ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்க

கோட்டாபாய ராஜபக்சவுக்கு மனோரீதியான அழுத்தங்களை கொடுத்த அமெரிக்கா – விமல் வீரவங்ச பகீர் !

கோட்டாபாய ராஜபக்சவை பதவியை கவிழ்ப்பதிலும் – ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பிலும் மேற்குலக நாடுகளின் பங்களிப்பு – குறிப்பாக அமெரிக்கா அதிகமாக மறைமுகமாக  செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மனோ ரீதியான அழுத்தங்களை மேற்கொண்டு வந்ததார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மனோ ரீதியான அழுத்தங்களை மேற்கொண்டு வந்ததார். ஆகவே இலங்கையில் இன்று மன ரீதியான அழுத்தம் கொடுத்து விடயம் சாதிக்கப்படுகின்றன .

அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமைய அனைத்து அரசியல் கட்சிகளும் தகுந்த தீர்மானங்களை எடுக்க வேண்டும். குறைபாடுகள் இருந்தாலும் நாட்டில் தற்போது சட்டபூர்வமான அரசாங்கம். ஆனால் தற்போதைய அரசாங்கம், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் எந்த திட்டங்களையும் முன்வைக்கவில்லை.

மேலும் தமது திட்டங்களை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும்.  நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் அரசாங்கத்தை வலியுறுத்துவோம். அதுமட்டுமன்றி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படும் சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக தலையிடத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல்வாதிகளுக்கு எதிராக ஆகஸ்ட் 9ல் போராட போகிறாராம் பொன்சேகா !

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பான விவாவத்தில் உரையாற்றியபோதே சரத் பொன்சேகா இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

போராட்டக்காரர்கள் நாட்டுக்காக போராடினார்கள். அவர்கள் எங்களின் உறவினர்கள். அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம். அதேநேரம் ஊழல் அரசியல்வாதிகளை பாதுகாக்க வேண்டாம் என்றும் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார். இவ்வாறான தாக்குதல்கள் மூலம் இலங்கை இராணுவத்துக்கு கிடைத்த பெருமையைக் குலைக்க வேண்டாம் என்றும் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.

இதேவேளை போராட்டவாதிகள் மத்தியில் பல்வேறு கொள்கைகள் இருக்கின்றபோதும், ஒரே கொள்கைக்காக ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தநிலையில் ஓருவரை இருவரை அகற்றியதன் மூலம் தூய்மையான அரசியலை ஏற்படுத்தமுடியாது. எனவே எதிர்வரும் 9ஆம் திகதியன்று கொழும்பில் ஒன்றுகூடி ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

இந்த நிலையில் போராட்டவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டார்.

……..

இன்று இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஒவ்வொரு தென்னிலங்கை தலைவர்களுமே கூட்டாக பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் தான்.  இன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசை ஊழல்வாதிகள் என  கடுமையாக சாடும் இதே பொன்சேகா கடந்தகாலங்களில் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டுச் சேர்ந்தே ராஜபக்ஷக்களுக்கு எதிரான தேர்தலை எதிர்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று தனக்கான ஆதரவுத் தளத்தை உறுதி செய்ய இன்று ஊழல் என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளார்.

பொன்சேகாவின் இந்த பாராளுமன்ற உரை கூட தனித்த ஒரு இனத்தை மட்டுமே மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி நேரத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்கள் அனைத்திலும் இவருக்கும் பங்கு உண்டு.இறுதி போர்க்குற்றங்கள் தொடர்பிலும் – காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்களிலும் வாய் மூடிக்கொண்டிருக்கும் இதே பொன்சேகா இன்று மக்களின் உணர்வு – மனிதாபிமானம் போன்றன பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கையானது.

