இலங்கை குரங்குகள்

இலங்கை குரங்குகள்

குரங்குகள் வேண்டாம் என சீனா அறிவிப்பு – சீனாவுக்கு அனுப்ப ஒரு குரங்கிற்கு 25000 ரூபா என விவசாய அமைச்சர் தெரிவிப்பு !

ஒரு குரங்கினை பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் தோராயமாக 20,000 முதல் 25,000 ரூபா வரை செலவழிக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு குரங்குகளை அனுப்புவது தொடர்பில் நாட்டில் இடம்பெற்று வரும் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த திட்டம் சீன நிறுவனத்திடம் இருந்து எங்களிடம் வந்துள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவல்களை அமைச்சரவையில் தெரிவிப்போம்.

இதை செயல்படுத்துவது குறித்து துணைக்குழுவின் ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யப்படும். அதிகமாக வழங்க இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 1000 உயிரியல் பூங்காக்கள் உள்ளன.

ஸ்டெர்லைசேஷன் திட்டப்பணிகள் செய்யப்பட்டு அனைத்தும் தோல்வியடைந்து விட்டன.

சில மேற்கத்திய நாடுகள் மான்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மானை கொல்ல கால அவகாசம் கொடுக்கின்றன. மற்றும் இறைச்சிக்காக விற்கவும். திமிங்கலங்கள் கொல்லப்பட்டு விற்கப்படுகின்றன. கங்காருக்கள் வளரும்போது கொல்லப்படுகின்றன.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூட நாளை மறுநாள் வரை தங்கள் வீடுகளில் இருக்க முடியாது. ஓரிரு நாள் குரங்குக்கு சாப்பாடு கொடுத்த பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கச் சொல்வோம். அப்போதுதான் புரியும்.

அவர்கள் உடனடியாக செயல்படுத்தத் தயாராக இருக்கிறார்கள். அடுத்த மாதம் சுமார் 1000 குரங்குகளுக்கு அட்வான்ஸ் தர அனுமதி கேட்டார்கள். ஆனால் அப்படி அனுமதி கொடுக்க முடியாது.

இந்த மறுபரிசீலனைப் பணத்தை பறிமுதல் செய்யச் சொன்னார்கள். நான் பார்க்கிறபடி, ஒரு குரங்கை பிடிப்பதற்கு 20,000 முதல் 25,000 ரூபாய் அந்த ஆட்கள் செலவழிக்க வேண்டும்.

நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கூண்டு வகை உள்ளது என்று ஏற்கனவே சொன்னார்கள். விலங்குகளை சேதப்படுத்தக்கூடாது.

இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைப்பட்டு பேசினாலும் இறைச்சிக்கு விலங்குகளை அனுப்ப மாட்டார்கள். ஒரு குரங்கை இறைச்சிக்காக சாப்பிட 50,000 அல்லது 75,000 கொடுக்க அவர்களுக்கு பைத்தியமா? – எனவும் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை நேற்றைய தினம் இலங்கைக்கான சீன தூதரகம் இலங்கையிலிருந்து குரங்குகளை கொள்வனவு செய்வது தொடர்பான எந்த பேச்சுக்களும் அரச தரப்பில் இருந்து இடம்பெறவில்லை என தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் அமைச்சரவையில் தெரிவிப்போம் என குறிப்பிட்டுள்ளமையும் நோக்கத்தக்கது.

இலங்கையில் இருந்து எந்த குரங்குகளும் எமக்கு வேண்டாம் – சீனா அறிவிப்பு!

ஒரு இலட்சம் குரங்குகளை இலங்கையின் எந்த தரப்பினரிடமும் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை இலங்கைக்கான சீன தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி – ஏற்றுமதியை மேற்பார்வை செய்யும் பிரதான அரசாங்கத் திணைக்களமான சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் இவ்விடயம் தொடர்பில் தாம் வினவிய போதும், அவர்கள் அதனை அறிந்திருக்கவில்லை என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அழிந்து வரும் உயிரினங்கள், தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் ஒரு பங்காளியாக தமது நாடு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை பல திருத்தங்களுடன் நிறைவேற்றியுள்ளதாக சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு சீன அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னுரிமை வழங்குவதாகவும், அதற்கான சர்வதேச கடமைகளை தீவிரமாக நிறைவேற்றுவதாகவும் தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்குமாறு விடுக்கப்பட்ட யோசனை தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என இலங்கை அரச தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டதுடன் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களம், விவசாய அமைச்சு மற்றும் விவசாய திணைக்களம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

குரங்குகள் கொள்வனவிலும் வல்லரசு போட்டி – சீனாவை அடுத்து அமெரிக்காவுக்கும் பறக்கவுள்ள இலங்கை குரங்குகள் !

இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் குரங்குகளைப் பெற சீனா தயாராகி வரும் நிலையில் , அமெரிக்காவும் இலங்கையில் இருந்து குரங்குகளைப் பெற விண்ணப்பித்துள்ளது.

எனினும்,  அமெரிக்காவிற்கு தேவையான குரங்குகளின் எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் , சீனாவுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர,

இந்நாட்டு குரங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே பொருத்தமானது எனவும்,அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என எவரும் கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் 30 இலட்சத்திற்கும் அதிகமான குரங்குகள் வாழ்ந்து வருவதாகவும், அதிகரித்து வரும் குரங்குகளின் எண்ணிக்கையினால் பயிர்கள் அதிகளவில் சேதமடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குரங்குகளின் மனித குணங்கள் காரணமாக, மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இந்த விலங்குகளுக்கான தேவை அதிகமாக உள்ளது.

மேலும் இந்த வணிகத்தின் வருமானமானது குரங்குகளை உயிரியல் பூங்காக்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது

மேலும், குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்வேறு வகையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் குரங்குகளின் சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் இந்நாட்டில் வாழும் சில குரங்கு இனங்கள் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தினால் (IUCN) அழிந்து வரும் விலங்கினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS), சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ), சுற்றுச்சூழல் அமைப்புகளின் கூட்டமைப்பு (FEO) மற்றும் பல அமைப்புகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது