இலங்கைத் தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பு நீக்கம் ஏற்படுத்தி உள்ள அதிர்வலைகள்! : வி அருட்செல்வன்

SL_Flag”இலங்கையின் தேசியக்கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும் என்றும் இதன்படி உத்தியோகபூர்வ அரச வைபவங்களில் இனிமேல் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது” என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது, ஸ்ரீலங்கா மாதா என ஆரம்பிக்கும் தேசிய கீதத்தின் சிங்கள பதிப்பு வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு கிழக்கில் தமிழ் பதிப்பு பயன்படுத்தப்படுகிறது. டிசம்பர் 08ல் நடைபெற்ற அமைச்சரவையின் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் தேசிய கீதத்திலிருந்து தமிழ் பதிப்பை நீக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பு நீக்கம் தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள கருத்துக்கள்:

இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. தேசிய கீதத்தைப் பாடவேண்டிய விதிமுறைகள் பற்றிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்தபோது, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டது. கலந்தாலோசிக்கப்பட்டது.

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் கனடா போன்ற சில நாடுகளில், இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றமை ஜனாதிபதிக்கு எடுத்துக்காட்டப்பட்டது. அமைச்சர்களான ராஜித்த சேனாரத்னவும் வாசுதேவ நாணாயக்காரவும், தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்கும்படி சட்டம் கொண்டுவருவது சாத்தியப்படாது என்று கருத்துக் கூறினர்.  சில முஸ்லிம் அமைச்சர்களும் இந்தக் கருத்தையே கொண்டிருந்தனர்.

இந்தக் கருத்துக்களையெல்லாம் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கும் திட்டத்தை நிறைவேற்றாது ஒத்திவைத்துள்ளார். சில ஊடகங்களில் வெளியான தகவலைப் போல, சிங்கள மொழியில் மட்டும் என்ற திட்டம் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
-டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் (ஈபிடிபி).

இறந்தகாலத்தில் செய்த தவறை திருத்துவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானமே தேசிய கீதத்தை சிங்களத்தில் மாத்திரம் பாட வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானம். உலகில் எந்த நாடும் தனது தேசிய கீதத்தை மொழிபெயர்த்து பாடுவதில்லை.

இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்ட போதிலும் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுகிறது. தேசிய கீதம் என்பது சகல இனங்களை பிரதிநித்துவப்படுத்துகிறது என்பதால், அதனை ஒரே மொழியில் பாட வேண்டும் என்ற தீர்மானத்தை அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 1978 ஆம் ஆண்டில் தேசிய கீதத்தை மொழிபெயர்த்து, அதனை பாடப்புத்தகங்களில் கூட அச்சிட்டமை கேலிக்குரியது.
-விமல் வீரவங்ச, அமைச்சர் (ஜேவிபி)

ஒரு நாட்டின் தேசிய கீதம் அந்நாட்டின் பெரும்பான்மை மொழியில் இருக்கவேண்டும். உலகில் இவ்வாறான நடவடிக்கைகளே பின்பற்றப்படுகின்றன. இதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், யுத்தம் முடிந்த நிலையில் முக்கியத்துவம் வழங்குவதற்கு எத்தனையோ பிரச்சினைகள் நம் முன்னிருக்கையில் தேசிய கீதம் தொடர்பில் மொழிப் பிரச்சினையை தற்போது தோற்றுவிப்பது இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும்.

அத்தோடு, சர்வதேச ரீதியில் எமக்கு எதிரான நாடுகளுக்கு மெல்லுவதற்கு வாய்க்கு அவல் கிடைத்தது போல் அமையும். தேசிய கீதத்தையே தமிழில் தடைவிதிக்கும் இலங்கை அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கப்போகின்றதென புலி சார்பானவர்களின் பிரசாரத்திற்கு உந்துசக்தியாக அமைந்துவிடும்.
– பத்தரமுல்லே சீலரத்ன தேரர், தலைவர் ஜனசெத பெரமுன 

அரசியல் சாசனத்தின் உறுப்புரிமை 7, அட்டவணை 3ல் தேசிய கீதம் தமிழில் பாடப்படுதல் தொடர்பாகவும், தமிழில் பாடல் வரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே அரசியல் சாசனத்தில் உள்ள விடயங்களை மீறும் செயற்பாடானது அப்பட்டமான இனவாத நடவடிக்கையாகும். 1956 ஆண்டு கொண்டு வரப்பட்ட சிங்களம் மாத்திரம் என்ற சட்டத்தினை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளனர். அதன் பின்பு தான் 1988 ஆம் ஆண்டு தமிழும் அரச கரும மொழியாக்கப்பட்டது.

இவ்வாறிருக்கையில் அரசாங்கம் இந்த அமைச்சரவை முடிவை மீளப் பெற்றுக் கொள்ளாமல் பிடிவாதமாக இருப்பார்களானால் தமிழ் மக்கள் வேறு வழியில்லாமல் தேசிய கீதத்தினை பகிஸ்கரிக்க தள்ளப்படலாம்.
– சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

இலங்கையில் தமிழ் மக்களும், சிங்களவர்களும் வசிப்பதால் அந்த நாட்டு தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இதுவரை பாடப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை இலங்கை அதிபர் ராஜபக்சே மாற்றி, இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும் தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து விட்டதாகவும் அதற்கான தீர்மானம் அமைச்சரவையிலும் நிறைவேற்றப்படிருப்பதாகவும் ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

அந்த செய்தி உண்மையானால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புண்பட்டிருக்கின்ற ஈழத்தமிழர்களின் உள்ளத்தை மேலும் புண்படுத்தக் கூடியது. எனவே இந்த செயலை கண்டிக்கிறேன்.
– கலைஞர் கருணாநிதி, தமிழக முதலமைச்சர்.

தேசிய கீதம்

ஸ்ரீ லங்கா தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

Mother Lanka we salute Thee!
Plenteous in prosperity, Thou,
Beauteous in grace and love,
Laden with grain and luscious fruit,
And fragrant flowers of radiant hue,
Giver of life and all good things,
Our land of joy and victory,
Receive our gratefull praise sublime,
Lanka! we worship Thee.
Thou gavest us Knowledge and Truth,
Thou art our strength and inward faith,
Our light divine and sentient being,
Breath of life and liberation.
Grant us, bondage free, inspiration.
Inspire us for ever.
In wisdom and strength renewed,
Ill-will, hatred, strife all ended,
In love enfolded, a mighty nation
Marching onward, all as one,
Lead us, Mother, to fullest freedom.

Show More
Leave a Reply to நந்தா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

50 Comments

  • Nathan
    Nathan

    இப்போ இலங்கை தேசியகீதத்தை சிங்களத்தில் மட்டும் தான் பாடவேண்டுமாம். இதற்கு என்ன சொல்லப்போறிங்கள்? அட நீங்கள் உடனே புலியால தான் என்பியல். இனிவரும் காலங்களில் எல்லோரும் சிங்களத்தில் தான் படிக்க வேண்டுமென்றும் பிறகு வீட்டிலும் சிங்களம் தான் கதைக்க வேண்டும் என்றும் சொல்லுவாங்கள். ஆனா அப்பவும் உங்களுக்கு புலிகள் தான் காரணம்.
    சிங்களவனே உங்களை இரண்டாந்தர பிரஜையாக்கி இப்ப தேசிய கீதத்தை விளங்காத மொழியில் பாட நிர்பந்திக்கும்போது இங்கு சிலர் ஆகா இதெல்லோ அரசாங்கம் என்பதை கேட்டால் சிரிப்புத்தான் வருது.

    Reply
  • மாயா
    மாயா

    அனைத்து புத்திஜீவிகளையும் ; பேச முடிந்த பலமான தமிழ் தலைவர்களையும் ; அனைத்து இயக்கங்களையும் அழித்து தான் மட்டுமே தமிழரின் ஏக பிரதிநிதியென்று கொடிப் பிடித்து ; கடைசில் நந்திக் கடலோரத்தில் வெள்ளைக் கொடியோடு தமிழரின் எதிர் காலத்தை மகந்தா காலடியில் ஒப்படைத்த பெருமைக்குரியவர் தமிழரின் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களேயாகும்.

    சிறீலங்காவின் தேசியக் கீதம் எந்த மொழியில் பாடப்பட்டாலும் புலிகள் வேதனைப்படத் தேவையில்லை. அது புலிகளின் தமிழீழ தேசிய கீதம் அல்லவே. தமிழீழ தேசிய கீதம் மாவீரர் தினத்தில் ஒலித்தால் போதுமே? அது தமிழரின் தேசிய கீதம் என சொல்லப்பட்டதால் சிறீலங்காவின் தேசிய கீதம் குறித்த கவலை தேவையற்றது. அவர்கள் எந்த மொழியிலாவது இசைக்கட்டும். அது சிங்களமோ ; பாலியோ; இந்தியோ………….

    Reply
  • BC
    BC

    உலகத்தில் பெரும்பாலான நாடுகளில் பெரும்பான்மையினரின் ஒரு மொழியிலேயே தேசியகீதம் உள்ளது.
    //சிங்களத்தில் தான் படிக்க வேண்டுமென்றும் பிறகு வீட்டிலும் சிங்களம் தான் கதைக்க வேண்டும் என்றும் சொல்லுவாங்கள்//
    30 வருடங்களுக்கு முன்பு பாவிக்கபட்ட அதே தந்திரம்.

