யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் 400 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தெரிவுக்காக சுமார் 4100 பேர் போட்டி !

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுகிறார்கள் என யாழ்ப்பாணமாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ,அமல்ராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாண தேர்தல் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபை களுக்கான தேர்தலில் இம்முறை போட்டியிடுகின்ற கட்சிகள் சுயேட்சை குழுக்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கிற செயற்பாடு முடிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த முறை தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.

13 அரசியல் கட்சிகள் சார்பில் 135 வேட்புமனுக்களும் 15 சுயேட்சை குழுக்கள் சார்பில் 15 வேட்புமனுக்களுமாக 150 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு தேர்தலுக்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த முறை தேர்தலில் வாக்களிப்பதற்கென யாழ் மாவட்டத்தில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 423 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள் அவர்கள் வாக்களிப்பதற்காக 514 வாக்களிப்பு நிலையங்கள் யாழ் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறை உள்ளுராட்சி மன்றசட்டத்திற்கிணங்க அந்தந்த வட்டாரங்களிலே வாக்குகள் எண்ணப்பட்டு வட்டாரங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளோம் அந்த வகையிலே 243 வாக்கு எணணும் நிலையங்கள் யாழ் மாவட்டம் முழுவதுமாக அமைக்கப்படவுள்ளன.

எனவே அந்த 243 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகள் எண்ணப் பட்டு வட்டார தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பின்னர் மாவட்ட ரீதியாக முடிவுகள் அறிவிக்கப்படுகிற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.

மொத்தமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமாக வட்டார அடிப்படையில் 243 உறுப்பினர்களும் கட்சிகள் பெற்றுக் கொள்கின்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிந்து அனுப்பப்பட வேண்டிய 159 வேட்பாளர்களுமாக 402 உறுப்பினர்கள் 17 சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட வேண்டிஇருக்கின்றது.

இந்த 402 உறுப்பினர்கள் தெரிவிற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 4111வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் 13 கட்சிகள் சார்பில் 3686 வேட்பாளர்களும் 15 சுயேட்சை குழுக்கள் சார்பாக 425 வேட்பாளர்களுமாக 4111 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளார்கள் இதன் அடிப்படையில் மொத்த வாக்காளர் தொகையிலேயே 0.85 வீதமான வேட்பாளர்கள் அவர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது !

யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஆறுகால் மடப்பகுதியை சேர்ந்த இளைஞரே இவ்வாறு யாழ். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி, இந்த போதைப் பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்ததாக கைது செய்யப்பட்டவரிடம் மேற்கோண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் 30 நாட்களுக்குள் ஹெரோயினுக்கு அடிமையான 183 பேர் அடையாளம் !

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயினுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 155 பேரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை நீதிமன்றங்களினால் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக என யாழ்.போதனா தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருளை விற்பனையில் ஈடுபட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவன் உட்பட மூவர் கைது !

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் நேற்று (வியாழக்கிழமை) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் மூவரில் ஒருவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய இருவரும் சகோதரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் , யாழ்ப்பாண தொழிநுட்ப கல்லூரி , திறந்த பல்கலைக்கழகம் – யாழ்ப்பாணம் , யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவைக்கு அண்மையில் உள்ள கலட்டி சந்திக்கு அருகில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக, யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் நடாத்திய சோதனை நடவடிக்கையில், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மூன்று மாணவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் சகோதரர்கள் எனவும் , அவர்கள் இருவரும் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , மற்றையவர் பதுளையை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மாணவர்களுக்கு போதை பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 22 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர

யாழில் ஹெரோய்ன் போதை பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர் எடுத்த விபரீதமான முடிவு !

ஹெரோய்ன் போதை பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர் ஒருவர், தவறான முடிவெடுத்த உயிரை மாய்த்துள்ளார்.

யாழ். மருதடி – புத்தூர் மேற்கை சேர்ந்த இளைஞரே இவ்வாறு விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

கல்வியில் திறமையாக திகழ்ந்த குறித்த இளைஞன், உயர் தரத்திற்கு தெரிவான பின்னர் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பாடசாலையில் இணைந்துள்ளார். அங்கு அவர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சான்று பெற்ற சிறுவர் பாடசாலையிலும் இளைஞன் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தான் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் கடந்த ஒரு மாத காலமாக ஹெரோய்னை நுகர முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான தனது 15 வயது மகனை பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய் – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !

போதை பொருளுக்கு அடிமையான தனது மகனை தாயார் காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்றைய தினம் யாழில் இடம்பெற்றுள்ளது.

“எனது பிள்ளை எனக்கு வேண்டாம்” என்று கடிதம் எழுதிக் கொடுத்து தனது 15 வயது மகனை சுன்னாகம் காவல்துறையினரிடம் குறித்த தாயார் ஒப்படைத்துள்ளார்.

உயிர்கொல்லி ஹெரோய்ன் போதை பொருளுக்கு தனது மகன் அடிமையானவன் என்றும் தனக்கு அவன் தேவையில்லை என காவல்துறையினரிடம் எழுத்துமூலம் கடிதம் எழுதி தாயார் ஒப்பைடைத்துள்ளார்.

இதன் பின்னர் மாணவன், சிறுவர் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டான். அச்சுவேலியில் உள்ள சீர்த்திருத்த பாடசாலையில் குறித்த சிறுவனை சேர்க்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை போதைப்பொருள் பாவனை – தடுக்க நடவடிக்கை எடுக்குமா கல்வி கற்ற யாழ்.சமூகம் !

இலங்கையின் பல பகுதிகளிலும் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் அண்மித்த  மாதங்களில் மட்டுமே யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை  கடந்தகாலத்தை விடவும்  அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக நமது தேசம் இணையதளத்தில் இந்த மாதத்தில் மட்டும் – இதுவரை வெளியாகியுள்ள செய்திகளின் தொகுப்பு.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உயிர்கொல்லிப் போதைப் பொருளான ஹெரோய்னுக்கு அடிமையான 17 வயதுச் சிறுமியொருவர் மறுவாழ்வு நிலையத்துக்கு நேற்று அனுப்பப்பட்டார். அவர் 8 மாதங்கள் கர்ப்பமாகவுள்ளார் என்றும் மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (https://www.thesamnet.co.uk//?p=89399)

ஊசி மூலம் போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நபர்களை காப்பாற்றுவதற்கு லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். ( https://www.thesamnet.co.uk//?p=89331)

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் 11 வயது சிறுமி – மீட்டெடுத்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ! ( https://www.thesamnet.co.uk//?p=89327 )

போதைப்பொருள் பாவித்த நிலையிலிருந்த 10 இளைஞர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சுற்றுலா வந்த ஸ்பெயின் பெண் – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் ( https://www.thesamnet.co.uk//?p=89304 )

யாழ். பிரபல பாடசாலையில் போதைப்பொருள் பாவித்து மயங்கி விழுந்த மாணவர்கள் – சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் விசனம் ! ( https://www.thesamnet.co.uk//?p=89291 )

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, நவகிரி பகுதியில் போதை வில்லைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 448 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ( https://www.thesamnet.co.uk//?p=89199 )

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , யாழ். போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. ( https://www.thesamnet.co.uk//?p=89131 )

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் கலாச்சாரம் – போதையில் 7 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய 14 வயதுச் சிறுவன் ! ( https://www.thesamnet.co.uk//?p=89125 )

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த நால்வர் கைது ! ( https://www.thesamnet.co.uk//?p=89010 )

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 24 வயது இளைஞன் கைது !

( https://www.thesamnet.co.uk//?p=88976 )

யாழில் போதையில் சகோதரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சகோதரன் – சகோதரி தற்கொலை! ( https://www.thesamnet.co.uk//?p=88948 )

போதையில் சகோதரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சகோதரன் – சகோதரி தற்கொலை – யாழில் குடும்ப உறவுகளையும் சீரழிக்க ஆரம்பித்துள்ள போதைப்பொருள் கலாச்சாரம் ! ( https://www.thesamnet.co.uk//?p=88884 )

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுவோரில் 25 சதவீதம் பேர் மாணவர்கள் – பகல் கனவு கண்டுகொண்டிருக்கும் கல்வி அமைச்சரும் ஆசிரியர்களும் ! ( https://www.thesamnet.co.uk//?p=88845 )

 

 

 

யாழில் பத்திரிகைகள் முடங்கும் அபாயம்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறித்த பத்திரிகைகள் விநியோகத்தில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.

