இலங்கை பணவீக்கம்

இலங்கை பணவீக்கம்

நாட்டின் பணவீக்கம் சடுதியாக அதிகரிப்பு !

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் படி, நாட்டில் நவம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 1 சதவீதமாக இருந்தது.

அதேசமயம், அக்டோபர் மாதத்தில் -5.2 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், நவம்பரில் -2.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், 2023 ஒக்டோபரில் உணவு அல்லாத பணவீக்கம் 6.3 சதவீதமாக இருந்தது, நவம்பரில் 7.1 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

சடுதியாக வீழ்ச்சியடைந்த இலங்கையின் பணவீக்கம் !

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின்படி, மொத்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 33.6% ஆகக் குறைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் பணவீக்கம் 49.2% ஆக இருந்தது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் 15. 6 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, மார்ச் மாதத்தில் 42.3% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 27.1% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன், மார்ச் மாதத்தில் 54.9% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 39% ஆக குறைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் அதிகபட்ச பணவீக்கம் !

இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 ஜூலை மாதம் பதிவாகியுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 60.8% ஆக பதிவாகியுள்ளது.

மேலும், உணவுப் பணவீக்க விகிதம் 90.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் போக்குவரத்துப் பணவீக்கம் 143.6 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.