- இலங்கையின் பொருளாதாரக் குறியீடுகள் என்பிபி அரசுக்கு சாதகமாக உள்ளது!
- கல்விக்கு ஒரு பிள்ளைக்கு மாதம் 15,000 ரூபாய்; செலவு! தனியார் கல்வி நிறுவனங்களின் முடிவின் ஆரம்பம்!
- கூகிளும் ஆட்குறைப்புச் செய்கின்றது! இலங்கை அரசும் ஆட்குறைப்புச் செய்ய வேண்டியுள்ளது!
- எளிமையாக இருப்பது வைரலாகும் அளவுக்கு அரசியல்வாதிகளும் மக்களும் கெட்டுப்போனார்களா?
- இமாலயப்பிரகடனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு!
- வெளிநாட்டு இலங்கையருக்கு கைமாறு: இவர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம்!
Multiple Page/Post
யாழில் இருந்து ஹம்பிரியா வரை: பிரித்தானியாவின் பாலியல் வெறியர்கள்!
பிடிக்கப்போன பிள்ளையாரை குரங்காக்கிய ஊசி அர்ச்சுனா!
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பயணிகள் அடங்கிய நாட்டுப்படகு ஒன்று இன்று (19) கரை ஒதுங்கியுள்ளது.
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் நாட்டுப்படகு ஒன்று திசைமாறி வந்துள்ளது. குறித்த கப்பலில் 25 மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.
அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த நாட்டுப்படகு இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ரவீந்திரநாத் கடத்தல் விவகாரம் – சீ.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட கருணா !
கிழக்கு மாகாணத்தில் 2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு கிழக்கு பல்கலைக்கழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. விரிவுரையாளர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார். அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட நிலையில் சிலர் பதவிகளை துறந்து நாட்டை விட்டு வெளியேறினர்.
அக்காலப்பகுதியில் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியிலிருந்த கலாநிதி கே. பத்மநாதன் தனது பதவியிலிருந்து விலகிக் கொண்டார். இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் புதிய துணை வேந்தராக பதவியேற்று கொண்ட பேராசிரியர் சி. ரவிந்திரநாத், பதவியேற்று சில வாரங்களின் பின்னரே மர்மமான முறையில் காணாமல் போனார்.
இவர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்திற்கு விடுதலைப்புலிகளிலிருந்து பிரிந்து அவ்வேளை கருணா குழுவாக செயல்பட்டவர்களே பொறுப்பு என மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை செயற்பாட்டாளர்களினாலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன அக் குழுவினரால் அவை அவ்வேளை நிராகரிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) இன்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ரவீந்திரநாத் கடத்தல் விவகாரம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியில் வந்த கருணா ஊடகங்களிடம் பேசும் போது, ரவீந்திரநாத் கடத்தல் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், மீண்டும் விசாரணைக்கு வரத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக குற்றம் சாட்டி தொடரப்பட்டுள்ள வழக்கொன்றில் குற்றவாளியாக பெயர் குறிப்பிடபட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கில் இன்று அவர் ஆஜராகவேண்டிய நிலையில் வழக்கிற்கு வருகை தரவில்லை என்பதால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
கலகோட அத்தே ஞானசார தேரர் சுகயீனம் காரணமாக இன்றைய வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை என அவர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.
எவ்வறாயினும் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
நான் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கற்ற மாணவன் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச !
தனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை நாடாளுமன்றத்தில் 18.12.2024 சமர்ப்பித்து கருத்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பேசிய விடயங்கள் பேசுபொருளாகியுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, எனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன்.தாம் ஒருபோதும் பொய்யான சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை. அவ்வாறு சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக எவரேனும் நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன்.
தனது கல்வித் தகுதி உண்மையா பொய்யா என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் விசாரித்து உறுதி செய்ய முடியும். தனது வெளிநாட்டுப் படிப்பிற்குப் பிறகு 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் திறந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.
அங்கு சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன். அப்போது விரிவுரையாளராக இருந்த தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வகுப்புகளில் கூட கலந்து கொண்டேன்” என்றார்.
சொகுபேருந்தும் உழவு இயந்திரமும் மோதி விபத்து!
பனங்கொட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த உழவு இயந்திரமும் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தும் நேற்று அதிகாலை கொடிகாமத்தில் மோதி விபத்தில் சிக்கின. இவ் விபத்தில் இவ்விரு வாகானங்களையும் செலுத்தி வந்த சாரதிகள் உட்பட 4 நான்கு பேர் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்தானது ஏ9 வீதியில் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. பெரும்பாலும் இவ்வாறான விபத்துக்கள் அதிகாலை வேளையிலேயே நடைபெறுகின்றது. அதற்கான வாய்ப்புகளே அதிகம். நித்திரைத் தூக்கமும் சோர்வும் அதற்கான காரணங்கள். இது தொடர்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகின்றது. விபத்திற்கான காரணம் முழமையாகத் தெரியவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை தொடர்கின்றனர்.