    Reply
  • thenupiriyan
    thenupiriyan

    //இறந்தகாலத்தில் செய்த தவறை திருத்துவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானமே தேசிய கீதத்தை சிங்களத்தில் மாத்திரம் பாட வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானம். உலகில் எந்த நாடும் தனது தேசிய கீதத்தை மொழிபெயர்த்து பாடுவதில்லை//
    -விமல் வீரவங்ச அமைச்சர் (ஜேவிபி)

    இறந்த காலத்தில் அரசாங்கம் பல தவறுகளைச் செய்துள்ளது. அவை எல்லாவற்றையும் திருத்துமா?

    // தேசிய கீதம் என்பது சகல இனங்களை பிரதிநித்துவப்படுத்துகிறது என்பதால் அதனை ஒரே மொழியில் பாட வேண்டும் என்ற தீர்மானத்தை அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்// -விமல் வீரவங்ச அமைச்சர் (ஜேவிபி)

    நல்ல விடயம். ஒரு முன்மாதிரியாக தமிழ் மொழியில் மட்டும் பாட வேண்டும் என்ற தீர்மானத்தை எடுங்கள். அனைத்து இனங்களையும் ஏற்றுக்கொள்ளும்படி கோரிக்கை விடுங்கள்.

    Reply
  • விளங்காமுடி
    விளங்காமுடி

    நாங்கள் அறிவியல் மேதை மகிந்தவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவர்கள். பத்திரிகையில் சொல்லப்பட்ட, இங்கே தற்செயலாக விடுபட்ட, சுவையான செய்தி இதுதான்.
    …President Rajapaksa told ministers that in no other country was the national anthem used in more than one language. He cited an instance where one time Prime Minister, the late Sirimavo Bandaranaike, had walked out of a function in the north where the national anthem was played in Tamil….

    “எந்தவொரு நாட்டிலும், ஒன்றிற்குமதிகமான மொழிகளில்,தேசிய கீதம் உபயோகிக்கப்படுவதில்லை’ என ஜனாதிபதி ராஜபக்ஸ அமைச்சர்களுக்கு கூறினார். ஒரு தடவை வடக்கின் நிகழ்வொன்றில், தேசியகீதம் தமிழில் இசைக்கப்பட்ட போது, மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்க வெளிநடப்பு செய்திருந்ததை குறிப்பட்டார்.-http://sundaytimes.lk/101212/News/nws_01.html

    Reply
  • thenupiriyan
    thenupiriyan

    //உலகத்தில் பெரும்பாலான நாடுகளில் பெரும்பான்மையினரின் ஒரு மொழியிலேயே தேசியகீதம் உள்ளது/
    இது தவறு. இந்தியாவில் பெரும்பான்மையினரின் மொழி இந்தி. ஆனால் தேசிய கீதம் வங்காள மொழியிலேயே பாடப்படுகின்றது.

    //30 வருடங்களுக்கு முன்பு பாவிக்கப்பட்ட அதே தந்திரம்//
    என்ன செய்வது? சிங்கள அரசாங்கமும் 55 வருடங்களுக்கு முன்னர் கையாண்ட அதே நடவடிக்கையை (1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம்) இப்போதும் மேற்கொள்கின்றதே. அன்று தந்தை டீ.ஏ. ராஜபக்ஸ இன்று தனையன் மகிந்த ராஜபக்ஸ.

    Reply
  • Nathan
    Nathan

    30 வருடத்துக்கு முன்னர் சொன்னது தான் இப்ப நடக்குது. அது விளங்காம இன்னும் சில பேர் இருக்கினம்.

    இப்ப தழிழ் மொழிமூல கீதத்திற்கு தடையில்லை என்று செய்தி. தோழர் செல்லுரார் அமச்சரவையில் கதைச்சவையாம் ஆனா முடிவில்லையாம். வீரவன்ச இது ஒரு ஜோககாம். அப்ப பிரிட்டிஸ் எம்பசிக்கு முன்னால உண்ணா (??) விரதமிருந்தது என்ன சீரியசெ?

    Reply
  • London Boy
    London Boy

    இவ்வளவு நாளும் தேசிய கீதம் தமிழிலையும் பாடப்பட்டு வந்திருக்கு என்ற விசயமே எனக்கு இப்பதான் தெரியும். இருக்கிற விசயத்தை காப்பாற்ற முடியாம இருக்கிறதையும் கெடுத்த கதையாத் தான் போயிருக்கு நம்மட போராட்டங்கள்.

    இந்த முடிவு அரசியல் சாசனத்திற்கு முரண் என்று சொல்கிறார் சுரேஸ். கையிலையே கம்மாரிசு இருக்கு. சுபத்திரனைப் பிடிச்சு இலங்கையின் சட்ட வரையறைக்குள் ஒரு வழக்கை போடுறது தானே. வெறுமனே அறிக்கை விடாமல் இப்படியான நகர்வுகளை எடுக்கலாமே.

    ஆனால் தோழர் சொன்ன மாதிரி இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை என்றே சொல்லப்படுகிறது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…. உலகில் எந்த நாடும் தனது தேசிய கீதத்தை மொழிபெயர்த்து பாடுவதில்லை//-விமல் வீரவங்ச அமைச்சர் (ஜேவிபி)

    விமல் வீரவங்ச இப்படியான் அரிய முத்துக்களை உதிர்ப்பதில் வல்லவர். இதேபோல இந்திய தேசியகீதம் ஹிந்தியில் பாடப்படுகிறது எனவேறு சொல்லி இருந்தார். ஆனால் பாவம் அது வங்கமொழியில் பாடப்படுவது தெரியவில்லை. மேலும் தெனாபிரிக்காவின் தேசிய கீதம் ஐந்து மொழிகளில் உண்டு. அதனைப்பாடும் போது ஒவ்வொரு வசனத்தையும் ஒவ்வொரு மொழியில் மாறிமாறிப்படிப்பார்கள். அதேபோலவே கனடாவிலும் எனக் கேள்விப்பட்டேன்.
    எவ்வாறயினும் ஸ்ரீலங்காவின் தேசியகீதம் முன்னர் யாழ்பபாணத்தில் தமிழில் பாடப்படும்போதே யாரும் கணக்கெடுப்பதில்லை. இதில் சிங்களத்தில் மட்டும் பாடவேண்டுமாம். வீரவங்ச சொன்னது போல ஜோக்காகத்தான் இருக்கப்போகிறது!
    மேலும் ஐ.நாவில் தமிழில் பேசி புல்லரிக்கவைத்த ராஜபக்சா இப்படி மயிர்கூச்செறியும் விளையாட்டைக் காட்டுவார் என அவரின் கோஷ்டி கனவிலும் நினைத்திரார்! அதேவேளை அவரும் தனது பங்கிற்கு ஸ்ரீமா அம்மையாரின் வெளிநடப்பு வேலையை வெளியே சொல்லி ஸ்ரீமா அம்மையாருக்கும் சந்திரிக்காவுக்கும் பழைய SLFP க்கோஷ்டிக்கும் மணியான ஆப்பு வைத்திருப்பது சுவாரசியமான கிளைக்கதை! எல்லாம் சரி தமிழில் இருந்து இரவல் வாங்கிய சிங்களச் சொற்களுக்கும் அதே கதிதானா இல்லையா?

    // தேசிய கீதம் என்பது சகல இனங்களை பிரதிநித்துவப்படுத்துகிறது என்பதால் அதனை ஒரே மொழியில் பாட வேண்டும் என்ற தீர்மானத்தை அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்// -விமல் வீரவங்ச அமைச்சர் (ஜேவிபி)
    சகல இனங்களை பிரதிநிதித்துவப்படுவது எனச்சொல்லி ஆனால் அதனை ஒருமொழியில் பாடவேண்டும் என்ற ”லொஜிக்” கூட நன்றாகத்தான் இருக்கிறது!

    Reply
  • மாயா
    மாயா

    தமிழீழத்தை விட்டு விட்டு ; சிறீலங்காவுக்குள் வந்து விட்டார்கள். நல்ல முன்னேற்றம்?

    Reply
  • BC
    BC

    இலங்கை தேசிய கீதம் எந்த மொழியில் பாடுவது என்பது பிரச்சனை அல்ல. பாடக்கூடாத அழிவு கீதம் புலி கீதம் பற்றி அவதானமாக இருந்தால் போதும்.

    Reply
  • நந்தா
    நந்தா

    சாந்தன் சொல்லுவது உண்மை. கனடாவில் தேசிய கீதம் ஆங்கிலத்திலும், பிரான்ஸ் மொழியிலும் பாடப்படும்.

    பத்தரமுல்ல சீலரத்ன தேரரின் கருத்துச் சரியானதே. புலிகளின் பிரச்சாரத்துக்கு இது ஒரு தீனிதான்.

    ஆயினும் வெளினாடு வந்த தமிழர்கள் இலங்கைத் தேசிய கீதம் பாடவுமில்லை. கேட்கவுமில்லை.

    இந்தியாவை உதாரணம் காட்டுவது சுத்த அபத்தமாகத் தெரிகிறது. 700க்கும் அதிகமான மொழிகள் பேசும் இந்தியாவில் ஒரு மொழியில் தேசியகீதம் இருக்கலாம் என்பது சரியாகப் படுகிறது. ஆக மொத்தமாக இரண்டே இரண்டு மொழிகள் பேசப்படும் இலங்கயில் மொழி மூலமான தகராறுகளும், இழப்புக்களும் வந்த பின்னர் இப்படி ஒரு முடிவை எடுப்பது இராஜ தந்திரமாகப் படவில்லை.

