முகர்ஜிக்கு எதிராக கருப்புக் கொடி: செருப்பு, துடைப்பங்களை ஏந்தி ஊர்வலம் – வைகோ கைது!

26-vaiko.jpgஇன்று தூத்துக்குடி வந்த மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்ட ஊர்வலமாக சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். கருப்புக் கொடி மற்றும் செருப்பு, துடைப்பங்களை ஏந்தி ஊர்வலம் சென்ற நூற்றுக்கணக்கான மதிமுக தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அன்ல் மின் நிலையத்தை அமைக்கின்றன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி, எட்டயபுரம் ரோட்டில் உள்ள சங்கரப்பேரி விலக்கு அருகே இன்று நடக்கிறது. இதில் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடி சென்றார்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பதாகவும், அதில் பிரணாப் முகர்ஜியின் பங்கு அதிகம் என்றும் தமிழகத்தில் இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்புகள் குறைகூறி வருகின்றன.

ராஜாஜி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தி பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக்கொடி காட்ட வைகோ இன்று தூத்துக்குடி வந்தார். வைகோ தலைமையில் மதிமுகவினர் மற்றும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் பிரணாப்புக்கு எதிராக கறுப்புக் கொடி, செருப்பு மற்றும் துடைங்களை ஏந்தியபடி நூற்றுக்கணக்கில் ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து வைகோ, விருதுநகர் மதிமுக எம்.எல்.ஏ, வரதராஜன், சிவகாசி மதிமுக எம்.எல்.ஏ ஞானதாஸ் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    போராட்டத்தை தவறென பல்லியால் சொல்ல முடியவில்லை. இருப்பினும் எதிர்விளைவுகளை கவனத்தில் எடுக்கவும். அத்துடன் தாங்கள் சிறை செலவது சகசம். ஆனால் தங்களுடன் கூட வரும் தொண்டர்களின் குடும்ப ஏழ்மையையும் கவனத்தில் எடுப்பது நல்லது. எது எப்படியோ தமிழனாய் நன்றி.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஒரு அரசியல் தலைவர் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆனால் வை கோ தானும் ஒரு கேடுகெட்ட அரசியல்வாதி தான் என்று நிரூபித்துள்ளார். அரசியலில் எதிர்ப்புகளை நாகரீகமாக தெரிவிக்க எத்தனையோ வழிகள் உண்டு. ஆனால் செருப்புகள் துடைப்பங்களை ஏந்தி ஒரு எதிர்ப்பைத் தெரிவிக்க ஒரு அரசியல் தலைவரே வழிகாட்டினால் அவரை நம்பி பின் தொடரும் வை கோவின் தொண்டர்கள் நிலைகள் நாளை என்னாகும். அதிமுகவின் சகவாசத்தினால் வை கோவின் நிலைப்பாடா இது. ஏனெனில் முன்பு அதிமுக பெண் தொண்டர்கள் சுப்பிரமணியசாமிக்கு தமது சேலைகளை உயர்த்தி காட்டியதற்கும் இதற்கும் எனக்கு வேறுபாடு தெரியவில்லை.

    Reply