ஜனாதிபதியின் இந்திய விஜயமும் எதிர்க்கட்சியினரின் சந்தேகமும்!
நேற்று பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின் போது எதிர்கட்சி உறுப்பினர் நளின் பண்டார முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட “எட்கா ஒப்பந்தம்” தொடக்கம் அனைத்திற்கும் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுமதி வழங்கியதா? அல்லது எட்கா (ETCA – Economic and Technology Cooperation Agreement) ஒப்பந்தத்தை செய்ய ரணில் விக்கிரம சிங்கவிற்கு மக்கள் ஆணை இல்லை என்று கூறி அவ்வொப்பந்தத்தை எதிர்த்து வந்த என்பிபி தற்போது எதிர்ப்பதை நிறுத்தி விட்டதா? எனக் கேட்டார். எட்கா ஒப்பந்தம் எனப்படுவது இலங்கை இந்தியாவிற்கிடையிலான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகும்.
எட்கா ஒப்பந்தம் பற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து இலங்கை கடும்போக்குடைய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இதனை எதிர்த்து வந்திருக்கின்றார்கள். எட்கா ஒப்பந்தத்தின் படி இலங்கை – இந்தியா இரு நாடுகளுக்குமிடையே பொருட்கள் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் வர்த்தகம் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்குதல் பற்றியதாகும். எட்கா ஒப்பந்தம் வருவதை எதிர்த்தவர்கள், கைச்சாத்தானால் இலங்கை இந்தியாவின் கொலனியாகிவிடும் என சிங்கள மக்கள் மத்தியில் பீதியையும் கிளப்பியிருந்தனர்.
இந்தநிலமையிலேயே அநுராவின் இந்தியப் பயணம் தொடர்பில் இக்கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியாவுடனான வலுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்க அநுரகுமார திஸ்ஸநாயக்காவிற்கு மக்கள் ஆணை உள்ளது. அதன்படி மேலதிகமாக உற்பத்தி செய்யும் வலுசக்தியை பிம்ஸ்டெக் வலயத்திற்குள் ஏற்றுமதி செய்து நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுப்போம் என்றார். அத்துடன் நாட்டை காட்டிக்கொடுக்கும் எந்த ஒப்பந்தத்திலும் நாங்கள் இந்தியாவுடன் கையொப்பம் இடவில்லை என்றும் அறிவுள்ளவர்கள் அதனைப் படித்துப் பாருங்கள் என்றும் காட்டமாக பதிலளித்தார்.
கனடா செல்லவுள்ளோருக்கு புதிய சிக்கல் – ட்ரம்பின் மிரட்டலுக்கு பணிந்தது கனடா!
சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் குற்றங்களை கண்காணிக்கும் பொருட்டு புதிய எல்லைப் பாதுகாப்பு விதிகளை கனடா அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்கு மேலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. கனடா, எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த 1.3 பில்லியன் கனேடிய டொலர்களை ஒதுக்கியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளில், ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், கண்காணிப்பு கோபுரங்கள், மற்றும் நாய்கள், குழுக்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும், சர்வதேச சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க கூட்டு குழு உருவாக்கப்படவுள்ளது.
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளைத் தடுக்காவிட்டால், கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 சதவீத வரிவிதிப்புகளை அதிகரிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டியதிலிருந்து கனடா கடும் அழுத்தத்தை சந்தித்து வருகின்றது. கனடா அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாகும் மற்றும் அதன் மொத்த ஏற்றுமதியில் சுமார் 75 சதவிகிதம் அமெரிக்காவையே சார்ந்துள்ளது. ட்ரம்ப்பால் விதிக்கப்படும் புதிய கட்டணங்கள் கனடாவின் பொருளாதாரத்திற்கு ஒரு அடியாக இருக்கலாம். இதனை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை கனடா முன்னெடுத்துள்ளது.
கடந்த ஒக்டோபர் வரையிலான 12 மாத காலப் பகுதிக்குள் 23,000 க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்க-கனடா எல்லைக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் புதிய விதிகள் காரணமாக கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோர் மற்றும் அகதி அந்தஸ்து கோருவோர் தொடர்பில் மேலும் கெடுபிடிகள் அதிகரிக்கப்படலாம். விண்ணப்பதாரர்களின் பின்புலம் மற்றும் ஆவணங்கள் கடுமையாக சரி பார்க்கப்படலாம், பொது நலனுக்காக ஆவணங்களை ரத்து செய்யும் உரிமை கொண்ட புதிய சட்டத்தால், குடியேற்றக் கொள்கைகள் இன்னும் கடுமையாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.