    எனினும் புலிக் கும்பல்களுக்கு இந்த விவகாரம் பற்றிப் பேச எந்த அருகதையும் கிடையாது. ஆயிரக் கணக்கில் தமிழர்களைக் கொன்றும் கொள்ளையடித்தும் தமிழர்களின் தலையில் மண்ணள்ளிப் போட்டவர்கள் “தமிழ்” என்றும் இலங்கைத் தேசிய கீதம் பற்றியும் கதைக்க எது விதமான அருகதையும் இல்லாதவர்கள். இன்று இலங்கயில் வாழ்கின்ற தமிழர்களின் பிரச்சனையில் அவர்களின் தலைவர்கள் இதற்கொரு முடிவைக் காண வேண்டும்!

    Reply
  • sarma
    sarma

    இப்ப உசுப்பேத்த வேண்டாம் முதலில் இந்த வன்னியில இருக்கிற புலிப்போராளிகளுக்கு புலிகள் உதவட்டும் அவர்கள் சுதந்திரமா எழும்பியிருக்க உடல் பலமில்லாமல் இருப்பதை கவனிப்பதே முதலாவது அந்த பொடியன்களும் பெண்பிள்ளைகளையும் உசாராக இருக்க விடுங்கோ உங்களிடம் உள் பணங்கள் புலிச்சொத்துக்கை முதலில் இந்த கஸ்டப்டுகிறவங்களிடம் கொடுங்கோ அவங்கள் சாப்பிட வழியில்லாம இருக்கிறாங்கள் உங்களுக்கு தேசிய கீதம் தமிழிலோ சிங்களத்திலோ எண்டதா முக்கிய பிரச்சினை வெளிநாட்டில உங்கட பிள்ளைகள் என்ன மொழியில தேசிய கீதம் பாடகினம் அதுக்கும் உங்கட இரத்தத்திற்கும் என்ன தொடர்பாம்? சும்மா உசுப்பேத்தாம விடுங்கோ
    எத்தனை தரம் உங்களுக்கு உதகள் எல்லாம் தரப்பட்டது ஏன் வாங்கவில்லை இப்ப வந்திட்டினம் தமழும் சிங்களமும் எங்களுக்கு சாப்பிட வழியில்லை, உங்கட கொண்டைக்கு பூ கேட்குது.

    Reply
  • Travelling Academic
    Travelling Academic

    கடைசியாக எப்பொழுது தமிழில் தேசிய கீதத்தைநான் பாடினேன்?

    இரண்டு வருடங்களுக்கு முன் ஒருநாள் பிரித்தானிய தேசிய கீதம் பாடும் கூட்டத்தில் அகப்பட்டேன் (எனது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்) எனக்கு பிரித்தானிய தேசிய கீதம் பாடத் தெரியாது; இருந்தாலும் கூட்டத்தின் சந்தோஷத்திற்காக நான் சொற்றுணை வேதியன் சோதி வானவன்… என்று தேவாரத்தினை அவர்களது கடவுள் மகா ராணியைக் காப்பாற்றட்டும் என்ற ராகத்தில் பாடினேன். அபாரம்.நீங்களும் பாடிப் பாருங்கோ.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ///…தமிழீழத்தை விட்டு விட்டு ; சிறீலங்காவுக்குள் வந்து விட்டார்கள். நல்ல முன்னேற்றம்?…//
    தேசிய கீதச் சிக்கலால் மீண்டும் தமிழீழம் போய்விடப் போகிறார்கள், கவனம்!

    இன்னொரு சுவையான விடயம். இந்த தேசிய கீதத்தை இயற்றிய / இசையமைத்த திரு.ஆனந்தா சமரக்கோன் தனக்குத் தெரிவிக்காமலும் தனது ஒப்புதல் இல்லாமலும் தேசிய கீதத்தை மாறறியதனால் தற்கொலை செய்துகொண்டார். பார்க்கப்போனால் ஸ்ரீலங்கா தேசியகீதம் எழுதியவரையே பலிஎடுத்திருக்கிறது! இப்போ சிங்களம் மட்டும் என ஆரம்பித்திருக்கின்றனர்.

    //…இப்ப உசுப்பேத்த வேண்டாம் முதலில் …//
    இங்க ஒருதரும் உசுப்பேத்தயில்லை. மாறாக சிரிச்சுக் கொண்டிருக்கிறம். எங்களைப் பொறுத்தளவில் சொல்லப்போனால் சிங்களத்தில என்ன லத்தீனிலையாதல் படிக்கட்டும். ஆனால் சகோதரம் , அனைத்தல் எனவெல்லாம் கதை விடவேண்டாம்.

    //…வெளிநாட்டில உங்கட பிள்ளைகள் என்ன மொழியில தேசிய கீதம் பாடகினம் அதுக்கும் உங்கட இரத்தத்திற்கும் என்ன தொடர்பாம்? சும்மா உசுப்பேத்தாம விடுங்கோ…//
    வெளிநாட்டுப் பிள்ளையள் தங்கட நாட்டின் மொழியில படிக்கினம். அவையளை அந்த நாடுகள் குண்டுபோட்டு கொல்லிறயில்லை! சாப்பாடு குடுக்காமல் வச்சிருக்கிறேல்லை.

    Reply
  • மாயா
    மாயா

    இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்பட வி்ல்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

    தேசியக் கீதத்தைப் பாடவேண்டிய விதிமுறைகள் பற்றிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்த போது, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டதாகவும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தேவானந்தா கூறினார்.

    ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் கனடா போன்ற சில நாடுகளில், இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றமை ஜனாதிபதிக்கு எடுத்துக்காட்டப்பட்டதாகவும் டக்ளஸ் தெரிவித்தார்.

    அமைச்சர்களான ராஜித்த சேனாரத்னவும் வாசுதேவ நாணாயக்காரவும், தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்கும் படி சட்டம் கொண்டுவருவது சாத்தியப்படாது என்று கருத்துக் கூறியதாகவும் சில முஸ்லிம் அமைச்சர்களும் இந்தக்கருத்தையே கொண்டிருந்ததாகவும் அமைச்சர் டக்ளஸ் கூறினார்.

    இந்தக் கருத்துக்களையெல்லாம் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கும் திட்டத்தை நிறைவேற்றாது ஒத்திவைத்ததாகவும், சில ஊடகங்களில் வெளியான தகவலைப் போல, சிங்கள மொழியில் மட்டும் என்ற திட்டம் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தமிழோசையிடம் கூறினார்.

    Reply
  • Naadoode
    Naadoode

    //இந்தக் கருத்துக்களையெல்லாம் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கும் திட்டத்தை நிறைவேற்றாது ஒத்திவைத்துள்ளார்.//

    நாவற்குழிக்குடியேற்றம் பற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். ‘இது அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கம் (அப்படி ஏதாவது இருக்கிறதா?) ஏற்படுத்த சில விசமிகள் மேற்கொண்ட முயற்சி என்றும் தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேசியிருப்பதாகவும் அவர் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த உத்தரவிட்டிருப்பதாகவும்.

    ஆனால் தமிழ் கட்சிகள் அதன் பிறகு ஜனாதிபதியைச் சந்தித்த போது ஜனாதிபதியோ கொழும்பில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருக்கலாம் என்றால் ஏன் சிங்களவர்கள் வடக்கு கிழக்கில் குடியேற்றப்பட முடியாது என்று கேட்டார். அமைச்சர் கப்சிப்.

    இப்பவும் தமிழ் மக்கள் அடி முட்டாள்கள் என்ற ரீதியில்தான் ஜனாதிபதி அதனை இடைநிறுத்தி வைத்திருக்கிறார் என்று ஊடகங்களுக்குக் கதை விட்டிருக்கிறார். அவர் விடுகிற கதைகளை இணக்க அரசியல் என்று நம்பச் சொல்கிறீர்களா?

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    மொழியே வாழ்வாகும் மொழியே மனிதமாகும் மொழியே இனமாகும் மொழியே ஒருங்கிணைக்கும் இவற்றை அறியாதவர் அந்த மக்களின் மொழியுடன் உணர்வுடன் விளையாடுவோர் லண்டனில் உருவான சூட்டை இப்படியாக தணிக்க முயல்கிறார்களா? இதை அமைச்சர் டக்களஸ் எமை தணிய வைக்கிறாரா?
    தமிழுக்கு இடமில்லை என்றபோது மீண்டும் போரே உருவாகும் தமிழுக்கு உரிய அந்தஸ்து இல்லை என்றால் அது போராகிறது தமிழே வாழ்வாகும் தமிழே அடையாளமாகிறது தமிழ் எமது மூச்சு என்கிறார்கள்

    இந்தக்காலத்தில் தமிழ் மொழியுடன் விளையாட்டை விடுவது ஏன் இது தான் ஒக்கஸ்போட்டில் பேச வந்தாரா?

    தமிழர்கள் தமக்கென ஒரு புதிய தேசிய கீதத்தை உருவாக்க வேண்டும் என்பதை சொல்லுவதாகவே நான் கருதுகிறேன் நாமும் தேசிய கீதங்களை பலவற்றை உருவாக்கி தெரிவுப் போட்டிகள் செய்து தமிழர்க்கான தேசிய கீதத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை தமிழருக்கு உருவாக்கிறார்கள்

    உடனடியாகவே ஈஎன்டிஎல்எப் தமது கீதத்தை வெளிப்படுத்தியது வரவேற்கிறேன் எமக்கும் சுயமரியாதையுண்டு என்பதை யாரே ஒருவன் வெளிப்படுத்துகிறான்.

    தேசியம் என்றதும் பிரயோசனமற்ற முழுவியளத்துக்கு உதவாத செண்பகத்தையும் கையால் தொட்டு கூட பார்க்காத கார்த்திகைப் பூவையும் எமது வாழ்வுடன் சம்பந்தப்படாத மிருகத்தையும் வைத்து தமிழரை மானபங்கப்படுத்தியது போதும் இனிமேலாவது கொஞ்சம் புத்திசாலித்தனமாகவும் எமது வாழ்வுடன் இணைத்தும் சிந்திப்போரை சமூகத்தில் இயங்க விடுங்கள்.

    நன்றி மதிப்புக்குரிய கலைஞர் கருணாநிதி அவர்களே!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….சாந்தன் சொல்லுவது உண்மை. கனடாவில் தேசிய கீதம் ஆங்கிலத்திலும், பிரான்ஸ் மொழியிலும் பாடப்படும்…//
    அதேபோல பிரெஞ் மொழி பேசும் கியூபெக் வாக்கெடுப்பின் மூலம் தனியாகப் பிரிந்து செல்லும் உரிமையும் உண்டு. மேலும் கடந்த முறை வாக்கெடுப்பு நிகழ்ந்த போது ஆங்கிலம் பேசும் கனேடிய மக்கள் பிரெஞ்சு பேசுவோரிடம் பிரிந்து செல்ல வேண்டாம் என கண்னீர்விட்டு அழுது கேட்டார்கள். ஆனால் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவந்த போது எதிர்த்தவர்களுக்கு என்ன நடந்தது என அறிவோம், தனியாகப் பிரிந்து போகக் கேட்டவர்களுக்கு குண்டு விழுந்தது என்பதும் அறிவோம்!

    இதுக்குள்ள கருணாநிதி அடிச்சிருக்கிற ஜோக் சொல்லி மாளாது. ஊரில ஸ்பெக்ரம் ஊழல் காத்தில ஆனானப்பட்ட ஆர்.ராசாவே பறக்கிறார். சனம் சாகும் போது தூவானம், தந்தி எனக்கதை விட்டவர் இப்ப ஜோக் அடிக்கிறார். எல்லாம் ஸ்பெக்ரம் செய்ய்யிற வேலை! தமிழ் மொழி தேசிய கீதத்தை காப்பாற்ர அறிக்கை விடாமல் அவர் பேசாமலிருந்தால் அற்லீஸ்ற் அமைச்சர் பதவி இல்லை என்றால் தற்கொலை செய்வேன் என மிரட்டிய கனிமொழியை ஆதல் காப்பாற்ரலாம்!

    Reply
  • thenupiriyan
    thenupiriyan

    //அமைச்சர்களான ராஜித்த சேனாரத்னவும் வாசுதேவ நாணாயக்காரவும்இ தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்கும் படி சட்டம் கொண்டுவருவது சாத்தியப்படாது என்று கருத்துக் கூறியதாகவும் சில முஸ்லிம் அமைச்சர்களும் இந்தக்கருத்தையே கொண்டிருந்ததாகவும் அமைச்சர் டக்ளஸ் கூறினார்.//
    இக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் என்ன கருத்தைக் கூறியிருந்தார். அதைக் கூறுங்கள். கருத்து எதையும் கூறாமல் வழக்கம்போல் சிரித்தபடி கேட்டுக்கொண்டிருந்தாரா? இங்கு நடைமுறைக்கு வரவில்லை என்ற கூறுவதன்மூலமோ அல்லது இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்ற கூறுவதன்மூலம் வழக்கம்போல் அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கத் தேவையில்லை. இவ்வாறான ஒரு முன்மொழிவைக் கொண்டுவந்ததே எதிர்காலங்களில் அரசாங்கம் என்ன நடவடிக்கை களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது என்பதனை வெளிப்படுத்துகின்றது.

    Reply
  • நந்தா
    நந்தா

    “தேசிய கீதம்” என்பது தேவாரம் அல்ல. அதனைப் பாடும் போது அதற்கென்று முறைகள் உண்டு.

    சிங்கள மொழியில் முதலிலும், தமிழ் மொழியில் இரண்டாவதாகவும் பாட வேண்டும். அது தெரியாமல் உள்ளவர்கள் சிரிமா கதைகளை சொல்லி யாரை சுத்துகிறார்கள்?

    Reply
  • மூர்த்தி
    மூர்த்தி

    //ஒரு முன்மாதிரியாக தமிழ் மொழியில் மட்டும் பாட வேண்டும் என்ற தீர்மானத்தை எடுங்கள். அனைத்து இனங்களையும் ஏற்றுக்கொள்ளும்படி கோரிக்கை விடுங்கள்.//
    தேனுப்பிரியன் கருத்து அற்புதமானது. உதாரணத்திற்கு சிங்கப்பூரின் பெரும்பான்மை இனமாக சீனர்கள் இருந்தாலும் சிங்கப்பூரின் தேசிய கீதம் சிங்கப்பூரின் இரண்டாம் இனக்குழுவின் மலாய் மொழியிலேயே இருக்கிறது. சிங்கப்பூரின் பெரும்பான்மை இனமான சீனர்களும் சிறுபான்மை இனமான தமிழர்களும் அதை ஏற்று மதிக்கிறார்கள். தேனுப்பிரியன் கருத்தை மகிந்தா ஏற்றாரென்றால் இலங்கை சிங்கப்பூராக மாறும்..

    உண்மையில் தேசிய கீதம் என்ற பதத்தைவிட நாட்டுப்பண் என்பதே பொருத்தமாயிருக்கும் என்று கருதுகிறேன். (இன்றுவரை இலங்கையின் தேசிய கீதம் சுராங்கனிக்க மாலு கெனாவாதான்..)

    நாட்டுப்பண் (அதாவது தேசியகீதம்) நாட்டுப்பற்று உள்ளவர்க்கு என்றும் உணர்வுபூர்வமானது.. ஆனால் இலங்கையில் தமிழருக்கும் சரி சிங்களருக்கும்சரி “நாடு” என்பதைவிட “மொழி” என்பதே முதன்மையாகிவிட்ட காரணத்தினால்தான் தேசிய கீதத்திலும் நாட்டுப்பற்றோடு மொழிப்பற்றைக் கலந்து குழப்பியடிக்கிறார்கள்..

    சிங்கள நாட்டுப்பற்று உடையவர்கள் தமது நாட்டுப்பண்ணை சிங்களத்தில் பாடும்போது பெருமிதம் கலந்த மகிழ்ச்சியே அடைவார்கள்.. (“ஈழத்”தமிழர்களுக்கு “ஸ்ரீலங்கா” என்ற நாட்டுப்பற்று வரும்போது அவர்களும் மகிழ்ச்சியடையக்கூடும்.. மொழி அப்போது இரண்டாம் பட்சமாகிவிடும்.)

    ஆனால் இப்போதைய நிலையில் இலங்கையிலும் மிகப்பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் மொழிப்பற்றிற்கே முதன்மை இடம் தருகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் காலப்போக்கில் “ஸ்ரீலங்கா” இருக்கும் நிலப்பரப்பில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்… நமோ நமோ தாயேயா? மாதாவா??

    நந்தா சொன்னதுபோல வெளிநாடு வந்த தமிழர்கள் இலங்கைத் தேசிய கீதம் பாடுவதில்லை என்பதுதான் இதில் மாறாத உண்மை. அப்படியிருந்தும் ஒருவேளை தெரியாத பிடிக்காத மொழியில் தேசிய கீதம் பாடும் கூட்டத்தில் அகப்பட்டால் மாட்டுப்படாமல் கூட்டத்தின் சந்தோஷத்திற்காக Travelling Academic போல சொற்றுணை வேதியன் சோதி வானவன்… என்று தேவாரத்தினை மனதுள் பாடி.. நற்றுணையாவது நமோ நமோதாயே.. என்று முடிக்கவேண்டியதுதான்.

    இனிக் கடவுள்தானே தமிழர்களைக் காப்பாற்றவேண்டும்!
    — கனடா மூர்த்தி

    Reply
  • நந்தா
    நந்தா

    கியூபெக் போன்ற அமைப்பை முதலில் புலிகள் நிராகரித்து விட்டனர். ஒற்றையாட்சி என்பதற்குச் சாதகமாக இந்தியாவினால் கொண்டு வரப்பட்ட “சமஷ்டி” தீர்வை புலிகள் நிராகரித்துவிட்டு எந்த அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்துவது?

    சர்வஜன வாக்கெடுப்பு அல்லது அபிப்பிராய வாக்கெடுப்பு என்பது இலங்கை முழுவதும் உள்ள மக்களின் வாக்கெடுப்பு ஆக இருக்கும் பொழுது பிரிந்து செல்ல தமிழர்கள் வாக்கெடுப்பை பயன் படுத்துவது படு கஷ்டம்.

