இலங்கை சுற்றுலாத்துறை

இலங்கை சுற்றுலாத்துறை

இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் ரஸ்ய பிரஜைகள் – மணித்தியாலத்திற்கு 15000 முதல் 45000 வரை அறவீடு !

இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளாக வருகை தரும் ரஸ்ய பிரஜைகள் பாலியல்தொழிலில் ஈடுபடுவதாக கரிசனைகள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு ரஸ்யாவிலிருந்து பெருமளவு சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் நிலையில்  இவர்களில் சில பெண் சுற்றுலாப்பயணிகள்  விபச்சாரத்தில் ஈடுபடுவதாக  கரிசனைகள் வெளியாகியுள்ளன.

உள்வருகை விசா இலவசமாக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா சீனா ரஸ்யா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் அதிகளவு சுற்றுலாப்பயணிகள் இலங்கையை நோக்கி படையெடுக்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் கொரோனா போன்றவற்றினால் மிகமோசமான பாதிப்புகளை எதிர்கொண்ட சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்பும் நோக்கில் ரஸ்யா உட்பட ஏழு நாடுகளை சேர்ந்தவர்களிற்கு உள்வருகை விசா தேவையில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் தனிநபர்கள் இந்த நடைமுறையை துஸ்பிரயோகம்செய்கின்றனர் என்ற கரிசனை வெளியாகியுள்ளது.

ஜனவரி மாதம் இலங்கைக்கு 208 253 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளனர் இவர்களில் சுமார் 32000 பேர் ரஸ்ய சுற்றுலாப்பயணிகள்.

இதேவேளை இவர்களில் சிலர் பாலியல்தொழிலில் ஈடுபடுகின்றனர் என தெரியவந்துள்ளது.குறிப்பாக கொழும்பில் நட்சத்திர விடுதிகளில் இவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் இரவுவிடுதிகளின் மூலமும் சிலர் முகவர்கள் மற்றும் ஏற்கனவே பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களை தேடிக்கொள்கின்றனர்    மணித்தியாலத்திற்கு 15000 முதல் 45000 வரை அறவிடுகின்றனர் என தெரியவந்துள்ளது.

சில இணையதளங்கள் இது குறித்து விளம்பரங்களை வெளியிட்டுவருகின்றன ரஸ்ய பெண்கள் அதிகளவிற்கு முக்கிய பிரமுகர்களை இலக்குவைத்தே செயற்படுகி;ன்றனர்.

இதேவேளை இந்த விடயத்தை கையாள்வதில்குழப்பங்கள் உள்ளதை குடிவரவுகுடியகல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதத்தில் இலங்கை வந்த 2 லட்சம் சுற்றுலா பயணிகள் !

இலங்கையில் இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் சுமார் 200,000 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

இது கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு மாதத்தில் வந்த வருகையை விட அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான மொத்த வருகைகள் கிட்டத்தட்ட 1.5 மில்லியனை நெருங்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறினார், இது ஜனவரி 2023 இல் நிர்ணயிக்கப்பட்ட அசல் இலக்காகும்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தற்போது இலங்கையின் சுற்றுலாத் துறை மீட்சியடைந்துள்ளது.

 

சுற்றுலாத் துறையின் மீட்சியானது 2022 இல் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்த இலங்கையின் வெளிநாட்டு இருப்புக்களை உறுதிப்படுத்த உதவியுள்ளது.

 

2023 காலாண்டிற்குள் 1.45 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் !

இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் சுற்றுலாத்துறை வருமானம் 1.45 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

 

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

 

2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகளவான சுற்றுலாப் பயணிகள், இவ்வாண்டே நாட்டிற்கு வருகை தருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள் – ஒரே வருடத்தில் 1.45 பில்லியன் டொலர்களை தொட்டது வருமானம் !

இலங்கை மத்திய வங்கியின் அண்மைய தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சுற்றுலா வருமானம் 1.45 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது சென்ற ஆண்டின் (2022) இதே காலகட்டத்தை விட வியத்தகு 67% உயர்வடைந்த தொகையாக கூறப்படுகிறது.

இருந்தபோதிலும், ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதாந்திலும் சுற்றுலாத்துறை ஈட்டிய வருமானம் எதிர்பார்த்த இலக்கை விட குறைவாக பதிவாகியுள்ளது.

செப்டம்பர் மாத வருவாய் 152.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.இது சென்ற ஆண்டின் வருவாயில் 28% சரிவைக் காண்பிப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஒன்பது மாதங்களிலும் அதிகளவு வருமானத்தை ஈட்டிய மாதமாக ஜூலை மாதம் காணப்படுகிறது, 219 மில்லியன் அமெரிக்க டொடாலர்களாக பதிவாகியுள்ளது.

 

இதுவே இந்த ஆண்டின் இதுவரையில் எட்டப்பட்ட மாத வருமானங்களில் அதிக வருமானமாகவுள்ளது.

 

1.55 மில்லியன் பார்வையாளர்களை வரவழைத்து ஆண்டு இறுதிக்குள் 3 பில்லியன் அமெரிக்க டொடாலர்களுக்கு மேல் வருமானத்தை ஈட்டுவதை இலங்கை சுற்றுலாத்துறை இலக்காகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் எதிர்வரும் குளிர்காலத்தில் இலங்கை சுற்றுலாத்துறை அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டு செயலாற்றி வருகிறது.

