மகிந்த ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி பிள்ளையான்..? – ஹிருணிக்கா பிரேமச்சந்திர

பிள்ளையான் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு சூத்திரதாரியாக இருக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஊகம் வெளியிட்டுள்ளார்.

பணத்துக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் காட்டிக் கொடுத்துவிட்டு, தனியாகப் பிரிந்து கட்சி வளர்த்த பிள்ளையான் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு சூத்திரதாரியாக இருக்க மாட்டாரா..? என ஹிருணிக்கா பிரேமச்சந்திர கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் இலங்கையர்கள் மட்டுமல்லாமல் இலங்கையின் அழகை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகளும் இந்த குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் எமது நாட்டுசுற்றுலா துறையை ஊக்குவிக்க முயன்றவர்களை கொலை செய்தது ராஜபக்ச அரசாங்கம் என்பது தெட்டத் தெளிவாக விளங்குகின்றது.

அரச புலனாய்வுத் துறையில் ஒரு முஸ்லிம் பிரதானியை வைத்துக்கொண்டு சகல விடயங்களையும் செய்துவிட்டு இன்று ஏதும் தெரியாத போல் நடிப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

உயிரிழந்த மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

“தயவு செய்து மகிந்தவை பிரதமராக்குங்கள். பிரச்சினை இல்லை..” – மனோகணேசன்

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது பிரச்சினை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், எவ்வாறான நியமனங்கள் இடம்பெற்றாலும், பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.

“நாட்டில் மிகப் பெரிய ஊழல் நடக்கிறது, “எனக்கு பிரதமர் பதவியை கொடுங்கள் என்று மகிந்த கேட்கிறார், ” யாரிடம் கேட்கிறார்? எமது ஜனாதிபதியிடம், நாங்கள் சொல்கிறோம், தயவுசெய்து அதைச் செய்யுங்கள். தயவு செய்து மகிந்தவை பிரதமராக்குங்கள். பிரச்சினை இல்லை. ஆனால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும். எமக்கு தேர்தலை பெற்றுக் கொடுங்கள். மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கின்றது என்று தெரிந்துக் கொள்ள வேண்டும். நாம் அனைத்துக்கும் தயாராகவே இருக்கின்றோம். நாம் தேர்தலில் வெற்றிப் பெறுவோம் என்பது உறுதி.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க கடவுளால் கூட முடியாது – விமல் வீரவங்ச

நாமல் ராஜபக்சவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்க புனிதமான கடவுளால் கூட முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச புறொய்லர் கோழி என்றும் அவரது தந்தை மகிந்த ராஜபக்ச அரசியலின் கிராமத்துக் கோழி என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராஜபக்ச குடும்பத்தில் எவரும் இனிவரும் காலத்தில் நாட்டின் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்படமாட்டார்கள் எனினும் அவர்கள் அரசியலில் ஏதாவது ஒரு மட்டத்தில் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டத்தின் போது மகிந்த ராஜபக்ச அரச தலைமைத்துவத்தில் இருந்திருந்தால் அதனை சரியாக நிர்வகித்திருப்பார் எனவும் பொருளாதாரம் இவ்வளவு பாரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்காது எனவும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.

“நாம் மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக மாறாமல் இருந்ததாலேயே வீழ்த்தப்பட்டோம்.” – மேதின உரையில் மகிந்த ராஜபக்ச!

“நாம் மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக மாறாமல் இருந்ததாலேயே வீழ்த்தப்பட்டோம்.” என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

கடந்த காலங்களில் பல விடயங்களை அனுபவித்த தாம் மனிதர்களை அடையாளம் காணக்கூடியதாக இருந்ததாகவும், சரியான நேரத்தில் மக்களுடன் இணைந்து சரியான தீர்மானத்தை எடுப்பேன். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பொது மே தின பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறுகையில்;

 

“… நண்பர்களே, சிலர் எங்களை விமர்சிக்கிறார்கள். ஆனால் அது அவர்களின் அரசியல் பிரச்சாரம். தேவைப்படும்போது சரியான முடிவுகளை எடுப்போம் என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

நாம் பொருளாதாரத்தை திட்டமிடும்போது, ​​உழைக்கும் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாங்கள் செய்கிறோம்.. அன்றிலிருந்து இன்று வரை நீங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுடன் இருந்துகொண்டு நாட்டின் நலனுக்காக எங்களை ஆட்சிக்கு கொண்டுவர தேவையான தியாகங்களை செய்திருக்கிறீர்கள்…

உண்மையான தொழிலாளர் தலைவர்கள் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக உழைக்கவில்லை. அந்த நேரத்தில், தொழிலாளர் இயக்கம் நாட்டின் சுதந்திரத்திற்கு முக்கிய சக்தியாக இருந்தது. உங்களுக்கு நினைவிருக்கலாம். அன்றைய தொழிலாளர் தலைவர்கள், தொழிலாளர் இயக்கத்தை நாட்டை அராஜகத்திற்கு வழிநடத்தியதில்லை.