    Reply
  • thurai
    thurai

    //வெளிநாட்டுப் பிள்ளையள் தங்கட நாட்டின் மொழியில படிக்கினம். அவையளை அந்த நாடுகள் குண்டுபோட்டு கொல்லிறயில்லை! சாப்பாடு குடுக்காமல் வச்சிருக்கிறேல்லை.//சாந்தன்
    இலவச கல்வி, கூப்பனிற்கு இலவச உணவு, இலவச சிகிச்சை இது போதாது எங்களிற்கு எங்களை ஆள உருமை வேண்டுமென்று தான் ஆயுதமேந்தியவர்கள். இப்போ வெளிநாட்டில் தமிழ் பேசத்திரியாத பிள்ளைகளிற்கும் கையில் புலிகொடியும் தமிழீழமும் வேண்டுமாம். துரை

    Reply
  • மாயா
    மாயா

    //உதாரணத்திற்கு சிங்கப்பூரின் பெரும்பான்மை இனமாக சீனர்கள் இருந்தாலும் சிங்கப்பூரின் தேசிய கீதம் சிங்கப்பூரின் இரண்டாம் இனக்குழுவின் மலாய் மொழியிலேயே இருக்கிறது. சிங்கப்பூரின் பெரும்பான்மை இனமான சீனர்களும் சிறுபான்மை இனமான தமிழர்களும் அதை ஏற்று மதிக்கிறார்கள். //

    சிங்கப்பூர் தனியாகும் போது ; அங்கு வாழ்ந்த அனைவராலும் பேசப்பட்ட மொழி மலாய். காரணம் மலேசியாவின் ஒரு பகுதிதான் சிங்கப்பூர். எனவே அப்போது அதைத் தவிர வேறு கருத்து தோன்றவில்லை. சிங்கப்பூரில் உள்ள சீனர்கள் மென்றின் என்ற மொழியை பின்னர்தான் கொண்டு வந்தார்கள். அங்கு வாழும் சீனர்கள் ; சீன மக்கள் பேசும் ; கொக்கியன் – கெந்தனிசு ஆகிய மொழிகளை அதிகம் வீடுகளில் பேசுபவர்கள். மென்றின் என்பது ஒப்பீசியல் மொழியாக கொண்டு வரப்பட்டது. அதற்கு காரணம் உலக சீனர்கள் பெரும்பான்மையாக காரியாலய தேவைகளுக்கு பாவிப்பது மென்றின்.

    இந்தியாவின் மொழி இந்தி என்பது என சொல்வது போல உள்ளது தேசப்பிரியனின் கருத்து. சீனர்கள் பேசுவது சீனம் அல்ல. ஏகப்பட்ட மொழிகளை பேசுகிறார்கள். ஐரோப்பாவில் வாழ்வோருக்கு புரியும் படி சொல்வதானால் ; ஜேர்மன் மொழியை ஜேர்மன் – சுவிற்சர்லாந்து – ஒஸ்ரியா ஆகிய நாடுகளில் ஜேர்மன் மொழி பேசுகின்றனர். இங்கே பேச்சு வழக்கு வித்தியாசமானது. அனைவருக்கும் புரியும் விதத்தில் கொக் டொச் எனும் எழுத்து ஜேர்மன் மொழியை காரியாலயங்களில் பாவிக்கின்றனர். சிங்கப்பூர் தனிநாடாகும் போது அங்கு அதிகமானவர்களால் பேசப்பட்ட மொழ மலாய். மஞ்சுலா சிங்கப்பூரா.

    ஒரு பல்கலைக் கழக பட்டதாரி ; ஆங்கிலேயன் தேசிய கீதம் பாடும் போது தேவாரம் பாடியதாக குறிப்பிட்டுள்ளார். இது நல்ல ஜோக். ஒரு நாட்டின் தேசிய கீதத்தை எம்மால் பாட முடியாவிட்டால் மெளனமாக அதற்கு மரியாதை கொடுக்கும் விதமாக மெளனமாக சீராக நிற்பதே படித்தவருக்கு அழகு. அதை விட்டு சிங்கார வேலனே என பாடினால் பக்கத்தில் இருக்கும் வெள்ளை காதைப் பொத்தி சாத்தாதது அவனது பெரும் தன்மை. அல்லது அவனது நாகரீகம். அநாகரீகமாக நடந்து கொண்டதை நாகரீகமாக சொல்வது கொடுமை. இது புளுகுதான்…… அதை மெச்சுவது அதை விடக் கொடுமை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    …..சர்வஜன வாக்கெடுப்பு அல்லது அபிப்பிராய வாக்கெடுப்பு என்பது இலங்கை முழுவதும் உள்ள மக்களின் வாக்கெடுப்பு ஆக இருக்கும் பொழுது பிரிந்து செல்ல தமிழர்கள் வாக்கெடுப்பை பயன்படுத்துவது படு கஷ்டம்.,,,,

    கனடாவில் அவ்வாறில்லையே. கியூபெக்கில் மட்டுமே நடாத்தினர். மேலும் படு கஷ்டம் என ஸ்ரீலங்கா கருதினால் ஐ.நா தயாராக இருக்கிறது, செய்யலாமா நநதா? ஆயுதம் வாங்கி ஆகாயத்தில் இருந்து குண்டுபோட்டு மக்களை (சொந்த மக்கள் என நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டே) கொல்லுதலிலும் விட தேர்தல் நடத்துவது படு கஷ்டம் தான்?

    Reply
  • thenupiriyan
    thenupiriyan

    //சிங்கள மொழியில் முதலிலும், தமிழ் மொழியில் இரண்டாவதாகவும் பாட வேண்டும்.// நந்தா
    இரண்டாவதாகவாவது தமிழில் பாடுவதற்கு அனுமதி உண்டா? வன்னியில் எந்த நிகழ்விலும் தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என இராணுவம் ஏற்கனவே தடைவிதித்திருப்பதை நீங்கள் அறிவீர்களா?

    Reply
  • thurai
    thurai

    //கனடாவில் அவ்வாறில்லையே. கியூபெக்கில் மட்டுமே நடாத்தினர். மேலும் படு கஷ்டம் என ஸ்ரீலங்கா கருதினால் ஐ.நா தயாராக இருக்கிறது, செய்யலாமா நநதா? ஆயுதம் வாங்கி ஆகாயத்தில் இருந்து குண்டுபோட்டு மக்களை (சொந்த மக்கள் என நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டே) கொல்லுதலிலும் விட தேர்தல் நடத்துவது படு கஷ்டம் தான்?//சாந்தன்

    தமிழர் கூட்டணி பெரும்பான்மையாக இருந்து அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலத்தில் மக்கள் தனிநாடு என்ற மோகத்தில் தான் இருந்தார்கள். யாராவது தென்னிலங்கையை விட்டு வட கிழக்கில் குடியேற ஆரம்பித்தார்களா? படித்தவர்களிற்கும், அரசியல் வாதிகளிற்குமே, வியாபாரிகளிற்கும் தென்னிலங்கை இன்றி வாழ்வே இல்லை.

    சாதாரண தமிழ்தொழிலாழியைச் சிங்கள அரசு சுரண்டி வாழ்ந்து பாமர மக்கள் அதனை உணர்ந்து தனிநாடு கேட்டிருந்தால் தனித் தமிழ்நாடு எப்போது கிடைத்திருக்கும். இன்று தொழில்வாய்ப்பில்லை, தொழில் செய்பவன் ஒரு பரப்பு காணி கூட வாங்க முடியாத நிலமை இந்த நிலையில் யாரை ஆழ்வதற்கு யாரிற்கு தனிநாடு வேண்டும்?

    தமிழ் மொழிப்பற்று ஆகா!! தனிமனிதனில் பற்று இல்லாத சமூகத்திற்கு தனிநாடு அவசியம் தேவைதானா?– துரை

    Reply
  • நந்தா
    நந்தா

    //..சர்வஜன வாக்கெடுப்பு அல்லது அபிப்பிராய வாக்கெடுப்பு என்பது இலங்கை முழுவதும் உள்ள மக்களின் வாக்கெடுப்பு ஆக இருக்கும் பொழுது பிரிந்து செல்ல தமிழர்கள் வாக்கெடுப்பை பயன்படுத்துவது படு கஷ்டம்.,,,,
    கனடாவில் அவ்வாறில்லையே. கியூபெக்கில் மட்டுமே நடாத்தினர்.//

    கியூபெக் ஒரு மாகாண அரசு என்ற அந்தஸ்த்துடன் இருப்பது தெரியாதா. அப்படித் தமிழர்களுக்கு இலங்கயில் “மாகாண அரசு” வேண்டாம் என்றுதானே புலிகள் சிங்களவரோடு செர்ந்து ஆயிரக்கணக்கில் தமிழர்களுக்குப் பாடை கட்டினார்கள். அது மாத்திரமின்றி அந்த சம்ஷ்டித் தீர்வை புலிகள் சிங்களவர்களுக்காக ஐயா-தம்பி ஐக்கியம் கொண்டாடி வரதராஜப் பெருமாளைநாடு கடத்தினார்கள். அப்பொளுது சொன்ன “4வது பெரிய இராணுவத்தை தோற்கடித்த கதைகள்” என்ன ஆச்சு? இராஜபக்ச தமிழரிடம் மாத்திரம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அழுகிறீர்களா?

    ஐ.நா. எதற்குத் தயாராக இருக்கிறது? அடுத்தது ஐ.நா. இலங்கை அரசை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது அல்லது தமிழர்களிடம் மாத்திரம் தேர்தல் வை என்று கோரவும் முடியாது. தேர்தலில் பங்கு பற்றாமலேயே “தேசியத்தலைவர்” ஆகும் பலமுள்ளவர்கள் தேர்தல் பற்றி கதைத்து என்ன பண்ணப் போகிறீர்கள்?

    Reply
  • நந்தா
    நந்தா

    தேனுப்பிரியன்:
    இராணுவம் அது செய்கிறது, இது செய்கிறது என்ற கதைகள் புளித்துப் போன விஷயங்கள். சிங்களத்தில்த்தான் தேசிய கீதம் என்ற முடிவு நடைபெறப் போவதில்லை என்பது பிந்திய செய்தி!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…கியூபெக் ஒரு மாகாண அரசு என்ற அந்தஸ்த்துடன் இருப்பது தெரியாதா. அப்படித் தமிழர்களுக்கு இலங்கயில் “மாகாண அரசு” வேண்டாம் என்றுதானே புலிகள் …// பெரைல்மட்டும்தான் மாகாண அரசு உளே ஒன்றுமில்லை. ஏன் நந்தா கனடாவில்தானே இருக்கிறீர்கள்? கியூபெக்குக்கு உள்ள உரிமைகளை ஸ்ரீலங்காவின் பம்மாத்து மாகான அரசுடன் ஒப்பிட எப்படி உங்கள் அறிவு இடம் கொடுத்தது்?

