இரா. சம்பந்தன்

இரா. சம்பந்தன்

நாம் பலம் குறையவில்லை. இனிவரும் காலங்களில் இழந்த ஆசனங்களை நாம் கைப்பற்றியே தீருவோம் – இரா.சம்பந்தன்

அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள அரசாங்கம், நேற்றைய தினம் கண்டியிலுள்ள மகுல்மடுவவில் அமைச்சுக்களைப் பொறுப்பேற்றுக் கொண்டது.

இந்நிலையில், அரசாங்கத்திற்கு தமிழர்களின் தீர்வு விடையம் தொடர்பில் எடுத்துரைத்துள்ளார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் ,

“மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கியே ஆகவேண்டும். இனியும் சாக்குப்போக்குச் சொல்லாமல் நிரந்தர அரசியல் தீர்வை அரசு வழங்க வேண்டும். இந்தப் பொறுப்பிலிருந்து அரசு தப்பவே முடியாது என்று சுட்டிக்காட்டினார்.

“வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளைத் திட்டமிட்டு சிதறடித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனங்களை ஆளும் கட்சியினர் குறைத்துள்ளனர். எனினும், நாம் பலம் குறையவில்லை. இனிவரும் காலங்களில் இழந்த ஆசனங்களை நாம் கைப்பற்றியே தீருவோம்.

மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியுள்ள மஹிந்த அரசை சர்வதேச சமூகம் நன்கு உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கின்றது. கடந்த காலங்களில் செயற்பட்டதைப் போன்று இனியும் அரசு செயற்பட முடியாது.

நல்லாட்சி அரசு மேற்கொண்ட புதிய அரசமைப்புக்கான பணிகள் இடைநடுவில் நிற்கின்றன. அந்தப் பணிகளை இந்த அரசு ஆரம்பிக்க வேண்டும்.

இந்த அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் உள்ளது. எனவே, புதிய அரசமைப்பை நிறைவேற்றுவது சுலபமானது. தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் வகையில் புதிய அரசமைப்பு அமைய வேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுடைய பிரச்சினை கௌரவத்துடன் தீக்கப்பட வேண்டும் – யாழில் இரா. சம்பந்தன்

இந்த நாட்டில் உரிமையில்லை மக்களுடைய இறையான்மை மதிக்கப்பட்டவில்லை பலவிதமான தவறுகள் இடம்பெறுகின்றன. சிறுபாண்மை மக்களை பொறுத்தவரையில் பிரஜை உரிமை, காணி, மொழி, கல்வி, வேலை வாய்ப்பு, அபிவிருத்தி, பலவிதமான அநீதிகள் ஏற்படுத்தப்படுகின்றனகின்றன. இவற்றினை திருத்த முனைகின்றோம். ஆனால், எமது கையில் அதிகாரம் இல்லை. அதனால் எதனையும் எம்மால் தமிழ் மக்களுக்காக செய்யமுடியவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (01.08.2020) மாலை நெல்லியடி, மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இரா. சம்பந்தன் அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

ஒற்றையட்சி முறை சமஷ்டி ஆட்சி முறையாக மாற்றப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அந்த பிராந்தியங்களில் வாழ்கின்ற மக்களுக்கு இறையான்மையின் அடிப்படையில் அதிகாரங்கள் ஏற்பட்டால் தான், மக்களுக்கு சமத்துவமான நிலை உருவாகும். அதுவே, எமது நிலைப்பாடு எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சுமார் 65 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் சிறுபாண்மை தமிழ் மக்கள், அதனை அமோதித்து உள்ளனர். 13 ஆவது சீர்திருத்த யாப்பில் முன்னேற்றம் இருந்தது. ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

கடந்த கால அரசாங்கத்தில் உள்ள ஆட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கின்றோம். தமிழ் மக்களுடைய பிரச்சினை கௌரவத்துடன் தீக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாண இணைந்த ஒரு அலகு சேர்ந்த அதிகார பகிர்வு கிடைக்கப் பெறவேண்டும். எங்களை நோக்கில் பல சவால் இருக்கின்றது. அதிகாரபூர்வமாக நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற அரசியல் சாசனம் இப்போது நாட்டில் இல்லை. நாடு இப்போது சட்டம் இல்லமால் செயற்படுகின்றது. இலங்கை பிளவு அடைந்த நாடு அந்த நிலையில் இருக்கின்றது.

இதனை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு பலம் பொருந்திய அணியாக செயற்பட வேண்டும். ஒரு வருடத்திற்குள் புதிய அரசியல் சாசனத்தினை தீர்வுடன் சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைக்கான தீர்வினை காண வேண்டும் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அ. சித்தார்த்தன் உள்ளிட்ட வேட்பாளர்கள் பங்கு பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.