நாம் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையாக மாறாமல், உள்ளுர் சிந்தனையின்படி வேலை செய்யப் போனதால், பல்வேறு அரசு சாரா அமைப்புகளையும், அரசியல் அமைப்புகளையும் ஒன்று திரட்டி ஒரு சதி செய்யப்பட்டது. எங்களின் உடைமைகளை மட்டுமல்ல, உயிரையும் சேதப்படுத்த நினைத்தனர்.

மக்களுக்காக ஆட்சியை கைப்பற்றி மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக்கொடுக்கும் அரசியல் அனுபவம் எமக்கும் எமது கட்சிக்கும் இருக்கின்றது என்பதை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த வேண்டும்.

 

மேலும், எந்த நேரத்திலும் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில், அமைப்பு பலத்துடன் எழ முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். எனவே, அரசியலை எவ்வளவு விமர்சித்தாலும் சேறு அரசியலில் வீழாதீர்கள்.

கடந்த காலங்களில் நாம் பல அனுபவங்களைப் பெற்றுள்ளோம். மக்கள் அங்கீகரித்தார்கள். நாம் இப்போது நாட்டை பலப்படுத்த வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாட்டை உருவாக்குங்கள்.

“முஸ்லிம்களையும் ராஜபக்‌ஷக்களையும் எந்த சக்திகளாலும் பிரிக்க முடியாது.” – அமைச்சர் அலி சப்ரி

ராஜபக்‌ஷக்களைப் புறந்தள்ளி எடுக்கப்படும் எந்தத் தீர்வுகளும் எந்தச் சமூகங்களுக்கும் நிரந்தரமாக இருக்காதென வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் விஜேராம இல்லத்தில் (19) இடம்பெற்ற இப்தாரில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள், சமய பெரியார்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

முஸ்லிம்களையும் ராஜபக்‌ஷக்களையும் எந்த சக்திகளாலும் பிரிக்க முடியாது. இவ்வாறு பிரிப்பதற்கு எடுக்கப்பட்ட சில முயற்சிகள் தற்காலிகமாத்தான் சில சமயங்களில் வெற்றியடைந்திருக்கிறன.பின்னர்,இதற் குப்பின்னாலிருந்த சக்திகளை முஸ்லிம்கள் அடையாளம் கண்டுவிடுவர்.கடந்த காலகங்களிலும் இவ்வாறுதான் நிகழ்ந்தன.இலங்கை அரசியலில் ராஜபக்‌ஷக்கள் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்கின்றனர்.இதனால்,இவர்களைப் புறந்தள்ளி எடுக்கப்படும் எந்த அரசயல் தீர்வுகளும் நிரந்தரமாக இருக்காது.

நாட்டின் ஐந்தாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்க்ஷ, இளம் வயதிலிருந்தே பலஸ்தீன முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார்.ஒடுக்கப்படும் மக்களுக்காக குரலெழுப்பும் மஹிந்த ராஜபக்‌ஷவை, மிதவாதமாகச் சிந்திக்கும் சிறுபான்மைச் சமூகங்கள் நன்கு புரிந்துவைத்துள்ளதாகவும் அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

“என்னை சிறையில் அடைத்து கடுமையான மன உளைச்சலையும், உடலியல் துன்பங்களையும் ராஜபக்ஸ அரசு செய்ததது.”- றிசாத் பதியுதீன்

“என்மீது அபாண்டம் சுமத்தி என்னை சிறையில் அடைத்து கடுமையான மன உளைச்சலையும், உடலியல் துன்பங்களையும் ராஜபக்ஸ அரசினர் செய்தனர்.” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களையும், மக்களையும் சந்திக்கும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை வெள்ளிக்கிழமை (17) மாலை கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் சகிதம் மேற்கொண்டிருந்த அவர் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றும் அரசியலுக்கு இனியும் நாம் வாய்ப்பு கொடுக்கக் கூடாது. இந்த பிரதேசத்தில் வீதி பிரச்சினைகள், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டு பிரச்சினைகள், ஏழைகளின் தொழிவாய்ப்பு போன்ற பல பிரச்சினைகள் இருக்கிறது.

அவற்றை தீர்க்கும் எந்த பொறிமுறைகளும் இவ்வளவு காலமும் உள்ளுராட்சி சபைகளை ஆட்சி செய்தவர்களிடம் இல்லை. மக்கள் விழித்துக் கொள்ளாதவரை இவர்கள் தொடர்ந்தும் எம்மை ஏமாற்றுவார்கள். ஒரு தடவை அதிகாரத்தை எங்களிடம் தந்தால் நாங்கள் முன்மாதிரியான சபையாக இந்த சபைகளை மாற்றியமைப்போம்.

