இலங்கை அலங்கார மீன் வளர்ப்பு

இலங்கை அலங்கார மீன் வளர்ப்பு

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் 2,632 மில்லியன் ரூபா வருமானம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துள்ள புதிய தீர்மானம்!

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2,632 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதனால், அலங்கார மீன் வளர்ப்புத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக கடற்றொழில் அமைச்சினால் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலங்கை நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் தாய் மீன்கள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஆபத்தான மீன்கள் இறக்குமதி செய்யப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ரீதியாக அலங்கார மீன் வளர்ப்பு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.