பத்திரிக்கை விநியோக பணியில் ஈடுபடும் பணியாளர்கள் எரிபொருள் இன்மையால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதால் விநியோக பணிகள் பாதிக்கப்படவுள்ளன. அதனால் பத்திரிகைகள் முடக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

இது தொடர்பில் பத்திரிக்கை நிறுவன தலைவர்கள் , ஆசிரியர் பீடத்தினர் வடமாகாண ஆளூநர் , மாவட்ட செயலர் ஆகியோருடன் கலந்துரையாடிய போதிலும் சாதகமான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை யாழில் மூன்று தொலைகாட்சி நிறுவனங்கள்,  வானொலி சேவைகள் என்பன உள்ளடங்கலாக 10 க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் உள்ளன.

அவற்றில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் ஊடக பணியாளர்கள் என பலரும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதேபோன்று யாழில் இருந்து கொழும்பில் உள்ள ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

யாழில் மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு ஆதரவாக நடைபயண பேரணி !

மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) பேரணியொன்று இடம்பெற்றது.

ஒடுக்குமுறைகளுக்குட்படுத்தாத வாழ்தலை நோக்கிய பயணம்! - GTN

யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் யாழ் நகரப்பகுதிகளில் பேரணியாகச் சென்றனர்.

யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் மாற்றுப்பாலின சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்குட்படுத்தாத வாழ்தலை நோக்கி குரல் கொடுப்போம் என்ற நோக்கில் வானவில் நடைபயண ஒருங்கிணைவு எனும் தலைப்பில் இந்தப் பேரணி இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

“அன்று வடக்கு மக்கள் சாப்பிடுவதற்கும், பல் துலக்குவதற்கும் மட்டுமே வாய் திறந்தார்கள்.” – யாழில் மகிந்த ராஜபக்ஷ !

யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது..

விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்தியநிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. யாழ்ப்பாணம், மட்டுவில் நகருக்கு வருகை தந்த கௌரவ பிரதமருக்கு அப்பகுதி மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன், யாழ் விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்து நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.

சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இந்த விசேட பொருளாதார மத்தியநிலையத்திற்கு பதுளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் யாழ் சந்தையிலிருந்து அத்தியாவசிய மரக்கறிகள் மற்றும் பழங்கள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாண விசேட பொருளாதார மத்தியநிலையத்தை திறந்து வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, உங்கள் அனைவரையும் சந்திப்பதில் சந்தோஷம் என தமிழில் உரையாற்றினார்.

யாழ்ப்பாணத்தின் மூன்று யுகங்களை நான் கண்டிருக்கிறேன். 1970களில் யாழ்ப்பாணம் எப்படி இருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது யாழ் மக்களுக்கும் கொழும்பு மக்களுக்கும் இடையே சிறந்த தொடர்பு இருந்தது. யாழ்ப்பாணத்தில் சிங்கள முதலாளிமார் இருந்தார்கள். இங்கிருந்த பெரும்பாலான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது கொழும்பில் இருந்தனர். இன்றும் அப்படித்தான். யாழ்ப்பாணத்திலிருந்து ரயிலிலே கொழும்பு வந்துசென்றனர்.

கொழும்பில் பணிபுரியும் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மாலை ரயிலில் ஏறி காலையில் யாழ்ப்பாணத்தை சென்றடைவர். அது ஒரு காலம். அந்தக் காலத்தில் யாழ்ப்பாணம் எங்களுக்கு வெகு தொலைவில் இல்லை. மிக நெருக்கமாக உணர்ந்தோம்.

அந்த சகாப்தம் 1980க்குப் பின்னர் திடீரென மறைந்தது. யாழ்ப்பாணம் செல்லும் ரயில் பாதையை உடைத்தனர். தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் செல்ல வேண்டிய யாழ்தேவி நின்றது. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பண்பாட்டுப் பாலமாக யாழ்தேவியைப் பார்க்கிறேன்.

வடக்கு மக்கள் சுதந்திரத்தை இழக்க ஆரம்பித்தனர். வடக்கில் விவசாயி நெல் வயலுக்குச் செல்ல முடியவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. வடக்கு பதுங்கு குழியாக மாறியது. சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் உரிமையை இழந்தனர். எந்த நேரத்திலும் தமது சொந்த வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது.