2023 இன் முதல் ஒன்பது மாதங்களில் 1.01 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

வருடம் முழுவதும் இயங்கும் சுற்றுலாத் தளமாக  மாற்றியமைக்கப்படுகிறது இலங்கை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

வருடம் முழுவதும் இயங்கும் சுற்றுலாத் தளமாக  இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் அதிபர் இதனைக் குறிப்பிட்டார்.

சுற்றுலாத் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில்

“சுற்றுலாத்துறையின் இருப்பு மற்றும் சவால்களை வெற்றிகொள்ளல்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க;

அண்மைய பொருளாதார வீழ்ச்சியினால் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவற்றை வெற்றிகொண்டு, சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறுவதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

20 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், ஒரு சுற்றுலா பயணி, நாளொன்றுக்கு 500 டொலர்களை செலவிடக்கூடிய வகையில், சுற்றுலாப் பயணிகளுக்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.  குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக இவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதிபர் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்ய சிறந்த 24 நாடுகளில் இலங்கை முதலிடம் !

2023 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்ய சிறந்த 24 நாடுகளில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது.

சுற்றுலா இணையத்தளமான ட்ரவல் ட்ரை ஏங்குள் (TravelTriangle) இணையத்தளத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் நாட்டின் இயற்கை வளங்களின் வனப்பு காரணமாக இலங்கை பயணத்திற்கு ஏற்ற முதல் நாடாக மாறியுள்ளது.

கடற்கரைகள் வனவிலங்குகளால் நிறைந்த வன கட்டமைப்புகள் ரம்மியம் நிறைந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பனி மூடிய மலைத்தொடர்கள் என பல சுற்றுலா இடங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடும் இணையத்தளமாக ட்ரவல் ட்ரை ஏங்குள் டிரவல் ரைஏங்குள் (Travel Triangle ) இணையத்தளம் காணப்படுகின்றது.

இலங்கையின் செழிப்பு மற்றும் பௌதீக பன்முகத்தன்மையை கண்டு சுற்றுலாப் பயணிகள் வியப்படைவதாக குறித்த இணையதளம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் நான்காவது உயரமான மலையான சிவோனொளிபாத மலையுச்சியில் இருந்து பார்க்கும் காட்சி ரம்மியமாக இருப்பதாகவும் ஒவ்வொருவரின் உடல் தகுதியைப் பொறுத்து 5 முதல் 6 மணித்தியாலங்களுக்குள் இந்த உலக பாரம்பரிய தளத்தில் ஏறலாம் எனவும் இந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

வாழ்வில் புத்துயிர் பெற வேண்டுமானால் இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் நிழலான இடத்தில் அமர்ந்து விட்டமின் டி யை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இலங்கை தொடர்பில் இந்த இணையத்தளம் தகவல்களை பதிவு செய்துள்ளது.

விடுமுறையைக் கழிக்க உலகிலேயே சிறந்த நாடு இலங்கை – ஐக்கிய இராச்சியத்தின் iNews இணையத்தளம்

ஐக்கிய இராச்சியத்தின் iNews இணையத்தளம் அதிகப் பணம் செலவழிக்காமல் பெப்ரவரி விடுமுறையைக் கழிக்க உலகிலேயே சிறந்த நாடு இலங்கை என்று தெரிவித்துள்ளது.

இவ்வருடம் விடுமுறை எடுத்துக்கொண்டு வேறு நாட்டிற்குச் சென்று விடுமுறை எடுக்கக் காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக அதிகப் பணம் செலவழிக்காமல் நல்ல சேவையைப் பெறக்கூடிய 12 நாடுகளின் பெயர்களை ஐ நியூஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் 75வது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியிருப்பதால் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பெப்ரவரியில் விமான டிக்கெட்டுகளின் விலை குறைந்த அளவிலேயே இருப்பதாகவும், கடந்த ஆண்டு ஏப்ரலில் 145 ரூபாயாக இருந்த ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்று தற்போது 441 ரூபாயாக மாறியுள்ளதாகவும் ஐ நியூஸ் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

இதன் விளைவாக இலங்கையின் மலைப் பிரதேசத்திற்கு 15 நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு 1845 பவுண்டுகள் செலவாகும் என iNews இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் 640,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை – சுற்றுலா அமைச்சு!

நாட்டிற்கு இதுவரை 640,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் முதல் ஏழு நாட்களில் 16,168 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் நாட்டிற்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாபயணிகளின் வருகை மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது. அதன்படி, 106,500 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளார்கள்.

20 நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதோடு. அதில் 108,510 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ் வருடத்தில் இதுவரை 78,827 பிரித்தானிய பிரஜைகளும், 74,713 ரஷ்ய பிரஜைகளும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

விபச்சாரம் செய்து உழைப்பதற்காக இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் – முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக தற்போது சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதாக முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது செலவு செய்வதற்காக அல்ல என்றும் விபச்சாரத்தில் ஈடுபட்டு ஓரளவு பணம் சம்பாதிப்பதற்காக என்றும் அவர் குறிப்பிட்டார்.

போராட்டங்களை அடுத்து சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை என்றும், ஜனநாயக நாடுகளுக்கு மட்டுமே சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும் கூறப்படுவது பொய்யானது என்றும் அவர் தொடர்ந்து தெரிவித்தார்.

பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை நோக்கி மீண்டும் படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் !

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் 20 ஆயிரத்து 573 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் 8 ஆயிரத்து 614 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.