இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த

தமிழ் கைதியின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹானுக்கு பிணை !

விளக்கமறியலில் இருந்த தமிழ் கைதி ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில், நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அனுராதபுரம் பிரதான நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிவான் நாலக்க சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அதேநேரம், குறித்த வழக்கினை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றிலும் தகாத வார்த்தைகளை பயன்படுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த !

எதிரணியினருடன் ஏற்பட்ட காரசாரமான விவாதத்தில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை அமைதிப்படுத்தும் வகையில் செயற்ப்பட்டார்.

உர விவகாரம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினருடன் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.அமைச்சருக்கு அருகில் அமர்ந்திருந்த லொஹான் ரத்வத்த எதிரணியினரை நோக்கி கூச்சலிட்டதுடன் கெட்டவார்த்தையை பயன்படுத்தியிருந்தார்.

இதன்போது அருகில் இருந்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ரத்வத்தவின் தலையில் கைகளை வைத்து அவரை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

இருப்பினும் கோபத்தில் மீண்டும் மீண்டும் கடும்சொற்பிரயோகங்களை மேற்கொள்ள இராஜாங்க அமைச்சரைக் கட்டுப்படுத்த மஹிந்தானந்த அளுத்கமகே பல முயற்சிகளை மேற்கொண்டார்.

அண்மையில் லொஹான் ரத்வத்த சிறைச்சாலையில் கைதிகளை மண்டியிடவைத்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.