இங்கிலாந்தில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விதியை அந்நாட்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்படி பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் இங்கிலாந்நதில் கல்விகற்றால் அவர்கள் குடும்பத்தை அழைத்து வர முடியாது.
இந்த மாதத்திலிருந்து கற்றலை தொடங்கும் எந்தவொரு சர்வதேச மாணவர்களும், முதுகலை ஆராய்ச்சிப் படிப்புகள் அல்லது அரசாங்கத்தின் உதவித்தொகையுடன் கூடிய படிப்புகளில் இருந்தால் தவிர, அவர்கள் சார்ந்திருப்பவர்களை பிரிட்டனுக்கு அழைத்து வர முடியாது.
“விசா முறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்” அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த மே மாதம் இந்த மாற்றங்கள் முதலில் அறிவிக்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 140,000 குறைவானவர்கள் இங்கிலாந்துக்கு வருவதைக் காண முடியும் என்று அமைச்சர்கள் கூறுகிறார்கள்.
டிசம்பர் 2022 இல் முடிவடைந்த ஆண்டில், விண்ணப்பதாரர்களுக்கு 486,000 மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டன – 2019 இல் 269,000 ஆக இருந்தது.
கடந்த ஆண்டு, சார்ந்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட மாணவர் விசாக்களின் எண்ணிக்கை 136,000 ஆக இருந்தது – 16,000 ஆக 2019 இல் வழங்கப்பட்ட நிலையில் தற்போது எட்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.