யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடா்பாக மேலும் தொிய வருவதாவது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம் உள்ள நுழைவாயிலுக்கு அருகில் பட்டா வாகனத்தில் வந்த சிலா் கதவால் ஏறி குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முற்சித்துள்ளனா்.
இதனை அவதானித்த வைத்தியசாலை காவலாளி அவா்களை தடுக்க முயன்ற போது காவலாளி மீது தாக்குதல் நடத்த முயன்றதுடன், அவா்கள் வந்த பட்டா வாகனத்திலிருந்து வாளை எடுத்து காவலாளியை வெட்ட முயற்சித்ததுள்ளனா்.
இதனையடுத்து சுதாகாித்துக் கொண்ட காவலாளி அவா்களை தடுக்க முயன்ற நிலையில், அங்கிருந்த கதிரை, மேசை போன்றவற்றை வாளால் வெட்டி சேதப்படுத்திய வன்முறை கும்பல் பின்னா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இந்த சம்பவம் தொடா்பாக பொலிஸாா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.
இது ஒரு புறம் இருக்க வடக்கு மாகாணத்தின் திரும்பும் திசையெல்லாம் ராணுவத்தினர் – பொலிசாரும் அதிகமாக உள்ளனர். அதே நேரத்தில் ஒவ்வொரு சந்திக்கு சந்தி போக்குவரத்து போலிசாரும் கடமையில் தான் உள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படை என்ற பெயரிலும் ராணுவத்தினர் உலாவி கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் தெரியாத வகையில் இந்த வாள்வெட்டு குழு இயங்கிக் கொண்டிருக்கின்றதா..? திரும்பும் திசையெல்லாம் பாதுகாப்பு பிரிவு என்ற பெயரில் ராணுவத்தினரும் – பொலிசாரும் இருக்கின்றனர். இப்படி இருந்தும் கூட வடக்கின் பல பகுதிகளிலும் குறிப்பாக முக்கியமான நகர் பகுதிகளில் கூட வாள்வெட்டுச்சசம்பவங்கள் நடப்பதன் பின்னணியின் பாதுகாப்பில் உள்ள பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் அசமந்த மற்றும் கண்மூடித்தனமான போக்கும் ஒரு காரணம் எனலாம்.