    //… அது மாத்திரமின்றி அந்த சம்ஷ்டித் தீர்வை புலிகள் சிங்களவர்களுக்காக ஐயா-தம்பி ஐக்கியம் கொண்டாடி வரதராஜப் பெருமாளைநாடு கடத்தினார்கள். …// அவரும் போகும்போய்து தமிழீழப்பிரகடனம் செய்த கதை தெரியாதா?

    //….இராஜபக்ச தமிழரிடம் மாத்திரம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அழுகிறீர்களா?..//
    உண்மைதான். குண்டுபோடும் கூட்டத்திடம் வாக்கெடுப்பு கேட்கக்கூடாதுதான்!

    //…ஐ.நா. எதற்குத் தயாராக இருக்கிறது? அடுத்தது ஐ.நா. இலங்கை அரசை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது அல்லது தமிழர்களிடம் மாத்திரம் தேர்தல் வை என்று கோரவும் முடியாது….// நான் சொன்ன கருத்தை கவனமாகப் படிக்கவும்! ஸ்ரீலங்கா தயார் எனச் சொல்லும் பட்சத்தில் ஐ.நா தயார். நீங்கள் தான் சொன்னீர்கள் ‘படு கஷ்டம்’ என. அதுதான் அவர்களுக்கு படு கஷ்டம் எனில் ஐ.நா தயார் எனச் சொன்னேன்!

    //….தேர்தலில் பங்கு பற்றாமலேயே “தேசியத்தலைவர்” ஆகும் பலமுள்ளவர்கள் தேர்தல் பற்றி கதைத்து என்ன பண்ணப் போகிறீர்கள்?…//
    தேர்தல் வையுங்கள் என்ன பண்ணப்போகிறோம் என்றெல்லாம் நீங்கள் கவலைப்பட அவசியமில்லை. ஜனநாயகவாதி அல்லவா நீங்கள்? தேர்தலில் என்ன் பண்னப்போகிறோம் என்பது வாக்களிக்கும் மக்களுக்கும் தெரிவு செய்யப்படும் வேட்பாளர்களும் தீர்மானிப்பார்கள்.
    /….சிங்களத்தில்த்தான் தேசிய கீதம் என்ற முடிவு நடைபெறப் போவதில்லை என்பது பிந்திய செய்தி!…//
    ”இப்போதைக்கு” என்ற சொல் அறிக்கையில் இருக்கிறது. வசதியாக தவிர்த்து விட்டீர்கள் போல் இருக்கிறதே!

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    //தமிழர்களுக்கு இலங்கயில் “மாகாண அரசு” வேண்டாம் என்றுதானே புலிகள் சிங்களவரோடு செர்ந்து ஆயிரக்கணக்கில் தமிழர்களுக்குப் பாடை கட்டினார்கள்.//
    இந்திய சிறிலங்கா ஒப்பந்தத்தில் முன்மொழியபட்டது மாகணசபையே தவிர மாகணஅரசல்ல. அரசென்றால் சட்டமியற்றும் தகமையுள்ள நாடளமன்றமும் அதற்கமைய நிருவாகம் செய்யும் அமைச்சரவையும் சட்டப்படி நிர்வாகம் நடக்கிறதா என்று கண்காணிக்கும் அதிகாரமிக்க நீதிமன்றமும் சேர்ந்ததுதான் அரசு.
    இந்திய சிறிலங்கா ஒப்பந்தத்தில் முன்மொழியபட்டது மாகணசபை என்பது ஒரு மாநகரசபையின் மேம்பட்ட வடிவம். அதனிடம் எந்த உருப்படியான அதிகாரமும் கிடையாது. இந்நிலையில் சுயநிர்ணய உரிமையுள்ள கனடாவின் மாகணஅரசையும் சிறிலங்கா மாகணசபையையும் ஒப்பிடுவதென்பது மலையையும் ஒப்பிடுவதற்கு சமன். இந்தியமாநில அரசுடன் கூட ஒப்பிடமுடியாத மேம்பட்ட வடிவமே கனடாவின் மாகணஅரசு.
    //ஐ.நா. எதற்குத் தயாராக இருக்கிறது? அடுத்தது ஐ.நா. இலங்கை அரசை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது அல்லது தமிழர்களிடம் மாத்திரம் தேர்தல் வை என்று கோரவும் முடியாது//
    கிழக்கு தீமோரோ கொசவோவோ சுயநிர்ணய உரிமையுள்ள பிரதேசங்களாக இருக்கவில்லை.ஐ.நா.சபையின் அழுத்திற்கு அடிபணிந்துதான் இந்தோனேசிய அரசும் செர்பிய அரசும் கிழக்கு தீமோரின் கொசவோ மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கு(referendum) ஒத்துகொண்டன. இன்று சூடான் அரசும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கு ஒத்துகொண்டுள்ளது.

    Reply
  • நந்தா
    நந்தா

    தோஸ்து சொல்லும் மாகாண சபை, மாகாண அரசு என்ற அமைப்புக்கள் அவற்றின் அதிகாரஙள் என்பன சரியான கருத்துக்களே!

    கனடா என்ற நாடு அமைவதில் கியூபெக் என்ற பிரான்ஸ் காலனியும் ஒப்பமிட்டது என்பதும் ஆங்கிலேயர்களுக்கு முன்னரே பிரான்ஸ் நாட்டினர் வட அமெரிக்காவில் குடியேற்றங்களை அமைத்து விட்டனர் என்பதும் இன்னொரு உண்மை. கியூபெக்குக்கு இருந்த அதிகாரங்கள் நெப்பொலியனின் தோல்வியை அடுத்து ஆங்கிலேயருக்குக் கை மாறின. ஒரு காலத்தில் கியூபெக் சட்டசபையில் பிரெஞ் மொழி பாவிக்கக் கூடாது என்று சட்டமே இருந்தது.

    இலங்கையை பொறுத்த அளவில் வரலாறு என்பது இரு பகுதியினராலும் கட்டுக் கதைகள் மூலம் இருந்த இடம் தெரியாமல் தொலைக்கப்பட்டுள்ளது.

    ஆங்கிலேயரின் அடியாட்களாக மாறியுள்ள தமிழர்கள் ஐ.நா. அல்லது அமெரிக்கா அல்லது இந்தியா போன்றநாடுகளை எந்தக் காலத்திலும் நிர்பந்திக்கும் பலம் இல்லாதவர்கள். அதிலும் இந்தியாவை எதிரியாக்கியவர்கள் இலங்கயில் பிரிவு என்பதை எந்தக் காலத்திலும் எதிர்பார்க்க முடியாது.

    ஐ.நா. இலங்கையை நிர்பந்திக்க முடியாது என்பது ஊர்ஜிதமான ஒரு உண்மை. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஒன்று சேர்க்கப்பட்டு உருவாகிய யுகோச்லாவியாவும் சிறி லங்காவும் ஒன்றல்ல!

    Reply
  • suresh
    suresh

    ஈழம் நாட்டுப்பண்
    -http://www.youtube.com/watch?v=t9-Jn7V_bbg

    Reply
  • மாயா
    மாயா

    //http://www.youtube.com/watch?v=t9-Jn7V_bbg// – suresh
    கத்திகளோடு ஆரம்பிக்கும் சின்னம். வன்முறைக்கு வழியா ?

    ஈழம் என்றும் செந்நிறமாக இரத்த ஆறு ஓடிக் கொண்டேயிருக்கும் போல சிகப்பாகவே இருக்கிறதே? சூரியன் கூட சிங்கள பகுதிக்கல்லவா நகர்ந்து வந்து நிற்கிறது?

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    //இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஒன்று சேர்க்கப்பட்டு உருவாகிய யுகோச்லாவியாவும் சிறி லங்காவும் ஒன்றல்ல!//
    சேர்பியா குரோஸியா ஸிலோவாக்கிய ஒன்று சேர்ந்து முதலாம் உலகபோரை அடுத்து யூகோசிலவாக்கிய இராச்சியத்தை 1918ல் உருவாக்குகின்றது. 1945ல் மஸிடோனியாவுடன் இணைந்து 1945-1992 வரை யூகோசிலவாக்கிய சோசலிச குடியரசாக இருக்கின்றது.1991ல் ஆரம்பிக்கும் உள்நாட்டுயுத்தம் காரணமாக 1992ல் மஸிடோனியாவும் அதைதொடர்ந்து ஸிலோவாக்கிய குரோஸியா பொஸ்னியா மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு மூலம் தனித்து செல்கின்றன.
    இங்கு உன்னிப்பாக கவனிக்க வேண்டியவிடயம் விரும்பி சேர்ந்த நாடுகள் உறவுகசந்தவுடன் சுயமாக பிரிந்து செல்கின்றன. ஆனால் இலங்கையில் 1815ல் கண்டி இராசதானியையும் பிரித்தானியா கைப்பற்றியபின் யாரின் விருப்பத்தையும் கேளாது தனது நிர்வாக வசதிக்காக யாழ் கண்டி கோட்டை இராச்சியங்களை இணைத்து சிலோன் என்ற நாட்டை உருவாக்குது. சிலோன் என்ற பெயருடன் 1972 வரை இருந்த நாடுதான் குடியரசு யாப்பு வரைவுடன் சிறிலங்காவாகின்றது. உங்கள் வாதப்படி பார்த்தால் கூட சிறிலங்காவின் இன்றையவயது 28 ஆண்டுகள்தான். ஆனால் 1977ல் நடந்த நாடளமன்ற தேர்தலில் தமிழீழ கோரிக்கையை முன் வைத்த த.வி.கூட்டனிக்கு மிக பெரும்பாலான ஈழத்தமிழர் வாக்களித்துள்ளனர். அதாவது சிறிலங்கா உதயமாகிய 5வது வருடமே இது நிகழ்ந்தது. ஈழத்தமிழரின் விருப்பின்றி உருவாகிய சிறிலங்கா தேசத்திலிருந்து விலகி செல்லும் உரிமை மறுக்கப்படுகின்றது
    //இலங்கயில் பிரிவு என்பதை எந்தக் காலத்திலும் எதிர்பார்க்க முடியாது.//
    மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு கட்டாயம் பிரிவினையைதான் தருமென்றில்லையே.கியூபெக்கில் அப்படி நடக்கவில்லையே!

