இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

வரலாற்றின் மிகச்சிறந்த மீள்வருகைக்காக டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்துகள் – இஸ்ரேலிய பிரதமர்

வரலாற்றின் மிகச்சிறந்த மீள்வருகைக்காக டொனால்ட் டிரம்பிற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற்றுள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் உலக தலைவர்கள் சிலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

வரலாற்றின் மிகப்பெரும் மீள்வருகைக்காக வாழ்த்துக்கள் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின்நெட்டன்யாகு தெரிவித்துள்ளார் . வெள்ளை மாளிகைக்கான உங்களின் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்தமீள்வருகை அமெரிக்காவிற்கு ஒரு புதிய ஆரம்பத்தையும் இஸ்ரேல் அமெரிக்கா இடையிலான மாபெரும் கூட்டணிக்கு ஒரு சக்திவாய்ந்த மறுஉறுதியையும் வழங்குகின்றது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார் .

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களின் போது கமலா ஹாரிஸ்  ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும். ஆதலால் அமெரிக்க யூதர்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும்  என டொனால்ட் ட்ரம்ப்  தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மேல் ஆளில்லா விமானத்தாக்குதல் !

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீடு டெல் அவிவின் வடக்கே சிசேரியாவில் ஹிஸ்புல்லா ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதலை பிரதம மந்திரியின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்போது நெதன்யாகுவும் அவரது மனைவியும் வீட்டில் இல்லை என்று கூறியுள்ளார்.

எனினும் இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முந்தைய அறிக்கையில், இஸ்ரேலின் இராணுவம் லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானம் செசரியா பகுதியில் உள்ள ஒரு கட்டமைப்பைத் தாக்கியது என்று கூறியுள்ளது.