்த எஸ்டேட்டில் பல ஆண்டுகள் பாதுகாப்பாகத் தங்குவதற்கான ?ஏற்பாடுகள்? பலமாக வழங்கப்பட்டு இருந்தன.// ஆக உளவு பிரிவுக்கே சந்தேகம்தானா??

    //தமிழினப் போராட்டத்தையே காட்டிக் கொடுத்த கருணா இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தங்கியது தமிழ்நாட்டிலா ? //
    பிரபாகரனையும் புலியின் செயல்பாட்டையும் காட்டி கொடுத்தால் அது தமிழின காட்டி கொடுப்பா?? அப்படியாயின் புலிதான் தமிழ் ;தமிழ்தான் புலி என்பது சரிதானா??

    // என்ற அதிர்ச்சியில் இருந்து மீளாத தமிழ் உணர்வாளர்களுக்கு, இன்னும் என்னென்ன அதிர்ச்சிகளைத் தரக் காத்திருக்கிறதோ//
    கருனா ராஜனை சந்திக்க வந்தது உன்மை; அதுவும் கருனாவின் அண்ணன் புலியை சமாளிக்க முடியாத கட்டம் வரும்போது ராஜனிடம் சென்று விடு என சொன்னாராம்: அதனால் கருனாவின் கை புலியிடம் தோற்று போகும் நிலையில் கருனா ராஜனின் தொடர்பை ஏற்படுத்தி அவர் ராஜனிடம் போகும் பொறுப்பை ராமராஜன் ஏற்று செயல்பட்டார், ஆனால் இறுதியில் ராமராஜன் வழமைபோல் யாவையும் சேர்த்து குழப்ப கருனா நேரடியாக ராஜனிடம் போய்விட்டார்; அங்குதான் லண்டன் கிருஸ்னனுக்கு கருனாவை ராஜன் அறிமுகம் செய்தார்; ஆனால் அறிமுகம் செய்த அன்றே ராஜனுக்கு தெரியாமல் கிருஸ்னன் கருனாவுக்கு தனது தொலைபேசி எண்ணை ஒரு சிறு பேப்பரில் எழுதி ராஜனுக்கு தெரியாமல் கருனாவுக்கு கை கொடுப்பது போல் கொடுத்துவிட்டு போய் உள்ளார், இதை எதிர்பாராத கருனா அதை ராஜனிடம் சொல்லிவிட்டார்; அதனால் ஆத்திரம் கொண்ட ராஜன் கிருஸ்னனை தனது பாணியில் ஓடு நாயே என திரத்தி விட்ட கதையை மூலகதையாக கொண்டு மிக பெரிய சரித்திரம் ஒன்றை பின்னோட்டமாக தத்துள்ளது தெரிகிறது, புலியை அழிப்பதில் அக்கறை கொண்ட இந்திய உளவுபடைக்கு கருனாவின் வெளியேற்றம் மகிழ்ச்சியைதான் கொடுத்தது என்பதை இங்கு கவனிப்பது தவறு, நான் சொல்லிய கிருஸ்னன்; ராஜன் கருனா மூவரும் முள்ளிவாய்க்காலில் சிக்காதவர்கள் ஆகையால் அவர்களை கேட்டு உன்மை அறியலாம்;

    Reply
  • ram
    ram

    சில விடயங்களை நாம் முதலியே தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதாவது இந்த போராட்டத்தில் யார்யாரெல்லாம் மக்கள் பக்கமாக சார்ந்திருந்து போராட்டத்தை விசுவாசமாக முன்னெடுத்தார்கள். யார்யாரெல்லாம் மக்கள் விரோதிகளாக செயற்பட்டார்கள் என்பதை முதலிலேயே தெளிவுபடுத்திக் கொள்வது அவசியமானது. இல்லாவிட்டால்> ஹீரோவுக்கும்> வில்லனுக்கும் வித்தியாசம் தெரியாமல் இங்கிலீசு படம் பார்ப்பது போலாகிவிடும் எங்களது வாதங்கள்! என்னைப் பொறுத்தவரையிலும் ஐயர்> சந்ததியார்> கேசவன் போன்றோர் உண்மையாக மக்கள் நலனில் அக்கறையுள்ள போராளிகளாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டார்கள். தமது தனிப்பட்ட வாழ்விலும் அப்பழுக்கற்றவர்களாகவே நடந்து கொண்டார்கள். தேவையானபோது தமது உயிரையும் கூட சந்ததியார்> கேசவன் போன்றோர் வழங்கத் தயங்கவில்லை. ராஜன்> வாமர்> மாணிக்கம்தாசன் போன்றோர்கள் மக்கள் விரோதிகளாவே தம்மை எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டார்கள். இவர்கள் தமது தனிப்பட்ட வாழ்விலும்> அரசியலிலும் முழுக்க முழுக்க அடியாட்களாகவே – வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு சக்திகளுக்கு – செயற்பட்டார்கள். சுயமான அரசியலை கொண்டிராத இவர்கள் அனைத்து மக்கள் விரோத செயற்பாடுகளிலும் தயவு தாட்சண்யம் இன்றி செயற்பட்டார்கள். இந்த இரண்டு தரப்பினரையும் ஒரே தளத்தில் வைத்து பேசுவதே சம்பந்தப்பட்டவர்களது அரசியல் அறியாமையை பறைசாற்றப் போதுமானதாகும். இந்த விதத்தில் நிலாவுடைய வரலாறானது முழுக்க முழுக்க ராஜனுக்கு நட்பெயர் உருவாக்கும் முயற்சியாகவே படுகிறது. இந்த விடயங்களில் ஐயரது கருத்துக்களே நம்பகரமானவையாக கொள்ளப்பட வேண்டியவையாகும். இந்தவிதத்தில் நிலா> அவர் கூறிக்கொள்ளும் நோக்கமான உண்மையை கண்டறிதல்> போராட்டத்தை சரியாக முன்னெடுப்பது போன்றவற்றிற்கு எதிராகவே செயற்படுகிறார். இதனை நிலா கவனத்தில் கொள்ளவும்.