    Reply
  • thenupiriyan
    thenupiriyan

    //இராணுவம் அது செய்கிறது, இது செய்கிறது என்ற கதைகள் புளித்துப் போன விஷயங்கள்// நந்தா
    உங்களைப் போன்று வெளிநாடுகளிலிருந்து கொண்டு இணையத்தளங்களின் ஊடாக இச் செய்திகளை வாசிப்பவர்களுக்கு இது புளித்துப் போன விஷயங்கள் தான். ஆனால் எங்களைப் போன்று தாயகத்திலிருந்துகொண்டு இராணுவ அடக்குமுறைகளை வெவ்வேறு வடிவங்களில் அனுபவிப்பது புதிய விடயம் தான்.

    //சிங்களத்தில்தான் தேசிய கீதம் என்ற முடிவு நடைபெறப் போவதில்லை என்பது பிந்திய செய்தி// நந்தா
    சிங்களத்தில் மட்டும்தான் பாடவேண்டும் என்ற எண்ணம் உருவானதே சிங்கள பேரினவாதம் இன்னும் மாறாமல் அதே வீச்சில் உள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது. இவர்களிடமிருந்து தமிழ் மக்கள் நியாயமான தீர்வை எதிர்பார்க்கலாமா?

    எதிர்ப்புகளைக் கண்டு தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ளார்கள். தமிழர் தரப்பு எதிர்ப்புக்களைக் காட்டாமல் டக்ளஸ் தேவானந்தா போன்று மெளனமாக இருந்திருந்தால்…. இப்போது கூறுங்கள் எதிர்ப்பு அரசியலா இணக்க அரசியலா தேவை. அரசின் எல்லா விடயங்களையும் எதிர்க்கவேண்டும் என்ற நான் கூறவில்லை. ஆனால் இந்த விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தனது எதிர்ப்பினைப் பதிவு செய்திருக்க வேண்டும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    மகிந்தாவின் சிந்தனையில்
    மலர்கிறது தமிழ் மொழி!!

    செல்ல பிள்ளை சேர் பொன்னும்
    செருக்கு பிள்ளை ஜிஜியும்
    சிங்கள அரசுடன் கட்டி அனைத்து
    காலடியில் கிடந்த தமிழ்!!

    ஒப்பந்தம் செய்தார்கள் செல்வாவும்
    பண்டாவும் நடிகைகளின் திருமணம் போல்
    சில காலம் இருந்து விட்டு பிரிந்தார்கள்
    வேண்டாம் உறவென்று இப்படியும் ஆன தமிழ்!!

    மயிலே மயிலே என்றால் மயில் இறகு தராது புடுங்குவோம் மயிலிறகை கூடுவோம் தமிழராய் கூத்தடிப்போம்
    தனி நாட்டில் என சொன்ன கூட்டம் வெற்றியுடன் நெற்றியிலே ரத்த பொட்டுடன் புறப்பட்ட சிங்கங்கள் அசிங்கமாகி அடங்கி ஒடுங்கிய தமிழ்!!

    வெட்டு புள்ளி என சொல்லி
    வேலையில்லாத கிறுக்கர்கள் சேர்ந்து
    தனி புள்ளி தமிழ் கேட்டு
    தமிழிற்கு முற்றுப்புள்ளி முள்ளி வாய்கால் முடிவான தமிழ்!!

    திருவிழா கடைகள் போல் வீதிக்கு
    ஒரு அமைப்பாய் வீறு கொண்டு
    எழுந்து ஓடி, ஆடி, பாடி ஒன்றுக்கு ஒன்று
    முட்டி மோதி முரண்பட்டு இறுதியில் குப்பற வீழ்ந்த தமிழ்!!

    தலைவர் என்றால் தமிழ், தமிழ் என்றால் புலி,
    புலி என்றால் தமிழ், தமிழ் என்றால் தலைவர் என கூண்டுக்குள் உறுமி விட்டு இன்று தலைவரையே தேடுகின்ற தமிழ்

    தமிழை வன்னியில் தவிக்க விட்டு
    ஈழத்தை மட்டும் கடத்தி வந்து புலம் பெயர் தேசத்தில் அதற்கு ஒரு அரசமைத்து அழகு பார்க்கும் தமிழ்

    மாற்று கருத்து சொல்லி மகிந்தவின் மகுடியில்
    பாம்பாய் படமெடுக்கும் தமிழ்!!
    இன்னும் சில தமிழ் உண்டு இப்போதைக்கு இது போதும்
    காரணம் நானும் தமிழ்தானே!

    பல தமிழ் தலைமைகளூக்கு கை அசைவால்
    வாய் பூட்டு போட்ட மகிந்தா குடும்பம்
    தான் லண்டனில் பேச முடியாததால் தமிழர் யாரும்
    தமிழில் பேசக்கூடாது என்பது போல் தனது பதினெட்டாவது
    அறிவைப் பயன்படுத்தி தடல் புடலாய் வெளியிட்டுள்ளார்

    தோற்றுப்போன புலியும் வெற்றி கொண்ட அரசும் இன்னும் ஓர் இனப்பிரிவினையை உருவாக்க இரவு பகலாய் உழைக்கிறார்கள். ஐயா மகிந்த அவர்களே உங்களது பதினெட்டாவது அறிவைக் கொண்டு இலங்கையின் தேசிய கீதமாக நாக்க முக்க பாடலை தெரிவு செய்தால் இரு இனமும் தாங்கள் தமிழர்களூக்கு செய்வது போல் தேசிய கீதத்தை புரியாமலே கேட்க வாய்ப்பாக இருக்கும்மல்லவா??

    எனது கருத்து சிங்கள மொழியில் தமிழை சேட்டுக் கடையில் அடகு வைப்பதும் ஒன்றுதான். அத்துடன் மகிந்த அரசுக்கு இந்த செயலுக்காக பல்லியின் கண்டனத்தை தெரிவிப்பதோடு ஈழ நாட்டுப் பண்ணுக்கு என் வாழ்த்துக்களும்.

    Reply
  • நந்தா
    நந்தா

    தோஸ்து, தேனுப்பிரியன்:
    இராணுவத்தை வீட்டு வாசலுக்குக் கொண்டு வந்த செம்மல்கள் பற்றி உங்கள் விமர்சனங்கள் எதையும் காணோம். சிறுபான்மையினராக இருந்து கொண்டு “அடித்து” பிடிப்போம், விரட்டுவோம் என்று குரல் கிழப்பினால் யாருக்கு அடி விழும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

    இந்த தேசிய கீதப் பிரச்சனை இராஜபக்ஷவிற்கு ஒக்ஸ்போர்ட்டில் நடந்த வரவேற்பின் எதிரொலி என்றே நம்புகிறேன். சிங்களத்தில் மட்டும் பாடப்பட வேண்டும் என்ற கருத்து எனக்கு மாத்திரமல்ல பல ஆயிரக்கணக்கான சிங்கள மக்களுக்கும் உடன்பாடானதல்ல.

    தமிழ் ஈழம், புலி என்று பரணி பாடுவோருக்கு இந்த பிரச்சனை பற்றிக் கதைக்க எந்த வித தார்மீக உரிமையும் கிடையாது. இலங்கையை தாய்நாடாக ஏற்றுக் கொண்ட தமிழர்களே இந்த பிரச்சனையில் தலையிடவோ, பேசவோ உரிமையுள்ளவர்கள்.

    இலங்கைத் தமிழர்கள், விசேடமாக ஈழம் கேட்கத் தொடங்கிய யாழ்ப்பாணிகள் எந்தக் காலத்திலாவது அனுராதபுரத்தில் துட்ட கைமுனுவினால் கட்டப்பட்ட எல்லாள மன்னனின் சமாதிக்கு எப்பொழுதாவது ஒரு அன்சலி செலுத்தியிருக்கிறார்களா? அல்லது ஒரு சிறு முயற்சிதன்னும் செய்திருக்கிறார்களா? கிடையாது.

    அந்த சமாதிக்கு மன்னன் துட்ட கைமுனுவின் வேண்டுகோள்ப்படி ரஜரட்ட மக்கள் 2500 வருடங்களாக மரியாதை செலுத்தினார்கள். அதனை “கைமுனுவின்” சமாதியாக்கியது கிறிஸ்தவனான பரணவிதான என்பவன் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.

