அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

இலங்கையில் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவது கவலையளிக்கிறது – அமெரிக்கா

பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கைதுசெய்யப்படுவதும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

 

ஆகவே கருத்து சுதந்திரத்தையும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மனிதாபிமான ரீதியில் நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

 

அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருவது சரியானது.” – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் தழிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நகர்வு சரியானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் நாடாளமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் வடக்கின் காணி அபகரிப்பு, பௌத்த மத ஆக்கிரமிப்பு பற்றியும் குருந்தூர்மலையில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

“மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும்.” – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் – என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்துக்கு களப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், பல தரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டதுடன், மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இவ்விஜயத்தின் போது அட்டனில் உள்ள தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்துக்கு சென்ற அமெரிக்க தூதுவருக்கு, வரவேற்பளிக்கப்பட்டது.

அதன்பின்னர் அதிகாரிகள் மற்றும் அங்கு பயிற்சிபெறும் மாணவர்களுடன் தூதுவர் கலந்துரையாடியதுடன், இருதரப்பு உறவுகளுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி காந்தி சௌந்தர்ராஜன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் ஆகியோருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அமெரிக்க தூதுவர் ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப கல்விக்கு உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அத்துடன், கல்வி, சுகாதாரம் என மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இணக்கம் தெரிவித்தார்.

மேலும், ‘ நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மலையக பெருந்தோட்ட மக்கள் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொண்டனர். பல தடைகள் இருந்தன. இதனை நான் அறிவேன். எனவே, மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்காலத்துக்கான பாதையை மாற்றுவதற்கான சிறந்த தருணமே இது.

இலங்கை தற்போது மீண்டெழுகின்றது. வர்த்தகம் மற்றும் முதலீடுகளை கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். உங்களுக்கு உதவுவதற்கான பங்காளியாக நாம் இருப்போம்’ என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மேலும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கொழும்பில் போராட்டம் – ஒன்று கூடும் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு என்கிறது அமெரிக்கா !

கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ள இந்த போராட்டமானது மருதானையிலிருந்து ஆரம்பமானது. இந்த எதிர்ப்பு பேரணி காரணமாக மருதானையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒன்று கூடும் சுதந்திரம் ஜனநாயகத்திற்கு அடிப்படையானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்துமாறும் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.  கொழும்பில் இன்று (2) நடத்தப்படும் பாரியளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் முன்னரே எச்சரித்திருந்தனர்.

இந்த நிலையிலேயே அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படையாகும். எனவே மக்கள் அந்த உரிமையை அனுபவிப்பதற்கு அரசாங்கம் இடமளிக்கவேண்டும் என அவர் வலியறுத்தியுள்ளார்.

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பால் இலங்கைக்கு பிரகாசமான எதிர்காலம் – அமெரிக்கா

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இதன் போது, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் இந்த கட்டத்தில் பதவியேற்றமை பற்றியும், பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல நாம் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என்பதையும் நாங்கள் விவாதித்தோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், எமது நாடும் எமது மக்களும் 70 வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாகவும் பங்காளிகளாகவும் இருந்து வருகின்றனர் என்றும் நல்லாட்சியை அரவணைத்துச் செல்லும், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து, மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்கும் உறவுகள் இலங்கையில் மலரும் எனவும் தெரிவித்துள்ளார்.

கோட்டாபாய ராஜபக்சவுக்கு மனோரீதியான அழுத்தங்களை கொடுத்த அமெரிக்கா – விமல் வீரவங்ச பகீர் !

கோட்டாபாய ராஜபக்சவை பதவியை கவிழ்ப்பதிலும் – ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பிலும் மேற்குலக நாடுகளின் பங்களிப்பு – குறிப்பாக அமெரிக்கா அதிகமாக மறைமுகமாக  செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மனோ ரீதியான அழுத்தங்களை மேற்கொண்டு வந்ததார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மனோ ரீதியான அழுத்தங்களை மேற்கொண்டு வந்ததார். ஆகவே இலங்கையில் இன்று மன ரீதியான அழுத்தம் கொடுத்து விடயம் சாதிக்கப்படுகின்றன .

அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமைய அனைத்து அரசியல் கட்சிகளும் தகுந்த தீர்மானங்களை எடுக்க வேண்டும். குறைபாடுகள் இருந்தாலும் நாட்டில் தற்போது சட்டபூர்வமான அரசாங்கம். ஆனால் தற்போதைய அரசாங்கம், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் எந்த திட்டங்களையும் முன்வைக்கவில்லை.

மேலும் தமது திட்டங்களை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும்.  நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் அரசாங்கத்தை வலியுறுத்துவோம். அதுமட்டுமன்றி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படும் சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக தலையிடத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.