இன்று நல்லவர் வேடம் போட்டுக்கொண்டு தனது அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளார் பொன்சேகா. இன்று தென்னிலங்கை சமூகத்தின் கனிசமான இளைஞர்களும் போர் வெற்றியை கோட்டாவுக்கு கொடுக்க கூடாது என்பதற்காக பொன்சேகாவுக்கு கொடுக்கிறார்கள். கோ கோம் கோட்டா போராட்ட களங்களிலும் இதனை அவதானிக்க முடிந்தது.

ஆக மொத்தத்தில் ஒரு விட இன்றைய கால போராட்டங்களில் தெளிவாக தெரிகிறது ” இந்த இலங்கை மீண்டும் இனவாத சாக்கடைக்குள் மூழ்கி மூழ்கியே இருக்க போகிறதே தவிர மீட்சி அடைய வழியே இல்லை”

“அதிகாரத்தை கைப்பற்ற தென்னிலங்கையில் ஆயுதப்போராட்டம்.” – மனுஷ நாணயக்கார எச்சரிக்கை !

“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறை நீக்கப்படும்.” என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பாளர்களும் கிளர்ச்சியாளர்களும் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதால் அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதப் போராட்டத்தை தொடங்க திட்டமிடலாம்.

இன்று இலங்கைக்கு தேவையானது அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானமே. போராட்டக்காரர்கள் வன்முறையை கையில் எடுத்தால் அரசாங்கம் அவர்களை நிராயுதபாணியாக்கும்.

அமைதியான போராட்டங்களுக்கு அரசாங்கம் எப்போதும் ஆதரவளிக்கும். அவர்களின் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு இடங்கள் வழங்கப்படும்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறை நீக்கப்படும்.

புதிய அரசியலமைப்பு கொண்டுவருவதற்கான நடவடிக்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

ரணிலுக்கு எதிராக போராடுவோருக்கு நான் ஆதரவு தருவேன் – பொன்சேகா

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக போராடும் மக்களுக்கு தான் ஆதரவு வழங்குவேன் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மக்கள் எழுச்சியானது எல்லாவற்றையும் விட சக்தி வாய்ந்தது எனவும், இதனால் ராஜபக்ஷக்கள் தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அதனை ஜனாதிபதி புரிந்து கொண்டு கையாள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, இராணுவத்தினர் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்துள்ள அவர், போராட்டக்காரர்களை குற்றம் சாட்டும் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

மக்கள் சக்தியை ஆயுத பலத்தால் ஒருபோதும் அடக்க முடியாது. இந்த மக்கள் சக்திதான் ராஜபக்சவை உயர் பதவிகளில் இருந்து விரட்டியது. இதை ரணில் விக்கிரமசிங்க புரிந்து கொள்ள வேண்டும். ரணிலுக்கு எதிராக வெறும் தலையுடன் போராடும் மக்களுக்கு தனது முழு ஆதரவையும் தொடர்ந்து வழங்குவேன் என பாராளுமன்ற உறுப்பினர்  சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு வாக்களிக்க தலா 10 கோடி ரூபா முதல் 15 கோடி ரூபா வரை வழங்கப்பட்டது.” – ராஜித சேனாரத்ன பகீர் !

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் வெற்றிபெற ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கியதாக தலா 10 கோடி ரூபா முதல் 15 கோடி ரூபாவை வழங்கியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பான விடயத்தில் நாங்கள் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். ஆனால், ரணில் விக்ரமசிங்க தரப்பினர் தனித்தனியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ரணில் விக்ரமசிங்க,பொதுஜன பெரமுனவின் முட்டாள்களை நன்கு பயன்படுத்திக்கொள்வார் எனவும்தெரியும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தை வழங்குவது, எரிந்து போன வீட்டுக்கு பதிலாக வீடு, அவற்றுக்கு இழப்பீடு வழங்குவது, கார்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம், இரண்டு ஆண்டு காப்பீடு போன்றவற்றை அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசினர்.

