பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவிடம் உள்ளதாக கூறப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை அரசாங்கத்திடம் வழங்க 03 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் வெளியிடாவிட்டால் அவற்றை தான் வெளியிடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன் குறித்த அறிக்கைகளில் எந்தவொரு பக்கமும் காணாமல் போகவில்லை என்றும் எந்தவொரு விசாரணை அறிக்கையும் மாயமாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே அமைச்சர் விஜித ஹேரத் கம்மன்பிலவிடம் உள்ளதாக கூறப்படும் ம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை மூன்று நாட்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வாறு வழங்காமல் குறித்த அரிக்கைகளை தன்வசம் வைத்திருப்பது தண்டனைக்குறிய குற்றம் எனவும், அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.