இலங்கை மருத்துவக் கல்வி

இலங்கை மருத்துவக் கல்வி

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வி !

மருத்துவ பீடங்களை நிறுவுவதற்கு மூன்று தனியார் பல்கலைக்கழகங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

லைசியம், NSBM மற்றும் SLIIT ஆகிய தனியார் பல்கலைக்கழகங்களால் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

 

லைசியம் சமர்ப்பித்த விண்ணப்பம் தொடர்பில் இலங்கை மருத்துவ சபை ஆரம்ப இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது.

 

விண்ணப்பங்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.