    வெற்றிச்செல்வன்> நீங்கள் டெல்லியில் நீண்ட காலமாக கழகத்தின் முக்கியமான பணிகளை மேற்கொண்டிருக்கிறீர்கள். இந்த முக்கியமான பணிகளில்> இந்திய உளவு நிறுவனமான றோ அதிகாரிகளுடன் தொடர்புகளைப் பேணுவதும்> முக்கியமான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதும் ஒன்றுதானே!. அத்தோடு உமாவை கொலை செய்யும் முடிவையும் நீங்கள் அடங்கிய குழுவே மேற்கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. அப்படியானால்> உமாவை கொலை செய்யும் முடிவை மேற்கொண்டதில் றோ வினது பாத்திரம் என்ன என்பதை விளக்குவீர்களா? இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீங்கள் பணம் பட்டுவாடா செய்ததை நான் அறிவேன். ஆகவே உண்மையை வெளிப்படையாக முன்வையுங்கள்.

    பல்லி! எனக்கொரு உண்மை தெரிந்தாகனும்! நீங்கள் தீப்பொறி அமைப்பு பற்றி குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும்படி நான் கேட்டு ஒரு வாரமாகிறது. என்ன சத்தத்தையே காணோம்? நீங்கள் தீப்பொறி அமைப்பைச் சேர்ந்த இரண்டு நபர்களது பெயர்களைக் குறிப்பிட்டு – நேசன்> பாண்டி – அவர்கள் மீது> இவர்கள் இசைப்பிரியாக்களை உருவாக்கியவர்கள்> என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தீர்கள். இந்த குற்றச்சாட்டுகளின் பாரதூரமான தன்மை உங்களுக்கு தெரியுமா? இந்த குற்றச்சாட்டு உண்மையானால்> சம்பந்தப்பட்டவர்கள் செய்திருப்பது போர்க்கால குற்றங்களாகும். இவை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவையாகும். அல்லாமல்> யாராவது சம்பந்தப்பட்டவர்கள் மீது அவதூறாக இவற்றை குறிப்பிட்டிருந்தால்> அந்த நபர்கள் இதற்குமேல் பொது அரங்கில் அரசியல் செய்வதற்கே இலாயக்கற்றவர்கள் என்று அர்த்தப்படும். இது பற்றி நீங்கள் விரைவில் தெளிவு படுத்துவது நல்லது. பல ஆண்டுகள் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த> தியாகியாகிப்போன போராளிகளை எடுத்த எடுப்பில் யாரும் இழிவு செய்துவிட்டு போவது அனுமதிக்கப்பட முடியாது அல்லவா? இன்னமும் ஒரு வாரம் அவகாசம் தருகிறேன். இல்லையேல்> நீங்கள் வெறும் கேள்விச் செவியன்தான் என்பதை நான் நிரூபித்தாக வேண்டியிருக்கும்.

    Reply
  • kovai
    kovai

    எழுபதின் பிற்பகுதியில் புலிகளின் பிரசுரம் ஒன்றை வினியோகிக்கும்படி, பரந்தன் ராஜனிடம் கொடுத்த போது, அவர் தன் பெயரை இட்டு, மிரட்டல் வாசகங்களை எழுதியதற்காக புலிகளால் எச்சரித்து (ரவைகளின் தட்டுப்பாட்டினால்) விடப்பட்டவர். அந்த மன்னிப்பளிப்புதான் அவர்களின் வீழ்ச்சிக்கு காரணம் என்பதை, பல்லி சொல்லி அறிய வேண்டியதாயிற்று. கடந்த முப்பது ஆண்டுகளாக யார் ஆதரவில் இந்தியாவில் ‘தனிக் குடித்தனம்’ நடத்துகிறார் இந்த ‘ரவுடி ராஜன்’?

