அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம்

அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம்

சீனாவை அடுத்து இலங்கையில் பெட்ரோல் விற்பனையில் அவுஸ்ரேலிய நிறுவனங்கள்!

அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளது.

 

அதன்படி 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை விநியோகிக்கவுள்ளனர்.

 

யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழையும் நான்காவது வெளிநாட்டு நிறுவனமாகும்.

 

இதேவேளை இந்த நாட்டில் எரிபொருள் விநியோகம் செய்ய இந்தியாவின் ஐஓசி, சீனாவின் சினோபெக் மற்றும் அமெரிக்காவின் ஷெல் நிறுவனங்கள் அனுமதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது