விறகு வெட்டச் சென்ற போது கைது செய்யப்பட்ட 25 முஸ்லிம்களுக்கு ஒரு வருடகால சிறைத்தண்டனை

justice.jpgவிறகு வெட்டச் சென்ற போது கைதாகி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 25 முஸ்லிம்களுக்கும் மொனறாகலை நீதிமன்றம் ஒரு வருடகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட 25 முஸ்லிம்களும் பொத்துவில் காட்டுப்பகுதிக்கு விறகு வெட்டச் சென்ற வேளையில் பொலிஸ்காரர்களால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை மொனறாகலை மேல் நீதிமன்ற நீதிபதி அமல் கருணாரட்ன முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிபதி மேற்படி தீர்ப்பினை வழங்கினார்.

அரச சொத்துக்கள் சட்டத்தின் கீழ் ஐந்து குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களம் இவ் வழக்கை தாக்கல் செய்திருந்தது. விசாரணையின் போது கைதிகள் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து நீதிபதி இத்தீர்ப்பினை வழங்கினார்.

இந்த வழக்கின் கைதிகளின் சார்பில் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆஜராகி இருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன் விறகு வெட்டச் சென்ற 26 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் இருவர் சிறைச்சாலையில் மரணமடைந்தனர். இவர்களை விடுவிக்குமாறுகோரி அவர்களது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் கடந்த வாரம் பொத்துவில் பிரதேச செயலகத்தின் முன்னால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Show More
Leave a Reply to பகீ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • rajai
    rajai

    i think Mr.JUDGE member of GreenPeace Organization. i dont know why he took 6 month to say his verdict, was he waiting to see those trees are growing back or not! if not the verdict might be death penalty…

    Reply
  • msri
    msri

    விறகு வெட்டச் சென்ற அப்பாவிகளுக்கு இத்தணடனையென்றால்> மக்களைக் கொன்று குவித்து >இரத்த ஆறையே ஓடவிடும் பாசிச -சரவாதிகாரிகளுக்கும் அவர்கள கூட்டாளிகளுக்கும் என்ன தண்டனை?

    Reply
  • accu
    accu

    எம்சிரீ!! // மக்களைக் கொன்று குவித்து >இரத்த ஆறையே ஓடவிடும் பாசிச -சரவாதிகாரிகளுக்கும் அவர்கள கூட்டாளிகளுக்கும் என்ன தண்டனை?// புலிகளைதானே குறிப்பிடுகிறீர்கள். ஒட்டு மொத்த உலகமும் சேர்ந்து கொடுக்கும் தண்டனையைதானே பர்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    முஸ்லீம் மக்களின் ஜென்மவிரோதிகள் என்பதையும் தெரியாமல் இந்த இருபத்தியாறு பேரும் காட்டில் மறைந்திருந்த புலிகளுக்கு உணவு உளவு வகைகளை பணத்திற்காக வழங்கியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. காட்டுக்குள் விறகுவெட்டச்சென்றதினால் தான் இந்த சிறைதண்டணை என்பது முழுமையான செய்தி இல்லை.விபரம் அறிந்தவர்கள் உண்மையான செய்தியை அறியத்தரவும். அஷ்ராப்அலி இது பற்றி தெளிவாக அறிந்திருப்பதற்கு இடம் உண்டு. அவர் இதுபற்றி தெளிவுபடுத்துவாரா?.

    Reply
  • ashroffali
    ashroffali

    குறித்த விறகு வெட்டிகள் அனைவருக்கும் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகவே புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்தோடு அவர்கள் புலிகளின் உதவியின்றி அவர்கள் நடமாடும் பிரதேசத்தில் விறகு வெட்டுவது நடக்காத காரியம்.கடந்த காலங்களிலும் பல விறகு வெட்டிகள் புலிகளின் உதவியுடன் மற்றும் புலிகளுக்கு கப்பம் செலுத்தியே காட்டில் விறகுவெட்டி பிழைத்துக் கொண்டிருந்தார்கள்.அவ்வாறு செய்ய மறுத்த குற்றத்திற்காகவே 2003ம் ஆண்டில் முஸ்லிம்களின் நோன்பு காலமொன்றில் கிண்ணியா விறகு வெட்டிகள் பலர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.அந்த வகையில் இங்கு குறிப்பிடப்படும் விறகு வெட்டிகள் புலிகளுடன் எதுவித தொடர்புமற்றவர்கள் என்பது நம்ப முடியாத விடயமாகும்.

    அதுவும் தவிர அவர்கள் விறகு வெட்டச் செல்வதாயின் பல நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லையே? ஆழ்கடல் மீன் பிடி போன்று காட்டில் பல நாட்கள் தங்கியிருந்து விறகு வெட்டுவதில்லையே.? அதுவும் இந்த விறகு வெட்டிகளுக்கும் புலிகளுக்கும் இடையில் தொடர்பொன்று இருப்பதாக நம்பப்படுவதற்கு காரணமாகின்றது.

    ஆனாலும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த விறகுவெட்டிகள் மீதான வழக்கை சாதாரண சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரிக்க நடவடிக்கை எடுத்தது. அதன் காரணமாகவே இவ்வாறான ஒரு வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இல்லாவிட்டால் அவசர கால சட்டவிதிகளின் பேரில் விசாரித்திருந்தால் கூடுதலான தண்டனை கிடைத்திருக்கும்.