பெருந்தொகையான பணம் பரிமாறப்பட்டது. எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பொதுஜன பெரமுனவை சேர்ந்த 15 பேரை கொண்ட நாடாளுமன்ற குழுவினர்களும் எங்களிடம் பணத்தை கோரினர்.

டலஸ் அழகப்பெருமவை நாங்கள் ஆதரிக்கின்றோம், எங்களுக்கு எவ்வளவு பணம் தருவீர்கள் என கேட்டனர். இது பற்றி நான் சஜித்திடம் பேசினேன், ஐந்து சதம் கூட வழங்கக் கூடாது என அவர் சொன்னார்.

அதனை நான் நூற்றுக்கு நூறு வீதம் ஏற்றுக்கொள்கிறேன். ரணில் விக்ரமசிங்கவுக்கு இவர்கள் வாக்களிக்க 10 முதல் 15 கோடி ரூபா வரை பெற்றனர் என்று எனக்கு தகவல் கிடைத்தது. சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து இன்னும் பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். சஜித் பிரேமதாச முதிர்ச்சியான அரசியல்வாதியாக மாறி வருகிறார். அவர் மிக நேர்மையானவர் என்பதுடன் அப்பாவி எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நோ டீல் கமவை அகற்ற போராட்டக்காரர்கள் முடிவு !

ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்திருந்த நிலையில் மே மாதம் 9ஆம் திகதி முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.

அதனை தொடர்ந்து தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் தெரிவாகியிருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கி வைத்திருந்தார்.

ராஜபக்ஷ அரசை பாதுகாப்பிற்காகவே ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்றார் என கூறி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் நோ டீல் கம எனும் தொனியில் அலரி மாளிகையின் முன்னால் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இதுவரை காலமும் நடாத்தி வந்த நோ டீல் கம போராட்டம் முனைப்படையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி அலரிமாளிகைக்கு முன்னாள் அமைக்கப்பட்டிருந்த ´நோ டீல் கம´ வை அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்கு அங்குள்ள ஆர்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான இந்த போராட்டங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அதிகார வெற்றிக்காக  திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டவை என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பை தொடர்ந்து நோ டீல் கம குழுவினர் மௌனித்துள்ளமையானது ராஜபக்ஷக்களின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை தூண்டியதன் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க உள்ளாரா என்ற சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள் – ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

“140 வாக்குகளுடன் ரணில் ஜனாதிபதியாவார்.” – ரணிலை ஜனாதிபதியாக்கவா இத்தனை போராட்டங்கள்..?

இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக கூட நியமிக்க கூடாது என காட்டுக்கூச்சல் போட்டுக்கொண்டிருந்த கோட்டாகோகம போராட்டக்காரர்கள் தற்போது நீடித்த அமைதி காப்பதானது;  நடத்தி முடிக்கப்பட்டுள்ள போராட்டங்களின் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்கவும் – மேற்குலக சதியும் இருப்பதாக பல அரசியல் விமர்சகர்களும் சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

“எந்த ஆதனமும் இல்லாமல் ரணிலின் சகாக்களுக்கு 54பில்லியன் ரூபா கடன்கள் வழங்கியுள்ள மக்கள் வங்கி.”- இரா.சாணக்கியன் காட்டம் !

“பிள்ளையானுக்கும் கொள்கையில்லை,ரணிலுக்கும் கொள்கையில்லை.இருவரும் ஒன்றாக பயணிக்கமுடியும்.” என  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாட்டில் மக்கள் எழுச்சிமூலம் மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் எதிரான மிகப்பெரும் துரோகச்செயலை செய்து பிரதமர் பதவியினை ஏற்று ஜனாதிபதி ராஜபக்ஸக்களை பாதுகாப்பதற்கான முழு முயற்சியையும் முன்னெடுத்துள்ளார்.

புதிதாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னரும் எரிபொருட்கள் உட்பட பல்வேறு பொருட்கள் விலைகள் அதிகரித்துள்ளன. இந்தவிலையேற்றம் தொடர்பாக அமைச்சர் காஞ்சன விஜயசேகர பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். 180ரூபாவாகயிருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி 365ரூபாவுக்கு வந்துள்ளது.பொருளாதாரத்தினை சரியாக முகாமைசெய்யாத காரணத்தினாலேயே இந்த நிலைமையேற்பட்டது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ எடுத்த பிழையான தீர்மானங்களே நாடு இந்த நிலைக்கு செல்வதற்கு காரணமாகவுள்ளன. எரிபொருள் அதிகரிததால் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். இன்று மக்கள் இந்த பொருளாதார நிலைமைக்கு ஈடுகொடுக்கமுடியாத நிலையுள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வாக என்ன செய்யவேண்டும் என இலங்கைக்கு உதவும் பல்வேறு அமைப்புகளும் ஸ்திரமான அரசியல் சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டும் என்று கூறிவிட்டது. இலங்கையானது பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேவருவதாகயிருந்தால் இந்த அரசியல் ஸ்த்திரத்தன்மை ஏற்படுத்தப்படவேண்டும். அதற்காக மக்கள் நம்பிக்கை வைக்ககூடிய ஜனாதிபதி,மக்கள் நம்பிக்கை வைக்ககூடிய பிரதமர்,மக்கள் நம்பிக்கைவைக்ககூடிய பாராளுமன்றம்,மக்களின் நம்பிக்கையினை வென்றெடுக்ககூடிய அமைச்சரவை இருப்பதுதான் அரசியல் ஸ்திரத்தன்மையாகும்.இன்று சர்வதேசம் மறைமுகமாக சொல்வது கோத்தாபாய ராஜபக்ஸ வீட்டுக்கு செல்லவேண்டும்.

கோத்தா கோ ஹோம் என்ற அலை அனைத்து பகுதிளிலும் ஒலிக்கும் நிலையில் ஜனாதிபதி அவரது அதிகாரத்தினை குறைக்கும் சட்டம் என்ற போர்வையில் 21வது திருத்த சட்டத்தினை கொண்டுவந்து மக்களை ஏமாற்றும் நாடகத்தினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ளார்.

இந்த நாடு மிக பாரதூரமான நெருக்கடிகளை கொண்டுள்ள நிலையில் பெரும்பாலானவர்கள் வாழ்வாதாரத்தினை இழந்துள்ள நிலையில் கடந்த ஐந்த வருடத்தில் மக்கள் வங்கியின் ஊடாக ஆக கூடுதலான கடன்களைப்பெற்றவர்கள் இதுவரையில் ஒரு ரூபா கூட செலுத்தாதவர்கள் உள்ளனர். இதில் முன்னாள் அமைச்சர் தயாகமகே என்னும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர் 2019ஆம்ஆண்டு தொடக்கம் 2022ஆம்ஆண்டு வரையில் 5000மில்லியனுக்கும் அதிகமான தொகையினை கடனாக பெற்றுள்ளார். அதிகமான கடனைப்பெற்று இதுவரையில் ஒரு ரூபா கூட மீள செலுத்தாதவர்களில் முதல் பத்துப்பேரில் ஆறாவது இடத்தில் அவர் உள்ளார்.

இது ராஜபக்ஸ குடும்பத்தின் காசும் அல்ல தனியாரின் காசும் அல்ல.மக்களின் காசு.இது தொடர்பில் பாராளுமன்றத்தில் நான் பேசியதற்காக இன்று காலை மக்கள் வங்கியின் தலைவரினால் எனக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த கடன்களை மீளப்பெறுவதற்கான சட்ட ஆலோசனை செய்வதாக கூறப்பட்டுள்ளது. மூன்று பில்லியன் பணம் ஒரு தனி நபருக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆனால் நான்கு வருடத்திற்கு பின்னர் என்ன நடவடிக்கையெடுக்கலாம் என ஆராய்வதாக தெரிவிக்கின்றனர்.

