போதைப்பொருள் பாவனை

போதைப்பொருள் பாவனை

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் !

கடந்த 9 மாதங்களில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களில் மூவர் 14 வயதிற்கு உட்பட்டவர்களாவர். அதேவேளை 78 பேர் 15 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களாவர்.

ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் இவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையானவர்களிற்கான புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஐஎஸ் போன்ற மிகவும் ஆபத்தான போதைப்பொருட்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தற்போதைய சட்டங்கள் போதுமானவை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது !

மட்டக்களப்பு வாரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருளுடன் நேற்று (5) இரவு பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் காஸ்டபில் போதை பொருள் பாவனையில் ஈடுபட்டுவருவதாக மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை கண்காணித்துவந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று இரவு கடமையை முடித்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி போது அவரிடமிருந்து கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர் போதைக்கு அடிமையாகியுள்ளார் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக மத தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.” – பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர்

“ஐஸ் போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டமூலத்தை இருவார காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.” என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கொவிட் பெருந்தொற்று வைரஸ் பரவலை காட்டிலும் தற்போது ஐஸ் போதைப்பொருள் பாவனை சமூகத்தில் வேகமாக தீவிரமடைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ, மாளிகாவத்தை, கொட்டாஞ்சேனை, கிருலபன ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம்  வெளிப்படை தன்மையாகவே முன்னெடுக்கப்படுகிறது.

2021ஆம் ஆண்டு அறிக்கையின் பிரகாரம் பதினைந்து வயதிற்குட்பட்ட 50 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியில் இருந்து இடை விலகியுள்ளார்கள். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதே. வறுமையின் காரணமாக பாடசாலை கல்வியை இடைநிறுத்தி விட்டு கொழும்பு உட்பட நகர் பகுதிகளுக்கு தொழில்வாய்ப்பு தேடி வரும் இளைஞர் யுவதிகள் பாதாள மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளின் பிடிக்குள் சிக்குண்டு தமது எதிர்காலத்தை இல்லாதொழித்துக் கொள்கிறார்கள்.

ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு பாடசாலை மாணவர்கள் அடிமையாகியுள்ளார்கள். தலைநகரில் உள்ள பாடசாலைகள் மாத்திரமல்ல கிராமப்புற பாடசாலை மாணவர்களும் ஏதோவொரு போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை கவலைக்குரியது. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்படுகிறது.

ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்றும் வகையில் இரண்டு வார காலத்திற்குள் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை காட்டிலும் ஐஸ் போதைப்பொருளுக்கு எதிரான சட்டத்தை இயற்ற  அவதானம் செலுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் சமூக கட்டமைப்பில் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் தீவிரமடைந்தால் அது பாரதூரமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். போதைப்பொருள் பாவனைக்காகவே வழிபறி கொள்ளை,கொலை,கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.வழிப்பறி கொள்ளை தற்போது சாதாரணமாகி விட்டது.

போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக மத தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் சீனாவில் அபின் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக தேசிய மட்டத்தில் எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது,அதை ஒரு எடுத்துக்காட்டாக கருதி நாமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

வடக்கில் போதைப்பயன்பாடு அதிகரித்தமைக்கு இவர்களே காரணம் – கடுமையாக சாடும் சிறிதரன் எம்.பி. !

போதைவஸ்த்து பயன்பாடு அதிகரித்தமைக்கு அடிப்படை காரணம் இலங்கையின் முப்படையினரே  வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகள் மீது இந்த திட்டமிட்ட வேலைகளை அரசாங்கம் செய்துவருகிறது.” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைவஸ்து பயன்பாடு பொலிஸ், இராணுவம் ,கடற்படை இவர்களுடைய கைகளில் தான் இதனுடைய நாணய கயிறுகள் உள்ளது.  அது மட்டுமன்றி  போதைவஸ்து கடத்துபவர்களையும் பயன்படுத்துபவர்களையும் இவர்களே ஊக்குவிப்பவர்களாக இருக்கின்றார்கள்.

போதைவஸ்த்து கடத்துபவர்களை  பொலிசார் கைது செய்வதில்லை.  எவ்வளவோ போதைவஸ்துக்கள்  இங்கே  வருது என்றால் அதை தடுக்க வேண்டியது கடற்படையினர் தான் இராணுவம் இதனை தடுக்க முடியும் அவ்வாறு செய்வதில்லை.

இலங்கையில் உள்ள படைகளில் 70% வடக்கு கிழக்கிலே இருக்கிறார்கள். அவ்வாறு இருந்தும் இங்கு வருகிறது என்றால் இங்கே உள்ள இளைஞர்கள், யுவதிகளிடம்  இனிமேல் வரும் காலங்களில் இனம்பற்றி நிலம்பற்றி தங்களுடைய  இனக்குழுமம் பற்றி சிந்திக்க கூடாது என்பதற்காக  இவர்களை கோதுகளாக்குவதற்கு அரசாங்கம் இந்த வேலைகளை செய்கிறது.

இவைதொடரபில் தாய் தந்தையர்கள், மதபெரியார்கள் விழிப்புணர்வை செய்யவேண்டும்.  ஒவ்வோருவரும் தங்கள் பிள்ளைகளை கவனித்து அவர்கள் நடவடிக்கைகளை அவதானித்து அவர்களை நல்வழிபடுத்த வேண்டும் என்றார்.

யாழில் ஹெரோய்ன் போதை பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர் எடுத்த விபரீதமான முடிவு !

ஹெரோய்ன் போதை பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர் ஒருவர், தவறான முடிவெடுத்த உயிரை மாய்த்துள்ளார்.

யாழ். மருதடி – புத்தூர் மேற்கை சேர்ந்த இளைஞரே இவ்வாறு விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

கல்வியில் திறமையாக திகழ்ந்த குறித்த இளைஞன், உயர் தரத்திற்கு தெரிவான பின்னர் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பாடசாலையில் இணைந்துள்ளார். அங்கு அவர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சான்று பெற்ற சிறுவர் பாடசாலையிலும் இளைஞன் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தான் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் கடந்த ஒரு மாத காலமாக ஹெரோய்னை நுகர முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

“போதைப்பொருள் பாவனையை தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்.” – எம்.ஏ.சுமந்திரன்

போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிற நிலையில், அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

போதைப் பொருள் பாவனை தற்போது தலைவிரித்தாடுகின்றது. இதன் காரணமாக 10 இளைஞர்களுக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். 140 பேர் வரையிலானோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த காலத்தில் வன்முறை ஒழிப்போம் போதை பொருளை தடுப்போம் எனும் தொனிப்பொருளில் நாம் ஒரு வேலை திட்டத்தை ஆரம்பித்திருந்தோம்.

கொரோனாப் பெருந்தொற்று காரணமாக அதனை தொடர்ச்சியாக செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனாலும் தற்போது போதைப்பொருள் பாவனை என்பது தலைக்கு மேலே சென்று விட்டது. இதன் காரணமாக மீண்டும் அந்த வேலை திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் மூன்று விதமாக மேற்கொள்ளவுள்ளோம்.

முதலாவது – இளையவர்களுக்கு புத்திமதி வழங்கும் ஒரு விழிப்புணர்வு நிகழ்வினை பாடசாலை மட்டத்தில் நடாத்தல், இரண்டாவது – போதைப்பொருள் பாவனையில் சிக்கி உள்ளவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது தொடர்பான விடயங்களை மேற்கொள்ளல், மூன்றாவது – போதைப்பொருள் பாவனையை தடுக்கவேண்டும். இதனை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிறது. அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

தமிழர் பகுதிகளில் கடமைகளை சரியாக செய்யாத பொலிஸார் !