    குறித்த விவசாயிகள் நிர்ப்பந்தம் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவே புலிகளுடன் தொடர்பு வைத்திருக்க நேர்ந்தது என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது. அதன் காரணமாகவே மனிதாபிமான அடிப்படையில் அந்த விறகு வெட்டிகள் மீதான காருண்யத்தின் அடிப்படையில் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி இன்னும் சில மாதங்களில் அவர்கள் விடுவிக்கப்பட்டு விடுவார்கள்.

    இதன் மூலம் புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் புலிகளுக்கு உதவுவோர் ஆகியோருக்கு அரசாங்கம் தெளிவான ஒரு செய்தியை முன் வைத்துள்ளது. அதாவது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருந்தாலோ அல்லது உதவி செய்தாலோ அதனை மன்னிக்கத் தயார் என்றும் அவர்களுக்குப் புனர்வாழ்வளித்து சமூகத்தில் மீண்டும் இணைவதற்கான ஒழுங்குகளைச் செய்யத்தயார் என்பதையும் அரசாங்கம் வெளிக்காட்டியுள்ளது. புலிகளும் அவர்களுக்கு உதவி செய்கின்றவர்களும் அதனை விளங்கிக் கொள்வார்களா?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    உங்கள் விளக்கத்திற்கு நன்றி அஷ்ரப். உங்கள் விபரம் என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. மீண்டும் நன்றி.

    Reply
  • palli
    palli

    இதைதான் சொல்லுறது .
    படுத்து கொண்டும் போத்துக்கலாம்;
    போத்து கொண்டும் படுத்துக்கலாம்;
    எப்படியோ தூங்குவதாக முடிவு பண்ணிட்டாங்கோ.

    Reply
  • பகீ
    பகீ

    கேள்வியும் நானே பதிலும் நானே!!! துக்ளக் வாசித்தது போல இருக்கிறது.
    ஆனால் புலியின்ர புத்தகம், சி.டி, நோட்டீஸ் வச்சிருந்தவனெல்லாம் பரலோகம் போயிட்டான்!!!!

    Reply
  • latha
    latha

    இப்பிடித்தான் யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்திடம் காசு வாங்கிக்கொண்டு புலிகளை காட்டிக் கொடுக்கும் வேலையை யாழ்ப்பாண முஸ்லிம்கள் செய்து புலிகளிடம் தண்டனை வாங்கிக் கொண்டார்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    லதா,
    சிலவேளை ஓரிரு முஸ்லிம்கள் தவறு செய்திரக்கலாம். அதற்காக எல்லா முஸ்லிம்களையும் தவறு செய்தவர்களாக காட்ட முயலாதீர்கள். அப்பறம் ஏன் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது தவறுதான் என்று ஒத்துக் கொண்டார்கள். புலிகளே தவறை உணர்ந்தாலும் உங்களைப் போன்றவர்களால் மீண்டும் மீண்டும் பொய்யுரையையே பரப்ப முடியும்.

    Reply
  • ashroffali
    ashroffali

    லதா //இப்பிடித்தான் யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்திடம் காசு வாங்கிக்கொண்டு புலிகளை காட்டிக் கொடுக்கும் வேலையை யாழ்ப்பாண முஸ்லிம்கள் செய்து புலிகளிடம் தண்டனை வாங்கிக் கொண்டார்கள்.//

    வெறுமனே ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து மற்றவர்களை முட்டாள்களாக்க வேண்டாம் லதா

    முஸ்லிம்களை வெளியேற்றிய புலிகள் கூட அப்படியொரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கவில்லை. அப்படியிருக்க நீங்கள் எப்படி ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை சொல்ல முடியும்.?

    அண்மைக் காலம் வரை முஸ்லிம் மக்கள் புலிகளுக்கு உதவி செய்த அளவுக்கு அரசாங்கத்துக்கு உதவி செய்யவில்லை. புலிகளின் ஆரம்ப கால மாவீரர்கள் பட்டியலை பரிசோதித்துப் பாருங்கள். நான் சொல்வதன் உண்மை உங்களுக்கு விளங்கும்.

    உங்களைப் போன்றவர்கள் காட்டும் காழ்ப்புணர்ச்சி மற்றும் சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் தான் இரு சமூகங்களுக்கிடையிலான பிளவுகளுக்கு வழி கோலுகின்றன.எனவே அவ்வாறான ஈனத்தனமாக செயல்களின் மூலம் ஆத்ம திருப்தி காண முயற்சிக்காதீர்கள். அது மனிதப் பண்புக்கே இழுக்கான விடயமாகும்.

    புலிகள் முஸ்லிம்களுக்கு செய்த கொடுமை பற்றிய பட்டியலை நான் முன் வைக்கட்டுமா? புலிகளின் ஆட்கள் கட்டவிழ்த்து விட்ட அடாவடித்தனங்களை பட்டியலிடட்டுமா? தாங்க மாட்டீர்கள். உங்களுடையதும் புலிகளுடையவும் மானம் நாறி விடும். ஏனெனில் தன்மானமுள்ள எந்தத் தமிழனும் புலிகளின் அடாவடித்தனங்களை அனுமதிக்கத் தயாராக இல்லை.

    Reply