இஸ்ரேல் – காசா

இஸ்ரேல் – காசா

தொடரும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் – காசாவின் அகதிகள் முகாம் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் பலி – நூற்றுக்கணக்கானோர் காயம் !

மத்திய காசாவில் உள்ள பலஸ்தீனியர்களுக்குப் புகலிடமாக பயன்படுத்தப்படும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல்  நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது  (13.10.2024) காசாவின் நுசிராத் முகாமில் உள்ள தளம் மீதே நடாத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்காணோர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ தளத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதுடன், 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

டெல் அவிவ் மற்றும் ஹைஃபா இடையே அமைந்துள்ள பகுதியில் உள்ள இஸ்ரேலிய தற்காப்புப் படைகளின் கோலானி படைப்பிரிவின் பயிற்சி முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழன் அன்று தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆயுதக் குழுவின் ஊடக அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை – அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தத்தையும் ரத்து செய்த கனடா !

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனைக்கான 30 அனுமதிகளை கனடா  இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பை கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி நேற்றையதினம் (11) வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, கியூபெக்கில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகளை இஸ்ரேலிய இராணுவத்திற்கு விற்பனை செய்வதற்கான அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது, அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜெனரல் டைனமிக்ஸின் கனடியப் பிரிவால் தயாரிக்கப்பட்ட கனேடிய வெடிமருந்துகளை – இஸ்ரேலுக்கு மறுவிற்பனை செய்வதற்காக மற்ற நாடுகளுக்கு விற்கவோ அல்லது அனுப்பவோ அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜோலி கூறியுள்ளார்.

கனேடிய ஆயுதங்கள், இஸ்ரேலில் விற்பனைக்கு செல்லும் ஒரு நாட்டிலிருந்து விற்பது சர்ச்சைக்குரியதாக மாறி உள்ளதாகவும், ஜெனரல் டைனமிக்ஸ் போன்ற வணிகப் பரிவர்த்தனைகள் வெளிப்படையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜோலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஹஜ் திருநாளில் காஸாவில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் – ஜோ பைடன் வாழ்த்து!

உலகம் முழுவதும் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை ஹஜ் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் பரந்து விரிந்த அதிக மக்களைக் கொண்ட இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம் (முதலாவது கிறிஸ்துவம்) ஆகும் . இந்நிலையில் இன்று ஹஜ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தேசியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது உள்ள உலக நடப்பின்படி இஸ்லாமிய மக்களைக்கொண்ட பாலஸ்தீன நாட்டின்மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் இதுவரை சுமார் 37,000 மக்கள் பலியாகியுள்ளனர். வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட மசூதிகளே காஸாவில் மிஞ்சுகின்றன. முகாம்களில் தங்களின் துயர நிலையிலும் இறுக்கமான மனதுடன் பாலஸ்தீன மக்கள் கொண்டாடும் பண்டிகையாக இது அமைகிறது . தற்காலிகமாக தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திவைத்துள்ளதால் சற்று ஆசுவாசப்பட அவர்களுக்கு கிடைத்துள்ள நேரம் இது.

அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் வர உள்ள நிலையில் காஸா போர் நிறுத்தத்துக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். இன்று ஹஜ் பண்டிகையை முன்னிட்டு முக்கியத்துவம் வாய்ந்த வாழ்த்துச் செய்தி ஒன்றை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்த போரின் கொடூரங்களை நிறுத்துவதற்கான சரியான மற்றும் சிறந்த வழி இதுதான். ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அப்பாவி மக்களும் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். தங்களின் வீடுகளையும் சொந்தங்களையும் இழந்து நிற்கும் அம்மக்களின் வலி மிகவும் ஆழமானது.

3 கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். இதற்கு ஹமாஸும், இஸ்ரேல் அரசும் உடன்பட்டு இந்த வன்முறை வெறியாட்டங்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். இறைத்தூதர் இப்ராஹிம் கடவுளுக்காக தனது மகனையே தியாகம் செய்ய முன்வந்த இந்த ஹஜ் திருநாளில் காஸாவில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் –  காசா போரை நிறுத்த அமெரிக்காவின் திட்டம் – ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை ஆதரவு !

இஸ்ரேல் –  காசா போர் நிறுத்தத் திட்டத்தை ஆதரிக்கும் அமெரிக்காவின்  முன்மொழிவுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை ஆதரவாக வாக்களித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் உள்ள 15 உறுப்பினர்களில் 14 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன் ரஷ்யா வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான போர் நிறுத்தம், ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்தல் மற்றும் உயிரிழந்த பணயக் கைதிகளின் உடல்களை மீளப் பெறுதல் போன்ற விடயங்களை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.

இஸ்ரேலியர்கள் குறித்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எவ்வாறாயினும் நிரந்தர போர்நிறுத்தம் மற்றும் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் முழுவதுமாக வெளியேறுவதற்கான உத்தரவாதத்தை ஹமாஸ் கோருவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவை அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய படைகளால் படுகொலை செய்து புதைக்கப்பட்டவர்களின் உடல்கள் வைத்தியசாலையின் பின்பகுதியிலிருந்து மீட்பு !

இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்ட 50க்கும் அதிகமானவர்களின் உடல்களை நாசர் மருத்துவ கட்டிட தொகுதியில் மீட்டுள்ளதாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட 50க்கும் அதிகமானவர்களின் உடல்களை மீட்டுள்ளதாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசர் மருத்துவமனையின் கொல்லைப்புறத்தில் இந்த உடல்களை மீட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு அமைப்பு ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளது.

 

நாசர் மருத்துவ கட்டிட தொகுதிக்குள் இஸ்ரேலிய படையினர் புதைத்த புதைகுழிகள் காணப்படுகின்றன நேற்று 50க்கும் மேற்பட்ட தியாகிகளின் உடல்களை பார்த்து அதிர்ச்சியடைந்தோம் என சிவில் பாதுகாப்பு முகவர் அமைப்பின் பேச்சாளர் மஹ்மூட் பாசல் தெரிவித்துள்ளார்.

 

தேடுதல் நடவடிக்கையில் நாங்கள் தொடர்ந்தும் ஈடுபடுகின்றோம் கொல்லப்பட்ட தியாகிகளின் எண்ணிக்கையை அறிவதற்காக அனைத்து புதைகுழிகளும் தோண்டப்படுவதற்காக காத்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இந்த மருத்துவமனையில் கடும் மோதல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கியதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை வேலையிலிருந்து நீக்கிய கூகுள் !

நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் மற்றும் அமேசான் நிறுவனம் இஸ்ரேல் அரசுக்கு ஏஐ மற்றும் கிளவுட் தொழில்நுட்ப சேவை வழங்குவது தொடர்பாக 1.2 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர்த் தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், இஸ்ரேல் ராணுவத்துக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவிகள் வழங்குவது நியாயமற்றது என்று கூறி, இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக கூகுள் ஊழியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

கடந்த செவ்வாய்க்கிழமை, நியூயார்க், கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகங்களில் சில ஊழியர்கள் 10 மணி நேரத்துக்கு மேல் எதிர்ப்பு போராட்டம் செய்தனர். கூகுள் நிறுவனத்தின் புகாரையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 9 பேரை காவல் துறை கைது செய்தது.

இந்நிலையில், மறுநாள் புதன்கிழமை கூகுள் நிறுவனம் அதன் 28 ஊழியர்களை நீக்கியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் சர்வதேச பாதுகாப்புப் பிரிவின் தலைவர் கிரிஸ் ராக்கோ இது குறித்து ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், “நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தப் போராட்டத்தில் தொடர்புடைய 28 பேர் நிறுவனத்திலிருந்து நீக்கப்படுகின்றனர். இத்தகைய செயல்பாடுகளை கூகுள் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பலஸ்தீன குழந்தை பாதிக்கப்படுகிறது – ஐ.நா சுட்டிக்காட்டு !

காசாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பலஸ்தீன குழந்தை பாதிக்கப்படுவதை ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

 

ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (United Nations Children’s Fund) மற்றும் ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் ( United Nations Office for the Coordination of Humanitarian Affairs) ஆகியவை காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளன.

 

ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் கூற்றுப்படி ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் ஒரு பலஸ்தீன குழந்தை கொல்லப்படுகிறது அல்லது காயமடைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது காசா சுகாதார அமைச்சகத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஏப்ரல் ஒன்று முதல் வடக்கு காசா மற்றும் தெற்கு காசாவின் சில பகுதிகளுக்கு மனிதாபிமான உதவி பணிகளில் 15% இஸ்ரேலிய அதிகாரிகளால் மறுக்கப்பட்டுள்ளன அல்லது தடை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் இந்த புள்ளிவிவரங்கள் காசாவில் ஏற்பட்டு வரும் மோசமான மனிதாபிமான நெருக்கடியை குறிப்பிட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சர்வதேச சமூகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஃபாவில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயாராகும் இஸ்ரேல் !

காஸாவின் தென்பிராந்திய நகரான ரஃபாவில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு இஸ்ரேலிய படையினர் தயாராகின்றனர் என அந்நாட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

காஸாவின் ஏனைய பிராந்தியங்களிலிருந்து இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் தென்பிராந்திய நகரான ரஃபாவில் தங்கியியுள்ளனர்.

 

காஸா தென் பகுதியில் இஸ்ரேலியப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் பேச்சாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

 

எனினும், பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் இது தொட்ரபாக கூறுகையில், ரஃபா உட்பட எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தயாராகுவற்காக கான் யூனிஸ் நகரிலிருந்து படையினர் வெளியேறியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்கும் பிரேரேணை நாளை ஐ.நாவில் !

இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்கும் பிரேரேணை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாளை (06) பரிசீலிக்கப்படவுள்ளது.

 

காஸாவில் இனப்படுகொலைக்கான ஆபத்து உள்ளதால் இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என இப்பிரேரணையில் கோரப்பட்டுள்ளது.

 

57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் பாகிஸ்தர்ன இப்பிரேரணையை முன்வைத்துள்ளது.

 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதன்படி, பிரேரணை நிறைவேற்றப்படுதற்கு 24 நாடுகளின் ஆதரவு தேவை.

 

எனினும், ஏதேனும் நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றாமல்விட்டால், குறைந்த எண்ணிக்கையான வாக்குகளுடனும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியும்.

காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் – சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!

காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

 

மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும் பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

 

மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும் பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.