“தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவரும் நான் தான். தலைமையும் நான் தான்” என தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் செயலாளர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் ஒருபகுதியிளர் தாங்கள்தான் கட்சி தலைமை என அறித்துள்ளமை தொடர்பாக கட்சியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் ஆரம்பகால உறுப்பினருடன் தீர்மானம் எடுக்கும் உறுப்பினர் ஆகிய நான் தந்தை செல்வா. ஜீ.ஜீ.பொன்னம்பலம்இ அமிர்தலிங்கம். சிவசிதம்பரம் ஆகியோர் தொடங்கிய கடசிதான் இந்த கட்சி இந்த கட்சியின் அருமை பற்றி இவங்களுக்கு தெரியாது.
மூக்கை பிடித்தால் வாயை திறக்கத் தெரியாது நாட்டின் வரலாறு தெரியாது தாங்கள்தான் ஹீரோ என நினைத்து கொண்டிருக்கின்றனர். உண்மையில் சம்மந்தன் இந்த கட்சியை திட்டம் போட்டு குலைத்தபோது எவ்வளவே அவமானங்கள் உயிர் அச்சுறுத்தில் மத்தியில் கஷ்டப்பட்டு இந்த கட்சியை வளர்த்து கொண்டு வருகின்றேன்.
கடந்த 14 வருடத்துக்கு முன்னர் லண்டனுக்கு சென்ற அரவிந்தன் கட்சியின் பெயரை சொல்லி பணம் சேர்த்தவர். எங்கள் கட்சிக்கே எனது கையிலையே ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. ஆனால் கட்சிக்கு குறிப்பிட்ட 3 பேர் 5 இலச்சம் ரூபா பணம் வழங்கியுள்ளனர்.
சம்மந்தன், சேனாதிராஜா கட்சியை குலைத்துச் சென்றார்களே அப்போதே கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் பதவியும் இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கூட்டத்திற்கு வந்தவர்கள் ஒரு சதம் கூட கட்சிக்கு தரவில்லை. இவர்கள் வியாபாரிகள் இவர்களை விடமுடியாது நான் கட்சியை வியாபாரம் செய்யவில்லை.
நான் ஒரு செம்பு காசுகூட இலஞ்சம் வாங்கியது கிடையாது. எனக்கு ஒரு கோடி பணம் வந்தது அத்துடன் கிடந்த சிறிய காணி ஒன்றையும் 32 இலச்சத்துக்கு விற்று எனது பணத்தையும் போட்டு யாழ்ப்பாணத்தில் 10 மில்லியன் ரூபாவிற்கு கட்சிக்கு மாடி கட்டிடம் ஒன்றை வாங்கினேன் அவர்களுக்கு அதில் ஒரு கண்.
கடந்த தேர்தல் காலத்தில் லண்டனில் சொகுசாக வாழ்ந்துவிட்டு எங்கள் கட்சி காணியை ஈடுவைத்து தேர்தலில் போட்டியிட தருமாறு என கேட்டார்கள் அப்படிப்பட்டவர்கள் தான் இவர்கள். பழம்பெரும் தலைவர்கள் தமது உயிரை பயணம் வைத்து செயற்பட்டுவந்த பாரம்பரிய கட்சியினை 50 வருடமாக கட்டி காப்பாற்றி வருகின்றேன் லண்டனில் இருந்து வந்து மட்டக்களப்பில் இருந்து 5 பேருடன் வந்து கட்சியை எடுத்துபோகமுயல்கின்றனர்-அவர்களிற்கு பைத்தியம்.
கட்சியினுடைய விதிப்படி 3 மாத்தில் கட்டணம் கட்டாவிட்டால் உறுப்பினர் பதவி காணாமல் போய்விடும். ஆனால் இவர்களுக்கு உறுப்புரிமை இருந்தால்தானே உரிப்புரிமை போவதற்கு இவர்கள் உறுப்புரிமை இருப்பதாக வருகின்றனர். ஆனால் இவர்கள் ஒருவரிடமும் உறுப்புரிமைக்கான விண்ணப்பம் கிடையாது.
நான், சவால் விடுகின்றோன் பொய்சென்னேன் களவு எடுத்தேன் என யாராவது நேர்மையான 10 பேர் வந்து நிரூபித்தால் நான் செய்தது குற்றம் என்றால் நான்கட்சியை விட்டுவிட்டு போகிறேன் என்றார்