    இந்திய இலங்கை தயவுதான் என்பது இப்போது வெளிப்படை. இவர்கள் எடுபிடிகளாக வாழ்வைத் தொடங்கி,இன்றும் அதே வாழ்வுதான். தமிழர்களுக்காய் நடைபயிலப் போகிறார்களாம், இது நல்ல நகைச்சுவையாக யாருக்கும் படவில்லயா?

    Reply
  • பல்லி
    பல்லி

    // நீங்கள் வெறும் கேள்விச் செவியன்தான் என்பதை நான் நிரூபித்தாக வேண்டியிருக்கும்.//
    அதை செய்யுங்கள் முதலில்: அப்புறமாய் பேர்வைக்கலாம் பிள்ளைக்கு;

    //! என்னைப் பொறுத்தவரையிலும் ஐயர்> சந்ததியார்> கேசவன் போன்றோர் உண்மையாக மக்கள் நலனில் அக்கறையுள்ள போராளிகளாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.//
    அப்படியா சந்ததிக்கும் சரோசினிக்கும் உள்ள உறவுகூட அப்படிதானோ?? சரோசினியும் கழகத்தில் செயற்குழு உறுப்பினர், இவர் எந்த வகையில் தெரிவு செய்யபட்டார் என்பது தெரியுமா?? சந்ததி எந்த கொலைக்கும் பொறுப்பு இல்லையா??

    //தேவையானபோது தமது உயிரையும் கூட சந்ததியார்> கேசவன் போன்றோர் வழங்கத் தயங்கவில்லை.//
    ஏதோ கடன் கொடுத்த மாதிரி சொல்லுறியள்; யானும் கேசவனும் ஒன்னாகவே திரிந்தவர்கள், ஆனால் யாண் இன்று கனடாவில் கேசவன் உயிர்தியாகம் அப்படியானால் யாணின் அறிவு கேசவனுக்கு இல்லையா; பண்ணி வந்து பயிர்களை அழிப்பது ஒரு வகை; பண்ணிகள் அழிக்கும் இடத்தில் வில்லங்கத்துக்கு பயிர் செய்வதும் ஒருவகை; இதில் கேசவன் இரண்டாவது வகை; அதேபோல் சந்ததி தானும் தன் ச;;;; என இருத்தவரை பொறிவைத்து தீ சொல்லி நாஜமறுத்து போட்டு இப்ப தியாகமோ;

    //தீப்பொறி அமைப்பு பற்றி குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும்படி நான் கேட்டு ஒரு வாரமாகிறது.//
    பல்லி தீப்பொறி மீது குற்றம் சுமத்தி வருடம் தாண்டிவிட்டது ஒருவர்(தீப்பொறி) வந்து விளக்கம் தரவில்லை; உங்கள் ஒருவார தவனைகளை கடன்வாங்கி புத்தகம் எழுதும் சான்றோரிடம் காட்டவும் பல்லியிடம் வேண்டாம்; அதுசரி நீங்கள் யார்?? தீப்பொறியின் பொறியா? அல்லது தீயா??

    // இந்த குற்றச்சாட்டுகளின் பாரதூரமான தன்மை உங்களுக்கு தெரியுமா?//
    தெரியாது உங்களிடம் வகுப்புக்கு வரட்டா?? என்ன இது சின்னபிள்ளைதனமான கேள்வி;

    // சம்பந்தப்பட்டவர்கள் செய்திருப்பது போர்க்கால குற்றங்களாகும். இவை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவையாகும்.//
    அது போரின்போது நடந்திருந்தால்; இது கொழுப்பெடுத்து நடந்த விடயம் அதனால் இது ஓநாய்களின் வேட்டை என்பதே சரி,

    //அல்லாமல்> யாராவது சம்பந்தப்பட்டவர்கள் மீது அவதூறாக இவற்றை குறிப்பிட்டிருந்தால்> அந்த நபர்கள் இதற்குமேல் பொது அரங்கில் அரசியல் செய்வதற்கே இலாயக்கற்றவர்கள் என்று அர்த்தப்படும்.//
    அரைபாவாடை தேடி திரிபவர்களிடம் அரசியலா எதிர்பாக்கிறியள்;

    // இது பற்றி நீங்கள் விரைவில் தெளிவு படுத்துவது நல்லது.//
    சரி உங்கள் ஆசையை ஏன் கெடுப்பான் இருவரையும் ஒரு பொது இடத்துக்கு வர சொல்லுங்கள் நானும் அந்த இசைபிரியாவுடன் வருகிறேன் இது போதுமா அல்லது இசைபிரியா போல் வீடியோ பார்க்க ஆசையா??