தமிழ் பிரதேசங்களில் பொலிஸார் தமது கடமைகளை செவ்வனே செய்வதில்லை. இலஞ்சம் ஊழலுக்குள் அவர்கள் அகப்பட்டு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் விடயங்களில் ஒதுங்கி நிற்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“யுத்தத்தினால் பாதிக்கப்பட்டதன் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் அதிகமான இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் இங்கு வாழும் இளைஞர்களை போதைப்பொருளால் அழிக்கும் முயற்சி திட்டமிட்டு செயற்படுத்தப்படுகின்றது.

இதனை நிறுத்தவேண்டிய பொறுப்பு ஆரம்பத்தில் பெற்றோர்களுக்கு இருந்தாலும் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டவேண்டிய பொறுப்பு பொலிசாருக்கு உள்ளது. ஆகவே பொலிசார் பொறுப்புடன் செயற்படவேண்டும்.

இந்த நிலையில் நிலையில்லாமல் இருக்கும் அரசு தங்களது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என செயற்படுகிறதே தவிர தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கும் சில விடயங்களை பேச்சளவில் பேசினாலும் நடைமுறையில் இல்லாத சூழல் உள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறான சூழலில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் இல்லாமையும் இங்கு பலவீனமான அரசியல் இடம்பெறுவதற்கு காரணமாகும்.

ஆகவே சமூகத்தின்பால் அக்கறை கொண்ட நல்லதொரு பிரதேச சபையினை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைதாகும் மாணவர்களை சிறைப்படுத்த வேண்டாம் !

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைதாகும் மாணவர்களை சிறைப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு , சரியான மருத்துவத்தை பெற்றுக்கொடுத்து உளவள ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆரோக்கியத்திற்கான இளையோர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆரோக்கியத்திற்கான இளையோர் இயக்கம் ஊடகங்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, போதைப்பொருள் பொருள் பாவனையானது இலங்கையை மிகவும் பாதித்து வருகிறது. குறிப்பாக வடமாகாண இளைஞர் யுவதிகள் மத்தியில் ஐஸ்,கஞ்சா போன்ற உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை மிக வேகமாக அதிகரித்து வருகின்றமை யாவரும் அறிந்ததே.

நம்முடைய அதிகாரிகள் தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் இணைந்து “போதைவஸ்து” பாவனைக்கு எதிராக போராடிவருகின்றமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகவும், அத்துடன் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என்பதை ஆரோக்கியத்திற்கான இளையோர் இயக்கம் வலியுறுத்துகிறது.

மிகவேகமாக அதிகரித்துவரும் போதைவஸ்துக்கு எதிராக அனைவரும் விழிப்புணர்வு பெற்று வருவதால் “காவல் துறையும்” மிகவும் வேகமாக செயல்பட்டுவருவதை தினசரி செய்திகளினூடாக அறியக்கிடைக்கிறது.

இதனை நாம் வெகுவாக பாராட்டுகிறோம். மேலும் பொலிஸாருக்கு உறுதுணையாக குறித்த விடையத்தில் செயல்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தும் அதே சமயம், போதைவஸ்து பாவனையால் “கைதாகும் மாணவர்களை” சிறைப்படுத்தும் நடவடிக்கைளை போலீசார் கைவிடவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

பாடசாலை மாணவ மாணவிகளை கைது செய்தால், அவர்களை சிறைப்படுத்துவதை விடுத்து “சரியான மருத்துவத்தை” பெற்றுக்கொடுப்பதுடன் கவுன்சிலிங் மூலமாக போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபடுவதற்கான சீர்திருத்த பணியை முன்னெடுத்துச் செல்ல போலீசார் உறுதுணை புரிய வேண்டும்.

போதைப்பொருள் பாவனை என்பதும் போதைப்பொருள் விற்பனை என்பது இரு வெவ்வேறு விடையங்கள் என்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது இளம் சந்ததியினரை காப்பதே எமது கடமை என்பதையும் நினைவில் கொண்டு போலீசார் கடமையாற்றவேண்டும் என்பதை ஆரோக்கியத்திற்கான இளையோர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான தனது 15 வயது மகனை பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய் – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !

போதை பொருளுக்கு அடிமையான தனது மகனை தாயார் காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்றைய தினம் யாழில் இடம்பெற்றுள்ளது.

“எனது பிள்ளை எனக்கு வேண்டாம்” என்று கடிதம் எழுதிக் கொடுத்து தனது 15 வயது மகனை சுன்னாகம் காவல்துறையினரிடம் குறித்த தாயார் ஒப்படைத்துள்ளார்.

உயிர்கொல்லி ஹெரோய்ன் போதை பொருளுக்கு தனது மகன் அடிமையானவன் என்றும் தனக்கு அவன் தேவையில்லை என காவல்துறையினரிடம் எழுத்துமூலம் கடிதம் எழுதி தாயார் ஒப்பைடைத்துள்ளார்.

இதன் பின்னர் மாணவன், சிறுவர் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டான். அச்சுவேலியில் உள்ள சீர்த்திருத்த பாடசாலையில் குறித்த சிறுவனை சேர்க்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை போதைப்பொருள் பாவனை – தடுக்க நடவடிக்கை எடுக்குமா கல்வி கற்ற யாழ்.சமூகம் !

இலங்கையின் பல பகுதிகளிலும் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் அண்மித்த  மாதங்களில் மட்டுமே யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை  கடந்தகாலத்தை விடவும்  அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக நமது தேசம் இணையதளத்தில் இந்த மாதத்தில் மட்டும் – இதுவரை வெளியாகியுள்ள செய்திகளின் தொகுப்பு.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உயிர்கொல்லிப் போதைப் பொருளான ஹெரோய்னுக்கு அடிமையான 17 வயதுச் சிறுமியொருவர் மறுவாழ்வு நிலையத்துக்கு நேற்று அனுப்பப்பட்டார். அவர் 8 மாதங்கள் கர்ப்பமாகவுள்ளார் என்றும் மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (https://www.thesamnet.co.uk//?p=89399)

ஊசி மூலம் போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நபர்களை காப்பாற்றுவதற்கு லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். ( https://www.thesamnet.co.uk//?p=89331)

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் 11 வயது சிறுமி – மீட்டெடுத்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ! ( https://www.thesamnet.co.uk//?p=89327 )

போதைப்பொருள் பாவித்த நிலையிலிருந்த 10 இளைஞர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சுற்றுலா வந்த ஸ்பெயின் பெண் – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் ( https://www.thesamnet.co.uk//?p=89304 )

யாழ். பிரபல பாடசாலையில் போதைப்பொருள் பாவித்து மயங்கி விழுந்த மாணவர்கள் – சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் விசனம் ! ( https://www.thesamnet.co.uk//?p=89291 )

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, நவகிரி பகுதியில் போதை வில்லைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 448 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ( https://www.thesamnet.co.uk//?p=89199 )

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , யாழ். போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. ( https://www.thesamnet.co.uk//?p=89131 )

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் கலாச்சாரம் – போதையில் 7 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய 14 வயதுச் சிறுவன் ! ( https://www.thesamnet.co.uk//?p=89125 )

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த நால்வர் கைது ! ( https://www.thesamnet.co.uk//?p=89010 )

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 24 வயது இளைஞன் கைது !

( https://www.thesamnet.co.uk//?p=88976 )

யாழில் போதையில் சகோதரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சகோதரன் – சகோதரி தற்கொலை! ( https://www.thesamnet.co.uk//?p=88948 )

போதையில் சகோதரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சகோதரன் – சகோதரி தற்கொலை – யாழில் குடும்ப உறவுகளையும் சீரழிக்க ஆரம்பித்துள்ள போதைப்பொருள் கலாச்சாரம் ! ( https://www.thesamnet.co.uk//?p=88884 )

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுவோரில் 25 சதவீதம் பேர் மாணவர்கள் – பகல் கனவு கண்டுகொண்டிருக்கும் கல்வி அமைச்சரும் ஆசிரியர்களும் ! ( https://www.thesamnet.co.uk//?p=88845 )