இலங்கை தற்கொலை

இலங்கை தற்கொலை

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 3000 தற்கொலைகள்!

நாட்டில் ஒவ்வொரு வருடமும் 3,000 க்கும் மேற்பட்ட உயிர்கள் தவறான முடிவுகளால் இழக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூலை (1)ஆம் திகதி முதல் (7) ஆம் திகதி வரை தேசிய காயம் தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், தவறான முடிவுகள் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆபத்தான போக்கை எதிர்த்துப் போராடுவதற்கு, மேம்பட்ட மனநல ஆதரவு சேவைகள், சமூக விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் பயனுள்ள தவறான முடிவு தடுப்பு உத்திகள் ஆகியவற்றின் அவசர தேவையை சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

பொறியியல் மாணவர்கள் இருவர் தற்கொலை – பொறுப்புக் கூறவேண்டியது யார்?

தமிழ் சமூகத்தில் இடம்பெறும் தற்கொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய இடத்தில் பலர் உள்ளனர். அதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு பெரும் பங்குண்டு. ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடப்பதோ வேறு. 2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் துறைத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் ஒருவர் துணைவேந்தர் முன்னிலையில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதனை அவதானித்த துணைவேந்தர் விரைந்து செயற்பட்டு, அவரை தடுத்து நிறுத்தி , சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார். இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்ளது. ஆனாலும் அது தன் சமூகப் பொறுப்பிலிருந்து விடுபட முடியாது.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் வருடாந்தம் ஒரு மாணவராவது தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலையுள்ளது.

 

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவனான மன்னாரைச் சேர்ந்த கியூமன் மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையில் தூக்கிட்டு உயிர் மாய்த்திருந்தார்.

 

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில் தூக்கிட்டு உயிர் மாய்த்திருந்தார்.

 

இது தொடர்பான மேலதிகமான தகவல்களை அறிய கீழுள்ள தேசம் திரை Link ஐ Click செய்யவும்.

 

இலங்கையில் ஆண்டுதோறும் 3,000 தற்கொலை சம்பவங்கள் !

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகமாக இருக்கலாம் என சிரேஷ்ட விரிவுரையாளரும் உளவியலாளருமான டொக்டர் சத்துரி சுரவீர எச்சரித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 100,000 பேருக்கு 17 தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன (100,000:17).என்றார்.

“துரதிஷ்டவசமாக, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான தரவு எதுவும் பெறப்படவில்லை. இதுவரை நாங்கள் இந்த ஆண்டு நான்கு மாதங்கள் மட்டுமே செலவிட்டுள்ளோம், ஆனால் கடந்த நான்கு மாதங்களுக்குள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக அதிகரித்துள்ளது என்ற தகவலைப் பெறுகிறோம்.

“இன்னும், ஆண்டுதோறும் 3,000 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன, கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது சம்பவங்கள் தினசரி பதிவாகின்றன.

தற்கொலை சம்பவங்கள் படிப்படியாகக் குறைந்துள்ளது, ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் இப்போது சிறிது அதிகரித்துள்ளது.” எனவே, தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) சுட்டிக்காட்டியுள்ளது