    //பல ஆண்டுகள் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த> தியாகியாகிப்போன போராளிகளை எடுத்த எடுப்பில் யாரும் இழிவு செய்துவிட்டு போவது அனுமதிக்கப்பட முடியாது அல்லவா? //
    மீண்டும் மீண்டும் போராளிகள் என்னும் வார்த்தையை இந்த கயவர்களுக்கு சொல்லி அந்த சொல்லின் தன்மையை இழிவுசெய்ய வேண்டாம் ராம்;
    //இன்னமும் ஒரு வாரம் அவகாசம் தருகிறேன். //நான் உங்களுக்கு இன்னும் சில ஆண்டுகள் அவகாசம் தருகிறேன்
    இந்த இருவர் முகங்களையும் தமிழருக்கு காட்ட அவர்கள் வாழ்விடம் காட்டவும்; அவர்கள் தியாகம் அவர்கள்
    குடும்பத்துக்கும் தெரியவேண்டும் அல்லவா??

    Reply
  • பல்லி
    பல்லி

    //அந்த மன்னிப்பளிப்புதான் அவர்களின் வீழ்ச்சிக்கு காரணம் என்பதை, பல்லி சொல்லி அறிய வேண்டியதாயிற்று. கடந்த முப்பது ஆண்டுகளாக யார் ஆதரவில் இந்தியாவில் ‘தனிக் குடித்தனம்’ நடத்துகிறார் இந்த ‘ரவுடி ராஜன்’?//
    இதில் எங்கே பல்லி வந்தேன்; இப்படி சம்பந்த சம்பந்தமில்லாமல் கதைத்துதானே தலை தலையில் கொத்தி செத்திச்சா அல்லது கோடாலியால் பிடரியில் அடித்து போச்சுதா என பட்டிமன்றம் நடக்குதாம், ரவுடியாக இருந்தாலும் தனி குடிதனம் செய்கிறார், ஆனால் அப்பாவிகளாய் இருந்து கொண்டு கட்டாயத்துக்கு கூட்டு குடும்பம் நடத்தி யாருக்கு யார் என தெரியாமல் கோவை எப்படி இது உங்களால் மட்டும் முடியுது; ஜயரிடம் வகுப்புக்கு போமாபோல் இருக்கு உங்கள் எழுத்தல்ல எடுப்பு;

    Reply
  • BC
    BC

    //பிரபாகரனையும் புலியின் செயல்பாட்டையும் காட்டி கொடுத்தால் அது தமிழின காட்டி கொடுப்பா??//
    பல்லியின் கேள்வி தான் என்னுடையதும். புளட் கடந்து வந்த தடங்கள் என்று அதிர்வு.கொம்மில் கருணாவை பற்றி வந்ததை அப்படியே போட்டிருக்கு!

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    ஒரே இடத்தில் இருந்து வந்த இவர்களே முரண்பாடான செய்திகளை தருகிறார்கள் இப்பவும் திருந்தவில்லைப்போல் தெரிகிறது இந்த கிருஸ்ணன் பற்றி முன்பு பத்திரிகைகளில் செய்தி வரும் கிருஸ்ணன் இன்று நாடு திரும்பினார் என்று ஏதோ வெளிநாட்டு அமைச்சர் வந்து திரும்பியது போல் மொத்தத்தில் இவர்கள் இப்பவும் இதனை நிற்பாட்டுவதாக தெரியவில்லை.

    Reply
  • vanavil
    vanavil

    மேலே தரப்பட்ட தகவலோடு இன்னொரு பகுதியும் இருந்தது. அதை தேசம் வேறொரு இடத்தில் போட்டுள்ளதால் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

    ஆரம்பத்தில் தரப்பட்ட தகவல்களை ஒத்த கருத்துகளோடு மேலதிக கருத்துகள் இருந்தமையால் அதிர்வு செய்தியை இணைத்தேன். விக்கிலீக்சால் அம்பலமாகியதாக வந்த அதிர்வு செய்தியை அதன் உண்மைகளை கருத்தாளர்கள் பதியவே விட்டேன். சில தகவல்கள் இப்போதைக்கே வந்துள்ளன. தவறுகளை சரி செய்வோம்…………. இணைந்திருங்கள். நன்றி.

    வீக்கிலீக்சின் கருணா – கோட்டாபய உறவு ……..

    http://athirvu.com/phpnews/images/22122010-1.jpg

    Reply