    கிறிஸ்தவ செல்வனாயகம் தலைமையில் கொழும்பில் சத்தியாகிரகம் செய்த விண்ணர்கள் எல்லாளனின் சமாதியை கைமுனுவின் சமாதியாக்கியதைப் பற்றி எங்கும் வாய் திறக்கவில்லை. இன்றும் திறப்பதில்லை. ஏனென்றால் “இந்து”க்களை யார் ஒழித்தாலும் கிறிஸ்தவர்களுக்கு லாபம் என்பதுதான் எண்ணம்.

    தமிழர்கள் இலங்கயின் இறையாண்மையில் பங்குள்ளவர்கள் என்பதை அடித்துக் கூறும் எல்லாளன் பற்றிய தகவலைக் கொடுக்கும் மகாவம்சத்தை “பொய்” என்று கூறி பிரச்சாரம் செய்தால் தமிழர்கள் “வந்தான் வரத்தான்” என்று சிங்கள இனவாதிகளின் கருத்தே பலம் பெறுகிறது.

    டக்ளஸ் மாத்திரமல்ல வாசுதேவநாணயக்கரவும் தங்கள் எதிர் கருத்துக்களை கூறியுள்ளனர். டக்ளஸ் தெருவில் ஊர்வலம் போகவில்லை என்று கேட்கிறீர்களா?

    தமிழீழம் என்று கதைபவர்கள் தங்கள் வாதங்களை பிரிட்டிஷ் காலத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறார்கள். அதற்கு முன்னர் போகத் தயாரில்லை.

    யாழ்ப்பாணத்தான் யாழ்ப்பாண வரலாற்றை எழுத தயாரில்லை. ஏனென்ரால் யாழ்ப்பாணத்தான் இன்னமும் பாதிரிகளின் காலடியிலிருந்து விடுபடவில்லை. யாழ்ப்பாணத்துப் பரம்பரைகளின் வரலாறுகள் போர்த்துக்கீசர் காலத்திலிருந்துதான் ஆரம்பிக்கின்றன.

    Reply
  • பல்லி
    பல்லி

    //இந்த தேசிய கீதப் பிரச்சனை இராஜபக்ஷவிற்கு ஒக்ஸ்போர்ட்டில் நடந்த வரவேற்பின் எதிரொலி என்றே நம்புகிறேன். சிங்களத்தில் மட்டும் பாடப்பட வேண்டும் என்ற கருத்து எனக்கு மாத்திரமல்ல பல ஆயிரக்கணக்கான சிங்கள மக்களுக்கும் உடன்பாடானதல்ல.//
    இது போதும் இப்போதைக்கு ஆமாம் மகிந்தாவின் ஆணவ போதைக்கு;

    Reply
  • Kusumpu
    Kusumpu

    தேசியகீதமோ தேறாத கீதமோ தமிழ்மக்களுக்குரிய உரிமைகள் சரியான முறையில் அரசில் ஊடாக நியாயமான முறையில் நிறைவேற்றாத வரை அரசு புலிகளை நியாயப்படுத்தும் என்று அறியலாம். புலிகளை தமிழ்மக்கள் மனங்களில் தமிழ்தேசியவாதிகளாகவும் தியாகிகளாகவும் காட்டும் முயற்சியிலே அரசு இறங்குவததைத் தவிர்ப்பது இரு இனத்துக்கும் உள்ள முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கு உதவும்.

    Reply
  • thenupiriyan
    thenupiriyan

    //டக்ளஸ் மாத்திரமல்ல வாசுதேவநாணயக்கரவும் தங்கள் எதிர் கருத்துக்களை கூறியுள்ளனார்// நந்தா
    வாசு தேவா நாணயக்கார எதிர்க்கருத்துக்களை கூறினார் என்பது எல்லோருக்கும் தெரியும். டக்ளஸ் எதிர்க்கருத்துக்ளைக் கூறினார் என்ற தகவல் எதுவும் கிடையாது. ஒரு வேளை பத்திரிகைகள் திட்டமிட்டு அதனை இருட்டடிப்புச் செய்தவிட்டார்கள் என்று நீங்கள் கூறலாம். ஆனால் ஈபிடீபி பத்திரிகையான தினமுரசில் கூட அப்படி செய்தி வரவில்லையே. இரண்டு நாட்கள் கழித்து அவாறான முடிவு இறுதியாக இன்னும் எடுக்கப்படவில்லை என்று மட்டும்தான் அவார் கூறினார். அவரது எதிர்க்கருத்துக்களை நீங்கள் எங்கு வாசித்தீர்கள் என்பதை அறியத் தருவீர்களா?

    Reply
  • rohan
    rohan

    //கியூபெக்குக்கு இருந்த அதிகாரங்கள் நெப்பொலியனின் தோல்வியை அடுத்து ஆங்கிலேயருக்குக் கை மாறின. ஒரு காலத்தில் கியூபெக் சட்டசபையில் பிரெஞ் மொழி பாவிக்கக் கூடாது என்று சட்டமே இருந்தது.//
    இந்தக் கூற்று சரி என்று எனக்குத் தோன்றவில்லை. நெப்போலியன் தோல்விக்கும் கியூபெக் விவகாரங்களுக்கும் நேரடிச் சம்பந்தம் இருந்ததாக நான் அறியவில்லை.

    ‘அமெரிக்கா’வின் ‘புரட்சி’, அமெரிக்கர்களின் புரட்சிக்கு பிரெஞ்சுக் கனடியர்கள் தந்த ஆதரவு, அமெரிக்கவிலிருந்த ஆங்கில விசுவாசிகள் கனடாவுக்குள் போனது, பிரெஞ்ச் கனடியர்களின் கலகம், கனடா முழுவதையும் ஆங்கிலேயர்கள் ஒன்றாக்கி ஆள முற்பட்டமை என்று தான் வரலாறு போகிறது என்பது எனது ஞாபகம்.

    இவையெல்லாம்நடந்து 100 ஆண்டுகளின் பின்னர் 1982 இல் தான் கனடா பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தங்கியிருக்கத் தேவையில்லை என்ற நிலை வந்தது. எனினும், ‘நம்ம அரசி’ தான் இன்னமும் கனடாவின் அரச தலைவர்! கனடாவின் ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் அரசிக்குத் தான் பணி புரிகிறார்கள் என்பதையும் மறக்கக் கூடாது.

    //இலங்கையை பொறுத்த அளவில் வரலாறு என்பது இரு பகுதியினராலும் கட்டுக் கதைகள் மூலம் இருந்த இடம் தெரியாமல் தொலைக்கப்பட்டுள்ளது.// இந்தக் கதை கட்டல் இன்னமும் தான் தொடர்கிறது.

    Reply
  • நந்தா
    நந்தா

    ரோகன்:
    எதற்கும் இன்னொரு முறை கியூபெக் வரலாற்றைத் தேடிப் படிக்கவும்!

    Canada’s Freedoms & rights in the constitution is not bind any Canadian to be sub-servient to British.

    Reply
  • நந்தா
    நந்தா

    தேனுப்பிரியன்
    டக்ளஸ் “ஆமா” போட்டார் என்பது உங்களுக்கு சந்தோஷமாக இருந்தால் அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்!

    Reply
  • thenupiriyan
    thenupiriyan

    நந்தா எனக்குச் சந்தோசம் என்பதல்ல தமிழ் மக்களுக்கு வேதனை – கவலை என்பதுதான் இங்கு முக்கியம்.

    எனது கவலை என்னவென்றால் டக்ளஸ் எதிர்க்கருத்துக்களைக் கூறினார் என்ற உங்கள் கூற்றை உங்களால் நிரூபிக்கமுடியாமல் பின்வாங்கிவிட்டிர்களே என்பதுதான்.

    Reply
  • rohan
    rohan

    //எதற்கும் இன்னொரு முறை கியூபெக் வரலாற்றைத் தேடிப் படிக்கவும்!//

    அந்தத் தேவை கியுபெக்குடன் சம்பந்தப் படாத எனக்கு இருப்பதை விட, கனடிய வரலாறு குறித்துப் பாடம் எடுக்க முனையும், “1967இல் கனடா இங்கிலாந்துடனான எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக் கொண்டு விட்டது” என்று சொல்லும் தங்களுக்கு இருக்கிறது.

    கியுபெக்குக்கு இருந்த அதிகாரங்கள் நெப்பொலியனின் தோல்வியை அடுத்து ஆங்கிலேயருக்குக் கை மாறின என்று மூன்று விடயங்களையும் நேரடியாக இணைக்கும் தங்கள் கூற்றுக்கு ஆதாரம் ஏதாவது தர முடியுமா?

    “Canada’s Freedoms & rights in the constitution is not bind any Canadian to be sub-servient to British” என்ற தங்கள் கூற்று உண்மையில் எப்போது நடைமுறைக்கு வந்தது? 1982??

    Reply
  • நந்தா
    நந்தா

    ரோகன் முதலில் பிரபாகரன் இருக்கிறானா அல்லது செத்துட்டானா என்பதை சொல்லவும். பின்னர் கனடாவில் 1967, 82 பற்றி அலசலாம்!

    தேனுப்பிரியனுக்கு டக்ளஸ் என்ன சொன்னார் என்பதை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதுநல்லது.

    Reply
  • Mohamed
    Mohamed

    It is better to think about the development rather think about the seperation issue.
    Mohamed Shareef Asees

    Reply
  • Saambanaar
    Saambanaar

    இந்த கீதம் தமிழில் அழகாக உள்ளது. இருந்தாலும் ஏன் தமிழர்கள் இதனை பாட வேன்டும்?
    Saambanaar Sugumugam

    Reply