லீசிங் கட்டமுடியாத சாதாரண மக்களின் வாகனங்களை பறித்துச்செல்கின்றீர்கள்,சிறு வர்த்தகளின் கடன்கள் கட்டாவிட்டால் வர்த்தக நிலையத்தினை ஏலத்தில் விடுகின்றீர்கள். தனிநபர் 3000இதுவரை கட்டவில்லையென்றதுடன் எனக்கு கடிதம் அனுப்புகின்றார்கள்.ஏனென்னால் அவர் ரணிலின் சகா என்பதனாலாகும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிதாக நிதியமைச்சர் பதவியையேற்றதன் பின்னர் அந்த அமைச்சின் கீழ் வரும் மக்கள் வங்கி ஊடாக முதல்வேலையாக எனக்கு கடிதம் அனுப்பும் வேலையைதான் செய்துள்ளார்.

இனங்காணப்பட்ட முதல் பத்து பேருக்கு கடந்த ஐந்த வருடத்தில் 54பில்லியன் ரூபா கடன்கள் மக்கள் வங்கி ஊடாக வழங்கப்படடுள்ளது. இது கோப் குழுவினால் பெறப்பட்ட தகவல்.இதனை நான் பகிரங்கப்படுத்தியதற்காக என்னை இடைநிறுத்தினாலும் நான் கவலைப்படப்போவதில்லை.கடன்பெறப்போகும்  வங்கிகளில் ஏதாவது அடமானம் வைத்தே பணம் வழங்கப்படுகின்றதே. ஆனால் இவ்வளவு பெரிய நிதியானது எந்தவித ஆதனமும் இன்றி வழங்கப்பட்டுள்ளது.

இன்று மட்டக்களப்பில் மக்கள் தினமும் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் இன்று வேட்டிய மடிச்சு கட்டுவது குறித்து பேசுகின்றனர். ஆரையம்பதியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றோலுக்கும் எரிவாயுவுக்கும் தினமும் கஸ்டப்படுகின்றனர். அதனை வீதிக்கு சென்று மக்களின் நிலைமையினை பார்த்து அதனை தீர்த்துவைக்க முயற்சி செய்யுங்கள். மேலதிகமாக 2000எரிவாயு சிலிண்டர்களை மட்டக்களப்புக்கு கொண்டுவரமுடியாத வக்கற்ற தலைவராகவே உங்கள் தலைவர் இருக்கின்றார். வேட்டியை மடித்துக்கட்டதேவையில்லை,மக்களுக்கு ஏதாவது செய்ய சொல்லுங்கள் இல்லாது விட்டால் பதவி விலகிவிட்டு வீட்டுக்கு செல்ல சொல்லுங்கள்.

மகிந்த ராஜபக்ஸ பிரதமராகயிருந்ததற்கு பதிலாக ரணில் (ராஜபக்ஸ) பிரதமராக தற்போதுள்ளார்.பிள்ளையான் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவதுபோன்று ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஆதரவு அவர் வழங்கலாம். இதில் புதியதொரு வித்தியாசம் இல்லை.தற்போதும் பசில் ராஜபக்ஸதான் பாராளுமன்றத்தினை இயக்குகின்றார்.பிள்ளையானுக்கும் கொள்கையில்லை,ரணிலுக்கும் கொள்கையில்லை.இருவரும் ஒன்றாக பயணிக்கமுடியும்.”என அவர் தெரிவித்துள்ளார்.

ரணிலும் நிதியமைச்சரானார் !

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற நிலையில் இன்று வரை நிதியமைச்சு தொடர்பான சரியான ஒரு அமைச்சரை அரசு நியமிக்கத்தவறிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

நிதியமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்பட்டதால் தெளிவான – தொடர்ச்சியான கொள்கைகளை நிதியமைச்சால் முன்னெடுக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் புதிய நிதியமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுள்ளார்.

 

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.

இன்று (புதன்கிழமை) காலை கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.