வடக்கில் உள்ள மக்கள் அகதிகளாக பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆரம்ப காலத்தில் இந்தியாவிற்கும் சென்றனர். ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றனர். அவர்களுக்கு தாயகம் இருந்தாலும் அங்கு சுதந்திரமாக வாழமுடியாமல், தெரியாத பிரதேசங்களிலும், நாடுகளிலும் அகதிகளாக வாழ வேண்டியதாயிற்று.

30 ஆண்டுகளாக அந்த இருண்ட சகாப்தம் இருந்தது. அந்த இருண்ட காலத்தில் வடக்கு மக்களின் வாழ்வுரிமையும் அபிவிருத்தியும் பறிக்கப்பட்டன. மே 19, 2019 அன்று அந்த இருண்ட சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது. அதன் பின்னர் வடக்கு மக்கள் இழந்த உயிர்களை தவிர அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

யுத்தம் முடிவடையும் போது இன்று வடக்கில் உள்ள எதையும் அன்று காணமுடியவில்லை. சுட்டு வீழ்த்தப்பட்ட கட்டிடங்கள், உடைந்த சாலைகள், வீடற்ற மக்கள். ஆனால் ஓரிரு வருடங்களில் அனைத்தையும் திருப்பிக் கொடுத்தோம். சாலைகள் அமைக்கப்பட்டன, தண்ணீர் வழங்கப்பட்டன, நூறாயிரக்கணக்கான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன. மின்னல் வேகத்தில் மின்சாரம் கொடுக்கப்பட்டது என்று சொல்வதே சரியாக இருக்கும். பாடசாலைகள், மருத்துவமனைகள், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் கட்டப்பட்டன.

அன்று வடக்கு மக்கள் சாப்பிடுவதற்கும், பல் துலக்குவதற்கும் மட்டுமே வாய் திறக்கிறார்கள் என்ற கதை காணப்பட்டது. அந்த மக்களை நாம் விடுவித்தோம். பல ஆண்டுகள் கழித்து ரயில் பாதை அமைக்கப்பட்டது. வடக்கும் தெற்கும் யாழ்தேவியால் இணைக்கப்பட்டன. வடக்கில் மாகாண சபை மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டது.

ஆனால் அந்த சகாப்தத்திற்கு 2015 இல் இடையூறு ஏற்பட்டது. 2015இன் பின்னர் நாங்கள் நாங்கள் செய்த வேலைகள் இடைநிறுத்தப்பட்டன. நல்லிணக்கம் என்ற திட்டம் வந்தது. அவசரகாலச் சட்டங்களை நீக்கி நாம் ஏற்படுத்திய மாகாண சபை நல்லாட்சியுடன் கலைக்கப்பட்டது. நல்லாட்சி காலத்தில் ஒரு வீதி அபிவிருத்தியோ அல்லது மின்சார திட்டமோ யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கவில்லை. நாட்டிற்கும் கிடைக்கவில்லை.

புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டிருந்தால் யாழ்ப்பாண மக்கள் இன்று இருளில் மூழ்கியிருக்க மாட்டார்கள்.

ஆனால் அந்த நல்லிணக்கத் திட்டத்திற்காக பில்லியன்கள் செலவிடப்பட்டன.

சமாதானம் பற்றிய பாடலுக்கு பில்லியன்கள் செலவழிக்கப்பட்டன. யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு குடிநீர் குழாய் வழங்கப்படவில்லை. நாங்கள் செய்து கொண்டிருந்த பணி 2015ல் நிறுத்தப்பட்டது. நாம் அதை மீண்டும் தொடங்க வேண்டும். 2019ஆம் ஆண்டு மீண்டும் இந்த நாட்டைக் கைப்பற்றிய போது, நல்லாட்சியின் மூலம் பின்னோக்கிச் சென்ற நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப திட்டமிட்டோம்.

ஆனால் திடீரென்று கொவிட் தொற்று ஏற்பட்டது. அந்த நேரத்தில் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் எமது மக்களைப் பாதுகாக்கவே விரும்பினோம். நாம் அதை செய்தோம். வடக்கு மக்களைப் போன்று தென்னிலங்கை மக்களையும் தொற்று நோயிலிருந்து பாதுகாக்க முடிந்தது.

உங்கள் மாகாணங்களில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளையும், மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளையும் ஆரம்பிப்போம் என உறுதியளிக்கின்றோம். உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் தெரிவித்தார்.

தொடர்ந்து நாம் உங்களை மறக்கமாட்டோம். கைவிடமாட்டோம் என தமிழில் உரையாற்றினார்.