என்மீது அபாண்டம் சுமத்தி என்னை சிறையில் அடைத்து கடுமையான மன உளைச்சலையும், உடலியல் துன்பங்களையும் ராஜபக்ஸ அரசினர் செய்தனர். எனக்கு சிறையில் இடம்பெற்ற அநீதிகளை அப்போதைய நீதியமைச்சர் அலி சப்ரியையும் வைத்துக்கொண்டு அவர்களுக்கு விளக்கினேன்.

இவ்வாறான சித்திரவதைகளை செய்யாமல் எனது மார்க்க கடமைகளை சுதந்திரமாக செய்ய வாய்ப்புக்களை ஏற்படுத்தி தருமாறு கேட்டேன். அப்போது அவர்களின் திட்டம் எனக்கு விளங்கியது. ஆனாலும் இறைவனின் நாட்டத்தினால் அடுத்த வாரமே நீதிமன்றம் என்னை விடுதலை செய்தது. எனக்கு இவர்கள் செய்த அநீதிக்கு பயந்து நான் சமூகத்தை அடமானம் வைக்க ஒருபோதும் எண்ணவில்லை.

அதனால் இறைவன் என்னை இப்போது கௌரவப்படுத்தி உள்ளான். பொய்யாக சோடிக்கப்பட்ட அத்தனை இனவாத அஜந்தாக்களும் தோற்று விட்டது. நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் செயலணிக்கு இனவாத முத்திரை குத்தப்பட்ட ஞனசாரவை தலைவராகவும் நியமித்தார்கள். ஆனால் இறுதியில் வென்றது சாத்தியமே. மக்களை ஏமாற்றி யாரும் அதிகாரத்தில் நீடித்திருக்க முடியாது என்றார்.

அதிகார பகிர்வுக்கு தயார் – ராஜபக்ஷக்கள் அறிவிப்பு!

அதிகாரப்பகிர்வை வழங்குவது குறித்து பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்படி ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வது என்பது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் அவ்வளவாக முரண்படவில்லை என, அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொள்கை பிரகடன உரையாற்றிய போது, ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூறினார்.

இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் மஹிந்தவிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் ராஜபக்சக்கள் மீதான தடை குறித்து அமைச்சர் அலிசப்ரி விசனம் !

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மீதான தடைக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா பொருளாதார தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக இராஜதந்திர ஆட்சேபனை வெளியிடுவதற்காக, கனடா உயர்ஸ்தானிகர், இன்று(வியாழக்கிழமை) வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது, நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து நல்லிணக்கத்தை அடையும் பொருட்டு, ஆழமாக வேரூன்றிய பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் இலங்கை ஈடுபட்டுள்ளது.

இந்த முக்கியமான தருணத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது பயனற்றது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனை பொன்னாடை போர்த்தி சந்தித்த மகிந்த – பதவியில் இருந்த போது தீர்க்க முன்வராத இனப்பிரச்சினையை தீர்க்க ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசுவதாகவும் உறுதி !

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடிக்கும் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுக்கள் பேசுபொருளாகியுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பு முன்னேற்றகரமான ஒன்றாக அமைந்திருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளமை அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்ததுடன் தமிழ்த் தேசியப் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடினார்.

இதன்போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினை போன்றவற்றை முன்வைத்த சம்பந்தன், வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும்  அரசாங்கத்துடன் கலந்துரையாடி இணக்கமான தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ச சம்பந்தனிடம் உறுதியளித்தார்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும்,  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நாளை வியாழக்கிழமை விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

இதே நேரம் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டங்களிலும் சரி – மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பணியாற்றிய காலகட்டங்களிலும் சரி இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கான சாத்திய கூறுகள் காணப்பட்ட போதும் கூட தமிழ் தேசிய அரசியல் கட்சிகளை சந்திப்பதற்கு கூட ராஜபக்ச தரப்பு பெரிதாக அக்கறை காட்டியிராத நிலையில் உள்ளூராட்சி தேர்தல்கள் நெருங்குகின்ற இந்த நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தனை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணைக்கு ஆஜராகுமாறு மகிந்தவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் !

மே மாதம் 9 ஆம் திகதி காலி முக்திடலில் ‘கோட்டா கோகம’ போராட்டத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 9) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக கூறி 5 ஆர்வலர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்கு நீதிமன்றம் திகதி நிர்ணயித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்டோரை எதிர்வரும் ஜூன் மாதம் 22ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.